அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புரட்சியும் மருட்சியும்

மன்னரே, மக்கள் மனம் குமுறிக் கிடக்கின்றன. தீப்பொறி பறக்கும் கண்களுடன் காணப்படுகின்றனர். அவர்களால் எந்தச் சமயத்திலே என்னகேடு நேரிடுமோ என்று அஞ்சவேண்டி இருக்கிறது. ஆத்திரம் மிகுந்த மக்கள் அடக்க முடியாத புயலன்றோ வீண் மிரட்சி கொண்டுவிட்டார் முதியவர், மக்களின் கோபமாம். அது கண்டு இவருககு அச்சமாம், நெஞ்சிலே உரமில்லாத பஞ்சைகள், என்ன செய்வர், என்ன செய்ய முடியும்?

புயலின் முழுவேகமும தோன்று முன்னம், விவேகிகள், வாடையைக் கண்டே தெரிந்து கொள்வர்
நிலை கெட்டவர்கள் அஞ்சி அஞ்சிச் சாவர் எரிமலை மீது அறிதுயில் புரிவது அறிவுடைமையா அரவே ஆணவம் பிடித்த அரசனுக்கு அறிவுள்ள அமைச்சன், கொடுமை தாங்க மாட்டாமல் கொத்துககிடக்கும் மக்கள் மனத்திலே கொந்தளிப்பு இருப்பதைக் கூறி, முறையை மாற்றி நடந்து கொள்ளும்படி கூறும்போது, செவியிலே வீழ்வதில்லை.

ஆடலழகியின் இடை அசைவிலே, இசைவாணனின் நாவசைவிலே, இன்ப வல்லியின் விழி அசைவிலே, இசைந்து கிடப்பான், இறுமாபின் மிகுதியால், ஆபத்துத் தலைவாயிலைக் கடந்துவந்து நிற்கும் வரையிலே, உணர்ந்து கொள்ளமாட்டான். ஊராளும் உரிமை இருக்கும் போது, நமக்கென்ன குறை என்று கருதி வாழும் காவலன். பிறகு எங்கோ ஓர் பேரரவம் கேட்கும், உடனே இவன் மருட்சியடைவான். பிறகோ பட்டத் தரசியின் பக்கலில் படுத்துறங்கவும் அஞ்சுவான். காலில் விஷமுண்டோ. பாவையரின் பக்கம் சேரின் பகைவனின் கத்தி நிற்குமோ, என்று மிரளுவான். வீணையின் நாதமும் அவன் செவிக்கு, வீரரின் ஆயுத இஒலிபோலிருக்கும். கிண்கிணி ஓசையும் கிலியே தரும் நிழலைக்கண்டு அஞ்சுவான் நில்லான் ஓரிடத்தில், வகையுள்ள வார்த்தை ஏதும் சொல்லான், மருட்சி, மருட்சி அவரைச் சித்திரவதை செய்யும். பிரட்சி அச்சமயம் ஓர்புரத்திலிருந்து கொண்டு புன்முறுவல் புரியும் ஆணவம் கடைசி வரையிலே இராது, களம் புக வைக்கும். அங்குச் சென்றதும் ஆணவம் அச்சத்திடம் அவனை ஒப்புவித்துவிடும். பித்தம் அவன் பக்கம் வந்துசேரும்.

கொடுங்கோல் மன்னர் மட்டுமல்லர் கொடுமைக்காரர் எவருக்குமே இந்நிலையேதான் வந்து தீரும. தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த விதி வகுப்புகள், இனங்கள் ஆகியவைகளுக்கும் இது தான் கதி ஆம்! வரலாற்றினை நன்கு அறிந்தோர் இதனை அறிவர்.

கொடுங்கோலும் வெஞ்சிறைக் கோட்டத்துத் திறவுகோலும், தளைகளும் தூக்கு மேடைகளும், புரட்சிப் புயலின் முன்பு வெறும் கூளங்களாயின! இது வரலாறு! நாம் அறிவோம் நாட்டிலே பலர் அறிவர் இதனை. ஆனால் திருவாங்கூரிலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருப்பிரம்மச்சொரூபர், திருமயிலைச் சீலர், பிரம்ம ஞானச்சீடர், பெசண்டு அம்மையின் ஞானப்பால் உண்ட சம்பந்தர், சச்சிவோத்தமர், சர்.சி.பி.இராமசாமி ஐயர், இந்த வரலாறு அறிந்தவர்தானா என்பதை அறிந்துகொள்ள நாம் ஆவலாக உள்ளோம். வரலாறு அறியாத வகையற்றவர் பேசும் வறட்டு வாதத்திலே, அவர் தமது வாயுரையை அமைத்திருப்பது கண்டே, நமக்கு இச்சந்தேகம் தோன்றியிருக்கிறது. அரசோச்சும் அண்ணலுக்கு அமைச்சராக அமர்ந்துள்ள அவருக்கு, அனேகம் தொல்லைகள் உண்டு என்பதை நாமறிந்ததே. வேலை மிகுதியால் வரலாறு காண அவரால் முடியவில்லை என்று கருதியேதான் நாம் சற்று விரிவாகவே கூறினோம். கட்சியின் தம்மைபற்றி.

