அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புராணம் போதைதரும் லேகியம்
மட்டரகத்துக்குத் தயாரிக்கப்பட்டது
அறிவுத் தாகம் தீர்க்க முடியுமா?
பெரிய புராணத்தைப் பற்றிய நமது கட்டுரைகள், தமிழ் நாட்டுச் சைவமெய்யன்பர் கூட்டத் தலைவர்கட்கும், முத்தமிழ் கற்ற வித்தகர்கட்கும், அனுப்பப்பட்டதாம், கோபங்கொண்ட நண்பரொருவரால்! நல்ல காரியம் நடைபெற்றது. இதுபோன்ற கோபம், இலாபமே! அந்தத் “தலைவர்கள்”, நமது கண்டனத்தைப் படித்துவிட்டு, என்ன எண்ணுவார்கள்? கழுவேற்றுகிற காலமாக இல்லையே! கடம்பா! என்று வருந்துவர், வேறென்ன செய்வர். சபிக்கத் தெரிந்தவர்கள் அதிலே உடுபடுவர், ஆனால் நமது வாதத்திலே இன்ன இடம் ஓடிசல் என்று எடுத்துக் காட்டத் துணியார். பல “அன்பர்களுக்கு” நமது கண்டனச் சுருணை அனுப்பப்பட்டது கேட்ட நாம் மேலும் அவர்களுக்கு விருந்தளிக்க, பெரிய புராணத்தைப் பற்றிய விளக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம். இளைஞர் உலகம் இன்று, ஐதெ தேவை என்று எண்ணுகிறதோ, அவைகள் யாவுமோ அல்லது அவைகளிலே பெரும்பகுதியோ, புராண இதிகாசங்களிலே உண்டு என்று கூறுவதன் மூலம், மேலும் சில நாட்களாவது, அவைகளுக்கு உயிர் தரமுடியுமா என்ற முயற்சியில் மும்முரமாக உடுபட்டுள்ளவர்கள், பெரிய புராணத்திலே, சீர்திருத்தக் கருத்துக்கள் உள்ளன என்று பேசுகின்றன. பெரிய புராணத்திலே மட்டுமல்ல, எந்தப் புராணத்திலும், அவரக்ள் சீர்திருத்தக் கருத்து இருப்பதாகவே பேசுகின்றனர். இதனால், அந்தப் புரணாங்களிலே, சீர்திருத்தக் கருத்துக்கள் உள்ளனவா இல்லையா என்று ஆராயப்புகு முன், ஒரு உண்மை தெளிவாகிறது. அதாவது, சீர்திருத்தம் அவசியம் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அதற்கான வேலையில் பலர் உடுபட்டுள்ளதை உணருகிகறார்கள், வேறு விஷயங்களிலே மக்கள் கொண்டுள்ள அக்கரை யைவிடச் சற்று அதிகமாகவே சீர்திருத்தத் துறையிலே அக்கரை செலுத்தவேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், அறிவாளிகள் என்ற பட்டிக்குத் தம் பெயர் பொறிக்கப்பட வேண்டுமானால் தமக்கும் சீர்திருத்தத்திலே ஆர்வம் இருப்பதாகவும், அதற்கான பணியிலே தாம் உடுபட்டிருப்பதாகவும், மற்றவர்கள் சீர்திருத்தத்துக்காக எங்கெங்கோ தேடி அலைகிறார்களே, பாபம், இதோ நாம் கண்டு பிடித்திருக்கிறோமே, இதனைக் கூறவேண்டும் என்ற எண்ணங் கொண்டிருப்பதாகவும், காட்டித் தீரவேண்டிய அளவுக்கு நாட்டு மக்களின் நினைப்பின் நிலைமை இன்று இருப்பதும், தெளிவாகத் தெரிகிறது. இனாகுலேஷன் சரியான முறை என்று சிலரும் பேசிக்கொள்கிறார்கள் என்றால், இரு கருத்துகளிலே, எது தக்கது என்று ஆராய்வதற்கு முன்பே, ஊரிலே பிளேக்-காலரா போன்ற கொடிய வியாதி பரவி இருக்கிறது என்பது ஏற்பட்டு விடுகிறது. கருத்து வேற்றுமைக்கு இடமின்றி. அது போலத்தான் இன்று, புராணங்களிலே சீர்திருத்தக் கருத்துக்கள் உண்டா இல்லையா, என்பதிலே உள்ள கருத்து வேற்றுமைக்கே இடமில்லாத ஒருகருத்து நாட்டிலே இருப்பதைக் காட்டுகிறது, அதாவது சீர்திருத்தம் தேவை என்பது. இது, வரவேற்கப்படவேண்டிய நிலைமை.
