அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பழமும் பலனும்!
“காயா பழமா?” என்று கேட்டான், நண்பன் - அவனுக்கு ஒரு உதவி செய்வதாக வாக்களித்திருந்தேன், முடிந்ததா இல்லையா என்பதற்காக அதுபோலக் கேட்டான். நான் இழுத்தாற்போல் பதில் சொல்லக்கேட்டு, “அழுத பிள்ளைக்கு வாழைப்பழம்” என்பதுதானே அப்பா உன் முறை என்று கூறிச் சலித்துக் கொண்டு இனி நீ எனக்காக முயற்சி செய்யவே வேண்டாம் என்றான், நான் சிரித்தபடி, “சிச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்கிற கதைபோலிருக்கிறதே என்று கூறினேன், போடா, போ! ஏட்டி பழத்தென்ன, உயாதார் வாழ்ந்தென்ன? ஏன்கறி பழமொழிப்படி நீ எனக்கு நண்பனாக இருந்து என்ன பிரயோஜனம் என்றான், “என்னடா! கோபித்துக் கொள்கிறாயே, இன்று இல்லாவிட்டால் நாளைக்கு நடக்கிறது, உதவி நிச்சயமாகக் கிடைக்கும்” என்று நான் கூறினேன், ஆவனோ கோபம் குறையாதவனாகி “நாளைக்குக் கிடைக்கும் பலாப் பழத்தைவிட இன்று கிடைக்கும் களாப்பழம் மேல்” என்கிறபடி, எனக்கு நீ பிறகு செய்யப் போவதாகச் சொல்லும் உதவிபற்றி என்ன கவலை, இப்போது கிடைத்ததா என்று கேட்டான், “உன் சுபாவமே இது போலாகிவிட்டது, நினைத்தது நினைத்த உடனே நடந்துவிட வேண்டுமென்கிறாய், பழம் நழுவிப் பாலில் விழ வேண்டும் உனக்கு” என்றேன், உனக்கு ஏதாவது சமாதானம் சொல்லி ஏன் வாயை மூடிவிட முடியும், வேறென்ன தெரியும், உன்னால் ஊப்புக்கும் ஓடிந்த ஊசிக்கும் கூடப் பிரயோஜனம் கிடையாது என்பதுதான் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கிவிட்டதே என்று கோபித்துக் கொண்டு சென்று விட்டான். பிஞ்சிலே பழுத்ததுத என்று ஏன் நண்பனைப் பலரும் கேலி செய்வார்கள், அப்படிப்பட்டவன்.

காரணமின்றிக் கடுங்கோபம் கொண்டு விட்டதை எண்ணிச் சிறிதளவு வருத்தப்பட்டேன், என்றாலும், அவன் சுபாவம் அப்படி, அதற்கென்ன செய்யலாம் என்று எண்ணி, என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். அடிக்கடி எனக்கு அந்த உரையாடல் நினைவிற்கு வந்த வண்ணமிருந்தது. அப்போது, எனக்கு, ஒருவேடிக்கை புலப்பட்டது.

நாங்களிருவரும் அன்று பேசின பேச்சில், பலமுறை பழம் பற்றிக் குறிப்பிட்டுக் கொண்டோம், சச்சரவு சுவை தரவில்லை - தராது - எனினும் அந்தச் சச்சரவின்போது, அடிக்கடி பழத்தைத் தொடர்புபடுத்தி நாங்கள் பசிக் கொண்டது நினைவிற்கு வந்ததும், ஒருவகையான சுவை ஏற்படத்தான் செய்தது.
காயா? பழமா?

அழுதபிள்ளைக்கு வாழைப்பழம்!
சிச்சீ! இந்தப் பழம் புளிக்கும்
பிஞ்சிலே பழுத்தது!

ஏட்டி பழுத்தென்ன, உயாதார் வாழ்ந்தென்ன?

நாளை கிடைக்கும் பலாப்பழத்தைவிட இன்று கிடைக்கும் களாப்பழம் மேல்!

பழம் நழுவிப் பாலில் விழுந்தது!

இவ்வளவும் எங்கள் உரையாடலில்! எனக்கு இது வேடிக்கையாகத் தென்பட்டது. பழம், சாப்பிட மட்டுமல்ல, பேச்சிலேயும் சுவைபட இணைவதுபற்றி எண்ணிக் களிப்புற்றேன்.

பொங்கற் புதுநாளை ஓட்டி, சிறிதளவு வாழ்க்கை வசதி படைத்த எந்தக் குடும்பத்திலும் பழம் காணப்பட்டதல்லவா.

அந்தக் காட்சியும், ஆக்காட்சியைப் பெறுவதற்கான சூழ்நிலையும், அன்று, எங்கள் உரையாடலிலும் இவ்வளவு பழங்களைக் கொண்டு வந்து குவித்தது போலும்!

அன்று நான் இதுபற்றி எண்ணிட நேர்ந்தது - நானும் நீங்களும் - இதுபோல் எண்ணிடாமலேயே, நமது உரையாடல்களில் பலமுறை பழம் பரிமாறிக் கொண்டு தானே வருகிறோம்.

விடு சென்றேன், வேறு சில நண்பர்கள் வந்திருந்தனர் - எத்தணை வாழ்க்கைச் சங்கடங்கள் இருந்த போதிலும் காரிருளைக் கிழித்தெழும் கதிரவன்ஒளிபோல, களிப்புக்கதிர் கிடைக்கும் பொன்னாளல்லவா - எனவே ஒருவரை ஒருவர் கண்டு பேசி மகிழ வந்திருந்தனர் நண்பர்கள். அவர்களிடம் நான் இதுபற்றிக் குறிப்பிட்டேன்.

