அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புதிய பாதை
ரஞ்சன் கோட்டையை நானும் ஏன் நண்பர்கள் சிலரும் இரண்டு தினங்களுக்கு முன்பு கண்டு களித்தோம் - போர்முறை நுட்பம் உணர்ந்து கட்டப்பட்டுள்ள அந்தக் கோட்டையிலே பல பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கோட்டைக்குக் காவல் பார்க்கும் தோழர் ஒரு குறுகலான இடத்திற்கு உட்புறம் எங்களை அழைத்துச் சென்று, “இதுதான் சுரங்கப் பாதை, இந்த வழியாகச் சென்றால், வேலூர்க் கோட்டைக்குள்ளே செல்லலாம் =- ஆனால் பாதை அடைபட்டுப் போய்விட்டது” என்று கூறினார் - நம்பிக்கையுடன்.

ரஞ்சன் கோட்டை திருச்சிக்கும் சென்னைக்கும் இடையே உள்ள பாதையிலிருந்து இடது பக்கம் இரண்டொரு மைல்களில் உள்ள சிற்றூர்க் கோட்டை - காவலாளி காட்டிய பாதை, வடாற்காடு மாவட்டத்து வேலூர் வரை செல்வதாம்! நாங்கள் மறுக்கவில்லை. அவன் என்ன நீங்கள் அந்தப் பாதை வழியாகச் செல்லுங்கள் என்றா கூறினான்! பாதைதான் ஆடைப்பட்டுப் போனதாகக் கூறிவிட்டானே! எனவே, அப்படி ஒரு பாதை - சுரங்க வழி இருந்ததா இல்லையா என்பது பற்றி சிந்தித்துப் சிரமப்படவில்லை - கோட்டையின் அமைப்பு முறையைக் கண்டு கிளத்து விட்டுத் திரும்பினோம்.

ரஞ்சன் கோட்டையில் மட்டுமல்ல, நமது நாட்டிலே கலனாகி உள்ள எந்தக் கோட்டைக்குச் சென்றாலும், இப்படி ஒரு சுரங்க வழியைக் காட்டுவார்கள் - ஆனால், எல்லாம் அடைபட்டுப் போனவை! எனவேதான் ஆபத்தான வேலையில் யாரும் ஈடுபடவில்லை!

ரஞ்சன் கோட்டையிலிருந்து வேலூர்க் கோட்டைக்குச் செல்ல சுரங்க வழி அமைத்த காரணம், போரிலே, சிக்கலும் நெருக்கடியும் ஏற்பட்டால் எதிரியிடம பிடிபடாமல் தப்பிச் செல்ல ஒரு இரகசிய வழி வேண்டும் என்பதாகும். எதிரிக் கப்பலை ஏய்க்க நீர் மூழ்கி இல்லையா, அதுபோல, எதிரிப்படையிடமிருந்து தப்பித்துக் கொள்ள சுரங்கப் பாதைகளை முன்னாள் மன்னர்கள் கோட்டைகளிலே அமைத்து வைத்தனர். ஆனால், எல்லாக் கோட்டைகளிலும் இந்தப் பழைய பாதை மூடப்பட்டுக் கிடக்கிறது. ஐதோ வேறு வேலை நிரம்ப இருக்கும் காரணத்தால் என்று எண்ணுகிறேன் ராமராஜ்ய சர்க்கார், ஆடைப்பட்டுக் கிடக்கும் அற்புதமான சுரங்க வழிகளை மீண்டும் புதுப்பிக்கும் புண்ய காரியத்திலே ஈடுபட மாலிருக்கிறார்கள்!

பழைய பாதைகள் பல அடைபட்டுப் போயுள்ளன - சுரங்க வழிகள் மட்டுமல்ல, பழைய இராஜ பாட்டைகள் பலவும் கூடத்தான்!

பழைய பாதைகளைப்பற்றிய கதைகளை வேண்டுமானால், ரஞ்சன் கோட்டைக் காவல் தோழர் கூறியதுபோலப் பல இடங்களில் கூறுவார்கள் - ஆனால் யாரும், அந்தப் பழைய பாதைகளில் சென்று தீரவேண்டும் என்று எண்ணுவதில்லை. பழங்கதை பேசிவிட்டு, புதுப்பாதையிலேதான் செல்கிறார்கள் - ஆடைப்பட்டுப்போன பழைய பாதைகளைப் புதுப்பிப்பதைவிடப் புதுப்பாதை காணும் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது - இந்த ஆர்வம் பட்டுபோனால் நாடு, காடாக நெடுங்காலாகமாது.

புதிய பாதை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் - இந்த ஊருக்கும் அந்த ஊருக்கும் இடையே என்ற முறையிலே மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும், புதிய பாதைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.

சிற்சில இடங்களிலும் சமயங்களிலும், பழைய பாதையிலே போகும் பேதமை தலைகாட்டுகிறது எனினும் அதனால் உண்டாகும் சீரழிவு, மக்களைத் தானாக புதுப்பாதையை நாடிடச் செய்கிறது.

பாதை - பழைய பாதை - புதுப்பிக்கப்பட்ட பாதை - புதுப்பாதை! இந்தச் சொற் றொடர்களுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் சம்பவங்கள், ஆயிரமாயிரம்! புதிய பாதை போடப்பட்டுவிட்டது - என்று எளிதாகக் கூறிவிடுகிறோம். ஆனால், அது அமைக்க, அறிவும் துணிவும், ஆற்றலும் எவ்வளவு தேவைப்பட்டது - உழைப்பு எத்தணை செலவிடப்பட்டது - என்பனவற்றை எண்ணிப் பார்ப்பதில்லை பலரும்!

மோட்டாரைச் சற்று மெதுவாகவும் ஓரமாகவும் செலுத்தும்படி பாதை போடுபவர்கள் கூறும்போது கூட, மோட்டாருக்குக் கோபம் குடைகிறதே தவிர, இந்தப் பாதையின் பயனைப் பெறத்தானே போகிறோம் நாம் - என்ற எண்ணம் ஏற்படுவதில்லை சுலபத்தில்.

