அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிங்கத்தின் பங்கம்!

நெஞ்சில் ஈரமற்ற, நன்றியற்ற பதவிக் கும்பலிடமிருந்து கட்சியை மாற்றி அதைத் திராவிடச் சமுதாயத்தில் புரட்சிகரமான காரியத்தைச் செய்வதற்கேற்ற கருவியாக்க ஓர் முயற்சி 02.02.36-ல் பெரியார் இராமசாமி அவர்களும் தோழர் சௌந்தரபாண்டியனும் விடுத்த ஓர் அறிக்கையில் காணப்படுகிறது. அதை ஆதரித்து இப்புது முயற்சியில் நம்மாலான தொண்டும, நம்மாலான ஊழியமும் செய்யத் தயாராயிருக்கிறோமென்பதை நாமும் தெரிவித்துக கொள்கிறோம். நகரதூதன் ஆசிரியர் கூறியிருக்கிறார். அந்த நன்மதி அவர் ஏட்டிலே பேனாவைத் தீட்டும் தங்களுக்கு ஏன் ஏற்படவில்லை? பட்டம் பதவிகளை விட்டுவிட வேண்டுமென்று சேலத்திலே செய்த தீர்மானம் செந்தேள் என்ற பயப்படும், செய்லவேறு, சொல்வேறு படைத்த சீலர்களுடன் கூட்டுவாழ்க்கை நடத்த உம்மால் முடியாது - உம்முடைய இயல்பு அடியோடு மாறிவிட்டிருந்தாலொழிய, பணத்திற்கு ஆசைப்பட்டுக்கொள்கையை மறக்கம் கும்பலிலே தாங்கள் ஒருவரல்லவர் என்பதை உம்முடைய முன்னாள் எழுத்து எனக்குக் காட்டுகிறது.

ஜஸ்டிஸ் கட்சி உருப்படுமா என்ற கேசரி என்ற பெருக்கேற்றபடி தாங்கள் கூறியிருக்கிறீர்கள். எல்லாரும் காசுக்கு மசியும் பிறவிகளல்லர் காசும் பணமும் மான ரோஷமுள்ள சுதந்தர புருஷனின் மயிர்காம்பைக் கூட அசைக்காரே என்று.

இப்படிச் சொன்ன தாங்கள் பணத்திற்கு ஆளாகியிருக்க முடியாது ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தில் ஏற்பட்டிருக்கும் அபூர்வமான மாறுதலுக்கு அர்த்தம் புரிந்துகொள்ளக்கூடிய காரணத்தைக் காணோம் ஒருசமயம் அந்தத் தலைவர்களை நீர் அறியாது அல்லது மறந்து அவர்களும் உம்மை யாரென்றறியாது இந்தக் கூட்டுறவு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று யூகிக்கிறேன். புரட்சிகரமான தீர்மானத்தின் வித்து ஜஸ்டிஸ் கட்சி உருப்படுமா என்று தாங்கள் கட்டுரையில் தீட்டிக்கொண்டிருந்த அதேநேரத்தில் தங்களுடைய தாக்குதலுக்கு என்று ஆளான பாண்டியனாராலும் இன்று தங்களால் தாக்கப்படும் பெரியாராலும் தூவப்பட்டது எந்தத் தேர்தலுக்கும், ஆசைப்படாதவர்களும், பட்டம் பதவிகளை விட்டுவிடக் கூடியவர்களுமான மனப்பான்மையுடைய அறிக்கையின் சாரம் அதை நீர் ஆதரித்தருக்கிறீர் அழுகுற. அந்த நிலைமை இன்று செயலிலே வரும்போது அதற்குக் காரணமாக இருந்த பெரியார் மீது பாய்கிறீர். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இறைவன் திருவடி நிழலில் இரண்டறக் கலக்கவேண்டுமென்ற இறைஞ்சுகின்ற பக்தர்கள் ஆண்டவன் அழைத்தாலும் சாகத்துணுவதில்லை என்று. அதுபோல இருக்கிறது உமது போக்கு, சேலம் மாநாட்டிலே வந்திருந்த மக்களின் கணக்குப் பற்றியும், ஊர்வலத்தினுடைய நீளம் பற்றியும் குடி அரசும் திராவிடநாடும் பிற பத்திரிகைகளும் கூடுதலாக எழுதியிருப்பது எமக்குப் பிடிக்கவில்லையென்று தூதனில் தூற்றலைத் தொடுத்திருக்கிறீர். விருந்துக்குப் போயிருந்தவன் ஆயிரக்கணக்கிலே உண்டுகளித்தார்கள் என்று கூறுவதும் அந்தக் கணக்குத் தவறு நான் ஒன்று விடாமல் எண்ணிப் பார்த்தேன் ஆயிரத்துக்கு பதினாறு குறைவு, எச்சிலி இலையை எண்ணிப் பார்த்த என்னிடம் இப்படிப் புளுகலாமா என்ற பிச்சைக்காரப் பயல்கள் கொச்சை மொழியிலே பேசினால் சிச்சீ இப்படிக் கூறலாமா என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு எவரும் சண்டைக்குக் கிளம்பமாட்டார்கள். அதைப்போல ஆள்கணக்கும் ஊர்வல நீளக்கணக்கும் கூட்டாது குறைக்காது நீர் கூறியிருக்கிறீரோ அல்லது குளறியிருக்கிறீரோ என்பது பற்றி நான் ஏதும் கூறப் பிரியப்படவில்லை. காரசாரமாகக் கட்சித்துரோகிகளைக் கண்டித்த நமது கேசரி கனவான்களுக்குக் கவிபாடவும் தனவான்களுக்குத் துதிபாடவும், சீமான்களுக்கு முன்னோடும் பிள்ளையாக மாறவேண்டிய அளவு, வயோதிகப் பருவம் மேலிட்டுவிட்டதா அல்லது வாத்சல்யத்திற்கு வேறு காரணம் உண்டா என்பதுபற்றி எண்ணுகிறேன். ஏங்குகிறறேன் ஆகவேதான் அவர்களை அறிமுகப்படுத்தி வைப்பதன் மூலம், உம்மை நீர் உணரும்படி செய்ய முயலுகிறேன். முயற்சி திருவினையாகட்டும்!

