அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிரச்சாரம் வீண்போகவில்லை
கயவர்கள் என்றும், மதத்தை மங்க வைக்கும் மாபாதகம் செய்யப்படுகிறதென்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் பார்ப்பனரைப் பகைத்து, அவர்களை நம்முடைய எதிரிகாளக் கொள்வதற்கே இந்தப் பிரசாரம் நடைபெறுகிறதென்றும், இன்னும் பல குற்றச்சாட்டுகள் நம்மீது சுமத்தப்பட்டன இவை மட்டுமல்ல, இவர்கள் நாத்திகக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் - விதண்டாவாதிகள் - வீண் வம்புக்கு நிற்பவர்கள் என்றெல்லாம் பழிக்கப்பட்டோம். இன்னும் இந்தப் பழி சுமத்து படலம் முடிவுபெறவில்லை, நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்குக் காரணம், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள இருக்க வேண்டிய இன்றியமையாத தொடர்பை, இன்றைய நமது மதக்கோட்பாடுகளும், கடவுள் தன்மையையும் சிதைத்துவிட்டதேயாகும். கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் நமக்குப் போதித்தவர்கள், ண்மையை மறைப்பதன் வாயிலாகத் தங்களுடைய போதனைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான நலம் பயக்கக் கூடியனவாக இருத்தல் வேண்டுமென்ற பரந்த நோக்கத்தைக் கொள்ள வில்லை. மதம் என்றால் - கடவுள் என்றால், மக்கள் மனதில் ஒரு தவிர்க்க முடியாத அச்ச உணர்ச்சி ஏற்பட்டதேயன்றி, அன்புநிலை ஏற்படவில்லை - ஏற்படுத்தவில்ல. இவரக்ளால் எட்டப்பட்ட இந்த அச்சம் நிலைபெறுவதற்கு மக்களிடம் அறியாமையும, இராயாமையும் அவசியம் அமைதல் வேண்டுமென்பதில் மதபோதகர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். மதத்தைப் பற்றியும், உடவுளைப் பற்றியும் மக்கள் கருத்து வேறுபாடு கொள்வதோ, அவைபற்றி ஆராய்வதோ கூடாது - பாவம் என்று ஆண்டவன் பேரால் இணையிட்டு, ஆகமங்கûயும் பிறமத நூல்களையும் எழுதிவைத்துவிட்டனர். ஆதோடு “கடவுளின் பிரதிநிதிகள் இவர்கள்தான் இவர்கள் சொற்படி நடப்பதே முறை” என்பதாகவும் கூறி அதற்கென ஒரு கூட்டத்தாரைத் தனியாக ஒதுக்கி - உயர்ந்த நிலைக்கு வைத்தும்விட்டனர். அவர்களுக்கும் நமக்கும் இயல்பாக இருக்கவேண்டிய அண்ணன் தம்பி போன்ற முறைமாறி - அன்புடன் ஆளவளாவும் பண்பு மாறி - அச்சத்தின் அடிப்படையில் ஏழுப்பப்பட்ட அடிமை உணர்ச்சி மேலிட்டு - அவர்களைக் கண்டவுடனே மேலாடையை இடுப்பில் சேர்த்துக் கைகட்டி, வாய்பொத்தி, அவர்கள ஸ்வாமி என்றழைக்கவும், அவர்கள் தங்கள வலதுகையில் நெருப்பு இருப்பதாகவும், இடதுகையைச் சிறிது தூக்கி நம்மை இசீர்வதிக்கவும், நாம் நம்மை அடியேன் தாசன் என்ற சொற்களால் இறக்கி அவர்களுடைய பாதார விந்தங்களில் விழுந்து வணங்கவுமான ஏற்பாட்டையும் நம்முடைய உழைப்பின் பெரும்பகுதி அவர்களுடைய வாழ்க்கையை வளப்படுத்துவதற்கே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கோட்பாட்டையும் கடவுளின் பேரால் செய்து வைத்து விட்டனர். கடவுளின் பெயர்கூறி எழுதப்பட்ட மத நூல்கள் எதிலாவது நாம் மேலே எடுத்துக் காட்டிய உண்மைகள் இல்லையென்று எவராவது கூற முடியுமா?