உள்ள் பாதை உருக்குலைந்து போனால் திருத்தி அமைக்கவே அரும்பாடுபடுகிறார்கள் பாட்டாளி மக்கள் - பார்க்கிறோம் பல்வேறு எண்ணங்கள் மனதிலே கூத்தாடக் கூத்தாட, அந்தக் காட்சியை! பாதையே இல்லாதிருந்த நிலையை மாற்றி, பாதை அமைக்க எவ்வளவு பாடுபட்டிருக்கவேண்டும் - அறிவாற்றல் எவ்வளவு செலவிட்டிருக்க வேண்டும் என்பதை எண்ணிடும்போதே, உள்ளம் உணர்ச்சி வயப்படும்.

பயனைப் பெற்றுக் களித்திடும் பலரும் பாதை அமைக்கப்பாடுபட்டவர்களைப் பற்றி ஒரு கணமும் எண்ணுவதில்லை - ஐதோ அவர்கள் கடன் பாதை அமைப்பது, நமது கடன் அதிலே பயன் காண்பது என்ற ஆநீதிநெறி பாடிக்கொண்டிருந்து விடுகிறார்கள்.

பாதை அமைக்கும் பணி - தொடர் கதை - ஒய்வில்லாதது - முடிவு இல்லாதது.

பாதை வகுப்பது - வகுத்த பாதை பழையதாகி, பயன் குறைகிறது என்றால் அதனைப் புதுப்பித்துப் பயனை அதிகரிக்கச் செய்யலாமா என்று முயற்சிப்பது, அதுவும் போதவில்லை என்றால் புதிய பாதையையே அமைத்துக் கொள்வது - என்று இவ்வண்ணம் பணி பலவாகிக்கொண்டே இருப்பதால், பாதை அமைக்கும் பணி ஒரு முடிவில்லாத தொடர் கதையாகிறது - ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய புதிய அத்யாயம் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் மனித குலத்திலே மாண்புடையோர் மற்றவர்களோ, அடைபட்டுப்போன சுரங்க வழிகளை - பழைய பாதைகளைப் பற்றிய பழங்கதை பேசிக்கொண்டு இருந்து விடுகின்றனர் - இவர்கள் சூதறியாதவர்கள் - ஆனால் சூது மதியினர் சிலரோ, புதிய பாதையின் பயனைப் பெற்றுக் கொண்டே, அடைபட்டுப்போன பயன் தராத, பழைய, சுரங்க வழிகளைப் பற்றிப் போற்றிக் கொண்டும், புதிய பாதையைப் பற்றி அலட்சியமாகவும், கேவலமாகவும் பேசிக்கொண்டும், புதிய பாதைகளை அமைப்பவர்களை இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டும் உள்ளனர்.

இது ஒரு பிரமாதமா! என்ற ஐளனம், இவர்களின் கணைகளிலே ஒன்று.

அதுபோலாகுமா! என்ற அடிமூச்சுக் குரல் இவர்கள் கணைகளிலே இன்னொன்று.

இத்தகையவர்களின் தொகை, குறைந்து கொண்டிருக்கிறது - எனவேதான் வளம் வளருகிறது இந்தச் சிறு தொகையனரின் குறுமதி பேரார்வத்துடன் பாடுபட்டுப் புதிய பாதைகளைப் பல்வேறு துறைகளிலும் அமைத்துக் கொண்டிருக்கும் ஊழியர்களின் உள்ளத்தை உடைத்துவிடவில்லை, எனினும், வாட்டிவதைக்கத்தான் செய்கிறது.
புதிய பாதை அமைப்பது என்றாலே, செலவும் சிரமும் அதிகம் ஆகையால், கூடுமானவரையில் பழைய பாதையையே பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் பொதுவாக மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

உள்ளதைக் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும்.

நம்மாலே ஆகுமா இவ்வளவு பெரிய காரியமாற்ற?

என்ற எண்ணம், எளிதாக ஏற்பட்டுவிடுகிறது - எனவே புதிய பாதைகள் அமைக்கும் ஆர்வம், திறம், ஆர்டும் மங்கி விடுகிறது. நமது நாட்டிலே பொது மக்களில் மிகப்பொரும்பாலானவர்களுக்கு, இந்த மங்கிய தன்மை பலகாலமாக இருந்து வருகிறது. அறிவாற்றல் படைத்தவர்களோ, நெடுங்காலம் வரையில் மார்க்கத் துறையிலே பாதைகள் அமைத்திடுவது மட்டுமே மகத்தான காரியம் என்று எண்ணி அங்ஙனமே பணியாற்றி வந்தனர். ஆகத்துக்கும் பரத்துக்கும் பாதை அமைப்பதிலேயே பெருமுயற்சி செய்தனர். இதிலே பலப்பல பாதைகள் வகுத்த வண்ணம் இருந்தனர்! அமைத்த பாதை பயன்தந்ததா என்று ஆராயவும் நேரமின்றிப் பாதைகளை வகுத்துக் கொண்டிருந்தனர்.

பாதை அமைக்க, இரு இடங்களின் இயல்பும் இடையே உள்ள இடத்தின் இயல்பும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினேனல்லவா, இந்த மார்க்கப் பாதை அமைப்புக்கு, இது தேவையில்லை என்று கூட எண்ணினர். எனவேதான், இந்த ஆகத்துக்கும் இன்னபடி இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள முடியாத பரத்துக்கும் இடையே, பாதை அமைக்கும் காரியம், தக்க பலனை, எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

வேடிக்கை இது மட்டுமல்ல - இருக்கும் ஆகத்தை இல்லை என்று கூறிக்கொண்டு, இன்னது என்று திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடியாத பரத்துக்கு விளக்கம் பல கூறி, ஆகத்திலிருந்து பரத்துக்குச் செல்லும் பாதையை அமைத்தபடி இருந்தனர். பல்வேறு மார்க்கங்கள் - வேதாந்தம் - சித்தாந்தம் - புராண இதிகாசம் - இவ்வளவும், இத்தகைய பாதைகள் என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டன.

போகுமிடத்தின் இயல்பு தெரியாது - உள்ள இடமோ, மன மயக்கம் - இதற்கு இடையே ஒரு பாதையல்ல, பலப்பல! பயணம், விசித்திரமானதாக மட்டுமல்ல, விபரீதம் நிரம்பியதாகவும் இருக்கும்.

