அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பொறுப்பு நமதே!
இந்திரர்கள், சென்னை நகர் தங்கட்கு என்று கேட்கிறார்கள் கேட்கிறாரகள், என்றால், பாரதியார் கூறியபடி, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து அல்ல! பாணா, தடிகளைச் சுழற்றிக்கொண்டு!!

சென்னை மட்டுமா! செங்கற்பட்டு, வடார்க்காடு, சீரங்கம்... இப்படி அவர்களுடைய மானசீக யாத்திரை மதுரை வரையிலும்கூடச் செல்கிறது. அவர்கள் மீது குற்றமில்லை, தமிழ்நாட்டின் மீதுதான் முழுத் தவறும் - ஏன் இந்த நாடு இவ்வளவு எழிலும் வளமும் பெற்றிருக்க வேண்டும்! வளம் இருக்கவேதான், வந்தவர் போனவர் எல்லாம் இங்கு, வாழ்வு கேட்டுப் பிறகு, ஆதிக்கமும் கேட்கின்றனர் ஆனால், காலம் கொஞ்சம் மாறி இருப்பதை மறந்து இந்திர நண்பர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். மதறாஸ் மனதே! என்று தமிழகம், தன் மக்களை, மலாய்த் தோட்டக் காடுகளிலே மார் உடையப் பாடுபட விட்டுவிட்டு, இங்கு, இரிரும் இந்திரரும் மார்வாடியும் மற்றவரும், மகிழ்ந்து வாழ்ந்திருக்க வைக்கும் காரியத்தை, இனியும் செய்து கொண்டிராது!

எனவே, தடி சுழற்றுவதைச் சற்று நிறுத்திவிட்டு நமது இந்திர நண்பர்கள் தமக்கு நியாயமாகக் கிடக்கúவ்ணடிய தரணியûப் பெற்று, சர்வ சுகத்துடன் வாழ வழி செய்து கொள்வதே முறை. அவர்கள் பெறும், இந்திரம், பொருளாதார, அரசியல், கலைத் துறைகளிலே, அடிமைப்படாமலிருக்க வேண்டுமானால், நிச்சயமாக, வடநாட்டுத் தொடர்பை அறுத்துக்கொண்டு, தமிழகத்துடன், கூட்டு அரசு கொள்ளும், முறையான, திராவிட நாடு திட்டத்தை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், பெற்ற இந்திரத்தை பிர்லாவிடம் ஆடகு வைத்துத்தான், ஆகவேண்டும் இதனைக் கவனித்து, தமிழகத் தலைவர்களுடன் கலந்து பேசúவ்ணடிய நேரத்தில், கூவம் ஆறு எமதே! கொள்ளிடமும் எமதே! என்று கூவுவது, அர்த்தமற்ற காரியம், ஆநாவசியமான, மாச்சரியத்தை வளர்க்கும் செயல். இதைப், பொறுப்புள்ள இந்திரத் தலைவர்கள், செய்வது வம்பை விலை கேட்கும் விபரீதமான காரியமாகும்.

இந்திர மாகாணம், அமைவதைத் திராவிடர் கழகம், வேண்டாம் என்று, அன்றும் சொன்னதில்லை, இன்றும் சொல்லவில்லை. ஆனால், மொழிûயுயம் அதை ஓட்டி அமையும் வாழ்க்கை முறையையும் கவனிக்கும்போது, தமிழகம், வடவேங்கடம் முதல் குமரி வரை, என்பதையோ, வேங்கடம் முதல் வங்கத்தைத் தொடும் இடம் வரை, இந்திரம், என்பதையோ, மொழி வழி அரசு வேண்டுமென்று கூறும் எவரும் மறுக்கமாட்டார்கள். திராவிடர் கழகம், மொழிவாரியாக, இந்திரம், தமிழகம், கேரளம், கர்னாடகம் என்று அமைய வேண்டுமென்பதையும், அங்ஙனம் அமையும் அரசுகள், தமக்குள், ஓர் கூட்டாட்சி முறை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், வடநாட்டுச் சுரண்டலிலிருந்து தப்பி, வளத்துடன் வாழவேண்டும் என்பதையுமே, வலியுறுத்தி வருகிறது.

