அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சண்முக சம்வாதம்!

தூ! தூ! போ! நாயே!

இனியகுரல்! எடுப்பான இசை! ஆனால் பாடியதோ, மன்றிலுள்ளவரை மமதையுடன் கேவலப்படுத்தும் தூற்றலாக இருந்தது. ஏன் இராது? ஒரு இசைவாணன், சபையினர்மும்ன, தூ! தூ! போ! நாயே! என்று, பாடினால் இசையின் இனிமைக்காப் பொறுமையுடன் கேட்போர் எவ்வளவுபேர் இருக்கமுடியும்? சபைவிறைத்துப் பார்க்கக் கண்டார்! சுருதி கலையவில்லையே! தாளமும் தவறவில்லையே! தமிழர் விரும்பும் தமிழ் இசைதானே பாடுகிறோம்! ஏன் முகம் கடுக்கிறது. விழி கோபத்தைக் கக்குகிறது, என்ற விசாரமடைந்தார் வித்வான். ஆணவம் பிடித்தவன் என்ற சபையினர் கருதினர், சங்கீத ஞான மற்றவர்கள் என்று இசைவாணர் கருதினார். இரண்டாம் அடிபாடும்போதுதான், கோபத்துக்கப் பதில் சபையினர் சிரிக்கலாயினர், விசாத்துக்குப் பதிலாக வித்வான், வெட்கப்படலானால். இந்த மன மாறுதலைத் தந்த அந்த மகத்தான இரண்டாம் அடி எது?

ஆதிநாள் சுந்தரர்க்கு அன்புடனே! . . . என்ற அடி பாடியபோதுதான், தூற்றல் அல்ல இசைவாணர் பாடியது, தோத்திரம் அது என்பதைச் சபை உணரவும், தூது போனாயே! என்ற முதலடியை, வித்வத்துவத்தை விளக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, நிறுத்தி, நிதானமாக, நிரவல்செய்து, எழுத்தெழுத்தாக்கி, தூ-தூ-போ-நாயே! என்று பாடி, பாசுரத்தின் பொருளையே பாழாக்கிவிட்டோமே, அதனாலன்றோ சபையினருக்கு நம்மிடம் ஆத்திரமேற்பட்டது என்று இசைவாண்ர் உணரவும் முடிந்தது. ஆதிநாளில் சுந்தரருக்குத் தூது போனாயே! என்ற ஆரம்பமாகும் தோத்திப் பாடலைப் பாடுகையில், இசை இலட்சணத்தை மட்டுமே காட்டினால் போதும், பொருள் பற்றிய கவலையும் வேண்டாம் என்ற எண்ணிய இசைவாணரின் இடர், கலை உலகிலே மட்டுமில்லை அரசிய்ல உலகிலும இருக்கிறது!!

சர்.சண்முகம், ஒரு நிபுணர்! நமது தலைவராக இருக்க அவர் மறுக்கிறார் என்றாலும் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணற்ற தமிழரின் உள்ளத்திலே பெய்த, பேராற்றல் வாய்ந்தவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவிலே ஆற்றிய ஓர் உரையிலே, அரசியல் சாஸ்திரத்தின் இலட்சண விளக்கம் ஆற்றினால் போதும், அது, காலத்தையும் இடத்தையும் பொருந்திப் பார்க்கும்போது, பொருளுள்ள உரையாக இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய கவலைவேண்டாம் என்ற கருத்துடன் பேசியிருப்பதைப் படிக்கும் (துர்ப்) பாக்கியம் நேரிட்டபோது நமக்குத் தூது போனாயே என்ற துதியைத் தூற்றல் போலத்தோற்றும் படிபாடிய இசைவாணர் பற்றிய எண்ணம் வந்தது. புன்சிரிப்புப் பிறந்தது! மறுகணமோ, பெருமூச்சு! ஏன்? இனியகுரல், எடுப்பானபாட்டு, இருப்பினும் பொருள் பிளங்கப் பாட வேண்டும் என்ற சாமான்ய விஷயமுணராத இசைவாணரின் நிலையிலே கோவைக் குமரன், திராவிடத் திருமகன், இருக்கும் காலமும் வந்ததே என்பது நமது கவலை.

சர்.சண்முகம், அரசியல் கோட்பாடுகளை அலசிக்காட்டி, ஆராய்ச்சி நிரம்பிய உரையாற்றினார் ஆம்! அழுகு மிளிருகிறது. ஆனால் மணமில்லை, காகிதப்பூவாக இருப்பதால். மேதாவித்தனம் அவருடைய சொற்பொழிவிலே மிதக்கிறது. ஆனால் இனத்தின் இருதய கீதமாக இல்லை!

