அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பரிதாபம்!

காந்தியடிகளின் ‘குரலாக‘ விளங்கிய “ஹரிஜன்“ இதழை, நிறுத்தி விடுவதென முடிவு செய்திருக்கிறார்களாம் – காந்தியாரின் நவஜீவன் டிரஸ்ட் அதிபதிகள் காரணம், அந்த இதழை ஆதரிப்போர் தொகை குறைந்துவிட்டதாம். சந்ததாரர்கள் இல்லையாம் பரிதாபத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள், நிர்வாகிகள்.

எப்படியிருக்க முடியும், ஆதரவு? காந்தியார் மறைந்ததுமே, அவர் விருப்பத்துக்கு மாறாக நடந்துவரும், காங்கிரஸ்வாதிகளுக்கு இந்தப் பத்திரிகை, கண்ணிலா படப்போகிறது! கள்ள மார்க்கெட் கொள்ளை லாபம், ஊழல் லஞ்சம் இவைகளில் செலுத்தும் கவனத்தை வேறெதில் செலுத்துவர், கதர் குல்லாய்கள்! பரிதாபப்படுகிறோம், காந்தியாரின் குரலை, நினைத்து!

திராவிட நாடு – 2-3-52