அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சங்க காலத்தில்

சங்க காலத்தில்
இருந்தன இல்லாதன
தமிழரசு ஆரிய ஆதிக்கம்
காதல் மணம் தீண்டாமை, பாராமை
முத்தமிழ் பிறப்பால் உயர்வு தாழ்வு
ஊர்ப்பொது மன்றங்கள் கர்மாவதி
அறங்கூறு அவையம் அடிமைவேலை
கோவில்களில் கல்விக்கூடம் உழவையும் தொழிலையும்
இங்கு அறமன்றம், கலைக்கூடம் இழிவுபடுத்தல்
பாலாவியன்ன மேலாடை பெண் அடிமை
போரிடும் பண்பு மன்றங்களில் வழக்கறிஞர்
அரசியல் நடத்த ஐம்பெருங்குழு பிறமொழி மந்திரம்
ஏன்பேராயம் பிறநாட்டு ஆட்சி

தமிழ்நாட்டிலே, ஆரிய ஆதிக்கமில்லாத, இளடிமை இல்லாத, அந்த நிலைமையை மீண்டும் காணவேண்டும், வழி என்ன? பழம்பெருங்காப்பியங்கள் தரும் சுவைமிக்க சான்றுரைகளைப் படித்து இன்புற்றால் போதுமா? போதாது. நாட்டுக்கு, எடுத்துரைக்கவேண்டும். முன்னாளில் இல்லாக் கேடுகள் பலப்பல இந்நாள் வந்ததன் காரணத்தை விளக்கிப் பொலிவு மீண்டும் பெறும்வழி என்ன என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும்.

திராவிடர் கழகத்தின் வேலைத் திட்டத்திலே இந்த ஆழ்ந்த கருத்துதான் அடிப்படையிலே அமைந்திருக்கிறது.

(திராவிடநாடு - 6.4.47)