அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பண்டித நேருவின் கண்முன்!
இந்த நாட்டில் ஏழையின் சராசரி வருமானம் இரண்டே அணாதான். இந்நிலையில் அவன் எப்படிச் சுகவாழ்வு பெறுவது? அவனுடைய வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்திக்ö காள்வது? அரை வயிறு கஞ்சிக்கும், அவன், அவசதி பல படவேண்டியதாகத்தானே இருக்கிறது! ஏகாதிபத்யப் பிடியினால் வந்த அவல வாழ்வல்லவா இது! பிடி அகன்று, நாட்டுத் தலைவர்கள் கைக்கு ஆட்சியுரிமை கிட்டுமாயின், மக்கள் வாழபுவு வளப்படுமே - அப்போது எவர் குறுக்கீடுமின்றி, தலைவர்கள் நினைத்ததைச் செய்து முடிக்கலாமே -எ ன்றெல்லாம் பேசினர். இன்றும் பேசுகின்றனர். மக்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்ப்பது இயற்கையுமாகும். குற்றம் மக்களுடையதல்ல. மக்களை, இவ்வாறு நம்பிக்கை கொள்ளும் அளவிற்குப் பலமான பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இன்றும் செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளையன் ஆட்சியால் இங்கு, தேவையான அளவிற்குத் தொழில் உருவாகவில்லை. சொந்த நாட்டின் நன்மையை உத்தேசித்து, இந்த நாட்டில் புதுத்தொழில் பலவும் காண வெள்ளையன் முற்படவில்லை. கிடைத்துள்ள அரசியல் ஆதிகத்தை தன்னாட்டின் பொருள் செழுமைக்கே, இந்நாட்டில், நாட்டுமக்களின் மூலதனம் கொண்டு புதுத்தொழில் பெருக முடியாமல், கட்டுப்படுத்திவிடுகிறான்... எனவே இங்கு செல்வம் பெருகவழியில்லை. மக்கள் தொகைக் கேற்ப; இங்கு பொருள் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆதலால் மக்கள் பசியாலும், பஞ்சத்தாலும் மடிகிறார்கள். வெள்ளையன் வெளியேறிவிட்டால், இந்த இல்லாமைத் தொல்லை எவ்வளவோ தொலைவில் நின்றுவிடும். மக்களின் வறுமை தொலைந்த, தேவை குறைந்த மகோன்னத புரியாக, இந்தப் ‘புண்ய’ பூமியை ஒரு நொடியில் மாற்றி அமைத்து விடுவார்கள். இவ்வாறு முன்னர் தலைவர்கள், கூறிய வாயுரையை, மக்கள், நூற்றுக்கு நூறு உண்மையெனக் கொண்டனர். தலைவர்களின் நம்பிக்கையூட்டும் திறமையான பேச்சே இதற்குப் பொறுப்பு.

தொழில் - வளம் பெருகாமல் போகவே, இங்கு வேலையற்றோர் தொகை நாளுக்கு நாள் கூடியது. காட்டிலும், கடல் கடந்து சென்றாவது, எடுபிடி ட்களாக இருந்தாவது, வயிற்றை நிரப்புவோம் - மரணத்தைத் தவிர்ப்போம் - என மக்கள் தேயிலைத் தோட்டத்தையும் இரப்பர் காட்டையும் தேடிச் சென்றனர் வெய்யிலிலிருந்து வருபவனுக்கு நிழலின் அருமை அதிகாரத்த தெரிவது போல், பஞ்சத்தில் அடிப்பட்டுக் கிடந்தவனுக்குப் பசியற உணவு கிடைத்ததும் கொஞ்சம் திருப்தி ஏற்படுவது இயல்பேயாகும். இந்த நிலை நீடித்து நிற்கவில்லை. மீண்டும்மனச்சாந்தி மறைந்தது. பிறந்த நாட்டைப் பிரிந்திருக்கும் மனவேகனை, எதிர் காலத்தைப் பற்றின அச்சம், வாழ்வு சரிவது கண்டு கவலை, மறுபடியும் பிறந்த நாட்டில் பெருவாழ்வு வாழ மாட்டோமா எனும் ஆசை, இத்தன்மையில், இந்நாட்டு மக்கள் வேற்று நாட்டில் மானம் மரியாதை இழந்து,இருந்து வருகின்றனர். ஏகாதிபத்யப் பிடியால் ஏற்பட்ட அனர்த்தம் இது. இப்பிடி தகர்த்தெறியப்பட்டு, தரணியாளும் பொறுப்புத் தியாகிகளின் கைமாறுமானால், வேற்றுநாட்டில் வேதனைப் படும் மக்கள் அனைவரும், பிறந்த நாட்டிற்குத் திரும்பி, நாட்டைப் பொன்னாடாக்கிப் புகழ் வாழ்வு வாழலாம் எனப் பறைசாற்றப்பட்டது. இப்பறை சாற்றலில் மக்கள் நம்பிக்கை கொள்ளாமல் எவ்வாறு இருப்பர்?

