அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


போர் நோக்கம்

நாம் யாவரும் பாரத மாதாவின் பிள்ளைகள். நமக்குள் ஒரு வித்யாசமும் கிடையாது. ஆயிரம் வித்தியாசம் இருந்தாலும், நாம் ஒரே தாயின் மக்கள். ஜாதி மதச் சண்டைகள் கூடாது. இந்து முஸ்லிம் என்று பேதம் பேசக் கூடாது. பிராமணர் சூத்திரர் என்று துவேஷம் பேசுவது மகாதோஷம்

டாக்டர் ரகுராம்
கேட்டயளோ அக்கரமத்தை, மதுரைக் கோயிலிலே பஞ்சமளை விடராளாமே. காலம் இவ்வளவு கெட்டுப் போச்சே. எங்கிருந்துங்காணும் மாதம் மும்மாரி பெய்யும்! ஏன் இப்படி இவா அழிந்து போயிடறாளுன்னு தெரியல்லை. ஜாதி ஆச்சாரமே கூடாதாமே. என்ன அக்கிரமம்? பாபகிருத்தியம் தலைவிரித்தாடுகிறதே. இதை மட்டந்தட்டாமே என்ன ஓய் மகா பெரிய ஜென்மம் நமக்கு. பிராமணாளுக்குன்னு உண்டான யோக்யதைகள் போயிடுத்துன்னா அர்த்தம். யாரும் கேட்பாரில்லையோ? அடடா என்ன அக்ரமம் நடக்கிறது. ஈஞுவரனுக்கே பொறுக்காது!

அந்த கிருஷ்ணய்யர்
என் தமயன் கூடத்தான் காங்கிரசிலே இருக்கான். அவாளுடைய கட்சியும் தேச சேவைக்குத்தான் பாடுபடறது. ஆனா, இந்தச் சண்டையிலே மட்டும், அவாளுக்கும் நமக்கும் கொஞ்சம் அபிப்ராய பேதமிருக்கு. மகாத்மா என்ன சொல்றார். சுயராஜ்யம் கொடும் சண்டைக்கு உத்தாசை செய்யநேன் என்ற சொல்றார். நான், ஜயராஜ்யம் தரத்ததான் போறா பிறகு, இப்போ சண்டைக்கு உதவி செய்யுங்கோன்னு ஜனங்களைக் கேட்டுக் கொள்றோம். அவ்வளவுதான் வித்யாசம். ஆகையால் நீங்கள், கவர்ன்ர் வார் பண்டுக்குத் தாராளமாகப் பணம் தரவேண்டும். பணம் இல்லாதவா, யுத்த விஷயமா நல்ல பிரசாரம் செய்யணும். அதுக்கு வேண்டிய விஷயமல்லவாம், எடுத்துச் சொல்லத்தான், நேக்குக் கூட இந்தக் கமிட்டியிலே பிரசிடெண்டு வேலை தந்திருக்கா. ஆகவே நீங்களெல்லாம், இந்த யுத்தத்திலே, நேசநாடுகள் ஷெயுக்கணும்னு, ஜானகிராமனைப் பஜித்துக் கேட்டுக் கொள்ள வேண்டும். அதுக்காக ஒரு கோலாட்டக் கச்சேரி வச்சிருக்கு. என் தங்கை கோமளம் ஏற்பாடு செய்திருக்கா. என் தம்பி கோபாலன், புளூட் வாசிக்கிறான். அருமையா இருக்கும் எட்டணாதன் டிக்கட் அடுத்த வெள்ளிக்கிழமை யுத்த சகாய நிதிக்க நடத்தப்படும் நாட்டியம், நம்ப முன்சீப் நரசிம்ம ஐயரிருக்காரோன்னோ அவர் மகள், மல்லிகா நாட்டியமாடுவா, கோலாட்டம் பாட்டு, இவைகளுக்கு வரணும்னு கேட்டுக் கொள்கிறேன். அவஸ்யம் வரணும்.

