அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சட்ட சபையிலே சகஜானந்தர்

“அண்ணாமலை பல்கலைக்கழகத்தையே ரத்து செய்து விடலாம்!!!”

நம் மறுக்கிறீர்களா, இந்த வாசகத்தை! எந்த மேதாவி ஐயா, இந்தப் பேச்சு கூறமுடியும்! தென்னாட்டுக்குத் திலகமாவும், தமிழரின் கண்மணியாகவும் திகழும் ஒரு பல்கலைக் கழகத்தை ரத்து செய்துவிடலாம் என்று கூற யாருக்குத் துணிவு பிறக்கும் அனாவசியாரின் இசியுரையைச் சின்னாட்களுக்கு முன்பு பெற்ற பல்கலைக்கழகம், ரத்து செய்யப்படுவதா! தமிழ்ப் பல்லைக் கழகமாகத் திகழவேண்டிய இடமாயிற்றே, நாவலர் பாரதியர் தமிழைப் பரப்பிய கழகம்! ங.க.பிள்ளை இருந்த இடம்! மகாகனத்தை அவருடைய வயோதிகப் பருவத்தின் போது, எஞ்சலாட்டிய இடம் யாருக்கு மனம் வரும், அத்தகைய பல்கலைக் கழகத்தின் மீத பாய, காய! என்றே எவரும் கேட்பர்.

பலரறியக் கூறினார். மக்களின் பிரதிநிதி ஒருவர் இதனை, சட்ட சபையிலே! பட்டப் பகலிலே முட்ட முட்டக் குனியும் போக்கு மக்களிடம் இருக்கிறது என்ற ஒரே தைரியத்திலே!

அவர் பல்கலைக் கழகங்களில் பயிலாதவர்! பாராளு மன்றத்திலே இடங் கிடைத்தது. தன் பராமரிப்பிலே உள்ள ‘மடம்’ போதும், மக்களை உடேற்ற என்று எண்ணினார் போலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தைக் கலைத்துவிடலாம் என்ற ஆபூர்வ யோசனையை அருளினார்.

அவருடைய திருநோக்கு அங்குச் சென்ற காரணம் என்ன?

அந்தப் பல்கலைக்கழகம், இரு சக்திகளை உண்டாக்கும் இடமாகிவிட்டதாம்.

நாத்திகமும், பிராமணத் துவேஷமும், அங்கிருந்து கிளம்புகின்றனவாம்! ஆகவே, அந்தக் கழகத்தின் மீது கோபிக்கிறார். நந்தனார் கழகத்தை நடாத்தும், சகஜானந்தர் M.L.A.

அமைச்சர் அவனாசியாரக் கேட்கிறார். “நாத்திகம் பரவுவது பற்றி நான் கூறினது குறித்து யாதும் கூறாதிருக்கிறீரே!” என்று.

