அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சனாதனச் சர்ச்சில்கள்
“இலங்கையிலும் மதச்சார்ப்பற்ற சர்க்காரே நடந்து வருகிறது. ஆயினும், அந்தச் சர்க்கார் மதங்களுக்கெனச் சட்டம் இயற்றவில்லையா? இலங்கையில் எத்தனையோ பௌத்த இலயங்கள் இருக்கின்றன. அவைகளில், கண்டி, ஆநுராஜபுரம், பொலன்னருவை, கழனி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த இலயங்களில் எத்தனையோ கோடி ரூபாய்க்குமேல் மதிப்பிடக் கூடிய நவரத்ன ஆபரணக் குவியல்களும், ஏராளமான சொத்துக்களும் இருக்கின்றன. அவைகளைப் பரிபாலிக்க சர்க்கார், பௌத்த மத பரிபாலனச் சட்டம் என்று ஒரு சட்டத்தைத் தயாரித்து அமுல் நடத்துகிறார்கள். இதனால் பழைய பெருச்சாளிகள் உள்ளே நுழைய முடியாமல் நிர்வாகமும் எதிர்பார்த்தபடி வெகு சிறப்பாக நடந்து வருகிறது. எனினும் இந்தச் சட்டத்தை இதுவரை எவரும் எதிர்க்கக் காணோம். அதற்குப் பதிலாக இலங்கை இந்துக்கள் இதேபோல இந்துமத பரிபாலன சட்டம் என்று ஒரு சட்டத்தை சர்க்கார் தயாரித்து உடனே அமுல் நடத்து வேண்டுமென்று கடந்த 1948-ல் வருஷம் இலங்கையில் சைவ சமாஜ மகாநாட்டில் ஐகோபித்துத் தீர்மானித்திருக்கிறார்கள்.

லோகோபகாரி எனும் இதழ் இத்தகவலைத் தருகிறது. இலங்கையில் பௌத்தர்களுக்கு அந்த நாட்டுச் சர்க்கார், தங்கள் தேவாலயங்களை நிர்வாகம் செய்ய முன்வந்திருப்பது, அக்ரமம் ஏன்றோ அதனால் மதம் ஒழிந்து போகும் ஏன்றோ எண்ணம் எழவில்லை. மதத்திலே மக்களுக்குள்ள மட்டற்ற பற்றினைப் பயன்படுத்திக் கொண்டு, வேஷதாரிகளும் சுரண்டிப் பிழைப்போரும் சுகபோக வாழ்வு நடத்துகிறார்கள் - முடிகிறது - இந்த ஆநீதியைத் துடைப்பதே, மக்களிடமும் மதத்திடமும் உண்மையான பற்று கொண்டவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை அங்கு மக்கள் உணர்ந்து கொண்டனர். அங்கு எதிர்ப்பு இல்லை - காரணம் அங்கு, கோயில் பூனைகளைக் காப்பாற்றிக் கொழுக்கச் செய்ய இந்துவும் மித்திரனும் இல்லை! எல்லா நாடுகளிலேயும் மத ஏகாதிபத்யம் உண்டு - ஆனால் இதிலே பிழைப்பையும் உயர்வையும் பிணைத்துக் கொண்டுள்ள ஒரு குலம் கிடையாது. நமது நாட்டில் மட்டுந்தான் அப்படி ஒரு குலம் இருக்கிறது. அந்தக் குலத்துக்கு மக்களை மடைமையில் ஆழ்த்திவைக்கும் திறனும் சாதனமும் இரக்கிறது - எனவேதான், எதிர்ப்புக்காட்ட முடிகிறது. கந்தலாடையும் நடுங்கும் குரலும், ஓட்டைப்பாண்டமும் கொண்ட பஞ்சையை, விரட்டி அடிக்கும் வீட்டுக்காரர், அழுக்கேறாத காவி உடையும், அழகிய வெண்ணீறும், காதிலும் கழுத்திலும் உத்திராட்சமும் கையிலே பிக்ஷா பாத்திரமும் கொண்டு, உரத்த குரலில், சதாசிவத்தை முதலில் கூப்பிட்டுவிட்டு, பிறகு, “இந்தக் கடட்டைக்கு ஏதேனும் பிச்சை” என்று ஆம்மணியை அழைக்கும் ஆர்பாட்டப் பண்டாரத்தை, சற்று மரியாதையுடன் தானே “போய்வா சாமி”, என்று கூறுகிறார். கோயிற்பூனைகள் இங்கு கொண்டுள்ள கோலம் மக்களை மயக்கக்கூடியவிதமானது. எனவேதான், இலங்கையிலே எளிதிலே நிறைவேற்ற முடிந்ததை இங்கு நிறைவேற்றுவதற்கு, கஷ்டப்பட வேண்டி வருகிறது.