சொல்வதைச் சொல்லடா செல்லத்தம்மி, நான் சொகுசுக்காரச் சீமான்களின் சேசத்தை விடமாட்டேன் தம்பீ என்று கேசரி கூறிவிட்டாலும் சரியே, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லியாக வேண்டும்! வேறு எதற்கு சொல்லியாக வேண்டும்! வேறு எதற்குப் பயன்படாவிட்டாலும் ஒரு பயனுள்ள காரியத்துககு இது உபயோகமாகலாம்! எவ்வளவு எதிர்ப்பு! என்னென்ன இடையூறுகள்! கண்டனமும் கேலியும் கொஞ்சமா! இவ்வளவையும் தவிடுபொடியாக்குகிறேன். தங்கள் தயவுமட்டும் இருக்கவேண்டும் என்று சீமான்களிடம் கூறிட, இந்த என் எழுத்தை எடுத்துச் செல்லலாம். கொஞ்ச பலனும் கிடைக்கும். நானும் றோயறோயத் தான் இடித்துச் சொல்கிறேன். ஆனால் என்ன சொன்னாலும் எருமை மாட்டின் மேல் மழைபெய்த மாதிரியில்தான். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும இது என் கடமை. அதைச் சொல்லிவிடுகிறேன் என்று நிஷ்காமக்ர்மியாய், அச்சம் தயை தாட்சண்யம் எனும் கட்டுகளை உடைத்தெரியும் வீரனாய். மக்களின் நண்பனாய், கேசரி எழுதியது ஒரு காலம்! உஷார்! கபர்தார்! பெரியாரே! விலகிவிடு மரியாதையாக! என்று உறுமுவது ஒரு காலம்! எனக்கு அந்த உறுமலைக் கேட்டுக்கூடக் கோபமில்லை, அந்த உறுமலைக் கிளப்புவதற்காகக் கேசரியை உசுப்பி விடுகிறார்கள். அந்தக் காட்சியைக் காணும்போதுதான், கோபமும் சோகமும சேர்ந்து வருகிறது. கூண்டுக்குள் கேசரி இருக்கக் காண்கிறேன்! அதன் வாலை மிதித்துக்கொண்டு, சர்க்கஸ் வேடிக்கைக்காரன் நின்று, ஆரவாரம் செய்யும் மக்களிடம் வீரன் என்ற விருதும், பணமும் பெறுவதைப் பார்க்கிறேன்! இப்படிப்பட்ட நிலைக்குக் கேசரி வந்ததை எண்ணிப் பரிதவவிக்கிறேன்.
பொட்டைக் கண்ணி! தட்டை மூக்கி! குணமோ கோணல்! நடையோ ஆபாசம்! என்று ஒரு மங்கையை வர்ணித்த கலியாணத்தரகர், பிறகு அந்தப் பெண்வீட்டாரின் விருநதுண்டு களித்து, பொருள்பெற்று மகிழ்ந்து, அதே பெண்ணைப்பற்றி அதற்கா கண்தெரியாது, அடராமா! கூச்சம் அந்தப் பெண்ணுக்கு. அதனால் யாரையாவது கண்டால் கண்களை மூடிக்கொள்ளும். நடத்தையை யாரும் குறைகூற முடியாது. நாக்குப் புழுத்துப்போகும். சுகுணவதியல்லவா அந்தச் சுந்தரி என்று பெருமையாகப் பேசி, இடம் முடித்து வைப்பதற்கும். நண்பர் கேசரியார், சுயநலக்காரர். சோம்பற் சீமான்கள், சொல்வேறு செயல்மாறு கொண்டவர்கள், தொண்டர் துயர் காண மறுக்கும் துரைமார் என்று எவரெவரைத் தூற்றினாரோ அதே ஆசாமிகளை இன்று அசகாய சூரர்களென்ற புகழ்வதும், அவர்களாலேயே கட்சியைப் புனிதப்படுத்த முடியும் என்ற பேசுவதற்கம், என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற எனக்குப் புரியவில்லை, புரிந்தவர்கள் கூறினால் கேட்கத் தயார். ஒரு சமயல் கேசரி மறந்து போயிருக்கக்கூடும், அந்தத் தலைவர்களின் ஆட்சியிலே கட்சி இருந்தபோது, என்னென்ன குறைபாடுகள் மலிந்திருந்தன என்பதை இதோ ஓர் அட்டவணை, ஜஸ்டிஸ் கட்சி உருப்படுமா என்ற உள்ளமுருக்கும் கேள்வியைக் கேசரியின் பேனா கிளப்பிற்றே அச்சமயம் அவரே தீட்டியது இது.

