அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சவுண்டிகளுக்குச் சவுக்கடி

(பரதன் குறிப்பு:- பரதா! விலகி நில்! இந்த வீணர்களுக்கு என்னிடம் சவுக்கும் இருக்கிறது. தடித்த தோலருக்குத் தக்க சவுக்கடி நான் தரவேண்டும் என்றான் வீரன். சரி என்றேன். இதோ அவன்)

பாழாய்போன பதவி மோகம் இருக்கிறதே, அடி ஆத்தே, பணத்தாசையை விடப்பொல்லாதது. மனிதன் பணப்பித்தையாவது சில சந்தர்ப்பங்களில் அசால்டாக விட்டு விடக்கூடிய அவசியம் ஏற்படும். ஆனால் கவுரவஸ்தானங்களான பதவிகளின் மூலம் கிடைக்கக்கூடிய புகழில் (?) ஒரு மனிதனுக்கு இச்சை விழுந்துவிடுமானால், அவன் செத்துச் சுடுகாடு போகிறவரையில் அது அவனை விட்டு விலகவே விலகாது போலிருக்கிறது. ஏதோ பேய்பிசாசினால் பீடிக்கப்பட்ட மனுஷாள் என்னென்னமோ விதமான அவஸ்தைகளை எப்படி எப்படியோ அனுபவிக்கிறார்கள் என்று சொல்கிறார்களே. அந்த மாதிரி இந்தக் கர்ம காண்டமான கவுரப் பதவி சைத்தானால் பீடிக்கப்பட்ட மனுஷன் படாதபாடுபட்டுப் போகிறான், செய்யத்தகா காரியங்களெல்லாம் செய்யத் தலைப்படுகிறான், செய்தே முடிக்கிறான்.

பதவிப்பித்துப் பிடித்த மனுஷனின் பிரலாபம் ஜன்னி வெளிகொண்டவன் உளறலைக் காட்டிலும் ஒரு படி மேலே போய்விடுகின்றது. பரம்பரையான குடும்பத்தின் கௌரவத்தை அழிக்க வேண்டுமா? நீடித்த நண்பர்களின் சினேகத்தை இழக்க வேண்டுமா? உதவாக்கரை பாய்காட் பிரதர்களின் கூட்டுறவை நாட வேண்டுமா? இன்னும் என்னென்ன தகாத காரியங்களைச் செய்ய வேண்டும், என்னென்ன தகும் காரியங்களைக் கைவுட வேண்டும்? அத்தனையும் அந்தப் பதவி மோகினி பிடித்த மனுஷன் செய்யப் பின்வாங்குவதில்லை.

நகரதூதன்
22.12.1935

நகர தூதன் நமது தூதனாக, இருந்த நாளிலே வெளி வந்த மதிமொழி இது. பதவிப்பித்தர்களின் சித்தம், விசித்திரம் என்பது கூட அல்ல அவ்வளவு வேடிக்கை, அத்தகைய பதவிப்பித்தர்களுக்குப் பாதந்தாங்கும் பேர்வழிகளின், போக்கு இருக்கிறதே அது, இதைவிட வேடிக்கையாக இருக்கும்.
என்ன சார்! குட்டிச்சுவராகிவிட்டதே, ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு வந்தபோது, வீடு அழுகாக இருந்ததே, என்ற கேட்டால், வாழ்ந்து கெட்டவன், வீழ்ந்துபோன பீட்டைக்காட்டி விம்முவான்! என் வாழ்வு அப்படியாகிவிட்டது என்று அவன் அழுகுரலிலே கூறுவான். மலர் விற்றுப் பிழைத்து வந்தவன் மலம் கூட்டும வேலைக்குச் செல்ல நேரிடுவது, மச்சுவீட்டிலே வாழ்ந்தவன் பிச்சைக்காரனாவது, அவனவனின் வாழ்க்கையிலே ஏற்பட்ட வழுக்கலால்.

அருணாச்சலத்தின் மனைவி அல்லவா நீ

ஆமாங்க, உங்களுக்கு எப்படித் தெரியும்?

அடேடே! நான் அந்தக் கலியாணத்துக்கே வந்திருக்கிறேனே. எவ்வளவு ஜோராக நடந்தது. ஆமாம்! நீ ஏன் இப்படி ஆகிவிட்டாய்?

எல்லாம் காலவித்யாசம் தானுங்க. அவரும் நானும் சுகமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஒரு பாவி வந்தான் பசப்பிச் சிரித்துக்கொண்டு, இல்லாத ஆசை காட்டினான், ஏய்த்துவிட்டான்; தவறிவிட்டேன், அவருக்கும் தெரிந்துவிட்டது. இந்தக் கதிக்கு வந்தேன்.

மணமாகி மணாளனை விட்டுப்பிரிந்து, மாலையிலே மயக்கும் சேலைகட்டி, விழிகாட்டி வாயே போவோரை மணந்து அங்கத்தை வளர்க்கும் தங்கத்துக்கம், வழுக்கிய வனிதையிடம் வரம் கோரிச் சென்றவனுக்கம் இதுபோல் உரையாடல் நடக்கக்கூடும்!