எனவேதான் இந்தப் பயணத்தைப் பற்றிய விளக்கம் கூறுவதிலே சிக்கலும் குழப்பமும் ஏற்பட்டு, புத்தியுள்ளவர்கள், கேள்வி கிளப்பாமலிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்.
“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”

என்று கூறி முடித்து விட்டார்கள்.
கண்டதில்லை - எனினும் இந்த இடத்துக்குச் சேர்வதற்கான பாதைகளை அமைக்க, எவ்வளவு அறிவாற்றல் செலவிடப்பட்டிருக்கிறது.

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் - என்ற அளவுடனாவது, நின்றுவிட்டார்களா! இல்லை!
நான் திருக்குற்றாலம் சென்றது கிடையாது - ஆமாம், பலநண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள் இது கேட்டு, குற்றாலம் போகாத என்னை, குற்றாலம் கூடவா போயிருக்கமாட்டான் என்ற எண்ணத்திலே, பலர் கேட்பதுண்டு, குற்றாலத்திலே எத்தனை நாட்கள் தங்கியிருக்கப் போகிறீர்கள்? குற்றாலத்திலே இவரைப் பார்த்தீர்களா - அவருடன் பேசிக்கொண்டிருந்தீர்களா - என்று ஆடுக்கடுக்காக, என்ன செய்வது! ஒருவர் இருவரிடம், ஒருமுறை, இருமுறை, குற்றாலம் போனதில்லை என்று கூறிப்பார்த்தேன் - உண்மையை உதறித் தள்ளத் தொடங்கினார்கள் - புருவத்தை மேலுக்குத் தூக்கியும் புன்னகை செய்தும், “விளையாடதீர் - குற்றாலம் போகவில்லை என்றால் - யார் நம்புவார்கள்” என்று பேசலாயினர். வேறு வழி! குற்றாலக் காட்சிகளை நானும் பேசத் தொடங்கினேன்! நண்பர் அருவியின் வேகத்தையும் அதிலே சென்று நீராடுவதால் வரும் பயனையும் கூறுவார் - நான் ஆமாம் போட்டுவிட்டு, வேறு சில காட்சிகளைப் பற்றிக் கூறுவதுண்டு. இதன் விளைவு என்ன தெரியுமா! நான் குற்றாலம் ஆண்டுதோறும் போய் வருபவன் என்று பலர் நம்புவதுதான்!

குற்றாலக் காட்சியை நான் கூறத் தொடங்கியது போலத் தான் என்று எண்ணுகிறேன், பரலோகத்தைப்பற்றி முன்னாளில் சிலர் விளக்க ஆரம்பித்ததும்.

“நமக்குத் தெரியாது - இவர் அறிவாளி, இவருக்குத் தெரிந்திருக்கும்” என்ற எண்ணத்திலே, பாமரர், அறிவாளர் சிலரைக் கேட்டிக்கக்கூடும். அவர்களும், என்னைப்போலவே, முதலில், நான் சென்றதுமில்லை - சென்றவர் அதுபற்றிக் கூறிடக் கேட்டதுமில்லை - நானறியேன் என்று கூறி இருப்பார். பாமரர் விடுவார்களா! “உங்களுக்கா தெரியாமலிருக்கும் - நிச்சயம் தெரிந்திருக்கும்” என்று அன்புத் தாக்குதல் நடைபெற்றிருக்கும். பிறகு ஆகலோக விளக்கம் - கற்பனையாக - அறிவாளர்கள் தந்துதீரவேண்டிய தொல்லை ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.

குற்றாலம் - உள்ள இடம் - பலர் சென்று வந்த இடம் - எனவே எனக்குத் தகவல்கள் கிடைக்க முடிந்தது - நான் குற்றாலக் காட்சிகளை கூறும்போது, உண்மையாக அங்கு என்னென்ன உள்ளனவோ அவைகளைக் கூற முடிந்தது! மனதுக்குத் தோன்றியதை எல்லாம் கூறினால் சிக்கிக்கொள்ள வேண்டிவருமே! குற்றாலத்திலே குழந்தை அழுதால், காட்டிலே உள்ள பெண் கரடி வந்து பாலூட்டும் என்று கூற முடியுமா - ஆலலது குற்றலத்துக் குயில்கள் மயில்கள்போல இடும், மயில்களோ குயிலெனப் பாடும் என்று கூற முடியுமா! ஆசாமி ஆளக்கிறானப்பா, என்று ஒருவர் இல்லாவிட்டால் மற்றொருவர் கூறிவிடுவாரல்லவா. அந்த அச்சம் எனக்கு. எனவே குற்றாலக் காட்சிகளைக் கூறும்போது, இல்லாததைக் கூறவில்லை.

பரலோகம், குற்றலாம் போல அல்லவே! எனவேதான், என்ன வேண்டுமானாலும் கூற முடிந்தது. முடிவு இன்றுவரை ஏற்படவில்லை, ஆகலோக வர்ணனைக்கு! மனம்போன போக்கு கற்பனைக் காட்சிகள், அவரவர் திறத்துக்குத் தக்கபடி! மறுப்பவர் கிடையாது - ஏனெனில் கண்டவர் கிடையாது!

இம்முறையிலே கற்பனைத் திறம் வளர வளர, பரலோகத்தின் அமைப்பு, இயல்பு, காட்சிகள், வளரலாயின! வளர்ந்தவண்ணம் இருக்கிறது!

இல்லாதது மட்டுமல்ல - கற்பனையாகக் கூறப்பட்டது - பரம்!

கற்பனையும் ஒரு ஆளவோடு நிற்கவேண்டிய அவசியமில்லாததால், கற்பனை வளர்ந்தவண்ணம் இருக்கிறது.

