அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புரியவில்லை!

திராவிட நாட்டை, மக்கள் எவரும் விரும்புவர்! அதனை விருமபாதார் யாரோ!

அப்பா! சரியாகப் பாடத்தை ஒப்புவித்தேனா, சொல்! நீங்கள் பேசியதை நான் அப்படியே ஒப்புவித்தேனா, இல்லையா? சொல்லப்பா என்றால், சும்மா இருக்கிறீரே! சொல்லமாட்டீரா? நான் இன்னொரு தடவை வாடத்தைச் சொல்லட்டுமா?

திராவவிட நாட்டை, மக்கள் எவரும் விரும்புவர், அதனை விரும்பாதார் யாரோ அப்பா! நீங்கள் சேலத்தில், இதைச் சொன்னபோது, அந்த ஜனங்களுக்கு எவ்வளவு ஆனந்தம், கைவலிக்குமோ வலிக்காதோ தெரியவில்லை, அப்படிக் கைதட்டினார்களே!

சைமன்! போதுமா பார், அறிக்கை! என்றார், விசுவநாதன், எதிரிலே இருந்த நண்பரை நோக்கி, பாடம் ஒப்புவித்துவிட்டு அது சரியாக இருக்கிறதா என் கேட்டு பதில் ஏதும் பெறாமலிருந்த குழந்தையின் முகம் வாட்டமடைந்தது. அப்பா சொன்னதை அப்படியே தவறாமல் கொன்னான். அவர் ஏனோ அதற்காக நம்மைப் பாராட்டாமல், ஏதோ எழுதிக்கொண்டே இருக்கிறார், என்று குழந்தை உள்ளம் குமுறலாயிற்று, அக்குழந்தை அறியுமா, சேலத்திற்குப் பிறகு, சிந்தனையையும் செயலையும் வேறு பாதைக்குச் செலுததத் தந்தை தீர்மானித்தால் என்பதை. சேலத்திலே கூடிய மாநாட்டிலே, திராவிடநாடு, திராவிடநாடு என்றால் நான் என்னமோ ஏதோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன், தமிழகம், ஆந்திரம், கேரளம் என்ற மாவட்டங்கள் தனித்தனி அமைக்கப்படும், இவைகள் ஒரு கூட்டாட்சியிலே இணைக்கப்படும், இதற்கே திராவிடநாடு என்று பொருள் என இப்போது கூறிவிட்டார்கள். எனக்கு இப்போது புரிந்துவிட்டது. திராவிடநாடு அவசியமாகத் தேவை. அதனை மக்கள் அனைவரும் விருமபுவர், விரும்பாதார் யாரோ! என்று அவர் பேசியதையும் அந்தப் பேச்சினைக் கேட்டுப் பேருவகை அடைந்த அப்பெருங்கூட்டம் பெருதத ஆரவாரமிட்டுத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததையும் கண்ட குழந்தையின் உள்ளத்திலே, இந்த உயர்ந்த வாசகம் அழகாகப் பதிந்துவிட்டது, ஆகவேதான், குழந்தை மழலை இன்பத்துடன் கூறிற்று, திராவிடநாட்டை மக்கள் அனைவரும விரும்புவர். அதனை விரும்பாதார் யாரோ! என்று பாவம்! குழந்தைக்குத் தெரியாது. இந்தக் குளிர்மொழி பேசியவர், மீணடும், முருக்கமரமேறிக் கொண்டார் என்பது.

திராவிடநாடு என்பது எனக்கு விளங்கவில்லை! பெரியார் ஏன் தமிழ்நாடு என்று கூறத் தயங்குகிறாரோ தெரியவில்லை. இது என்ன ஆகுமோ என்பது எனக்குத் தெரியவில்லை திராவிடநாடு திராவிடநாடு என்று, தமிழ்நாட்டிலே மட்டுமே பெரியார் பேசிக்கொண்டிருக்கும் காரணம் எனக்குத் தெரியவில்லை! இந்தத் தோரணையிலே இருந்தது அறிக்கை. படித்த நண்பருக்கு, சந்தேகம் பிறந்தது, இப்படி, எனக்கு இது தெரியவில்லை. இது புரியவில்லை, இது விளங்கவில்லை, என்று ஒரு அறிக்கையிலே எழுதினால், எந்தப் பத்திரிகைதான் வெளியிடும்? திட்டமான ஒரு முடிவு, ஒரு தீர்மாத்தைப் பற்றிய விளக்கம், ஒரு அறிவுரை இவைகளைத்தானே அறிக்கைகள் என்று எந்தப் பத்திரிகையும் பெளியிடும். இவர் தயாரித்திருக்கும் அறிக்கையோ, இல்லை அந்தாதியாக இருக்கிறதே, இதனை யார் பெயியிடுவார்கள் என்பது எனக்குத் தெரியவில்லையே, என்று அந்த அறிகிக்யைப் படித்த தோழர் எண்ணினார்.