தில்லைச் சபேசனை வேண்டி, நாயன்மார் ஒருவரை அனுப்பி அருளச் செய்யச் சொல்லி இருக்கலாம், அமைச்சரைக் கேட்டதை விட, ஊ;ணமையாகவே, நாத்திகம் பரவுகிறது என்றே வைத்துக் கொள்வோம், அதனை அமைச்சர், எங்ஙனம் தடுப்பார்? அவர் என்ன இலவாயப்பனா! முக்கண்ணைத் திறந்து, அண்ணாமலை நகரை ஏரிக்க! அல்லது ஞானப்பாலுண்ட வாயரா பதிகம் பாடிப் பாவிகளைத் தொலைக்க! அல்லது அதிகாரம் செலுத்தும், பேனாதான் என்ன, சாஸ்வதமா, ஒரே வரியில், ஒழித்துக்கட்ட, அல்லது அவர் என்ன, உண்மை உலகை அறியாதவரா இந்த உலுத்துப்போன பேச்சைக் கேட்டு நடக்க! எந்தத் தைரியத்தால் சகஜானந்தா இவ்விதம் பேசினார்? நாத்திகமும் பிராமணத் துவேஷமும் பரவுகிறதாம்! பரவினால் இவருக்கென்ன? இலயம் ஆயிமாயிரம் இரக்க பாடிவைத்துவிட்டுப் போன பதிகங்கள் வண்டி வண்டியாக இருக்க, கொட்டு முழக்கும், மணியோசையும் கிளம்பியபடி இருக்க, கோலாகலத் தம்பிரான்கள் இருக்க, தங்கப் பாதக்குறடு அணியும் குருமார்க்கள் இருக்க, அவர்கள் கும்பிட்டதும் வர, குமரனின் அப்பன் இருக்க, அவர் ஏறிவர இரிஷபம் இருக்க, ஏவிவிட பூதகணங்கள் இருக்க, எடுத்து ஏறியத் திரிசூலமிருக்க, இத்தனையும் தப்பி எப்படி ஐயா நாத்திகம் புகுந்தது? ஏன் புகுந்தது? இத்தனைக்கும் அது தப்புமானால், ஒரு அமைச்சரிடம் முறையிட்டுக் கொள்வதன் மூலம், சகஜானந்தர், கிளப்பப் பார்க்கும் புதிய சக்திக்கா தப்பமுடியாது! எவ்வளவு பேதைமை! பழுதுபட்ட பார்வை! பயத்தால்வந்த பதைப்பு! பரிதாபத்துக்குரிய திட்டம்!

பல்கலைக் கழகத்தைக் கலைத்துவிடு பேஷ்! அடுத்த நோபில் பரிசு அவருக்கேதான்!!

நாத்திகமும் பிராமணத் துவேஷமும் பரவினதாமே, எதைக் கண்டு இதனைக் கூறினார்?

பல்கலைக் கழகத்திலே, இந்த ‘இரண்டும்’ பாடத் திட்டங்களா, கணிதம், இரசாயனம் போல!

பல்கலைக் கழகத்தின் எந்த நடவடிக்கையைக் கண்டு, சட்டசபையிலே பேசினார் சகஜானந்தர்.

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் - ஒரு கத்தோலிக்கர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வீற்றிருந்தவர். கல்வத்துறையிலே உள்ள முன்வரிசையினரில் முக்கியமானவர் - சட்ட சபையை அறியாதவரல்லர் - ஆனால், சட்டசபைகளிலே, இப்படிப்பட்ட சகஜானந்தர்கள் இருக்க முடியும் என்பதை மட்டும் அவர் அறிய முடியாது - அவர் அறிந்துள்ள சட்ட சபைகளிலே, இத்தகு வெட்டியுரையாற்றினவர்கள் இருந்ததில்லை.

திண்ணைகள், குளக்கரை, மரத்தடி, மடம், இங்குப் பேசுவர் உசனை வேண்டுவர் ஐயனே! காலம் கெட்டுவிட்டது - கலிகாலம் முத்திவிட்டது என்றெல்லாம் கலை பயிலும் இடத்தைப் பற்றிக் கண்டபடி பேசும் போக்கு, சட்டசபையிலே இருக்க முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது; என்ற போதிலும், தமது நிர்வாகத்திலே உள்ள ஒரு கழகத்தைப்பற்றி, மிகக் காரமானதும், கண்ணியத்தைப் பாதிக்கக் கூடியதுமான பேச்சு - அதாவது பல்கலைக்கழகம், நாத்திகத்தையும் பிராமணத் துவேஷத்தையும் வளர்க்கிறது என்று கூறினதைத் துணைவேந்தர், கண்டிக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் ஏன்போருக்கு மட்டுமல்ல, அந்த இடித்துரை - துணைவேந்தருக்கும் சேர்த்துதான் தரப்பட்டது என்று பொருள் துணைவேந்தர் தோழர் ரத்தினசாமி, கேட்கவேண்டும், சகஜானந்தரை, ஐயா, M.L.A.! எவ்வளவு பழகினீர் பல்கலைக் கழகத்தாரோடு, இதைக் கண்டுபிடிக்க? என்ன இதாரத்தின்மீது சொல்கிறீர்?” என்று.

