அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சந்தான சப்ரமஞ்சம்!
“அரசே! இந்த மாங்கனியைப் பூர்ணச் சந்திரன் பிரகாசிக்கும் நாளில், தங்கள் தர்மபத்தினியாரும் தாங்களுமாக உண்பீர்களானால், நிச்சயம் தங்களுக்குப் புத்திர சந்தானம் உண்டாகும்.”
“மகரிஷயை! தன்யனானேன்! தங்கள் வரப்பிரசாதத்துக்கு ஆயிரங்கோடி நமஸ்காரம்”
இங்கு புராணகாலத்தில்
“விரிஞ்சிபுரம் கோயிலுக்குச் சென்று, திருக்குளத்தில் குளித்துவிட்டு, உரத்துணியுடன், கோயில் மண்டபத்தில் அன்றிரவு படுத்துக் கொண்டால், மலடிக்கும் புத்திர சந்தான வரம் கிடைக்கும்.
இங்கு
இப்போதும்
“ஐம்பது பவுன் கட்டணம் செலுத்தி சந்தான சப்ரமஞ்ச கூடத்தில் ஓர் இரவு சயனித்தால், நீண்ட காலமாகப் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கும், குழந்தை பிறக்கும்.
இலண்டன்
1779

முன்னவை இரண்டும் தெரிகிறது, புரிகிறது. மூன்றாவதாகக் குறிப்பிட்டிருக்கிறதே, சந்தான சப்ரமஞ்சக் கூடம், அது என்ன, அதனுடைய விவரம் கூற வேண்டுகிறோம் என்று இவலுடன் கேட்கத் தோன்றும். அன்பர்கள், அவ்வளவு வேகமாக அந்தக் கட்டம் செல்ல முடியாது, அதனை ஆடையுமுன், மனிதகுலம் மாயம் - மந்திரம் - மருந்து எனும் கட்டங்களில் எங்ஙனம் சென்றனர் - என்னென்ன அனுபவங்களைக் கண்டனர் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

மாங்கனி கொடுத்தவர் மகரிஷி!

சப்ரமஞ்சக்கூட்டம் அமைத்துத் தந்தவன், மகரிஷி அல்ல, வெள்ளைக்காரன்.

இருவரும் வேறு வேறு என்றாலும், அவர்கள் நோக்கம் ஒன்றேதான்.

மகரிஷி தரும் மாங்கனி, மகத்துவம் வாய்ந்தது என்று நம்பிக்கை கொண்டான் மன்னன், சந்தான வரமளிக்கவல்ல மகிமை இருக்கிறது இந்தப் பஞ்சணைக்கு என்று நம்பினான் பாமரன்.
இருவரின் நம்பிக்கையும், அறிவுத்துறை வளராததால் ஏற்பட்டதுதான் - அந்த வரலாறு பற்றிய குறிப்புரையாகக் கொள்ளலாம், இந்தக் கட்டுரையை.

“எல்லா வைத்தியமும் செய்து பார்த்தாகிவிட்டது. ஒரு பலனும் தெரியவில்லை, உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது, வைத்தியர்கள் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டனர், நாளைப் பொழுது தாங்காது என்றனர், என்ன செய்வது? ஒன்றும் தோன்றவில்லை. உடனே ஏழுமலையானே! நீதான் துணை மதர்களெல்லாம் கைவிட்டுவிட்டார்கள், இனி நீதான் உயிர்ப்பிச்சை கொடுக்கவேண்டும், குழந்தை பிழைத்ததும், உன் சன்னதிக்குக் கொண்டு வருகிறேன், வெள்ளியாலே கால் செய்து சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டு ஒரு மஞ்சத்துணியில் காலணா முடிந்து, கையிலே கங்கணம் கட்டிவிட்டு, ஏழுமலையான்மீது பாரத்தைப்போட்டுவிட்டு, குழந்தை பக்கத்திலேயே படுத்துக் கொண்டேன் - இராத்திரி பன்னிரெண்டு மணி இருக்கும், கண் இழுத்துக் கொண்டே போய்விட்டது, கொஞ்ச நேரம் தூங்கிவிட்டேன், யாரோ ஒரு கிழவர், நெற்றியிலே பெரிய நாமம் போட்டுக் கொண்டிருந்தார், என்னடிம்மா இது? என்னை கூப்பிட்டனுப்பிவிட்டு நீ குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறாயே, எழுந்திரு எழுந்திரு குழந்தைக்குப்பால் கொ, நான் காப்பாத்தியாகிவிட்டது என்று சொல்லிவிட்டு என்னைத் தட்டி ஏழுப்பினதுபோலக் கனவு கண்டு திடீரென்று விழித்துக் கொண்டு பார்த்தேன் அதிசயத்தைப் பாரு, அம்மா - பாலாவது, காபியாவது கொடு, ரொம்பப் பசியாக இருக்குது என்று குழந்தை கேட்டானே! ஏழுமலையான! உன்னோட மகிமை என்று சொல்லிக் கொண்டே, ஓடிப்போய், காப்பி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தேன், நாலு முழுங்குட சாப்பிட்டான், மளமளன்னு ஜ÷ரம் இறங்கி, கோழி கூவும்போது, உடம்பு கொதிப்பே இல்லை, நாலே நாளிலே எழுந்து உட்கார்ந்தனே! இதுக்கு என்ன சொல்கிறே? நாற்பது நாள் காய்ச்சல் - நாலு டாக்டர் பார்த்தாச்சி - கொடுக்காத மருந்து உண்டா - எதுக்கும் மசியாத அந்த விஷஜ÷ரம் ஏழுமலையான் பேரைச் சொல்லிக் கங்கணத்தைக் கட்டினதும் டக்குன்னு ஓடியே போயிட்டுதே!”
“இதெல்லாம் ஒரு அதிசயமில்லாடிம்மா! நம்ம ஐகாம்பரத்தோட சம்சாரம் எலும்பா உருகிக்கொண்டு வந்தாளா? ஒவ்வொரு ஆஸ்பத்திரி படிக்கட்டும் ஏறி ஏறி இறங்கியாச்சி, பட்டணத்திலே இருந்து ஐகாம்பரம், பணமென்று பார்க்காமத்தான் விதவிதமான மருந்து வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தான், அவளுடைய குடலே வெந்து போயிட்டுது மருந்து மேலே மருந்தாச் சாப்பிட்டதாலே இனி எது அவள் பிழைக்கிறது? அவ்வளவுதான் அவன் கொடுத்து வைத்தது என்று எல்லோரும் சொல்லியுமாச்சி வேலை செய்யறா இல்லை, வங்கம்மா, ஐகாம்பரம் வீட்டிலே, ஆவ சொன்னாளாம, எத்தனையோ வைத்யம் செய்து விட்டிங்க, குணமாகவில்லை, நான் ஒரு யோசனை சொல்கிறேனுங்க, ஏழையாச்சேன்னு தள்ளிவிடாதிங்க, நம்ம பெரியதொரு மசூரி இருக்க பாருங்க அங்கே, தொழுகை நடத்திவிட்டு வாரர்களே அந்த நேரமா ஒரு பதினைந்து நாளைக்குப் போகணும், தொழுதுவிட்டு வெளியே வருகிறவங்க ஊஸ்! ஊஸ்!னு முகத்திலே எதிவிட்டுப் போவாங்க, எப்படிப்பட்ட வியாதியா இருந்தாலும், பஞ்சு பஞ்சாப்பறந்து போகுதுங்க, அதைக் கையாண்டு பாருங்கன்னு சொல்லியிருக்கா, ஏழை பேச்சு அம்பலத்திலே ஏறுமா? அடிபோடி முட்டாளே! ஆனானப்பட்ட டாக்டர்கௌல்லா; சாதிக்காத காரியத்தை, மசூதிக்குப் போய்விட்டு வருகிறவங்க வாயாலே எதுவதாலேயா சாதிக்க முடியும் என்று கேலி செய்தார்களாம். ஐகாம்பரம் எதற்கும், அதையும்தான் செய்து பார்த்துவிடுவோம் என்று மசூதிக்கு அழைத்துக் கொண்டு போனானாம், சரியா பத்தாம்நாள், ஆவ உடம்பு பசபசன்னு ஒரு புதுமேனி போட்டு, இப்பப் பார்த்தேன், நோய்நெடி ஒண்ணுமில்லை, அன்னாசிப்பழம் போல இருக்கிறா, இது அல்லவா அதிசயம்? ஆறுநூறு இதுவரை செலவாகிவிட்டிருக்குது, மருந்துக்கு, ஒரு காலணா செலவு கிடையாது. மசூதிக்குப் போய்வந்ததிலே, நோய் ஒழிந்தே போச்சே, இதுக்கு என்ன சொல்கிறே?”