அறிக்கைகை வெளியிட்டதும், ஒரு பெரிய பரபரப்பு உண்டாகும்

ஆமாம், அதற்கென்ன சந்தேகம்?

பதில் கூறவே முடியாது இதற்கு!

ஆமாம்! பதிலாவது அவர்கள் சொல்வதாவது

சண்டே அப்சர்வரிலே இதுபற்றித் தலையங்கம் வரும்

அதற்கென்ன! இதுபற்றி எழுதாவிட்டால் முடியுமா?

ஆனால் ஒரு விஷயம். நீ இரகசியமாக வைத்துக்கொள். அந்த ஆசாமிக்கு ஆந்திரர் செல்வாக்கிலேதான் பிரியம் தமிழர்களை நம்புவதில்லை.

ஆமாம்! நானும் அப்படிதான் நினைக்கிறேன்
ஆனால், என்ன செய்வது, இந்தச் சமயத்திலே நமக்கு அந்த ஆள் தேவை. உபபோகப் படுத்திக்கொள்ள வேண்டும் ஆமாம்! சமயத்தை நழுவவிடலாமா?

இந்த அறிக்கை வெளிவந்த உடனே, பார், ஒரு துள்ளு துள்ளுவார் மது மற அண்ணல்!

அது யார் மறைந்திருக்கிற அண்ணல்? புரியவில்லையே தூதன்!

ஓ! அவரா? ஆமாம். அவர் நம்மோடு கடைசி வரையில் இருப்பாரா?
இலாபம் யாருக்கு?

அவர் தமக்கு என்று எண்ணுவார், நாம் நமக்கு என்று எண்ணுவோம்

எனக்கு அங்கேதான் கொஞ்சம் புரியவில்லை தெளிவாகத் தெரியவில்லை

இந்த உரையாடலும் முடிந்தது.

எங்கே வீரா! இது நடந்தது? நீ எழுதியிருப்பதைப் பார்த்தால், திருச்சி தோழர் கே.ஏ.பி.விசுவநாதன் விட்ட அறிக்கையை ஒட்டியதாகத் தெரிகிறதே, அவர் வீட்டிலேயா, இந்தச் சம்பவம் நடந்தது? என்று நான் கேட்டேன். அப்படித்தான் நினைத்துக்கொள்ளேன் என்றான் வீரன். அவனுக்கு எப்படி இந்தச் சம்பவம் தெரிந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. வற்வுறத்திக் கேட்டால், அந்த வம்புகார வீரன், இப்படி எல்லாம் அங்கே நடந்திருக்கும் பேச்சு என்று நான் யூகிக்கிறேன் என்று கூறிவிடுவான். அண்மையிலேயே, நாமும்கூடக் கொஞ்சம் யோசித்தால், வீரன் செய்த யூகம் சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்குத்தான் வரக்கூடும். அது கிடக்கட்டும், சேலத்திலே திராவிடநாடு என்ற பிரச்சனை எனக்குப் புரிந்தது என்று கூறிய கி.ஆபெ.இப்போது எனக்கு அந்தப் பிரச்சனை புரியவில்லை என்று அறிக்கைவிடுகிறாரே, இது ஏன் என்று எனக்குப் புரிவில்லை என்று நான் கூறினேன்.

உனக்குமா பிரியவில்லை, பரதா! எனக்குங்கூடத்தான் புரியவில்லை! என்றார், நமது புரட்சிக்கவி பாரதிசான்!!

ஒரு விஷயம் தெரியுமா பரதா! திராவிடநாட்டுப்பண் அமைத்தேனே வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிடநாடு என்று பண். அது என் எழுதினேன் தெரியுமா?

தெரியாதே கேள்! சர்.செல்வம், திராவிடநாட்டுப் பண் ஒன்று என்னைக்கொள்டு அமைத்துத தரச் சொன்னதாக, நமது கே.ஏ.பி.விசுவநாதன் என்னிடம் கூறினார். அதனாலேதான் நான் திராவிடநாட்டுப் பண்பாடினேன்

அப்படியா? அப்படி என்றால், நண்பர் கே.ஏ.பி. திராவிடநாடு என்ற பிரச்சனையை முதலிலேயே ஆதரித்தார் என்றுதான் அர்த்தமாகிறது அதுதானே தம்பி வேடிக்கை! திராவிடநாட்டுப் பிரச்சனையை ஆதரித்து, என்னைத் துண்டித் திராவிடநாட்டுப் பண் அக்கச் செய்தவர். இப்போது, அதனை மறுக்கிறாரே, அமன் காரணம் எனக்குப் புரியவில்லையே
இது எனக்கும் புரட்சிக் கவிக்கும் நடந்த உரையாடல் உண்மையிலே நமக்கெல்லாம் பரியத்தான் இல்லை, நண்பர் கே.ஏ.பி.அவர்களின் மனப்போக்கு! யார்கண்டார்கள் எந்தப் பிற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ?