(1) உத்யோகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும ஜஸ்டிஜ் கட்சியில் ஏற்பட்ட சோம்பேறித்தனம் (2) உத்தியாகத்தை வகிப்பதிலும் ஏற்பதிலும் திருஷ்டி சென்றதேயன்றிப் பொதுஜனங்களைப் பக்குவப்படுததுவதிலும், கட்சிப் பிரசாரம் செய்வதிலும், சிரத்தையற்ற மனப்போக்கு (3) படித்த பிராமணரல்லாதார் எல்லாருக்கும் எக்காலத்தில் உத்தியகே இலாக்காவில் ஏற்பட்ட தேவையைப் பூர்த்தி செய்யமுடியாமல் போனதால் ஏற்பட்ட பழி (4) காங்கிரஸ் சட்டமறப்பிப் போரிலே சர்க்கார் கையாண்ட அடக்குமுறையால் ஜஸடிஜ் கட்சியின் முதுகில் விழுந்த பிரம்படி (எதிரொலி) (5) ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்வோர்களுக்குள் எற்பட்ட தனிப்பட்ட மனஸ்தாபங்களும் உள்நாட்டுக் கலகங்களும் (6) ஜஸ்டிஸ் கட்சியின் பிரச்சாரக் குறைவு (7) இவை எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தி அனுபவித்ததால் ஜனங்களுக்கு எற்பட்ட அலுப்பு.

ஒரு கட்சியை உருக்குலைக்க இவ்வளவு போதாதா? இது கேசரியின் எழுத்து. 12.04.1936ல், நகர தூதனில்.

இவ்வளவு போதாதா? என்ற கேட்ட கேசரிதான், இப்போது இவ்வளவுக்குக் காரணமாக இருந்துவந்த, இடித்து இடித்துக் கூறி வந்தவர்களைப் பொருட்படுத்த மறத்தவர்களிடம் இது போது கட்சியை இப்படைத்துவிட்டுப் பெரியாரை, மரியாதையாக விலகும்படி எச்சரிக்கை விடுக்கிறார்.