“இமாமாம்! அப்படிப்பட்ட அதிசயமெல்லாம் நடவாமலா இருக்கு? நம்ம வீராசாமி, இரண்டாவது கலியாணம் செய்துகொண்டாகணும்னு கிளம்பிவிட்டானே, கலியாணமாகி வருஷம் எட்டு ஆகுது, குழந்தை இல்லையேன்னு, டானிக்குமேலே டானிக்கு வாங்கித்தான் கொடுத்தான் தமயந்திக்கு. அவளும் சாண்டோ மாதிரி ஆயிட்டா, ஆனா குழந்தை இல்லை. நம்ம வினை அது, அதுக்காக நாமென்ன செய்யறதுன்னு ஆவ பொலம்பிக் கொண்டி ருக்கச்சே, தோட்ட வேலை செய்யலே தொப்பை, அவன் தெய்வம் போல வந்து சேர்ந்தான். இதுக்காக எம்மா கவலைப்படறிங்க, விரிஞ்சிபுரம் கோயிலுக்கு வேண்டுதலை செலுத்தினா, வேண புள்ளை பொறக்குதுன்னு சொன்னானாம். அந்தப் பொண்ணு, புருஷனோட சொல்லி, இந்த ஒரு முறையையும் செய்து பார்த்து விடுவோம், இதிலேயும் பலன் ஏற்படவில்லைன்னா, உனக்கு நானே ஏன் தங்கச்சியை இரண்டாம் தாரமாகக் கட்டி வைக்கிறேன்னு சத்தியம் செய்து கொடுத்தாளாம். விரிஞ்சிபுரம் போயிருக்காங்க. அங்கே குளித்துவிட்டு, உரப்புடவையோடவே, இராத்திரிக்கு, கோயில் மண்டபத்திலே படுத்துக் கொள்றதாம், கனவிலே சாமி வருமாம், சாமி! பூ பூக்கோணும்னு நாம்ப கேட்டதே, பூ பூத்துவிடும் ன்று சொலலி வரம் கொடுக்குதாம். சில பேருக்கு முத நாளே கொடுக்கறதுண்டாம், சிலபேர் மாதக்கணக்காகப் போய்தான் வரம் வாங்கமுடியுமாம். யாரார் எவ்வளவு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறார்களோ அவ்வளவுதானே கிடைக்கும். இவளோட ஆதிர்ஷ்டம் விரிஞ்சிபுரத்திலே ஐழாம் நாளே வரம் கிடைச்சிருக்குது - இப்ப கொழந்தைக்கு இறாம் மாசம், கொழு கொழுன்னு இருக்கிறான், விரிஞ்சியப்பன்னு பேரு வைச்சிருக்காங்க. இதுக்கு என்ன சொல்றே? ஒரு மருந்தில்லை, ஊசியில்லை, பத்தியமில்லை, தைலமில்லை, உரத்துணியோட படுத்துக் கொண்டு பயபக்தியோட வேண்டிக்கொண்டா, போதும்! அதிசயமா இல்லையா?
கங்கணம்
முடிக்கயிறு
முழுக்குப் போடுவது
தாயத்து அணிவது
இவை போன்றவை மூலம் தீராத வியாதியெல்லாம் தீர்ந்து போகும் என்று மூதாட்டிகள் மட்டுமல்ல, மற்ற பல துறைகளிலே புதுமை அளித்திடும் வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றுப் பலன் காணும் கற்றறிவாளர்களிலே கூடப் பார், பேசுகின்றனர் - நம்புகின்றனர் - நம்பாதவர்களுக்கு வாதங்கள்கூடச் செய்ய முன்வருகின்றனர்.