இந்த நிலையில், இன்னொரு கூட்டம், தாங்களும் கடவுளின் பிரதிநிதிகள் என்றும் மதப் பாதுகாப்பாளர்கள் என்றும் கூறிக்கொண்டு கிளம்பிற்று. இந்தக் கூட்டம் நமது சேர-சோழ-பாண்டியர்களால் உண்டாக்கப்பட்டதாகும். என்றாலும், இவர்கள், தாங்கள் சேர-சோழ-பாண்டியர்ளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவதோடு, தாங்கள் நேரே திருக்கயிலாத்தில் இருந்து வந்ததாகவும், தங்களுடைய பரம்பரை திருக்கயிலாய பரம்பரையொழிய, மக்கட் பரம்பரையைச் சார்ந்ததல்லவென்றும் கூறிக்கொள்வதில் ஒரு தனி மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டவர்கள் யார் இவர்கள்?

“கோயில்களில் உள்ள சாமிகளைப் பட்டினிபோட்டுத் தங்கள் சொகுசான வாழ்க்கைக்குக் கோயிற்சொத்துக்களைப் பகிரமங்கமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள பண்டார சந்நிதிகள்.”

என்று டாக்டர் இராசன் அவர்கள் குறிப்பிடும் நமது தமிழ்நாட்டு மடாதிபதிகள்தான் இவர்கள் சந்தேகமா உங்களுக்கு? இதோ இன்னொரு ஊதாரணம்!

“இந்த ஸ்தாபனங்கள், உலக சுகங்களில் ஆசையில்லாத, கல்வியிலும் அறிவிலும் பெரியவர்களாய் இருந்த துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டது இந்தத் துறவிகளின் மேற்பார்வையில் சிலகாலம் காரியங்கள் செவ்வனே நடந்து வந்தன. இப்படியாக நடந்தேறி வந்த இப்பணி, நாளடைவில் இந்த ஸ்தாபனங்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களுக்கு நேர்மாறான விளைவுகளுக்கு இலக்காகிவிட்டது. இந்த ஸ்தாபனங்களின் தர்மகர்த்தாக்கள் மக்களின் நலனைச் சிறிது சிறிதாக மற்நது, தங்கள் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும், இசாபாசங்களுக்கு அடிமைகளாகிப் பொதுப் பணத்தால் தங்கள் சுகம் பேணி, ஒழுக்கங் கெட்ட முறையில் நடக்கத் தொடங்கினார்கள்.

என்று நமது மடாதிபதிகளைப் பற்றி நமது முதலமைச்சர் தோழர் ஓ.பி.இராமசாமி அவரக்ள் 6-2-49ல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசும்போது குறிப்பிட்டார். இந்த மடாதிபதிகள் பொறுப்பில் ஏராளமான பொதுநலச் சொத்துக்கள் உள்ன. இந்தச் சொத்துக்கள் எதற்காக உள்ளனவோ, அதற்கு அவைபயன்படவில்லை யென்றும், பண்டாரச் சந்நிதிகள் தங்களுடைய சொந்தச் சுகபோக வாழ்வுக்கே அந்தச் சொத்துக்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், எனவே, ஆவற்றைச் சர்க்கார் பொறுப்பெடுத்து ஒழுங்காக நடத்தவேண்டுமென்றும், சர்க்கார் இப்போது ஓர் மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றுச் சட்டமாக்கப்பட வேண்டுமென்பது பெரும்பான்மைச் சட்டசபை உறுப்பினர்களுடயவும் பொதுமக்களுடையவும் விருப்பமாகும். ஆனால் இதற்கு நாம் மேலே குறிப்பிட்டுள்ள, கடவுளின் பிரதிநிதிகள் மட்டும் எதிர்ப்பாக இருக்கிறார்கள், இவர்களோடு, இவர்களுடைய தயவாலன்றி வேறு நல்லமுறையில் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாத சிலரும் சேர்ந்து கெண்டு இந்தத் தீர்மானத்தை எதிர்க்கிறார்கள். இதற்காக ஒருசாமியார் - முன்னாள் கே.வி கணபதி ஆய்யர் - அங்கச்சியம்மாள் என்ற பார்ப்பனரால்லாத வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தமது ஆசைநாயகியாக வைத்திருந்தவர் - ஒரு சமயம் அப்பெண் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டதற்காகக் காவிரியாற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்று, கதர்த் தோழர்களால் காப்பாற்றப்பட்டவர் - பின்னர் அப்பெண்ணைத் தாமே துரத்தி விட்டுத் துறவியனாவர் - இந்நாள் ஸ்ரீலஸ்ரீ சத்யானந்த சரஸ்வதி ஸ்வாமிஜி என்று அழைக்கப்படுபவர் - இந்தப் பண்டாரச் சந்நிதிகளின் சரச சல்லாப வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக உண்ணா நோன்பிருக்கிறாராம்.