பிடி தளர்ந்துவிட்டது. புகழ்மிக்க தியாகிகள் பலரும், ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளனர். வெள்ளையன் வெறும் ஏவலாளியாகவும், கட்டளைப் படி காக்கும் காவலாளியாகவும் காலங்கழித்து வருகிறான். இதுவும் அதிகநாள் நீடித்திருக்கப் போவதில்லை.

தலைவர்கள் பேசினது - மக்கள் நம்பிக்கை வைத்து எதிர் பார்த்தது - இன்று நடக்கிறதா? அதற்கான போக்கிலே, எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள், அமைந்திருக்கின்றனவா? முன்னர் தலைவர்கள் சொல்லிய வண்ணம் அந்த இலட்சிய பூமியை இங்கு காண அதற்கேற்றமுறையில் திட்டங்கள் தீட்டப்படு கின்றனவா? இவ்வளவு வினாக்களுக்கும் ‘இல்லை’ எனும் ஒரே பதில்தான் கூறவேண்டியதாக இருக்கிறது.

பசித்த மக்களுக் உணவளிக்கம் முறையிலேயோ, வேலையற்றுக்கிடப்போர்களுக்கு வேலை தரும் வகையிலேயோ, வேலைதரும் வகையிலேயோ, ஆளவந்தார்களின் போக்கு இருக்கவில்லை. முதலாளிகளின் மிடக்குத் தளராமல் எப்படிப்பார்த்துக் கொள்வது - அவர்களுடைய இலாபப் பெருக்கத்திற்கு எவ்வாறு ஆக்கந் தெடுவது - மத்திய கிழக்கிலும் கீழ்க்கோடியிலும் உள்ள சிறு சிறு நாடுகளின் தந்தையை எவ்வாறு பிடிப்பது - அங்கு இத்துறையில் ஏற்படும் போட்டியை எவ்வாறு சமாளிப்பது - ஆசியா கண்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்த வேண்டும் - அதற்கான முறையில் இராணுவம் அமைக்க வேண்டும் - என்பன போன்ற பிரச்னைகளில்தான் ஆளவந்தவர்களின் செயலும் கருத்தும் செல்கிறது.

முன்னாள் வெள்ளை முதலாளிகளின் வெளியாட்டத்தில், இங்குள்ள ஏழை மக்களின் வாழ்வு இரண்டு கிடந்தது. ஆனால் இன்று, வடநாட்டு முதலாளிகளின் பேயாட்டத்தால், ஏழை மக்களின் வரண்ட வாழ்வு வளமாகவதற்குப் பதிலாக, மேலும் கருகிப் போவதற்கே, வழி வகைசெய்யப்படுகிறது. ஏகாதிபத்திய அதிகார பீடம் மாறி, அந்த அதிகார பீடத்தில் தியாகிகள் அமர்ந்த பின்னரும், ஏழைக்கு இன்பமளிக்கும் முறையில் மாற்றங்கள் காணப்படவில்லை. மாறாக முதலாளிகளின் விருப்பத்தை - இலாப ஆசையைத் - தங்கள் தியாகமெனும் திரையிட்டு மறைத்து, நல்லதோர் நோக்காகப் - போக்காகக் காட்டப்படுகிறது. நாம் மட்டும் அல்ல, இன்னும் நல்லறிஞர் பலரும், இந்நிலை ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டினர். மக்களுக்கு இருந்த மக்கத்தில், நமது வாயுரை, அவர்கள் செவியில் புகவில்லை. இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை. ஆளவந்தார்களின் இந்த ஆபத்தான போக்கைத் தடுத்து, தக்கவழியில் அனைவருக்கும் பயனளிக்கும் முறையில் திட்டம் தீட்ட நீர் மதிக்கலாம். விழிப்படைந்தவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை மறந்து ஒன்றுபடுவதின் மூலந்தான். இந்த நற்காரியம் வெற்றி பெறவும், நாட்டுமக்களுக்கு நன்மை பயக்கும் பணி பல புரியவும் முடியும். கடினமானது, ஆனாலும் சாத்தியமாகக் கூடியது.

