அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பானிபட்! பிளாசி! எது தேவை?

பரதா! எந்த மை மிக்க சிலாக்கியம் என்றார், ஒரு தேசியத் தோழர் என்னை.
கட மை என்றேன் நான். அவர் திருப்தி அடையவில்லை. தலையை அசைத்தார் இல்லை என்பது தெரிய.

வேறு பல மை சொன்னைன். திருப்திப்படவில்லை என் நண்பர். சரி! நீயே கூறு! மை சிலக்கியமானது என்று நான் கேட்டேன்

எல்லா மைகளையும் விட ஒற்று மை இருக்கிறதே அது மிக மிக மகத்துவம் வாய்ந்தது. அது இப்போது அவசியமாக வேண்டும்! அதைப் பெறறே, அரும்பாடுபடுகின்றனர் தலைவர்கள் என்றால் என் நண்பர்.

எந்தத் தலைவர்கள்? என்று கேட்டேன். எமது தலைவர்களல்ல! சில தலைவர்கள் என்று பதில் கூறி, எமது தலைவர்கள் சிறையிலே உள்ளனர் என்று கூறி ஏங்கினார். ஒற்றுவை தேவைதான். அதற்காவன செய்வதுதானே! என்று கேட்டேன். ஜனாப் ஜின்னாவிடந்தானே, துருப்புச்சீட்டு இருக்கிறது என்று கூறிவிட்டு நண்பர் பெருமூச்சுடன் என்னை உற்றுநோக்கினார். துருப்புச்சீட்டு அவரிடமா! அவரை நீங்கள் பேஸ்த்தாக்கி விடுவீர்களென்று சொன்னார்களே என்று நான் கேட்டேன், சிரித்துக்கொண்டே.

அவர் சாதுர்யமான சீட்டட்டக்காரராக இருக்கிறார் என்றார் நண்பர்.

சரி! ஜனாப் ஜின்னா என்ன செய்யவேண்டும். இப்போது அதைச் சொல்லு என்று நான் விசாரித்தேன்.

என்ன செய்வதா? மகாத்மாவைப் போய்ப் பார்த்து ஏதாவது சமரசமாவது என்றார் நண்பர் கோபத்துடன்.

நீ சொல்வதைப் பார்த்தால் ஜின்னா - காந்தி சண்டை நடக்கிறது போலத் தோன்றுகிறதே. இது என்னப்பா வேடிக்கை. உங்க ஆட்கள், ஊராள்பவனிடம் சண்டையிடுவதாகச் சொன்னீர்களே! அதற்கு ஜின்னா காந்தி சமரசம் மாற்று மருந்தா? என்று கேட்டேன்.

பரதா! சர்க்காரிடமிருந்து அதிகாரம் பெறத்தானே இந்தப் போர். சர்க்காரே, சமரசம் உண்டாக்கு என்று சொல்கிறது. சமரசம் பேசவோ, காந்தியார் வெளியே இல்லை. ஆகவே ஜனாப் ஜின்னானே அந்தக் காரித்தைச் செய்யவேண்டும் என்று நண்பர் வாதிட்டார்.