ஆனால், நிலை கெட்டவர்கள், நீண்ட நாக்கினராகவுமாக்கிவிட்டால், அவர்கள் பரிதாபத்துக்குரியவர்களல்ல, கண்டனத்துக்குரியவராகின்றனர். அதுபோலக் கட்சியிலே வாழ்ந்து அதனால் பலன் இல்லையே என்ற பிறிதோர் கட்சி புகுந்து, புது மேய்ச்சல் தேடும, மனித மாடுகள் பல உண்டு. பழைய இடத்துககாரரைக் கண்டால், மனித மாடுகள் மட்டுமரியாதையை மறந்து முட்ட வந்தால், அவைகளின் வாலை நொறுக்கிடாமல் வேறு வேலை செய்வார் உண்டா? சுயமரியாதை இயக்கத்திலே, இருக்கிற வரையிலே சொர்ணம் கிடைக்காது என்ற சோர்ந்து, சோரம் பேனாலாவது சொகுசாக வாழலாம் என்று சில சொரணை கெட்டவர்கள் நடப்பதுகண்டு வனக்குக் கவலை இல்லை. சோரம் போனபிறகு, வீரம் பேசுவதா? கம்பத்தில் கட்டுண்ணபோது கள்ளன் கட்டளை பிறப்பிக்கத் தோடங்கினால், கொல்லைச் சரக்கால் அபிஷேகத்துக் கூட்டுக்கோலால் அர்ச்சித்து அனுப்புவார்களே, அதுபோலத்தானே, அத்தகைய கோக்கினரின் ஆணவப்பேச்சு ஆத்திர மூட்டிவிடும். அவர்களின் ஆணவத்தை அடக்கவேண்டும் என்று அனைவரும் எண்ணுவர். அதிலும் கஷ்ட நஷ்டமென்று கலங்காது உழைக்கும் ஒரு கூட்டத்திலே ஒருக்க மறுத்து, அதிகார வர்க்கத்தை இஷ்ட தேவதைகளாக எண்ணிப்பூஜித்து, பரங்கியின் பாதூளி, பட்டாலே பரமானந்தம் என்று கருதி, பட்டம் பதவிகளுக்காக, எதையும் விட்டுக் கொடுக்கும், மட்ட ரகங்களுக்குப் பறைகொட்டக் கூலி பேசிக் கொண்டுபோய்ச் சேரும், போக்கடாக்கள், குடிபோன இடத்திலே படிகாசு பெற, முன்பிருந்த இடத்தை, நாக்கில் நரம்பின்றி நிந்திப்பது கேட்டால், அந்த மதிகேடர்களுக்கு, சூடு சொரணை பிறக்குமளவு, டோஸ் கொடுததாக வேண்டுமென்று, ஒருவருக்கில்லாவிட்டாலும் மற்றொருவருக்கு, இன்று இல்லாவிட்டாலும் நாளைக்கு ரோஷ உணர்ச்சி தோன்றாமலா போகும்? மயிலாடக் கண்டு வான்கோழி ஆடுவதே கேவலம், ஆடும அந்தக் கோழி மயிலையும் பழித்தால்! சிளி மட்டுமென்ன நாமுமதான் கூவுவோம் என்று காகம் கரைவது காதுக்குவலி! கிளியைக் கேலியும் செய்தால்! பஞ்சத்தால் ஆண்டி வேடம் போட்டவன் பாரெல்லாம் மாயை என்று பேசுவது கேட்டால் அந்தக் தடித்தாண்டவனை ஆண்டிக்கோலத்துக்கு முன்பிருந்து அறிந்தவருக்கு, வேடிக்கையாகத்தான் இருக்கும். அத்தோடு நில்லாமல் அவன், அரைபலம் கஞ்சாலை அனுதினம் உட்கொண்டால் அரனை உமையுடன் அர்த்தராத்திரியிலே காணலாம் என்று உபதேசம் செய்ய ஆரம்பித்தால், அவனைப் பூர்வாசிரமம் முதல் அறிந்தவர்கள் என்ன செய்வார்கள்? காதைத் திருகித் தலையில் குட்டி கன்னத்தில் அநைற்து காவியைக் கிழித்து, ஏண்டா தாண்டவா ஆண்டியானது, எதனால்? அடே உபதேசமும் வேறே செய்கிறாயே! சாப்படு பெறக்கற்றுக்கொண்ட சங்கராசிவ சங்கரா சத்தத்ததை மெத்தப் புகழ்கிறாயே என்று கூறி, அவனைச் சுத்தம் செய்தனுப்பமாட்டார்களா? கட்சியை விட்டு ஓடி கால் பிடரியில்பட ஓடி, கண்டோர் கைகொட்டி நகைக்கும் விதமாக ஓடி, கதனதனவான் காலடிதேடி, கங்காணி ஆட்டம் ஆடும் கயவர்கள், வேளைக்கேற்ற வேலை என்று, வெந்ததைத் தின்று நொந்த வாழ்வைச் செம்மைப்படுத்திக்கொள்வதோடு திருப்தி அடையாமல், இருந்துவிட்டுப்போன இடத்துககுக் குறைகாணுவது மடத்தனந்தானே! இந்தச் சங்கடங்கள் எங்கே இருந்தால் என்ன? இங்கே இருந்தபோது, சங்கு ஊதி விட்டுப் பங்கு கேட்டன! அங்கே இப்போது தம்பட்டமடிக்க அச்சாரம் பெற்றுவிட்டன! இந்த இலட்சணத்திலே ஏன் இவ்வளவு இறுமாப்பு?
பெரியாரின் போக்கு பிடிக்கவில்லையாம்! ஆமாம்! பிடிக்காதுதான்!! உரிமைக்குப் போரிடு, உனக்கென்ன இலாபம் என்று வாதிடாதே, இனத்துக்காக வேலை செய் பணத்துக்காக அல்ல! மானத்தை மதி, மந்திரி வேலைகளை அல்ல! தெளிவு பரப்பும் பேலை செய், தேர்தல் தரகு வேலை வேண்டாம் என்று கூறுகிறார் பெரியார். தேர்தல் நடக்காதா நமது வாழ்வு பரினம் பெறாதா என்று ஏங்கிக் கிடக்கும் வட்டம், எட்டிச்செல்லட்டும்! சேலத்திலே இதைத்தான் செப்பினோம். சத்தம் இல்லை இந்த உன்மத்தர்களிடமிருந்து, எதிர்ப்புக்கு வழி இல்லை! இம்மென்று பேசத் துணிவில்லை. கருத்தது முகம்! சிறுத்தது மனம்! கைகால் ஒடுக்கம்! இத்தகைய இடுப்பொந்ததுகள் இன்று, பெரியாரைத் தாக்கி, வருகின்றன, முகமூடி தரித்துக்கொண்டு!