மூதாட்டிகள் மாயம் மந்திரம் தெய்வானுகூலம் என்பவைகள் மூலம், எத்தகைய வியாதியும் தீர்ந்து போகும் என்று கூறம்போது, பாட்டி! இது உண்மை என்றால், இவ்வளவு சுலபத்திலே நோய் தீரவழி இருக்கும்போது, கோடிகோடியாகச் செலவிட்டுப் புதிய புதிய ஆஸ்பத்திரிகள் கட்டுவானேன், இலட்ச இலட்சமாகக் கொட்டி மருந்துகளை வாங்கவானேன், ஆயிரக்கணக்கிலே பணம் வாங்கிக் கொண்டு டாக்டர்கள் வேலை செய்வானேன், பிள்ளைப்பேற்றுக்கு விரிஞ்சிபுரம், பேய்பிடித்து இடினால் சமயபுரம், பயிற்றுவலிக்கு வள்ளிபுரம், காய்ச்சலுக்குக் காசீபுரம், இருமலுக்குத் தாராபுரம் என்று இப்படி எங்கெங்கே போனால் அதிசயம் மகிமை கிடைக்குமோ அதன்படி நோயாளிகளை அனுப்பி நொடியிலே சுகமாக்கிக் கொள்ளலாமே! எதற்காக வைத்தியத்துக்கு ஒரு படிப்பு - ஒரு பட்டம்! ஆஸ்பத்திரியிலே ஏன் இவ்வளவு டாக்டர்கள்? - என்று கேட்டோமானால், அவர்கள் நம்மிடம் வீரதீரமாக வாதாட வருவதில்லை, அன்புடன் பார்த்து, “அதெல்லாம் எப்படி என்று எனக்குச் சொல்லத் தெரியாதடா அப்பா - இதுக்கெல்லாம் அர்த்தமும் தெரியாது எனக்குத் தெரிஞ்சது, அந்த அதிசயமமெல்லாம் இருக்குது என்பதுதுôன். மத்ததைப் புரிந்து கொள்ள, நான் என்ன ஆயிரம் பத்தாயிரம் செவழிச்சா உன்னைப் போலப் பிடிச்சிருக்கிறேன்” என்றுதான் பேசுவார்கள். அந்த மூதாட்டிகளை, அவர்களுடைய வெள்ளை உள்ளத்துக்காகவும், நாணயமான நம்பிக்கைக்காகவும்! மதிக்கக்கூடச் செய்யலாம், ஆனால் ஆபரேஷன், இனாகுலேஷன், இன்ஜக்ஷன், ரேடியம் ட்ரீட்மெண்ட், ஏக்ஸ்ரே, ஆல்ட்ரா வயல்ட் ரே - என்று ஆள்ளி ஆள்ளி வீசுவார்கள், வைத்ய சம்பந்தமாகப் பேசும்போது, டாக்டர் ரங்காச்சாரி இவ்வளவு திறமையானவர், டாக்டர் ராஜன் இவ்வளவு பெரிய ஆபரேஷன் செய்தார் என்று பெருமையாகப் பேசுவார்கள் இன்னின்ன வியாதிக்கு இன்னின்ன மருந்து சாப்பிடலாம் என்று குட்டி டாக்டர் போலவே பட்டியல் தருவார்கள், இன்னின்ன பொருளில் இன்னின்ன பொருளில் இன்னின்ன வைட்டமின் இருக்கிறது என்று சொல்லுவார்கள், இவ்வளவு மேதாவித்தனத்தையும் காட்டிவிட்டு, அதே மூச்சில், கங்கணம், கயிறு கட்டுதல், முழுக்குப் போடுதல், பேய் ஓட்டுதல் போன்ற பாட்டி முறைகளுக்கும் ஆதிதீவிர வக்கீல்களாகி, தீர்பப்பே அளித்துவிடுவார்கள்.

மாயம், மந்திரம், மருந்து - மணிமந்திர ஓளஷதம் - என்று நிலைமை வளர்ந்துவிட்டது, ஆனால் வளருவதற்கு முன்னாலே, மடத்தனத்தால் தாக்கப்பட்டு, புத்தறிவு மெத்தச் சிரமப்பட்டிருக்கிறது.
குழந்தை வேண்டி கோயிலையோ மரத்தையோ சுற்றுவதோ, குளத்தில் மூழ்குவதோ, குளிசம் கட்டிக கொள்வதோ, இங்குமட்டுமல்ல, அறிவுக்கதிர் ஏழாமுன்பு, நாடு பலவற்றிலும் இருந்துதான் வந்தது.

நோய் நொடியே, உடலுக்குள் புகுந்துவிட்ட கிருமிகளின் விளைவு என்ற புத்தறிவு, இப்போதுதான் ஏற்பட்டது, பன்னெடுங்காலத்துக்கு முன்பிருந்து இங்கும், எங்கும், நோய், கடவுளின் கோபத்தாலோ அல்லது துர்தேவதையின் சேஷ்டையினாலோ ஏற்படுகிறது, எனவே துஷ்ட தேவதையை விரட்டுவதாலோ, கடவுளைச் சந்தோஷப்படுத்துவதாலோ நோயை நீக்க முடியும் என்று நம்பினர் மக்கள் - அந்த நாட்களிலே, பூஜாரிதான் டாக்டர், கோயில்தான் ஆஸ்பத்திரி! இன்று கோயில்களை ஆஸ்பத்திரியாக்கலாம் என்று ஓர் முயற்சியும் இருக்கிறது, ஆஸ்பத்திரிகளிலேயே ஒரு மூலையில் சிறிய கோயில்களைக் கட்டலாமா என்றும் முயற்சி இருக்கிறது. ரயிலேறி ராமேஸ்வர யாத்திரைக்குச் செல்பவர்களின் பிடி தானே அழுத்தம், இன்னும்! விமானத்திலே பயணமாகி, உள்ளூர் தெப்போற்சவம் தரிசித்துவிட்டு, மறுவிமானம் ஏறிச்சென்று, ஒக்ய நாடுகள் சபையிலே அறிவுரையாற்றுவோர், இருக்கிறார்களே! மாயம், மந்திரம், மருந்து என்கிறபோது, மற்ற நாடுகளில், மூன்று கட்டங்கள் வளர்ச்சிகள் என்ற பொருள் கிடைக்கிறது, இங்கோ, மாயமும் மந்திரமும் மருந்தும் என்று கூட்டிக் குழம்பிக் கொடுக்கப்படுகிறது! தெளிவு பெற விரும்புவோர், மருந்துதான் நோய் தீர்க்கும் முறை, மாயமல்ல, மந்திரமல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு, பிறநாட்டு அறிவாளர்கள் எவ்விதம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள், எத்தணை ஆராய்ச்சிகளை நடத்தினர், எத்தனை விஞ்ஞான உண்மைகளெல்லாம் கண்டறியப் பட்டன, அவை மூலம், மனித குலத்தின் இடர்ப்பாடு, இன்னல், எந்த அளவுக்குக் குறைக்கப்பட்டு, இதம், இன்பம், கிடைத்திருக்கிறது என்பது பற்றிய வரலாறு படித்தறிய வேண்டும். ஒரு கட்டுரை மூலம், அதற்கான இவலைத்தான் தூண்டலாம், வரலாறு தரமுடியுமா!

மண்டை ஓடுகள், மிருகங்களின் பல், நகம், விதவிதமான வளையங்கள் மோதிரங்கள் - இவைகளெல்லாம் நோய் போக்கும் சாதனங்களாக இருந்து வந்தகாலம் மாறி இன்று, நோய் தீர்க்கும் முறை, உடலைப் பேணுவதும், உடலை அரிக்கும் கிருமிகளை அழிப்பதும் என்ற காலம் நடந்து கொண்டிருக்கிறது.