பல்கலைக் கழகம் பஜனைக்கூடமல்ல; சகஜானந்தர் எண்ணுவது என்னவோ நாமறியோம். பல்கலைக்கழகம், ஓர் ஆராய்ச்சிக் கூடம், அங்குச் சென்று பார் எதைச் சொன்னாலும், ஆசிரியர் சொல்லினும், ஆச்சாரியஸ்வாமிகள் சொன்னாலும், ஆர்தர் ஹோப் சொன்னாலும், அருணாஇசப் ஆலி சொன்னாலும், கொள்ள வேண்டுவனவற்றைக் கொண்டு தள்ள வேண்டுவனவற்றைத் தள்ளும் திறம பெற்றவர்களே, அங்குள்ள மாணவர்கள். அவர்களிடம் சென்று, “மாணவர்கள்! கபர்தார்! இங்கு நாத்திகம் பரவுவதாகச் சகஜானந்தார். அமைச்சரிடம் கூறியிருக்கிறார். இனிக் கொஞ்சம் ஜாக்ரதையாக நடந்து கொள்ளுங்கள்” என்று சொன்னால், “எத்தனையோ மந்திரிசபைகளின் மாறுதலை மட்டுமல்ல, அரசுகள் இடிப்போன கதையைச் சாம்ராஜ்யங்கள் சரிந்துபோன சரிதத்தை நித்தநித்தம் நாங்கள் படிக்கிறோம். அமைச்சர்களை ஏவிவிடும் ஆசாமிகளைக் கண்டா நாங்கள் அஞ்சுவோம். அச்சம் தவிர் என்று அமைச்சர் அனாவசியாரே எமக்கு அறிவுரை புகன்றார் அறிவீர்” என்றே கூறுவர். திண்ணைப் பள்ளிக்கூடத்துச் சட்டாம்பிள்ளை, மாணவன் மீது கோள் மூட்ட ஆசிரியருக்குக் கால்பிடிக்கும் கதைபோல, எந்தக் கோபத்தையோ வைத்துக் கொண்டு அவனாசியாரிடம் பேசுகிறார் சகஜானந்தர்!

நாத்திகம் என்றால், என்ன பொருள் கொண்டிருக்கிறாரோ, சகஜானந்தர் நாமறியோம். நீறு பூசி, கொட்டைகட்டி, நிகண்டு தூக்கிக் கொண்டு திரிவதை; அல்லது திருநாமம் தரித்து, திருத்துழாய் மாலை அணிந்துகொண்டு திருவாய்மொழி பாடுவதை, இவர் ஆஸ்திகமென்று கருதிப் பல்கலைக்கழக மாணவர்கள், பாம்ப்பீச் கோட்டும், பனாமாசூட்டும், பாட்டா ஷøவம், கலர்காகிலும், போலோ காலரும், டென்னிஸ் ஷர்ட்டும் காட்சிதர உலவுவதைக் கண்டு, மருண்டு, “ஆஹா! இவர்களெல்லாம் நாத்திகராயினர் என்று எண்ணிவிட்டாரே என்னவோ தெரியவில்லை. ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தைப் பற்றிக் குற்றம் சாட்டுபவர் பொறுப்பற்ற முறையில் பொருளையும் விளக்காதிருக்கலாமா? இப்போதும் கேட்கிறோம், நாத்திகம் என்றால் என்ன? பொருள் என்ன? விளைவு என்ன? கூறுவாரா சகஜானந்தர்! கூறச் சொல்வாரா அவனாசியார்!

இல்லை என்பான் யாரடா!

தில்லையில் வந்து பாரடா!