“நான் பெற்ற வேறு பெறுக
இவ்வைய மெல்லாம்”
என்ற முதுமொழிப்படி இந்தச் சாமியார் அங்கச்சியம்மாளிடம் பெற்ற இன்பத்தைத் தம்முடைய சகாக்களான பண்டாரச் சந்நிதிகளும் சதாசர்வ காலமும் பெற்றுக் கொண்டிருக்கட்டும் என்ற பெங்கருணையோடு உண்ணா நோன்பிருக்கிறார் போலும்! இந்தப் பண்டாரச் சந்நிதிகளின் கோலாகல வாழ்வையும், இவர்கள் நாட்டுக்குச் செய்யும் நயவஞ்சகத்தையும் விளக்கி “பிரபோத சந்திரோதாயப் பாடல்கள்” என்ற தலைப்பில் பல பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் இங்கு வெளியிடுகிறோம்.

“இரவெல்லாம் காமக் கணிகையர் முயக்கில்
இன்பமுற்று இயற்பகலெல்லாம்,
குரவராய் அணிவெண்ணீற்று உருத்திராக்கக்
கோலமாச்சாலமாம் குழைவும்
பரவு பாவனையும் தேவதா அர்ச்சனை தாம்பண்ணல்
போல் உருப்பல பரப்பி,
விரவு மாமணி தொட்டு ஆட்டலும் பார்க்கின் மிகச்
கொடிதிவர் வஞ்ச வேடம்”

என்ற பாடல், இன்றைய பண்டாரச் சந்நிதிகளின் - திருக்கயிலாய பரம்பரையினரின் பகல் வேடத்தைப் பளிங்கென எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இப்படிப்பட்டவர்களின் இன்ப வாழ்க்கைக்கு இடையூறு நேரிடாதபடி பாதுகாத்துக் கொள்வதையே முன்னாள் கே.வி. கணபதி ஆய்யர் தம்முடைய கடமையாகக் கொண்டு உண்ணா நோன்பிருக்கிறார். இவருடைய இந்த உண்ணா நோன்பைப்பற்றிக் குறிப்பிடும்போது நமது முதலமைச்சர்.

“இந்த நல்ல காரியத்துக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்... சத்தியத்திற்காகவும், பெரிய இலட்சியங்களுக் காகவும், மக்களின் நன்மைக்காவும் செய்யவேண்டிய காரியங்களை இப்படியா உபயோகிப்பது?”

என்று கேட்கிறார், சத்தியம், இலட்சியம், நன்மை எதுவும் இந்தச் சாமியாரின் உண்ணா நோன்பில் இல்லையென்றும்.

“பொதுப் பணத்தால், தங்கள் சுகம் பேணி, ஒழுக்கங்கெட்ட முறையில் நடப்பதற்கே”

இவ்வுண்ணா நோன்பு பயன்படுமென்றும் முதலமைச்சர் கூறுகிறார். கூறுவதோடு மட்டும் அவர் நிற்கவில்லை.

“ஏதாவது சீர்திருத்தம் செய்ய நினைத்தோமானால், மதத்துக்கும் கடவுளுக்கும் துரோகி என்ற என்னை நிந்திக்க முற்பட்டு விடுகிறார்கள்.”