இந்தியாவிலே இன்னல் பல! சுயாட்சிக்குத் தடை பலப் பல! எடுத்த காரியங்களக்கு இடர் மிகப்பல! வகுப்புப் பூசல்! பாசீசக் காய்ச்சல்! காங்கிரசின் ஏசல்! என்ற இன்னோரன்னவற்றைக் கூறினால். பிறகட்சிகளைப் பிடிசாபம் என்ற மிரட்டிய பாசீசக் காங்கிரசின். ஆட்சியின் அலங்கோலத்தைச் சாடினார். நாட்டு நலிவு போக மார்க்கம் யாது எனத் தேடினார்! பாட்டிதரும் பழைய கஷாயமே போதும் என்ற முறையிலே மார்க்கம் காட்டினார்!

இந்தியாவிலே, மேனாட்டு அமைப்பான, கட்சி அரசியல் கூடாது என்றார். குடிஅரசுக் கோட்பாடு, இங்கு அப்படியே குடிபுகுந்தால் பலனில்லை என்றார். சரி! காங்கிரசிடம் கண்ணியம் இல்லை! கட்சி அரசியல் முறையிலே பலன் இல்லை! இடர்மிகுவதன் காரணமோ ஜாதித் தொல்லை! இவை உண்மை! ஆனால், இந்த நோய்போக ஜனாப் ஜின்னா கேட்கும் பாகிஸ்தானமும், பெரியார் இராமசாமி கேட்கும் திராவிடநாடும், அமைக்கப்படுவது, சிறந்த முறையன்றோ என்றால் இல்லை! இமயமே நமக்கு எல்லை! நாட்டைத் துண்டாட மனம் இடந்தரவில்லை! என்ற பழைய பாடலைக் கூறிவிட்டு, மத்திய சர்க்காரிலேயும் மாகாண சர்க்காரிலேயும் கூட்டு மந்திரிசபைகள் அத்திடலாம். கட்சிகளின் பேரால் பிதிநிதிகள் அனுப்பப்படும் முறையிலே மாறுதல்களைப் புகுத்தலாம். இன அரசுகள், பாகிஸ்தான்! தனிப்பட்டவரின் தகுதியின் பரிசுப் பொருளாக்கப்படக் கூடியதுதான்! துரைமார்களின் தோழமைக்கு அடையாளச் சீட்டுத்தான்! ஆனால் ஒரு இனத்துக்கு! ஒரு இலட்சியத்துக்கு! பதவிஸ்தான் அல்ல. பாகிஸ்தான் மட்டுமே, நம்பிக்கையை, எழுச்சியை, திருப்தியைத் தரும் இனம். இடம் கேட்கிறது. வாழ, கண்ணியத்தோடு வாழ! இதை மறுத்துவிட்டு இங்கம் அங்கும் பதவி என்று கூறுவது பொருந்துமா, பொருள் உள்ளதுதானா! நாம், அஞ்சுகிறோம் அவர் அறிஞர், ஆனால் சில பல காலமாகப் பொதுமக்கள் தொடர்பு அற்று இருப்பதால், அவர் அந்தத் தவறிலே தவறி வீழ்ந்திருக்கிறார் என்று கூறுகிறோம்.

இனமா? ஏதய்யா இனம்! எல்லாம் கலந்து கதம்பமாகிவிட்டது! இதையுமா சர் சண்முகம் கூறவேண்டும்! அதுதான் பாரதமாதாவின் பள்ளியிலே பாலபாடமாயிற்றே, காங்கிரஸ் தலைவர்களே இப்போது அந்தப் பாலபாடம் போதாது என்று, மேல்படிப்புக்கு வந்து சேர்ந்துவிட்டார்களே, பரணிபாடி தரணி சுற்றும் நமது சண்முகமா, இந்தப் பால பாடத்தைப் படித்துகாட்டவேண்டும்? ஜழதி மதம்-மொழி கலை என்ற இயல்புகளிலே, ஒன்றுபட்டு இருக்கும் கூட்டத்துக்கே இனம் என்ற பெயர் பொருந்தும் என்கிறார் சர்! ஆம்! அதுதான், ஏடு கூறுவது! ஏடு! வெந நாளைய எண்ணத்தின் இருப்பிடம்! அதை மறவாதிருப்பது. மேதாவிகளுக்கும் அவசியம் என்ற கருதுகிறோம். அரசியல் கோட்பாடுகளிலே, ஆதிநாள் கோட்பாடு, ஒரு இனமென்றால், ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, கொண்ட கூட்டத்துக்கே இனம் என்ற கூறலாம் என்பது இம்முறையிலே பார்த்தால், முஸ்லீம் ஒரு இனமல்லவே! ஒரு மதந்தாதே அதன் அடிப்படை! பல இனம், பல மொழியினர் கொண்ட கூட்டமாயிற்றே! என்று சர்.சண்முகம், பாலபாடப் போதனை செய்கிறார்.