ரொம்ப சரி! ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு, காந்தியார், கொண்ட கருத்து, இப்போது மாறிவிட்டதா? முன்புதான் அவர் திட்டமாகச் சொல்லிவிட்டாரே, கடைசிப்போர் வெள்ளையருடன் என்று. இதிலே சமரசம் என்ன செய்வது? சமரசம் வேண்டுமென்றால், பெளியே உள்ள காகிரஸ் தோழர்கள், கட்டுப்பாடாகக் கூடி, ஜனாப் ஜின்னாவின் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று தீர்மானித்துப பொதுமக்களிடமும் பேசி, புகை கிளப்பும் பேர்வழிகளையும் அடக்கி, நாட்டிலே நிம்மதியை உண்டாக்கவேண்டும். குழப்பம் தீர்ந்தால் கும்பல் பூராவும் வெளியே விடப்படும். வெளியே வந்ததும், காந்தியாரிடம் காங்கிரசால் முறையிட வேண்டும். சமரசம் வேண்டும. பாகிஸ்தானை ஏற்றுக்கொள்வோம் என்றுரைத்திட வேண்டும். பிறகு சமரசம் பிறக்கும். ஆகால் நீங்களோ, அழிவு வேலை கூடாது என்றும் சல்கிறீர்கள். அழிவு வேலை செய்பவரைச் சர்க்கார் அடக்க முற்பட்டால், அடக்குமுறை கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால், போர் எதிர்புப் பிரசாரம் புரியும் தலைவர்களை வெளியே விட்டால்தானே போர் திறமையாக நடக்கும் என்று பேசுகிறீர்; தேசீய சார்க்கார் தேவை என்று துடிக்கிறீர்; இஸ்லாமியர் இந்நாட்டவரே என்ற சொந்தம் பேசுகிறீர்; எமக்கோர் பாகம் பொடும் என்று இஸ்லாமியர் கேட்டால், இதை இப்புக்கொள்ள முடியாது என்று கூறுகிறீர்! ஒன்றிற்கொன்று முரண்படுகிறதே என்று நான் சொன்னேன்.

நாட்டை நாசமாக்கும், பாகிஸ்தானை நாங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமோ என்ற கேட்டார் ஆத்திரத்துடன்.

தற்கொலைக்கு ஒப்பான, ஏற்பாட்டிற்கு முஸ்லீம் தலைசாய்க்கத்தான் வேண்டுமா? என்று நான் கேட்டேன், என் நண்பர், கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு, வெளியே சென்றுவிட்டார்.

முஸ்லீம்களுடன் இணங்கிப் போக மனமில்லை! முஸ்லீம் தலைவர், இவர்களின் ஆதிக்கத்தை வளர்க்க, இவர்கள் சார்பாக, பிரிட்டிஷாரிடம் போரிடவாவது வேண்டும். இல்லையேல், சமரசம் ஏற்படுத்தவாவது முற்படவேண்டும். வாதத்தின் இலட்சணத்தைப் பாருங்கள்!

நெல் மூட்டைகள் களவு முதற்கொண்டு, டில்லி சட்டசபை முன் மறியல்வரையிலே கிளர்ச்சி நடந்திருக்கிறது. தபால்பெட்டி களவு முதல், தனியாகச் சிக்க்கொள்ளும் அதிகாரியைத் தீயிலிடுவது வரையிலே நடைபெறுகிறது; ஒரு கோடி ரூபாக்குமேல், அழிவு வேலையின் பயனாக, நஷ்டம், நாட்டவர்க்கு! இதைக் கண்டிக்க, அடக்க, முனையக்காணோம். தலைவர்களைச் சிறையிலே அடைத்தார்களே என்ற ஆத்திரத்துடன் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று சர்க்காரை வற்றுத்த, பொதுமக்கள், இவைகளைச் செய்கிறார்களாம். ஆகவே இதற்கு அடக்கும் முறைகள் கூடாதாம்! எவ்வளவு நேர்த்தியான வாதம்!

