அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பூங்காவில் புலவர்
பூங்கா உலவிடம் ஏழைப் புலவர்க்கு நேரம் உண்டா? என்பாரும், கண்டிடப் பூங்கா எங்குள்ளது? எனக் கேட்பாரும், உள்ர், உணர்கிறேன். நான் கூறும் புலவர், தமிழகமே பூங்காவாக இருந்த காலத்தவர், புகழ் உட்டி வாழ்ந்தவர், அறநெறி அறிவித்து அரசர்களை நல்வழிப்படுத்திடும் உரிமை பெற்றவர், உயர்வு பெற்றவர்.

தமிழகமே ஓர் பூங்காவாகத் திகழ்ந்த நாட்களை ஏடுளில் காண்கிறோம். இடநெருக்கடி, தொழில் நெருக்கடி, மக்கட் பெருக்கம், வறுமை இதிககம் ஆற்ற நாட்களுக்கு அழைக்கிறேன் - காண - எண்ணிப் பார்த்திட எழிலார் பொழில் நிரம்பிய இந்நாடு இனிய மணம் பரப்பி வந்த நாட்கள்! அருவிகளின் ஆரவணைப்பிலே பொழில்கள் வளம்பெற்று நாட்கள்! அன்னமும் மயிலும் அழகு நடைபயிலக் கண்டு இரணங்குகள் கன்னத்தில் கைவைத்து வியந்த நாட்கள்! வானம்பாடியின் இசைகேட்டு இன்புற நேரமும் நினைப்பும் கொண்ட நிலையில் மக்கள் இருந்த நாட்கள். உழவும் தொழிலும் வாழ்க்கைக்குப் போதுமான வளம் அளித்து, வறியர் என்பார் இங்கு இலர் என்ற நிலை இருந்த நாட்கள். தமிழகம், தமிழகமாக இருந்த நாட்கள், தமிழ்மொழயினின்றும் தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் பிரிந்து, ஆம்மொழி பேசுவோர், தமிழகத்தில் ஓர் பகுதியை இந்திரமென்றும், கருநாடகமென்றும், கேரளம் என்றும் பெயரிட்டழைத்துத் தனி அரசு முறைகளை மேற்கொள்ளாத நாட்கள்! வடபுலத்தவர் வல்லமையாலோ வஞ்சகத்தாலோ தென்புலத்தை அடிமைப்படுத்த முடியாத நிலையிருந்த நாட்கள்! அந்த நாட்களிலே தமிழகமே ஓர் பூங்கா!

புவியாள்வோரும் புரவலர்களும், புலவர்களுக்கு ஏதேனும் உந்தால் மட்டுமே தமது கரம் மணம் பெறும் என்று எண்ணியிருந்தனர். புலவர்களும் பொன்னைப் பொருளைத் தேடிட னையாது. தமிழ் இனைமையை எவரும் நுகர்ந்திடச் செய்யும் தொண்டினிலே முனைந்து நின்றனர்.

புலவர்கட்கு, புவியாள்வோர் அவையிலும் புரவலர் மாடங்களிலும் உலவி மகிழ்ந்திடுவதைக் காட்டிலும் மலையும் மலைசூழ் இடமும், காடும் காடடுத்த இடமும், இங்கெல்லாம் சென்று உலவுவதில், கண்டு மகிழ்வதில், இயற்கையின் எழிலை வியந்து நிற்பதில்தான் அதிகமான விழைவு இருந்திருக்கிறது என்பது அவர்கள் நமக்குக் கருவூலமென விட்டுச் சென்ற கவிதைகளின் மூலம் விளக்கமாகத் தெரிகிறது.

தாம் கூறவேண்டிய எண்ணங்களை, ஏற்பாகளை நிலைகளை, பொருளை, விளக்குவதற்காகப் புலவர் பெருமக்கள், உவமை கூறுவது மரவு பொருட்செறிவுமிக்க உவமைகளைப் புலவர்கள் தந்துள்ளனர் பூமணக்கும் இடம், தமிழ்மணக்க வாழ்ந்த புலவர்கட்கு, பெருமகிழ்வு பெறத்தக்க இடமாக மட்டுமல்ல, தமது கவிதைகட்குச் சுவை சேர்த்திடத்தக்க கருத்தளிக்கும் இடமாக இருந்திருக்கிறது.