கேசரியின் கோபம் பொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த அந்தக் காலத்தில், அந்த ஜ்வாலையின் முன் சுயநல நரிக்கூட்டம் சுருண்டு விழத் தொடங்கிய அந்த நேரத்தில், என்னென்ன குறைகளைக் குற்றங்களை, கட்சித் தலைவர்களென்போரிடம் இவரும்கண்டு, மக்களியும் காணச் செய்தாரோ, அதே தலைவர்களின் அதேபோக்கு, அப்படியே இருக்க இவருடைய நாக்கு மட்டும் வேறு நாதம் பாட ஆடுகிறது, இது ஏன் என்று நான் கேட்டாலோ, கேசரி கர்ஜனை செய்யும், ஆமாம்! கடுகு சிறுத்தாலும காரம் போகாதாமே, அதுபோல!! ஆனால், எத்தனையோ சர் திவான்பகதூர்கள் சீறுவார்கள் என்பது தேரிந்திருந்தும், அவர்களின் சிறுமைக் குணங்களைக் கண்டித்துக்கட்சி உருப்பட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு, வேலை செய்த கேசரியின் தம்பிதானே நான், நான் இப்போது, கூண்டுக் கேசரிக்குக் கோபம் வருமோ என்று பயப்படலாகுமா! செச்சே! அண்ணன் ஆகாதவழி போனால், தம்பிதடுக்காமலிருப்பது குடும்ப தர்மத்துக்கே கேடல்லவா? ஆகவேதான், கட்டிய கங்கணத்தை அவிழ்த்துப்போட்டுவிட்டுக் கனவான்களின் கமலபாத பூஜிதனாகிவிட்ட கேசரி, ஆரம்பித்து, இடையே விட்ட காரித்தை நான் வெற்றிகரமாக முடித்துவைக்க ஓரளவு உதவியாக இருந்தேன், உளம் மகிழ்ந்தேன் ஜஸ்டிஸ் கட்சி உருக்குலையும்படி செய்தவர்கள், ஊரார் முன்வந்த நின்ற உரிமை கொண்டாடவும் முடியாதபடி அவர்களுக்கும் கட்சிக்கும் இருந்த தொடர்பு அறுபட, சேலத்திலே இறங்கியுள்ள கேசரியின், தலைகீழ் மாற்றமே என்னைத் திடுக்கிடச் செய்துவிட்டது. அடடா! என்ன பயங்கரமான நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார், கேசரியார், என்பதை எண்ணிடும்போது, விசனம் மேலிடுகிறது.
இப்போது எவரெவரைப் புனருத்தாரணத் தலைவர்களென்ற கேசரிக் கூட்டத்தார் பூஜிககிறார்களோ, அவர்களிடம் ஜஸடிஸ் கட்சி இருந்தபோது, கட்சியிலே மலிந்து கிடந்த ஊழல்களைக் கேசரி வெளிப்படுததிக் கொண்டிருந்தபோது, குடிஅரசு இதழும் பெரியாரும் அவர்தம் படையும், உருக்குலையும் கட்சியைத் தூற்றிக்கொண்டு தூரவிலகி இராமல், அதற்கு உதவிசெய்து, உருப்படவைக்கும் வேலையைச் செய்துவந்ததைக் கேசரி மறுக்க முடியாது, மறக்கலாம். ஆனால் மறதி உடமையின் வாயிற்படியாகையால், கேசரிக்குள்ள மறதி போக்க நான் முனைகிறேன். என்ன இருந்தாலும் அண்ணா அல்லவா! பெரியாரின் உழைப்பு ஜஸ்டிஸ் கட்சிக்கக் கிடைத்துங்கூடப் பயனற்றுப் போகிறது என்பது அந்தக் காலத்திலே, கேசரியின் வாதம்.