புதுத்தலைவருக்குப் பல்லக்குத் தூக்கட்டும, பாரம் அதிகமானதும கீழே போடட்டும, எனக்குக் கவலை இல்லை, ஆனால், பல்லக்குத் தூக்கும் போக்கோடு போக்காக நம்மிடம் ஏன் வீண் மல்லுக்கு வரவேண்டும். தங்கள் சொல்லுக்கு மதிப்பு எங்கும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டும் பல்லைக் கடிப்போனே, நரகலை வழித்தெடுத்து நாலு மூலைச்சந்திலே நின்று கொண்டு, நான் வீரன் என் நர்த்தனம் செயவ்னேன், நாட்டிலே தேடுவார் இல்லை இந்த நாதியற்ற கூட்டத்தை, நாக்கை மட்டும நீட்டுகின்றன, தூக்குச் சட்டித் தோழர்கள்!

நாட்டிலே நாலு இடமாவது நம்புவதற்கு ஆட்கள் உண்டு என்ற தைரியம் இந்த நரகல் நடையினருக்கு இருக்குமானால் பெரியார் கண் எதிரிலேயே, பெரியதோர் கட்சி அமைக்கப்போகிறோம் என்று ஒரு பேச்சுக் கூறிவிட்டுக் கிடக்கட்டுமே! நடக்கிறதா என்று பார்ப்போம். அதைவிட்டுப் பெரியார் மேல் ஏன் பாணந்தொடுக்கவேண்டும்?

முப்பது ஆண்டுக்கு மேலாகப் பொதுமக்கட்கு, இனத்தால் கேசரியாகவும், நியைல் வேசரியாகவும் போய்விட்ட பரிதாபத்துக்குரியவர்களுக்காகப் பேசி தமிழரைத் தட்டி எழுப்பத்தளராது உழைத்து, தாடி முளைக்காத காலத்திலே துவக்கிய அந்த அரும்பணியை தாடி வெளுத்துக் காட்சி தரும் இன்றுவரை, அயராமல் ஆற்றிவரும் ஒரு அஞ்சாநெஞ்சரைப் பஞ்சைகள், அரசியல் அனாதைகள், பட்டம் பதவியாளரின் பாதந்தாங்கிள், ஈனத்தனத்துக்கு எழுதுகோலை விற்கும் எத்தர்கள், கொள்கைப் பற்றறியாக் கோணங்கிச் சேட்டைக்காரர், கும்பலில் புகுந்து கொடிதாங்கக் கூலி கேட்கும் குறும்பர்கள், தாக்குகின்றனர், தகுதியற்ற முறையிலே, நேர்மையை மறந்து, நிலையை உணர மறுத்து.

எங்கும் எதிர்ப்பு! எத்திக்கிலிருந்தும் ஏசல்! மேடை ஏறினால் ஜோடிக் காளைகள் கூட்டத்துள் துரத்தி விடப்படும் துடக்கர் கூட்டம்! கல்லடி! சொல்லடி! இவ்வளவுக்கும் இடைய நின்று, எதிர்ப்புகண்டு அஞ்சாது, என் உரிமை என் மனதிற்பட்டதைக் கூறுவது, என்று எக்காளமிட்ட, ஒரு இணையில்லாத் தலைவரை, பிணையல் வாழ்வால் மட்டுமே பொது வாழ்விலே இருந்து தீரவேண்டிய தூதர்கள், தூப தீப நைவேத்திய நேரத்திலே துதி செய்துநின்றால் கண்டல் கடலை கிடைக்குமென்று கருதியை உயர்த்திப் பாடும் கம்மாடுகள், பொதுமக்கள் முன்பு சென்று, நடமாடும் நன்னிலையை எய்த முடியாத கபந்தங்கள், கண்டிக்கின்றன!

நிஷியானாலும் என்ன, தவசியானாலும என்ன, வழி காட்டியானாலென்ன, வைகுண்ட வாசியானாலென்ன, வண்டவாளங்களை வெளியிட்டே தீருவேன். எந்தது வரட்டும வறண்ட மூளையினர் வந்தனம் வெலுத்தமாட்டார்களே என்றெண்ணி அஞ்சி, வஞ்சகரின் அடிபுக மறுப்பதே வீரனின் ங்காக்கடமை என்று சொல்லி, மார்தட்டி நின்று, தியாக வாழ்வு தந்த தந்தையை, தத்தி நடக்கும்போதே தறுதலையாகி தான் தோன்றியாகி, தடிதூக்கும் தாண்டவறாயயனாகிப் பிடி ஆள் வேலைசெய்து பிழைக்க வேண்டிய நிலைபெற்ற பேதைகள், தாக்கி எழுதுகின்றன. அந்த அறிவிலிகளின் துணிபுக்கம், பல்லாயிரக் கணக்கிலே, தமிழகத்திலே இன்று பெரியாரிடம் பேரன்புகொண்டு, அவர்கண்ட வழிநடந்து, இடைய எந்த இடர்வரினும் கவலையோ சிலியோ கொள்ளாது பணிபுரியும் அன்பர்களின் பொறுமைக்கும் போர் மூண்டுவிட்டது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! துணிச்சல், கடைசிவரை காப்பளிக்கும் ஆயுதமாகாது. நாடு முழுதும், நான்கு ஜாதிகள் நான்முகள் கட்டளை என்று நம்பி அதிலே திராவிடமக்கள் நாம் நாலாம் ஜாதி, பார்ப்பனனுக்குச் சேவை, செய்யத் தோன்றியவர் என்று எண்ணி, ஏமாந்திருந்த நேரத்திலே, ஜாதி என்பது ஏதடா! பேதம், ஆரியனின் சூதடா! நில்லடா! உன் அந்த வாழ்வை எண்ணிப் பாரடா! என்று முழக்கமிட்டு முறுக்கேற்றித் திராவிட முரச ஒலித்திடச் செய்த ஒப்பற்ற் தலைவரை, ஓட்டை ஒடிசர்கள், மூட்டை தூக்கிகள், வெத்துவேட்டுகள், கண்டிக்கின்றன.