இதோ ஒரு புலவர் - உடன் சொல்வோம். தந்தாலன்றித் தாமாகப் பொருள் எதும் தரச் சொல்லிக் கேளார், தயக்கமின்று உடன் செல்லலாம்.

கண்களிலே களிப்பொளி! ஏன் இராது! கவிதைக்கு மக்களிடம் நல்ல மதிப்பு! மன்னன், இவர் வருகைக்குக் காத்திருக்கும் அளவுக்கு. இவர்க்குச் செல்வாக்கு இயற்கையின் கோலத்தைக் காண்கிறார் பேருவகை ஆடைகிறார்.

ஆதோ தாமரை! அழகு மலர்! புலவர்களின் பாமாலையை நிரம்பப் பெற்ற மலர்! அதைத்தான் பார்க்கிறார், புலவர்.

அழகு தாமரையே
அணியே பணியே
என்று பாடத் தொடங்குவார், இவரல்ல, ஆற்றைநாள் கவிவாணர்கள். இவர் தாமரையைப் பார்க்கிறார் அதன் அருகே உள்ள பகன்றைப் பூவையும் பார்க்கிறார். அந்தப் பூ தாழ்ந்து காணப்படுகிறது, தாமரையை நோக்கி.

சரி! இது தாமரை! அது பகன்றை! இருவேறு மலர்கள் ஆனால் அருகருகே! அவ்வளவுதான், நமக்கு தெரிகிறது புலவர்க்கு அப்படி அல்ல.

தாமரை! பகன்றை! இரு மலர்கள் - பக்கத்துக்குப் பக்கம், தாமரைக்கு அருகே, நெருங்கிச் செல்லும் நிலையில் அல்லவா, பகன்றைப் பூ இருக்கிறது! என்ன நேர்த்தி! என்ன அழகு.

தாமரை, வெளிர் கலந்த செந்நிறமுடையது!

பகன்றைப்பூ வெள்ளை நிறமுடையது.

தாமரையின் அருகே, நெருங்கி, தாழ்ந்து நிற்கிறது பகன்றை! காண்கிறார், கவிதை சுரக்கிறது! ஏன்? தாமரையின் அருகே பகன்றைப்பூ, தாழ்ந்து நெருங்கிக் காணப்படுவதின் வனப்பு விளங்கத்தக்க விதமாக மக்களுக்கு எடுத்துக்கூறிட வேண்டும் என்று புலவர்க்குத் தோன்றுகிறது.

தாமரைக்கருகே பகன்றை! இலுக்குப் பக்கம் வேல்! இப்படிப் பல உள். நிரம்ப உள். புலவர், இதனை மட்டும் ஏன் குறிப்பாகக் கவனிக்கிறார்?

புலவர்கள், மலர் கண்டால் பாடிடுவது மரவு என்று கொண்டிடினும், இரு மலர்களைக் கண்டதால், இரண்டு கவிதைகள் இயற்றட்டும் - தாமரைக்கு ஒன்று - பகன்றைக்கு மற்றொன்று! அவ்வளவுதானே! ஏன் இப்புலவர், இந்த இரு மலர்களையும், இவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறார்? காணக்காண இவர் முகமே மலராகி விடுகிறதே, ஏன்? கேட்போமா?

“புலவரே! தாமரை பகன்றை எனும் இரு மலர்களையும் நெடு நேரமாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே! ஏன்?”

“இளைஞனே! அந்த அழகிகளைக் கவனித்தனையா?”

“தாமரை, அழகு மலர்!”

“பகன்றையும் தான்! மலரே அழகு வடிவங்கள்! இயற்கை மாந்தர்க்குத் தரும் அன்பளிப்புகளல்லவா! தம்பி! தாமரையும் கண்டிருக்கிறாய், பகன்றைப் பூவையும் பார்த்திருக்கிறாய் - ஆனால், இரு மலர்கள் மட்டுந்தானா உன் கண்களுக்குத் தெரிகின்றன?”

“ஏன்! ஆலைகள் கூடத் தெரிகின்றன”

“அட, அனுபவமற்ற வாலிபனே! ஆலை தெரிகிறதா, கொடி தெரிகிறதா என்றா கேட்கிறேன். ஒரு மங்கையின் முகம் தெரியவில்லையா உனக்கு?”