மண்டை ஓடுகளை மாலையாகப் போட்டுக் கொண்டால் மரணதேவன் அருள் கிடைக்கும், அவன் அருள் இருப்போரிடம் எந்த நோய் நொடியும்ம அணுகாது, ஏனெனில் எந்தத் துஷ்ட தேவதையு; அவனைப் பிடித்தாட்டத் துணிவு கொள்ளாது - என்று எண்ணினர், காடுகளில் உலவிக் குகைகளில் வசித்து, இறைச்சியைப் பச்சையாக ண்டு, வாழ்வு நடத்தி வந்தவர்கள், காடு நாடாகி, குகை மாளிகையாகி, உடை, உணவு ஊராள்முறை, எல்லாம் மாறிய பிறகும், மண்டை ஓடு மாலையானால் மாமருந்தாகும் என்ற பழைமை அடியோடு மறைய மறுக்கிறது. இப்போது அதன் விட்டகுறை தொட்ட குறைபோல், நவரத்ன மாலை அணிந்து கொண்டால், இன்னின்ன நோய் ஆண்டாது என்று செல்வர்களும், நீறு பூசி உருத்திராட்சம் அணிந்து கொண்டால், எந்த நோயும் தீண்டாது என்று சைவர்களும், திருத்தூய் மாலை அணிவோரைத் தீவினையும் தீண்டாது நோய் நொடியும் ஆண்டாது என்று வைணவர்களும், நூற்றெட்டு முடிபோட்ட கறுப்புக் கயிறு போட்டுக் கொண்டால், ஆயிரத்தெட்டு வியாதியும் நெருங்காது என்று அடுத்த வரிசையினரும் பேசுகின்றனர், பகுத்றதறி வாளர்களை ஏமாறச் சொல்கிறார்கள் புராணீகர்கள்.

இந்த நாட்டுப் புராணீகர்களைப்போலவே கிரேக்க ரோம் நாடுகளிலே இருந்தவர்கள், ஆண்டப் புளுகுகளைச் சுவையுள்ள கதைகளாக்கி, அந்தக் கதைகளைக் கடவுள் சித்தமாக்கி, மக்களின் மதியை மாய்த்ததிலே மிக வல்லுநர்களாக இருந்தனர். அவ்வளவு புராணத்தையும் அங்கு நெறிந்ததால்தான், முதல் பகுத்தறிவுவாதி எனத்தகும் சாக்ரடீஸ் கிரேக்க நாட்டிலே புறப்பட வேண்டி இருந்தது.

நோய் நொடிகளைத் தெய்வமேனும், தீய தேவனேனும் தருவர், பூஜை நோன்பு விரதம், இவை மூலம் நோய்நொடி தீரும் என்று பொதுவாகக் கூறியதுடன், திருப்தி கொள்ளவில்லை, பண்டைய கிரேக்க ரோமானிய நாடுகளின் புராணீகர்கள். ஒவ்வொரு வியாதிபோக ஒவ்வொரு தனிதெய்வம்! கண்வலி தீர்க்கும் வல்லமை கொண்ட தெய்வத்திடம் சென்று, நாளெல்லாம் முறையிட்டாலும், கால்வரி தீராது - அதே இலாகா வேறோர் தெய்வத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது! இப்படி ஒவ்வொர் நோய்க்கு ஒவ்வோர் தெய்வம் என்று குறித்து, பக்தர்களைக் கசக்கிப் பிழிந்து, கொழுத்திடும் பூஜாரிக் கூட்டம் - புரட்டர் படை - அந்த நாடுகளிலே ஆதிக்கம் செலுத்திற்று.

கிரேக்க நாடு மக்கள் மனதைக் கப்பிக் கொண்டிருந்த இருளை முதலில் ஓட்டிட முனைந்தது, பிற நாட்டவரின் தலைகளை வெட்டிக் குவித்துக் கொண்டு, உலகை ஒரு குடையின்கீழ் ஆள்வதற்கான திட்டம் வகுத்துக் கொண்டிருந்த நேரம் நாடோ, கிரேக்க நாட்டிலே பகுத்தறிவுக் கதிர் பரவிய பிறகும், கருத்துக் குருடர்களின் காலடி விழுந்து கிடந்தது.

சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்ட்டாடில் - எனும் கிரேக்க நாடு தந்த அறிவுக் கருவூலங்கள் ஒவ்வோர் துறைக்கும், இன்றும், இசான்களாக வழிகாட்டிகளாக எங்ஙனம் கொள்ளப் பட்டுள்ளனரோ, கொண்டாடப்பட்டு வருகின்றனரோ, அதுபோலவே மருத்துவ முறை எனும் துறைக்கு முதல்வர் என்ற சிறப்பிடம் பெற்றுத் திகழ்பவர், இன்றும் பாராட்டப்படும் நிலையில் உள்ளவர் கிரேக்க நாட்டவர்தான் - ஹிப்போகிராடிஸ் எனும் பெயர் கொண்டவர்.

ஹிப்போகிராடிஸ் மருத்துவ மாமன்னராகத் திகழ்ந்தார், அவர் கண்டறிந்ததும், கொண்டிருந்துமான மாண்பு, இன்றும், மருத்துவத் துறையினரின் இலட்சியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

ஆவரிடம் பயிற்சி பெற்று மருத்துவத் தொழிலைத் திறம்படப் பலர் செய்து வந்தனர், குறிப்பாகப் பிள்ளைப்பேறு ஆபத்தின்றி இருப்பதற்காக அவர் வகுத்தளித்த வழிமுறைகள் மிகச் சிலாக்கியமானவை. பிள்ளைப்பேறு ஆபத்தின்றி இருப்பதற்கான முறைகளை மருத்துவ மாதர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

பிள்ளைப்பேற்றுக்காக, மருத்துவமுறை அறியாதார், நடுக்கமளிக்கக்கூடிய, கொடுமை நிரம்பிய வழிகளையே வைத்திருந்தனர்.

கருவிலிருக்கும் குழவி, வெளியே வரத்துடிக்கிறது, ஏனெனில் அதற்கு அவ்வளவு பசி - எனவே கர்ப்பிணியின் எதிரில் விதவிதமான பண்டங்கள் பலகாரங்களை வைத்தால், அந்த வாடை கண்டு குழந்தை வெளியே வந்துவிடும் என்றெண்ணி, உணவுப் பொருளைக் குவித்து வைப்பார்கள் கர்ப்பிணி எதிரில், இதுவாவது வேடிக்கை என்று கருதக் கூடியது. கொடுமையான வேறு எத்தனையோ முறைகள் இருந்து வந்தன.