எட்டுமுறை சிறைசென்ற தீரனைத் தியாகம் இருக்கும் திக்குநோக்கியுமறியாத துயர்கள் திட்டுகின்றனர்! தமிழ்! தமிழ்! என்று நாக்குத் தழும்பேறப் பலர் கூறி, அத்தமிழை ஆச்சாரியார் ஆட்சி இந்தி புகுத்தி இழிவுபடுத்தியபோது, என் செய்வது என்ற ஏங்கி, வாயில் விரல் வைத்துக் கொண்டு, பித்தகரும புத்தகம் படித்தவரும் வீதிமுனை நின்று கொண்டிருந்த காலை, ஊரெங்கம் ஓடி, உழைப்பாளிகளைத் தேடி, உத்தமத் தோழர்களை நாடி, தமிழனின் தீரத்தைப்பாடி, ஆச்சாரியார் ஆட்சியைச் சாடி, சிறைச் சாலைக்குச் சென்று, அறுபதாம் ஆண்டிலே வெஞ்சிறை புகுந்து அக்னிவீசும், நாட்களிலே, வெப்பமிகுந்த பெல்லாரிச் சிறையிலே வாடிய வீரத்தலைவனை, வெள்ளிவீரனை, வாலிபர் தோழனை, வற்றாத பகுத்தறிவின் காவலனைத் திண்ணை தூங்கிகள், தெருவில் புரண்டு தேம்பிடும் தேஹீகள், அரசியலிலே பலமுளை தேசாந்திரம் பேய் வந்த தெகுடுதத்தக்காரர்கள் தூற்றுவதா?

இனத்தை அறியாது அதன் இயல்பும் தெரியாது, மதம்ம எதுவென்று உணராது, ஆரியர் மத்தைத்க கொண்டு மக்களை அடிமைகொண்ட விதம் தெரியாமல், நமது மக்கள், நினைப்பு கெட்டு, நிம்மதியற்றுக் கிடந்த நேரத்தில், பெள்ளத்தை எதிர்நீச்சால் கடந்து, வீரப்பணி புரிந்து, நம்மை நாம் உணரவும், நமது இனம் இதுவென்த் தெரியவும், அதன் விடுதலைக்குப் பாடுபடவும் அந்தப் போரிலே பிணமானாலும் சரி, கவலையில்லை என்ற உறுதியை நாம் பெறவும் உழைத்த உத்தமனை, உளறு வாயர், குளறுமொழியினர், அரசியல் கூத்திகள், நயவஞ்சக நாத்திகள், நிந்திப்பதா? தமிழரின் செவிமந்தமென்று, சிந்தையிலே செருக்குபடிந்த சில்லுண்டிக்கணத்தவர், எண்ணி விட்டனரா? யார்மீது பாய்கிறோம் என்பதறியாத ஏமாளிகளின், கொட்டத்தைத் தமிழகம் நெடுநாட்களுக்கு விட்டுவைக்கும் என்ற கட்டைம்தியினர் கருதுகின்றனர்போலும், கரிமுது கரையான்போர் தொடுக்கிறது! புலிமீது புழு பூசலுக்குக் கிளம்புகிறது! பெரியார்மீது மோதுகிறது ஒரு அறியாக்கூட்டம், மலைமீது மோதிக்கொள்ளும் மடைமையைத் தமது கடமையாகக் கருதுகிறது ஒரு கபோதிக்கூட்டம். கானகலாதரம்ன என்று கருதிக்கொண்டு குரல் கிளப்பும் கர்த்தபத்தைக் காரி உமிழுவதும் காலக்கேடு என்றுதானே கருத்துள்ளோர் கருதுவர். பெரியாரின் மௌனம், இந்தப் பெருங்குணத்தைக் காட்டுகிறது.

மதகுருமார்களும் மடத்து அதிபரும் கோயில்குருக்களும், வக்கீல் ஐயரும ஆளும் வர்க்கமும் ஐஸ்வரியம் பெற்றோரும், அவரை எதிர்த்தனர். ஆற்றல் அரண் அமைத்துககொண்டு அறிவெனும் வாளேந்தி, உழைப்பெனும் புரவி ஏறித் தமிழகத்திலே உலவி, ஆரியக்காட்டை அச்சம் தயை தாட்சணியமின்றி அழிததொழிக்கும், பெரியார், தமக்கு எதிரிடையாக அமைக்கப்பட்ட எதிர்ப்பு முன்னணியைக் கண்டு, எஃகு உள்ளம் கொண்ட நமக்கு இந்த எதிர்ப்பு எம்மாத்திரம் என்ற கூறி, களத்திலே போரிட்டபடி மாண்டாலும் மாள்வேனேயன்றி கனபாடிகளின் காட்டுக்கூச்சலைக் கேட்டு வீட்டுக்கோடி ஒளியும், கோழையாக மாட்டேன், நானோர் திராவிடன், என்ற வீரமொழி புகன்று இனம் வாழ வழி அமைத்துத் தந்தார். அவர் காணாத களமில்லை! வெற்றி பெறாத போரில்லை! வீணரின் உரை அவரை விரட்டியதில்லை! வேட்டுக்கே அவர் மிரண்டதில்லை வேசரிகளின் வெத்து வேட்டுக்கா அவர் அஞ்சப்போகிறார்?