அவர் தமது இனத்தின் முன்னாள் வேலையை முறையாகச் செய்துகொண்டு, கபாலீச்சுவரருக்குக் கற்பூரார்த்தி காட்டிக்கெண்டிருக்கும் கனபாடியாக இல்லை. கடல்கடந்து, காட்சி பலகண்டு, பதவி பல பெற்றுப் பக்குவமுற்றுப் பாராளும் வேந்தருக்குப் பண்புரைக்கும் பணியிலமர்ந்தன்றோ இருக்கிறார். பிரம்மஸ்ரீ மட்டுமல்லவே சர்.சி.பி. அல்லவா? திதிக்கும் திருமணத்திற்கும் நாள் குறித்துத தந்து காய், கறியும் காசும் பெறும் திருப்பிரமம் அல்லவே, திவாஜீ அல்லவா அவர். அப்படிப்பட்டவருக்கு எப்படி வரலாறு மறந்துவிட்டது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். அவர் தமது சொந்த வரலாற்றினை வேண்டுமானால் மறந்துவிடலாம். மறவாதிருப்பின் மனச்சாந்தி இராது. சென்னை அரசியல் விஷயங்களிலே அவர் சிக்யிபோது சற்றச் சிரமப்பட்டிருக்கிறார்! ஆனால் பல்வேறு நாடுகளின் வரலாறுகளை அவர் மறக்கலாகுமா? பெருந்தவறு! ஆம்! அவ்வளவு பெரியவர் செய்யக் கூடாத தவறு ஆகவேதான், புரட்சி வருமுன் புல்லர்கள் இறுமாந்து கிடப்பர், புரட்சி வந்துவிட்டாலோ மருட்சிக்கொள்வர் புரட்சியோ தன் எதிர்தோன்றும் எந்தத் தடையையும் தகர்த்தெறிந்துவிடும ரஷிய, பிரஞ்சுப் புரட்சிகள் இதனை எவருக்கும் அறிவுறத்தும். இந்த அறிவை வரலாறு தரும். ஆகவே அந்த வரலாற்றினை மட்டும மறக்கலாகாது என்ற யோசனையை நாம் சர்.சி.பி. அவர்கட்குச் சமர்ப்பிக்கிறோம்.

திவான்ஜீக்கு, இந்த விஷயத்திலே தெளிவு இல்லாததால்தான், திருவாங்கூர் விஷயத்தைக் கவனித்துக்கொண்டு இருப்பதோடு நில்லாது டாக்டர் அம்பேத்காரிடம் மோதிக்கொள்ள முனைந்தார். அம்பேத்காரின் அறிவுரை, ஆண்மையுரை, ஆரிய புரியிலே அச்சத்தைத் தந்தது தத்தோமென்றாடித் தகாதன பலகூறி ஆரிய ஏடு எழுதிகள் ஏங்கினர். அவர்களுக்கு அபயம் அளிக்க இவர் ஏன் முன் வரவேண்டும்? வீரத்தைக் காட்டிக் கொள்ளவா? விவேகத்தை விற்பனை செய்யவா? வேதியருகுத் தலைவன் என்ற விருது பெறவா? காரணம் என்ன இவருக்கு இத்தனை கவலை பிறக்க! எக்காரணம் கொண்டோ வந்தார் என்றே கொள்வோம். வந்தவர் என்ன வகையுள்ள பேச்சா சொன்னார்?

