அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பதிகம் பாடுவீர்!

ஏண்டா சுப்பு! காலேஜுக்கு போய்விட்டா வருகிறாய்? என்று அந்த நடுத்தர வயதுள்ள் திருபபிரம்மம் வாலிப சொரூபத்தை ஆச்சரியத்தோடு கேட்டது. சுப்பு சோகத்தோடு, ஆமாம் என்று இழுக்கவே, பெரிய உருவம். இன்னிக்கி காலேஜ் ஸ்ட்ரைக்காமே, நீ மட்டுமூ எப்படிக் காலேஜ் போனே என்று கேட்டிட, வாலிபன், போனேன். எல்லாப் பசங்களுமே நுழைஞ்சுட்டா, நானும் போனேன். ஸ்ட்ரைக் சரியா நடக்கல்லே என்று கூறினான். காலேஜுக்குப் போறவாளைத் தடுக்கலையோ என்று பாணம் விட்டார் பெரியவர். இல்லை என்று கூறாமல் மாணவன் தலை அசைத்தான்.

என்ன இன்னிக்கு? எதுக்காக ஸ்ட்ரைக்? என்று மற்நொருவர் கேட்டார். மாணவன் ஆனந்தமாக, இன்டிபெண் டென்ஸ்டே சுதந்திர நாள் என்று கூறினான்.

என்ன செய்து என்ன சுகம்? நீங்கள் ஸ்ட்ரைக் செய்து என்ன பலன்? இஜின்னாதான் ஒரே அடியாகப் பேசுகிறாரே. என்ன செய்ய முடியும்னே என்று முகாரியில் ஆரம்பித்தார் முதலில் பேசியவர். இரயில் ஓடிக்கொண்டே இருந்தது. மாணவன் மௌனமாகிவிட்டான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சேத்துப்பட்டுக்கும் தாம்பரத்துக்கும் இடையிலே மூளை வேலை செய்வது கண்டு வியந்தேன். மாணவர்களின் கிளர்ச்சி மட்டு என்பதிலே சந்தேகமில்லை. காலேஜுக்குப் போகும் மாணவர் தொகை அதிகமாகவும், தடுக்கும் போகும் மாணவர் தொகை அதிகமாகவும், தடுக்கும் தோழர் தொகை குறைவாகவும் இருந்தால், ஸ்ட்ரைக் எப்படி நடக்கும். அவர்களும் எவ்வளவோதான் வெள்ளைச் சுவர்களைக் கரிமயமாக்கி தலைக்கோயிலை இரைச்சலிடமாக்கிப் பார்க்கின்றனர். முதல் நான் முறுக்கு, இரண்டாம் நான் தளர்ச்சி அடைகிறது. மூன்றாம் நான் முறிகிறது. நாலாம் நாள் நான் முன்னே, நீ முன்னே என்று மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். மும்முரமாக ஸ்ட்ரைக் நடந்தபோது ஒரு ரசமானக் காட்சி ஓரிடத்தில் நடந்ததாம். மாணவிகளின் ஹாஸ்டல் வாயிலில் மாணவர்கள் மறியல் செய்த வாயிற்படியில், குப்புறப் படுத்துககொண்டு கூவினார்கள். மாணவிகளுக்கோ ஸ்ட்ரைக்கில் சேர விருப்பமில்லை. வெளியே போகவேண்டுமென்றாலோ, மாணவனின் உடலை மிதிக்க வேண்டும். எலிசபெத்ராணி ஒரு சமயம் விருநதுக்கப் போனார்களாம். வழியிலே சேறம் நீருமாக ஓரிடம் இருந்தது. பிரிட்டிஷ்ராணி எப்படி அதிலே கால் வைப்பது! உடனே, பரிவாரத்திலே இருந்த ஓர் வாலிபன், ராலே தனது பட்டு மேலங்கியைத் தரையிலே விரித்தான். எலிசபெத் அம்மையின் கண்களிலே களிப்புக் கனிந்தது. இதழ்கள் அசைந்தன. மேலங்கிமீது கால்வைத்து நடந்தார். ராலே, மேலங்கியை பயபக்தியோடு எடுதது, என்னே என் அதிர்ஷ்டம்! எலிசபெத் பெருமாட்டியின் திருப்பாதங்கள் தீண்டிய பெருமை கொண்ட மேலங்கி பெற்றேன். நானே பாக்கியவான் என்று பூரித்தானாம். பிறகு சர்.வால்ட்டர் ராலே, ஆனான், அரசியின் புன்னகை கிடைத்தது போலவே பிறகு விரோதமும் கிடைத்தது. மாணவர்கள் இதை அறியாதவர்களா? மாணவிகளுக்கு மட்டும தெரியாதா? எனவே, எந்த மாணவி, தன்மீது கால் வைத்து நடந்து சென்றாலும், அந்த மாணவன் புளகாங்கிதமடைந்து அந்தச் சட்டையைத் தனக்குக் கிடைத்த சம்பந்து என்ற கருதியிருப்பானே தவிர, வெகுண்டேதும் கூறியிரான். ஆனால் மாணவிகள் தமது பாதத்தைப் பாதுகாத்துக்கொண்டனர். பார்வை தோஷங்கூடாது என்பதற்காக. எனவே வாயிற்படியிலே இருந்த தோழர்கள், கவிழ்ந்து கிடக்கையில், விடுதியைச் சுற்றி இருந்த வேலியை, மானெனத் தாண்டி மயிலென ஓடி குயிலெனக் கூவினர். பிரதர்! கெட் அப், எழுந்திரு நாங்கள் வெளியே வந்துவிட்டோமே என்று. மாணவர்கள் திருககிட்டுத் தலையைத் தூக்கினர். செல்விகள் திருவீதி நிற்கக் கண்டு திருவிழியில் நீர் பெருக்கி, தம் விடுதி திரும்பினர். எங்கே? என்பீர்கள். ஒரே ஒரு ஊரிலே ஒரு காலேஜ். பெயர் கூறமாட்டேன். அந்த மாணவர்கள் என் நண்பர்கள்!! மும்முரமாக ஸ்ட்ரைக் இருந்தபோதே இது, என்றால் இப்போது செல்ல வேண்டுமா? மார்க்கட் மிக மிக டல்! அது நிற்க, மாணவனை விசாரித்த அந்த மகானுபாவர், ஜனாப் ஜின்னாவைப் பற்றி ஏன் இடையிலே பேசினார் என்றறிய ஆவர் கொண்டேன். பத்திரிகையைப் பார்க்க, அதிலே ஜனாப் ஜின்னாவின் அறிக்கை இருக்கக் கண்டேன்.