மதியும் நிதியும் படைத்து ஆரிய குலத்தின் தலைவரென்ற நிலையும் பெற்ற, சீமான் சீனுவாச ஐயங்கார், சீறிப் போரிட்டுக் கண்டது என்ன? ஆள்வது நானா, இந்த இராமசாமி நாயக்கரா? என்று சட்டசபையிலே கர்ஜிதத ஆச்சாரியார், காண்பதெல்லாம் கருப்புக்கொடியாகவே இருக்கிறதே காந்தியே என்று வார்த்தாவுக்கு விண்ணப்பித்துக்கொள்ள நேரிட்டது, அம்மியும் குழவியும் ஆகாயத்திலே பறந்ததே, இந்த உமியும் தவிடும், உலையின் முன் என்ன செய்யும்! சீறின சிறுத்தை செத்துக் கினடக்க செந்நாய்க் கூட்டம் சிங்கத்தை வீழ்த்தும்! மந்தமதியினரே! மரமண்டையினரே! சொந்த புத்தியைச் சோற்றுக்காக இழந்துவிட்ட சோணகிரிகளே! சொல்புத்தி கேட்க மறுக்கும் சோடைகளே! மதியிலாத மமதையாளர்களே! மீளமார்க்கமின்றி மாள்வீர்கள், அரசியல் துறையிலே! மந்திக்குணம், சிந்துக்குரியதல்ல!

ஆரியத்தின் மண்டையைச் சிதறடித்த சுயமரியாதைச் சம்மட்டி, உமது சிரத்தின் முது உராய்ந்தாலே போதும், வழித்தெடீக்க முடியாதபடி கூழாகிவிடும், உமது குறும்பும் கோமாளிக் கூத்தும், நாடு முழுதும் கூடித்தொழுத நேரத்திலேயே காந்தீயமெனும் புரட்டைத் தூளாக்கிய காவலன் முன், வீட்டிலேயேகூட, ஏனோ! இந்த வீண்வேலை! என்று கேட்பவரால் சூழப்பட்டிருக்கும் பேர்வழிகாளகிய நீவிர் என்ன செய்ய முடியும்? எந்தக் காதிலே, உங்கள் அபசுரம் விழ முடியும்? மேடை உண்டா? மேனாமினுக்கிகளின் ஆடையைப் பிடித்தலையும் பீடைகளே, நரிவாலைக்கொண்டு அரிமாவை அடக்க முடியுமா? என்று தமிழகம் கேட்கிறது.
ஓ, எனக்குத் தெரியும் இந்த உசுருக்குத் துணிந்த தொண்டர்களை என்று உறுமினால் உபயோகமில்லை உசுரர்போனாலும சரி . . . சரி போனாலும சரியே, என்ற கருதுமளவு உரிமைப்போர் உணர்ச்சிகொண்டவர்கள் உங்கள் முகத்தைத் காண்பதே கூட தங்கள் யோக்யதையைக் கெடுததுவிடும் என்று எண்ணியே இதுநாள் வரை இருக்கின்றனர் இதனை அறியாது, இஞ்சியைத் தின்று விட்ட மந்தியாகி ஆப்பை அசைத்தால், அவதிப்படத்தானே வேண்டிவரும்.

புத்திகூர்மை இல்லாவிட்டால் கூடப் போகிறது, கொஞ்சம் ஈவு இரக்கம், சிறிதளவு இன அபிமானம், கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறதா? யாரை ஏசுகிறோம், என்ற ஒரு விநாடியாவது சிந்தித்ததுண்டா? நீங்கள் ஏறிச்சென்று, இன்பபுரிக்கு செல்லவேண்டிய மரக்கலத்தை ஓட்டை செய்ய எண்ணுகிறீர்களே, பொதுவாழ்விலே ஒண்ட இடமின்றி ஓட்டாண்டிக் கோலத்திலே இருக்கும் மோசாண்டிகளே! கலம் பழுதானால், கடலிலே வீழ்நது சுறாவுக்கு இறையாகிவிட நேரிடுமே என்ற யூகமாவது இருக்கிறதா!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்க விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி தந்த கயவரை, நல்லுரை பகன்றவரைக் கல்லலைற புகச் செய்த காதகரை, இன்றம் (இனி என்றென்றுங்கூட) மதியுள்ள மக்கள், மனம் நொந்து கடிந்துரைக்கின்றனரே! ஒரு இனத்துக்காக, தற்குறிகள் அதிகமாகித் தாசத்தன்மை தலைவிரித்தாடி, சிந்தனை சிதைந்து, ஆரியருக்கு வந்தனை வழிபாடுகள் மிகுந்து திராவிடத்திலே திகைப்பும் தத்தளிப்பும், இருந்த நேரத்திலே, யார், அந்த இனத்துக்காகப் பரிந்து பேசியது? அன்னமிட்ட மூதாட்டியைக் கன்னக்கோலன், தூங்கும் நேரத்திலே கழுத்தறுப்பபோம் என்று ஈனத்தனமான எண்ணங்கொண்டு கத்தியைத் தீட்டுவானாம்! இதோ, இன இழிவுபோக்கப் போரிட்டுவரும் தலைவரை, அவரால் ஆதரவு பெற்ற பிறகு, அவரையே ஆபாசமாகக் கண்டிக்குமளவு மனதிலே ஈரம் வறண்டுவிட்டதே! சரிசெய்து நிதிபெறும் சழக்கரை சாமர்த்தியசாலி என்று யாரும் கூறாரே! மூன்றடுக்கு மாடியிலே, வசித்துக்கொண்டு, உல்லசத்துடன் உறவாடிக்கொண்டு இருக்க, நிலை பெற்றும், அதனை அனுபவிக்க மறுத்து, அறியாமையை அழிக்க, இரவு பகல் பாராமல், நோய் நொடியைக் கவனிக்காமல், வெட்டு குத்துவருமோ என்று அஞ்சாமல், காடு மேடு, பட்டிதொட்டி சுற்றிப் பரணிபாடும பெரியாரைப் பதட்டமாகக் கண்டிக்கும் பதர்களைக் கேட்கிறேன், அவர் ஆற்றிய அருந்தொண்டுக்கு, இந்நாடாகவன்றி வேறோர் நாடாக மட்டுமிருந்தால், எத்தனை இடங்களிலே சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும்! எத்துணை புகழ் கிடைத்திருக்கும்! நன்றி கெட்டக் கூட்டத்திலே தலையுடன், தடி ஊன்றித் தள்ளாடி நடந்து வரும தலைவனைத் தகாத மொழி கூறுகிறீர், தாங்காது, தாங்காது தமிழகம், இத்தகையத் துரோகத் தூற்றலை.