“வியப்பென்ன இதிலே? நமது தமிழ்மொழியின் வளம் அப்படிப்பட்டது, பழமொழிகள் பழைய கால மொழிகள் என்று மட்டும் பொருள் கொள்ளத்தக்கன அல்ல, பழம்போல் சுவை தருவன என்றே பொருள் கொள்ளலாம்” என்று புலவர் பொன்னுசாமி கூறினார்.

“அவரவர்களுக்கு அவரவர் தாய்மொழி அருமையானதுதான் நண்பரே! என்று நான் கிளறினேன் - புலவர், ஏதேனும் நல்லுரை கூறுவார் என்ற காரணத்துக்காக, நான் ஏமாற்றமடையவில்லை, புலவர் பொன்னுசாமி, தமிழின் இனிமை, மென்மை, தொன்மை ஆகியவை ப்றறி அழகுபட எடுத்துரைத்தார். தமிழகத்துக்குத் தனிச் சிறப்பளிக்கும் பொங்கற் புதுநாளன்று, நல்லதோர் விருந்து என்று, என்னைப்போலவே, மற்ற நண்பர்களும் புலவரின் பேச்சைக் கொண்டனர், களித்தனர்.

மொழியிலிருந்து துவங்கி, புலவர் நாட்டு வளம்வரை சென்றார்.

“இன்று பொங்கற் புதுநாள், பூரித்துக் கிடக்கிறோம், எனினும், தமிழகத்தில், பழைய பொலிவும் வலிவும் குன்றிக் கிடக்கிறது - நமது மொழி வளமாக இருந்த காலை, நாடு, எத்தணை செழிப்புற்று இருந்தது தெரியுமோ!

உழவர்கள் ஏர் ஊழுவார்கள் - இன்றுபோல, கட்டாந்தரையோ, கள்ளிக்காடோ அல்ல, பொன் விளையும் பூமி!

நீர்வளம் குறைவற இருந்த காலம் அது! நில வளம் ஏன் குன்றப் போகிறது!

வயல்களின் ஓரத்திலெல்லாம், தென்னை, பலா!

வயலிலே பாய்ச்சப்பட்டிருந்த நீர், எப்படிம என்கிறீர்கள், சங்கு உலவிற்று, நண்பர்களே! சங்கு!

பங்கப்பழனத்து ஊழும் உழவர்
பலவின் கனியைப் பறித்தெதென்று
சங்கிட்டு ஏறிய!

கவனித்தீர்களா, வளத்தை! குரங்குகள் பலாப்பழத்தைப் பறிக்கக் காண்கின்றனர், உழவர்கள், வயலில் வேலை செய்கிறார்கள், குரங்குகளை விரட்ட கல் எது - பொன் விளையும் பூமியல்லவா, கல்லா இருக்கும், என்ன கொண்டு குரங்குகளை விரடடுவது என்று யோசிக்கிறார்கள், வயலில் சங்கு கிடைக்கிறது, அதனை எடுத்துக் குரங்கின் மீது வீசுகிறார்கள் உழவர்களுக்குச் சங்கு கிடைத்தால், எங்களுக்கு எதும் கிடைக்காதா என்று எண்ணுகின்றன குரங்குகள் - புராணக் குரங்காக இருந்தால் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கும் - இது அது அல்ல - குரங்குகள், பலாவைவிட்டு தென்னையின் மீது தாவி, மளமளவென்று மேலே ஏறி, செவ்விளநீர்க் காய்களைப் பறித்து, சங்கு வீசிய உழவர்மீது வீசுகின்றன! தமிழகம் அத்துணை வளமாக இருந்தது” என்றார்.

“பழந்தமிழ்ப் பாடலின் சுவையே சுவை” என்று நான் மெய்சிலிர்த்த நிலûயில் கூறினேன்.

“சுவை நிரம்ப உண்டு, நண்பரே! நிரம்ப உண்டு, ஆனால், அந்தச் சுவையைக் காட்டி, தமிழ்ச் சமுதாயத்தை அழிக்கும் நஞ்சையும் கூட்டிக் கலந்து எட்டிவிட்டனர். நாம் பாழ்பட்டது அதனாலேதான் என்றார், புலவர் பொன்னுசாமி நல்லவேளையாக நிதியமைச்சர் சுப்பிரமணிய னாருக்குத் தெரியாது புலவர் பொன்னுசாமியை தெரிந்தால் அவரை நாத்திகன் என்று குற்றம் சுமத்தியிருப்பார்.

வேறு பல மொழிகளிலே காணக்கிடைக்காத அருமை பெருமைகள் நமது மொழியிலே உண்டு. எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் களிப்பூட்டவல்ல வளம் உண்டு நமது மொழிக்கு, ஒன்று கூறுகிறேன், கேள் நண்பா! பிற மொழிகளில், இந்த வளம் உண்டா என்று கூறு!

அவன் வந்தான் - என்கிறோம், ஒரு சிறுமாற்றம் - பல எழுத்துக்கள் சேர்க்கவேண்டாம், புதிய தொடர் வேண்டாம், வாக்கிய அமைப்பை மாற்ற வேண்டாம், மிகச் சிறு மாற்றம் செய்து, முற்றிலும் வேறான பொருளைப் பெற முடியும் - தமிழில்தான் முடியும்.

அவன் வந்தான் என்பதிலே உள்ள, இன் என்பதை ஆனா என்று மாற்றிவிடு - என்ன காண்கிறாய், வினா! அவன் வந்தானா? அவன் வந்தான் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள வாக்கியத்தை, அவ்விதம் மாற்றிக் காட்டு பார்க்கலாம்! முடியாது!!