லேடி டாக்டர். லலிதா.
அடி! அலமு எங்காத்திலே, நம்ம நாடகத்துக்கு வேண்டிய வேஷ சாமான் அவ்வளவும் இருக்கேடி, நமக்கென்னடி சங்கடம். ரகுராமண்ணேனுடைய கதர் சால்வை, கதர் தொப்பி எடுத்துண்டு வர்றேன். எங்கப்பாவிடமிருக்கு, பஞ்சாங்கக் கட்டு, உருத்திராட்ச மாலை, பொடி டப்பி, வெள்ளிப் பூண் கோட்ட தடி, புரோகித வேஷத்துக்கு அது போதும். எங்க அக்காவிடம், லேடிஸ் பூட்ஸ், ரிஸ்ட் வாச், கைப்பெட்டி, மூக்கக் கண்ணாடி, ஜார்ஜட் சேலை, டைப்மிஷின் எல்லாம் இருக்கு, எங்க சின்னண்ணன் கோபாலன் காலேஜிலே ஸ்ட்ரைக் செய்துட்டு வந்திருக்கான். அவன் கிட்ட கோட், ஷர்ட், காலர், டை வாங்கிண்டு வர்ரேன். போதாதாடி நாடகத்துக்க வேஷம் போட.

குமாரி கோமளம்
குமாரி கோமளம், கள்ளங்கபடமின்றிக் கூறியபடி, அந்த ஒரு குடும்பத்திலே பல வேடங்களுக்கு ஆள்களும் சாமான்களும் இருந்தன, சந்தேகமில்லை. எந்த ஊரிலே இருக்கும் குடும்பம்? என்ற யோசிக்கிறீர்களா! எங்கும் இருக்கம் ஆரியக் குடும்பத்தின் சாம்பிள்!
அதிலேதான் வைதிகக் தகப்பன், தேசீயக் குமாரன், லேடி டாக்டரான மகள், பள்ளியில் படிக்கும் கோமளம், காலேஜ் ஸ்ட்ரைக் செய்யும் மாணவன், எல்லம் ஒன்றாக இருக்கும். தகப்பனால் வைதிகத்தை வளர்க்கப் பாடுபடுவார். மூத்த மகன் அதசீயம் பேசி ஜில்லாபோர்டிலே அமருவான். பெண் ஆங்கிலம் படித்து டாக்டராவாள். சிறுமி, கோலாட்டமாடி கலெக்டரிடன் மெடல் வாங்குவாள். வாலிபன், சுதந்திரம் பேசி, காலேஜில .ஸட்ரைக் செய்வான்.

ரகளையான குடுமபமாகத் தானே இருக்கும். இப்படிப் பல ரகம் இருந்தால், என்பீர்கள். ரகளையே இராது. ஒற்றுமை வீட்டிலே ஜாம்ஜாமென இருக்கும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை எனும் நாடக மேடையிலே கிடைத்த வேஷம் என்று திருப்தி இருக்கும். ஒருவருக்கு ஒருவர் துணை என்ற எண்ணமிருக்கும். கூட்டு முயற்சியினால், குடும்பச் செல்வ வளர்சியாகும் நாட்டிலே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் படை இருக்கும். படையிலே தமிழர், ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டும் அழித்துககொண்டும் இருப்பர். ஆரியர் வீட்டிலே, ஒவ்வொருவருக்கும் தத்தம் படையினைக் கொண்டு தான் அடைந்த நலன் பற்றிய பேச்சிருக்கும். சங்கராச்சாரியாரின் அருள் தந்தைக்க, காந்தியாரின் கடாட்சம் மூத்தமகனுக்கு, கவர்னர் யுத்தக் கமிட்டியின் கருணை மகளக்கு, கலெக்டர் துரையின் பாராட்டுதல் கோமளத்துக்கு, காலேஜ் மாணவர் கழகச் செல்வாக்கு, படிக்கும் பிள்ளைக்கு, என்று, ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒடத்து வரம் கிடைக்கும். பொத்தத்தில் குடும்பம் வளரும், உயரும், மேனிலை அடையும். ஆரியக் கூத்துக் காரியத்தை மறக்க அல்ல!!

