அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பேரறிஞர் அண்ணாவின் அயரா உழைப்பு!

சி.என்.ஏ. நெஞ்சுவலியின் காரணமாக, கடந்த ஒருவார காலமாக இங்கு சிகிச்சை பெற்றபிறகு நீங்காததால் 11-3-52 அன்று காஞ்சி டாக்டர் பார்த்தசாரதியோடு சென்னைக்குச் சென்று டாக்டர் சடகோபனின் ஆலோசனைக்குப் பிறகு இங்கு, சிகிச்சை பெற்று வருகிறார். ஓயாத கார் பிராயணமும், இடைவிடாத கூட்டங்களுமே, நெஞ்சுவலிக்குக் காரணமென்றும் ஒரு மாதகாலம் பூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், டாக்டர்கள் வலியுறத்தியிருக்கிறார்கள். இதனால் 11, 12 தேதிகளில் குறிப்பிட்டிருந்த தஞ்சை, குன்றத்தூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து திட்டமிடப்பட்ட சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்யும்படி நேர்ந்திருக்கிறது.

செய்தி – திராவிட நாடு – 16-3-52