இன் - ஆனா - இனதும் வினா பிறந்துவிட்டது!

வந்தான்
வந்தானா
வந்தானோ
வந்தானே
பார், தமிழின் வளம் இருக்கும் வகையை - சுவையை.

உலக மொழி என்ற உயர்வு இருக்கிறது ஆங்கிலத்துக்கு, மறுக்கவில்லை.

ஆம்மொழியிலே, இச்செம்மை இல்லையே.

வினாவை உண்டாக்க, ஆங்கிலத்தில் புதிய சில சொற்கûள்க கூட்டியாக வேண்டும்.

வியப்பை வெளியாக்க அங்ஙனமே.

“மகவிடம் தாய் காட்டும் பரிவு போல, தாயிடிருந்து சுரக்கும் அன்புபோல, தமிழனுக்குத் தமிழ் அத்துணை பரிவு காட்டுகிறது. மகன்தான் மாதாவை மதிக்காது, மேனா மினுக்கிகளைப் பின் தொடர்ந்து சென்று கெட்டலைகிறான். தமிழ், தமிழனைச் சிரமப்படவிட மறுக்கிறது!” என்று புலவர் பொன்னுசாமி சொன்னபோது, உண்மையிலேயே நாங்களெல்லாம் உள்ம் பூரித்தோம்.

பழம் குறித்துப் பேசத் தொடங்கி, மொழிக்குச் சென்று விட்டோம் - என்று நண்பரொருவர் நினைவுபடுத்தினார்.

“அதனால் என்ன? மல்லிகை பறிக்கச் செல்லும்போது மகிழம்பூ கிடைத்தால் வேண்டாமென்றா விட்டுவிடுவோம்” என்றார் புலவர்.

தமிழர் திருநாள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவது, புலவருக்குப் பெருமகிழ்வு அளித்தது - எனவே, அன்று அவர் ஆர்வத்துடன் பேசினார்.

மீண்டும், பழம் குறித்துப் பேச்சுச் சென்றது.

பழமொழிகளில் மட்டுமல்ல, பல கதைகளிலே, பழம் தொடர்பு கொண்டிருக்கிறது, என்று புலவர் நினைவுபடுத்தினார்.

“ஆமாம்! வேடிக்கை வேடிக்கையான கதைகள் உள்ளன என்றார்,” நாடகாசிரியர் நறுமணம்.

“சொல்லும் நண்பரே!” என்று நான் தூண்டினேன்.

ஒரு மாம்பழம்! அது ஒரு மன்னன் மனைவியின் மாமோசம் வெளிப்பட உதவிற்று!

அரசன் அந்தகன் - விழி இருந்தும்! தன் மனைவியின் சோரத்தனத்தைக் கண்டறியும் கருத்து இல்லை - அவள், மாயக்காரி, மதுரமொழியால் மன்னனை மயக்கனிôள் - காமச் சேற்றில் புரண்டாள், சாகசச் சந்தனத்தைப் பூசி மன்னனைச் சொக்க வைத்து விட்டாள்.

அவளுக்குக் கள்ளக் காதலனாகச் சிக்கியவன், குதிரைக்காரன்! அவனை, அரசி, வலிய அணைத்துச் சுகம் பெற்றாள். அவன், அவள் மூலம், கைநிறையப் பணம் பெற்றான்.

ஆம்சதூளிகாமஞ்சத்தில், அவள் அணைத்துக் கெண்டு, இருயிரே! என்று கொஞ்சுவாள். கடை சிவக்க, இடை துடிக்க! ஆவனோ, கொல்லையில் குதித்தோடும் அந்தக் குட்டிமீத மனத்தைச் செலுத்திவிட்டு, இங்கு மரக்கட்டைப் போலக் கிடப்பான்.

அரசன், ஆண்டுகொண்டுதான் இருந்தான்!

அவன் பட்டமகிஷி காமச்சேற்றில் புரண்ட கொண்டிருந்தாள்.

“மன்னா! இது அற்புதமான கனி! இதை உனக்காகக் கொண்டுவந்தேன் - உண்டவருக்கு மூப்பு இல்லை, பிணி இல்லை, மிக நீண்டகாலம் வாழ்வர்!” என்று கனிவுடன் கூறி, கனி ஒன்றைக் கொடுத்தார் தவசி.

ஏன்னே அவர் தம் அன்பு - அருள் என்று வியந்தான் வேந்தன்.

கனியை உண்ணவில்லை.

இத்தகைய கனி, ஏன் இன்பவல்லிக்கல்லவா இருத்தல் வேண்டும், என்று ண்ணினான், அரசியிடம் கொடுத்தான், பழத்தின் அருமையைக் கூறி.

மன்னன், மயக்கத்திலிருந்து விடுபட்டானில்லை, எனவே நமது மதுரம் இனியும் நமக்கு ஆட்டியின்றிக் கிடைத்தபடி இருக்கும் என்று பூரித்துப் போனாள், பூவை வடிவில் இருந்த பேய்மகள்.

இளமை குன்றாது! எந்த நோயும் அணுகாது! இறவா நிலையும் கிடடக்கூடும்! பழம் இவ்வளவு மகிமை வாய்ந்தது! ஆமாம்! ஆனால்? இக்கனியினை எனக்கு இன்பமளிக்கும் அந்த இளைஞனுக்கு அல்லவா தரவேண்டும். அவன் அளிக்கும் ஆனந்தத்துக்கு நான், இதனைக்கூடவா அளித்து ஏன் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக்கூடாது - என்று எண்ணினான் அரசி. கனி, குதிரைக்காரனுக்குத் தரப்பட்டது.

ஆவனோ?

