அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


படக்காட்சிகளில் பரமன்!
படக்காட்சிகளில் பரமன் வடிவெடுத்துப் பாடுவதும் இடுவதும் கூடாது. அவ்விதம் செய்வதைத் தடுக்க வேண்டும். அதற்கென ஒரு சட்டம் இயற்ற வேண்டும். இது இன்றைய சர்க்காரின் ஏற்பாடுகளில் ஒன்றாக இருந்து வருவதாகத் தெரிகிறது. மாட்டுச் சாணத்தைச் சர்வவ்லவமையுற்ற கடவுளாக வைத்து வணங்கும ஒரு நாட்டில், மக்கள்,கடவுள் வடிவம் கொண்டு நடிப்பதை அவ்வளவு பெரிய குற்றமாகக் கருதிவிட முயாதென்றபோதிலும், மற்ற நாடுகளில் படக்காட்சிகளின் அமைப்பும் நோக்கமும் எதனை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறதென்பதையும், நம் நாட்டில் படக்கட்சிகளின் அமைப்பும் நோக்கமும் எதனை அடிப்படையாகக் கொண்டிருக்கிற தென்பதையும் ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, சர்க்காரின் இந்த ஏற்பாட்டை எவரும் குற்றம் ஏ;னறு கருதிவிட முடியாது. அத்தி பூப்பதுபோல், சர்க்காரும் திடீரென்று ஒவ்வொரு நல்ல காரியங்களைச் செய்ய முற்பட்டு விடுகின்ற. சர்க்கார். தனக்குமுன் நிற்கும் வானத்தை முட்டும் எதிர்ப்பைக்கூடப் பொருட்படுத்தாமல் சில நல்ல காரியங்களை - எதிர்பாராத விதத்தில் - எந்தக் காரணத்தைக் கொண்டோ செய்ய முற்பட்டுவிடுவது கண்டு களிக்கிறோம். சர்க்காரின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமானால், இன்றைய நம்நாட்டுப் படவுலகில் ஒரு புரட்சிகரமான மாறுதல் ஏற்படும் என்பது உறுதி. ஆனால், இந்த ஏற்பாடு, மதமெனும் குரங்கால்மாய்த் தொழிக்கும் நிலை ஏற்பட்டால் அதனைச் சர்க்கார் சமாளித்து, எடுத்துக் கொண்ட காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் துணிவும், பக்க பலமும் அதற்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், சர்க்காரின் இந்த ஏற்பாடு அறிக்கை வடிவில் வெளி வந்ததும், பரமனின் வார்சுப் பத்திரிகைகள் சில சர்க்காரின் இந்த ஏற்பாட்டைக் கண்டிக்கத் தொடங்கிவிட்டன. சர்க்காரின் இந்த ஏற்பாட்டால் சினிமாத் தொழிலும், நாடகக்கலையும் மாய்ந்தொழியும் என்று மிகமிக மட்டரகமாக எழுதத் தொடங்கிவிட்டன.