கூட்டாட்சி தேவை என்கிற காரணத்தால் இந்திரர்கள் ஆடாது கூறும் மதறாஸ் மனதே போன்ற கூச்சலை, கீதமாகக் கொள்ளவோ, சென்னையை இந்திரத்தில் சேர்த்துவிடவோ, திராவிடர் கழகம், ஒருபோதும் அசையாது, கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கேலிக் கதைபோலாகும், சென்னையை இந்திரருக்கும், மற்றும் பல்வேறு இடங்களிலே, பல்வேறு மொழியினருக்கும், கொஞ்சம் கொஞ்சமாகத் தானம் தந்துவிட்டுத் தமிழகம் தேய்ந்து, பிறகு, கூட்டாட்சி நடத்த முனையும் காரியம்.

தமிழகம் எது? இந்திரம் எது? கேரளம் எது? கர்னாடகம் எது? - இதனை உருவாக்க, கூடிக் கலந்து பேசுவது முறை.

பேசும்போது, மாச்சரியமற்ற நிலை வேண்டும். இன்று இதனைச் செய்யக்கூடிய நிலை, திராவிடர் கழகத்துக்கே இருக்கிறது.

தமிழகக் கட்சி என்றால் இந்திரர் அதனைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், இந்திர மகா சபை என்றால் அதனைச் சந்தேகக் கண்கொண்டு, தமிழரசுக் கட்சி பார்ப்பதும், இரு அமைப்புகளையும், சந்கேத்தோடு மலையாளிகள் பார்ப்பதும், மலையாளிகள் மன்றத்தைக் கர்னாடகக் கழகம் முறைப்பதும் இயல்பு. அதிலும், இன்னும் இரண்டொரு இந்திர மாநாடுகள் - (க்ஷசன்னையில் நடந்ததுபோல) நடைபெற்றுவிட்டால், இந்தச் சந்தேகச் சூழ்நிலை அதிகமாகும். எனவே, இந்த கழகங்கள், தத்தமக்கென்றுள்ள, திட்டங்கட்கு அதரவு தேடும் அளவுக்குத்தான், பணியாற்ற முடியுமே தவிர, கூட்டாட்சி உணர்ச்சியுடன், கூடிப் பேசி, இதாரபூர்வமான காரணங்களைக் காட்டி, மொழி வழி மாகாணங்கள் இன்னின்ன முறையிலே அமைவதே நியாயம், என்பதை விளக்கி, ஒருமனப்பட்ட முடிவு ஏற்படச் செய்ய, இவைகளால் முடியாது. அந்தக் கழகங்களின், திறமையைப் பற்றிச் சந்தேகித்து நாம் அவ்விதம் கூறுவதாக எண்ணவேண்டாம். அவைகளின் நிலைமையைப் பற்றிக் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் உரிமை முரசு கொட்டமுடியுமே யொழிய, சமரச மார்க்கம் காணும் கருவியாக முடியாது. இந்தக் காரியத்தைத் திராவிடர் கழகந்தான் மேற்கொள்ளவேண்டும். - திராவிடர் என்ற இனத்தவரே, மொழி வழி நாலு பிரிவினராக உள்ளவர் என்ற கொள்கையும், அதற்கு ஏற்ற திட்டமும் கொண்டிருக்கிற காரணத்தால்.

இந்திரர் பிரச்சனை போலவே, திராவிடர் கழகம் கவனிக்க வேண்டிய வேறோர் பிரச்சனை, திருவிதாங்கூர்த் தமிழர்கள் விஷயம். அது குறித்து ஒரு விளக்கமான கட்டுரை, வெளியிட்டிருக்கிறோம். இக்கட்டுரை, திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் காரியக்கமிட்டி அங்கத்தினர், தோழர் எஸ்.கே. சாமி அவர்கள் தீட்டியது. பலத்த போராட்டத்துக்கும் தயாராக உள்ளனர் திருவாங்கூர்த் தமிழர்கள். அங்கு இதுவரையில், பொறுப்பாட்சி பெறும் பெரிய காரியம் இருந்துவந்தது. அது இன்று முடிவுற்றது. எனவே இனி அங்குத் திருவாங்கூர் தமிழர் பிரச்சனை பலம் பெற்றே தீரும். இதுபற்றி, திராவிடர் கழகம், திருவாங்கூர் சர்க்கார், திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஆகியவற்றுடன் கலந்து பேசவேண்டும்.