“பல்லவ மன்னனுக்கு சேனாதிபதியாக இருந்த பரஞ்சோதி என்பவர் வாதாபியிலிருந்து கணபதி விக்ரகத்தைக் கொணர்ந்து தம் சொந்த ஊரான திருச்செங்காட்டங் குடியில் நிறுவியிருக்கிறார்.”
இந்தத் திங்கள் துவக்கத்திலே, தினசரி மடல் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

விநாயகர், பிள்ளையார், என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டுப் பூஜிக்கப்படும், கணபதி தமிழ்நாட்டுக்குரிய தெய்வமல்ல, பழந்தமிழர்கள் அவ்விதமான ஒரு கடவுளை, வணங்கினதில்லை, மிக மிகப் பிற்காலத்திலே வடநாட்டிலிருந்துஇங்கு வந்து புகுந்த வழக்கம் இது என்று நாம் கூறினபோது, கணபதியைக் குறை கூறுகிறான் கயவன்! பிள்ளையாரைப் பிழைபடப் பேசுகிறான் பாபி! விநாயகரைத் திட்டுகிறான் விதண்டாவதி! என்று நிந்தித்தவர்கள் எவ்வளவு பேர், பெரிய ஆராய்ச்சி நடத்திவிட்டானாம் ஆராய்ச்சி, யுகயுகமாக இருந்து வரும் கணபதியை, தமிழ்நாட்டுக்குரிய தெய்வமல்ல என்று கூறுகிறான் அறிவிலி! என்று ஆத்திரத்துடன், பேசினர் பலர்.

இப்போது என்ன சொல்வார்களோ, தெரியவில்லை, தினசரி வெளியிடும், ஆராய்ச்சியைக் கண்டு!
வாதாபியிலிருந்து கணபதியைக் கொண்டு வந்தார் பரஞ்சோதி என்று தினசரி தெரிவிக்கிறது. வாதாபி என்பது சாளுக்கிய ராஜ்யத்தின் தலைநகரம் - இப்போதைய பம்பாய் மாகாணத்திலிப்பது. வடநாட்டுச் சரக்கு, விநாயகர் என்பதை இனியும் மறுத்துக் கூறுகூரா, நம்மை மதியலிகள் என்று பேசிய மகாபண்டிதர்கள்.

வருணஜெபம் செய்தால் மழை வரும் என்று நம்புவது ஏமாளித்தனம், என்று நாம் கூறினால் வைதீர்களின் முகம் களிக்கிறது, மனம் குமுறுகிறது. இயலங்களிலே ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன என்று சொன்னால் அவர்களின் கோபம் கட்டுக்கடங்கா நிலையாகிறது. நம்மைப் பிய்த்து எறிந்து விடுவது போல் கிளம்புகிறார்கள் - இலயங்களிலே உள்ள பூசாரிகள் இஷாடபூதிகள் என்று நாம் கூறிவிட்டாலோ, ஆரகரா சிவா சிவா! ஆடபாவிப்பயலே நாக்கு அழுகும்டா! என்று ஆத்திரமாகப் பேசுகிறார்கள்.