நாமல்ல இப்போது வாதிடப்போவது! குடியரசுக் கோட்பாடு பற்றிப் பேசும் சர்.சண்முகம், இனத்தின் இலட்சண விளக்கமாற்றம் சர்.சண்முகத்துடன், இதோ வாதாடுகிறார், கேளுங்கள்.

சர்.சண்முகம் நம்பர்(1)
மேனாட்டுக் குடிஅரசு அமைப்பு முறை இந்நாட்டுக்குப் பொருந்தாது! ஏனெனில், இங்கு நாட்டு மக்களிடை நானாவிதமான ஜாதித் தொல்லை. எனவே, அரசியல் கோடபாடுகள், வகுப்பை ஒட்டி வளருகின்றன. இந்நிலையிலே, மேனாட்டிலே, குடி அரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறபட, ஆளுக்கொரு ஓட்டு அதிகப்படியான ஓட்பெறுவர் ஆட்சிமன்ற உறுப்பினராகலாம்! எந்தக் கட்சிக்கு அதிக உறப்பினர்கள் கிடைக்கின்றனரோ அந்தக் கட்சியே, மந்திரிசபை அமைக்கும்! சிறுபான்மையான உறுப்பினரைப் பெற்ற கட்சி, எதிர்க்கட்சியாக இருக்கும் - என்ற இந்ம மேனாட்டு முறையை இங்கே புகுத்தினால், அரசியல் நீதி கிடைக்காது. பாசீசக் கொடுமையே வளரும், காங்கிரசின் ஆட்சியிலே இதனைக் கண்டோம். ஆகையினாலே, இங்க, பெருவாரியான உறுப்பினரைப் பெறுகிற கட்சியே அரசாளும் என்ற முறை (Majority Rule) பொருந்தாது. பல கட்சிகள், இலட்சியங்கள், வகுப்புகள், ஆகியவற்றுடன் இடமளிக்கக் கூடிய முறைவேண்டும், கூட்டு அமைச்சு முறையே தேவை! இது சர்.சண்முகம் (நம்பர் 1) வாதம்!

இதைக் கேட்டதும், அரசியல் ஏடுகளிலே, குடிஅரசுக் கோட்பாடு பற்றி (Democracy) படித்திடும், கல்லூரி மாணவர், அவர் அறிந்த அத்தனை ஆசிரியர்கள் மீது ஆணையிட்டு, Bryce-Strong wick-Lask. எனும் பலப்பல கனமான புத்தகங்களை வீசிச் சற்றுக் கோபமாகவே கேட்பார், இவ்வளவு ஏடுகளும், குடிஅரசின் சூட்சமமே, உயிர்நாடியே, ஆயதடிசவைல சுரடந, பெரும்பான்மையினர் ஆட்சி என்று, முறையிடுகின்றனவே, அது கூடாது, இந்நாட்டுக் குடிஅரசு, ஓட்பலம் பெறாத நிலையிருப்பினும், (ஒரே கட்சி ஆளவேண்டும் என்ற தத்துவத்தை மாற்றி) பல கட்சிகளின் கூட்டாகவே, இருத்தல் வேண்டும் என்ற கூறுகிறீரே, கோபியாதீர், இவ்வளவு அறிஞர்களும், எந்த வகையிலே, தங்களால் மறுக்கப்படக் கூடியவர்கள்! என்று கேட்பர்.