செந்தாமரை முகத்தாள் என்பார்களே, அதைச் சொல்கிறீர்களா?


நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது. செந்தாமரை முகத்தழகி என்று அழைத்து மகிழ்ந்திட வாய்ப்பற்ற வறியவன்நீ. கிடக்கட்டும்! செந்தாமரையைக் கண்டதும், எழில் மங்கையின் முகம் தெரியும், தெரிகிறது. உற்றுப்பார்! வேறு என்ன தெரிகிறது?

எங்கே? எதைக் கேட்கிறீர்கள். ஓ அந்தப் பூவையா? அது பகன்றை. அதுவும்தான் தெரிகிறது.

தெரியாமலென்ன! கண் இருக்கிறதே! கருத்துக் கனியவில்லை உனக்கு. கேள் - தாமரையைக் காணும்போது அழகு முகம் தெரிகிறது. அதுபோல, பகன்றைப் பூவைப் பார்க்கும்போது என்ன தெரிகிறது?

பகன்றைப்பூ, தெரிகிறது?

பரவாயில்லை! அதாவது தெரிகிறதே! மதியிலி! மதியிலி! உற்றுப்பார்! பகன்றை, தாமரையை நெருங்கி, தாழ்ந்து இருக்கிறது. வெண்ணிறக் கோப்பைப்போலத் தெரிகிறதா? பார்!
ஆமாம்! வெள்ளை நிறம்! கோப்பைப் போலத்தான் தெரிகிறது.

தாமரை மலிரினை!

அழகிய மங்கையின் முகத்தருகே, வெண்ணிறக் கோப்பை! நான் காணும் காட்சி என்ன என்கிறாய்! வெண்ணிறக் கோப்பையில் தேன் பெய்திருக்கிறது. தாமரையாள், பருகப் போகிறாள். கோப்பை, நெருங்கித் தாழ்ந்து இருக்கிறது.

ஆமாம்.. ஒரு இள மங்கை ஏந்திடும் வெண்ணிறக் குவளை போலத்தான் காட்சி இருக்கிறது.

புலவர் இதுபோலவா ஒவ்வொருவரிடமும் கூறிட இயலும். கண்ட காட்சிகள் கிளறிய கருத்தினைக் கவிதை வடிவாக்கித் தருகிறார்.

அகன்துறை அணிபெறப்
புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூவுற நீண்ட
பாசடைத் தாமரை
கண்பொர ஒளிவிட்ட
வெள்ளிய வள்ளத்தால்
தண்கமழ் நறுந்தேறல்
உண்பவள் முகம்போல!
வண்பிணி தளைவிடும்.

அந்தத் தமிழகம் இன்று இல்லை! அந்தத் தாமரையும் பகன்றையும் என்றோ போய்விட்டன. புலவரும் புகழுடன் பெற்றார். ஆனால் கவிதை இரக்கிறது, தமிழ் உள்ள மட்டும் நமக்கு அந்தக் காட்சியைக் காட்டிட!

செந்நெல் வயலினிலே உள்ள செழுமை எத்தகையது எனில், அங்கு, தாமரையே பூத்திருக்கிறது!
கதிர் முற்றிவிட்டது. காற்றால், மணிகள் உதிர்க்கப்படுகின்றன! கீழேயே செந்நெல் மணிகள் உதிர்கின்றன? சே! செந்நெல் மணி என்ன அவ்வளவு சாமான்யமானதா? தாமரை மலரிலே விழுகிறது!

நினைவிலே கொண்டுவந்தால் நேர்த்தி விளங்கும்.

தாமரை மலர், விரிந்து இருக்கிறது! அதன் இதழில், செந்நெல் மணி வீழ்ந்திருக்கிறது! செந்நெல் மணியின் நிறம்? பொன் நிறம்! என்ன தெரிகிறது கண்ணுக்கு? தாமரை அதன்மீத செந்நெல்! அவ்வளவுதானே? அவ்வளவு தான் நமக்குத் தெரியும். புலவர் காண்பது என்ன தெரியுமோ?

ஓர் ஆடலழகி! அவள் நெற்றியிலே வயந்தகம் எனும் அணி பூட்டப்பட்டிருக்கிறது.

கொடி அசைகிறது, தாமரை ஆடுகிறது! ஆடலழகியைக் காண்கிறார்.