வருண ஜெபம் செய்வது ஏமாளித்தனம் - இலயங்களிலே ஊழல்கள் உள்ளன - அங்குள்ள பூசாரிகள் இஷாடப்பூதிகள் - எனும் இம்மூன்று உண்மைகளையும் சூனாமானா ஐடல்ல, இந்துஸ்தான் எனும் இதழ் ஒப்புக் கொண்டது சென்றகிழமை இதோ, அதன் வாசகம்!
“நாட்டிலே விளைச்சல் இல்லை - விளைச்சலை அதிகரிக்க, நீர்ப்பாசன வசதிகளைச் சீர்திருத்தத் திட்டமான முயற்சி எதுவும் காணோம். இôல் ஊழல் நிறைந்த இலயங்களில், இஷாட பூதிகளான பூசாரிகளைக் கொண்டு வருண ஜெபம் செய்யச் சொல்கிறார் பிரம்மா”.

இவ்விதம் கேலி செய்கிறது. இந்துஸ்தான், இந்தச் சொல் மாலை நமக்குக் கிடைக்கும்போது, நாம் ஏன், கருத்திறயாக் கயவர் தரும் கல்மாரியையோ, வகையறியா வக்கிரங்கள் தரும் வசைமாரியையோ, பொருட்படுத்தப் போகிறோம்! நாம் எடுத்துக் காட்டுகிறோம் உண்மையை, முதலில், துணிவுடன் - எதிர்ப்பைத்தான் காண்கிறோம், ஏசுகிறார்கள், ஆகழ்கிறார்கள் - ஆனால், அடிமேல் அடிஅடித்தால் ஆம்மி நகரத்தான் செய்யும் - சினோரே, பிறகு, வருகிறார்கள் வழிக்கு! அவர்கள் வழிக்கு வருவது கிடக்கட்டும், வேறு முகாம்களிலிருந்துகொண்டு முரசு கொட்டுவோரும், சிற்சில சமயங்களிலே, நாம் கூறும் கருத்துக்களை ஆதரிக்கிறார்கள் - அவசியம் பிறக்கிறது. வருணஜெபம் செய்வது ஏமாளித்தனம்! இலயங்களில் ஊழல்கள் நிறைந்துள்ளன - பூசாரிகள் இஷாடபூதிகளாயுள்ளனர் என்பவைகளை நாராயண ஐயங்காரை இசியராகக் கொண்ட இந்துஸ்தான் நாட்டுக்குக் கூறும்போது, நமக்கு, நாட்டு வளப்பமறியாத கிணற்றுத் தவளைகளின் கூச்சலைக் கேட்டு, கோபமா வரும்! கிடைக்கவேண்டிய இடங்களிலிருந்து ஆதரவும் இமோதிப்பும் கிடைத்து வருகிறது என்ற மகிழ்ச்சியும், அதனால் நம்பிக்கையுமே பிறக்கிறது.