குடிஅரசுக் கர்த்தாவும் எவ்வளவோ தூரம் ஆதரித்துவிட்டார், இக்கட்சிமீது ஏற்பட்ட வாஞ்சையின் காரணமாக மனச்சாட்சிக்கு மாறாக வக்கீல் வாதமும் செய்துவிட்டார். முறிந்து விழாதபடி சிம்புவைத்துக் கட்டியும், மூளி மூக்கரை தெரியாதபடி சாந்துபூசியும் பார்த்துவிட்டார் என்று கேசரி அன்று எழுதினார் அதாவது, ஜஸ்டிஸ் கட்சியிடம் பற்று. அந்தப் பற்றின் காரணமாக உழைப்பு. அந்த உழைப்பின் மூலம், கட்சியிலே இருந்த குறைகளைப் போக்க முயற்சி, இவை, குடிஅரசு கர்த்தாவினால் செய்யப்பட்டன, என்சொல் அல்ல ஆதாரம், நான்தான் தலையாட்டிடும் தம்பி யாயிற்றே, நான் மேலே கூறுவது வாலையாட்டும் (கோபத்தால்) கேசரியின் வாசகம்! இவ்வளவு கட்சிப்பணி செய்தகாலை குடிஅரசுக் கர்த்தா கண்டது என்ன? கேளங்கள் கேசரியின் பேச்சை.
இதனால் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்பட்ட எதிர்ப்பையும் அவமானத்தையும சகித்துக்கொண்டு, தனது சக்திபூராவையும் உபயோகித்து வருகிறார். ஆனால் என்ன செய்வது? எல்லா உழைப்பும் வியர்த்தமூலைக்கே போய்ச் சேர்கின்றது. எவ்வளவு பாடுபட்டாலும் ஜஸ்டிஸ் கட்சி இருக்கட்டுமா, சாகட்டுமா? என்ற கேள்வியைத்தான் கேட்கிறது. அதிர்ஷ்ட ஜாதகம் இதற்கு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் என்ன? இஞ்ஜினில் ஏற்பட்ட கோளாறா, டிரைவரின் சத்தக்கட்டையா?

இப்படி வெறுத்துவிட்டார் கேசரியார் அழுக்கு மூட்டைகளை! சுமக்கிறதற்கு, ஆள் நம்பர் ஒண்ணு! என்ற கூறுகிறார். கேசரிக்கு ஆகுமா இப்போக்கு, இதுவே சரி என்ற கூற முற்படுவாரானால், நான் தலையைத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டியதுதான். இப்படிப்பட்ட அண்ணனுக்குத் தம்பியென்று கூறித்தீர வேண்டி இருக்கிறதே என்ற வெட்கத்தால்!

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்ற அழைக்கப்பட வேண்டிய தகுதி வாய்ந்தவர்களைப் பற்றி கேசரி, அனுபவபூர்வமாக, ஆதாரங்களுடன், ஆணித்தரமாக முன்பு எழுதி வந்ததற்குக் காரணம், கட்சி, கனதனவான்களின் கொலுமண்டபமாகிவிடாமல், மக்கள் மன்றமாக வேண்டும் என்பதற்காகத் தான், மக்களின் மன்றமாகக் கட்சி மாறிவிட்டது சேலத்தில் அந்த ஆச்சரியத்தைக் கண்டு அச்சமுற்ற ஐஸ்வரியவான்கள், ஆஹா! நமது உல்லாச ஓடம் கவிழ்ந்ததே என்று ஓலமிடுவதிலே அர்த்தமுண்டு எந்நத இலட்சியத் துக்காகக் கனல்கக்கியாகக் கேசரி காட்சி அளித்தாரோ, அதே இலட்சியம் சித்தியான நேரத்திலே, ஏன் சிதறி ஓடும் சீமான்களக்கு இவர் சிகை சீவி பூ முடிக்கும் தாதி வேலையை ஏற்றுக்கொள்கிறார். இவருக்கு இதுதகுமா? அவ்வளவு அதிகமாகவா வேலையில்லாத் திண்டாட்டம் வேதனையை மூட்டிவிட்டது. ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகத்தைத் தமது பிடியிலே முன்னாளில் யாரார் வைத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களிடம் கேசரியார், பக்திபூர்வமாக இருந்து பழகி, அவர்களின் குணங்களை நான்கு அறிந்து, ஆற்றலை அளவெடுத்துப் பிறகேதான், ஜஸ்டிஸ் கட்சி உருப்படுமா? என்ற அஸ்திரப் பிரயோகம் செய்தார் அந்தக் காலத்திலே, இவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரராகும் பண்பு பெறாதிருந்த பிரமுகர்கள், இன்ற இவரால் பூஜிக்கப்பட வேண்டியவர்களான விந்தை இருக்கிறதே, இது, ஹிட்லரின் காலடி வீழ்ந்த பெட்டெயின் (பெதாங்) வரலாற்றைவிட வேடிக்கையாக இருக்கிறது வெர்டூன் வீரன் பாரிஸ் வீணனானாள் கர்ஜனை புரிந்த கேசரி, காசடிக்கப் பயப்படும் பேர்வழியானார் ஆனால் தெகோல்கள் (டிகாலே) திகைக்கமாட்டார்கள்ஜஸ்டிஸ் விடுதலைப் போரை நிறுத்தமாட்டார்கள்.