கையை மூடிக்கொண்டு, உள்ளங்கையில் ஆழகான முத்து இருக்கிறது, விலை ஆயிரம் வராகன்! - என்று கூறி - மற்றொருவரிடம் அதே கரத்தை மூடியபடி நீட்டி, உள்ளே பார்த்தால் பரவசப்படுத்தும் பச்சை இருக்கிறது, விலை இரண்டாயிரம் வராகன்! - என்று கூறினால், அந்த விசித்திர வியாபாரத்ததில் யாரும் ஈடுபடமாட்டார்கள்! ஆனால் பரலோக விளக்கமோ, செழிப்பான, இலாபம் தரும் வியாபாரமாகி விட்டது - எளிதில் - எனவேதான், விளக்கம் வளருகிறது - மக்கள் திணரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இந்த, வளரும் கற்பனை உலகுக்குப் பாதை அமைப்பது. என்றால், ஒன்று இரண்டு போதுமா - ஒய்வும் திறமும் உள்ளவர்கள் அனைவரும், புதிது புதிதாகப் பாதைகள் அமைக்கலாயினர்.

வேதமார்க்கம் - ஞான மார்க்கம் - கர்ம மார்க்கம் - தவ மார்க்கம் - ஒழுக்க மார்க்கம் - பூஜா மார்க்கம் - இப்படிப் பாதைகள், பலப்பல அமைக்கப்பட்டன!

பாதைகள் பலவாகி, மக்கள், எது தக்கது என்று திகைதத போது ஒரு பாதையினர் மற்ற பாதையை, இருள் நிறைந்தது இடர் மிகுந்தது, என்று குறைகூற வேண்டி நேரிட்டது. பேச்சளவிலே நின்றுவிடவில்லை. இந்தப் பாதை சிறந்ததா அந்தப் பாதை சிறந்ததா - என்ற பிரச்னை பெரும்போருக்குக் காரணமாகி விட்டது.

இந்த ஆண்டு கேள்விப்படுகிறோம், திருப்பாவை மாநாடு, அதிலே தேவார, திருவாகத்தின் அருமை பெருமைகளைப் பற்றிய ஊரையும் குழைத்துத் தரப்பட்டது என்ற செய்தியை! ஆனால்...!
இருமுறைகளில் எது தக்கத் என்பதைத் தீர்மானிக்க, பக்தர்கள் கொட்டிய இரத்தம் கொஞ்சமா! இப்போது இரண்டையும் குழைத்துத் தருகிறார்கள் - தனித்தனியே தந்து பலன் காணாததால் போலும்! ஐதோ இந்த அளவுக்குக் கூட்டுறவு உணர்ச்சி ஏற்பட்டதே, அது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், இந்த இரு பாதையினரும் தமது பாதைதான் பரலோகத்துக்குக் கொண்டு சேர்க்கும் என்று கூறினர் சீறினர் - கடும் போயிட்டனர்.

அரசன் முதற்கொண்டு யானை வரையிலே, இந்தப் போரிலே சிக்கிச் சீரழிந்ததுண்டு!

பாதை, பலப்பலவாக இருக்க நேரிட்டதால், பகை உடன் பிறந்தது. பயணத்திலே வெற்றி கிட்டுமா கிட்டாதா என்று கவலை போய், இவ்வளவு பாதைகளிலே எந்தப்பாதை ஏற்ற பாதை, என்ற மனக்குழப்பம் மிகுந்துவிட்டது, மனித குலத்துக்கு, பாதைகளின் வர்ணனை மக்களைத் திணறச் செய்தது.

இல்லறம் தக்க பாதையா துறவறம் தக்க பாதையா, என்ற முதல் பிரச்னையிலிருந்து, தேவன் இருக்குமிடம் சென்று தொழுவதா? தேவன் பவனி வருகிறபோது தொழுவதா? என்கிற வரையிலே பிரச்னைகள் வளர்ந்து கொண்டு போகின்றன.

“பக்தி செய்து கொண்டிருந்தால் முக்தி பெறலாமே” - என்ற பஜனையிலிருந்து நடமாடும் கோயிலுக்குப் பூஜை செய், படமாடும் கோயிலுக்கு அல்ல” என்ற புத்தறிவு வரையிலே, பிரச்னைகளின் தரம் இருக்கிறது.

ஸ்தல யாத்திரை தீர்த்த யாத்திரை - என்ற முறையிலிருந்து, காலண்டர் கத்தையை வெட்டி எடுத்துவிட்டு, ஆட்டையின் மற்றப் பகுதியிலே உள்ள லட்சுமி படத்துக்கு ஆழகான கண்ணாடிச் சிறையிட்டு வீட்டிலே - மாட்டிப் பூஜை செய்யும் முறை வரையிலே, வளர்ச்சி ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.

நரபலி கொடுத்து நாதன் அருளைப் பெறச் செய்த முயற்சியில் தொடங்கி நாட்டிய மூலம் நல்லுணர்ச்சி பெற்று நாதனின் அருளை நாடும் ரசமான முயற்சி வரையிலே வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது!

இவ்வளவும் ஏதனால்! ஆகத்தக்கும் பரத்துக்கும் அமைக்கப்பட்ட பாதையின் இணைப்பினால்தான்.
மனிதனின் ஆவி ஒரு பெரிய ஆற்றைக் கடக்க வேண்டும் - அங்கு ஒரு ஓடக்காரன் தயாராக இருப்பான், ஏற்றிச் செல்ல. அக்கரை சென்றால் அற்புதமான பரலோகம் இருக்கும்!

இது பாதை விளக்கத்திலே ஒரு வகை.

ஆவி, பரலோகம் போகும்போது, வழியிலே நெருப்பாறு இருக்கும் - அதைக் கடக்கவேண்டும் - ஒரு ரோமப்பாலம் இருக்கிறது. அதிலேறிச் செல்ல வேண்டும் ஆவி! அந்தப் பாலத்திலே ஆபத்து இல்லாதிருக்க இங்கே, ஆகலோகத்திலே கோதானம் செய்துவிடவேண்டும், பூஜாரிக்கு!

இப்படி ஒரு விளக்கம், பாதைக்கு!

தருமர் நடந்தே சென்றார், பரலோகம். சாவித்திரி, யமன் மிரட்டப் பயப்படாமல் நடந்து சென்றாள், பரலோகத்து முன் வாயில் வரையில்!

இப்படி உள்ள கதைகள் மூலம், பாதைக்கு வேறு விளக்கம் கிடைக்கிறது.

ஆகலோகத்தில் இருந்தபடியே, துதிக்கையால் தூக்கிப் பரலோகத்தில் சேர்த்தார் விநாயகர் ஓளவையாரை - இப்படி ஒரு கதை!