****

சீர்திருத்தம் தேவை என்பதை அனைவரும், செக்குமாட்டுச் சுபாவக்காரர் நீங்கலாக மற்ற அனைவரும், ஒப்புக் கொள்கின்றனர், ஒப்புக் கொள்பவர்களில் சிலர், என்ன செய்வதென்று சிந்திக்காமல் இருக்கிறார்கள், சிலர் சிந்திக்கிறார்கள், தெளிவ பிறக்காமல் குழம்புகிறார்கள், சிலர் சிந்தித்து வழிதெரிந்து, வழி, படுகுழிகளும், பாறை, கோரைகளும் நிரம்பிக் கிடப்பதுண்டு பயந்து விடுகின்றனர், சிலர் பாதிப்பாதை போகின்றனர். பிறகு, முன்னேறிய வேகத்தைவிட அதிக வேகமாக மிரண்டோடுகிறார்கள் பின்நோக்கி, மற்றும் சிலரோ, பாதை எப்படி இருப்பினும் சரி, அவ்வழி சென்றே தீருவது என்று துணிந்து செல்கின்றனர், அங்ஙனம் அஞ்சாநெஞ்சுடன் செல்பவர்களைத்தான், தம்பி! நில்! என்று கனிவுடன் அழைத்துச் சீர்திருத்தத்துக் கான செம்மையான கருத்துக்கள் இங்கே உள்ளன, என்று கூறி, செல்லுக்குத் தப்பிய சில ஏடுகளைக் காட்டுகிக்னறனர், செந்தமிழ் கற்ற அன்பர்கள். அவர்கள் காட்டும் ஏடுகளிலே, அவர்கள் கூறுவதுபோலச் சீர்திருத்தக் கருத்துகள் உள்ளனவா என்று ஆராயப் புகுமுன்பு, நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்குக் காரணம், அவர்களும் சீர்திருத்தத்தை வரவேற்கிறார்களே என்பதுதான். அவர்களின் ஆர்வத்தைப் பாராட்டத்தானே வேண்டும்! ஆனால் இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால், தென்னை மரத்தின் மேல் ஏறிய கள்ளனை விரட்டும் போது, காய்திருடச் செல்லவில்லை மாட்டுக்குப் புல் எடுக்க ஏறினேன் என்று சொன்னதாக உள்ள கதை இருக்கிறதே, அந்த ரகமாக இருக்கிறது இவர்களின் வாதமும். தென்னையில் ஏதடா தம்பி! புல்? என்று கேட்டவருக்கு, இல்லை என்று தெரிந்ததாலதான் இறங்கிவிடுகிறேன் என்று சொன்னானாமே கள்ளன், அதுபோலவே, புராணத்திலே போய்ச் சீர்திருத்தக் கருத்தைத் தேடுகிறாயே இருக்குமோ என்று கேட்கத் தொடங்கினால் இல்லை என்பதைக் கண்டு சொல்லத்தான் இத்தனை ஏடுகளையும் ஆராய்ந்தேன் என்று பேசுகிறார்கள்.