*****

முற்போக்கான திட்டம், மக்கள்ன மாண்பை உயர்த்தும் முயற்சி, எதைச் செய்ய முற்பட்டாலும், பார்ப்பனரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்புவதையே நாம் பார்க்கிறோம். அதனை நாம் எடுத்துக் கூறும்போது, கோபமாகத்தான் இருக்கும் - நம்மை நாசமாக்க வேண்டும் என்று ஆத்திரமாகத்தான் இருக்கும். கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையுடன் இருந்து பார்த்தால், உண்மை விளங்கும், கோயில்களிலே பொட்டுக் கட்டுவது எனும் மடமை ஒழிய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது - எதிர்த்தவர் காலஞ்சென்ற சத்யமூர்த்தி ஐயர்! பாலிய விவாகத்தைத் தடை செய்யும் சாரதா சட்டம் வந்தபோது, எதிர்த்தவரும் அவரேதான், பனகல் அரசர் காலத்திலே இந்துமத பரிபாலன சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் அவர் எதிர்த்தனார்! இப்போது மடாலய நிர்வாக மசோதாவை எதிர்ப்பவர், வைத்யநாத ஐயா! இவைகளைப் பொய் என்று கூறிவிட முடியாது. இந்துவும், மித்திரனும், இந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றின்போதும் பிற்போக்குக் கட்சியையே ஆதரித்து வந்தன - அவை இரண்டும் பார்ப்பனப் பிரமுகர்களால் நடத்தப்பட்டு வரும் பத்திரிகைகள். இவ்வளவு தெளிவாக உண்மை இருப்பதால்தான் நாம் கூறுகிறோம், முற்போக்கான திட்டத்தை முப்புரியினர் எதிர்த்து வருவதே, குலதர்மமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. கோபித்து என்ன பயன்! கொக்கரித்த என்ன இலாபம்! சதி அல்லது உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தபோது கூடத்தான். மதமே நாசமாகிவிடும், இந்து சமுதாயமே அழிந்துவிடும் என்று பேசினர்! அது அவர்களின் பல்லவி! பொருளற்றது! நாளாகவாக, நல்லறிவு நாட்டிலே பரவப்பரவ, பகுத்தறிவு மேலோங்கும் நிலையிலே, இந்தப் பொருள்ள பல்லவியை, இன்று கவனித்துப் பதில்கூறிக் கொண்டிருக்கும் அளவுக்குக்கூட, அவசியம் இராது. ஒரு எரிலுள்ள மாட்டு ஜட்கா வண்டிக்காரர்களைக் கூட்டி அவர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, சமாதானம் செய்து, சம்மதம் பெற்ற பிறகா, மோடார் பஸ்கள் கூட்ட முற்படுகிறார்கள்! காலம் மாறிகொண்டே வருகிறது. அதைத் தடுக்கும் திறன் யாருக்கும் கிடையாது! யூகமிகுந்தவர்கள் இதை அறிவர்! மட்டரகங்கள் தங்கள் துயரத்தையும் தோல்வியையும் வெளியே காட்டிக் கொள்ள வகையில் கன்னாபின்னாவில் இறங்கும் கடைசிக்கட்டம் என்றுதான், அந்த நிலைக்குப் பொருள்!!

மதம் நாசமாகும், இந்த நாட்டின் மாண்பு! மங்கிப் போகும், சமுதாயத்திலே சீர்குலைவு உண்டாகும், சர்வ நாசம் சம்பவிக்கும் என்ற சாக்குக் கூறிக்கொண்டே, முற்போக்கை விரும்புபவர்களைக் கண்டபடி கணடடித்துப் பேசியும், பாமரர்கள் மனதிலே பீதி உண்டாக்கி அவர்களைக் கிளப்பிவிட்டும், வைதீகர்கள் காணும் பலன் என்ன! சரி, சரி, இவ்வளவு பெரி ஞானஸ்தர்கள், சத்திய ஜ்வாலை போலக் கோபத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறார்களே, அவர்களுடைய