சிந்து மாகாணத்திலே, பகாரோ பீர் எனம் முஸ்லிம் மதத் தலைவர் சிறையிலே போடப்பட்டார். அவருடைய பக்தர்கள் என்று கூறப்படும் ஹர் வகுப்னிர், சயிலைக் கவிழ்த்தனர், கொள்ளையிட்டனர், கொலை புரிந்தனர். சர்க்கார், அவர்களை அடக்க, இராணுவச் சட்டம் பிறப்பித்தனர். துப்பாக்கியால் சுட்டனர். காடுகளிலே உள்ள அந்த ஹர் வகுப்பாரின் இடங்களை விமானங்களிலிருந்து எறி குண்டு வீசி அழித்தனர். பாராசூட் உபபோகித்தனர். பலுருக்குத் தூக்குத் தண்டனை, பலருக்கு ஆயுள் தண்டனை. சர்க்கார் சட்டத்தை நிலைநாட்ச் சளைக்கவில்லை. ஹர் வகுப்பார், பகாரோவீர் எனம் தமது தலைவரைத் தமது மகாத்மாவாகக் கருதுவதும், அத்தகைய மகாத்மாவைச் சிறையிலே தள்ளியிருப்பது கண்டு மனந்தாளாது. குழப்பம் விளைவித்து, அழிவு வேலை செய்து பயங்கர நிலைமையை உண்டாக்கினால், சர்க்கார் தமது மகாத்மாவை, வெளியே விட்டுவிடுவார்கள் என்ற கருதுவதும், சரி என்று, காங்கிரஸ் எழுதுகோலரும், நாவினரும் இதுவரை கூறினதுண்டா! நாங்கள் அஹிம்சைக்காரர். எங்கள் வேலையல்ல நாசகாரியம்! அது மனம் நொந்த மக்கள் தாமாகச் செய்யும் காரியம் என்று காங்கிரஸ்காரர் கூறுவதுபோல், நாங்கள் ஹர் காரியத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் அவர்கள்மீது அடக்குமுறை வீசுவதைக்கண்டு மனம் பதறி முலிம்கள், அழிவு வேலையிலே இறங்கிவட்டனர் என்ற இஸ்லீம்லீக் இதுவரை கூறிற்றா! ஹர் வகுப்பார் நடத்தியதற்கும், இப்போது நாட்டிலே இந்தத் திருக்கூட்டம் நடத்தும் நாசகாரியத்துக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது! ஹஙர தொல்லை ஒழிக்க, சர்க்கார் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும் தாள்களம் தூபமிடவில்லையா; எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளைச் சரியென்று கூறவில்லையா! அது கொலை, கொள்ளை, கொடுமை! அதே காரியத்தை இவர்கள் செய்தால், அதற்குப் பெயர், ஆத்திரம், கொதிப்பு ஆறாத்துயரம், தீராத விடுதலை விடாய் என்று பெயராம்! யோசியுங்கள்!

அழிவு வேலையையும் கண்டத்துவிட்டு அடக்கு முறையையும் கண்டித்து, அல்லாபக்ஷின் அறிக்கைகள் வெளியிடுகின்றன. ஜனாப் ஜினனா, சமரசத் திறவுகோலைக் காட்டவேண்டும் என்று நீட்டிப் பேசுகின்றன. சமரசத்திறவு கோல் தானே தேவை! இதோ, அதைப் பெற வழி! மனமிருக்கிறதா, மார்க்கம் தேடுபவருக்கு! முஸ்லீமுடன் ஒணங்கி, வெள்ளையரைச் சுயராஜ்யம் தந்தாகவேண்டும் என்று கேட்பது சரியா? முஸ்லீமின் கோர்க்கையைக் கவனியாதே! இதோ நாட்டிலே நடப்பதைப் பார்! இதுதான் என் சொரூபம்! ஆகவே என் இஷ்டப்படி நட என்ற பிரிட்டிஷாரை மிரட்டுவதும் அதன் பயனாக அடக்குமறை கிளம்பினால், ஐயனே! ஜின்னாவே! அபயம்! என்று வருவதா? எது அழுகு? எது முறை? எது யுக்தி? எது நேர்மை? பாகிஸ்தான் சொடுப்பது சுயராச்யம் பெறுவதுற்குத் துணை செய்யும் என்பது தெரிந்தும், பாகிஸ்தான் தரமாட்டொம் என்று கூறுவது அறிவுடைமையா?

1961-ம் ஆண்டு நடந்தது மூன்றாவது பானிபட் யுத்தம் - இந்துக்களின் இரட்சகர்கள் என்ற கிளம்பிய மராத்தியருக்கும், இஸ்லாமியருக்கும்.

கிளைவின் படைகளுக்கும் இந்தியருக்கும் நடந்தது பிளாசி யுத்தம்.

எது மீண்டும் தேவை? மீண்டுமோர் பானிபட் வேண்டுமா அன்றி, வெள்ளையருக்கும் இந்தியருக்கிமிடையே பிளாசி நடந்து, இந்தியருக்கு வெள்றி என்ற குதூகலச் செய்தி கிடைக்கவேண்டுமா, என்பதனையே இளைஞர்கள், எண்ணிப் பார்க்கவேண்டும். ஆயுதமின்றி, அறிவைக் கொண்டு, ஆங்கிலேயரிடமிருந்து போரில்லாப் புது பிளாசி மூலம் பெற மார்க்கம் இருக்கிறது.