இன அரசு, நாம் கோருகிறோம். அந்த இனம், மொழி வழி, பல பிரிவுகளாக உள்ளன. மொழி வழி பிரிந்திருப்பதனால், அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ள வேண்டாம். கூட்டு அரசியல் முறையைக் கொள்வோம் என்ற திட்டம் கொண்டுள்ள, திராவிடர் கழகமே, இந்த நான்கு மொழிப் பிரிவினரையும் சந்திக்கச் செய்யமுடியும். நால்வருக்கும், பொது மன்றமாக, இலோசனைக் கழகமாக அமையும், வாய்ப்பு, திராவிடர் கழகத்துக்கே உண்டு. திராவிடர் கழகம், இக்காரியத்தைச் செய்யாவிட்டால தமிழர் கழகம், இந்திர மகாசபா, கேரள சமாஜம், கர்னாடகக் கழகம் எனும் நான்கும் தனித்தனியே பணியாற்றுவதும், ஒன்றுக்கொன்று பேதத்தையும் துவேஷத்தையும் வளர்த்துக் கொள்வதுமாகி, ஆறுதியில், நமது இலட்சியமான திராவிட நாடு திராவிடருக்கே, என்பதற்கே ஊறு நேரிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடும். இந்தக் கழகங்கள் வேலை செய்யாதிருக்குமென்று எதிர்பார்ப்பதும் தவறு. அதுபோலவே, திராவிடத்திலே எந்தப் பகுதி யாரிடம் இருந்தாலும் என்ன என்று கவலையற்று இருப்பதும் தவறு. மதறாஸ் மனதே! என்று இந்திரர் கூறும்போது, சரி, என்று தமிழர்கள் கூறிவிட முடியாது. நாஞ்சில் நாடு எமக்கே என்று திருவாங்கூர் சமஸ்தானம் பிடிவாதம் செய்வதையும் தமிழர்கள் சகிக்க முடியாது. இந்தப் பிரச்சனைகளை, நாம், ஊதாசீனம் செய்யவும் கூடாது. இவை வளருகின்றன. இவற்றுடன் சேர்ந்து, துவேஷம் வளராதிருக்கவேண்டுமானால் திராவிடர் கழகம், பொதுமன்றம் என்ற நிலையில், இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க முன்வரவேண்டும். இந்திர மகா சபை, கேரள சமாஜம், தமிழரசுக் கழகம், கர்னாடகக்கழகம் எனும் நான்கு அமைப்புகளையும், பிரதிநிதிகளைத் தத்தமது திட்டங்களுடன், வரச் செய்து, திராவிடர் கழகம், அந்தத் திட்டங்கள் பற்றி ஏய்வுரை கூறி, சமரச திட்டம் வகுத்திடவேண்டும். அதற்கு முன்னதாக - அதாவது, கூட்டு மாநாடு நடத்துவதற்கு முன்னதாக - அந்தந்தக் கழகங்கள் வெளியிட்டுள்ள திட்டங்களை, திராவிடர் கழகம், பரிசீலனை செய்யவேண்டும்.

கடலூரில், திராவிட நாடு திராவிடருக்கு என்ற நமது மூலாதாரத் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தியாகிவிட்டது. அதுவே எமது இலட்சியம் என்று, பலதிறப்பட்ட திராவிடர் தலைவர்களாலும், ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