* * * *

புராணங்கள், பக்தி மார்க்கத்துக்கான ஏடுகள், இலக்கியச் சுவையுடன் இருப்பினும் சரி, இல்லாது போயினும் சரி. அந்த ஏடுகளைப் படித்து ஐயனின் பெருமையை, ஆம்மையின் அருமையை, அடியவர் சிறப்பை உணரலாம் என்று கூற முடியுமே தவிர, அவைகளின் மூலம், சீர்திருத்தக் கருத்துக்களைப் பெறலாம், என்று ஏணணுவது பயனற்ற நினைப்பு. முதலில், இதனை மெய்யன்பர்கள் தைரியமாக ஒப்புக் கொள்ளவேண்டும். அதை ஒப்புக் கொள்ளாமல், இதுவெறும் புராணமல்ல! இதிலே உள்ள புதைபொருள் ஆமோகம். இதிலே சரிதம், பூகோளம், விஞ்ஞானம், தத்துவம், கணிதம், சீர்திருத்தம் போன்ற இன்னபிற உண்டு என்று பேசுவது, ஆராய்ச்சி மனப்பான்மைக்கு அத்தாட்சி என்று சிலர் எண்ணுகிறார்கள், உண்மை அது அல்ல, பல இருப்பதாகச் சொன்னால் சிலதாவது தேறாதா என்ற சபலம், நீண்ட பட்டியைத் தந்தால், யாராருக்கு எதெதில் பிரியமோ, அதற்காகவென்று, புரணாத்தை நாடுவர் என்ற ஆசை இல்லை என்றால், திட்டமாகத் தெளிவாக, வரையறுத்துக் கொண்டு பேசுவர். மதபோதனையே, எளிதாக்கவும், பாமரர் மனமும் பரவசமடையவும், சிக்கலான தத்துவங்கள் பயன்படாது என்று கண்டவர்கள், எந்த மதத்துறையிலே தங்களுக்கு அக்கரை இருந்ததோ, அதனைப் பரவச் செய்வதற்குக் கண்டுபிடித்து, சாமர்த்தியமான வழி, புராணம், அவர்களின் எண்ணம், அந்தக் காலத்தின் கூறு. எனவே அத்தகைய புராண போதகர்கள், பழிக்கப்பட வேண்டியவர்களல்ல, அவர்கள் அந்தக் காலத்தில், தங்களுக்கு யுக்தமானது என்று எதை நம்பிச் செய்தார்களோ, அதனை, விடாப்படியாக இன்று கட்டி அலைகிறவர்களும், மக்களின் இன்றைய அறிவுத் தாகத்தைத் தீர்க்க, அந்தப் புராணமே போதும், என்று நம்புகிறவர்களும், உலகில் தோன்றியுள்ள எந்தப் புதுக்கருத்தும், புராணத்திலே உண்டு என்று மயக்கமொழி பேசுவோரும் ஆகிய திருக்கூட்டம் இருக்கிறதே, அதுவே, இன்று கண்டனத்துக்கு ஆளாகிறது. “இதோ அஞ்சுகண்ணன் வருகிறான் சாப்பிட்டுவிடு என்று மிரட்டி, அன்பையும் அன்னத்தையும் கலந்து குழந்தைக்கு எட்டும் தாயிடமல்ல கோபம் நமக்கு, குழந்தைப் பருவம் கடந்து குமரனான பிறகு, ஒஞ்சு கண்ணனை நம்பு என்று கூறும் மூதாட்டியிடமும், இவ்வளவு வயதான ஆம்மையார், உண்மை அனுபவமின்றி இதனை உரைத்திடுவரோ என்று எண்ணுங்கால், ஒஞ்சு கண்ணன் என்று ஒருவகையினர், இருக்கவுங்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது என்று பேசுபவர்களிடமும், ஒஞ்சு கண்ணன் என்று நமது