பாகிஸ்தான் பிரச்னையை மறுப்பதும், மழுப்புவதும், பிறகு பார்ப்போம் என்றுரைப்பதும், நாலாவது பானிபட் யுத்தத்திற்கு விதை போடுவதாகவே எனக்குத் தென்படுகிறது. வெள்ளையர் போய்விட்டால், இந்துக்களின் எண்ணிக்கையைக் கண்டு, அஞ்சி, இஸ்லாமியர்கள், இந்து ஆட்சியிலே அடங்கிவிடுவார்கள் என்ற எண்ணுவது, ஏமாளிகளின் உரிமையாக இருக்கட்டும். இன இயல்புகளைத் தெரிந்து, இனப்போர்க் காதைகளைப் படித்துத் தெரிந்து கொண்டுள்ள விவேவிகள் கூறட்டும, அது நடக்கக் கூடிய காரியந்தானா என்று!

சோம நாதரே! உமக்குச் சொர்ணாபிஷேகம் செய்கிறோம். சோடசோபசாரம் செய்கிறோம் சுகந்தம் பூசி, சாமரம், வீசி சிந்துகள் பாடி, செந்தேன் பெய்கிறோம்.

ஆடலழகிகள், அலங்காரவதிகளாகி, ஆடுவர், காணீர், களிப்பீர்.

சூடம் கொளுத்துவோம். துந்துபி முழக்குவோம், மலர் பொழிவோம், மகேஸ்வரா! பூஜை பல புருவோம்! இந்த மிலேச்சர்களை முறியடித்துத் துரத்து. அவர்கனின் நீசமார்க்கம் எமது ஜென்ம பூமியிலே, வராதபடி தடுத்து எம்மை ஆடகொள்வாய் தயாபரா! உன், பசி ததும்பும் கண்களைத் திற! கோபக்கனலைக் கிளப்பு. கொக்கரிக்கம் துருக்கரை சுட்டுப் பொசுக்கு.

வைரமும் வைடூரியமும, முத்தும பவழமும், பச்சை நீலமும், பலப்பல உமக்காகச் சேமித்திருக்கிறோம். பாற்குடங்கள், தங்கத்தால் பளிஞ்கு மண்டபங்களம், பஞ்சணைகளும் உள்ளன. உமது பக்தர்களின் காணிக்கை.

சோமேசா! உனது கோயில் கோபுர வாயிலில் வரும்போது, அந்த அல்லாவின் ஆட்கள் அடியற்ற மரமெனக் கீழே விழுந்து, ஆவிசோர்ந்து போகக் கடாட்கிப்பாயாக!

கஜனி முகமதுவின், குதிரைப்படையும் காலட்படையும், சோம நாதபுரத்தைத் தாக்க, தூள் வானத்தைத் தழுவும்படி கடுவேகமாக வந்து கொண்டிருந்தன. சோமநாதபுரத்துக் கோயிலிலே கூடினர். தெந்தி தீரர்கள், நொந்தனர், நைந்தனர், நோன்பிருந்தனர்!

