அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பேச்சுரிமைப் போர்வீரர்கள் மீது வழக்கு

சர்க்காரின் குற்றப்பத்திரிகை
குற்றச்சாட்டை மறுத்தனர்
வழக்கு ஒத்திவைப்பு

திருச்சி மாவட்டம் நாரணமங்கலத்தில் 27.11.50 அன்று பேச்சுரிமைப் போரிலீடுபட்டு கைது செய்யப்பட்ட தோழர்கள் ஏழுபேரும் 1.12.50 அன்று பெரம்பலூரில் இருந்து அரியலூருக்குக் கொண்டு வரப்பட்டார்கள். டிபுடி கலெக்டர் முன் நமது அறப்போர் வீரர்கள் எழுவரும் ஆஜர் செய்யப்பட்டனர்.

தோழர்கள் மீது 143,188 ஆகிய செக்ஷன்களின் கீழ் சர்க்கார் தரப்பில் குற்றப் பத்திரிகை படிக்கப்பட்டது.

தாங்கள் குற்றவாளிகளல்ல என்று நமது தோழர்கள் மேற்படி குற்றச்சாட்டை மறுத்தனர்.

அதன்பேரில் வழக்கு 6.12.50 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

நமது தோழர்கள் எழுவரும் அரியலூர் சப்ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

பேச்சுரிமை காக்க அடக்குமுறையை மீறிச் சென்று சிறையில் கிடக்கும் நமது சிங்கங்கள்:-
திருச்சி மாவட்ட தி.மு.கழக உறுப்பினர் - து.வானமாமலை
நாரணமங்கலம் கழகச் செயலாளர் - செண்பகராசன்
நாரணமங்கலம் கழகப் பொருளாளர் - வி.எம்.விஜயகோபால்
நாரணமங்கலம் கழக விளம்பர உறுப்பினர் - ஆர்.ஆதிமூலம்
மூங்கில்பட்டி கழகத் தோழர் - எம்.வடிவேலு
செண்பகராசபுரம் - மருதமுத்து
லெப்பைக்குடிக்காடு - அமராவதி

(திராவிடநாடு 10.12.50)