ஓளவையார்கள் கூறுங்காலை, ஐயகோ! உதென்ன சிறுமதி என்று சீறும் சீர்திருத்த வாதிகாள் கேண்மின்! ஒஞ்சுகண் என்றால், ஐந்து கண்கள் என்பதல்ல பொருள், அஞ்சு கண் என்பது ஒஞ்சுகண் என்று திரிந்து போயிற்று, அஞ்சுகண் என்றால் என்ன? கண்டவரை அஞ்சச் செய்யும் கண்! இதனையேதான் தாய் மொழிகிறாள் நந்தாய் மொழியினைப் பழிக்கலாமோ? என்று பேசும் சொல்லில் செப்படி வித்தை செய்து காட்டுபவர்களிடமுமே, அறிவு உலகம் கோபிக்கிறது. அவர்களின் போக்கையேதான் கண்டிக்கிறது. புராணத்திலே மதபோதனை, ருசிகரமான கதைகள் மூலம் அமைக்கப் பட்டுள்ளன. அவைகளிலே, வேறு துறைகளுக்குத் தேவையான கருத்துக்களைத் தேடுவது வீண்வேலை - அல்லது பிறரை ஏய்க்கும் வேலை. தென் இந்திய ரயில்வே கயிடைப்புரட்டிப் பார்க்கும் ஒருவன், டில்லிக்கும் அரித்து வாரத்துக்கும் இரயில் புறப்படும் நேரத்தைக்கூற எங்ஙனம் இயலும்! ஒரே பாதையின் கயிடாக இருந்தாலுங்கூடப் பழைய கயிடைப் புரட்டிப் பயனிராதே. ஏன், இந்தச் சாதாரண விஷயத்தைப் புரிந்து கொள்ள, பதிபசுபாசம் என்பன போன்ற பிரமாதமான கொள்கைகளைப் பற்றிய சிக்குகளை ஆறுக்கும் பெருமதியினர், சிரமப்படுகின்றனர். புராணத்தை, மதபோதனை ஏடு என்று ஒப்புக்கொண்டு, அதற்காகத்தான் அவை பயன்படும் என்பதைத் தைரியமாக ஒப்புக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் முதற்கொண்டு மார்வலி வரையிலே உள்ள 124 வியாதிகளைக் கண்டிக்கும் சூரணம், நோய் இல்லாவிட்டாலும் சாப்பிடலாம், தேக இரோக்கியத்தக்கு, அது மட்டுமில்லை, பித்தளைப் பாத்திரங்களை இந்தச் சூரணத்தைக் கொண்டு துலக்கினால், ஆசல் தங்கம்போல் பிரகாசிக்கும், என்று வகையுள்ள, எந்த வைத்தியராவது தமது மருந்துபற்றிக் கூறுவாரா? அனுபவமும் திறமையும் உள்ள வைத்தியர் ஒரே மருந்தையேகூட, இன்னவிதமான தேகமுள்ளவர் தேனிலும் தேனிலும் இன்னி வதமுள்ளவர் பாலிலும் கலந்து சாப்பிட வேண்டும் என்று சொல்வார்களே! பிறவிப்பிணியைப் போக்கும் மருத்துவ முறையாம் மார்க்கம்! அதற்காக ரசாயனம், சர்பத்து, லேகியம், கஷாயம், மாத்திரை, போன்ற பல மருந்துவகைகள் உண்டு. அவைகளிலே, புராணம், போதைதரும் லேகியம், தத்துவம் கஷாயம், காவியச்சுவையுடன் கூடிய கதைகள் சர்பத்து போன்றவை. எம்மிடம் உள்ள இம்மருந்து எப்பிணியும் போக்கும் பிணிபோக்கி மட்டுமல்ல, பீடை நீக்கி அது மட்டுமல்ல பித்தளையைப் பொன்னுமாக்கும் என்று பெருமை பேசுவது, ஆழகா, நியாயமா, யூகமுள்ள செயலாகத்தான் அதுமதிக்கப்படுமா?