இலட்சம் பக்தர்கள்கூடும் கோட்டம்! ஆயிரம் பிராமணர்கள், ஆராதனைக்காக அமர்ந்திருந்த ஆலயம். நூற்றுக்கணக்கான சம்பைகள் ஆடிப்பாடிடும் அலங்காரபுரி! அத்தகைய தேவ தேஜசும், பிரம்ம தேஜசும் தாண்டவமாடிய, சோமநாதபுரத்திலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த சோமேசரிடம் ஆரியர்கள் முறையிட்டனர்.
சோமேசர், வாயையோ, கண்ணையோ திறந்தாரில்லை. கஜனிமுகமதுவின் படைகள், ஊரைப் பிடித்து, எதிர்த்தோரை முறியடித்து, பொக்கிஷம், ஆயத்திலே குவிந்திருப்பது தெரிந்து, கோயிலில் புகுந்து, பிராமணர்கள் உண்டு கொழுக்க, கட்டிக் காத்திருந்து செல்வத்தைச் சூறையாடின.
சோமேசரும், அவரைப் பூஜித்த சர்மாக்களும், அன்று தோற்றதுடன், அவர்களின் ஆதிக்கம் அந்தப் பகுதியிலே மீண்டும் எழவேயில்லை.
ஏ.டி.711-ல் அரவுத் தலைவன் மகமத்பின் காசீம், சிந்துவில் ஜெயக்கொடி நாட்டினான். கஜனீமுகமது 1001 லிருன்து 1030-க்குள் 30 முறை ஆரியவர்த்தத்தின் மீது படை எடுத்தான். மகமத் கோரியின் படை எடுப்புகள் மற்றோர் படலம். 1221-லிருந்து செங்கிஸ்கானின் படைகள் சீறிப் பாய்ந்து வந்து ஆரிய பூமியைச் சிதைத்தன. 1526-ல் பாபர் படை எடுத்தார். மொகலாட்சி மலர்ந்தது. 1738-ல் நாதிர்ஷாவின் படையெடுப்பும், 1761-ல் அகமத்ஷா அப்தாலியின் படை எடுப்பும் நடந்தேறின.

இந்த 762 ஆண்டு சரிதம், எதைக் காட்டுகிறது? இந்தப் பகுதியிலே, ஆரியப் பூண்டே அழிந்தொழிந்து, ஆரிய வாடை அகற்றப்பட்டு, ஆரிய பூமியாக இருந்தது. பாகிஸ்தானாக்கப்பட்டதைத்தானே! இன்னமும் இந்த வட்டாரம், ஆரியவர்த்தம் என்றும், இந்துஸ்தானம் என்றும் கூறிக்கொள்வதிலே பொருள் உண்டா!