ஆளவந்தார்கள்மீது ஏதாவது குறைகூற வேண்டும் என்பதற்காக, எதனையும் நாம் கூறவில்லை. போதிய ஆதாரத் துடன், அவர்கள் போக்கு, நாட்டு மக்களுக்கு மேலும் நலிவைத் தரக்கூடியது என்று கூறுகிறோம். சில நாளைக்கு முன் இந்திய பார்லிமெண்டில் நிதி அமைச்சர் ஒரு மசோதா கொண்டுவந்தார். மூலத்தொழிற்சாலைகளுக்குப் பண உதவி செய்வதற்காக, இண்டஸ்டிரியல் பைனான்ஸ் கார்ப்பொரேஷன் எனும் ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் அதன்நோக்கம்.

இந்த நிதி அமைப்பின், தன்மை என்ன? இதன் போக்கு எவ்வாறு இருக்கும்? இதனால் இலாபம் பெறுகிறவர்கள் முதலாளிகளா அல்லது மக்களா? இதற்கு அவசியமென்ன? என்பனபோன்ற விஷயங்களை நாம் அலசிப் பார்க்க வேண்டும்.

இதன் மொத்த மூலதனம் ஐந்து கோடி ரூபாய். ரூ. 25,000 வீதம், 2,000 பங்குகளாகப் பிரிக்கப்படும். இதில், இந்திய அரசாங்கத்திற்கு 400 பங்குகள் - மீதமுள்ள 1200 பங்குகள் முதலாளிகளுக்கும், அவர்கள் ஆதிகத்திலுள்ள பாங்குகள், இன்ஷûரன்ஸ் கம்பெனி போன்ற நிதி ஸ்தாபனங்களுக்கும் ஆகும். மற்றவர்களுடைய மூலதனத்தைத் திருப்பிக் கொடுக்கவும், 21/2 சதவிகிதம் இலாபத்தில் பங்களிக்கவும் இந்திய அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது.

20 கோடி ரூபாய்க்குக் குறையாமல் கடன் பத்திரங்கள் வெளியிடவும், இந்தத் தொகையைத் திரும்பக் கொடுக்கவும், அதற்கான வட்டி தரவும் இந்திய அரசாங்கத்தின் உத்தரவாதம் இருக்கிறது, மேலும் 10 கோடி ரூபாய் வரையில். நீண்ட காலச் சேமிப்பாகப்பெறவும் அனுமதிக்கப்படுகிறது. எந்த நாட்டவ ராயினும், இதில் பணத்தைச் சேமிக்கலாம்.

இதுமட்டுமல்ல. மத்திய அரசாங்கத்தின் அனுமதியின் பேரில், வெளிநாடுகளில் கடன் வாங்க உரிமை இருக்கிறது.

இந்தக் கார்ப்பரேஷனை நிர்வகிக்கிறவர்கள் 11 பேர்கள். இந்திய அரசாங்கத்தின் சார்பில் இருவரும், தொழில் அரசர்களையே நிர்வாகிகளாகக் கொண்ட ரிசர்வ் பாங்கின் சார்பில் மூவரும், முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள பாங்குகள் இன்ஷýரன்ஸ் கம்பெனிகளின் சார்பில் ஐவரும், நிர்வாக அங்கத்தவர்கள் ஆவர். இதன் மானேஜிங் டைரக்டர், இந்தியா அரசாங்கத் தால் நியமிக்கப்பட்ட போதிலும், ரிஸர்வ் பாங்கு நிர்வாகிகளைக் கலந்து கொண்ட பின்னர்தான் நியமிக்கப் பெறுவார்.