கருவில் இருக்கும் சிசு வெளியே வராமல் நம்மை ஐதோ விளையாட்டுக் காட்டுகிறது என்று கருதிக் கொண்டு, கர்ப்பிணியைத் தூக்கி, தலைகீழாக்கிக் குலுக்குவார்களாம் - கண்ணாடி சீசாவுக்குள் அடைபட்டுக் கொண்டுள்ள கார்க் வெளியே வந்து விழுவதற்காகச் செய்கிறேமே அதுபோல! மரத்தில் கட்டித் தொங்கவிடுவதுதான் பலனளிக்கும் முறை என்று கருதினர் சிலர். மற்றும் சிலர், கர்ப்பிணியின் வயிற்றிலே ஏறி மிதிமிதி என்று மிதிப்பாளர்களாம், பிரசவத்துக்காக! எல்லா முறைகளையும் தூக்கி அடிக்கத் தக்கதான வேறோர் முறையை மலைவாசி மக்கள் கொண்டிந்தனர் ஒரு திடலில், கர்ப்பிணியை ஒரு கம்பில் கட்டி வைத்து விடுவார்கள், எதிர்ப்புறமிருந்து குதிரை வீரனொருவன் - ஆவளை மிதித்துத் துவைத்து விடுவதுபோல - அந்தப் பயத்தால் பிரசவம் ஆகிவிடும்.

இவ்விதமெல்லாம் இருந்த நிலைமையை மாற்றி, ஹிப்போகிராடிஸ் மருத்துவ முறையைப் புகுத்தினார் - அறிவுத் தெளிவு என்பது வெகுவாகப் பரவிவிட்ட பிறகு அல்ல - குருட்டு நம்பிக்கைகள் கப்பிக் கொண்டிருந்த நாட்களில் ஏறத்தாழ கி.மு. 450ல்.

ஹிப்போகிராடிசின் நாட்களிலே எத்தகைய மூட நம்பிக்கை இருந்து வந்தது என்பது, மருத்துவ தேவன் பற்றிய புராண மூலமே தெரிகிறது.

மகாதேவன் ஜ÷வஸ் முன் மண்டியிட்டு நின்றபடி மரணதேசன் ப்ளூடோ, மகாப் பிரபு! ஏன் மண்டலத்துக்கு இப்போது அதிகமான மக்கள் வருவதில்லை, அதற்கோர் பரிகாரம் தரவேண்டும் என்று முறையிட்டான்.

மகாதேவன், இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்று யோசித்தான், புரிந்துவிட்டது.

ஆபோலோ தேவனுடைய குமாரன் ஆஸ்குலாபஸ் என்பான் மருத்துவ முறைகளை அறிந்து, மக்களின் மரண பயத்தைப் போக்கிவந்தான், அவனுடைய உதவியினால் மக்கள் ஆபத்தான வியாதிகளினின்றும் தப்பித்து வந்தனர், மரண எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

நல்லதுதானே! மரணத்தைத் தடுத்திடும் ஆஸ்குலாபஸ் வணக்கத்துக்குரிய தேவனாகத் தானே கொண்டாடப்படுவது முறை என்பர்! கிரேக்க மக்கள் அதுபோலத்தான் சய்தனர், மருத்துவ தேவனுக்குக் கோயில் கட்டினர், கோலாகலமான திருவிழா நடத்தினர்.

கிரேக்க மக்கள் இங்ஙனம், மருத்துவ தேவனைப் பூஜித்து வந்தனர், ஆனால் கிரேக்கக் கடவுளரோ, அவன்மீது கடுங்கோபம் கொண்டனர்.

தங்கள் எல்லோரையும்விட அதிகமான பூஜைகள் பெற்று ஆமோகமான செல்வாக்குடன் மருததுவதேவன் விளங்குவது மற்றக் கடவுள்களுக்குப் பிடிக்குமா? பொறாமை, கோபம்! குறிப்பாக மரணதேவனுக்குத்தான் அதிகமான கோபம், தன் மண்டலத்துக்கு வருகிற மக்கள் தொகை வரவரக் குறைகிறது என்று.

மகாதேவனாம் ஜ÷வஸ், மரணதேவன் முறையீட்டைக் கேட்டு, தன் இடியாயுதத்தை வீசி மருத்தவ தேவனைச் சாகடித்தார். மீண்டும் மரணத்தேவனுடைய ஆதிக்கம் பூலோகத்தில் செல்வாக்குப் பெறும் என்ற நம்பிக்கையில்.

மரணபயமற்றுப் போனால் மக்கள், கடவுளையும் மறந்து போவர் என்பது பூஜாரிக்கூட்டத்தின் போதனை.

எனவேதான், கடவுளில் யாரேனும் ஒருவர், மரணத்தை நீக்கிவிட முனைந்தாலும், மகாதேவன் சும்மாவிடமாட்டார் என்று கூற, இப்படி ஒரு கதை - புண்ய கதைதான் - கட்டினர்.

மருத்துவதேவன் கொலுவீற்றிருந்த கோயிலுக்கு, பிணிகொண்டோர் வருவர், விதவிதமான பூஜை முறைகளைக் கூறுவர் பூஜாரிகள், காணிக்கை பெறுவர், நோய் தீராவிடினும், நோயாளியாவது தீர்ந்து போவான் - கடவுள் சித்தம் என்று இருந்து விடுவர்.

அப்படிப்பட்ட தேவலாயத்தையே, பிறகு, மருத்துவ விடுதியாக்கினர், கிரேக்க நாட்டு அறிவாளர்கள்.

கிரேக்க நாடு இதுபோலப் பகுத்தறிவுத்துறையில் முன்னேறிற்று, ரோம் நாடோ, ரணகளத்தில் தன் வெற்றிகளைக் கண்டு, அங்கு கிடைத்த செல்வத்தைக் கொண்டு, கோலாகலமான திருவிழாக்கள் நடத்திக் கொண்டு வந்தது, பூந்தோட்டத்தில் புதுமலர் போதுமான அளவு காணப்படாவிட்டாலும், பூவையர் மதலையரைப் பெற்றெடுக்காவிட்டாலும், எந்தக் குறைபாடானாலும், ஏதாவதொரு தேவனுக்குப் பூஜை செய்வர், வரம் கேட்பர்!

கிரேக்க நாட்டு மருத்துவர்கள், இத்தகையை கண்டனங்களைப் பொருட்படுத்தாமல், தமது பணியினைத் தொடர்ந்து நடத்தினர், வெற்றி பெற்றனர். மருத்துவமுறை, ரோம் நாட்டிலேயும் நிலைத்தது. ஆனால் மீண்டும் ஒரு ஆபத்து எழுந்தது.

