அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பொய்க்கால் குதிரை!

பெரியார் மீது படையெடுக்க வேண்டுமென்று விரும்பும், பதவிப் படை, ஒரு பொக்கால் குரிரையைத் தாயாரித்திருக்கிறது. பெரியாருக்கும் ஜனாப் ஜின்னா அவர்களுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தைத் திரித்து கூறியும், காந்தி - ஜின்னா சந்திப்பு என்ற தலைப்லே குடிஅரசில் வெளியான தலையங்கத்தைத் திரித்து எழுதியும், பெரியார் ஜின்னா தகறாரு வந்துவிட்டது, என்றுகூறி, முஸ்லீம்களைப் பெரியாரிடமிருந்து பிரித்துவிடலாம், என்று மனப்பால் குடிக்கிறது அந்தப்படை. இந்த முயற்சி, அந்தப் படைக்கு மூலபலமும் இல்லை மூளை வலிவும் சூன்யம் என்பதை விளக்குகிறது என்றே நாம் கருதுகிறோம்.

திராவிட நாட்டிலே, முஸ்லீம்களின் சார்பிலே, ஆதரவு காட்டியவர், பெரியார் என்றும், அந்த ஆதரவு நிலைத்தே இருக்கும், இடையே இச்சகம் பேசி நச்சுநாவை அசைக்கும் கூட்டம் பிளவு உண்டாக்க முயன்றால் அதுபலிக்காது அசைக்கம் கூட்டம் புளவு உண்டாக்க முயன்றால், அதுபலிக்காது, பாகிஸ்தான் ரிச்னையைத் திராவிட நாட்டிலே, மூஸ்லீம்கள் உணரச்செய்யப் பெரியார் எடுததுககொண்ட பெருமுயற்சியை, இஸ்லாமியர் மறக்க முடியாது, இந்தச் செய்ந்நன்றியை ஆதாரமாகக் கொண்டே பெரியாருடன் முஸ்லீம்கள் என்றென்றம் நேசமாக இருப்பார்கள் என்று நாம் கூறவில்லை. நேசம் பரிசு அல்ல என்பது நமக்குத் தெரியுமாதலால், வேறு எக்காரணம்பற்றி இங்ஙனம் கூறுகிறோம் எனில், முஸ்லீம்கள், திராவிடர்கள். ஆகவே அவர்கள் திராவிடத் தலைவர் பெரியார் இராமசாமி அவர்களிடமும, திராவிடருககே என்ற கோட்பாட்டினிடமும, பற்றுக்கொள்ளாதிருக்க முடியாது. எனவே, பெரியார்மீது பழிகூறிப் பகைவளர்த்து விடுவோமா என்று சிறுமதிகொண்டு சிலர் சேட்டை புரிந்தால், அச்சேட்டைக்குச் செவிதராது, இருக்க வேண்டியது, நமது தோழர்களின் கடமை என்றோம். பெரியாரை எதிர்க்க இதுபோன்ற பொய்க்கால் குதிரைகளைத் தயாரிக்கும் பொச்சரிப்புக்காரர்கள். தங்கள் சூழ்ச்சி சிதைவதைக் காணப் போகிறார்கள் விரைவில்! ஆனால், அத்துடன் சும்மா இருப்பாரோ? இரார்! வேறு பல சரடுகளைத் தயாரிப்பார். இது போலச் செய்வதன்றி வேறொன்றம் அறியாத அந்தப் பதவிப் படையிடம், நாம் பரிதாபப்படுகிறோம். ஏனோ வீண்வேலை!

(திராவிடநாடு - 01.10.44)