வைதிக வளர்ச்சிக்கான விளம்பரங்களை, மாந்தரீகம், ஜோதிடம் முதலிய செய்திகளை மித்ரன் முதலிய பத்திரிகைகள் பிரசுரிப்பது குறித்துச் சென்ற வாரம் திராவிட நாடு தலையங்கம் எழுதிற்று. விளம்பரம் வெளியிடுவது மட்டுமென்ன. அந்த மாந்தசீக ஐயர், மித்ரன் ஐயருக்கு ஒரு கார்டு எழுதினால் போதும், அந்த தாயத்துகள், முடிக்கயறுகளின் மேலான மகத்துவங்களைப் பற்றிப் புகழுரை தீட்டி, மிஸ்டர் சர்ச்சிலே, ரூசிவெல்ட்டே, சியாங்கே ஷேக்கே, ஸ்டாலினே, ஏன் வீணாக டார்ப்பிடோ வென்றும் சப்மெரைனென்றம், விமானமென்றும், பீரங்கி என்றும், குண்டு தளவாடமென்றும், குதிரைப்படை, தரைப்படை என்றும் பலப்பல தேடிப், பணத்தை வீணிலே பாழ்படுத்துகீறீர்கள். கோடி கோடியான பவுன்களைக் கொட்டவேண்டாம். இலட்ச இலட்மாகத் தொழிலாளர் வேலை வெய்யவும் வேண்டாம். எதிரியின் போர்த்திட்டம் என்ன, நாம் என்ன திட்டமிடுவது என்று ஏங்கவும் வேண்டாம். நாற்பத்து எட்டு ரூபாய் நாலணாவிலே உலகிற்கு வந்துள்ள அத்தனை அவதியும் ஒரு நொடியிலே ஒழிந்தே போகும். விரோதிகள் அழிவர்! போரிலே சேதமிராது!

ஹிட்லரின் கழுத்தை இறுக்கிக் கண்பிதுங்கி பெளிவரச் செய்ய வேண்டுமா? சரி! எடுங்கள் 1-4.0 பூசையிலே வைத்து எடுத்த முடிக்கயறு அனுப்புகிறோம். அதை ஹிட்ரலி இருக்கும் திக்குக்கு ஏவினால், அது வாயுவேக மனோவேகமாகப் பறந்து சென்று பெர்லின் நகரிலே, ஹிட்லரைக் கண்டுபிடித்து, கழுத்தைச் சுற்றிக் கொள்ளும். மாதவி நடனமாடி வீசிய மாலையே கழுத்தில் விழுந்தமாலை கழற்ற முடியவில்லை, காரிகையே இது யார் சூதோ என்று கோவலனைக் கதறச் செய்ததாக. ஐதீகமாயிற்றே! முடிக்கயிறு ஹிட்லரைச் சும்மாவா விடும்! டோஜா தூங்குகையிலே, அவன் இருதயத்தைத் துளைக்க வேண்டுமா? எடுங்கள் பதினைந்து ரூபாய். ஒரு வெள்ளி வேல் அனுப்புகிறோம். அதை ஏவினால், அது கடலைத் தாண்டி, விமானிகளின் கண்களை ஏமாற்றி, கடலோரப் பாதுகாப்பு, உள்நாட்டுப்படை என்பவைகளை ஏய்த்துவிட்டு, டோக்கியோவிலே டோஜோவின் அரண்மனை சென்று, அவன் இருதயத்தைத் துளைத்துவிடும், வேவல்கள் எதற்கு? விண்ணிலே வட்டமிடும் விமானங்கள் ஏன்? வீண் செலவு ஏன்? வெள்ளி வேல் இருக்கக் கொள்ளைச் செலவு செய்வானேன். இரண்டு தாயத்துகள், ஒன்று தங்கத்தால் செய்தது மற்றது வெள்ளி, முன்னது 25 பின்னது 7 ரூபாய். இவைகளை அணிந்தால் போதும், பயமேது இனி ஜெயமே என்று பண்ணிசைத்துப் பாரிலே பயமின்றி உலவலாம். அத்தகைய அரிய மாந்தரீக சக்தி இந்த ஊரிலே இருக்கும் இன்ன பெயருடைய ஐயருக்கு இருக்கிறது என்று அகில உலகுக்குமே உரைத்திடவும் துணியும். யார் இருக்கிறார்கள் கேட்க? எங்கே இருக்கிறது அந்தத் துணுவு? எப்படி இருக்க முடியும், இடுப்பொடிந்த இனத்திடம் அந்த இயல்பு.