அவர் விஷயம் இருக்கட்டும் நார்! இதோ, இந்தக் கந்தனுக்குக் காரமான சாப்பாடு பிடிப்பதில்மைல, ஏன் என்று கேளுங்கள் இது ஒரு தோழரின் குறுக்குசால் ஏன் காரம் பிடிக்காது? இது என் கேள்வி. அந்த நண்பனை நோக்கி, காரச் சாப்பாடு, சார், அது, காரச் சாப்பாடு இருக்கிறதே அது, எனக்குப் பிடிக்காது, அப்படித்தான் இது, காரச்சாப்பாடு பிடிக்காது என்பதற்கப் பதிலுரை என்று அந்தத் தோழர் கருதினார்.

அடே! ஏனப்பா உனக்குக் காரச் சாப்பாடு பிடிப்பதில்லை, காரணத்தைச் சொல் என்றால், திருப்பித் திருப்பி காரம் பிடிக்காது, காரம் பிடிக்காது என்று சொல்கிறாயே. காரணத்தைச் சொல், என்று சற்றுக் காரமாகக் கேட்டார் இன்னொரு தோழர். காரப் பேச்சும் தனக்குப் பிடிக்காது என்பதை அந்த நண்பர், கூறினார், பேச்சால் அல்ல. விழியால் மீண்டும் கேட்டேன், அவரை, அவர் பிறகு கூறினார், தனக்கு நாக்கிலே புண் இருப்பதை. எனக்கு விஷயம் விளங்கிற்று. வாயிலே புண் இருப்பதால் அந்தத் தோழருக்குக் காரச் சாப்பாடு பிடிக்கவில்லை என்ற உண்மை பரிதாபப்பட்டேன்.

அது இருக்கட்டும், நல்ல விஷயமாகப் பேசுவோம், ஏன் சில வித்வான்கள், இன்னமும் தமிழ் இசையை எதிர்க்கிறார்கள் என்று வேறு விரச்சனையைத் துவக்கினார் இசைப்பிரியர். பிரமாதமான கேள்வி, இது தெரியவில்லையா உனக்கு? தமிழ் இசையை ஏன் எதிர்க்கிறான் என்றால், அவனுக்குத் தமிழிலே சரியாகப் பாடம் கிடையாது, பாடம் செய்து கொள்வோம் என்ற நம்பிக்கையும் கிடையாது, முடியாது அவனால், ஆகவே கூடாது என்கிறான் என்றார் வேறோர் அன்பர்.

அப்படி என்றால், தமிழ் இசையால் சங்கீதக் கலை கெட்டுவிடு என்ற கூறுவது வெறம் புரட்டு என்று சொல்லுங்கள், என்றார் இசைப்பிரியர் சந்தேகம் என்ன இதிலே! உள்ளே ஒரு எண்ணம், வெளியே பேசுவதோ, வேறு ஒன்று என்று பதிலுரைத்தார் ஒரு தோழர்.

நமது கே.ஏ.பி.விசுவநாதனைப் போல! என்று முடித்தால் இன்னொருவர். சிரிப்பு அதிர்வெடிபோலக் கிளம்பிற்று. அந்தத் தோழர் சேலத்திலே நடைபெற்ற மாநாட்டிலே, நண்பர் கே.ஏ.பி.யின் மனம் புண்ணாகிவிட்டது. புண்ணான மனத்துக்குத் திராவிட நாடு பிரிவினை போன்ற காரம் பிடிக்கவில்லை. அதனை வெளியே கூற முடியாமல் எப்படித் தமிழிலே தன்னால் சரியாகப் பாட முடியாது என்று எண்ணுகிற இசைவாணன், அதை வெளியே சொல்வது வெட்கக்கேடு என்று எண்ணித் தமிழிலே பாடினால் சங்கீதக் கலையே கெட்டுவிடும் என்று வெளிக்குப் பேசுகிறானோ, அது போலத்தான் திருச்சித் தோழரும்,மனத்திலே இருக்கும் புண்ணை மறைத்துக் கொண்டு, தமக்குத் திராவிட நாட்டுப் பிரச்சனை புரியவில்லை என்று சாக்குக் கூறுகிறார். இது தெரியவில்லையா? என்று பேச்சை மீண்டும் ஆரம்பித்தார் ஒரு தோழர்.

உனக்கு ஏனப்பா, நாக்கிலே புண்வந்தது? என்று னான் கேட்டேன், நாவிலே புண்கொண்ட நண்பனை.

தெரியவில்லை! புரியவில்லை என்றான் அந்தத் தோழன்.

(திராவிடநாடு - 01.10.44)