என்று சகஜானந்தர் பாடுவாரா? நாத்திகம் என்பது, உருவ வணக்கத்தை மறுப்பது என்றால், ஜீனன், புத்தன், ஏசு, நபி, அனைவரும் நாத்திகர்கள், வேள்வியை மறுப்பவர் நாத்திகரானால், இவர்கள் அவர்கள் அனைவரும் நாத்திகர்கள் ஜாதி, குலம் (ஆரிய) வேதமுறை இவற்றை மறுப்பவர்கள் நாத்திகர்கள் என்றால், இவர்களெல்லாம் நாத்திகர்கள். ஆனால், இவர்கள் வழியில் இன்று கோடானு கோடி மக்கள் நடக்கிறார்கள். எந்தக்கருத்தை, அல்லது எந்த நடவடிக்கையை இவர் நாத்திகம் என்று கொள்கிறார்கள் பதில் கூறுவாரா?

யார் யாரை, எந்தெந்தச் சமயத்தில், யாரார், நாத்திகர் என்று கூறினர் என்பதையாவது யோசித்துப் பார்த்தாரா? இனியாவது யோசிப்பாரா?

வேதாந்த வித்தகன், பேரறிஞன் என்று இன்று புகழப்படும் சாக்ரடிஸ், நாத்திகன் என்று, அன்று கிரீசில் இருந்த கண்மூடிச் சர்க்காரால் கண்டுபிடிக்கப்பட்டு, விஷமிட்டுக் கொல்லப்பட்ட சரிதம் இவருக்குத் தெரியுமா; எங்கே தெரியப்போகிறது! தாளச் சத்தத்திலே தத்துவமிருப்பதாக, உடுக்கைச் சத்தத்திலே ஓங்காரப் பொருள் இருப்பதாகக் கருதும் பேர்வழிகளுக்கு, உலகின் ஒப்பற்ற பகுத்தறிவாளர்கள், எப்படித் தெரிவர், கருத்துக்கு, நாத்திகம் என்று கொள்ளத்தக்கது எதைக் கண்டார், பல்கலைக் கழகத்திலே, நாத்திகம் என்று கொள்ளத்தக்கது எதைக் கண்டார், பல்கலைக் கழகத்திலே, நந்தனார் மடாலயத்திலே கேட்கும் தாளச் சத்தமும் மேளச் சத்தமும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே கேளாததாலா? அப்படியும் கூறிவிடமுடியாதே! அந்தச் சத்தமும் அங்கு உண்டே, ஆசையின் பேரால்! அங்கும் கேட்குமே, “சித்தி விநாயகனே!” என்ற சத்தம்! அவ்விதமிருக்க, எதைக் கண்டு அல்லது எதைக் காணாததால், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே நாத்திகம் நடமாடுவதாகக் கூறுகிறார்.

புகுந்தவன் கள்ளன், வீட்டுக்கூடையவன் தூங்கவில்லை. விழித்துக் கொண்டிருக்கிறான். கள்ளனுக்குக் கோபம். என்ன சொல்கிறான் அப்போது, கூட்டாளியிடம், “என்னடா! இருளப்பா! இந்தத் திருட்டுப் பயல் இன்னமும் தூங்கிக் தொலைக்கவில்லையே” என்கிறான். திருட்டுப்பயல் என்று வீட்டுக்குரியவனை திருடன், திருடுவதற்குத் தடைவருகிறபோது கூறுவது போல, கடவுளை அறியாத கயவர்கள், கடவுள் பெயரால் சுயநல இட்டம் இட எண்ணுகிறபோது. அந்த இட்டத்துக்குத் தடையாக இருப்பவர்களை, இவர்கள் நாத்திகர்கள் என்று தூற்றுவர், புத்தரை தூற்றினர். அவர் வேள்வி முறையைக் கண்டித்தபோது அமைச்சர் அவனாசியாரின் குருதேவர், விவேகாநந்தர். இத்திகத்தின் பேரால் நடக்கும். அக்ரமங்களைக் கண்டித்தபோது, அவரை, வைதீகப் பிச்சுக்கள் நாத்திகம் பேசுகிறார் என்று கண்டித்தன. அமைச்சரும் சகஜானந்தரும் சேர்ந்து இன்று தொழுதுவரும் காந்தியாரை வைதிகக்கும்பல் நாத்திகம் பேசுபவர் என்றுதான் கூறுகின்றன. மற்றவர்களை நாத்திகம் பேசுவதாகக் கூறி, ஒரு பெரிய பல்கலைக்கழகத்தையே நாக்கில் நரம்பின்றி நிந்திக்கத் துணிந்த சகஜான்நதரைக் கேட்கிறோம், பதினாறு திருமண அணிந்துகொண்டு, பரந்தாமனுக்குத் தாங்கள் பங்களாகிகள் என்று பைத்யக்காரத்தனமாகக் கருதிக் கொண்டு கிடக்கும் பழைய பஞ்சாகங்கள், உள்ளூர் காந்தியாரை என்னவென்று கருதுகிறார்கள் தெரியுமா?
கலகக்காரர்
அர்த்தமில்லாது பேசுபவர்
பிடிவாதக்காரர்
வேதநிந்தனை செய்பவர்
இலய நம்பிக்கையைக் குலைத்தவர்
நாத்திகர்
மதத் துரோகி