இந்நாள் இவ் உபகண்டத்திலே உள்ள அரசியல் தலைவர்கள், சாவி தேடும் வேலையில் இருக்கிறார்கள். காங்கிரஸ், இந்திய அரசியல் சிக்கல் தீர்க்கும் சாவி வைசிராயிடம் இருப்பதாகக் கூறுகிறது. நாட்டிலே அமைதி ஏற்படுத்தி எதிர்காலத்தை உறுதிப்படுததுக் கொள்ளும் சாவி, காங்கிரஸ் தலைவர்களிடமே இருக்கிறது என்று வைசிராய் கூறுகிறார். இந்தியா மாதிரி மிஸ்டர். அமெரியோ, கதவு திறந்தே இருக்கிறது. சாவி ஏன்? - என்று செப்புகிறார். சுயராச்யமெனும் நவரத்தின கண்டியை இறைத்து வைத்துளள பேழையின் சாவிக்காக, நாட்டுத தலைவர்கள் நாலா பக்கமும தேடுகின்றனர். இருசாராரும், அதாவது, காங்கிரசாரும், சர்க்காரும், சாவி இருவரில் ஒருவரிடம் இருப்பதாகக் கூறிக்கூறி அலுத்த பிறகு. இன்று இருசாராரும், சாவி, ஜனாப்ஜின்னாவிடம் இருக்கிறது என்று கூற முன் வந்துள்ளனர். ஜனாப் ஜின்னா கூறுகிறார். ஓஹோ! இவ்வளவு நாட்களாக இப்படி ஒரு ஆசாமி இருப்பதாகக் கூடக் கூறக் கூசினீர்களே. இப்போது, எங்கெங்கோ தேடித்தேடி அலுத்துத் திக்கெட்டும திரிந்து கெட்டபின் என் நினைவு வந்ததோ என்று கூறினார். போனதை எண்ணிடாதீர் புண்ணியவானே! சாவியைக் கொடும் என்ற நாட்டுக்கு முதற்பிள்ளைகளென்று கூறிடும் தோழர்கள் கேட்க, ஜனாப்ஜின்னா சிரித்துவிட்டு, சிகரெட் பற்றவைத்துககொண்டே, அட பித்துக்கொள்ளிகளா! என்னிடம் சாவி ஏது? யார் கொடுத்தார்கள்? என்று கேட்கிறார். மின் வண்டியிலே மாணவரிடம் பெசிய ஆரியர், இந்தப் பேச்சைக் கேட்டுததான் ஆயாசப்பட்டு, நம்மால் என்ன ஆகும் என்று கைபிசைந்தார். காங்கிரஸ் கேட்டால், சர்க்கார் மறுப்பதா? காஙஙகிரஸ் போர் தொடங்கினால், சர்க்கார் நிலைக்குமா? என்ற சுருதியிலே ஆரம்பமான தேசியகீதம் இன்று, காங்கிரஸ் தலைவர்கள் ஜெயிலிலே இருக்கிறார்களே, ஜனாப் ஜின்னா இப்போது சர்க்காருடன் போராட வேண்டாமா, காங்கிரஸ் தலைவர்களைச் சிறைமீட்க வேண்டாமா? சுயராச்யம் கேட்க வேண்டாமா? என்ற விதமான லாலியில் வந்துவிட்டது.