என்று வேதனைப்படுகிறார். நமது முதலமைச்சர் மத விரோதியா? கடவுள் இல்லை என்னும் நாத்திகரா? இல்லவே இல்லை. அவர் ஒரு பழுத்த வைதிகர், கடவுள் - மதம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டுமென்பதில் அவருக்கிருக்கும் பிடிவாதமும் நம்பிக்கையும் வேறெவருக்கும் இல்லையென்றுகூடச் சொல்லலாம். மந்திரிப் பதவியில் இருந்து கவனிக்க வேண்டிய வேலைகளைப் பார்க்கிலும், மவுன விரதம் இருந்து மதத்தைக் காப்பாற்றுவதையே மிக மிக முக்கயிமான பணியாகக் கொண்டவர் - அப்படிப்பட்டவரே மதத்தின் பேரால் ஊழல்களும், ஒழுக்கக் கேடுகளும் நடைபெறுகின்றனவென்றும், ஆவற்றைச் சீர்திருத்த வேண்டுமென்றும் கூறுகிறார் என்றால், உண்மையாகவே மதவிரோதிகள்ஏ ன்று சிலரால் கருதப்படுபவர்கள் மதத்தைச் சீர்படுத்துவது முடியாத காரியமென்றும், காலநிலைக்கும் இயற்கைப் பண்பாட்டிற்கும் ஏற்ப மதத்தை - மக்களுக்கு அவரக்ளின் நல்வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறையில் மாற்றியமைக்க வேண்டுமென்றும் கூறுவதில் ஏதாவது குற்றம் இருக்கிறதென்று எந்த யோக்கியராவது கூற முடியுமா?

மதத்தைக் கண்டிப்பவர்கள் - கடவுளை நிந்திப்பவர்கள் என்ற பட்டியில் சேர்த்து, நம்மை நாத்திகர்கள் என்று கருதுபவர்கள், நம்முடைய உண்யைôன - மறுக்க முடியாத நோக்கம் எது என்பதையே அறிய முடியாத அறிவுச் சூன்யர்கள் என்று நாம் அவர்கள்பால் பொறாமையோ பகைமையோ கொள்ளாலமல் ந்முடைய பணியை நானிலம் ஏற்றுக் கொள்ளும்வரை தளராது - சலியாது செய்து வருவதென்ற முடிவோடு செய்து வருகிறோம். நம்முடைய பணி பழுதற்றது பகைமை உணர்ச்சியோடு செய்யப்படுவதல்ல - பார்ப்பன துவேஷத்தால் கிளம்பியதல்ல - கடவுளிடம் நம்பிக்கை இல்லாததால் உண்டானதல்ல - விதண்டாவாதமல்ல - வீண் வம்புமல்ல என்ப போன்றவைகளை இப்போது உணரவும், அந்த உணர்ச்சி மேலிட்டால் தங்களுடைய கருத்துக் களைக் கள்ளங் கவடின்றி வெளிப்படையாகவே கூறவும் முன் வந்திருப்பது கண்டு களிக்கிறோம்.

“விக்கிரக வழிபாடும் கோயில்களும் இந்துமதத்தின் அத்யாவசியமான ஆம்சங்களா என்பதுபற்றியே படித்த வகுப்பினரிடையே புது மனப்பான்மை இருந்து வருகிறது.”

என்று தினமணி தனது தலையங்கத்தில் 5-2-49ல் எழுதியிருக்கிறது.

மதத்தின் பேரால் கோயில்களும், அந்தக் கோயில்களில் விக்கிரகங்களை வைத்து வழிபடுவதும், அதற்காகக் கோடிக்கணக்கான பொருளைக் குவித்து வைத்திருப்பதும் முறைதானா என்று கேட்பதையே நாம் மத கண்டனம் செய்வதாகவும், கடவுள் நிந்தனை புரிவதாகவும் பலர் கருதினாரக்ள் - நம்மைக் கண்டித்தார்கள். ஆனால் இப்போது படித்த வகுப்பினரே கோயில்களும் விக்கிரக வழிபாடும் அவசியமா என்று நினைக்கும் அளவுக்கு வந்துவிடடார்கள் என்று தனிமணியே எழுதுகிறதென்றால், நம்முடைய பிரச்சாரம் தவறான வழியில் செய்யப்படுகிறதென்றோ, அல்லது எந்த விதமான பகைமை - பொறாமை - குரோதம் கொண்டோ செய்யப்படுகிறதென்றோ யாராவது படித்தவர்கள் - அறிவாளிகள் கூற முடியுமா? கோயிலும் விக்கிரக வழிபாடும் இல்லாமலேயே மக்கள் வாழமுடியும் என்று நாம் கூறினோம். அப்போதெல்லாம், நாம் நாத்திகர் என்று அழைக்கப்பட்டோம், ஆனால் இப்போது,
“இந்து மதத்தில் பூரண நம்பிக்கையுள்ள ஒருவன், விக்கிரக இராதனையில்லாதவனாக இருக்க முடியும்.”