வடஇந்தியா ஆரியர் வசப்பட்டு ஆரிய பூமியான பிறக, இஸ்லாமியப் படையெடுப்புகளால் இடுப்பு முறிக்கப்பட்டு, 762 ஆண்டுகள், பிடித்தவனுக்கெல்லாம் பெண்டாகும் பிரதேசமாயிற்றே என்று இந்துக்கள் ஓலமிடும் நிலையை அடைந்தபிறகு இன்ற, அங்கே பெருவாரியாக முஸ்லிம்கள் நிந்திருந்தும், மினாரட்டுமூ மசூதியும் எங்கும் வானை அளாவி இருந்தும், குதப்மினாரும் ததாஜ்மஹாலும், ஜும்மா மசூதியும் ஹுமாயூன் தோட்டமும், காலத்தின் பேரையும் சமாளித்துக் கொண்டு காட்சி தந்தும், மணர்வெளியும் கோதுமைப் பயிரும, ஒட்டகங்களும் உருவத்தில் உயர்ந்து கெம்பீரர்களும், உருட்டும் பார்வையும், நிலம், இனம், இருக்கும் இயல்பு மற்ற பகுதிக்கு மாறுபட்டது என்பதைத் தெளிவாகக் காட்டியும், அந்த இடமும், இந்துஸ்தானமே, அங்கும் இந்து ஆட்சியே நிலைபெற வேண்டும். மத்திய ஆடசியின் கீழே, அந்த வட்டாரமும், ஒரு மாகாணமாக இருத்தல் வேண்டும். அது தனிஅரசாகாது என்று கூசாது வாதிடுவது அழகா என்று கேட்கிறேன். டாக்டர் அம்பேத்கர் இந்த வட வட்டாரத்தை, ஒரு அயில்வே வாகினுக்கு ஒப்பிடுகிறார்; அழகாக, பொருததமாக. எப்படி எந்த என்ஜினுடன் இணைக்கப்படுகிறதோ அதன் போக்கின்படி இணைக்கப்படும் வாகின் செல்கிறதோ, அதுபோல், இந்த வட வட்டாமும், எந்தெந்தச் சமயத்திலே, எவரெவர் வலுத்து இபத்தனரோ, அவ்விதம் சென்றது, அந்த ஆட்சியிலே இருந்தது. கஜனி முகமது காலத்திலே இது கஜனியின் சாம்ராச்யத்திலே ஒரு பகுதி. கஜனியைத் தலைநகராகக் கொண்டு, முகமது இந்த வடவட்டாரத்தை ஆண்டு வந்தான். பூகோளத்திலே, இந்தியா! சரிதத்திலே கஜனி ஆட்சியில் சேர்ந்திருந்தது. முகமது கோரி, லாகூரில் முகாம் அமைத்துக்கொண்டு இதனை ஆண்டார். இங்ஙனம், வட வட்டாரம், ரயில்வே வாகனாக இருந்தது. அதனைப் பாகிஸ்தான் என்ஜினுடன் சேர்த்தால் என்ன குற்றம்? அதன் பாதை அதுதான்! இதனை உணர மறுத்தால், உள்நாட்டுப் பிரச்னை தீராது. மேலும, இந்த வட்டாரம், வீரத்தால் பிடிக்கப்பட்டதே தவிர தண்டகாரண்யத்துத் தவசிகளை உளவாளி களாகக் கொண்டு, பர்ணசாலைகளைச் சதிபீடங்களாக்கி, வஞ்சகத்தால், திவிடத்தை ஆரியர் சிதைத்தனரே அதுபோல், வஞ்சகத்தால், பிடித்தாரில்லை! அதுமட்டுமா! இந்த வட்டாரத்திலே இன்றிருக்கும் இஸ்லாமியர்கள், இந்நாட்டவர், பெரும்பகுதி. இனத்தின் இயல்பு, வாழ்க்கைத் திட்டம், அதற்கு அடிப்படையான மார்க்கக் கட்டளை, அக்கட்டளைகளைக் காத்து ரட்சிக்கும் அரசமைஙபபி ஆகியவற்றால் உண்டாக்கப் படுகிறது. இஸ்லாம், இகத்திற்கும் பரத்துக்கும் கட்டளைகளிட்டது. இகத்தின் கட்டளைகள், இஸ்லாமியரின் வாழ்க்கைத் திட்டமாயிற்ற. அந்த வாழ்க்கைத் திட்டம் அவர்களுக்கெனச் சில இயல்புகளைக் கொடுத்தது. அந்த வாழ்க்கைத் திட்டத்தை, பல நூற்றாண்டுகள் பரிபாலனம் புரிந்த இஸ்லாம்ய அரசர்கள் ரட்சித்தனர். எனவே, வட வட்டாரத்து மக்கள், ஒரு காலத்தில்,ட ஓங்கார பூஜைக்காரராகவோ அகம்பிரமம் என்று பேசினோராகவோ இருந்தவர்களின் மக்கள் என்ற போதிலும், தமது வாழ்க்கைத் திட்டத்தையே மாற்றிக்கொண்டு, அதன் பயனாகப் புது இயல்புகள் பெற்றுவிட்டனர். அந்த இயல்புகள், இஸ்லாமிய மார்க்கத்தை எவரெவர் அனுஷ்டிக்கிறாரோ, அவர்கள் யாவருக்கும், மெக்க முதல் மேட்டுபாளையம் வரை கராச்சி முதல் கான்ஸ்டான்டி நோபில் வரை, பரவி இருக்கிறது. ஒரே வேதம்! ஒரே வழிகாட்டி! ஒரே மார்க்கம்! எனவே இந்த இன இயல்பைப் பெற்று, பெருவாரியாக, தொடர்ச்சியாக உள்ள ஒரு நிலப் பரப்பிலே இருப்பவரிடம், அரசைத் தருவதிலே மேஷம் இருஷபம் சும்மாவா இருந்தனர்! சண்டைகள் எழுவில்லையா! சச்சரவு பார்ப்பதும், உதட்டு உறுவு பேசுவதும், உக்கிர சொரூபம் காட்டுவதும் ஏன் என்று கேட்கிறேன். அக்பர் எவ்வளவு அகன்ற மனப்பான்மை கொண்டிருந்தார். சமரச ஞானவாதியாக இருந்தாரே! அவுரங்கசீப் தானே பிறக முரட்டுத்தனமாக ஆண்டார் என்ற பேசுகிறார்கள். சமரச மனப்பான்மைக்காரராக அக்பர் ஆண்டார் என்பதை எண்ணி அவர் ஆட்சிக் காலத்திலே, இந்துக்கள் சும்மாவா இருந்தனர்! சண்டைகள் எழவில்லையா! சச்சரவு நடைபெறவில்லையா! அக்பர் ஆண்டாலென்ன, அமர்சிங் ஆண்டாலென்ன, இருவரும் இந்தியரே என்று பேசிய, யோக்கியர் எவராவது உண்டா? இந்துக்கள் தமது சதிகளைத் துட்ட அக்பராட்சியைத் திறையாகக் கொண்டகர். அதன் விளைவே அவுரங்கசீப்! இதனை அறிய மறுப்போருக்கு நான் எந்தப் போதகரை அமர்த்துவது. பட்டப் பகலிலே விளக்குக் கேட்டால், நான் என்னென்பேன்!