வேதத்தை இகழந்தாரே அம்பேத்கார், இந்து மதத்தைப் பழிததாரே! பார்ப்பனியத்தைக் கண்டித்தாரே! தகுமா, முறையா? நீங்கள் கேட்டுக்கொண்டு சம்மா இருக்கலாமா? ஆஹா! உஹு! ஐயோ! என்று அலறினாரேயொழிய, அம்பேத்கார் கூறியவற்றிலே இதுதவறு என்ற அறிவுக்கப் பொருத்தமான வாதங்காட்டினாரா? இல்லை! அதைத்தான் கேட்கிறார் அன்பர் எஸ்.இராமநாதன். இக்கிழமை லிபரேடர் இதழிலே அவர் தீட்டியுள்ள ஒரு அரிய கட்டுரை மூலம்! சர்.சி.பி.யின் பேச்சினைத் தவிடு பொடியாக்குகிறார் முன்னால் அமைச்சர். இறுதியாக ஒரு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். ஐயா! மக்கள் கண்மூடி மௌனியாகிக் கிடந்தனரே அந்தக் காலம் மறை ஏறிப்போச்சு இது புரட்சியை நடத்த ஏற்ற காலம், இந்தச் சமயத்திலே செல்லாது ஆரிய ஜாலம். ஆரியம் அனாவசியமாகக் குறுக்கிட்டு இப்புரட்சியைத் தடுத்தால் இரத்த வெள்ளம் உண்டாகும், அதை நீந்திக்கடந்தேனம் விடுதலை பெறுவது என்ற வீர உறுதியிலே மக்கள் உள்ளனர் என்பது இராமநாதன் அவர்களின் அறிவுறை. அது திராவிட மக்களின் இருதய முத்திரை பொறிக்கப்பட்டு, ஆரியபுரிக்கு இறதி எச்சரிக்கையாக, அனுப்பப்பட வேண்டிய விடுதலைப்போர் துவக்க, அறிவுப்பு ஓலை என்போம்.

அம்பேத்கார் மீது குற்றம் சமத்திய திவானுக்கு, அன்பர் இராமநாதன் அறிவு புகட்ட முன் வந்திருப்பது திராவிடப் பண்பு, அறிவுரைக்கு அடங்க மறுப்பது ஆரியத் தன்மை. அறிவுரை பயனற்ற பிறகு? சொல்வானேன், என்முறை ஏற்றது என்று தீர்மானிக்கும் பொறுப்பை நம்போன்றார் இழந்துவிடுகிறோம், புரட்சியின் கோபம், என்ன. கூறுமோ யார் அறிவர்.

இராமநாதன் அவர்களின் கட்டுரையிலே, பார்ப்பனியம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை இதோ வெளியிடுகிறோம். பார்க்கட்டும் திரான், கூறட்டும் இந்தப் படப்பிடிப்பு தவறா என்பதை, பார்ப்பனியம்என்ற முளையிலே அடிப்படையான தத்துவம், புராமணா மமதேவதா, அதாவது பார்ப்பனர் பூ தேவர்கள் என்பதாகும். பார்ப்பனருக்குப் பிறப்பினாலேயே உயர்வு உண்டாகிவிடுகிறது. பிறர், எவ்வளவு பாண்டித்யம் பெற்றப் பண்புற்ற போதிலும் பார்ப்பனராக முடியாது. பார்ப்பனர்ன உயர் ஜாதி, மற்ற ஜழதிகள் அந்தப் பார்ப்பன குலத்துக்குப் பணிபிடை புரியவே பரமனால் படைக்கப்பட்டவர்கள். இந்தத் தர்மத்தை மறுப்பவர் நீசர், அவர்கள் சேரிகளிலே வறுமையிலே, சேற்றிலே, நொந்துக் கிடக்கவேண்டும்.