படக்காட்சிகளில் கடவுள் தோன்றினாலன்றிக் கலை வளராது என்றும் கலை என்றால், அது கடவுள் தான் என்பதாக எண்ணும் சில கருத்தில் உரமற்றவர்கள் கருதுகிறார்கள். கலை நாகரிகம் என்ற சிறந்த மக்கட்பண்புகள், நம்முடைய மகேசுவரன்களுக்கு முற்றிலும் புறம்பானவை என்பதை நம்மவர் பலர் உணராதாலேயே பட உலகில் கடவுள் தோன்றாவிடடால் கலை அழிந்துவிடும் என்று ஆலறுகிறார்கள். கலை-நாகரிகம் ஆகிய உயர்ந்த மக்கட் பண்புகளுக்கும், மக்கட் பண்புக்கு மிகத் தொலைவில் இருக்கும் நமது கடவுளரின் பண்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறியவேண்டுமானால், நம்முன் கொடடிக குவித்துக் வைக்கப்பட்டிருக்கும் புராண - இதிகாரசங்களை ஒருமுறை புரட்டிப் பார்த்தால் விளங்கிவிடுமே! இராமனுடைய இராமயாணத் தையும், கிருட்டினனுடைய பாகவதத்தையும், சிவனுடைய திருவளையாடற் புராணத்தையும் படமாகப் பிடித்துக் காட்டினால்தான் கலை வளரும் என்ற பரிதாப நிலையிலுள்ளவர்கள், நம்முடைய கடவுளர்கள் தங்கள் கரைபுரண்டோடும் காம இச்சையை நிறைவேற்றுவதற்காகப் பகுத்தறிவற்ற விலங்கினங்களும் மேற்கொள்ளாத இழிந்த முறைகளைக் கையாண்டார்கள் என்ற செய்திகள் தானே புராண - இதிகாசங்களில் முதலிடம் பெற்றுள்ளன என்பதை அறியவும், உணரவும் முடியாதவர்களன்றி, மற்ற எவரும் புராண - இதிகாசங்களைப் படம்பிடிக்க வேண்டுமென்று கூறவே மாட்டார்கள். சிவன் மோகினயைத் துரத்திச் சென்ற கதையும், சுப்பிரமணியர் வள்ளியை வட்டமிட்ட கதையும், கிருட்டிணன் சத்தியபாமாவிடம் சரசமாடிய கதையும், இந்திரன் அகலிகையை ஆணைந்த கதையும், பிரம்மா பார்வதியைப் பார்த்த கதையும், துரோபதை, ஐந்துபேர் கணவன்மாராக இருந்தும் இறாவது கணவன் தேûப்படுகிறதென்று கூறிய கதையும், சீதை வால்மீகி இசிரமத்தில் ரண்டு குழந்தைகளைப் பெற்ற கதையும், ஆக்னிதேவன் இருடியர் ஏழுவரின் மனைவிகளை விரும்பிகய கதையும், பார்ப்பனப் பெருமகன் ஒருவன், பெற்ற தாயைப் புணர்ந்து - தந்தையைக் கொன்ற கதையும், காட்டுப் பன்றிகளுக்கு நாட்டு அமைச்சரின் மனைவிமார்களை வாழ்க்கைத் துணைவியராக்கி அப்பன்றிகளையே நாட்டு அமைச்சர்களுமாக்கிய கதையும் இன்ன பிறவும்தானே புராண - இதிகாசங்களில் முதலிடம் பெற்று இன்றைய பட உலகுக்கு விருந்தளிப்பனவாக இருக்கின்றன! இக்கதைகளைப் படம் பிடித்துக் காட்டவிட்டால், பாமர மக்களின் கடவுட் பற்றுக் குறைந்து விடுமென்று சிலர் கூக்குரல் போட இப்பவே கிளம்பிவிட்டார்களே! கருவில் இருக்கும் சர்க்காரின் இந்தத் திட்டம் உருவாகிவிட்டால் உலகமே அழிந்துவிடுமென்று இவர்கள் உறுமிக் கிளம்பி இன்னும் அதிகமான உரத்த குரலில் பேசுவார்களே! சர்க்கார் இவ்வளவையும் தாண்டியன்றோ தங்கள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! முடியுமா? செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி, இப்போது சர்க்கார் கொண்டுவர இருக்கும் திட்டமானது, எந்த அடிப்படையில் கொண்டு வரப்படுகின்றது? அதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன? என்பனவற்றைப் பற்றியும் சிறிது ஆராய்வது இந்தத் திட்டத்தைக் கொண்டுவர இருக்கும் சர்க்காருக்குப் பயன்படும் என்று கருதுகிறோம். எனவே, இன்று படக்காட்சிகளில் பரமன் வடிவத்தில் தோன்றி நடிப்பதானது, பரமனுடைய மதிப்பையும் உயர்வையும் குறைப்பதாக இருக்கிறது, ஆகையால், இந்த நடிப்பு முறையையே இல்லாமல் செய்துவிட்டால், கடவுளின் கௌரவம் காப்பாற்றப்படும் ஏன் றஅடிப்படையிலேயே சர்க்கார் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதாகத் தெரிகிறது. கடவுளின் கௌரவத்தைக் காப்பாற்றுவதோ அன்றிக் குறைப்பதோ நம்மால் முடியக்கூடிய காரியமா? என்பதை முதலில் கடவுளன்பர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். கடவுள் தன்மையைப் பற்றி மதநூல்களில் கூறப்பட்டிருக்கும் விளக்கங்களை உணராதவர்கள்தான் அவருடைய கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதுவார்கள்!

மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு நின்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மதநூலார் கொள்கை, மதநூலார் இலக்கணப்படி, கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறுண்டாக்குவதாகும். எப்படியென்றால் ஓசை “ஒலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ” என்பது மத நூற்றுணியாகும். எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும் - தந்தையாயும் - எல்லாமாயும் - எங்குமாயும் - உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியாமையும் அதன் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் - அதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்ற நெட்டுயிர்ப்பம் வேடிக்கையாகவே இருக்கிற. கடற் சிப்பியில் முத்து இருக்கிறதென்று ஒருவன் கூறுவது இயற்கைக்கு மாறுபட்டதாகாது. என்றாலும் அது பலருக்கு வியப்பைத் தருகின்றது. காரணமாம், கடற் சிப்பியில் முத்து என்ற ஒரு மதிப்புடைப் பொருள் இருக்கிறதென்பதை அறியாதார் சிலர் இருக்கக்கூடும் என்பதால். கடற்சிப்பியில் முத்து இருக்கிறதென்பதை அதனை அறிந்தான் ஒருவன் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறுபடாததுமாகும். ஆனால் நமது கடவுள் அப்படிப்பட்டவரன்று, கடற்சிப்பி முத்து போல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதும், மற்ற இடங்களில் இல்லாததுமான ஒன்றைத்தான், அது இன்ன இடத்தில் இன்ன தன்மையோடு இருக்கிறதென்று, அறிந்தான் ஒருவன் அதனை அறியாதார்க்கு அறிவிக்கவேண்டும். அங்ஙனமின்றி, எல்லாமாய் - எங்குமாய் - அணுவுகணுவாய் - ஆகண்டமாய் - எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை, ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை ஆளப்பதற்குக் கருவியே இல்லை. ஒருவனால் உண்டென்று சொல்லப்படும் ஒரு பொருள், யாதொரு கருவியாலோ - அறிவாலோ ஆளந்தறிந்து உணரக்கூடியதாயும் இருத்தல் வேண்டும். ஆனால், கடவுள், ஆளப்பரும் இயல்பினதாய் - மறை முதல் சொல் ஈறாகவுள்ள எந்தக் குறையிலா அளவினாலும் ஆளந்தறிய முடியாதென்று முழக்கிய பின், ஒருவன், அதனைக் கண்டறிந்து ஆளந்தவனாவானா? அதன் கௌரவத்தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா? அன்றி, அப்பொருள் ஒருவனால் ஆளந்தறியப்படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந்தாலன்றி முடியுமா?

ஒருவன், ஒரு பொருளை உண்டென்று கூறுவானாயின், அவன், அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டுமன்றோ! எனவே ஒருவானல், காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் கடவுள் என்பழைப்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்டதாகும். எப்படியென்றால், காணமுடியாதது எதுவோ அதுவே கடவுள் என்பது மதநூலார் கொள்கை, எனவே, காண முடியாதது எது என இராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காணமுடியாததுமாகும் என்ற உண்மை றெப்படுகின்றது. அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்துப் போலக் கடவுளும் எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இரப்பதாகக் கொள்ளவும் மத நூற்கள் இடந்தருவதில்லையே! கடவுள் இல்லாத இடமே இல்லை என்பதுதான் அந்நூற்களின் முடிந்த முடியாகும். எனவே, கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றவிட்டால் அதன் கௌரவம் குறைந்து விடுமென்று கருதும் நிறைமதி யாளனும், மணற்சோற்றில் கல்ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.

இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, தேடினால் கிடைப்பர் என்று முன்னுக்குப்பின் முரணான கொள்கைகளை நம்பி, அவ்வழி சொன்றோரெல்லம், அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த நிலையினோர் அவ்வழிபோய் மீண்ட பலருட் சிலராவர். உனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட ஆம் மட்டைகளில் ஒன்றும் இல்லாமை புலப்படுவதுபோல், மத நூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள், தாங்கள் கருதிப்போன கடவுள் காணப் படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள் எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை ஏன்றைக்குத் தோன்றியதோ, அன்றிருந்தே ஆக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது - வருகிறது. ஆனால், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக் கொள்கைகளால் பிரித்துப் பிளவுபடுத்தப்பட்டிருப்பதல், பொய்யைக் பொய்யெனக் கொள்ளும் பேதைமையே பெருமை பெற்று வருகின்றது. இதனால், உண்மைகளை உருவாக்குவதற்குப் பெருமுயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும், இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. இஞ்ஞான்றை உலகம் இத்துறையில் ஓரளவு வெற்றி பெற்றுவருவது கண்கூடு. காரணம்! மக்களிடையே மங்கிக்கிடந்த பகுத்தறிவென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலமாக விளங்குவதால் ஏன்க. இந்த ஆராய்ச்சியின் பயன், அரசியலாரைக்கூடப் படக்காட்சிகளில் பரமன் வடிவில் நடிப்பது கூடாது என்ற அளவுக்காவது சீர்திருத்தம் செய்யவேண்டு மென்ற எண்ணத்தை உண்டாக்கி விட்டதென்றால், இன்றைய உலகம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறதென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இதுமட்டுமல்ல, இன்றைய இந்திய யூனியனுக்குத் தலைவராக (பிரசிடெண்டாக) வருபவர், தம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்வேன் என்பதாக எடுத்துக் கொள்ளப்படும் விசுவாசப் பிரமாணம் கடவுள் பேரால் செய்யப்படவேண்டுமா அல்லது வேண்டாமா? என்று விவாதிக்குமளவுக்குக் கடவுள்பற்றிய கருத்தும் நம்பிக்கையும் முன்னர்க்காலம் போலன்றி மாறுதல் அடைந்து வருகிறதென்பதும், பேரறிஞர்கள் செய்துவரும் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு அரண் செய்வதாகவே இருப்பது கண்டு மகிழ்கிறோம்.