இப்போதும் நான் சொல்கிறேன். அக்பர் போன்ற ஜனாப் ஜின்னாவை அவுரங்கசீப் ஆக்குவதே இந்து மகாசபைக்காரரின் கிளர்ச்சியின் விளைவாக இருக்கப் போகிறது. இரு இனங்களும், நேசர்களாக வாழவேண்டும என்பதிலே ஜனாப் ஜின்னாவுக்கு இருக்கும் நல்லெண்ணத்தை நசுக்கம் நடவடிக்கைகளே, நாட்டிலே இன்று நடைபெறுகின்றன என்பேன். கட்டுப்பாடான முஸ்லிம் லீக், கற்றுத் தெளிந்த, கனிந்த உள்ளம் படைத்த, ஜனாப் ஜின்னாவின் தலைமையில் இருக்கும் இந்த நாளிலே, இந்து, மஸ்லிம் சமரசம் ஏற்பட வழி வகை செய்து கொள்ளாது போனால், எதிர்காலத்திலே, இந்தியாவிலுள்ள இஸ்லாமியரின் சரிதத்திலே, நாலாவது பானிபட்டு யுத்தம் என்ற அத்தியாத்தைச் சேர்க்கம் சந்தர்ப்பத்தை உண்டாக்கியவர் ஆவோம் என்பதை, உரத்த குரலிலே, சுயராச்யம் கேட்கும் சுடுசொல்லர்கள் மனதிலிருத்த வேண்டுகிறேன். இனத்திற்கோர் இடம் என்ற இன்றியமையாத கொள்கை, பானிபட் மூலம், தீர்க்கப்படுவதே சிலக்கியமென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள் என்ற நம்புகிறேன். தேரைவிட்டுக் கீழே குதிப்பேன் என்று இந்து சல்லியர்கள் புறப்பட்டால் நான் என்ன சொல்ல முடியும். புறப்பட்டுப் பார்க்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்!