எதைச் சொன்னாலும் தலை அசைக்கும் தாசர்கள் இருக்கும் வரையிலே, இதுவும் செய்வர், இதைவிட மோசமான ஆபாசமும் செய்வர்.

நமது நாடு நமதரசானால், இத்தகைய தெகிடுதித்தக் காரசின் கொட்டம் ஒடுக்கப்படும். பிரிவினையே, இவையிம் இவை போன்றவைகளுமான பீடைகளும் ஒழியும் வழி வேறில்லை.
ஒரு துறையுலே வேலை செய்யும் பார்ப்பனர், மற்றோர் துறையிலே வேலை செய்யும் பார்ப்பனருக்கு உதவியாக இருப்பர்; ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு பாழாகார். ஒருவருக்கொருவர் விளம்பரப்படுத்தி மொத்த உயர்வை வளர்த்துக் கொள்வர். டைகர் வரதாச்சாரியாரின் சாரீரம் கட்டையே தவிர, பாட்டிலே இருக்கும் பிகுவு ஆபூர்வமானது என்று சர்.அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் புகழ்வார். சர்.அல்லடியின் மூளையை, இரவல் கேட்கிறார்களாக்கும் இங்கிலாண்டிலே என்று டைகர் கூறுவார். இருவரின பேச்சையும் இந்து ஆசிரியர் சீனுவாசன் எடுத்தெழுதுவார்.