தலைவர் உண்டு! வண்டி வண்டியாகக் கொண்டுவரலாம்! புதிய புதிய மோட்டாரும் வரக்கூடும்! அழகழகான அரண்மனைகளிலே வாசஞ்செய்பவர்களைக் கொண்டு வரலாம்! ஆனால் ஒரே ஒரு பெரியாரைத்தான் பெறமுடியும்!

ரயில்வே ரிடயரிங்ரூமிலே, இரண்டு, வாடகைக்கு எடுக்கவும். எலக்ட்ரிக், விசிறி அங்கே சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கவும், எப். எல். 2 உண்டா என்று தெரிந்து எழுதவும். முனிசிபல் வரவேற்புக்கு ஏற்பாடு முடிந்ததா? டீ பார்ட்டிக்கு எங்கே ஏற்பாடாகிவிட்டது? என்ற கடிதமனுப்பும் கனதனவான்களைக் காணலாம்! காண்பதனால் பணப்பயனும் பெறலாம், பிணம் பிடுங்கிப் போக்கினருககு அது பிரியமாகவும் இருக்கலாம்.

சரியப்பா! ஜட்கா கிடைக்காவிட்டால் ஒரு மட்டு வண்டிதான் பாரேன். அதுகூடத் தேவையில்லை. மளமளவென்று நடந்தே போய்விட்டால். பத்தணா மிச்சம் என்று கூறிவிட்டுப் பாதசாரியாகி, வீதிபல நடந்து, விறுவிறுவென்று ரயிலடி செல்ல யார் இருக்கிறார்கள், பெரியார் தவிர,
கூட்டத்திற்குப் போலுஸ் பந்தோபஸ்து தக்கப்படி ஏற்பாடாக வேண்டும். டி.எஸ்.பி.எனக்கு வேண்டியவர்தான். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று கோழைமொழி பேசும் கோடீஸ்வரனைக் கூட்டி வரலாம். அவரைக் கட்சிக்குக் கூட்டி வைப்பதால் கூலியும் பெறலாம், ஆனால், அடே, என்னப்பா, நீங்கள் இப்படித் தொல்லை கொடுக்கிறீர்கள். கல்லை போடுபவன், போட்டுக்கொண்டிருக்கட்டுமே. உங்களுக்குப் பயமாக இருந்தால் போய்விடுங்கள் தொலைவாக. அவன் கல்வீசி, என்ன காணப்போகிறான். கொஞ்ச நேரமானதும், கை வலி எடுக்கும், குந்தனயா குரங்கே சந்தடி அடங்க என்று இருந்து விடுவான் என்று கல்மாரியின் நடுவே கலங்காமொழி பேசிடும, ஒரு தலைவரைப் (பெரியார் தவிரக்) காட்டுங்கள் பார்க்கலாம்!

பரிபாலனம் செய்த, பரங்கியின் நேசமும் பெற்ற, பட்டம் பதவிகளைப் பெறுவதற்கு உரைவிடமென்று பலரும் கருதுவதற்கு இலக்காக இருந்த இந்த ஜஸ்டீஸ் கட்கிச்குத் தலைவரான பிறகு, அவர், உங்களைத் தோட்டக்கச்சேரி நடத்த சொன்னரா, டின்னர் கேட்டாரா, முனிசிபல் வரவேற்புக்ள் வேண்டுமென்றாரா, தொல்லையைத்தானே தேடித் தேடிப்பெற்றார், கல்லை கூசிய கரங்களையன்றோ கண்டார், உழைத்தார், உழைக்கிறார், தேய்ந்து போயிருக்கிறார், நெஞ்சழுத்தம் ஒன்றினால் மட்டுமே அவருக்குள்ள நோய் கூட, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்கிறது. சிங்காரச் சோலையிலே உலாவிடும் சீமான்களைத் தேடுகிறீர், கடைவீதி உலவி நமக்காகக் காரியமாற்றும் கர்மயோகியைக் கண்டிக்கிறீர், நேர்மன் இராமசாமி வெறும் ஆசாமியானார், உங்கள் பொருட்டு உழைக்க, சாதாரண ஆசாமி சர். ஆனதற்காக, சாமரசம் வீசச் செய்கிறீர். பெரியார் இராமசாமியின் பெருந்தொண்டுக்கு இணையாகப் பணியாற்றும் தலைவரை இனி ஓர் நீற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாது. எதிர்காலம் அதனை நமக்கு இடித்து இடித்துக காட்டப் போகிறது.

இரவு எட்டுமணிக்குள் கூட்டத்தை முடித்துவிடவேண்டும், அதற்கு மேல் நான் ஓர் நாட்டியம் காணச்செல்ல வேண்டும் என்று கூறும் தலைவர்களைப் பெற, காலையிலே ஓரிடம் மாலையிலே மற்றோரிடம், இரவிலே இரயில் பிரயாணம், எனும் முறையிலே கட்சி பணியாற்றும், தலைவரை இகழ்கிறீர். தமிழனின் பண்பு எப்படி உங்கள் உள்ளத்தைவிட்டுப் போய்விட்டது? எங்கிருந்து வந்து புகுந்தது இந்த இழி குணம்? எதை நம்பிக் கொண்டு செல்கிறீர் இருண்ட பாதையிலே? யாரிட்ட போதனை? பெறுவீர் பொறுக்க முடியாத வேதனை, என்ற வாலிப உலகு கூறுகிறது வழி தவறிசெல்லும், பழிகாரருக்கு.