இனிப் படஉலகில் பரமன் தோன்றுவதால், அவருடைய கௌரவம் அதாவது மதிப்பும் உயர்வும் குறைந்து வருகிறதென்று கருதுபவர்கள், தங்களால் செய்யப்படும் சீர்திருத்தங்களுக்குத் தடையாகவும், ஆராய்ந்து பார்க்கவேண்டியனவாகவும் உள்ளபடி அடிப்படைக் காரணங்களையும் நன்கு எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது, விருப்பு வெறுப்பும் - நினைப்பு மறப்பும் ஆற்றதாகப் பேசப்படும் ஒரு கடவுள், விருப்பு வெறுப்பு - நினைப்பு மறப்பும் உள்ள மக்களை (உலகை) எப்படிப் படைத்தார்? ஏன் படைத்தார்? குற்றமற்ற குணக்குன்றாக உள்ள கடவுள், குற்றம் புரியும் உயிர்களை எப்படிப் படைத்தது? குற்றம் புரியும் உயிர்களை ஓறுக்கும் கடவுள். ஆக்குற்றங்களையும், ஆவற்றைச் செய்வோரையும் ஏன் படைத்தார்? நல்லதையே விரும்புங் கடவுள் தியதை ஏன் படைத்தார்? நோயையும் அது தீர்வதற்குரிய மருந்தையும் உண்டாக்கிய கடவுள், அந்நோய் தீர்வதற்குத் தன்னையே வணங்க வேண்டுமென்று சொன்னால், அத்தகயை கடவுளையும் அதன் கௌரவத்தையும் காப்பாற்றித்தான் ஆகவேண்டுமா? கடவுளால் உண்டாக்கப்பட்ட ஒருவன், தன்னû உண்டாக்கியவர் கடவுள்தான் என்பதை அறியமுடியவில்லை என்றால், அது அவனுடைய குற்றமா? அன்றி அந்தக் கடவுளுடைய குற்றமா? தன்னை அறியமுடியாத அறிவைக் கொடுத்து, ஒருவனை அந்தக் கடவுள் படைப்பதும், பின்னர், அவன், தன்னை அறிந்து வழிபடவில்லை என்ற குற்றத்தை அவன்மீது சுமத்தி அவனைத் தண்டிப்பதும் அந்தக் கடவுளின் அருள் கலந்த செயலா? மக்களுக்கு அறிவைக் கொடுப்பது கடவுள் என்றால், அறிவில்லாமல் செய்வதும் அந்தக் கடவுள் தானே! அங்ஙனமாயின், ஒருவன்தன் அறியாமையாற் செய்யுங் குற்றம் அந்தக் கடவுளைத் தானே சாரும்! உலகில், ஒருவன் செய்யும் குற்றத்திற்குத் தகுந்த தண்டனை உலகிலேயே கிடைக்கும்போது, அதற்கென வேறு ஒரு உலகம் நரகம் என்ற பெயரோடு தனியாக இருப்பதாகச் சொல்லப்படுவதன் பொருள் என்ன? கடவுள் செயலால் செய்யப்படும் ஒரு குற்றத்தை உலகில் உள்ள ஒருவன் தண்டித்தால், அது கடவுள் இணையை மீறயதாகாதா? இன்பதுன்பங்கள் ஆகிய இரண்டையும் நுகர்வது இவ்வுலகத்தில் என்றால், இன்பதுன்ப நுகர்ச்சிக்கான மேல்-கீழ் உலகங்கள் உண்டென உள்றுவானேன்? சிற்றின்பமும் சிறு துன்பமும் நுகர்வதற்கு இவ்வுலகமும், பேரின்பமும் பெருந்துன்பமும் நுகர்வதற்கு அவ்வுலகங்களும் என்றால், சிற்றின்பங்களையும் சிறு துன்பங்களையும் நுகர்வதற்கு இரு வேறு தனித்தனி உலகங்கள் இங்கும் இருத்தல் வேண்டுமென்றே! இன்பம் நுகர்வோரும் துன்பம் நுகர்வோரும் இவ்வுலகத்தில் ஒருங்கிருக்கும் போது, பேரின்பப் பெருந்துன்பங்களை நுகர்வதற்கு அங்கும் ஒரு உலகம் இருந்தால் போதாதா? நரக உலகம் - மோட்ச உலகம் என்ற இரண்டு உலகம் அங்கு இருப்பானேன்? இங்கு மட்டும் ஒன்று இருப்பானேன்?

இனிப் பேரின்பம் அழிவற்றம், சிற்றின்பம் அழிவுடையதென்றும் கூறுவதன் பொருள் என்ன? இன்பமோ அன்றித் துன்பமோ, இரண்டில் ஒன்று பெரிது மற்றது சிறிதென்று கூற முடியுமமா? ஒருவனால் நுகரப்படும் இன்பதுன்பங்கள் இன்னொருவனுக்குப் பெரிது சிறிதாகக் காணப்பட்ட போதிலும், ஆவற்றை நுகர்பவனுக்கு அவை இன்பதுன்பங்களாகவேதான் தோன்றும்! இன்பத்தை இன்பமாகவும், துன்பத்தைத் துன்பமாகவும் கொள்ள முடியுமேயன்றி, பெரிது சிறிதென்ற வேறுபாடு காணமுடியாதே! பாலுக்கு சர்க்கரையும், பழங்கஞ்சிக்கு ஊப்பும் இல்லையென்று கவலைப்படும் இரு வகைப்பட்டார்க்கும் ஏற்படும்துன்பம், அவ்விருவர் நிலைக்கும் ஏற்ப ஒன்றாகத்தானே இருக்கும்! எனவே, சிற்றின்ப பேரின்பங்களும் ஆவற்றை நுகர்வதற்கான வெவ்வேறு தனி உலகங்களும் இருப்பதாகக் கூறுவது பொய்யாகத்தானே இருக்கமுடியும்!