செந்நெல் சிதறி வீழ்ந்திருக்கிறது. மலரில்! பொன்நிறம்! ஆடலழகியின் நுதலில் வயந்தகம் சூட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது, புலவருக்கு.

புகழ் அரங்கின்மேல்
ஆடுவாள் அணு நுதல்
வகைபெறச் செருகிய
வயந்தகம்போல் தோன்றும்

மலர்களைக் காண்பதும், களிப்படைவதுமேகூட, இன்று, நாம் மேற்கொள்ள முடியாத, பழக்கமற்றுப் போன காரியமாகிவிட்டது. மலர்வகை கண்டு, அழகினை நுகர்வோர் மிகச்சிலரே! அதுகுறித்துப் பாடிடுவோர் அதிகம் இலர்! பாடிடினும், அந்நாள் வாழ்ந்த செந்நாப் புலவர்போல, கருத்தமைந்த உவமை நயத்துடன், ஆக்காட்சிகளை என்றென்றும் நாம் காணத்தக்க விதத்தில் கவிதை வடிவம் தரத்தக்கவர் எவருமிலர்.

நெய்தல் மிலர் காண்கிறார் புலவர், நெய்தல், நீல நிறம்!

புன்னை காற்றால் உதிர்ந்து விழுகிறது! வேறெங்கும் விழவில்லை, நீலநிறமுள்ள நெய்தல் மலரில் விழுகிறது.

புன்னை பொன்நிறம்! நெய்தல், நீலநிறம்! ஆழகாகத் தானே இருக்கும்! ஆம்! புலவர் அருமையையும் அதிலே காண்கிறார் இருமலர்கள்! வெவ்வேறு வண்ணம் என்ற அழகு மட்டுமல்ல அவர் காட்டுவது.

நீல மணியினால் இழைக்கப்பட்ட பேழையில், பொன் வைத்திருப்பபோலத் தெரிகிறது புலவருக்கு. கவிதை பிறக்கிறது.

புன்னை நுண்தாது உறைதரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்

கவிதையைப் படிக்கும்போது அன்று புலவர் கண்ட அருங்காட்சியே தெரிவது போலல்லவா இருக்கிறது! அத்துணை அருமைமிகு படப்பிடிப்பு, அந்நாள் புலவர்தம் பாக்கள்.
முகண்டை எனும் பெயருடைப்பூ, வெண்ணிறம் கொண்டது. இரவுக் காலத்திலேதான் முகண்டை பூத்திடும் மலையோரத்தில் காணப்படுவது.

நட்ட நடுநிசியில் வானில் தோன்றும் நட்சத்திரங்கள் என்றால் புலவர், அந்தப் பூக்களை!

தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவையினை முகண்டை
வெண் பூக்குழைய
வானெனப் பூத்த பாணாள் கங்குல்
வானத்தில் தோன்றி மறைகிறதல்லவா வானவில் அதனைப் புலவர் வாவியிலே காண்கிறார்! ஆனால் வானவில் மேலே இல்லை! வாவியில் மட்டும் இருக்கிறது. வானவில் ஆரக்குச் சிகப்பு வண்ணம், நீலம், முதலிய பல வண்ணங்கள் கொண்டதல்லவா? அவ்வளவும் தெரிகிறது. குளத்தில் எங்ஙனம்? குளத்திலே, நீலமலர் பூத்திருக்கிறது! குவளை மலரும் இருக்கிறது! வானவில்போல் தோன்றாதா!
அகலிரு வானத்துக் குறைவில் ஏய்ப்ப
ஆரக்கிதழ்க் குவளை யொடு நீலம் நீடி.
இருப்பதைக் காட்டுகிறார்.

கோமகள் கோபம் கொண்டிருந்தால், பணிப்பெண் என்ன செய்வாள்? குழைந்து கும்பிட்டு, கோமகள் எதிரே நிற்பாளல்லவா? பிழை பொறுத்திடுக! பெருமாட்டி! இனி ஓர் முறை புழைபுரியேன்! என்று இறைஞ்சி நிற்பாளல்லவா? அதைக் காண்கிறார், புலவர்! எங்கு? குளத்தில்!
தாமரை காண்கிறார்! பக்கத்தில் ஆம்பல் பூத்திருக்கிறது. காற்று அடிக்கிறது, ஆம்பல் தாமரை இருக்கும் பக்கமாக வளைந்து காணப்படுகிறது. தாமரை கோமகள்! ஆம்பல், பணிப்பெண்! காற்று, கோபம்! வளைந்து காணப்படுவது, இறைஞ்சி நிற்பது! தவறா!