என்று தினமணி நம்மைவிட ஒருபடி மேலேயே சென்று எழுதியிருக்கிறது. விக்கிரக இராதனைதான் வீணான பொருள் அழிவுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது, ஆகையால், விக்கிர வழிபாடும், அது செய்வதற்கு ஒரு இடமும் (கோயிலும்) அதற்காக ஆளவற்ற பொன்னும் பொருளும் செலவு செய்யப்படாத ஒரு மதம், அது எந்தப் பெயரோடு இருந்தாலும் அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை என்பதே நம்முடைய பிரச்சாரத்தின் சுருக்கமாகும். விளக்கத்திற்காகப் பல ஊதாரணங்களை எடுத்துக் காட்டியிருப்போம். அவை விதண்டா வாதமாகப் பலருக்குத் தோன்றியிருக்கலாம். பாலில்லாத காரணத்தால் தங்கள் பச்சிளங் குழந்தைகளைப் காப்பாற்ற முடியாமல் பரதவிக்கும் மக்களே இலட்சக்கணக்காக உள்ள ஒரு நாட்டில், பரமன் பேரைச் சொல்லிக் கொண்டு, கல்லிலும் செம்பிலும், கட்டையிலும், குடக்கணக்கில் பாலைக் கொட்டிக் கொண்டாடுவது முறையா என்று கேட்டிருப்போம். கட்டத்துணியே இல்லாத நாட்டில், பட்டுப் பீதாம்பரங்களைப் பல ரகங்களில் வைத்துக் கொண்டு வேளைக் கொன்றாகப் பரமனுக்கு அணிந்து மகிழ்வது அறமா என்று கேட்டிருப்போம். அரைவயிற்றுக் கஞ்சிக்கே அலைந்து திரியும் ஒரு நாட்டில் பரமனுக்குச் சர்க்கரைப் பொங்கலும் ஆக்கார அடிசிலும் அவசியமா என்று கேட்டிருப்போம். கொள்ளையடிப்பது போன்று கோடிக்கணக்கான பொருளைக் குவித்துû வத்திருப்பவர்கள், தங்கள் கள்ளச் சிந்தையை மறைக்க வெள்ளித் தேரும் தங்கப் பல்லக்கும் செய்து சாமிக்குத் தருவது முறையா என்று கண்டித்திருப்போம். இவையும் இவை போன்ற இன்னும் பல தேவையும் அவசியமுமற்ற செயல்கள் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் நடைபெறுவது முறையா என்று கேட்டிருப்போம் ஆனால் இன்று,

“இளநீரைக் குழந்தைகளுக்குக் கொடுக் காமல், சாமி தலையில் ஊற்றி வீணாக்குவதா என்று நினைப்பவரும் கோயில் மேற்பார்கையாளராக வந்து விடமுடியும்.”

என்று தினமணி மேலும் எழுதுகிறது. காலம் மாறி வருவதையும், அதற்கேற்பக் கருத்துக்களும் மாறுபடும் என்பதையும் நன்குணர்ந்ததேதான் தினமணி இவ்விதம் எழுதுகிறது. விளையாட்டுக் காகவோ அல்லது வேண்டுமென்று கிண்டல் செய்வதற்காகவோ இவ்விதம் எழுதப்படுகிறது என்று எவரும் நினைத்துவிட முடியாது அடிப்படையிலேயே அசைவு கொடுத்துவிடட தென்பதன் படப்பிடிப்புத்தான் இவை என்பதை நாம் நன்கறிவோம்.

“மந்திரிப் பதவியில் வருபவர்கள்கூட, எல்லாரும் ஸ்ரீ ரெட்டியாரைப் போலவோ, டாக்டர் இராசனைப் போலவோ விக்ரக இராதனையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது நிச்சயமில்லை”