இனி, நல்லது செய்பவனுக்கு இன்ப உலகமும் தீயது செய்பவனுக்குத் துன்ப உலகமும் ஒரே கடவுளால் கொடுக்க முடியுமா? அப்படிக் கொடுப்பதுதான் கடவுள் இயல்பென்றால், அத்தகைய கடவுள் நல்லவரா? கெட்டவரா? எல்லாரும் நல்லவர்களாகவே இருக்கவேண்டு மென்று விரும்பும் கடவுள், கெட்டவர்களையும், அவர்கள் எதிரே கெட்ட செய்கைகளையும் ஏன் படைத்தார்? கன்ன்க்கோலைப் படைத்த கடவுளை முழுத் திருடன் என்று கூறுவது குற்றமா? கடவுள் நல்லவர் என்றால், அவர் கையில் - சூலம் - வேல் - வாள் - சக்கரம் முதலான கொலைக் கருவிகள் இருப்பானேன்? இவற்றையும் இன்ன பிறவற்றையும், படக்காட்சிகளில் கடவுளிரின் வடிவங்களைக் காட்டி நடிப்பதால், அவருடைய கௌரவத்திற்குக் குறைவு ஏற்படுகிறது என்று எண்ணுபவர்கள் சிந்தித்துப் பார்ப்பதோடு, கடவுள் என்பதாக ஒன்று உண்டென்று கொண்டாலும் அல்லது இல்லையென்று கூறினாலும், அப்படிப்பட்ட ஒன்று நமக்கு (உலகுக்கு)த் தேவைதானா? அப்படித் தேவைப்பட்டாலும் இன்று நம்முன் காட்டப்படும் கடவுளால் உண்டான - உண்டாகும் நன்மைகள் என்ன என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கடவுளின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் சென்னை சர்க்கார், தாங்கள் காப்பாற்ற நினைக்கும் கடவுள் யார்? எந்தக் கடவுளின் கௌரவத்தைக் காப்பாற்ற எண்ணுகிறார்கள்? இயேசுவைப் போலவோ அல்லது ஆல்லாவைப்போலவோ ஒரே கடவுள் நமக்கிருக்கிறதா? நம்முடைய கடவுளார் ஒருவரல்ல, பலராயிற்றே! 28-12-48ல் மத்திய சட்டசபையில் கூட இதுபற்றிப் பேசப்பட்டிருக்கிறதே! இந்துக்களின் கடவுள் ஒன்றல்ல, மூன்று இருப்பதாக டாக்டர் ஆம்பேத்கார் மத்திய சட்டசபையில், இந்திய யூனியன் தலைவர் (டழ்ங்ள்ண்க்ங்ய்ற்) விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்வது பற்றிப் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறாரே!

“கடவுள் என்ற சொல் பல மதத்தினருக்குப் பலவிதமாகப் பொருள்படுகின்றது. இந்து மதப்படி கடவுள் என்ற சொல்லுக்கு ஒரு மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியைக் குறிக்கிறது. விஷ்ணு, சிவன், பிரம்மா என்ற பல பெயர்கள் மூலம்தான் கடவுள் என்ற சொல்லுக்கு அவர்கள் வடிவம் கற்பித்திருக்கிறார்கள். இப்படிப் பல பெயர்கள் இருப்பதால்தான் கடவுள் என்ற சொல்லை இத்தீர்மானத்தில் சேர்க்கவில்லை”.

