அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிரிவுத் துயரம்!

நம் அலுவலகப் பொறுப்புகையெல்லாம் ஆர்வத்தோடு செய்திடும் அருமைத் தோழர் இராசாபாதரின் அன்பு மகளை, திடீரென சாவு வந்து பிடுங்கிக்கொண்டு போய்விட்டது என்ற செய்தியை நம்மால் நம்பவே முடியவில்லை முதலில், உண்மைதான் என்று உணர்த்தப்பட்ட பொழுதோ, நம் இதயம் ஒடிந்து விழுந்துவிட்டது ஒருகணம் – பாண்டியன் நண்பரின் அன்புக்குழந்தை – சிறுகை நீட்டி, குறுநகை காட்டி, இட்டுந்தொட்டும்துழவியும் – மகிழ்வூட்டிய குழந்தைச் செல்வம், 7-4-52ல் மறைந்துவிட்டது. ஆறாத்துயரில் ஆழ்ந்து கிடக்கும் அன்பருக்கு, காலம்தான் அவரது கவலையை மாற்றும் என்று கூறுவதன்மூலம், ஆறுதல் கூறுவதைத் தவிர வேறென்ன செய்வது? அவருககம் குழந்தையைப் பிரிந்து குமுறும் உள்ளமும், குபுகுபுவென நீர்வழியும் கண்களும் கொண்டு, துயரமே வடிவாகக் கொண்டுள்ள அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட நாடு – 13-4-52