சாபத்துக்கு ஆளாகக் கூடாதே என்று எண்ணி, எந்தச் சீர்த்திருத்தச் சட்டமாவது, தடைப்படுத்தப்பட்டு விட்டதா! சாரதா சட்டம் சாஸ்திர விரோதம், பாலிய விவாகமே பண்டைப் பெருமையை நிலைநாட்டக்கூடியது, பாரத் வர்ஷத்திலே ஆனாதி காலந்தொட்டு இருந்துவரும் இசாரம், ஆகவே, அதனைக் குலைக்கக் கூடாது என்று இருந்துவிட்டார்களோ! இல்லை! வைதீக வறட்டு வாதத்தைக் கண்டு அஞ்சி, எந்தக் காரியமும் நின்று விடவில்லை. பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க, சட்டம்! திருமண முறையிலே, உண்மையிலேயே திருவும் மணமும் இருக்கக் கூடிய விதமான திருத்தம்! பெண்களுக்குச் சொத்துரிமை! விவாக விடுதலைக்கு வழி! இவ்வளவும், வைதீகர்களின் கண் முன்பாகவே, பிறர் காது செவிடுபட அவர்கள் கடுங்கூச்சலிடுவது பற்றித்துளியும் சட்டை செய்யாத முறையிலே, சட்டங்களாகிக் கொண்டு வருகின்றன. சகல துறைகளிலும், வெற்றி, சீர்திருத்த நோக்கமுடை யவர்கள் சார்பாகவே கிடைத்து வருகிறது. எதெதை, இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவங்கள், இணி வேர்கள், ஆகபரசுகம் தரும் சாதனங்கள் என்று வைதீகர்கள் பேசிக் கொண்டு வந்தனரோ, அவைகளெல்லாம், காலச் சம்மட்டியின் தாக்குதலால், நொறுங்கித் தூள் தூளாகின்றன! இவ்வகûயிலே, நாம் விரும்பும் சீர்திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தோல்வித் தோடாவை அணிந்து கொண்டுள்ள ஆசகாயச் சூரர்கள் கிளப்பும் அர்த்தமற்ற அசட்டு ஆவுட்டுகளைக் கண்டுநாம் கவலைப்படவேண்டிய அவசியமென்ன இருக்கிறது! காலப்போக்கை அறிந்தவர்கள், மதத்திலே உள்ள மாசுகளைத் துடைத்துவிட்டு மக்கள் மனதிலே பதிந்துள்ள புத்துலகக் கருத்துக்களுக்கு ஏற்றவிதத்தில், இந்து மதத்தைத் திருத்தி அமைத்தாக வேண்டும் என்று முனûந்து பணிபுரிகின்றனர். கோயில் கதவுகள் திறக்கப்பட்டதற்குக் காரணம் மக்கிளன் அறிவுக்கண்கள் திறக்கப்பட்டுவிட்ட உண்மையைத் தெரிந்து கொண்டதால்தான்!! ஜாதிபேதம் குலபேதம் கூடாது என்று பேசுபவர் அதிகமே தவிர, ஜாதிகுல தர்மம் நீடிக்கத்தான் வேண்டும் என்று வாதாடுபவர்களின் தொகையல்ல! பர்ணசாலை களிலே வகுக்கப்பட்ட திட்டங்களை வைத்துக் கொண்டு, பாராளு மன்றங்கள் ஏற்பட்டுள்ள இக்காலத்திலேயும் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எண்ணுவது அணுகுண்டுவைத் தடுக்க ஆம்பு விட்டுப்பார்க்கும் ஆதிமேதாவியின் செயலுக்குச் சமமாகும்! ஆனால், பஜனை மடங்களிலே இருக்க வேண்டிய சில பிரப்பிரம்மங்கள், தேசீய மூலாம் பூசிக்கொண்டு, பாராளும் மன்றத்திலே புகுந்து கொண்டிருப்பதால், சலசலப்புச் செய்ய முடிகிறது. பல ஜாதிகளாக, இங்கு மக்கள் பிரிந்து அதன் காரணமாகப் பிளவுபட்டு, பகைத்துக் கொண்டு வாழ்வதை பரமனின் திட்டம், பாப புண்யத்தினால் ஏற்படும் பலாபலன்களின்படி அமைந்த திட்டம் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் போய்விட்டது - எப்படியோ ஏற்பட்டு விட்டது, நம்முடைய நாட்களிலே அதனால் விளையும் நாசம் நன்றாகத் தெரிந்துவிட்டது. எனவே, அதனை