என்று டாக்டர் ஆம்பேத்கார் கூறியிருக்கிறாரே! நம்முடைய கடவுள் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்பதே இன்னும் முடிவு செய்யப்படாத இந்த நிலையில் - கடவுள் என்ற சொல்லே நம்முடைய மதக்கோட்பாட்டின்படி நாம் கையாள்வதற்கு முடியாமல் இருக்கும் இந்த இரங்கத்தக்க நிலையில், நாம் எந்தக் கடவுளின் கௌரவத்தைக் காபாற்றுவது என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இனி, இப்போது, படக்காட்சிகளில் தோன்றும் சிவன் - திருமால் ஆகியவர்களின் கடவுள் தன்மை குறித்தெழுந்த போர் அவ்விருவருக்குமிடையே தீர்ந்தபாடில்லை. சிவன், திருமால் ஆகிய இருவரின் உயர்வு தாழ்வுக்காக நிகழ்ந்த போரைக் குறிக்கும் நூல்கள் பல நம்முன் உள்ளன. இந்நூல்களைப் பார்த்தால், மக்கள் தம் மனத்தாற்கூட நினைக்கு விரும்பாத பல அருவருப்பான முறைகளை ஆக்கடவுளார் கையாண்டுள்ளனர் என்ற உண்மை விளங்கும். அவ்விரு கடவுளருள்ளும் எவர் உயர்ந்தவர் என்ற போரைக் குறிப்பதும், இவ்விருவரில் எவர் பெரியவர் என்ற முடியாத முடிபைக் குறிப்பதுமான நூல்களே இன்றைய சைவ - வைணவர்களின் வழிபாட்டு நூல்களாகவும், முடிந்த முடிவைக் கூறும் சிந்தாந்தங்களாகவும் விளங்குகின்றன. இந்நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் அறிவுக்குப் புறம்பான - அருவருப்பான நிகழ்ச்சிகளைத்தான் படக்காட்சியின் வாயிலாக நடித்துக் காட்டத் தவறினால், நாட்டில், சினிமாத் தொழிலும், நாடகக்கலையும் மாய்ந்தொழியும் என்று இப்பவே சர்க்காரை மிரட்ட கிளம்பிவிட்டன சில பத்திரிகைகள்.

சர்க்காரோ, கடவுளரின் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டுமானால், படக்காட்சிகளில் கடவுள் வடிவம் ஏடுப்பதைத் தடுக்க வேண்டுமென்று கூறுகிறது. வேறு சிலரோ, படக்காட்சிகளில் கடவுள் வடிவம் எடுத்து நடிக்கப்படாவிட்டால், பாமர மக்கள் நாடகத்திலும், படக்காட்சியிலும் தெய்வீக வரலாறுகளைக் கண்டுகளிக்க முடியாமல் ஏமாந்து விடுவார்கள் என்று கூறுகின்றனர்.

நாம், சர்க்காரின் இந்த ஏற்பாட்டை அப்படியே வரவேற்க முடியாதபடி, சரக்கார் இதற்குக் கொண்டிருக்கும் அடிப்படைக் காரணம் தடை செய்வதாய் இருந்த போதிலும், பட உலகில் இதனால் ஒரு மாறுதல் ஏற்பட வழிகோல முடியும் என்ற நம்பிக்கை நமக்கிருப்பதால், சர்க்காரின் இந்தச் சிக்கலான - தெளிவற்ற ஏற்பாட்டை வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். பாதை திறக்கப்பட்டு விட்டால், அதன் நடுவே உள்ள கற்களையும், முட்களையும் அகற்றுவது அவ்வளவு கடினமல்ல என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. எனவே சர்க்கார் இப்போது செய்துள்ள ஏற்பாடு கல்முள் நிறைந்ததாக இருந்தாலும், நம்முடைய அடிப்படை நோக்கம் அந்த ஏற்பாட்டில் இலைமறை காயாக இருப்பதால், அதனை எதிர்ப்போரைக் கண்டு சர்க்கார் தன்னுடைய திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாதென்பதே நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும். நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்,

“பரமசிவன் அருள்புரிய
வந்து வந்து போவார்”

என்று கூறி நம்நாட்டுப் படக்காட்சிகளில் கீழ்நிலையை விளக்கியதற்கேற்பச் சர்க்கார் இந்த அளவுக்காவது சீர்திருத்தம் செய்ய முற்பட்டதே என்று மகிழ்கிறோம். ஆனால்,

சழக்கர் பலர் நிரம்பிய இந்நாட்டில்
சர்க்கார் கொண்டுவருமித் திட்டம்
விளக்கமுற வெற்றி பெறுமோ வெம்பிப் போமோ
வெம்பாது வெற்றபெறினு மதனைக்
கொளக்கருதுமத மாயைக் குரங்கு கவர்ந்திடுமோ
கவராது நடைமுறைக்கு வரினும் தனைத்
துளக்கமற மக்கள் நுர்வரோ மண்டைக்கர்வம்
பிடிக்குமோ எதுநேருமோ ஏதமறிந்திலமே!

(திராவிடநாடு - 2.1.49)