இது ஒரு வகை விளக்கமளிக்க முயற்சிக்கிறது, பாதைக்கு!

மனம் குழம்பாமலிருக்குமா, பாதை தேடி அலைவோருக்கு!

ஆயினும், பரம்மேலே இருப்பது என்று பாமரரில் பெரும்பாலோர், விண்ணையே பார்த்தனர் - பார்த்துக் கொண்டுள்ளனர் - விஞ்ஞானியோ உள்ளது மேகம் - அது ஒரு வெளி - என்று கூறிவிட்டார்! அவனை அஞ்ஞானி என்று தூற்றித்தூற்றிச் சலித்துப் போனதால் “மெஞ்ஞானிகள்” அந்த விஞ்ஞான விளக்கத்தை இப்போது கேட்டு, “அதுவுஞ்சரி” என்று கூறிவிடுகின்றனர்.

கீழே ஆகலோகம் - மேலே பரலோகம் - இந்தக் கற்பனையே மேலும் சித்திரப்படுத்த மற்றோர் கதை கட்டினர். விசுவாமித்திரர், திரிசங்குக்கு, ஆகம்-பரம் இரண்டுக்கும் இடையே ஒருதனியான, புதிய பரம் அமைத்துத் தந்தார் என்று.

இவ்வண்ணம் இல்லாத இடத்துக்குப் பாதைகளைப் புதிது புதிதாக அமைத்த வண்ணம் இருந்து விட்டதால், புனிதப் பயணத்திலே பெரும் வெற்றி ஏற்பட்டுவிட்டது என்று பூரிப்படைய முடியாது போனதுடன், இங்கே, ஊருக்கு ஊர் சரியான பாதை இல்லாமற் போய்விட்டது, உழைப்புக்கும் வாழ்வுக்கும் பாதை இல்லை - சொல்லுக்கும் செயலுக்கும் பாதை செப்பனிடப்பட்டவில்லை - இதனால் இடரும் இருளும் நிரம்பியதாக இருக்கிறது மக்கள் வாழ்வு.

பெருமழை, மலை அருவி, காட்டாறு, இவ்வளவும் சேர்ந்து பெருவெள்ளமாகி வருகிறபோது, கடலிலே கலக்க வழி ஏற்பட்டால்தானே, வெள்ளம் நாட்டை அழிக்காமலிருக்கும் - அதற்கான பாதைதானே, ஆறு! அந்தப் பாதை செப்பனிடப்பட்ட முறைதானே கரை, ஆணை, முதலியன. எங்கும் பரந்த வெளி - வரம்பு இல்லை. என்றால், வயல் என்னும் நிலையும், இன்ன இடம் வரையில் இன்னவர் உழைப்பது என்ற முறையும் எப்படி ஏற்படமுடியும். பாதை சரியாக அமைக்கப்படாத இடம், நாடு அல்ல - காடு, காட்டிலும் ஓற்றையடிப் பாதை இருக்கும், புலிபோக, யானை செல்ல, நரி ஓட, பாம்பு புரள - இப்படிப்பல திறப்பட்டமுறை இவைகளுக்கு ஏற்ற வண்ணம், காடுகளிலேயும் அமைகின்றன. சிற்றெறும்பு அமைத்துக் கொள்ளும் பாதைபோலக் கூட மனிதன் இன்னமும் தன் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளவில்லை. ஆகத்துக்கும் பரத்துக்கும், இடையே போடப்படும் பாதைகள் கிடக்கட்டும் - வாழ்வுக்கான பாதை, வறியார் செல்ல முடியாதபடியாகவுமிராமல், செல்வர்கள், எமது தகுதிக்கு ஏற்றதல்ல என்று கூற முடியாமலும் இருக்கும்விதமான பக்குவமான பாதையைக்கூட அமைக்க முன்வரக் கூடாதா என்றுதான் கேட்கிறார்கள் புத்துலகத்தினர் - ஆமாம் என்று ஆனேகர் கூறுகின்றனர் - பணிபுரிபவரின் தொகையோ, மிகமிகக் குறைவாக இருக்கிறது. எனவேதான் புதிய வாழ்க்கைப் பாதை அமைக்கப்படவில்லை - தக்க விதத்தில்.

தனி மனிதனின் வாழ்க்கைக் பாதை, படாதபாடபட்டு, இரையைக் கண்டுபிடித்து, அதைப் பறித்துக் கொள்ள வரும் ஐந்துவிடம் போரிட்டு இரத்தம் கொட்டி, இறவாமல் இருந்தால் தின்று, வாழும் மிருக நிலையிலா இன்னமும் இருக்கவேண்டும். வேறு பாதை அமைக்கவே முடியாதா!
முட்டுச் சந்துகள், சருக்கல் வழிகள், சதுப்பு நிலம், வளைவுகள், வரண்ட இடங்கள், மேடு பள்ளம், முள்ளும் கல்லும் நிரம்பிய சிறு சந்துகள் - இப்படி இருக்கிறது பலருடைய வாழ்க்கைப் பாதை. அனுமதித்துக் கொண்டு இருக்கிறது அரசுகள்!

முட்டுச் சந்திலே நுழைந்து, அதையே தன் வாழ்க்கைப் பாதையாகக் கொண்டவன், பயணத்திலே, சிறைக்குள் நுழைய நேரிடுகிறது சருக்குப் பாதையிலே செல்பவன் கீழே வீழ்கிறான் - பலர் பயணத்திலே ஏற்படும் களைப்பால், பாதை ஓரத்திலேயே சாகிறார்கள். கபடன், வஞ்சகன், பொய்யன், சூதாடி, திருடன், விபசாரி, கொலைகாரன் - இவர்களெல்லாம், யார் என்று கருதுகிறீர்கள்? வாழ்க்கைப் பாதையிலே வழுக்கி விழுந்தவர்கள்! பாதை ஒழுங்கானதாகச் செப்பனிடப்பட்டிருந்தால், புதிய பாதையை அமைத்துத் தந்திருந்தால், அந்தப் பட்டியல் ஏற்பட்டிருக்குமா! அவர்கள் வழி தவறியவர்கள் - வழி அவர்களின் வாழ்க்கைக்குத் தக்கதாக அமைத்துத் தரப்படவில்லை - அந்தப் பாதை அமைப்பு, யாருடைய பொறுப்பு என்பதே இன்னமும் சரியாகத் தீர்மானிக்கப்படவில்லை!