***

கற்பனை லோகங்களைச் சித்தரித்த கலிவாணர்கள், கண்டனத்துக்கு உள்ளானதற்குக் காரணம் என்ன? அந்தக் கவிவாணர்களின் சித்திரங்களை, வெறும் கற்பனைகள் என்று ஏற்றுக் கொண்டு பேசாமல், அந்தக் கலிவாணர்களைத் தாங்கிக் கொண்டிருப்பதாகக் கருதும் கலாவாணர்கள், புலவர்கள் குழு, அவை கற்பனை அல்ல, அவைகளிலே வரலாறு மிளிருகிறது. சீர்திருத்தக் கருத்துக்கள் பூத்துக் கிடக்கின்றன, என்று பேசுகிற போக்குதான். சில்லரை அதிகாரிகளின் சீற்றமும் சிறுசெயலும், எங்ஙனம் ஆட்சியையே மக்கள் அலட்சியப்படுத்தவும் கண்டிக்கவும் தூண்டுகிறதோ, அதுபோலவே, இந்தப் புலவர் ஏன்போரின், போக்கே, கலிவாணர்களைக் கண்டனத்துக்குரியவர் களாக்கிவிட்டது! கவிவாணர்களுக்கு முதல்தரமான கேடு செய்பவர்கள், கவிதாமண்டலத்துள் உறைபவர், கவிதாமணிகளைக் காக்கக் கடமைப்பட்டவர், என்று கனத்தகுரல் ஏழுப்பி, நண்பரென நடிப்பவர்தாம். குளத்துநீர் குடிக்க உதவும்! என்பது பொது உண்மை. ஆனால் எல்லாக் குளமுமா? இல்லை! சில குளிக்க மட்டுமே உதவும்! சில மாடு குளிப்பாட்ட மட்டுமில்லையே! குடிக்கும் நீர் உடைய குளமேகூட வெப்பம் அதிகமாகி, வறண்டு கிடக்கும்போது, சேறுமேலிட்ட நிலையில் இருக்குமானால், குடிக்கப் பயன்படாது. குளம்தானே, குடிதண்ணீர் தான் இது, என்று கூறுபவர் யார்? அதுபோலப் புராணங்கள் சேறு நிரம்பிப்போன குட்டைகளாகவும், (மட்ட அறிவுக்கு மட்டுமே பயன்படக்கூடிய விதத்திலே) மாடு புரளும் மடுவாகவும், பலப்பல விதத்திலே உள்ளன. ஊற்று நீர்காண உலகு துடிக்கிறது, இங்கோ, இவர்கள், குழம்பிய குட்டை, தூர்ந்துபோன திருக்குளம், துவர்ப்பு நீர்ப்பள்ளம், இவைகளிலே புகுந்து, நீராடுகிறார்கள், போதாக்குறைக்கு, வாலிபர்களையும் அழைக்கிறார்கள். வாரீர் நீராட! என்று வருவரா? நல்லமுறையில் நடத்தப்படும் நகராட்சியிலே, தீரமான இணையாளர் இருந்தால் அவர், நாற்றமடிக்கும் குட்டைகளைத் தூர்த்துவிடச் செல்வார். இல்லையேல், அங்கே ஏவரேனும் குளித்தோ, அந்நீரைக் குடித்தோ, நோய்கண்டு இறந்துபடுவரே, அதன்பயனாய் ஊரிலேயே கூட நோய்பவரக்கூடுமே, என்று எண்ணி. அதுபோலவே, தன்னாட்சியிலிருந்து அது தகுதியானவர்களிடமும் இருக்குமானால், அறிவுத் தாகத்தைத் தீர்க்க முடியாத இந்த ஆபாசப் பள்ளங்களை மூடி விட்டு, புதிய ஊற்றறுக்களைக் கண்டுபிடிப்பர். நீர் நிலையங்களையும் அமைப்பர், இன்று குடலைப் புரட்டும் நாற்றமமடிக்கும் குளத்துக்குக் காவல்புரிவதைப் பெரியதோர் சேவை என்று கருதுபவர்கள், அந்த நீர்நிலையங்களிலே வேலை பெறலாம், இன்பம் உறலாம். ஏன், அவர்கள் இதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ளக்கூடாது. இன்றளவுவரை, இடிந்த கோட்டைகள், சரிந்த மதில்கள், தூர்ந்துபோன அகழிகள் ஆகியனவற்றைக் காட்டி, ஆங்காங்கே சிலர், இது துரோபதை மஞ்சள் அரைத்த இடம், இது பீமராஜாவின் பாதம் பட்டதால் ஏற்பட்ட பள்ளம், இது ஏகலைவன் கட்டை விரலிலிருந்து ஒழுகிய இரத்தத்தின் கறை என்று காட்டிப் பணம் கேட்டுப் பிழைக்கும், வழி காட்டுவோர் போலிருக்க வேண்டும்? எவ்வளவு அறிவு இந்தச் சத்தற்ற காரியத்திலே பாழாக்கப்படுகிறது, என்பதை எண்ணி வருந்தி இவர்களைக் கண்டிக்கிறோமே தவிர வேறு என்ன!