மாற்றிவிடத்தான் வேண்டும் என்பதை மதிபடைத்தவரனைவரும் ஒப்புக் கொண்டுவிடடனர். முறை என்ன இந்த மாற்றத்துக்கு என்பதிலே கருத்து வேற்றுமை உண்டு மூலத்தில் அல்ல - ஆனால் உலகமறியாத சில ஊதாவக்கரைகள், தங்கள் வார்த்தைக்கு இந்தக் காலத்திலும் ஐதோ மதிப்பு உண்டு என்று நம்பிக் கொண்டு கிடக்கின்றன! கிளி கொஞ்சிடும் சோலையிலே, நடுநிசி வேளையிலே, இந்தை ஆலறுகிறதல்லவா - அதுவும் பாபம், தனது இலாபனத்தைக் கேட்க உலகு உவகையுடன் இருப்பதாகவே எண்ணிக் கொள்கிறது! தனது குறும்பையும் கோணற் சேட்டைகளையும் கண்டு, உலகு மகிழ்கிறது என்ற மனப்பான்மை மந்திக்கே இருக்கும்போது, மக்களிலே சிலருக்கு இருப்பதிலே என்ன ஆச்சரியம்! மலர்ச்செடி அருகே புழு நெளிவதில்லையா! மயில் இடக் கண்டும், வான்கோழி கூச்சமின்றி இடவில்லையா அதுபோலவே, உலகு அறிவொளி கண்டு, புதுப்பாதையைத் தேடிக்கொண்டு செல்லும் நிலைகண்டும், சில கபந்தங்கள், தமது பழைய போக்கிலே பிரேமை கொண்டுள்ளன! ஞானசாகரம், தங்கள் மனம் என்று எண்ணிக்கொண்டு, பேசிப் பார்க்கின்றன - மதிப்பார் இல்லை - தங்கள் எதிர்ப்பு கண்டு, சீர்திருத்தப் படை சிதறுண்டு போகும் என்று எண்ணிக்கொண்டு, தூற்றல் பாணத்தைத் துரிதமாகத் தொடுத்துப் பார்க்கின்றன - பலன் இல்லை - மாடாகப் போ! மரமாகிப்போ! என்று சாபம் கொடுக்கக் கூடியக்காலமல்ல. எனவே சாபம் கொடுப்பதற்குப் பதிலாக, மாடே! மரமே! கல்லே! கபோதி! என்று பலப்பல வசை மொழிகளை வீசிப்பார்க்கின்றன, சீர்திருத்தம் கோருவோர்மீது. வசைமாரி கண்டு, சீர்திருத்த வாதிகள் வருத்தப்படப் போவதில்லை. ஏனெனில், முதலிலே எடுத்தக் காட்டியுள்ளபடி, சீர்திருத்தவாதியின் நோக்கங்கள் ஒவ்வான்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றன, எதிர்பாரத இடங்களிலிருந்துகூட ஆதரவுகள் கிடைத்திடக் காண்கிறான். சட்டசபைகளிலே, காங்கிரஸ் கமிட்டிகளிலே, மந்திரிசபைகளிலே, மதிவாணரின் மன்றங்களிலே, எங்கும், சீர்திருத்த ஆர்வம் இருந்திடக் காண்கிறான் - களிப்படைகிறான். கோயில்களிலே காணப்படும் கொடுமைகளை எண்ணி எண்ணி ஐக்கமுற்ற சீர்திருத்தவாதியின் மனம், மகிழத்தக்க முறையிலே இன்று திருத்தங்கள் செய்ய முற்பட்டுள்ளனர். ஆட்சியாளர்கள்! மாதர் தமை இழிவு செய்யும் மடமை, மக்களில் ஒரு பகுதியினரைத் தீண்டாதார் இக்கிவைத்த கொடுமை, மாய்ந்திடக் காண்கிறான், மனம்மிக மகிழ்கிறான்! களஞ்சியத்திலே புகுந்து கொண்டு, தானியத்தைக் களவாடித் தின்ற கொழுத்து வந்த எலி, பொறியிலே சிக்கிவிட்ட பிறகு, இரும்புக் கம்பிகளை, தானியத்தைக் கொரித்துத் தள்ளுவதுபோல செய்துவிட முடியாது, என்று தெரியாமல், உயிர் பிழைக்க வேண்டுமே என்பதால், கூண்டுக்குள் இருந்தவண்ணம், குதிப்பதும் கம்பியைக் கடிப்பதும், பலகையைக் கீறுவதும், பலவித முயற்சிகள் செய்வதையும் பார்க்கிறோமல்லவா! அது போன்ற காட்சி, இந்த போக்கிடமத்ததுகள் போடும் கூக்குரலும், இடும் கூத்தும்! வெற்றி பெற்று வரும் சீர்திருத்தவாதி களுக்கு, பொழுது போக்குக்கான, கண்காட்சி - இலவசமாகத் தரப்படுகிறது!