பெரியார் இராமசாமி சென்ற கிழமை, பல ஊர் சென்றால் நாக்கிலே புண், அதிலே வடியும் சீழ், உள்ளே போனால் பாதகமாகுமே என்று பயந்தாராம் டாக்டர் சுந்தரவதனன், வேறால் டாக்டரின் சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் நேரம். அந்தச் சமயத்திலே மூன்று மணிநேர முழக்கம். யாருக்காக? நாக்கிலே இருக்கும் புண்ணைப் பற்றியும் கவலையின்றி, இனப்புண் ஆற்ற மருந்திட்டார். அவரை, நகரதூதன் எழுதுகிறார், குறுக்குசால் ஓட்டுகிறார், இருப்படிக்கும் நேரத்திலே ஈக்கு என்ன வேலை, பாவட்டா போடுகிறார், என்று. இந்தத் துணிவு இருக்கிறதே, துரோகமிருக்கிறதே அதைப்படிக்கும் போது எனக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறதே, என் செய்வது!

உதைத்த காலுக்கு முத்தமிடுவது பிரிட்டிஷாருக்கு உண்டாம், அந்தச் சாயல் பெரியாரிடம் பரிபூரணமாக, இருக்கிறதாம். கேட்டீர்களா, இந்த மொழியை, விழியில் வழியும் நீரைத் துடையுங்கள். நகரதூதனில் நித்தனை மேலும் இருக்கிறது. பந்தியில் இடம் இல்லை என்று கையைப் பிடித்து வெளியே இழுத்து விட்டால் இலைபொத்தல், இலைபொத்தல் என்று கூறும் கவுரவ விருந்தாளிக்கு உவமை காட்டுகிறார், பெரியாரை.இந்த மமதையை என்னென்று எண்ணுகிறீர்கள், அவருக்குப் பந்தியிலே இடமில்லையாம்! இதுவரை நாம் கேட்டறியாத தீர மொழிகளை எடுத்துரைத்த மாவீரர் தலைவனுக்கு, பந்தியிலே இடமில்லையாம், குருகுலப்போராட்ட காலமுதற்கொண்டு, திரு இடம் பெறுவதற்கான போராட்டத்தைத் துவக்கி வைக்கும் காலம் வரையிலே வாளை உரையிடாது போரிடும் ஒரு தலைவருக்குப் பந்தியிலே இடமில்லையாம், மண்டையிலே மூளை, இருப்பவன் எவனாவது இதனை ஏற்றுக்கொள்வானா? சிந்தையிலே, சிறிதளவு செய்நன்றி மறவாதத் தன்மை இருப்பவன் எவனேனும் இதைச் செப்பிட முன் வருவானா?

பெரியார் ராமசமி, பொட்டை மிரட்டர்களால் கவுரவம், வாய்ந்த அறிஞர்களை பயமுறுத்துகிறாராம்! பெரியாரின் பொட்டை மிரட்டல் ஏது? சர். சண்முகத்தின் பாகிஸ்தான் எதிர்ப்புப் பேச்சை அவர் கண்டித்தாரே அது. அதிலே, இந்த அரிஞர் திலகம், பொட்டை மிரட்டலைக் காண்கிறாராம். கவுரவம் வாய்ந்த அறிஞர் யார்? சர். சண்மும். சர். சண்முகத்தைப் பெரியார், மிரட்டுகிறாராம், அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாம், இந்த நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார். அந்த ஆளின் நினைப்பு எவ்வளவு நிலைகெட்டிருக்கிறது பாருங்கள். ஜனாப் ஜின்னா வீட்டு வாயிற்படியருகே காந்தியார் சென்று காத்திருக்கும் அளவு பலம் வளர்ந்து இருக்கும் பாகிஸ்தான் பிரச்னையை, தூங்கி எழுந்திருநதவன் கதைபோல, சர். சண்முகம் எதிர்த்தார், அந்த உருட்டல் திராவிட நாடு தனிநாடாவதற்கும், சர். சண்முகம் ஒருப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. பாகிஸ்தான், திராவிடநாடு எனும் பிரச்னைகளை ஆதரிக்கும் பெரியார், சர்.சண்முகத்தின் போக்கை விளக்கினார், கண்டித்தார். ஆஹா இந்த அக்ரமம் ஆகுமா? சர்.சண்முகம் எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் கவுரவம் வாய்ந்த அறிஞர் என்கிறார் கேசரி, கவுரவம் சர். சண்முகத்தை வந்தடைந்ததே, பெரியாரின் பெருந்தொண்டின் பலன்தான் என்பதைப் பதிதரும எத்தரும் தவிர மற்றையோர் அறிவர். ஏன்? சர்.சண்முகமே கூட அறிவார். சர்.சண்முகத்தைக் கண்டிக்கப் பெரியார் மட்டுமல்ல, திராவிட இஸ்லாமிய மக்கள் அனைவருக்குமே காரணம் ஏற்பட்டிருக்கிறது. கொச்சி திவான் கோலம் தலைந்து, ஆண்டுகள் ஏறக்குறைய ஆறு ஆகின்றன. இந்த ஆறு ஆண்டுகளிலே, பாகிஸ்தான் பிரச்னை பலமாக இருக்கிறது. கேசரி அர்ச்சிக்கும் கவுரவம் வாய்ந்த அறிஞர் வாய் மூடிக் கிடந்தார். ஏன்? எதிர்த்தால் இருக்கும் கவுரவம் காலியாகிவிடும் என்ற அச்சத்தால் என்று கருதலாம் அல்லது நியாயமான இந்தப் பிரச்னையை எதிர்த்தால் நம்மை அறிஞர் என்று யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்களே, என்ற அறிவு அவரை ஆட்சி செய்ததால் என்று எண்ணலாம். அந்தக் கவுரவம் வாய்ந்த அறிஞர் கேசரிகளின் கூட்டுறவைப் பெற்று, முடிசூட்டுவிழா செய்து கொள்ள வேண்டுமென்று எண்ணுவதானால், அந்தக் கவுரமும் அறிஞர் நிலையும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுமே என்ற பரிதாப உணர்ச்சியினால்தான் பெரியார் சர்.சண்முகத்தின் போக்கைக் கண்டித்தாரேயன்றி, சர்.சண்முகத்தின் சமயமறியா, சத்தற்ற, சான்று பலமில்லாத தாக்குதலால் பாகிஸ்தான் திராவிடஸ்தான் பிரச்னைகள் பாழகி விடும் என்று பயந்தல்ல. வர்க்கப் பேபராட்டத்தை வசந்தவாசிகள் வதைத்துவிட முடியாது. பாகிஸ்தானைத்தானே சர்.சண்முகம் கண்டித்தார், திராவிட நாடு பற்றி எங்கே மறுத்தார் என்று, வக்கீலாகிப் பார்க்கிறார், வம்புக்கு வாழ்க்கைப்பட்ட கேசரியார். இந்தியா துண்டாடப்படக் கூடாது. ஒரே நாடாக இருக்கவேண்டும், என்று சர்.சண்முகம் சொன்னாரே அதனுடைய பொருள் என்ன? திராவிடநாடு தனிநாடாகவேண்டும் என்பதா? இதை அறிய அரசியல் அறிவு வேண்டாம். சாதாரண அறிவு இருந்தாலே போதும் கேசரிக்கு அதுவுமில்லையே, இந்தியாவைத் துண்டாடக் கூடாது என்ற பேச்சிலே, திராவிடநாடு தனிநாடாகக் கூடாது என்பதுதானே அடக்கம்.