சர்.சண்முகம்(நம்பர் 1) கூறுவார், புன்சிரிப்புடன், தமிபீ! ஏடுகளிலே உள்ளவற்றை நாட்டோடு பொருத்திப் பார்த்தே, அவை நடைமுறைக்கு ஏற்றனவா, அல்லவா என்ற ஏற்றுக்கொள்ள வேண்டும். படிப்புக்கும் தெளிவுக்கும் உள்ள மாறுபாடு, இதிலேதான் விளங்கவேண்டும். குடிஅரசு இப்படி இப்படி இருக்கவேண்டும் என்று சில இலட்சணங்களை மேனாட்னர், தங்கள் சமுதாயத்தை மட்சூம, நினைவிலே இருத்தி வகத்தனர். இங்கள்ள நிலைவேறு! எனவே, ஏடு கூறுவதை எடுத்தாளும்போது நமது நாட்டுக்கு ஏற்றவிதமாகத் திருத்திக் கொள்ளலாம். குடி அரசுக்கு நாம் ஏன், புதுப்பொருள் காலத்துக்கு ஏற்ற கருத்துத் தரக்கூடாது, நமக்கு அந்த உரிமை இல்லையா? என்று கேட்பார்.

சர்.சண்முகம்(நம்பர் 1) சம்பிரதாய அரசியல் கருத்தைக் குடிஅரசு கோட்பாடு பற்றியபோது, தைரியமாகக் கைவிடுகிறார். ஆனால் சர்.சண்முகம்(நம்பர் 2) இனத்தின் இலக்கணம் உரைக்கும்போது மட்டும, சம்பிரதாயக் கருத்தைக் கைவுட மறுக்கிறார். குடி அரசுச் சண்முகம்(நம்பர் 1) இன அரசு மறுக்கும் சண்முகத்துடன்(நம்பர் 2) ஓய்வான நேரத்திலே, வாதிட வேண்டுகிறோம்.

குடிஅரசுக் கோட்பாட்டுக்குப் புதுப்பொருளும், அந்த அமைப்பு முறைக்குப் புதுத்திருத்தமும் தருவது எவ்வளவு சரியோ, அந்த அளவுக்கம், அதற்கச் சற்று மேலேயுங்கூட, இனம் என்பதற்க, முன்னாள் ஏடுகள் தீட்டிடும் இலக்கணத்தை இந்நாள் நிலைக்கு ஏற்பவும், இந்நாட்டுத் தன்மைக்குத் தக்கபடியும் மாற்ற, புதுப்புக்க, சர்.சண்முகம் உரிமை பெற்றிருக்கிறார். அதை அறியாது இழக்கிறார்.

இனப்பிரச்சனையின் உயிர்நாடி, இதுபோது கூட்டு உணர்ச்சி என்று கூறலாம்! முன்னாளிலே,ட வாழ்ந்தோம், இன்னாள் இடர்பட்டோம், நாமார்க்குங் குடியல்லோம் என்ற எழுச்சி ஏற்பட்டுவிடுமானால், அந்த எழுச்சியிலே இசைந்துவிடும் மக்கள் தொகுதி, ஒரு இனமாகிறது! இரத்தக் கலப்பு, ஓராட்சியின் கீழ்குடி இருந்த வரலாறு, இவைகள், இநத் எழுச்சியின் முன்பு தலைகாட்ட முடியாது இன்று பாகிஸ்தான், திராவிடஸ்தான், இத்தகைய எழுச்சிக் கீதமேயாகும் இந்தக் கீத விளக்கத்துககுச் சில கூறுகிறோம்.

மொழி, உடை, ஊண் முதலியவற்றில் ஓற்றுமையிருப்பது ஒன்று மட்டுமே ஒரே ஜாதியார் (ய ளுபேடந யேவடி) என்பவர்கள் வளர்வதற்குரிய நிச்சயமானஅடிப்படையாய்த் தோற்றவில்லை.
பிரெஞ்சுக்காரரும் இத்தாலியரும் இரத்தக் கலப்பாலும், கலையாலும், மதத்தாலும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பானே என்பார் (ஆ.க்ஷடிடிநேவ) வரைந்திருக்கிறார்.