பெரியார் மட்டுமே இந்தப் பிரச்சனையைப் பேசி வருகிறார். திராவிடத்தின் மற்றத் தலைவர்கள் ஒப்பவில்லையே என்று இனிக் கூறுவதற்கில்லை. திராவிடர் கழகம், என்று பெயர் கொள்வதே, சகிக்க முடியாத மாறுதல் என்று எண்ணிய சண்டே அப்சர்வர், ஆசிரியர் முதற்கொண்டு, பலரும், திராவிடநாடு தனிநாடு இவதை ஏற்றுக் கொண்டனர். பெரியாரின் இப்பெரும் வெற்றி கண்டு நாம் மகிழ்கிறோம். இனிச் சந்தேகமற்ற முறையிலே திராவிடநாடு தனிநாடு இவதற்குப் புதிய பலமும் கிடைத்துவிட்டது என்று கூறலாம். எனவே, இதுதான் க்க சமயம், திராவிடர் கழகம், பொது மன்றமாகி இன்று தலைவிரித்தாடும் இந்திரப் பிரச்சனை, திருவாங்கூர் தமிழர் கிளர்ச்சி போன்றவைகளைக் கவனிக்க ஆங்காங்கு நடைபெறும், இந்த உரிமைக் கிளர்ச்சிகளை நாம் கவனித்து, நமது கருத்துரையைத் தந்து, தகறாறுகளைத் தீர்த்தால்தான். ஆங்காங்குள்ளவர்கள், நம் அனைவருக்கும் பொது நலன் தரக்கூடிய திராவிடநாடு திராவிடருக்கே என்ற பிரச்சனையைக் கவனிக்கவும், வரவேற்கவும் செய்வார்கள். திராவிடர் கழகக்தின் அதிகாரபூர்வமான நோக்கமும் வேலைத் திட்டமும், இது சம்பந்தமாக விரைவில் வெளிவரும் என்று நம்புகிறோம்.

மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டாலும், நால்வரும் ஒரு கூட்டு அமைப்பிலே வாழ்வதுதான் சாலச்சிறந்தது. அப்போதுதான், வடநாட்டு இக்கிரமிப்பைப் புறமுதுகிடச் செய்ய முடியும் என்று கடலூர் மாநாட்டிலே, திரு.வி.க. கூறினார். அறிவும் அன்பும் கலந்து இந்த உரையை நாம் வரவேற்கிறோம். திராவிட இனத்தவராக இருப்பினும், மொழி காரணமாக வேறு பிரிவினராகியவர்களுக்கெல்லாம், இதனை எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் கருத்தையே திராவிடர் கழகம் துவக்க நாள் முதல் கொண்டு வந்துள்ளது. ஆனால், மொழிவாரி மாகாணங்களின் அமைப்புக்கான வேலைகள் துரிதமாக நடைபெறுகின்ற நேரத்திலே, மொழிவாரி மாகாணங்கள் அமைதல் வேண்டும். அமைந்த பிறகும், வடநாட்டுக்கு அவை அடிமையாகாமல், தமக்குள் ஓர் கூட்டு அமைப்பு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற கோட்பாடு கொண்ட நாம், மொழிவாரி மாகாண அமைப்புக்கும் முறை கூறுவதோடு, அந்த அமைப்பின்போது, புகுத்தப்படக்கூடிய ஆநீதிகளையும் தடுத்தாக வேண்டும். மதறாஸ் மனதே! என்று சீறி இந்திரர், இத்தகைய ஆநீதியைப புகுத்துவதைத் தடுக்கும் பொறுப்புபம், தமிழ் வட்டாரங்களைத் தமிழகத்துடன் சேர்த்துவிடும் கடமையை, சுயநலம் காரணமாகச் ùச்யய மறுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் பிடிவாதம் நிறைந்த ஆநீதியைத் தடுக்கும் பொறுப்பும், திராவிடர் கழகத்துக்கு இருக்கிறது. எனவே, மொழிவாரி மாகாணம் இன்ன முறையில் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அமையும் அமைப்புகள், சேர திராவிடக் கூட்டாட்சி எனும் அமைப்பை இன்னவிதமாக அமைத்தல் வேண்டும். என்பதை, மொழிவழி பிரிந்திருப்பினும் இனவழியில் உன்றாக உள்ள திராவிடர்களுக்குப் பொது மன்றமாக உள்ள திராவிடர் கழகம், திட்டவட்டமாகக் கூறியாக வேண்டிய நாள் வந்துவிட்டது. இதற்கு இவன செய்ய, திராவிடர் கழகம் தவறாது.

(திராவிடநாடு 21-9-47)