மூலதனம் வரும் வகையையும், நிர்வாகிகள் நியமிக்கப் படும் முறையையும் பார்க்கும்பொழுது, இந்த இண்டஸ்டிரியல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஒரு முதல்தரமான முதலாளிகள் ஆதிக்கம் மிகுந்த நிறுவனமாகத்தான் இருக்கமுடியும் என்பது விளங்கவில்லையா? இந்திய அரசாங்கத்தின் மேற்பார்வை, கட்டுப்பாடு என்பனவெல்லாம் வெறும் அலங்காரச் சொற்களே யன்றி வேறன்று.
இதுகுறித்த மசோதாவை முன்னிலைப்படுத்திய நிதி அமைச்சர் ஷண்முகம், “தனி நபர்களால் தொடங்கப் பெறும் பெரும் தொழில் களுக்கு உதவிசெய்வதையே குறியாகக் கொண்டு இக்கார்ப்
பரேஷன் ஆரம்பிக்கப்படுகிறது.” எனக்குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தின் முதலாளித்துவ முறைக்கே, இன்று பெரியதோர் நெருக்கடி காத்துக்கொண்டிருக்கிறது. இதனை முதலாளித்துவ நாடுகள் நன்கு தெரிந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நாட்டு முதலாளிகளும் இதனை உணராமல் இல்லை. முதலாளிகளில் ஒருவரான நிதி அமைச்சர் ஷண்முகமும், வரவிருக்கும் ஆபத்தை அறிந்துள்ள தின் வவிளைவாகத்தான், தன்வர்க்கத்தைக் காக்கும் பெரும் பணியில் முனைந்துள்ளார். இதனை நாம் இட்டுக்கட்டிக் கூறவில்லை. நிதி மந்திரி யார் வாயுரையே இதனை மெய்ப்பிக்கிறது.

இதோ,
“தனிநபர் தொழில் ஸ்தாபனத்தின் பணபலம் எவ்வாறு இருந்த போதிலும், குறிப்பிடத் தகுந்த அளவு உதவத் தேøப்படும் நிலை ஏற்பட்டே தீரும். அந்நிலையில் வேண்டும் தொகையைப் பொதுமக்களிடமிருந்து சாதாரணமாகப் பெற முடியாது. குறித்த தொழிலின் அழிவும் வளர்ச்சியும், அவ்வாறு பெறப்படும் உதவியைப் பொறுத்த விஷயமாகும். இதுபோன்ற நெருக்கடியான நிலைமையிலிருந்து சம்பந்தப்பட்ட தொழில்களைக் காப்பாற்றவே, இக்கார்ப்பரேஷன் துவக்கப்படுகிறது.”

முதலாளித்துவமுறை பயனற்றது என்று கண்டபின்னரும், அதனை தொலைத்துத் தலைமுழுக முதலாளிகள், தாமாக முன்வரமாட்டார்கள். அதன் அழிவைத் துரிதப்படுத்த, அது அழித்த இடத்தில் வேறோர் நல்லமுறையை நிர்மாணிக்க, சமதர்மமே பிணிதீர்க்கு மருந்து - அதுவே தமது வாழ்வின் இலட்சியம் - எனப்பேசி வந்தவர்கள், இலட்சியபாதையைக் காணவும், அதன்வழி மக்களை இட்டுச் செல்லவும். கடமைøப் பட்டவர்கள், கண்மூடி மௌனியாகி, நகத்தால் கிள்ளயெறிய வேண்டியதை வளரவிட்டுத், ததாஸ்து கூறிக்கொண்டு இருப்பது, இன்று இந்தப் ‘புண்ணியபூமி’ ஒள்றிலதான் நடக்கக் கூடிய காரியமாகும்.ளளள நமது காது செவிடுபடும்படி சமதர்மம் பேசிப்பேசி தமது இலட்சியம் இதுதான் எனச் சுட்டிக்காட்டிய, பதவியிலுள் ளபண்டிதநேருவின் முன்னிலையில் தான், முதலாளித்துவத்தை உயிர்ப்பிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. சமதர்மப்பண்டிதரோ சல்லடம் கட்டுவதற்குபதில், ஷண்முகத்தின் போக்கிற்கு ‘ததாஸ்து’ கூறுகிறார்.

திராவிட நாடு - 28-12-1947