அரசி தந்த கனி! அற்புதமான கனி! இது, ஏன் சிட்டுக்கு அளித்திட ஏற்றது, என்று எண்ணினான், தந்தான்.

அந்தத் தையல்!

பிணி, மூப்பு, சாக்காடு, இவைகளை நீக்கிடவல்ல இப்பழம் நாட்டை ஆளும் மன்னருக்கல்லவா தேவை. இதை அவர் உண்டால், நீண்டகாலம் நோய் நொடியின்றி வாழ்ந்து, மக்களைக் காப்பாற்றுவார் - எனவே, அவரக்கே, இது! - என்று எண்ணினான் - மன்னன் அவை சென்றான், கனியின் அற்புதத் தன்மையை எடுத்துரைத்து, பயபக்தி விசுவாசத்துடன் பழத்தைத் தந்தாள்!

பழத்தைக் கண்டான் பார்த்திபன்!

அதே பழம்! தவசி தந்த பழம்! அரசியிடம் தான் அளித்த பழம்!

“குழந்தாய்! பழம் எங்ஙனம் கிடைத்தது?”

அவள், தயங்கினாள் - கூச்சத்தால்.

கொற்றவன், மீண்டும் கேட்டான் - “இக்கனி கிடைத்தது எங்ஙனம்? எவர் அளித்தார் உனக்கு?”

“ஏன் காதலர்! என்னைக் கடிமணம் புரிந்து கொள்ள இருக்கும் கட்டழகர்.”

“எங்கு உள்ளான் அம்மா! அவன்? உன் காதலன்!”

“தங்கள் சேவையில்தான் மன்னா! குதிரைக்காரன்”

“அப்பனே! கனி உனக்குக் கிடைத்தது எப்படி?”

எப்படிக் கூறுவான்?

அரசன், அவனை விடுவதாக இல்லை.

“தயக்கம் ஏன்? கனி கிடைத்த வகை கூறு”...

உடல் இடுகிற அச்சத்தால், உதடும் உலர்ந்து விடுகிறது, மன்னன் உள்ளத்தில் உண்மை வேலாகிக் குத்துகிறது.

“களவாடினாயா?”

“இல்லை, காவலா! இல்லை!”

“கனி, தந்தது..?”

“கனி.. கிடைத்தது.. ஒயோ! வேந்தே!” அடியற்ற நெடும்பனையென வீழ்கிறான்!

“கள்ளி தந்த கனிதானே இது! காமவெறி பிடித்தவள் தந்த கனி தானே இது! என்னைக் குருடனாக்கிவிட்ட குடிகேடி தந்த கனிதானே இது!”

உடல் வெடவெடவென இடுகிறது! குதிரைக்காரனுக்கு.

கண்களில் நீர்துளிக்கிறது, காவலனுக்கு.

“கனி அல்லஇது - கனி அல்ல - ஏன் ஞானகுரு!” என்கிறான் மன்னன்.

மன்னன், துறவியாகிறான்.

ராஜா பர்த்ருஹரி கதை என்பர், இதனை.

கனி, காட்டிக் கொடுத்தது, அரண்மனையில் நெளிந்த ஆபாசத்தை.

பெரிய இடத்துப் பேயாட்டத்தை, வெளிப்படுத்திற்று ஒரு பழம்.

பிணி, மூப்பு, சாக்காடு, இவை அணுகாதபடி தடுக்க வல்லது இந்தப் பழம் என்றார் தவசி.

பழம், மன்னனுடைய ஆகக்கண்ணையே திறந்து விட்டது.

எப்படி, ஏன் கதை! கற்பனை அல்ல, அப்பா! கற்பனை அல்ல! ஏட்டிலே உள்ளது - நாட்டிலே நாடகமாகவும நடத்தப்பட்டிருக்கிறது, என்றான் நண்பர்ன.

ராஜா பர்த்ருஹரி கதை! ஆமாம், எனக்கும் கேள்விதான் என்றேன்.

பழத்தைப் பற்றிய கதைகளில் இதற்குத்தான் முதலிடம், என்ன சொல்கிறாய் - என்று கேட்டான்.

மற்றவர், கூறட்டும் என்றேன்.

புலவர் பொன்னுசாமி கதை கூறத் தாயரானார், ஆனால் அவர் ஏற்கனவே, மொழி குறித்தும் பண்டைத் தமிழகக் சிறப்புப் பற்றியும் நிரம்பப் பேசியதால், அவர் பிறகு பேசட்டும் என்று நான் ஏன் கருத்தைக் கூறினேன்.

“காரணம் சரியில்லை. என்றாலும் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் புலவர்
கேவலம் ஒரு சாமான்ய அரசனுடைய ஊழலை வெளிப்படுத்த பழம் உதவியது ஒரு பிரமாதமல்ல, அவதார புருஷர், அவனியெல்லாம் அன்றும் இன்றும் பத்தினி என்று பாராட்டும், மாதரசியின் உள்ளத்திலே புதைத்திருந்த இச்சை எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்த பழம் உதவி இருக்கிறது அதுதான் உன்னதமானது என்றான் பாரதப் பிரசங்கி பன்னிருகைப் பிள்ளையின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த கோலப்பன்.