பித்தஜுரம் வேகமாக இருக்கையில், அலறலும், ஆர்ப்பரிப்பும் அதிகமாக இருக்கும். பக்கத்திலே வைத்தியர் நின்றாலும் பற்களைக் கடகடவென நெறித்துப் பலப்பல பெசச் செய்யும். மருந்து கொடுத்தால், மிரட்டுவான், மனைவி வந்தாலும மருட்டுவான், தலையாணையை அணைப்பான், தலைவிரி கோலமாய்ப் படுப்பான். ஜுரவேகம் குறைந்தாலோ, பித்தம் தெளியும், பேச்சும் குறையும், அலறலும் ஆரப்பரிப்பும் மட்டுப்பட்டுக களைப்பு, ஆயாசம் மேலிட்டு ஈனக்குரல் கிளம்பும், எதிரே நிற்பவர்களைப் பார்க்கும் பார்வையே பரிதாபத்தை உண்டாக்கம். கண்களிலே நீர்வழியும். கைகூப்பிக் கிடக்கம் எவரிடமும் பயபக்தியும் எவரிடமும பாசமும் உண்டாக்கும். இதே நிலையே காங்கிரசுக்கு ஏற்பட்டது. பதவி வெறி பிடித்தாட்டியபோது, ஜனாப்ஜின்னா, பெரியார் தர்பாரிலே, அவர்கள்மீது கேலியும் கண்டனமுமே பொழியப்பட்டது. லீக் என்று ஒரு கட்சியா? ஜின்னா ஒரு தலைவரா? என்று கேட்கவும், முஸ்லிம்களை மூலையில் இருக்கச் செய்து, இந்து ஆட்க நடத்தலாம் என்ற துணிவும் பிறந்து, பித்தஜுரக்காரன் போல் பிதற்றிக் கிடந்த மஞ்சள் பெட்டிக்காரர்களின் நிலைமை இன்று மேல் மூச்சிட்டுப் போகவே, ஜனாப்ஜின்னாவை வலம்வந்து, அபயமளிக்க மாறு கேட்க வைத்கிறது.

நானா காங்கிரஸ் தலைவர்களைச் சிறயிலிட்டேன் இதுபோது அவர்களை விடுக்க என்று கேட்கும் ஜின்னாவுக்கு மஞ்சள் பெள்டியினர் என்ன மறுமொழி தர முடியும்!

முஸ்லிம் லீகுடன் சமரசம் ஏற்படாமன்பு சட்டமறுப்புக் கிளர்ச்சி செய்வது தற்கொரைக்கு ஒப்பாகும் என்றுரைத்தீரே, ஒய் காந்தியாரே! பிறகு என்ன காரணத்துக்காகச் சட்ட மறுப்புத் துவக்கினீர் என்று கேட்கும் காயிதே அஃலமுக்கு என்ன சமாதானம் கூறமுடியும்!

சாவி கேட்கம் தோழர்களே! இந்தியாவிலே பிரிட்டிஷ் ஈட்டி முனையின் ஆதரவு பெற்று, இந்து ஆட்சியை நிறுவலாம் என்று பஞ்சதந்திரம் செய்கிறீர்கள்; அது பலிக்காது என்று ஜனாப் ஜினனா எச்சரிக்கிறார். பாகிஸ்தான் ஒன்றுதான் பரிகாரம் என்பதைத் திட்டமாகக் கூறுகிறார். இனியேனும், காங்கிரஸ் தலைவர்களின் கருததுச் சீர்படுமா? என்று கேட்கிறேன்.

காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலே இருக்கின்றனரே, அவர்கள் எப்படி இதற்காக வேலை செய்முடியும் என்று கேட்பவர்களுக்கும் ஜனாப்ஜின்னா ஆணித்தரமாக பதில் கூறி இருக்கிறார். சிறைப்பட்டவர் போக மிச்சமீதிகள் ஏன் இன்னமும நச்சுக் கொள்கையைவிட்டுச சட்டமறுப்பு நாசக் காரியத்தைக் கண்டித்துக் காங்கிரசின் திட்டத்தை மாற்றக்கூடாது. அதற்கேற்ற ஆடகள் இல்லை என்றாலும் இந்து தலைவர்களின் பத்திரிகைகள், ஏன் இந்த நற்காரியத்தைச் செய்யவில்லை. அந்தப் பத்திரிகைகள் சிறையிலா கிடக்கின்றன? என்று ஜனாப்ஜின்னா கேட்கிறார். ரோஷமுள்ள பத்திரிகைகள், இந்தச் சாட்டையைக் கண்டு தலைகுனிய வேண்டாமா? இப்போதும் காங்கிரசைப் புகழ்வதும காந்தி மான்மீயம் எழுதுவதும், லுக்கை இழிப்பதும், சமரசலாகிரியைச் சைனா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதும், காவடி சுமப்பதும் கண் கசிவதுமாக உள்ளனவே தரிவ, எந்த இந்த பதிரிகை நெருக்கடி தீர்க்கும் நோக்கத்தோடு பணியாற்றுகிறது.