ஆமாம்! அப்படித்தான் இருக்கிறது. தாமரையின் பக்கம் ஆம்பல் வளைந்து நிற்கக் காணும்போது, என்று கூறத் தோன்றுகிறது. எப்போது? வாவியிலே ஆம்பலையும் தாமரையையும் பார்க்கும்போதா? இல்லை! அப்போது எழவில்லையே மனதிலே அந்த ஆழகோவியம், சுவைசேர் உவமை! கவிதையைப் படிக்கும் போதல்லவா, காட்சி பளிச்செனத் தெரிகிறது.

கடர்தொடிக் கோமகள்
சினந்தென அதனெதிர்
மடத்தகை இயம் கை
தொழுதா அங்கு
உறுகால் ஒன்ற ஓல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும்.

மாதரின் முகத்தினை, செந்தாமரைக்கு ஒப்பிட்டுக் காட்டுதல் மரபு. அதனைப் புலவர்கள் நிரம்பச் ùச்யதிருக்கிறார்கள். ஆனால், தமிழ்ப்புலவர்கள், மாதரின் மனநிலைக்கு ஏற்ப முகத்தில் ஒளியும் வண்ணமும் மாறித் தோற்றமளிக்கும் என்பதனை மறவாமல், அந்நிலையின் போது, முகம் உள்ள விதத்தைக் காட்டிட அதற்கு ஏற்ற மலரையே உவமையாக்கிப் பாடியுள்ளனர்.

தலைவனைப் பிரிந்ததால் தலைவியின் முகம் வெளுத்தல்லவா காணப்படும். வெளுத்திருக்மேயொழிய, அழகு அறவே ஆற்றுப் போயிருக்கும் என்று எண்ணக்கூடாது. மகிழ்ச்சியுடன் உள்ளபோது முகம் செந்தாமரையாக இருக்கும், பிரிவாற்றாமையினால் மகம் வெளுத்திருப்பினும், அந்நிலûயிலும், முகம் வேறோர் மலர் போல் இருக்கிறதேயன்றி, வனப்பே ஆற்றுப் போன நிலையில் இல்லை.

பிரிவாற்றாமையின்போது மாதரின் முகம் பீர்க்கு மலர் போன்றிருக்குமாம், வெளுத்துப்போய்க் காணப்படும்.

புலவர்கள் பூங்காவினில் உலவி, உவகை கொண்டதுடன், என்றென்றும் படித்து இன்புறத்தக்க, இயற்கையோடு ஓட்டிய உவமை நயமிகு நல்ல கவிதைகளை இயற்றி அளித்துள்ளனர்.
நலிவுற்ற நிலையினிலே நாடுள்ள நாட்களில், மீண்டும் நாடு எழிற்கூடமாதல் வேண்டும் என்ற எண்ணத்தால் ஊந்தப்பட்டு, இக்கித் தீருவோம் என்ற உறுதி பூண்டு பணியாற்றிடும ஆர்வமிக்கோர், புலவர் கண்ட பூங்காவினைக் கவிதைகளின் துணைக்கொண்டு கண்டால், புதியதோர் இன்பமும் எழுச்சியும் பெற்றிடலாம், நாடு மீட்டிடும் நற்காரியத்தில், மேலும் உறுதியுடன் பணியாற்றிட ஆர்வம் பிறந்திடும்.

நிலைகெட்ட இந்நாளிலேயும், இஞ்சியும் மஞ்சளும் இன்னபிறவும் மாவுடன் பலாவும் வாழையும் தெங்கும், கொடியிற் கிடைப்பளவும் கொத்தி ஏடுப்பனவுமான, வல்வேறு பண்டங்களைத் தமிழகம் தரத்தான் செய்கிறது. பொங்கற் புதுநாளன்று நமது இல்லங்களில் காணப்படும் மலரும் கனியும், தமிழகம் இன்றும் தன் மக்களுக்குத் தரும அன்பளிப்புகள்.

புலவர் கண்ட பூங்கா கண்டு வியந்து பாராட்டியது போன்றே, தமிழகம் கண்டபிற நாட்டவர், நமதரும் நாட்டினையே பூங்கா என்று புகன்றனர்.