இப்படி எல்லாம், கண்டித்திருக்கிறார்கள் காந்தியாரை கண்களிலே, சகஜானந்தருக்கு நீரும் வரும், அந்தக் கடுஞ்சொற்களைக் கேட்டால், இவ்வளவு கண்டனமும் காந்தியார் பெற்றது. சகஜானந்தர்கள், கோவிலுக்குள் போகும் உரிமை பெற்றாக வேண்டும் என்பதற்காக. கோவிலைத் தங்கள் கோட்டையாகக் கொண்டு, ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள், தங்கள் ஆதிக்கம், இலயப பிரவேசத்தால் குலையுமோ என்ற சந்தேகம் ஏற்பட்ட உடனே காந்தியாரை நாத்திகர் என்றனர். இதோ காஞ்சிபுரம் சனாதன தர்ம சேவா சங்கத்தார் வெளியிட்ட ஒரு அர்ச்சனை! சகஜானந்தர் பார்க்கட்டும்!!
“மகாத்மாவென்று மகுடம்புனைந்த காந்தியார் பொருளற்ற சொற்களால் புகழப்படுகிறார். அவர் தலைவெயடுத்த காலமுதல் உலகிற்கலகம் பரவியதைத் தவிர சமாதானம் எதும் நிலவிதேயில்லை. பிடிவாத குணமும் சண்டித்தனமான சாதனையும், வேத விரோதமான செயலும் போதனையும், தன்கொள்கையே சரியென்னுந் தருக்குமுடையவர் அவர்.

பெரியவருக்குச் சிறியவரும், அரசனுக்குக் குடிகளும், கீழ்ப்படிய வேண்டுமென்ற மரியாதைக் கிரமங்கள் இவரது சமரச ஞான போதனையால் பறந்தொழிந்தன பட்டமறுப்பு, பதவி மறுப்பு, சட்ட மறுப்பு இயக்கங்களைச் செய்து அரசியலாருக்கும் குடிகளுக்கும் பிளவையுண்டு பண்ணித்தான் தன் சகாக்களுடன் பன்முறை சிறைக்கோட்டம் புக்கனர்.

பெற்றோருக்கு மக்களும் பெரியோர்க்குச் சிறியோரும், நாயகனுக்கு நாயகியும், குருவுக்குச் சீடரும், எஜமானனுக்கு வேலைக்காரரும் அரசருக்குக் குடிகளும், தெய்வத்துக்கு அனைவரும் கீழ்ப்படிந்து வணக்கங்காட்டிக் கட்டளைக்கடங்கி நடத்தல் வேண்டுமென்பதும், சாதி சமய வரம்பு கடத்தலாகா தென்பதும் உலக இயற்கை.