காங்கிரசின் திட்டம், பெரிலின் பதிப்பு என்பதற்குப் பலகாரணமுண்டு, அதிலே ஒன்றுதான், இந்தப் போக்குக்கு காரணம்.

நார்வே நாட்டுக்கும் எனக்கும் விரோதமில்லை. அதைப் பிடிக்க வேண்டிய ஆசை எனக்கில்லை. ஆனால் மண்ணாசை கொண்ட மாற்றான் நார்வே நாட்டைப் பிடித்துக்கொள்மலிருக்கவே நான் நார்வே நாட்டைத் தழுவினேன் என்றுரைக்கம் ஹிட்லருக்கும், பிற்போக்காளர்கள் ஆட்சி செய்வதைத் தடுக்கவே நாங்கள் இப்பாழான கதவிகளிலே அமர்ந்தோம் என்றுரைத்த காங்கிரசுக்கும், என்ன வித்தியாசம்? அது போலவே ஹிட்லரின் மின்னல் தாக்குதல் போல் சர்ககார்மீது தாக்குதல் துவக்குவதும், அச்சு நாட்டின் இடுக்கித் தாக்குதல் முறையிலே, லீக்மீது ஒரு புறம் காங்கிரஸ் கபடப் படைபும் ஏவி இடுக்கித் தாக்குதல் நடத்துவதும் இடையிடையே ஹிட்லர் சமாதான பீரங்கி வேட்டுவிடுவதுபோல், சர்க்காருடனும், லீகுடனும், சமாதானமாகப் போவதாகச் சாகசம் செய்வதுமாகிய காரியங்கள், வர்தாவின் திட்டம் ஜெர்மன் சரக்கு என்பதையே வலியுறுத்துகிறது என்றுரைப்பேன். ஹிட்லரின் படைகளுக்குப் பராக்குக் கூறும் இத்தாலிய தலைவன் முசோலினியின் நிலைமை இந்து மகாசபைச் சூரர்களுக்கு, இந்நிலையிலே, வெட்கம் மானமின்றி எந்த ஜின்னாவைத் தூற்றினார்கனோ, எந்த ஜின்னாவால் ஏதும் செய்ய இயலா என்று அலட்சியமாகப் பேசினார்கனோ, எந்தத் தலைவரை, எமக்கு ஈடா எதிரா? என்று ஏளனம் செய்தார்களோ, அந்த ஜின்னாவிடம், ஐயனே! எமது தலைவர்களை விடுவிட்ட உதவி செய்யுமே. சாவியைத் தாருமே என்று கேட்கின்றனர் என்றால் இந்தப் பல்டியின் முன், கல்லூரி மாணவர்களின் காகிதக் கப்பல் கவிழ்வது எம்மாத்திரம். எனவேதான் ஜின்னாவின் பெயரைக் கூறினதும, நான் மின்வண்டியிலே கண்ட மாணவர், கண்மூடி மௌனியானார், பாபம். கந்துக மதகரியை வசமாய் நடத்தலாம் என்று துவக்கிய தாயுமானார் சிந்தையை அடக்கியே சும்மா இருப்பதரிது என்று முடித்ததுபோல், காங்கிரசன்பர்கள் இப்போது.

கவர்னரின் புகழ்பாடிக் காவடி தூக்கலாம்
கனமாகிவிடலாம், கதிநீயே எனலாம்
கைராட்டைச் சுற்றியே கதராடை மூடலாம்
ககிதக் கணைகள் விடலாம்,
ஜாலமோ பிரயலாம், பேரமோ செய்யலாம், ஜாதி சுகந்தேடி வரலாம்,
வளைந்திடும் பிரிட்டனை வாழ்த்தியோ மிரட்யோ,
வரம்பெற்று வாழ்ந்துவிடாலம்
சீறியே போரிடும் ஜினனாவை அடக்கியே
ஜெயக்கொடி நாட்டலரிதே,
ஜே செல்ல, ஜே சொல்ல நீ வெற்று
நீ வெல்லு என ஜெபிக்கும் வார்தாவாசா!
என்று கந்திப் பதிகம் பாடத்தான் வேண்டும்

(திராவிடநாடு - 31.01.1943)