பார்ப்பனியம் இதுதானே, இல்லை என்று கூற முன்வரும வீரன் உண்டா? இப்படி ஒரு வகுப்பு பிறவியிலேயே உயர் ஜாதியாகி மற்ற வகுப்பினரை அடக்கி ஒடுக்கி அடிமை கொள்வதுதான் சரியான முறை என்ற கூற முன்வரும் அறிவாளிகள் யார்? இப்படித்தான் நடந்தாக வேண்டும் என்று கூறும் இறுமாப்பினைக் கொண்ட நெஞ்சினர் உள்ளவரையிலே, வெல்லமல்ல உயிர், என்றுகூறி வீறுகொண்டு எழுந்து அறப்போர் தொடுக்கும் ஆண்மையாளர்கள் ஆயிரமாயிரம் உண்டு என்பதைக் காட்டாதவன், மனிதனா, தமிழனா? பறந்துவரும் வல்லூறையும் பாய்ந்து சென்றுதாக்க முனையுமாம் போழி, தன் குஞ்சுகளின் நலனைக் கோரி மானத்தைப் பழிகக, இனத்தை அழிக்க, நீதியைச் சாய்க்க ஒரு சிறுகூட்டம் முனைகின்றதென்றால், நெடுஞ்சுவர்போல், ஓங்கிவளர் மரம்போலவா, இருப்பர் தமிழர, அவர்கள் மனத்திலே உணர்ச்சி கிடையாதா? நரம்புகள் முறுக்கை இழந்தே போயினவா? என்றெல்லாம் கேட்கலாம் என்று யாருக்குதான் தோன்றாது? அதனால் நாம் வீணாக வார்த்தைகளை வீசுவானேன் என்றே வாளா இருக்கிறோம், நாம் அறிவோம், புரட்சிவானை கூசுவதை, மாளிகையிலே உள்ள மயிலையார் அதனை அறியார் அறியாததாலேயே அவர் ஆர்ப்பரித்தருக்கிறார். ஒரு திவானுக்கு இவ்வளவு திமிர்வாதம் இருக்கலாமா என்று நாம் விசாரிக்கவில்லை, இன எழுச்சி மிக்க இக்காலத்திலே இறுமாந்து கிடக்கிறாலே இந்த ஆரியர் என்று கோபங்கொள்ளவுமில்லை. மாறாக மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்! ஆம்! திவானுக்கு நன்றியும் கூறுகிறோம்! நன்றி கூறுவது மட்டுமல்ல, நாளையும் இதுபோலவே பேசுங்கள், மேலும் மேலும் பேசுங்கள், தொடர்ந்து தொடர்ந்து பேசுங்கள், கூடிக் கூடிப்பேசுங்கள், என்று கேட்டுக்கொள்கிறோம்! ஏன் என்று கேட்பீர்! ஒரு சி.பி.யின் ஓர் நாள் உரை, எந்த இராமநாதனை இரவல் பெற்றுவிட்டோம் இனி அவர் நமது பொருள் என்று ஆரியம் எண்ணிக்கொண்டிருந்ததோ, அந்த எண்ணத்திலே மண் விழச்செய்து விட்டதல்லவா? தணல் தீச்சுழலாகி விட்டதல்லவா? இதுபோல இனியும் பல தீச்சுழல்கள் திருநடனம் பிரியக் காண்போம், ஆரியரவர்கள் தமது அகத்திலுள்ளதை மறைவின்றி மன்றேக் கூறிவிட்டால்.

ஒற்றுமை ஒற்றுமை என்று ஓலமிடுவர், தேசியம் பேசுவர், ஆனால் ஒற்றுமை குலைக்கும் பார்ப்பணித்தை ஒரு சொல் கண்டித்துக் கூறார். இத்தகைய தேசியவாதிகள், மக்களை ஏய்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று இராமநாதன் எழுதியிருக்கிறார். கதராடையுடன் உலவிக்கொண்டு, கைராட்டையை நம்பிக்கொண்டுள்ள எவ்வளவு திராவிடர்கள் இல்லங்களில் கதவுகளை இவ்வாசகம் தட்டுகிறது. கதவு திறமினோ! களம் காண்மினோ, இனத்தைக் காக்க எழுமினோ! எவ்வளவு உள்ளங்களிலே, இவ்வாசகம் பதிந்திருக்கும். தேவ்ரகள் துயிலிலே அமைதி இருநதிருக்மா? நாடி முத்துக்களின் நள்ளிரவு நினைவு என்ன விதமாக இருந்திருக்கும்!

உண்மைதானே! அவர் கூறியது முற்றிலும் உண்மைதானே! என்று அவர்களிலே பலர் வாய்விட்டுக் கூறியுமிருப்பரண்றோ, ஆம்! இன்னமும மயங்கிக் கிடக்கும் தமிழரில், நமது அணிவகுப்புக்குக் கொண்டு வந்து சேர்க்க, ஆரிய ஆணவமே நமக்கு உதவியாக இருக்கும். ஆகவேதான் சர்.சி.பி.யை நாம், மேலும் சில பல பேசுங்கள் மேற்குலப் பெருமையைப் பற்றி வானளாவ வாய் வீசுங்கள். தம்மை மறந்து, ஆரியரை அடுத்துவாழும், தமிழரும், உண்மை அறிந்துகொள்ளட்டும் என்று கூறுகிறோம். பசுத்தோல் கீழே வீழ்ந்து விட்டால் தானே தடிகொண்டு தாக்குவர் புலியை. ஆகவேதான் ஆரியரின் ஆணவ உரைகள் நமக்குச் சிலசமயம் மகிழ்ச்சியைத் தருகின்றன.