ஒவருக்கு தேவி, அழியாத பத்தினி அல்லவா திரௌபதி! அந்த ஆம்மை ஒவருக்கும் பத்திரனி ஆகும்படி நேரிட்டதற்கும் பழம் எனும் பொருளுக்கும் நேநரிடையான தொடர்பு இல்லையென்றாலும், ஓர்விதமான தொடர்பு உண்டு. ஆர்ஜ÷னன், அழகிற் சிறந்த ஆணங்காம் திரௌபதியைத் தன் வீரத்திற்கான பரிசாகப் பெற்று, வீடு திரும்பினானன். அன்னை குந்தியிடம், ஆர்ஜ÷னன், அந்தச் சந்தோஷச் செய்தியை ஆவசச அவசரமாகக் கூறும்போது “அம்மா! ஒரு கன்னி கொண்டுவந்திருக்கிறேன்” என்று சொல்ல வேண்டியதற்கு, தடுமாறி, “அம்மா ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறி விடுகிறான். தாய், கனிதானே, ஒவரும் புசிக்கட்டும் என்ற எண்ணத்தால், “சந்தோஷம்! ஒவரும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்கள். தாயிற் சிறந்ததொரு கோயிலில்லை! எனவே, தனயர்கள். (கனி என்று எண்ணிக் கொண்டு தாயார் அங்ஙனம் கூறியிருந்தாலும், உள்ளது கனி அல்ல, கன்னி, ஆகவே) தாயின் வார்த்தையைத் தட்டாமல், கன்னியை ஒவரும் எடுத்துக் கொண்டனர்.

பாஞ்சாலி, ஒவருக்கும் பத்தினியானதற்குப் பழம் ஒரு காரணமாக, எதிர்பாரா வகையில் அமைந்துவிட்டது.

நான் சொல்ல விரும்புவது, இந்தப் பாலகாண்டமல்ல! ஆம்மை, ஒவருக்கும் பத்தினியாக இருக்கும் சிக்கலான, சிரமமான வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி, அனுபவம் பெற்றபிறகு நடைபெற்ற சம்பவம் கூறுகிறேன்.

மரத்திலிருந்து பழம் ஒன்று கீழே வீழ்ந்தது!

பகவான் அதைப் பார்த்து, பஞ்சபாண்டவர்களை அழைத்து மீண்டும் பழம் மரத்திலே போய்ச் சேரச் செய்வீர்களாக! என்றார்.

எங்ஙனம் ஐயனே! அது சாத்தியம் என்று கேட்டனர் ஒவர்.

ஐயன் சொன்னார், “மிக எளிதான காரியம், ஒவ்வொருவரும் அவரவர் மனதில் உள்ள அந்தரங்க ஆசையை உள்ளது உள்ளபடி கூறினால், பழம் மேலே செல்லும்” என்றார்.

ஒவரும் அதுபோலவே கூறினர்.

பழம், மெள்ள மெள்ள மேலே சென்றது.

ஆனால் மரத்தில் சேர்ந்துவிடவில்லை.

கண்ணன், பாஞ்சாலியை அழைத்தார்.

“உன் கணவன்மார்கள் தத்தமது மனதிலுள்ள அந்தரங்க ஆசையை, உள்ளது உள்ளபடி கூறினார்கள், பழம் இந்த அளவு வந்து நிற்கிறது, நீயும் அதுபோல உன் மனதிலுள்ள ஆசையை ஒளிக்காமல் கூறினால், பழம் மரத்தில் போய் சேரும்” என்றார்.

துகிலளித்து தூயவன் சொன்னது கேட்ட திரௌபதை, “நான் ஒவருக்கும் பத்தினியாக இருக்கிறேன் - எனினும் எல்லோருக்கும் மூத்தவராகிய, கர்ணன் மீது ஏன் மனம் நாட்டம் கொள்கிறது இதுதான் என் அந்தரங்க ஆசை” என்றாள்.

பழம், மரத்தில் ஒட்டிக் கொண்டது.

பஞ்சபாண்டவர்கள், இது கேட்டுக் கோபித்தனரா - பாஞ்சசன்யன் இதற்கு ஏதேனும் கீதோபதேசம் செய்தாரா என்பது விளக்கப்படவேண்டிய ஆம்சமல்ல.

ஒரு பழம்! பத்தினியின் மனதில் இருந்துவந்த ஆசை என்ன என்பது வெளியாக உதவிற்று.

ஒவர் கணவர்! எனினும் ஆம்மைக்கு இறாவதும் சம்மதம்! என்பது விளங்கிற்று, அந்த விந்தைக் கனியால்.

பழமல்லவா, பாஞ்சாலியின் மனதிலே ஒளிந்து கொண்டிருந்த உண்மையை வெளியே கொண்டு வந்த.

எனவே பழம் என்னென்ன மகிமைக்குக் காரணமாகிறது என்பதற்கு, இதுதான் தலைசிறந்த கதை என்றான் கோலப்பன்.

“இரண்டுமே மகா மோசம் - உயர் குடும்பங்களிலே இருந்த வந்த ஊழல்கள் வெளியாகி நாற்றமடிக்கின்றன - இவ்வளவுதானே - வேறு உருப்படியான, உருப்பட வைக்கத்தக்க கருத்து எதுவும் காணோம். ஒரு கதை ஏன்றிருந்தால் அதன் மூலம் ஏதேனும் ஒரு சீரிய கருத்து விளக்கப்பட வேண்டும் - வழங்கப்படவேண்டும். ஆஅதில்லாத போது, கதை என்ன சுவûயுடையதாக இருப்பினும், பயனில்லை” என்று கூறினார் புலவர் பொன்னுசாமி. ஆமாம்! பர்த்ருஹரியின் மனைவி சோரம் போன விஷயத்தாலும், இறாவது அழகன்மீது துரோபதைக்கு ஆசை இருந்த விஷயம் வெளிப்பட்டதாலும், நமக்கு என்ன பலன்! என்று நான் ஆதரித்தேன். பலன் இல்லை என்பது மட்டுமல்ல, ஆபாசமான விவகாரமல்லவா அம்பலத்துக்கு வருகிறது என்று ஆயாசத்துடன் கூறினார் புலவர். சீரிய கருத்தினை விளக்க பழம் பற்றிய கதை ஏதேனும் கூறுவார் புலவர் என்று அறிந்து கொண்டேன் கூறலானார்.

