அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாராட்டுகிறோம்!

22.08.1948-ல் ஜிம்கானா மைதானத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர் பல லாரிகளில் துபபாக்கி சகிதம் இராணுவமும் போலீசும் வட்டமிட்டன. அன்று பெரியாரவர்கள் இந்தி எதிர்ப்புச் சம்பந்தமாகப் பேசுவதைக் கேட்கவே மக்கள் கடல்போல் சேர்ந்திருந்தனர். ஆனால் ஓமந்தூர் இராமசாமியார், பெரியார் இராமசாமியைச் சிறையில் அத்த செய்தி அவர்களின் பெரும்பாலாருக்கு அப்போது தெரியாது. வரும்வழியில் பெரியார் சிறைப்படுத்தப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார்கள். என்றாலும் கூட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்பதைக் காண எல்லோரும் ஜிம்கானா மைதானத்திற்கு வந்தார்கள் பெரியாரின் பேருரையைக் கேட்கவந்த மக்கள், அவர் சிறைப்படுத்தப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் திகத்து நின்றார்கள். அந்தச் சமயத்தில் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அங்கு தோன்றினார். இருபத்தைந்து ஆண்டுகளக்கு மேலாகவே, தமிழுக்கும், பல்வேறு மனப்பான்மை உள்ள மாகாண சர்க்காரின் கோபத்துக்குப் பலமுறை இலக்காகியும், சர்க்காரின் கோபம் தன்னை ஏதும் செய்யாது என்ற எஃகு உள்ளத்துடன் மேடைமீது திரு.வி.க காட்சியளித்தார்.

பெரியாரவர்கள் காங்கிரசிலிருந்து விலகிய காலத்திலேயே திரு.வி.க அவர்களும் காங்கிரசிலிருந்து விலகினார் என்ற போதிலும், காங்கிரசைத் தூய்மைப்படுத்திவிடலாம் ன்ற நல்லெண்ணம் அவருக்குப் பலகாலமாகத் தொடர்ந்து இருந்துவந்தது அதனால் அவர் காங்கிரஸ் கோர்வைக்குள்ளிருந்துகொண்டே தமிழர நலனக்காகச் சல்லாலும், எழுத்தாலும பணியாற்றி வந்தார். அந்தச் சமயத்திலெல்லாம் ஒரு ஒப்புயர்வற்ற தலைவர், காங்கிரசின் கபட நாடகங்களுக்கு ஆளாகி, உண்மைத் தமிழர் நலனுக்காக உழைக்க முன்வராமலிருக்கிறார்ரே என்று திராவிட மக்கள் எல்லோருமே கவலைப்பட்டதுண்டு. இன்று தலைவர் திரு.வி.க. அவர்களின் நிலை முற்றிலுமே மாறிவிட்டது. திராவிடர் கழகத்தின் சார்பாக மாநாடா? அங்கே திரு.வி.க.வைக் காணலாம். பொதுக்கூட்டமா? அங்கம் அவர்கள் இருப்பார். அந்த அளவுக்கு தலைவர் திரு.வி.க.அவர்கள் தம்முடைய நோக்கையும போக்கையும் மாற்றிக்கொண்டது திராவிடர் கழகத்தாரால் பாராட்டி வரவேற்கக் கூடியதாகும்.

தலைவர்கள் சிறை சென்றுவிட்டார்களே! நாம் இங்குக் கூடியிருக்கிறோமே! நமக்கு ஆறுதல் கூறி ஆர்வம் ஊட்ட ஒருவருமில்லையா என்று அன்று ஏங்கி நின்ற அலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன், திரு.வி.க அவர்கள் தோன்றி, சர்க்காரின் அடக்குமுறையையும் பொருட்படுத்தாது, இதோ நான் இருக்கிறேன் பயப்படாதீர்கள் என்ற ஊக்கமூட்டியதைத் திராவிட மக்கள் என்றுமே மறக்கமுடியாது.