என்று எழுதுவதன் வாயிலாக, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறது தினமணி இனி வரப்போகும் காலம், விக்கிரக வழிபாட்டையோ, அதற்காக வீண் செலவு செய்யப்பபடுவதையோ ஒப்புப் கொள்ளாது - விரும்பாது என்பதைத் தினமணி உணருகிறது. இந்த உணர்ச்சி தினமனிக்கு மட்டும் ஏற்பட்டதென்று நினைத்து விடவேண்டாம், கோயில்கள் - மடங்கள் - அக்ரகாரங்கள் அரண்மனைகள் - இசிரமங்கள் ஆகிய பல்வேறு முகாம்களிலும் இந்த உணர்ச்சி ஏற்பட்டு விட்டதென்பதுதான் இதன் முழு உண்மையாகும். ஒரு பத்திரிகையின் தலையங்கம் என்றால், அது, அந்தப் பத்திரிகையை நடத்தபவரின் சொந்தக் கருத்து மட்டுமல்ல - நாட்டிலுள்ள பலரின் கருத்தே ஒரு பத்திரிகையின் தலையங்கமாக உருவெடுப்பதாகும். எனவேதான், நாட்டின் எதிர்காலம், மதம், கடவுள், விக்ரக வழிபாடு ஆகியவைபற்றி இதுவரை இருந்து வந்ததுபோல் இருக்காதென்றும், இவற்றில் புரட்சிகரமான மாறுதல் ஏற்படப்போவதை இனியாரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தடுத்திட முடியாதென்றும் கூறுகின்றோம். நாம் பலகாலமாகவே கூறிவந்த பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று, இப்போது, நம்முடைய திட்டங்களை எதிர்த்து வந்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டு, அது சட்டமாக்கப்படும் நிலை ஏற்பட்டது கண்டு மகிழ்கிறோம்.

நாம் எதெதை நாட்டுக்குத் தீங்கு பயக்கும் காரியங்கள் என்று கூறிவந்தோமோ, அவையெல்லாம் ஒவ்வொன்றாக இப்போது, சரியானது - நியாயமானது - உடனடியாகக் களையப்படவேண்டிய தீங்குதான் என்ற அளவுக்கு எதிர் மகாமிலிருந்தே அபிப்பிராயங்கள் எழத்தான் போகின்றன என்ற நம்பிக்கை மநக்கிருந்துவந்த போதிலும், இவ்வளவு விரைவாகவும், சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப்பற்றிக் காரகாரமாகவும் பேசப்படும் என்று நாம் எதிர்பார்க்கவே இல்லை. ஏதாவதொன்றில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று நாம் சொன்ன போதெல்லாம், நம்மீது சீறிவிழுந்த அன்பர்கள் பலர், இப்போது, தவறான ஏற்பாடுகளை எல்லாம் திருத்தியமைக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். இந்துமத அறப்பாதுகாப்புச் சொத்துக்கள் எல்லாம் சர்க்கார் நிர்வாகத்தில் வரவேண்டுமென்று கொண்டுவரப் பட்டிருக்கும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய தோழர் ஆர்.வி. சுவாமிநாதன் அவர்கள்,

“இந்தச் சீர்திருத்தத்தை ஆட்சேபிப்பது பதினேழாம் நூற்றாண்டுப் பேச்சாகத்தானிருக்கும்.”

என்று 7-2-49ல் சட்டசபையில் பேசியிருக்கிறார். சீர்திருத்தம் என்ற சொல்லைக் கேட்டாலே, அது, நாட்டுக்கு நாசத்தை உண்டாக்கும் “நயவஞ்சகர்களின்” கூச்சல் என்று கூறியவர்களே இன்று, சீர்திருத்தத்திற்கு எதிராகப் பேசுபவர்களைப் பார்த்து ஐளனம் செய்து “இவர்கள் எல்லாம் பதினேழாம் நூற்றாண்டில் வாழ வேண்டிய அப்பிராணிகள்” என்று கேலி செய்யும் அளவுக்குச் சீர்திருத்தம் செய்யவேண்டியதன் இன்றியமை யாமை இன்று நாட்டில் வேரூன்றி விட்டது. இதுமட்டுமல்ல, மதத்திற்கும் கடவுளுக்கும் தர்மம் செய்பவர்கள் எல்லாம், நாட்டுநிலையை உணராதவர்கள் என்றும், தாங்கள் செய்யும் கொடுமைகளை மறைக்கவே இப்படிப்பட்ட தர்மஙக்ளைச் செய்கிறார்கள் என்றும் நாம் கூறியபோதெல்லாம், நாம் நாத்திகப் பட்டியில் சேர்த்துப் பேசப்பட்டோம். ஆனால், இன்று, இதுபற்றி நீங்கள் கூறியது போதாது, இன்னும் கடுமையாகவும் விளக்கமாகவும் கூற வேண்டுமென்பது பலரால் உணரவும், ஒப்புக் கொள்ளவுமான நிலை ஏற்பட்டு விட்டது.