வேதகால ரிஷிகள் முதற்கொண்ட கதர்க்கால ஓமந்துரார் வரையிலே, ஆவனவன் தனது வாழ்க்கைப் பாதையைத் தானே அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, பொறுப்பை தட்டிக் கழித்துவிடுகிறார்கள்.

பொய் பேசாதே - சூதுமதி கொள்ளாதே - ஒழுக்கத்தை ஓம்பு - அன்புடன் நடந்து கொள் - அறநெறியில் ஈடுபடு - என்ற கூறுகிறார்கள். இவை கூடாது என்று கூறவில்லை - ஆனால் நான் கேட்பது, ஆஸ்ரமங்களலிருந்து துவங்கி இளவந்தார்களின் மன்றம் வரையிலே வளர்ந்து, வழங்கப்படும் இந்த புத்திமதி ஏன் கோரிய பலனைத் தரவில்லை என்பதுதான்! கூறுபவர்களின் குரலிலே சக்தி குறைவா - கேட்பவர்களின் செவியின் திறம்தான் மட்டமா? இவ்வளவு உபதேசங்களுக்குப் பிறகும், வழி தவறியவர்கள், முறையற்று நடந்து கொள்பவர்கள், குறை மிகுந்தவர்கள் ஆகிய மக்களின் தொகை, குறையாமல் இருக்க என்ன காரணம்? வளர்ந்து வருகிறதே அந்தத் தொகை! எவ்வளவு வேதனை இது! இந்த நிலைமையைக் கண்டபிறகாவது, சிந்திக்க வேண்டாமா? ஆவனவனை ஒழுக்கப்பாதை அமைத்துக் கொண்டு அதிலே நடந்து செல்லும்படி உபதேசம் செய்துவிட்டால், பலன் ஏற்படவில்லை, எனவே வேறு முறையைக் கண்டறிய வேண்டும் என்று முன்வர வேண்டாமா!

அரசு சிறந்ததாக இருக்க வேண்டுமானால், மக்கள் ஒழுக்கச் சீலர்களாக இருக்கவேண்டும் - மலை மணமுள்ளதாக இருக்க வேண்டுமானால் மலர்கள் தரமாக இருக்க வேண்டுமல்லவா! என்று பேசுகிறார்கள் இளவந்தார்கள்.

மலர்கள் தரமாக இருந்தால்தான். மனோகரமான மாலை தயாரிக்க முடியும் - ஆதோடுகூட கொஞ்சம், கைத்திறனும் கருத்துத் திறனும் தேவை.

ஆனால் தோட்டம் பாழ்பட்டு கிணறு வரண்டு போய் இருக்கிறதே, மணமுள்ள மலர்கள் எப்படிக் கிடைக்கும்! சமுதாயம் கலகலத்துப்போய், வாழ்க்கைப் பாதை படுகுழி மயமாக இருக்கிறதே - இதிலே நடந்து செல்பவன், வழுக்கி விழாமலிருக்க முடியுமா - முடிகிறதா! அவனிடம் ஒழுக்க போதனை புரிவது, காய்ந்து போன தோட்டத்திலே ஊலாவும் தேய்ந்துபோன உருவத்தைப் பார்த்து, நறுமணமுள்ள மலர் கொண்டுவா, நான் அழகழகான மாலைகள் கட்டித் தருவேன், என்று கூறுவது போலத் தான்! பேசுபவர் பெரியவர் ஆகிறார் - கேட்கிறவருக்குக் காதுக்குக் கொஞ்சம் இனிப்பு - வாழ்க்கைக் கசப்பே மாறவில்லை - மாறாது!

மாலைக்கு மலர் தேவை - மலருக்குக் தோட்ட வளம் தேவை!

அரசுக்கு அழகுதர மக்களின் ஒழுக்கம் தேவை - மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ அவர்களின் வாழ்க்கைப் பாதையைத் தக்க விதமாக அமைத்துத் தரத்தான் வேண்டும்.

நமது நாட்டிலே கடந்த மூன்றாண்டுகளாக, சமயற்கட்டு, கள்ளர் குகையாகத்தானே இருந்து வருகிறது! - எதைக்கொண்டு எதை மறைப்பது, எதைச் சொல்லி எதைப் பெறுவது - இவ்வளவு சூதும், சர்வாதாரணமாகி விட்டதே, திடீரென்று மக்கள் முன்பு எப்போதும் பேசாத அளவு பொய் பேசவும், செய்யாத அளவு சூது புரியவும் ஏன் துணிந்து விட்டார்கள்! அரசுதன் கடமையில் தவறிவிட்டது. வாழ்க்கைப் பாதையைச் செப்பனிடும் பெரும் பொறுப்பு தன்னிடம் தரப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர மறுத்தது - அதனால் ஊர் இன்று ஒழுக்கக் காடாகி விட்டது. உபதேசம் பயன்தர மறுக்கிறது.

“இப்படி எனப்பா திருடினாய்?”

“வாழ வழி இல்லிங்க”

“பிச்சை ஏடுப்பது ஒரு பிழைப்பா, செச்சே”

“வேறு மார்க்கமே இல்லிங்களே!”

“தடிப்பயலே! இதைவிட வேறு எங்காவது போயத் திருடுவதுதானே - காலை முதற்கொண்டு காவடி தூக்கியபடி இருக்கிறாயே உயிரை வாங்கியே சனியனே”

“நீங்கதாங்க ஒரு நல்ல வழி காட்ட வேணும்”

எங்கும் கேட்கலாம் இந்தப் பேச்சுகளை.
வழி இல்லை - பாதை இல்லை.

நல்லவழியில் நட - நாதன் அருள் பெற - என்று உபதேசி கூறுகிறார்.

வழியே தெரியவில்லையே - வாட்டத்துடன் கூறுகிறார் வழுக்குபவன்! வாழ்க்கைப் பாதை நல்லவிதமாக அமைக்கவில்லை - இதை உள்ள உரத்துடன் ஒப்புக் கொண்டால்தான், நற்பணியாற்ற முடியும் நாடாள்வோரால்.