இரண்டணா தேவை என்று கேட்கிறார் கேசரியார் என்று வைத்துககொண்வோம், ஏ, அப்பா, அவர் எப்படிப்பட்ட மனுஷ்யர் எப்படிப்பட்டவர்களின் சினேகத்தைப் பெற்றிருக்கிறார், அது கேவலம் இரண்டணாவா கேட்பார், என்ற கேட்காதுர்க்ள். ஒப்புக்கு வைத்துககொள்ளுங்கள், அவர் இரண்டணா கேட்கும் போது, முடியாது என்று நான் சொல்லிவிடலாம். அது ஒரு முறை, மற்றோர் முறை, என்னிடம் ஒரு ரூபாய் இருக்கிறது, அதை றான் முழுசாகவேதான் வைத்துக்கொள்ளப்போகிறேன். சில்லறையாக மாற்றுவதற்கில்லை, மாற்றினால் மொத்தமும் செலவாகிவிடும் என்றம் சொல்லலாம். இரண்டுக்கும் கருத்து, முடிவு, ஒன்றுதான், இரண்டணா தரமுடியாது என்பதுதான். சர்.சண்முகத்தின் சொற்பொழிவு, இரண்டாம் ரகம். நாம் கேட்கிறோம். திராவிடநாடு தனி நாடாக அமைத்து விடுங்கள் என்று அவரை அல்ல, எப்படி, கேசரியார் என்னிடம் இரண்டணா தரச்சொல்லி கேட்கமாட்டாரோ, அதேபோலத்தான் சரி.சண்முகத்தை மக்கள் திராவிடநாடு தாருங்கள் என்று கேட்கவில்லை. ஒப்புக்கு அவரும் கருதிக்கொண்டார், பேசினார் இந்தியா ஒரே நாடு, அதனைத் துண்டாடக் கூடாது என்று கூறினார், அதன் பொருள் என்ன? திராவிடநாடு கூடாது என்றுதானே பொருள்? அத்தோடு இல்லையே அந்தக் கவுரலம் வாய்ந்த அறிஞர் இந்தியா ஒரே நாடு அதனைத் துண்டாடக்கூடாது. பாகிஸ்தான் என்ற துண்டு போடுவது கூடாது என்றும் கூறினார். அதாவது நான், கேசரியாரே ரூபாயை மாற்றமாட்டேன், அதோ பாலுகூட இரண்டணா கேட்டார். அவருக்கும் தரமறுக்கிறேன் என்று கூறுவதுபோல என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படிப் புட்டுப் புட்டு சொன்னால்தான் புரிகிறது, கேசரியாரே என்ன அவ்வளவு மட்டமாகிவிட்டது உமது மதி. சரி.சண்முகம் திராவிட நாடு எதிர்ப்புப் பேசவில்லை, பெரியார் இட்டுக்கட்டிப் பேசுகிறார் என்று என்னமோ குளறிக்கொண்டுகிறீரே, இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று சர்.சண்முகம் சொன்னாரே, அதனுடைய பொருள் என்ன? இந்தியா ஒரே நாடாக இருக்கவேண்டும் என்ற வற்புறுத்தும் சர்.சண்முகம், திராவிடநாடு தனிநாடாவதை எதிர்க்காமல் வெறென்ன செய்கிறார், அட இழவே ஏனய்யா இப்படி டல்லாகிவிட்டீர? கவுரவம் வாய்ந்த அறிஞர்களின் கூட்டுறவின் விளைவா? இனத்துக்குக் கேடு செய்யும் திட்டம் தயாரிக்கும் கும்பலுடன் சேர்ந்ததன் பலனா?

ஓ, நான் யார் தெரியுமா, கேசரியாக்கும் என்று கர்ஜிக்காதுர், இப்பேதுள்ளவர்கள் அவ்விதமான கர்ஜனைகளைச் சட்டை செய்யமாட்டார்கள். புதுத் தலைவர்களின் மேஜைகளிலே இருந்தெடுத்துப் பருகிய ரசபானத்தை (அரசியல் பானத்தை மட்டுமேதான் குறிப்பிடுகிறேன்) உட்கொண்டதால், அவர்கள் ஊட்டியதைக் கக்காதுர், கர்ஜனையும் வேண்டாம், கக்கவும் வேண்டாம், ஆர அமர யோசித்துப் பேசும், நிதானம் பிறந்த பறிகு பேசும், இப்படி நிந்திக்கிறீரே, இது தகுமா, முறையா?

(திராவிடநாடு - 18.03.1945)