கைலையங்கிரியில் எழுந்தருளியிருக்கும் ஐயன், பரமேசன், தமது திருவாயால், ஆம்மே! என்ற ஒரு முறையும், அப்பா! என்று மற்றோர் முறையும் அழைத்தார் - அறிவீர் என்று புலவர் துவ்கிகனார். அவருக்கு உதவி செய்து, அதன் மூலம் ஏன் சிரமத்தையும் குறைத்துக் கொள்ள எண்ணி, “அப்பா! என்று கண்ணப்ப நாயனாரை அழைத்தார் - தெரியும்” என்றேன். ஆம்மே! என்று ஐயனால் அழைக்கப்பட்ட ஆம்மையின் பெயர் புனிதவிதி. வணிகர் குலம் மணமாகி இல்லறத்தைச் செவ்வனே நடத்தி வந்தார். ஒருநாள், கடைவீதியிலிருந்து இரு மாங்கனிகளைக் கணவன் அனுப்பி வைத்தார். பழவினைகளை அறுத்தெறிந்து பவக்கடலிலிருந்து மீட்டு, ஞானத் தோணியில் ஏற்றிச் சென்று பேரானந்தப் பெருவெளியில் கொண்டு சேர்க்கும் பெம்மான், ஆம்மைமுன் சிவனடியாராகக் காட்சி தந்தார். அமுதிட்டார் ஆம்மையார், கணவன் அனுப்பிய அருங்கனியில் ஒன்றையும் படைத்தார், உண்டார், சென்றார். கணவன் வீடு வந்தான், அமுது படைத்தார் ஆம்மை, மிச்சமிருந்த கனியைத் தந்தார். சுவை கண்ட வணிகன், மற்றும் ஒன்று உண்டே கொண்டு வருக! என்றான். ஏன் செய்வார் ஆம்மை!

இல்லையே - சிவனடியாருக்கு அளித்து விட்டேன் என்று கூறலாம் - கணவன் அதற்காகக் கடும் கோபம் கொள்ளான் - எனினும், எவ்வளவு இவலுடன் பழம் கேட்கிறார் - இல்லை என்றாலும் எவ்வளவு துயருறுவார், பத்தினிப் பெண்ணுக்கு இது ஆழகாகுமா என்று பலப்பல எண்ணினார் ஆம்மை, ஒரு கணம். மறுகணமோ, “இதோ கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு, உள்ளே சென்றார்.

உள்ளே பழம் உண்டோ? இல்லை! சிவனடியார் உண்டு சென்றாரே!

எனினும் ஆம்மையின் உள்ளத்தில் நிரம்பியிருந்த பக்தி சாமான்யமானதா!

சிவபெருமான் அருளால், ஒரு பழம் காட்சி தந்தது, கலத்தில் ஐயரின் அருளை எண்ணிப் பெருமிதம் கொண்டார் ஆம்மை கனியைக் கணவரிடம் தந்தார், அவர் அதனை உண்டார், ஆச்சரியம் கொண்டார், ஏன்! - சுவை, அதுபோல் அவர் கண்டதே இல்லை - இரு கனி வாங்கினேன், ஒரு கனி உண்டேன், இனிப்புக் கண்டேன், இரண்டாம் கனியோ இதுவரை என்றும் நான் கண்டறியாத இனிமையை அளிக்கிறதே, என்ன விந்தை! என்று எண்ணினார். சிவன் அருளிய கனியன்றோ! புனிதவதியிடம், “உண்மையைக் கூறு உத்திமி! இக்கனி எது? நான் வாங்கி அனுப்பிய கனியல்ல இது” என்று தழதழத்த குரலிற் கேட்டார். தோட்டத்துக் கனியல்ல இது, இது அருட்கனி - ஐயன்தந்த கனி - என்பது விளங்க, நடந்தவற்றைக் கூறினார் புனிதவதி மெய்சிலிர்த்தது வணிகருக்கு - அங்ஙனமாயின், ஐயனைக் கேட்ட மற்றுமோர் கனியும் பெற்றுத்தரவல்லாயோ! என்று கேட்டார். “அவன் அருள்!” என்றாள் ஆம்மை மற்றோர் கனி காட்சி தந்தது! ஆம்மையின் தெய்வீகம் தெரிந்ததால் வணிகர், ஆகக்கண் திறக்கப்பட்டவராகி, இவரையோ நான் மனையாட்டியாகக் கொண்டு வாழ்வது - மகாபாதகமல்லவா - சிவனருள் சித்திக்கப்பட்ட ஆம்மை, வந்தனை வழிபாட்டுக்கு உரியவரேயன்றி, இல்லக் கிழத்தியாக இருத்தலுக்குரியவரல்ல என்று எண்ணி இறைஞ்சினார், இல்லம் வீட்டு ஏகினார். பின்னர் ஆம்மை ஐயன் அருளைப் பெற்றார், ஆம்மே! என்று அழைக்கப்பட்டார்.

“ஒரு பழம்! ஒப்பற்ற ஒரு மாது ஊய்யவும், உலகுக்கு ஓர் அடியார் கிடைக்கவும் உதவிற்று!” என்றார் புலவர்.