சின்னாட்களுக்கு முன்பு, மேவார் சமஸ்தானத்திலே திவானாக இருக்கும் சரி.டி.விஜயராகவாச்சாரியார், திருவாங்கூர் சென்று வந்தார். திருவிதாங்கூரிலே அவர் பேசும்போது, சிமஸ்தானத்திடைய சீர் சிறப்புகளை எடுத்துக் கூறிவிட்டுத், திருவாங்கூருக்குக் கிடைத்துள்ள திவான் போல் திக்கெட்டும் தேடினாலும கிடைக்குமா? அவருடைய கலியாண குணங்களை ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனாலும் எடுததுரைகக முடியுமா? என்ற வர்ணிப்பதுபோலப் பேசினார். மன்னர், தமது திவானைக் குறித்து வேறோர் திவான் புகழ்வது கேட்டுப் பூரிப்படையாமலோ, இத்தகைய மோகனரூபனைத் திருவாங்கூர் திவானாகக் கொண்டதே இனி நமது மைந்தனுக்கு என்ன குறை என்று மன்னரின் மாதா மன மகிழாதிருந்திருப்பார்களா! பாருங்கள், அக்கிரகார விளம்பர இலாக்காவின் அருமையான வேலைத் திட்டத்தை! அடுத்த ஆண்டு சர்.சி.பி., மேவார் சமஸ்தானத்துக்குப் போர், அங்கு போய், அஷ்ட திக்குகளிலே அலைரந்து திருந்தாலும், உங்கஙள சமஸ்தானத்திலே திவானாக இருக்கும் சர்.டி.விஜயராகவாச்சாரியாரைப் போல் ஒருவரைப் பெறமுடியுமா? மேவாரின் அதிர்ஷ்டமே அத்திஷ்டம்! என்று பேசுவார். வரா.வின் நடை இருக்கிறதே, அது தனிச்சிறப்பு வாய்ந்தது என்ற கல்கி எழுதுவார்; கல்கியின் சிறுகதையின் சிறப்புத் தமிழ்நாட்டையே பூரிக்கச் செய்கிறது என்று வ.ரா.எழுதுவார்! இன வளர்ச்சியிலே அந்தச் சிறு சமூகம் எடுத்துககொள்ளும் அக்கரை, உலகின் அற்புதங்களிலே ஒன்று. தற்பாதுகாப்பு முறையும் அதுதான். மிகச்சிறு எண்ணிக்கையுள்ள கூட்டம், மற்ற மக்களின் உழைப்பால் வாழ வகுத்துக்கொண்டுள்ள தந்திரமான திட்டத்தைக் காப்பாற்றும் வழி அதுதான். வெள்ளைக்காரர்கள், இங்கு முதலிலே வியாபாரம் செய்ய வந்தபோது, ஊரிலே தனியான இடத்திலே கோட்டை அமைத்துக்கொண்டு, காவலுக்கு ஆள் வைத்துக்கொண்டு இருந்தனர். அத்தகைய கோட்டையிலே ஒன்றுதான் இன்றுள்ள சென்னைக் கோட்டை புதிய நாட்டிலே, வந்துள்ள வெளிநாட்டாரின் வாழ்க்கைமுறை அப்படித்தான் இருக்கும். ஆரியரும் அன்னியராதலால், அவர்களம் அந்த நாட்களிலே தனி இடத்தில், அக்கிரகாரத்தில் வாழலாயினர். வெள்ளைக்கார வியாபார விடுதிகள் பின்னர் ஆட்சிப் பீடங்களாக மாறியது போலவே, அக்கிரகாரங்களும், மக்களை ஆட்டிப் படைக்கம் மன்றங்களாகிவிட்டன. இரு வர்க்கமும உபயோகித்த ஆயுதங்கள் வேறு வேறு. ஆனால் முறையும் பலனும் ஒன்று. ஆமாம்! இன விஷயமாகக் கூடத்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் பாத்யஸ்தர்களாமே!
நமது இனத்தின் முறை எப்படி இருக்கிறது? வெளியே சொன்னால் வெட்கக்கேடு. உள்ளே விட்டு வைத்தால் உள்ளக்கேடு. கூட்டு எண்ணணம், கூட்டுணர்ச்சி, கைகொடுத்தல் என்பவைகளைக் கருதார். ஒருவருடைய முயற்சிக்கு மற்றவர் உதவி செய்ய முன்வாரார். உதவி செய்யாவிட்டாலுங்கூட ஆபத்தில்லை, இடைஞ்சல் செய்யாமலாவது இருப்பாரோ! அதுவுமில்லை. எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அவ்வளவும் நடக்கும். ஒரு ஊரிலே மாநாடு என்றால், உண்மையிலே, அது முடிவதற்குள் எனக்குப் பயம் பிடித்தாட்டும். ஏன? எதிரிகள் ஏதேனும் செய்வரோ என்ற பயமா? என்று கேட்பீர்கள். அது அல்ல தோழர்களே! எதிரிகளுக்கு நாம் மாநாடு கூட்டுவது கண்டார்தானா கோபம்? நாம் உயிரோடு உலவுவதே அவர்களுக்குக் கோபந்தான், அவர்களைப் பற்றியல்ல என் கவலை. அதிலே, எத்தனையோ மாஜி நண்பர்கள் உண்டு எதிர்கால நண்பர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். ஆனால் என் போன்றோருக்கு ஏற்படும் பயத்துக்குக் காரணம், மாநாடு ஏற்பாடாவதற்குள், நமது தோழர்களிடையே மூன்று பிரிபு உண்டாகம். முறைத்த கண்ணினர் கிளம்புவர். மாநாட்டு வாயிலிலே இன்னவிதமான தோரணங்கள் கட்டவேண்டும் என்று கூறும் கட்சிக்கம் வேறுவிதமான அலங்காரமிருத்தலே சரி என்ற வாதமிடும் கட்சிக்கும் போர் மூண்டுவிடும். மாநாடு, புது பலம் பிளவை உண்க்கும். ஏற்படும் குறை இது. நமது போர் நோக்கத்தைச் சரியாக உணரவில்லை. நமது படை வரிசைகளில் குலைவு ஏற்படுவதற்குக் காரணமும், நமது படைகளுக்கு ஆட்பெருக்கம் ஏற்படாத காரணமும் ஒதுவேயாகும்.