“தற்காலத்தில் வேறு செயல்களால் மக்களின் மதிப்பைப் பெற முடியாதவர்களும், தாங்கள் செய்யும் மற்றப் பாப காரியங்களை மறைப்பதற்கும் மற்றும் விளம்பரத்திற்காகவும் தர்மம் செய்கிறார்கள்.”

என்று நமது மாகாண முதலமைச்சரே கூறுகிறார். கோயிலுக்கும், மதத்துக்கும், கடவுளுக்கும் தர்மம் செய்பவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்
1. வேறு வகையில் மதிப்பைப் பெற முடியாதவர்கள்!
2. தாங்கள் செய்யும் பாப காரியங்களை மறைப்பவர்கள்
3. விளம்பரப் பிரியர்கள்!

இப்படிப்பட்டவர்கள்தான் இன்று தர்மம் செய்பவர்களாக உள்ளனர் என்று முதலமைச்சர் தைரியமாகவும், வெட்ட வெளிச்சமாகவும் கூறுகிறார் என்றால், அதில் உண்மையில்லையென்றோ, அல்லது அவர் நத்திகராய் விட்டார் ஏன்றோ, அல்லது பெரியார் இராமசாமியின் கொள்கைகளையும் திட்டங்களையும் மறைமுகமாக ஆதரிக்கிறார் ஏன்றோ எவராவது கூறமுடியுமா? நாட்டில் இப்போது மதத்தின் பேரால் நடைபெறும் கொடுமைகளும் அக்ரமங்களும் சகிக்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டன என்பதைத்தானே முதலமைச்சரின் இந்தப் பேச்சு படம் பிடித்துக் காட்டுகிறது.

இனி, எதெது தவறானவையோ அவையெல்லாம் சீர்திருத்தயும் மாற்றியும் அமைக்கப்பட வேண்டுமென்று கூறிவரும் நம்மை வகுப்புவாதிகள் என்று பலர் வாய் கூசாது கூறிவந்தனர். ஆனால், இப்போது உண்மையான வகுப்புவாதிகள் யார் என்பது இந்தத் தீர்மானத்தின் மூலம் வெளிப்பட்டுவிட்டது.

“இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் இப்போது வகுப்பு வாதத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்று நான் எச்சரிக்கை செய்கிறேன்.”

என்று தோழர் சுவாமிநாதன் அவர்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார். சீர்திருத்தம் செய்யவேண்டுமென்று கூறுபவர்களல்ல, சீர்திருத்தம் செய்யப்படுவதை எதிர்ப்பவர்களே உண்மையான வகுப்புவாதிகள் என்பதைத் தோழர் சுவாமிநாதன் அவர்கள் தெளிவாக விளக்கிவிட்டார். இனியாவது, சமுதாயச் சீர்திருத்தப் பணிûயே குறிக்கோளாகக் கொண்டு அதற்காகவே ஆல்லும் பகலும் பாடுபடும் நம்மைப் பார்த்து, “இவர்கள் வகுப்புவாதிகள்” என்று வரட்டுக் கூச்சல்போட்டு, உண்மையான உழைப்புக்கு ஊறு தேடாமல் இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

எனவே, சட்டசபை உறுப்பினர் தோழர் ஏ. சுப்பிரமணியம் அவர்கள் கூறுவதுபோல்“மதத்தின் பேரால் நடக்கும் அட்டூழியங்களை எதிர்க்க வேண்டியது எல்லோருடைய பொறுப்புமாகும்”.

என்பதற்கேற்ப, இத்தீர்மானத்தை எதிர்ப்பவர்களின் சுயலநச் சுரண்டலுக்கு இடமளியாமல் இத்தீர்மானம் சட்டபூர்வமாக நிறைவேற்றப்படுமென்றும், இதனால் மதத்தின் பேரால் மடாதிபதிகளும் பிறரும் செய்து வரும் ஆபாசங்களும், அறிவுக்குப் புறம்பான அட்டூழியங்களும் ஒழிக்கப்படுமென்றும் நம்புகிறோம்.

(திராவிடநாடு - 13.2.49)