காந்தியார் கைக்கொண்ட காந்தியம் அவைகளுக்கு முற்றும் முரணாகும். பெற்ற தாய், தந்தையர் என்ன சொன்னபோதிலும் விதவைகளையே மணக்கவேண்டுமென்று கல்லூரி மாணவர்கட்கும் பிறருக்கும் போதனை செய்து கெடுத்தும், அவரவர்க்கும் சமத்துவம், சுதந்திரம் ண்டு என்ற போதனையால் பெரியவர் - சிறியவர் - நாயகர் - நாயகியர், குரு - சீடர், எஜமானர் - வேலைக்காரர், அரசர் - குடிகள் என்பவர்களுக்கு உள்ள மரியாதைக் கிரமத்தை ஒழித்தும், இலயத்தில் தெய்வமில்லை யென்ற போதனையால் தெய்வ நம்பிக்கை தேவாலய நம்பிக்கைகளைக் குறைத்தமு:, சமரசஞானம் பேசிச் சாத சமய வரம்புகளைக் குலைத்தும் தீமைகள் புரிந்தது காந்தீயமே.

இலய நிந்தகராய், சாதி சமய மாறுபட்டவராய் உள்ள இவர் தேவாலயங்களிடத்தும், வருணாசிரம தர்மங்களிடத்தும் பொறாமைப் பேய்பிடித்த இலய விஷயத்திலும், சாதி சமய விஷயத்திலும் தான் கைக்கொண்டுள்ள ஹரிஜன் என்னும் பத்திரிகை மூலமும் தனது தாசர்கள் மூலமும் கலகம் விளைவித்து வருகிறார்.

போதும் போதும் இவரால் வந்த சூயஆட்சி என்னும் அந்தர சொர்க்கம். நீறு கோபி திருமண நெற்றிக்கணியா இவர், இக்கலிகாலத்தில் நாரதர் கௌசிகர் இதிய மாமுனிகளாக, நாரணராக மஹாத்மாவாக விளங்குதல் விந்தையிலும் விந்தையே.”

இப்படி வைதிக வம்பர்கள் காந்தியாரைக் கண்டித்திருப்பதைப் படித்தும் சகஜானந்தர் என்ன சொல்வார் ஆ;நத வைதிகர்களைப் பற்றி,
பித்தக்குளிகள்
இஷாடபூதிகள்
சுயநலமிகள்
கிணற்றுத் தவளைகள்

இன்னும் பல கூறுவார். ஒரு பல்கலைக் கழகத்தைக் காரணமே காட்டாது. நாத்திகம் பரவும் இடம் என்று கண்டிக்கும் சகஜானந்தரை, என்ன கூறுவர், அறிஞர்கள்? அன்றே கூட, கட்சிக்காரர் என்பதற்காக, மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனரே தவிர, என்ன எண்ணியிருப்பார்கள், தனிமையில்! மனதார! என்ன செய்வார் பாபம், சகஜானந்தர் இவ்வளவு மட்டரகமான போக்கை மேற்கொண்டார்! பரிதாபமாகத்தான் இருக்கிறது.

அமைச்சருக்கு ‘சிலம்பு’ போட்டு, இவேசம் வரச் செய்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மீது படைஎடுக்கச் செய்து, பரமன் துணைகொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை அழித்துவிடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம், தீர்ந்து விட்டது பிரச்சனை என்று ஏற்பட்டுவிடுமா? அறிவுக் கதிர் பரவுவது தடைப்பட்டு விடுமா? அறியாமையின் அகன்ற வாயிலே நாடு சிக்கிவிடுமா அவ்விதம் எண்ணுவது பைத்தியக்காரத்தனம். நாத்திகம் பரவாதிருக்க வேண்டுமானால் இத்திகத்தின் வர்த்தகத்தின் போரால் பரப்பப்பட்டுள்ள அஞ்ஞானத்தை நீக்கி, ஆநீதிகளை அழித்து, ஆபாசங்களை ஒழித்து, ஆதிக்க வெறியை அழித்து, இல்லாமை, போதாமை, ஆகியவற்றை விரட்ட வேண்டும் இதற்கு வீரர்களும் விவேகிகளும் வேண்டும.