நமது காலத்திலே இந்தப் புதிய பாதையை அமைப்போம். வஞ்சிக்காமல் அனைவரும் வாழ ஓர் புதிய பாதை - அடிமை கொள்ளாமல் அடிமைப்படாமல் அனைவரும் சமமாக வாô ஓர் பாதை - வாழ்வுக்கான பாதை அமைக்கும் அரும்பணியை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பாதை அமைப்பது அலெக்சாண்டர் ஜீலம் நதிக்கரை வரை அமைத்த வெற்றிப்பாûயைவிட, ஜ÷லியஸ் சீசர் பிரிட்டன் முதல் ஏகிப்து வரையிலே அமைத்த வீரப்பாதையை விட, செங்குட்டுவன் சேரநாட்டிலிருந்து கங்கைக்கரைவரையிலே அமைத்த ஆற்றல் பாதையைவிட, பயன் அதிகம் தருவதாகும்.

புதிய பாதை அமைப்பது சுலபம் என்று எண்ணுவது கூடாது. அமைத்துக் கொண்டிருக்கும் போதே, கொடி வழி தோன்றக்கூடும் அதுவே தேடிடும் பாதை என்று எண்ணினால், வழி தவறிவிடும், நாம், தத்துவார்த்தக் காட்டுக்குள்ளே சிக்கிக்கொள்வோம்.

இதுவரையில், பல காரியங்களுக்கு, பிறர் காட்டிய வழியிலேயே நடந்து நடந்து பழக்கப்பட்டு விட்டோம் - பல காரணங்களால். பெரும்பாலும் செக்கு மாடுகள்போலச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்து விட்டோம். தேய்ந்த வழியிலே நடப்பதுதான் எளிது என்று எண்ணிக் கொண்டிருந்துவிட்டோம். யாரோ சிலர், துரத்த தைரியம் துவண்டுபோனதால், திறமையை இழந்ததால் தன்னம்பிக்கையற்றதால் தேய்ந்த பாதையிலேயே சென்று கொண்டிருந்துவிட்டோம். ஒரு பாதை இடர் மிகுந்தது, நீண்ட பயணமும் செய்ய வேண்டி இருக்கிறது என்பதற்காக வேறு தகுந்த புதிய பாதை அமைக்க முன்வந்திருக்கிறோமா! இல்லை! நமத மூதாதையர்கள், காஞ்சிக்கும் காசிக்கும் இடையிலேயே கூடத்தான் தகுந்த பாதை அமைக்கவில்லை.

சமீப வரலாற்றுக்காலம் வரையிலே, நமது ராஜாதி ராஜாக்களே, ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசம் போக வேண்டுமானால் இûடியலே காடுமலை வனம்வனாந்தரங்களை கடந்து தானே போயிருக்கிறார்ள் - சும்மா கூட அல்ல - பத்திரகாளியின் வரத்தை முன்கூட்டிப் பெற்றுக் கொண்டு மந்திரித்த விபூதியும் மாந்தரீக வாளும் பெற்றுக்கொண்டுதான்! இந்நிலையில், இங்கே கொலம்பஸ், வாஸ்கோடிகாமா, லிவிங்ஸ்டன் எது, எல்லாப் பாதையையும் எளிதில் கடந்து வர, ககன மார்க்கம் இருந்தது, அதிலே நாரதர் வருவார் அடிக்கடி! வேறு பாதை அமைத்தோர் வரலாறு இல்லையே. ராம ராஜ்யத்தின் போதே, ஆயோத்தியிலிருந்து மிதுலைக்குப் போகும்போது, தண்டகாரண்ய வர்ணனைக்குக் கவி இடமளித்தாரே தவிர, இடையே இருந்த ஊர் விஷயமே இல்லையே. பஞ்சவடி, தண்டகாரண்யம் - சித்திரக்கூட பர்வதம் - இப்படித் தானே வர்ணனைகள் - பாதை எது, பயம் இல்லாப் பாதை இல்லையே, பாதை சரியாக இல்லாத காரணத்தால்தான் போலும் நமது சாமிகளுக்குக்கூட, வேல், வில், சூலம், சக்கிரம் முதலிய ஆயுதங்களோடு புறப்படவேண்டிய அவசியம் - மாடு, மயில், அன்னம், காக்கை போன்ற வாகனங்களில் ஊர்ந்துபோக வேண்டிய தொந்திரவு இருந்ததாகக் கதைகளைத் தீட்டி விட்டனர் பாதை இல்லை!

அருள் நெறியிலே அஞ்ஞானப் படுகுழி குறுக்கிட்டது, அது தெரிய ஓட்டாதபடி பற்பல தத்துவங்கள் என்ற தழைபோட்டு மூடப்பட்டிருந்தது.

அன்பு நெறிக்குக் குறுக்குச் சுவர்கள்போல், ஜாதி சமய, குலச் சண்டை சச்சரவுகள் இருந்தன - இதன் பயன் என்ன? ஒரு காலத்திலே 8000 கழு மரங்கள் தேவைப்பட்டன - அன்புப் பாதை இன்னமும் அடைபட்டுத்தான் கிடக்கிறது.

அரசியல் பாதையோ, அரண்மனைக்கும் கோபுர வாசற்படிக்கும் இடையே அமைக்கப்பட்ட சூழல் படிக்கட்டுகளிலே நடக்கும் சூதுமதியினருக்கே பயன்பட்டு, கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டினும் கடும் புலி வாழும் காடு நன்றே என்று கூறவேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்தது.

காதல் பாதையோ... உத்தமி சீதைக்கே, காடு, இருமுறை, பிறகு பூமிக்கு அடியில், கொண்டுபோய் பெண்ணைச் சேர்த்து விடுவதாகவும், சீதையின் மாமனாருக்கு, அறுபதினாயிரம் தேவிமார் கொண்ட அந்தப்புரத்தக்கும் அழைத்துச் செல்வதாகவும் இருந்தது - புராணப்பாதை.

பொருளாதாரப் பாதையொவெனில், கொடுதது வைத்தது அவ்வளவுதான்! புண்யவானுக்கு இலட்சுமி கடாட்சம் என்ற பேச்சாகிய சதுப்பு நிலத்திலே நம்மை நடக்க வைத்து வேடிக்கை பார்த்தது.