ஒரோப்பிய நாடுகளில் கிறிஸ்துவ மார்க்கத்துக்கு மட்டற்ற செல்வாக்கு வளர்ந்து, மார்க்கக் காவலர்கள், குறிப்பாக மடாலயத்தினர் வார்த்தையே வேதம் என்ற அளவுக்கு நோய் மூண்டுகிடந்தது. எந்தத் துறையிலே புதிய கருத்து வெளியட ஆராய்ச்சியாளர் முனைந்தாலும், மடாலயத்தினர், புருவத்தை நெறித்து “புல்லர்காள்! புவியாளும் உசன் அனைத்தையும் அறிவித்து விட்டான், தர வேண்டியதனைத் தந்துவிட்டான், அத்துடன் திருப்தியடையாமல், ஆராய்ச்சி என்ற கூறுகிறீர், புதுக் கருத்துக்கள் என்று குளறுகிறீர், புதுப் பொருள்களை நாடி அலைகிறீர் இது பெரும்பிழை, பெரும் பாதகம்” என்று கூறினர். ஆராய்ச்சியாளர்கள் அஞ்சி வாழ்ந்திட வேண்டிய நிலை ஏற்பட்டது, ஏனெனில் மத அதிபராகக் கோலோச்சி வந்த போப்பாண்டவர், ஆராய்ச்சியாளர்களை, மாபாவிகள் என்ற சபித்துவிடும் அதிகாரம் பெற்றிருந்தார், மண்டிலங்கள் பலவும் அந்த அதிகாரத்துக்குத் தலை வணங்கின.

இதிநாட்களிலே கிரேக்க நாடு, பகுத்தறிவுக் கதிரொளியைப் பரப்பியபோது, எந்த ரோம் ஏள்ளி நகையாடியும், எதிர்த்துப் போராடியும், வைதீகத்துப் பாசறையாக இருந்து வந்ததோ, அதே ரோம் நகரமே, புனதத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் புத்தறிவைப் பொசுக்கியாக வேண்டும் என்று துணிந்து கிளம்பிய மத அதிபராம் போப்பாண்டவருக்குக் கோயிலாயிற்று.

பிள்ளைப்பேறு, பெண்களின் உயிரைப் போக்கிடும் அளவுக்கு ஆபத்தானது, அதுமட்டுமல்ல, அதுபோது மாதர்கள் அடையும் வேதனை சொல்லுந் தரமன்று எனவே, மருத்துவ முறை ஆராய்ச்சியாளர்கள், பிள்ளைப்பேறு அதிக வேதனை இல்லாமலிருப்பதற்கான வழி கண்டறிய முனைந்தனர். சுகப்பிரசவத்துக்காகக் குறிப்பாகவும், பொதுவாகவே ஆறுவையின்போது (ஆபரேஷன்) அதிக வேதனை தெரியாமலிருப்பதற்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி, சிகிச்சை பெறுவோருக்கு மயக்கமருந்து அளித்து அவர்கள் தம்மை மறந்து இருக்கும்போது, ஆபரேஷனை நடத்துவது என்ற மருத்துவ வல்லுநர் கூறினர் அதற்கான மருந்து வகையும் தயாரிக்கப்பட்டது, மதவாதி இதை ஏற்றுக் கொள்ளவில்லை - வேதனையை அவள் அனுபவிக்க வேண்டும் என்பது ஐயன் சித்தம் அதை மாற்றிட நீ யாரடா அறிவிலி! என்று கேட்டு ஆர்ப்பரித்தனர்.

அதற்கு வேத புத்தகத்திலிருந்து இதாரம் காட்டினர் மதவாதிகள்.

பைபிளில் ஓரிடத்தில் “வேதனைக்கிடையே பிள்ளையைப் பெற்றெடுத்தல்” என்று ஓர் குறிப்பு காணப்படுகிறது, கர்த்தர் இங்ஙனம் கூறியிருக்கிறபோது, கர்ப்பிணியின் வேதனை அவளுக்குத் தெரிய ஓட்டாமல், மயக்க மருந்தளிப்பதன் மூலம் தடுப்பது, பாபமல்லவா? பரமன் இதை அனுமதிப்பாரா? வேதனையின்றிக் குழந்தை பிறந்திட வேண்டும், என்று கூறுகிறார்களே, மருத்துவம் படித்து மாபாவிகளானோர், வேதனையை அனுபவிக்கத் தான் வேண்டும் என்று வேத புத்தகம் கூறுகிறதே அதற்கெ கூறுகின்றனர்? கர்த்தருக்கு இருப்பதைவிடவா இக்கயவர்களுக்கு மக்களிடம் கனிவு! ஆண்டவனுக்குத் தெரியாததையா இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்! எவ்வளவு கருவமிருந்தால் வேதத்தில் கூறியிருப்பதை மாற்றத் துணிவு பிறக்கும்? பிள்ளைப் பேற்றின் போது மாதர்கள் வேதனைப்படுவதுதான் முறை - அதை மாற்றுவது பச்சை நாத்தீகமாகும் - என்று கூறி, மதக் காவலர் தீவிரமாக எதிர்த்தனர்.

இன்று, இத்தகைய எதிர்ப்புப்பற்றி படித்திடும்போது, நமக்கெல்லாம் சிரிப்புக்கூட வரும் - இதற்கா தகறாரு! என்ற கேட்போம். ஆனால், பிள்ளைப்பேறு வேதனையுடன் இருப்பது முறையா, வேதனையைப் போக்குவது முறையா என்ற பிரச்சினை, பல்கலைக்கழகங்களிலும் பாதிரிமார் கூட்டங்களிலும், கிளப்பிய பொறிகள், நாடெங்கும் தெறித்து, எத்தணையோ சச்சரவுகளை, விவாதங்களை, விரோதங்களை மூட்டிவிட்டன.

“பக்தர்களே! பரமனருளை இழக்கச் சம்மதிக்காத பக்தர்களே! கேளுங்கள். பிள்ளைப்பேறு வேதனையுடன்தான் இருக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது - இதற்கு இதாரம் தேவையில்லை - வேதத்தைப் பாராயணம் செய்யும் பக்தர்களல்லவா நீவிர் - ஆனால் இந்த வேதனையைத் துடைத்திடத் துடிக்கிறார்களே இந்த ஆராய்ச்சியாளர்கள், அவர்களை நான் கேட்கிறேன் - நாதன் பெயால் கேட்கிறேன், நமது புனித மார்க்கத்தின் பெயரால் கேட்கிறேன், மாதர்கள் பிரசவ வேதனைப்படவேண்டும் என்று ஏன் கர்த்தர் கூறுகிறார்? அதற்கென்ன காரணம்? மக்களுக்குத் தேவையல்லாததையா தேவன் தருவார்? வேதனைப்படத்தான் வேண்டும் என்று கர்த்தர் கூறியதற்குக் காரணம் என்ன? இதை ஆராய்ந்து பார்த்தார்களா, இந்த ஆராய்ச்சியாளர்கள்? எதை எதையோ ஆராய்கிறார்களே? கிருமிகளைப் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து ஆராய்கிறார்களாம்! இவைகளை ஆராய்கிற இவர்கள், கர்த்தரின் கட்டளைக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தனரா? இல்லை! ஏன்? முடியாது? ஏன் முடியாது? இவர்கள் மற்ற ஆராய்ச்சிகள் நடத்தும்போது, செத்துப் போன தவளை, புழுத்துப்போன பழம், அழுகிப்போன உடல், இவைபோதும் - நான் கூறும் ஆராய்ச்சிக்கு, பக்தி ததும்பும் மனம் வேண்டும், அதிலே நாதன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் - இந்த மாபாவிகளிடம் பக்தியும் நம்பிக்கையும் கிடையாது - ஆகவேதான் அவர்களால் கர்த்தர் வாக்கின் பொருளை அறிந்து கொள்ள முடியவில்லை.