புலவர்கள் பெண்களைப் பூவை என்று அழைத்திடுவது மரபு.

பூப்போன்ற எழிலும் மணமும் கொண்டவர் மாதர் எனும் கருத்துடன் ஒரு சமயம், மாதர்களைப் பூவையர் என்று கூறினாரே என்றுகூடத் தோன்றுகிறது. கண்களைக் குவளை மலருக்கும், நாசியை, ஏட்பூவுக்கும், காதினை வள்ளைப் பூவுக்கும், வாயினை முருக்கு இதழுக்கும், கை விரல்களைச் செங்காந்தள் பூவுக்கும் ஒப்பிட்டுக் காட்டிடும் புலவர்கள், மொத்தமாகவே மாதர்களை மலருக்கு நிகர் என்று கூறிடும் கருத்துடன், பூவையர் என்று கூறியிருந்திருப்பின், முற்றிலும் பொருத்தமுடைத்தே என்று கூறலாம், தவறில்லை.

புலவர் கண்ட பூங்காவிலே சிறிதளவு உலவிடும் போதே, தமிழின் இனிமையை மட்டுமல்ல, தமிழகம் எத்தணை வளம் கொஞ்சும் நிலையிலே இருந்திருக்கிறது என்பதறிந்து மகிழ்ச்சி பெறுகிறோம்.

பொங்கற் புதுநாளன்று பல்வகைச் சுவைகளைப் பெற்று மகிழ்கின்றனர் - பெரும்பாலான இல்லங்களில், எல்லாச் சுவைகளையும்விட, பழந்தமிழக எழிலும் ஏற்றமும் விளங்கிடத்தக்க இன் கவிதைகளை ஓரளவேனும் படித்து இன்புறுவது, தக்கதோர் சுவை தருவதாக அமையும். தொழிலகத் தொல்லைகள், வயல்வெளி வாட்டங்கள், அங்காடி மூட்டிவிடும் அல்லல்கள், அரசு ஏற்படுத்தி விட்டுள்ள சிக்கல்கள் இல்லங்களிலே புகுந்து குடையத்தான் செய்கின்றன - மறுத்திட இயலவில்லை. எனினும், தொல்லை நிரம்பிய இந்நிலையிலேயும், தொல்புகழ் பெற்று விளங்கிய திருஇடத்தவர் நாம் என்ற உணர்வும், அதன் இன்றைய நிலையினைத் திருத்தி அமைத்திடும் கடமை நம்முடையது என்பதையும், நாம் அறிதல் வேண்டுமன்றோ, நமக்கு கடமை உணர்வு எழ, கவிதை காட்டும் தமிழகம் வழி அமைக்கும். புலவர் கண்ட பூங்காவும், அறவோர் கண்ட அரசும், உழவர் கண்ட வளமும், மக்கள் கண்ட வாழ்வும்ம நமது நினைவிற்குக் கொண்டு வரப்படுவதற்கு ஏற்ற நன்னாள், பொங்கற் புதுநாள்.

தம்பி கடித்துக் கடித்துச் சாறு உண்டு சுவைக்கிறானே, கரும்பு. அதனை, அவனிடம் தராமல், சாறு பெற வேறுமுறையும் தேடாமல் விட்டுவைத்தால், என்னாகும்? சின்னாட்களிலே சாறு கண்டிப்போய்விடும் - வெறு சக்கையாகிவிடும்! பிறகோ, சுவைச்சாறும், அதனினின்றும் சீனி சர்க்கரையும் தரத்தக்க கரும்பு, ஆடுப்புக்கு விறகாகும்.

அதேபோல, புலவர் கண்ட பூங்காவினிலே நுழைந்து வியந்து, புத்துணர்வு பெறுகிறோம் எனினும், அந்த உணர்வினைத் தக்க முறையிலே பயன்படுத்தாது போயின், புலவருடன் பூங்கா சென்று வந்தது பொருள்ளதாகிவிடும் வீண் வேலையாகிப் போகும். புத்துணர்வு பெற்றவர், தமிழகம் பூங்காவாகத் தக்க நிலை பெற வழி ஏ;னன? முறை யாது? என்று சிந்தித்துச் செயலில் ஈடுபடவேண்டும்.

(திராவிடநாடு - 14.1.62)