அதாவது மேலும் சில அண்ணாமலை பல்கலைக் கழகங்கள் வேண்டும்! நோயறியா மருத்துவன் தரும் மருந்துக்கும், சாக்கடைச் சேற்றுக்கும் வித்தியாசமில்லை, அதுபோலவே உண்மையான கடவுள் கொள்கை உணராதவர்கள், நாத்திகத்தை அழிக்க, நாத்தழும் பேறப் பேசும் பேச்சுக்கும், மதிப்புமில்லை; பொருளுமில்லை, அதிகார பீடத்தருகே இருந்து கொண்டு சொன்னதால், இதை நாம் கவனிக்க நேரிட்டது - சகஜானந்தரின் தனி நிலைக்காக அல்ல! வேத வேதாந்தத்தை உபநிஷத்துகளை, கீதையை தேவார திருவாசகத்தை, உலக மதசாரதர்தை உணர்ந்தவர்களெல்லாம் கூட, கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர் என்றும், உண்டென்பார்க்கு உண்டு, இல்லை என்பார்க்கு இல்லை என்றும், அருள் வடிவன், அன்பு சொரூபன், நோதிமயன், என்று சொல்லழகு படப் பலப்பல கூறித்திணறி இருக்கிறார்கள் என்பது தெரிந்த நாம் ஆஸ்திக, நாஸ்திக விளக்கத்தை, சகஜானந்தரிடமிருந்து எப்படி எதிர்பார்ப்போம்! ஏன் எதிர்பார்க்கப் போகிறோம். அவர் ஓர் அமைச்சருக்கு அருகே அமர்ந்திருந்து, ஆட்சி மன்றத்திலே, பேசினாரே என்பதற்காக இதனைக் கவனிக்க நேரிட்டது.

“நாத்திகப் பிரச்சாரத்தைத் தடுப்பது சர்க்காரின் திட்டமா?” என்று மெம்பர் கேள்வி கேட்டதற்கு, அமைச்சர், “இல்லை” என்று பதில் கூறி இருக்கிறார் சகஜானந்தர். இதனைக் கவனத்தாரோ இல்லையோ நாமறியோம். ஆசிரியர்களாக அமருபவர்கள் தமது உத்யோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்வதைச் சர்க்கார் விரும்பவில்லை என்றார் அமைச்சர், ஆனால், அதே ஆசிரியர்கள் பொது மேடைகளில், பிரச்சாரம் செய்வதைத் தடுக்கப்போவதில்லை என்றும் கூறி இருக்கிறார்.