இரண்டோர் வருஷம், ஈ.வெ.ரா.வுடன் சேர்ந்து வேலை செய்தால், ஏதேனும் சரியான சான்சு கிடைக்கும்போது, மனுப்போட்டு, அவருடைய சிபாரிசும் பெற்று, கட்சிக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன். இப்போது நான் வேலை தேடுவதும் கட்சிக்க நன்மை தேடத் தானே, என்று வாதாடி, எப்படியாவது, பெரிய வேலையில் சேரலாம் என்ற நோக்கத்தோடு, வேலை செய்வது, பொதுநலத் தொண்டுமல்ல, சயநலம், கொஞ்சம் தந்திரங்கலந்தது. இதை மிக இரகசியமாகச் செய்கிறாம், யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்பது அந்தப் பேர்வழிகளின் கருத்து. கட்சி அவர்களைத் தெரிந்து கொள்ளாமலில்லை. உத்தியோகம் கிடைக்கும்வரை, உரசினதும் உல்லசப்படு ததியதும், அது கிடைத்தமும், நான் உத்தியோக விஷயத்திலே மகா நெருப்பு. ஆமாம். நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன் சர். ஒரு ரூல் இருந்தால், அதன்படியேதான் நான் நடப்பேன் என்று பேசவும் தெரியும். ஆனால் அத்தகையவர்களைக் கட்சி காட்டிக் கொடுப்பதில்லை! இன இயல்பை அவர்கள் மறந்தாலும், கட்சிப் பற்றை அவர்கள் கைவிட்டாலும், பழைய நட்புகளை அவர்கள் திரணமெனக்கொண்டாலும், காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டது மது புத்திசாலித்தனம். இவன் கத்திக் கத்திக் கிடக்கட்டுமே நமக்கென்ன என்று பேசினாலும், கட்சியின் பெயருக்காக அல்ல, தமிழ் மரபிலே இத்தகைய சுகபோகிகள் இப்பது, ஆரிய இனத்துக்குத் தெரியலாகாதே என்பதற்காகவே, கட்சி அத்தகைய காற்றாடிகளைப் பற்றிக் கவலை எடுத்துக்கொள்வதில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது அவர்களின் இல்ட்சியமாம்! அவர்களுக்கு மட்டுந்தானா! ஆலகபோனுக்கு அதுவேதான் இலட்சியமாக இருந்தது. ரஸ்புடீனுக்கு இருந்தது. பெரிய பெயர்கள் கூறுவானேன், முடிச்சு அவிழ்க்கும் முனியனுக்கும், கன்னமிடும் கந்தனுக்கம், வேறென்ன இலட்சியம்? அவர்களும் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதையே இலட்சியமாகக் கொண்டவர்கள். நன்றாக வாழட்டும் அத்தகைய நற்குணநாதர்கள். அவர்களின் உழவு அறுபடை தந்துவிட்டது என்று அவர்கள் திருப்தி கொள்கிறார்கள் போலும்! அவர்களின் செய்ல, கட்சியைக் குலைப்பதுடன், கட்சியினால் ஈடேற வேண்டிய இனத்தைக் கெடுக்கிறது. இத்தகைய இனத் துரோகிகள் இங்கும், இனவிருத்தியையே இலட்சியமாகக் கொண்டவர்கள் அக்கிரகாரத்திலும் இருக்கின்றனர். நநமது போர், தகுந்த அளவு வெற்றி தராததற்குக் காரணம் இதுதான்.

நமது போர் நோக்கம், இரண்டோர் சுயநலமிகளுக்க இடந்தேடிக் கொடுப்பதல்ல. ஆரியரின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளவர் களிலே இரண்டொருவருக்கு, ஆரியரின் கொஞ்சுதல் கிடைக்குமாறு செய்வதல்ல. திராவிட இனம், ஆரிய இனத்திடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதே போர் நோக்கம். இந்த இலட்சியத்தைக் கொண்ட இளைஞர்களே தேவை. புல்லுருவிகள், சுகபோக விரும்பிகள்வேண்டாம்.

(திராவிடநாடு - 17.01.1943)