இது பரவாயில்லை - கற்பு - பக்தி - அருள்- இவை போன்ற கருத்துக்களை விளக்க உதவுகிறது. குதிரைக்காரனுடன் கூடியாடிய கோணல் நடத்தைக்காரியின் கதை. கொண்டவர் ஒவர் இருக்க, இறாவது ஆண்மகன் மீது ஆவாவுற்ற துரோபதையின் கதை, இவைகளைவிட, இக்கதை எத்தணையோ வகையிற் சிறந்தது - எனினும், இதனாலும் உலகுக்கு ஒரு பயனும் கிடைப்பதாகத் தெரியக் காணோமே! இக்கதை கேட்ட பிறகு, காரைக்காலம்மையின் மேன்மையும், கனி கிடைத்த மகிமையும் தெரியும், தெரிந்து, உலகுக்குக் கிடைக்கும் பலன், இருக்கிறது - என்று கேட்டேன் நான், மேலும் இக்கதை நம்போன்ற சாதாரண மக்கள் சம்பந்தப்பட்டதல்ல - ஐயன் அருள்பெற்ற ஆம்மையின் கதை! - என்று கூறினேன், சிரமப்பட்டுக் கதை கூறின புலவர் மனம் புண்படக் கூடாது என்பதால்.

சுட்ட பழம் சுடாத பழம் கதை தெரியுமோ என்று கேட்டார் புலவர்.

“ஓளவையாரிடம் ஆறுமுகன் விளையாடிய சம்பவம்தானே” என்றேன்.

“ஆமாம்...” என்று துவக்கலானார். நான் அதைத் துண்டித்துவிட ண்ணி, அதுவும் கடவுள் சம்பந்தமான கதைதான்” என்றேன். மக்கள் சம்பந்தப்பட்டதாகவே, வேறோர் கதை உண்டு என்றார் புலவர்.

மன்னன் ஒருவன் - அவனிடம் ஒரு அற்புதமான நெல்லிக்கனி கிடைத்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே கிடைக்கும், அதுவும் ஒரே ஒரு கனிதான் கிடைக்கும்.

அதை உண்டவர், மூப்பின் தொல்லைகளைத் தவிர்த்து நீண்டகாலம் வாழ்வர்.

இக்கனியினை ஆம்மன்னன் என்ன செய்தான் தெரியுமா!

பர்த்ருஹரிபோல் மனையாளுக்குத் தந்தானா? தானே உண்டானா? காமக் கிழத்திக்கு அளித்தானா? இல்லை - இல்லை.

அவன் அவை நாடி அன்று தமிழ்ப் பெருமூதாட்டி ஓளவை வந்தார். மன்னனின் பெருங்குணத்தை என்னென்பது, ஓளவைக்குத் தந்தான் கனியை!

அவர் உண்டான பிறகுதான், அதன் அற்புதத்தைக் கூறினான்.

எத்தணை சிறப்பான கதை!

வள்ளற்றன்மைக்கு ஒரு விளக்கம்.

பழந்தமிழகத்து மன்னரின் மாண்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

அறிவுத் தொண்டாற்றும் தகுதி பெற்றவருக்கே மன்னன் எதையும் வழங்குதல் வேண்டும் என்ற பேருண்மை. நாடாளும் மன்னனைவிட நாட்டுத் தொண்டாற்றும் அறிவாளர், நீண்டகாலம் வாழ்ந்திருந்தல் அவசியம் என்று பெரு நெறி.

“இவ்வளவும் இந்தக் கதை மூலம், விளக்கமாகிறதல்லவா!”

“ஆமாம்! புலவரே! இதுவரைக் கூறப்பட்ட கதைகள் எல்லாவற்றையும்விட, இது சாலச்சிறந்தது. நல்ல பல கருத்துக்கள் உள்ளன - எனினும்..” என்று நான் தயங்கினேன். “எனினும்... என்ன?” என்று புலவர் சற்றுக் கோபத்துடன் கேட்டார்.

“நல்ல கருத்துக்கள் உள்ளன கதையில் - கேட்போர் உள்ளத்திலும் நல்ல கருத்துக்கள் செல்லவும் கூடும் - எனினும்.. புதுக்கருத்து எதும் இல்லையே இதில் - பொன்னான கருத்தாகக் கூட இருக்கட்டும் - எப்போதும் உள்ள கருத்துதானே - ஆக்கருத்து, விளக்கப்பட்டிருக்கிறது இக்கதை மூலம் என்றேன் நான்.

“புதுமை! புதுமை! எப்போதும் உனக்கு அந்தப் பித்தம்” தானே என்றார் புலவர்! ஏனையோரும் இமோதித்தனர்.

மரத்திலிருந்து பழம் கீழே விழுந்தது!

கீழே தானே விழுகிறது.

கீழே விழுவதைத்தானே நாம் பார்த்திருக்கிறோம் - நமது முன்னோர்களும் பார்த்தனர்.

சங்க காலப் பெரும் புலவர்கள் கால முதற்கொண்டு அவர் தம் அரிய நூற்களைக் கற்கும் திறனற்றவர்களாகி விட்ட நம் காலம் வரையில், பழம் கீழேதான் விழுகிறது பார்க்கிறோம்.

பார்க்கிறோமே தவிர, சிந்திக்கிறோமா? ஏன் பழம் கீழே விழுகிறது என்று!

சித்தம் குழம்பி விட்ட என்று கேலி செய்வர், பழம் ஏன் கீழே விழுகிறது என்று கேட்டால்.

மனிதன், தோன்றிய நாளிலிருந்து மரத்திலிருந்து பழம் கீழே விழுவதைப் பார்த்தபடிதான் இருக்கிறான் - சிந்தித்ததில்லை.

