அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பித்தலாட்டம்

15.12.50 அன்று கண்டவராயன் பட்டியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் ‘கலவரம் நடக்கவிருந்ததாகவும் கேள்விகளுக்குத் தோழர் நெடுஞ்செழியன் பதில் சொல்லவில்லை’ என்றும் 21.12.50 ‘சுதேசமித்திரன்’ வெளியூர் இதழில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

இந்தச் செய்தி, உண்மையில்லாதது என்பதோடு இத்தகைய மட்டரகமனப்பான்மை, ‘தேசீயம்’ பேசுவோரிடம் வளர்வதைக்காண வருந்துகிறோம். தேசிய இதழ்களின் பித்தலாட்டம் நீடிக்காது நெடுநாள்’ என்று கண்டவராயன் பட்டி சுபே-சே.அழகப்பன் எழுதுகிறார்.

திராவிடநாடு 31.12.50