தேசீய முலாம் கிடைத்து விட்டதைச் சாதகமாக்கிக் கொண்டுதான், சில வைதீர்களால், வறட்டு வாதம் செய்ய முடிகிறது.

இந்து-மித்திரன் போன்ற இதழ்கள், இவர்களைத் தூக்கிவைத்து எழுதுவதையும், பணம் பிடுங்கிகளைப் பரமாத்மாக்கள் என்றும், ஏமாற்று வித்தைகளைப் புண்ய காரியம் என்றும் - எழுதிக் காட்டுவதைக் கண்டு, சிலருக்கு, உண்மையாகவே, மேதைகள் யாராரோ, மடாலய நிர்வாக மசோதாவை எதிர்க்கிறார்கள் அவர்களுடன் கூடிக்கொண்டு குலவினால், புகழ் கிடைக்கும். பல தானமும் கிடைக்கக்கூடும் என்று ஏமாளித்தனமாக எண்ணிக் கொண்டு, தங்கள் பழையை பசலிப் பேச்சைப் பொது மக்கள் முன்னாலேயே பேசவும் துணிந்துவிட்டனர். அவர்கள் பட்டபாடு என்ன! மாயவரத்தில் பிப்ரவரி 16ந் தேதி மக்களை மன்னார்சாமிகள் என்று எண்ணிக்கொண்டு சில மகானுபவார்கள், மடிசஞ்சி இராக இலபனை செய்து பார்த்தனர் - கற்கள் பறந்தனவாம் - செருப்புகளாம் - ச்சீ கோஷங்களாம்! முட்டைகளும் கூடத் தானாம்! மூலைமுடுக்கிலே இருந்துகொண்டு யாரோ சிலர் செய்த சேட்டையா! அல்ல! பொதுமக்களின் ஆத்திரத்தின் விளைவு! கூட்டத்திலே தமது கண்டனத்தைத் தெரிவித்ததுடன், ஊர்வலமாகச் சென்றதாம் பெருங்கூட்டம், மடத்தைத் தாங்கும் பேர்வழிகளைக் கண்டித்து முழக்கிமிட்டுக் கொண்டே!

இவ்விதமான மாறுதலைக் கண்டு, பொதுமக்கள் சீர்திருத்த ஆர்வம் பெற்றிருப்பது கண்டு, பழைய ஏடுகளைக் காட்டி நாட்டை ஏய்த்துவந்த காலம் போய்விடுகிறதே என்ற பயம் பிறப்பதும், அதன் காரணமாக மன்னார்சாமிகளும், மடிசஞ்சிகளிலே மட்ட ரகங்களும் மாரடித்தழுவதும், சகஜந்தான்! என்ன இருந்தாலும் பாபம், இருக்காதா, ஐக்கம்! மனு மாந்தாதா காலத்திலிருந்து அனுபவித்து வந்த ஆதிக்கம் ஒழிகிறது என்றால், ஐக்கம் பிறக்கத்தான் செய்யும்! கிளைவ் காலத்திலே பெற்ற சாம்ராஜ்யத்தை இழக்கவேண்டி வருகிறதே என்று சர்ச்சில் ஓல மிட்டதுபோல, இங்குள்ள சனாதனச் சர்ச்சில்களும் ஓலமிடுகிறார்கள்! அவர்களின் மன ஆறுதலுக்காகத்தான், பாபம்!!

(திராவிடநாடு - 27.2.49)