நியூட்டன் என்பவர்தான், முதன் முதலாகச் சிந்தித்தார் - பழம் கீழே விழக் கண்டார் - அவருக்கு அது ஒரு பெரிய கேள்வியை, பிரச்சினையை உள்ளத்திலே கிளப்பி விட்டு விட்டது. பழம் ஏன் கீழே விழுகிறது என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். அவர் மன்னனல்ல. மற்றவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு பதினைந்து நாட்களில் பதிலளிப்பவர்களுக்குப் பதினாயிரம் வராகன் பரிசு என்று அறிவிக்க.

அவர், அருள்பெற்ற அடியாருமல்ல - கனவிலே ஐயன் தோன்றி, பாலகா! கேள் இதை - என்று துவக்கி, ஞானம் அருள்!

நம்மைப் போல ஒரு சாமான்யன், இந்த நியூட்டன், இவன் எண்ணினான், எண்ணினான், மனம் குழம்பிற்று அந்த அளவு எண்ணம்!

ஏன் பழம் கீழே விழவேண்டும்?

மேலே போகக்கூடாதா?

இருக்கும் இடத்திலேயே இருக்கக்கூடாதா?

கீழே விழவேண்டிய காரணம் என்ன? என்று யோசிக்கலானான்.

கீழே விழும் ஒவ்வொரு பொருளையும் கவனிக்கலானான். பொருள்கள் கீழே விழுகிற போதெல்லாம் கவனிகக்லானான்.

தானே பொருள்களை எடுத்துச் சென்று, யரமான இடத்திலிருந்து, கீழே போடுவான் - அது கீழே விழுவதைக் கூர்ந்து கவனிப்பான்.

விளையாட்டுப் பிள்ளை என்று எத்தனைபேர் கேலி பேசினரோ!

விசித்திரச் சித்தன் என்று எத்தனை பேர் ஐளனம் செய்தனரோ!

வெட்டி வேலை என்று எவ்வளவு பேர் கண்டித்தனரோ!

பழம் கீழே வீழ்வானேன்?

எப்பொருளை விட்டெறிந்தாலும் அப்பொருள் கீழேயே வந்து விழுவானேன் - என்று அவன் கேட்டபோது, கைகொட்டிச் சிரித்திருப்பர், பலர்.

இது ஒரு பிரச்சினை என்று யார்தான் சிந்தித்தார்கள்.

பழம் கிழேதான் விழும்! - இதற்குக் காரணம் தேடுவானேன்?

விட்டெறிந்த பொருள் கீழேதான் வந்து சேருகிறது - இதற்கு விளக்கம் எதற்கு இப்படித்தான் நியூட்டன் தவிர மற்றவர் அனைவரும் கூறினர்.

வேறு எவ்வளவோ வேலை இருக்கிறது, அவர்களுக்கெல்லாம், பழம் ஏன் கீழே விழுகிறது பாதி உயரத்திலேயே நின்றுவிடக் கூடாதா, மேலே ஏழும்பிடக் கூடாதா என்றெல்லாம் பைத்யக்காரக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கவா முடியும்!

நியூட்டன், அதனை ஆராய்ச்சி என்றான்.

அவர்கள், இது பித்தம் என்றனர்.

அவரக்ள் அவனைக் கேலி செய்தனர்.

அவன் அவர்கள் பால் பரிதாபப்பட்டான்.

ஓயாது சிந்தித்தான் - ஆராய்ச்சி பல நடத்தினான் - அதன் விளைவாகததான், பூமியின் ஆகர்ஷண சக்தி பூமியின் உர்க்கும் தன்மை - எனும் புது உண்மை கிடைத்தது.

எதையும் தன்னிடம் இழுத்துக் கொள்ளும் சக்தி, பூமிக்கு இருக்கிறது.

பழத்தைக் கீú விழவைப்பதும் இந்தச் சக்திதான். விட்டெறியும் பொருளெல்லாம் மீண்டும் கீழே வந்து சேருவதற்கும் காரணம் இதுதான்.

நியூட்டன் கண்டறிந்த இந்தத் தத்துவத்தின்மீதுதான், விஞ்ஞானம் கட்டப்பட்டிருக்கிறது நியூட்டன், கண்டறிந்து, உலகுக்கு அளித்த புதுக் கருத்துக் காரணமாகத்தான், பிறகு வேறு பல விஞ்ஞானக் கருத்துக்கள் பிறக்கவும், பிறந்ததால், புதுப்புது முறைகள் கிடைக்கவும், கிடைத்ததால், புதிய புதிய கருவிகள் பெறவும் முடிந்தது.

எல்லோரையும்போல, பழம் கீழே விழுகிறது - பொறுக்கித் தின்பது போதும், என்று நியூட்டன் இருந்து விட்டிருந்தால்!!

பழம - பார்த்தீர்களா, உலகுக்கு, நியூட்டன் மூலம் தந்த பெரும் பயனை!

புதிய உண்மை கிடைத்தது!

நான் கூறினது கேட்ட நண்பர்கள், வியந்து பேசலானார்களா - ஏன்பீர்கள்.

பேசுவார்களா! இல்லை! இது ஒரு பிரமாதமான கதையா - என்றனர் - எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு.

நியூட்டன் கண்டறிந்த உண்மை மட்டும் உலகுக்குக் கிடைக்காதிருந்தால் இன்று நாம் வாழ்க்கையிலே அனுபவிக்கும் எத்தணையோ விஞ்ஞான வசதிகள் கிடைத்திருக்க முடியாது.

ஆனால் யார், அதற்காக, நியூட்டனுக்கு நன்றி கூறுகிறார்கள்.

ஊழுது பயிரிட்ட உத்தமனுக்கு நன்றி கூறிவிட்டாபொங்கற் புது விருந்து உண்டு மகிழ்கிறார்கள்!

(திராவிடநாடு - 14.1.55)