கர்த்தர், திட்டவட்டமாகக் கூறிகிறார், பிரசவ வேதனை இருக்க வேண்டும் என்று, காரணம் என்ன? காரணம் தெரியுமா? பிரசவ வேதனை இருந்தால்தான் பக்தி பரவுகிறது.

வேதனையுடன் அந்த மாது குடிக்கும்போது, எத்தனை ஆயிரம் தடவை கர்த்தரின் நாமத்தை ஜெபிக்கிறாள், அன்னை மேரியின் பெயர் கூறி பஜிக்கிறாள். அறிவீர்களா?

கர்த்தரே சரணம்! கர்த்தரே, காப்பாற்றும்! ஏசுநாதா, ஏன் வேதனை தீர்த்திட வாரும்.

மாமணியே, மரியம்மையே, இந்தப் பாபிமீது இரக்கம் காட்டும்.

என்று, இதயத்திலிருந்து, பக்தி வெளி வருகிறது. வேதனைப்படும்ம மாது மட்டுமல்ல, அந்த வேதனையைக் கண்டு மணாளனுக்கும், பெற்றோருக்கும் வேதனை - எனவே அவர்களும், பஜிக்கிறார்கள் - கர்த்தரின் நாமத்தை எல்லோரும் பஜிக்கிறார்கள் - பிரசவ வீடே, பஜனைக் கூடமாகிறது - கர்த்தரின் மீதுதான் அனைவரின் கவனமும் செல்கிறது - அனைத்துக்கும் அதிகாரி அவரே என்ற புத்தி பிறக்கிறது - படைத்தவன், இதோ துடித்திடச் செய்யவும் முடியும் என்பதைக் காட்டுகிறான், அவன் நாமத்தை ஜபித்தால், அவனே ரட்சிக்கவும் செய்வான் என்ற நம்பிக்கை கிடைக்கிறது.

பொதுவாகக் கூறுவதானால், பிரசவ வேதனை, வேதமார்க்கத்தின்மீது அனைவருக்கும் புதிய நம்பிக்கை ஏற்பட உதவுகிறது. கர்த்தரின் புகழ் பரப்பும் புனித காரியம் அது! பக்தியைப் பரப்பும் காரியம்! தேவாலயத்திலே இசை மூலம் பக்தியைப் பெறுகிறோம் - பிரசவ விதிகளிலே, வேதனைக் குரலொலியே, பக்தியை மேலும் தூண்டிவிட உதவுகிறது. சுடர்விட்டெரிகிறது பக்தி!
இதற்காகத்தான் கர்த்தர் வேதனையுடன்தான் பிரசவம் இருக்கவேண்டும் என்று சொன்னார் - இந்த விதாண்டவாதிகளின் போக்கை இப்போது என்னவென்று கூறுகிறார்கள்? - என்று பாதிரியார், விளக்கமளித்துக்கேட்பார், பாமர மக்கள், மருத்துவர்கள் மாபாவிகள்! கர்த்தருக்குத் துரோகமிழைக்கும் கயவர்கள்! - என்று கூறிச் சீறுவர்.

இதுபோன்ற எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு சிம்சன் எனும் மருத்துவ வல்லுநரைம ஒரு பெரிய விளக்க ஐடே தீட்டச்செய்தது 1857ல்!

வேத புத்தகத்திலிருந்து பாதிரிகள் இதாரம் காட்டிக் கண்டித்தனர் - வேதபுத்தகம் உள்ளத்தைப்பற்றியது, மருத்துவம் உடற்கூறு பற்றியது - வேதத்தில் இதற்கான இதாரம் காட்டுவது பொறுத்தமற்றது என்று இன்று கூறிவிடலாம். அப்போது அங்ஙன் கூற முடியாது - எனவே சிம்சன் வேதத்திலிருந்தே, தமக்கு ஆதரவான கருத்தளிக்கும் வாசகத்தைத் துருவித் துருவி ஆராய்ந்து அந்த ஏட்டிலே காட்டினார்.

வேதனையைக் குறைக்கக்கூடாது என்று கர்த்தர் ஒரு போதும் சொல்லவில்லை ஐயா! பிரசவம், வேதனை தருவது என்று மட்டும் சொன்னாரே தவிர, அந்த வேதனையை நீக்கும் முறையே கூடாது என்று கூறவில்லை. கர்த்தரே, மயக்க மருந்தளித்து ஒரு ஆபரேஷன் நடத்தி இருக்கிறார் தெரியுமா! மயக்க மருந்தளித்து, ஆபரேஷன் நடத்திய முதல் டாக்டரே கர்த்தர்தான், அறிவீரா? என்று கேட்டார் சிம்சன்.

பாதிரிகள் பயந்து போயினர், அவர்கள் வேத புத்தகத்தையும், கர்த்தரின் கட்டளையையும் சிம்சன் மறுத்துப் பேசுவார் என்று எதிர்பார்த்தனர். சிம்சனோ ஏசுதான், மயக்க மருந்தளித்து ஆபரேஷன் நடத்திய முதல் டாக்டர் என்கிறார்!

எப்போது? யாருக்கு? எப்படி?

“கர்த்தரின் கட்டளைகளை நம்ப வேண்டும் என்று கூறி மிரட்டதான் தெரிகிறதே தவிர, கர்த்தர் என்னென் மகத்துவமான காரியமாற்றியிருக்கிறார் என்பதைக்கூடத் தெரிந்துகொள்ளவில்லையே, உங்களால் போகட்டும். நான் கூறுகிறேன் கேளுங்கள். வேதபுத்தகத்தை ஏடுங்கள் - என்னைக் கண்டிக்க, பலமுறை அந்தப் புனித ஏட்டினைப் புரட்டி புரட்டிப் படித்திருப்பீர்களே - மற்றோர் முறை பாருங்கள்?

எந்த இடம்? எதைக் குறிப்பிடுகிறீர்?

ஆண்டவன் மனிதனைப் படைத்திடும் கட்டம் இதோ பாருங்கள்.