போர்ச்சுகீஸியரும் ஸ்பானியரும ஒரே மூலத்தினின்று தோன்றிய மக்களாகவும், மன்ற பக்கங்களில் இயற்கையாயுள்ள கடலெல்லைகளாலும நான்காவது பக்கத்தில் மலைத்தொடராலும், குழபபெற்று நிற்கும் ஒரே தேசத்திலே வாழ்பவர்களாகவும், ஒரே மூலத்திலிருந்து தோன்றியுள்ள சகோதர மொழிகளை பேசுகிறவர்களாகவும், 800 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் ஆட்சியின் கீழே வாழ்ந்து வந்த ஒரே பொதுவான பழங்காலச் சரித்திர ஐதிகத்தை வாய்க்கப் பெற்றவர்களாகவுமேயிருந்து வருகிறார்கள். இவ்விரு ஜாதியார்களும் மதத்தால் ரோமன் கத்தோலிக்கர்களாயிருந்துகொண்டு ஒரேவிதமான பொதுச்சமுகப் பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக்கொண்டு, தங்களக்குள் பொதுவான பொருளாதார அபிலஷைகளையும் அபிவிருத்தி செய்துகொண்டு வந்திருக்கிறார்கள். எனினும் அவ்விருவரும் ஒரே ஒற்றுமையுள்ள தேசிய அரசாங்கத்தை உண்டுபண்ணிக்கொள்ளவில்லை.

மக்கள் தமக்குரிய பண்டைச் சரித்திரப் பெருமையையும் எதிர் கால வாழ்க்கையின் மேன்மையையும் நன்குணர்ந்து கொண்டு, தங்களை ஒரு தேசத்தை ஆளக்கூடிய மக்களாய் ஆக்கிக்கொள்ள வேண்டுமென்னும் அர்வத்தை அபிவிருத்தி செய்துவிடுங்கால், அவர்கள் ஒரு நேஷனாக உயர்ந்துவிடுகிறார்கள்.

இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டுவித வெவ்வேறு வகைப்பட்ட மதக் கொள்கைகளையும், சமூகப் பழக்க வழக்கங்களையும், கலைகளையும் வாய்க்கப் பெற்றவர்களாகியிருக்கிறார்கள். இவர்கள் ஒருவரோடொருவர் விவாக சம்பந்தம் வைத்துககொள்வதில்லை; சமபந்தி போஜனமும் செய்வது வழக்கமில்லை; உண்மையிலே இவர்கள் இரண்டுவித வெவ்வேறு வகைப்பட்ட நாகரிகங்களையுடையவர்களாய் இருக்கிறார்கள்; அந்நாகரிகங்களிரண்டும முக்கியமாக முரண்பட்டுள்ள கொள்கைகள் மீதும் நோக்கங்கள் மீதுமே அஸ்திவாரமிட்டு அமைக்கப் பட்டிருககின்றன.

இவர்களுக்குரிய பெருங்காப்பியங்கள் வெவ்வேறாயிருக்கின்றன; இவர்களடைய வீரர்களும் வெவ்வேறாகக் காணப்படுகின்றனர்; இதிகாசக் கதைகளம் வெவ்வேறாகக் காண்ப்படுகின்றனர்; இதிகாசக் கதைகளம் வெவ்வேறாகவே முரண்பட்டுக் கிடக்கின்றன. அநேக சமயங்களில் ஒரு ஜாதியாரின் வீரன் மற்றொரு ஜாதியாரின் விரோதியாய்க் காணப்படுகிறான்.

சர்.சண்முகம், தமக்க இருக்கும், அரசியல் ஆராய்ச்சித் திறத்தை விளக்கப் பல்கலைக் கழகத்திலே அதுபோலப் பேசி, பிரிவினை கூடாது என்று, பாடிவிட்டார் போலும்! நாம் குறிப்பிட்ட இசைவாணரின் முதலிடிபோல, இச்சொற்பொழிவு அமைந்து, இரண்டாம் அடியிலே விளக்கம் வெளிவந்தது போலச் சர்.சண்முகமும், இதுபோது,

பிரிவினை கூடாது முதலடியைப் பாடிவிட்டால். கேட்டவர் செவிக்க வலி பிறந்திடும்படி, இத்துடன் நில்லாது, சபையின் உணர்வு தெரிந்து இரண்டாம் அடியைப் பாடிய இசைவாணர் போல இவரும் பிரிவினை கூடாது என உரைப்போர் தருக்கினைத் தகர்த்திடுவோம்.

என்ற பாடினால், இகைக்கும் மதிப்பு, சபைக்கும் களிப்பு! சர்.சண்முகம், பல்கலைக் கழகத்திலே நிகழ்த்தியதே, இனி என்றம், எங்கும் அவர் பாடப்போகும் சிந்து என்றால், நாம் சஞ்சலமடைகிறோம். அவர் பொருட்டு! நாடு, அந்த நாதத்தை எற்காது! நிக்கயமாக ஏற்காது! இனம் பொறக்காது! இனியும் பொறுத்துக் கிடக்காது!

(திராவிடநாடு - 04.03.1945)