ஆனால், ஆசிரியர்கள் இன்றுள்ள நிலைமையில், ஆண்டவனை, உண்டு அல்லது இலலை என்று கண்டறிந்து கூற வேண்டிய அவசியத்தில் இல்லை. அவர்கள் ஆண்டவனைப் பற்றிச் சந்தனையைக் செலவிடுவதைவிட, அதிகமாகச் செலவிடுவது அமைச்சர் அவனாசியாரைப் பற்றித் தான்! ஆசிரியர் அல்லலைத் துடைப்பாரா? மாட்டாரா? என்ற பிரச்சனையே பெரிதும் ஆசிரியர் மனத்திலே குடைவது. ஆஸ்திக நாஸ்திக வவாதத்துக்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. ஆனால், என்ன புதுமை இன்று ஏற்பட்டிருக்கிறது? எதைக் கண்டு மருண்டு, சகஜானந்தம் போன்றவர்கள் மிரள்கிறார்கள் என்றால், ஓர் வகை விழிப்பு ஏற்பட்டிருக்கிறது கல்விக் கூடங்களிளெல்லாம் எங்கும் பகுத்தறிவுப் பொறிகள்! முன்னாள் நிகழ்ச்சிகளுக்கெலலாம் இந்நாள் விளக்கம் தேவை என்ற ஓர் வகை ஆர்வம் பிறந்திருக்கிறது! ஆராய்ச்சி மனப்பான்மை காணப்படுகிறது! இன எழுச்சி கிளம்பி இருக்கிறது. மதத்தைப் பற்றிப் புது விளக்கம் கேட்கப்படுகிறது நாடு புத்தம் புதியதோர் உருவம் கொள்ளத் துடிக்கிறது மறைத்துவிட்டோம், மாய்த்துவிட்டோம் என்று ஒருசிறு கும்பல் எண்ணிக் கொண்டிருந்தவைகளெல்லாம், பொய்யாகி இன்று மக்கள், குறிப்பாக மாணவர்கள் மனமெலாம் மகன்ஜதாரோ ஆகிவிட்டது! மருட்சிக் காரணம் இந்த மனப்புரட்சி!! அழித்தே விட்டோம் என்ற எந்த ஆரிய திராவிடப் பிரச்சனையைப் பற்றி கருதினாரோ, அந்தப் பிரச்சனை தலைதூக்கி நிற்கிறது! அது சற்றுத் தெளிவாகத் தெரிகிறது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே! ஆகவே அதன்மீது பாய்கிறார்கள். ஆனால் பலன் இல்லையே! அண்ணாமலை பல்கலைக் கழகத்தை மட்டும் மூடிப் பயன்இல்லை யோசித்துப் பார்த்தால், சட்ட சபையையே கூட மூடிவிடவேண்டுமே!!

மநதிரி கூர்மையா, அரிஜன உரிமை மசோதாவைப் பற்றிப் பேசும் போது, சென்றகிழமை, “ஆரியர்கள் இந்தத் தேசத்திலே நுழைவதற்கு ன்பு தாங்கள் தான் ஆட்சி செலுத்தி வந்தோம்” என்று பேசி இருக்கிறாரே! இதன் பொருள் என்ன? முன்பு ஆட்சியாளராக இருந்தோம் இன்று அடிமையானோம்! ஆரியர் வருவத்றகு முன்பு வரை வாழ்ந்து வந்தோம். பிறகு இந்நிலை பெற்றோம் என்றால் என்னய்யா பொருள்? ஆரியம், எங்களை அடிமைகளாக்கிற்று, ஆட்சியை அழித்தது, நிலையைக் குலைத்தது, என்றுதானே பொருள்! பாழாய்ப்போன இருமல் வியாதி வருவதற்கு முன்பு, ஏன் தேகம் இரும்பு போலத்தான் இருந்து வந்தது.

ஊரிலே பயங்கரமான பிளேக் பரவுவதற்கு முன்பு, கடை வீதியில் திருவிழாக்கூட்டம் போல ஜனங்கள் இருப்பார்கள்!

இதுபோலத்தானே ஆகிறது, மந்திரியின் பேச்சு. இந்தப் பேச்சு சட்டசபையிலே நடக்கும்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தை மட்டும் மூடிப் பயனில்லையே! சட்டசபையும் அதே பேச்சுப் பேசுகிறதே! சகஜானந்தர், என்ன செய்யச் சொல்கிறார்.

ஆனால், இன்று ஏற்படும் மனப்புரட்சி மறுமலர்ச்சி புது எழுச்சி, அவ்வளவும் சகஜானந்தர்களுக்குத்தான் பிடுதலையை - புதுவாழ்வை பெற்றுத் தரும் அப்படி இருந்தும், பலன் பெறும் கூட்டத்தினரான சகஜானந்தரே, ஏன் இதை எதிர்க்கிறார் என்ற சந்தேகம். மற்றவர்களுக்கு இருக்கும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராது. அவர்கள் இபிரகாம்லிங்கன் வரலாற்றை அறிவார்கள். அடிமை முறையை ஒழிக்க இபிரகாம் பாடுபட்டார். ஆனால், அவருடைய முயற்சியை எதிர்த்தவர்கள் அடிமைகளேதான்!!

(திராவிடநாடு - 6.4.47)