சிற்றின்பம் பேரின்பம், காதல், கடவுள் எதற்கும் நமக்கு நல்ல பாதை அமையவில்லை. ஏன்! நாம் அமைத்துக் கொள்ளவில்லை.

உரத்த குரலோன் காட்டிய வழி நடந்தோம், அரசியலில்.

கபடன் காட்டிய வழி சென்றோம், சமுகத்துறையில்.

பூஜாரி காட்டிய வழி நடந்தோம், அருள்பெறும் நெறியில்

எத்தன் காட்டிய வழி நடந்தோம், பொருளாதாரத் துறையில்.

எனவே எவ்வழியும் சரியாக இல்லாதது, வழியற்று வகையற்றுப் போனோம் - அதைக் காணும் விழியற்ற நிலையிலும் நம்மில் பலர் இருக்கிறோம், மற்றும் சிலர், நிலைமையைக் கூற மொழியற்று முயலானோம்.
பாதை வேண்டும், புதுப்பாதை! காலராவா? பிளேக்கா? ஆதோ பாருங்க் பழைய பாதை செல்பவன் - நேரே எங்கே ஓடுகிறான், மாரிகோயிலுக்கு பூஜாரி மன்னார்சாமியைக் கூப்பிட.
புதுவழியிலே காணுங்கள் வைத்தியசாலைக்கு - டாக்டர் சேகரைக் கூப்பிட.

திருமணமா? ஆதோ பழைய பாதை! புரோகிதன் வீட்டுக்குப் பிள்ளையின் தகப்பனார் போகிறார், நல்ல சகுனம் பார்த்துக் கொண்டு, நாராயணன் நாமத்தைப் பூஜித்தப்படி. புதுப்பாதை பாருங்கள், பாஸ்கரன் செல்கிறான், திருமயிலைக் கடற்கரைக்கு, திலாகவின் திவ்ய தெரிசனத்துக்கு, சகுனம் பார்த்துவிட்டல்ல, சங்கடம் தரக்கூடிய நண்பனை நிறுத்திவிட்டு, சலவைச் சட்டை அணிந்து கொண்டு, “வதனமே சந்திர பிம்பமோ” பாட்டை, குழலோசை போல், பயின்றுகொண்டு, நடக்கிறான்.

ஆண்டவனைக் காண, பழைய பாதையிலே நடக்கும் நந்தனையும் பாருங்கள் வருக! வருக! என்று முனிசாமிப் பிள்ளையை அழைத்திடும் புது நெறியையும் பாருங்கள். பாதை அமைக்க வேண்டும்! உரிமைக்கா - அது பகத்சிங் அமைத்ததுபோல, தூக்குமேடைக்கே கொண்டு செல்லட்டும் கவலையில்லை - சுபாஷ் பாடி அமைத்ததுபோல், பர்மாப் பாதையாக இருக்கட்டும் பயம் வேண்டாம் - இலட்சியம் எந்தத் திக்கில் இருக்கிறதோ அதைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பாதை அமைக்கவேண்டும்.

சாக்ரடீஸ் - லூதர் - விப்பர் போர்ஸ் - லெனின் சன்யாட்சென் - கமால் - ஆகியோர் அமைத்தனர் புதுப்புதுப்பாதைகள்.

வௌவாலும் வல்லூறும் வட்டமிடாதபாதை - வஞ்சகரின் வாழ்வுக்காக இக்கப்படாத பாதை - பாமரன் பாராளும் பண்பு தரும் பாதை - ஏழை என்றும் அடிமை என்றும் ஏவனும் இல்லை என்ற இடத்திற்கு நாம் போவதற்கான பாதை - இல்லாமை, போதாமை, தீண்டாமை, பாராமை இல்லாப்பாதை - எல்லார்க்கும் எல்லாம் உள்ளது என்ற எழில் தரும் பாதை - உழைப்போம் வாழ்வோம் என்ற உறுதி பிறக்கச் செய்யும் பாதை - இருண்ட வாழ்வுக்கு ஓர் மணிவிளக்கு கிடைக்கும் பாதை - தீரர்களின் இருப்பிடத்தை நமக்குக் காட்டும் பாதை.

“புனலிடை மூழ்கி பொழிலிடை உலவி
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு”

செல்ல - ஓர் பாதை தேவை. இதற்கு அஞ்சாநெஞ்சம் எனும் அருங்கற்கள் வேண்டும் அன்பு அறிவுடைமை எனும் கலவைக் கண்ணம் வேண்டும், நம்பிக்கை எனும் கருவி வேண்டும், வீரர்கள் வேண்டும், அமைக்கும்போது, பழைமையின் வெப்பத்தால் ஆர்வம் பட்டுப் போகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தன்னலக்காரரின் தாக்குதலால், குருதி கொட்ட நேரிட்டாலும் கலங்காதிருக்க வேண்டும் - கலங்காதிருப்பது மட்டுமல்ல, புதியபாதை நமது குருதிபட்டு, செந்நிறமாக்கப்பட்டும், ஆனால் பாதை அமைக்கும் பணியில் வெற்றி கிடைக்கட்டும் என்ற ஆர்வம் வேண்டும்.

இன்றோர் அமைத்த வழியைவிட்டு, புதுவழி போகாதே, அருளுடையோர், ஞானப்பால் உண்டோர், அவதார புருஷர்கள், மெஞ்ஞானிகள் உரையை மீறாதே என்று இதமாகப் பேசி நம்மை இருட்டறையில் தள்ளிவிடுவோர் குறுக்கிட்டால் கட்டுக்கதைகளை விட்டுத் தள்ளடா குட்டு வெளிப்படுமே என்று பண்பாடுவோம் புதுப்பாதை அமைப்போம், இன்புபரி புகுவோம் சக்திக்கேற்ற அளவு பெறுவோம்.

எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணுவதே ஆல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே
என்று ஐக்கத்துடன் பாடிய தாயுமானாரின் நனவாகாத கனவை, நிலையாக்குவோம் - நீங்களும் நானும் அதைச் செய்ய முடியும் - ஆம்! முடியும், முயன்றால்!

(திராவிடநாடு - 14.1.51)