***

புராணங்களிலே, எதற்காகச் சீர்திருத்தக் கருத்தைப் புகுத்தப் போகிறார்கள். பசுவும் புலியும் ஒரே துறையில் நீர்குடித்தது, பரமசிவன் ரிஷபவாகனரூடராக வந்து சேர்ந்தார், வெட்டப்பட்ட தலைமீண்டும் ஓட்டிக்கொண்டது என்று அற்புதங்களைப் புராணங்களிலே புகுத்தி, இவையாவும் உசனை நேசித்ததன் பலன் என்று முடித்து, இத்தகைய மேலான பலனை, ஆண்டவன் அருளைப்பெற வேண்டுமானால், நீங்களும் பக்தி செய்து கொண்டிருங்கள் என்று உபதேசம் செய்ய இந்தப் புராணங்கள் எழுதப்பட்டன. இதிலே, சீர்திருத்தம் நுழைய என்ன அவசியம் இருக்கமுடியும்? சீர்திருத்தம் என்றால் என்ன? இருப்பதைச் சீராகும்படி திருத்துவது. கெட்டுக்கிடக்கிறது, ஆனால் திருத்தக்கூடிய அளவிலே இருக்கிறது, திருத்திவிட்டால் கேடுபோய், சீராகிவிடும் என்பதுதானே அதன்பொருள். அடியார்கள், எதைக் கெட்டுக்கிடக்கிறது என்றார்கள்? சமூகத்திலே ஜாதிபேதம் தலைவிரித்து இடுகிறது, அதை ஒழித்தாக வேண்டும், ஏழை பணக்காரன் என்ற பேதத்தைப் போக்க வேண்டும், சேரிகளைச் சீர்திருத்த வேண்டும், உழவனின் உழைப்புக்குத் தக்க உதியம் தரவேண்டும், என்ற இன்னோரன்ன பிற சீர்திருத்தங்கள் தேவை என்று செப்பினரா? அதற்காக, அவர்களிடம் அன்பு காட்டிய அரசர்களிடம் வாதாடினாரா? பிரச்சாரம் புரிந்தனரா? இல்லையே! அவர்களுடைய கவலை எல்லாம், பக்தி பரவ வேண்டும், பரமனைத் தொழ வேண்டும், மூர்த்தி ஸ்தலம் தீர்த்த யாத்திரைகளின் பெருமையை மக்கள் அறிதல் வேண்டும் என்பதிலே சென்றதேயொழிய, இன்று நாம், சீர்திருத்தம் என்று எண்ணுவதிலா அவர்கள் அக்கரை காட்டினர்? காட்டியிருக்க முடியுமா?