ஐயா மாளவ்யாஜீ! மூன்றாம் பானிபட் யுத்தத்திலே, அகமத்ஷா அப்தாலியின் படைகள், மராட்டியரைத் தோற்கடித்ததை மறக்கிறீர்கள் - தோல்வியிலும் ஓர் வெற்றி என்று வாதாடுகிறீர்ளே. மூன்றாம் பானிபர் போரிலே, யார் தோற்றது, யார் வென்றது என்ற சந்தேகம் இருப்பின், நான் ஓர் யோசனை சொல்கிறேன். அதன்படி செய்தால், சந்தேக நிவர்த்தி ஏற்பட்டுவிடும். அதன்படி செய்தால், சந்தேக நிவர்த்தி ஏற்பட்டுவிடும். 1761-ல் நடந்த அந்த மூன்றாம் பானிபட் யுத்தத்தின்போது அகமத்ஷா அப்தாலியுடம்ன 1இலட்சம் போர் வீரர்களே இருந்தனர். மராட்டியரிடம் 6 இலட்சம் பேராம். அது கிடக்கட்டும். இப்போது நாம், பரீட்சார்த்தமாக, நாலாம் பானிபட் யுத்தம் என்றோர் வீர விளையாட்டு அமைப்போம்; நீங்கள் குறிப்பிடும் தேதியிலே, பழைய பானிபட் யுத்தம் நடந்த களத்திலே நான் 700 இஸ்லாமியருடன் வருகிறேன். 7 கோடி பேர் இஸ்லாமியர் கோடிக்கு நூறு பிரதிநிதி வீதம்! இந்துக்கள் 22 கோடியாமே, அவர்கள் 2200 பேர் வரட்டும்! பழய மராட்டிய சந்ததியிலுள்ள, யாராவது ஒரு விஸ்வநாத் ராவ், இந்துப் படைக்குத் தலைமை வகிக்கட்டும நீர் வேடிக்ககை பார்க்க வாரும். வாள், வில், ஈட்டி, சூலம் முதலிய ஆயுதங்களுடனே போர் நடக்கட்டும. அந்த நாலாம் பானிபட் போரின் முடிவு, உமக்குச் சந்தேகத்தைத் துடைக்கும் இன்றைய சிக்கலையும் போக்கும். நான் கொண்டுவரும் 700 இஸ்லாமியரில், ஒரு பட்டாணியோ, ஆபகனோ இருக்கமாட்டாரென்று உறுதி கூறுகிறேன். அவர்களிடம் உமக்கு அச்சம் அதிகமாயிற்றே! இந்த ஏற்பாட்டுக்குத் தாங்கள் சம்மதிக்கிறீரா? என்று 1925-ல், நாஜிபாபாத் மௌலானா அக்பர்ஷா கான் என்பவர், பண்டித மாளவியாவுக்கு ஓர் அறைகூவல் விடுத்திருந்தார்! முஸ்லிம்லீக் முரசு திக்கெட்டும் கிளம்பாமுன்னம், நாலாவது பானிபட் நடத்தவும் தயார் என்ற கூறம் நம்பிக்கை இருந்ததென்றால், ஜனாப் ஜின்னாவின் நாதம், நரம்புகளுக்க முறுகேற்ற, லீக் கீதம் இரத்தத்தைக் கொதிக்கச் செய்ய, தேள் தட்டி, பிறை ஏந்தி, பாகிஸ்தான் எமது பறப்புரிமை, அதைப் பெற்றே தீருவோம் என்று இடிமுழக்கமிடும் இஸ்லாமியர்கள் ஏறுபோலுள்ள இந்நாளிலே, நாலாம் பானிபட் நடந்தால், முடிவு எப்படி இருக்கும் என்பதை நண்பர்களே! நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

2200 இந்து ஒ 700 முஸ்லிம்! ஏன் இங்ஙனம் அந்த மௌலானா கூறினார்! 700 முஸ்லிமும் ஒரே இனத்தவர் என்ற உணர்ச்சி இருக்கிறதே அது, பேதமற்ற தன்மை இருக்கிறதே அது, அவர்களை எஃகு வீரர்களாக்கும்! 2200 இந்துக்களிலே, எத்தனை குலமோ, எத்தனை ஜாதியோ, மதபேதம் எத்துணையோ, குலப்பகை எவ்வளவோ இருக்கும். எனவே களத்திலே 2200 இருப்பினும், கட்டு இராகு, கூட்டு எண்ணம் எழாது. குனியாதிருக்கும் போக்கு இராது. இதையறிந்தே மௌலானா அங்ஙனம் கூறினார். முறைத்துப் பார்த்துப் பயன் என்ன? முகத்தைச் சுளித்துக் கொண்டு பயன் என்ன? நான் உள்ளதைச் சொன்னேன்!!

பானிபட் வாடை வீசிக் கொண்டிருந்தால், பழைய பிளாசி நிற்குமே தவிர, விமோசனத்துக்கு வழி பிறக்காது.

(திராவிட நாடு - 04.10.1942)