“பிறகு கர்த்தர், நீண்டதோர் துயிலை இதாமுக்கு எட்டினார், தாம் துயிலலானான், அவனுயைட விலா எலும்பிலொன்றை எடுத்துவிட்டு, சதையை மூடிவிட்டார்” வேதத்தில் இருப்பதய்யா, பாதிரிமாரே! இதாமுக்கு ஆபரேஷன் - ஒரு எலும்பையே வெளியே எடுத்துவிட்டார் - பிறகு சதையைப் பழையபடி இக்கிவிட்டார்! ஆண்டவன் ஆபரேஷன் நடத்துவது ஆச்சரியமல்ல - வார்த்தைகளைக் கவனித்தீர்களா - இதாமை நீண்ட துயில் கொள்ளச் செய்தார்!

இதாமுக்கு நீண்ட தூக்கத்தை வருவித்தார்! ஏன்?

ஆபரேஷனால் இதாம் வேதனை அடையக் கூடாது என்றுதான்.

அந்த நீண்டதுயில், மயக்க மருந்தளித்துத்தான் ஏற்படுகிறது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆகவே, கர்த்தர்தான் எமக்கு வழிகாட்டி, அவர்தான் மயக்க மருந்தூட்டி ஆபஷேன் நடத்திய முதல் டாக்டர்”

இப்படி வாதம் நடத்தியிருந்தார் சிம்சன், தமது ஏட்டில்!

இவ்வளவும் இதற்கு மேலும் தேவைப்பட்டது மதவாதிகளின் எதிர்ப்புகளைச் சமாளிக்க, மதவாதிகளிடம் மக்களுக்கு அச்சம், அவர்களை மீறி நடந்தால் மாபாவம் சம்பவிக்கும் என்ற திகில். பாமரரின் அந்த அச்சத்தைப் போக்க, ஆராய்ச்சியாளர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல.

சந்தான சப்ரமஞ்ச கூடத்தில் சயனிக்க வாருங்கள்! நிச்சயம் கருத்தரிக்கும் - சொர்ணமயமான குழந்தை பிறக்கும்.

இவ்விதம் ஓர் விளம்பரம் வெளியிட்டான், சாகசப்புரட்டனொருவன்.

அந்த சப்ரமஞ்சம்ம மகிமை பொருந்தியது - தேவலோகத்தது - எனவே அதிலே தம்பதிகள் சயனித்தால், நிச்சயமாக சந்தான விருத்தி ஏற்படும் என்றான்.

மருந்து, மந்திரம், முழுக்கு, முடிக்கயிறு இவைகளை எல்லாம்விட, இந்த முறை சுவைமிக்கதல்லவா! எனவே இதற்குக் கிராக்கி அதிகமாயிற்று.

தம்பதிகள் கட்டணம் செலுத்திவிட்டு வருவர்.

இரோக்கிய இலயம் என்பது அதற்குப் பெயர், அங்குதான் இந்த மகிமை வாய்ந்த கட்டில், 1779ல்!
அவன் புரட்டனானாலும், நல்ல ரசிகன் என்று தெரிகிறது. படுக்கை அறையை அவ்வளவு அலங்காரப்படுத்தி வைத்திருந்தான். பளிங்குபோல் மின்னும் நாலுகால்களைக் கொண்ட அந்தக் கட்டில் காமக்களியாட்ட ஆர்வத்தைத் தூண்டிவிடத் தக்க கவர்ச்சிகரமானதாக்கப்பட்டிருந்தது. மலர்மாலைகள் கட்டிலின் பக்கங்களிலே தொங்கவிடப்பட்டன, தங்கமுலாம் பூசப்பட்ட ஊலோகத்தால் செய்யப்பட்ட மாலைகள், கட்டிலில் படுத்ததும், இனிமையான இசை கேட்கும் - அதற்கான விசையைக் கட்டிலிலே பொருத்தி வைத்தான். வேறுபுறமிருந்து ஆழகான ஒளி, படுக்கையின்மீது வீசும் ஓர் பொறியும் அமைந்திருந்தான்.

ஐம்பது பவுனுக்கு மேல் கட்டணம் செலுத்தி, ஓர் இரவு, அந்த சப்ரமஞ்ச கூடத்தில் சல்லாபித்திருக்கலாம்.

தம்பதிகளை இனிய மொழியால் வரவேற்க வனிதையர் சிலரை அமர்த்தினான். சல்லாபத்தை முடித்தக் கொண்டு தம்பதிகள், வெளியே புறப்படும் போது, விருந்துமளிப்பான். சுகானுபவத்தை ஆடைவதற்கான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தான் - இன்று சட்டப்படி தண்டனைக்குள்ளாக வேண்டிய செயல் - அன்று அது மகிமை என்று அறிவிக்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களின் எண்ணங்களை நாத்தீகம் என்று ஐசிக் கண்டித்த மதக்காவலர்கள், சந்தான சப்ரமஞ்சம் அமைத்த எத்தனைக் கண்டிக்க முன்வரவில்லை. இன்ப இரவு ஏற்பாடு தங்கு தடையின்றி மக்களுடைய ஏமாளித்தனம் இருந்தவரையில் நடைபெற்றது.

தங்கள் கோட்பாட்டைப் பொய்யென்று வெட்ட வெளிச்சமாக்காதிருக்கும் வரையில், தங்கள் ஆதிக்கத்துக்கு எதிர்ப்போ மறுப்போ கிளம்பாதிருக்கும் வரையில் மதவாதிகள், எந்த எத்தனுடைய திட்டத்தையும் தகர்த்ததில்லை. ஆனால் ஆராய்ச்சியாளர்மீது மட்டும் கோபம் கக்கினர், கொடுமை வீசினர்.

சந்தான சப்ரமஞ்சம் எனும் சாகத்தை அனுமதித்த மதத் தலைவர்கள், மருந்து முறையை எதிர்த்தனர் - மாயம் - மந்திரம் இவைகளை ஆதரித்தனர். அந்தச் சூழ்நிலைதான் தங்கட்கு ஏற்ற இடம் என்று எண்ணினர் போலும்.

ஆனால், இன்று அவர்களின் பிடிதளர்ந்து, வருகிறது - மக்கள் வெகுவாகத் தெளிவுபெற்று, மந்திரம் மாயம் - ஆகியவைகளிலே கொண்டிருந்த பித்தத்தை நீக்கிக்கொண்டு மருத்துவமுறையிலே நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆம்முறை வளர்ந்த வரலாறு படித்திடச் சுவையும் பயனும் தரும், இக்கட்டுரை அதற்கான இவலைத் தூண்டும் என்ற எண்த்துடனேயே எழுதப்பட்டிருக்கிறது.

(திராவிடநாடு - 14.1.56)