ஒரு கட்டிடம் கலனாகியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் புதுப்பிக்க ஆரம்பிக்கிறோம். அதற்கான அதிகாரி திட்டம் தீட்டுகிறார். முதலில் அவர் கேட்பார், இந்தக் கட்டிடம், கட்டி எத்தனை வருடங்கள் ஆயிற்று என்று, இந்தக் கட்டிடம் தாதுவருடப் பஞ்சத்திற்கு முன்பு கட்டப் பட்டதென்று நம் தாத்தா கூறியதாகக் கூறுவோம். ஓ! அப்படியா? மிகப்பழைய கட்டிடம், ஆகையால் தான் கலனாகிவிட்டது என்று அவர் கூறுவார். பழைய கட்டிடமாயிருந்தாலும் கடைக்கால் எத்தனை அடி இழம் என்பார் 10, 15 அடி ஏன்போம், மணல் எத்தனை வண்டிகள் கொட்டினார்கள் என்றால் 40, 50 வண்டிகள் ஏன்போமட், பாலாற்று மணலா வேகவதி ஆற்று மணலா என்ற கேள்வியும் பிறக்கும். வேகவதி ஆற்று மணல்தான் ஏன்போம். அது ஊப்பு மண் கலந்த மணல், அதனால்தான் சீக்கிரம் உளுத்துப்போய்விட்டது. அதை அகற்றி உரமான மணலைப் போட வேண்டும் என்பார் அவர். அதுபோலத்தான் சமுதாயம் என்னும் கட்டிடமானது கலனாகிச் சரியும் நிலையிற் கிடக்கிறது. நம் சமுதாயத்தின் அடிப்படை சரியல்ல. அது உவர் மண்ணால் உண்டாக்கப்பட்ட ஆஸ்திவாரத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அது காலப்போக்கில் சரிகிறது. அதுவும் நாம் காற்று வசதிக்காக மாடிமேல் மாடிகட்டிக் கொண்டே செல்லச் செல்லச் சென்னையில் சமீபத்திலே சரிந்த “பிரிதிவி இன்ஷியூரன்ஸ்” கம்பெனிக் கட்டிடம்போல் விழுந்து கொண்டேதான் இருக்கிறது. சரிந்த கட்டிடத்தின் சாரலிலே நின்று கொண்டு நமது புலவர் பெருமக்கள் பெரிய புராணத்தையும் கம்ப இராமாயணத்தையும் ஓதி சரியாமல் செய்யப்பார்க்கிறார்கள். úதிசயத் தோழர்களோ, தக்ளிûயுயம் இராட்டினத்தையும் கொண்டு சரியும் கட்டிடத்தைத் தாங்க துடிக்கின்றனர். வேதாந்திகளோ கீதையும், வேதமும், தத்துவ விசாரணையும் சரிவைச் சமாளிக்கும் என்று நம்புகின்றனர். எல்லோரும் கட்டிடம் சரிவதைக் காண்கின்றார்கள், ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் சரிவதைத் திருத்துவது எப்படி? சரியாமல் அமைப்பது எப்படி என்பதிலேதான் தகறார்.

தோழர்களே! நான் கூறுகிறேன், இந்தச் சமுதாயம் சரிகிறது, சரிந்து கொண்டிருக்கிறது, நெடுநாட்களாகவே சரிந்துகொண்டு வருகிறது. நாம் அப்படிப்பட்ட வீறுகெட்ட சமுதாயத்திலே சின்னாபின்னமாக்கப்பட்ட சமுதாயத்தில், சிதறிக் கிடக்கும் சமுதாயத்ததில் வாழ்கிறோம். சமுதாயம் ஆட்டங்கொடுத்து இடுகிறது, இந்த நிலையிலே நாம் நம்மை உணர்ந்து, நம் தேவையைத் தெரிந்து, நம் சமுதாயத்தை மாற்றி அமைக்க முற்படாவிட்டால். சமுதாயம் இடுவது தெரியாமலேயே நாம் ஆமிழ்த்தப்பட்டு விடுவோம். நான் கூறுவது வேடிக்கைப் பேச்சல்ல. நடக்காத, நடக்கக்கூடாத, நடக்க முடியாத செயலும் அல்ல. அமெரிக்காவிலே வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் சிகப்பு இந்தியர்கள் இன்று எங்கே? அவர்களது வரலாறு எங்கே? நம்நாட்டுப் பழங்குடிகள் என்று கூறப்படும் தோதவர்கள் இன்று எங்கே? எப்படி வாழ்கிறார்கள்? எண்ணிப் பாருங்கள்!

(திராவிடநாடு - 3.2.46)