பகுத்தறிவாளன் படாதபாடு பட்டிருக்கிறான் இந்நாட்டிலே, சமணர்களைச் சித்திரவதை புரிந்தனர், கழுவேற்றினர். சகலரும் சமம் என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய இராமாநுஜரை வைதிகள் பணியவைத்துவிட்டது. நந்தனைத் தீயிலே தள்ளிச் சாகடித்து, ஜாதியிலே கலந்தான் என்று புரட்டுரை புகன்றது என்று இராமநாதன் பகுத்தறிவாளர்களை வைதிகள் வாட்டி வதைத்த விதத்தை உரைத்திருககிறார், இவ்வளவு. இன்னல் உண்டா என்று பயங்ககொண்டு விடுவாரோ தமிழர் என்ற பயம் ஒருதுயுயும் இன்றி, ஏன்! அவர் அறிவார் தன் இனத்தின் இயல்பினை இடுக்கண் வருங்கால் சிரிப்பார். இன்னலைக் கன்னல் என்ற பலவுரிய ஒரு கும்பல் துணிந்தாலும், பகுத்தறிவாளர் பின் வாங்கினதில்லை. அதனாலேயே பாரிலே அறிவு ஆட்சி செய்ய முடிந்தது. அறிவுக்கும் ஆண்மைக்கும் உயரிடம் தரும் இனம். தமிழர் அதனை அறிந்துதான் இவ்வளவு இடர் விளைவுப்பர், என்றாலும், பார்ப்பனியத்தை ஒழித்தாக வேண்டும், என்று தைரியத்துடன் நம்பிக்கையுடன் நண்பர் இராமநாதன் இதனைக் கூறினார். இருக்கும் சச்சரவுகள் போதாதென்றா, இப்பேது ஓர் புதிய சண்டையைக் கிளப்பிவிடுகிறார்?

இந்து-முஸ்லீம் சண்டை இருக்கிறது. இது போதாதா தொல்லை, புதிய தொல்லை வேண்டுமோ?
ஆதித்திராவிடரின் விடுதலைக்காகப் போராடுவதைவிட்டு, இந்த அம்பேத்கார் ஏன் வேறு சண்டையை மூட்டிவிடுகிறார்?

திராவிடநாட்டுப் பிரச்சனையைப் பற்றி வடநாட்டிலிருந்து வந்த ஒருவர் பேசுவானேன்? என்று கேட்கும் மேதாவிகட்கு நண்பர் சரியான பதிலளித்திருக்கிறார். நாட்டிலே உள்ள நானாவித நோய்களுக்கும் மூல நோய் பார்ப்பனியமே என்பதை எடுத்துக காட்டியிருக்கிறார்.

பார்ப்பனியமே, இந்நாட்லுள்ள பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது பார்ப்பனியமே இந்து - முஸ்லீம் பூசலை உண்டாக்கிற்று. தீண்டாமையும் ஜாதிக் கொடுமையும், அதன் விளைவுகளே திராவிட நாட்டுப் பிரிபினைக் கிளர்ச்சிக்குப் பார்ப்பனியமே காரணம் என்று அன்பர் இராமநாதன் அடுக்டுக்காகக் கூறிவிட்டார். டாக்டர் அம்பேத்கார் எந்த ஆதித்திராவிட மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறாரோ, அந்தப் பார்ப்பனியத்துக்கு ஆதாரம் வேதபுராண இதிகாசங்கள், எனவே, ஆதித்திராவிடரின் தளைகளை உடைத்தெறிய வேண்டுமானால், வேத புரணப் புரட்டுகளை உழித்தாக வேண்டிய கடமை டாக்டர் அம்பேத்காருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கூறியதோடு, இங்கு எப்படி ஆரியர் உயர் ஜாதி என்ற இறுமாப்பான கோட்பாட்டினைக் கொண்டுள்ளனரோ, அதுபோலவே ஜெர்மானியர் ஐரோப்பாவிலே பார்ப்பனர்களாக முயற்சிக்கின்றனர். அதனை நேச நாட்டுப் படைகள் முறியடிக்கின்றன. அதுபோலவே இங்குப் பார்ப்பனிய பாசீசத்தை அழித்தொழிக்க அஞ்சாநெஞ்சன் டாட்ர் அம்பேத்கார் முன்வந்த ஆண்மையை நான் பாராட்டுகிறேன், என்றும் இராமநாதன் கூறியுள்ளார். நேர்மையுடன் அவர் கூறியுள்ளவற்றை ஏற்க ஆரியம் மறுக்கும் என்பது உறுதி. அணைத்தால் ஆரியம் அடங்காது! அடிவருடினால் அன்பு காட்டாது!! உன் பிடியிலே இனி இரேன் என்ற உறுதியைத் தெரிவித்து விட்டால் மட்டுமே ஆரியம் அடங்கும், ஆண்மையாளர்காள்! இதனை அறிக! ஒன்று சேருக! வெல்க!!

(திராவிடநாடு - 22.10.44)