ஏன், பழைய பசலிகளைக் கேசரி அன்று கண்டித்தார் சொந்த விரோதம் காரணமாகவா? இல்லை ஜஸ்டிஸ் கட்சி நன்மைக்காகஜஸ்டிஸ் இதோ கேளுங்கள் அவருடைய மொழியை ஜஸ்டிஸ் ஜஸ்டிஸ் வாஸ்தவத்தில் இப்போது அந்தக் கட்சிக்குத் தலைவர்கள் என்ற யார் கருதப்படுகிறார்களோ, அவர்களிடத்தில் நான் வைத்திருந்த நம்பிக்கையின் பிடிப்புக் கொஞ்சங் கொஞ்சமாக விட்டு வருகிறது. ஏனென்றால்குடும்பத்துப் பிள்ளைகள் மாதிரி இருக்கவேண்டிய அவர்கள், ஒருவருக்கொருவர் அசுசி கூறிக் காலம் கழிக்கின்றனர். இந்த ஒற்றுமைக் குறைவால் கட்சி வளர்ச்சியில் அவர்களக்குக் கவனமிருப்பதாகவே காளோம். கட்சிக்காக அவர்கள் செலுத்துகிறதாகச் சொல்லப்படும் அக்கரை ரொம்பப் போதாது. சிநேகர்களுக்கும் உறவினர்களுக்கும் எவ்வளவு பரிவு காட்டுகிறார்களோ அந்த அளவில் பாதிகூடக் கட்சி மனிதர்களுக்குக் காட்டுவதில்லை

பக்கத்துக் கையைப் பார்த்துச் சாப்பிடு என்று சர்வ சாதாரண மாகயாரும் சொல்வதுண்டு. அந்த மாதிரி பக்கத்துக் கட்சியார் செய்கிற காரியங்களை - நடவடிக்கைகளைப் - பார்த்தாவது ஜஸ்டிஸ் தலைவர்கள் நடப்பார்களென்று எதிர்பார்த்திருந்தேன். எதிர்க்கட்சியார் திட்டுகிற திட்டுக்குப் பிறகாவது ரோஷம் வரும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் முச்சந்தியில் இருக்கும் கல்லுப் பிள்ளையாரைப்போல, காற்றும் மழையும் வெயிலும் என்னை என்ன செய்யும்? வெயிலால் உடம்பு உஷ்ணப்பட்டால் மழை அதைத்தானே தணித்துவிடும்; மழையினால் ஏற்படும் ஈரத்தைக் காற்று உலர்த்திவிடும், காற்றால் உடம்பில் ஒட்டும் ரோட்டுப் புழுதியை மழை கழுவி விட்டுவிடும். ஆகவே காற்றும் மழையும் வெயிலும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற சொல்வதுபோலவே, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களின் போக்கும் இருப்பதாக எனக்குப் பட்டது.

காங்கிரஸ் கட்சியாரின் புளுகுப் பிரசாரமோ, சத்தியமூர்த்தியின் பித்தலாட்டப் பேச்சோ, குல்லுகபட்டர்களின் போலி வேஷமோ தங்களைத் துளி கூட அசைத்துவிடாது என்ற இந்த ஜஸ்டிஸ் கட்சியார் நினைத்து நடப்பதாகவே அவர்களின் அசால்ட் போக்கிலிருந்து யூகிக்க வேண்டியிருக்கிறது. புத்தி - ரோஷம் வெட்கம் - மானம். இன்று வரும் நாளைவரும் என்று எதிர்பார்த்தேன். நானும் ஐடைமாடையாகச் சொல்லியிம் பார்த்தேன். கொஞ்சமும் அசையக் காணோம். அதற்கமேல் இடித்துச் சொலிப் பார்ப்போமே என்கிற நினைப்பு எனக்கு ஏற்பட்டது அதேமூச்சில் உருப்படுமா என்ற விளிப்புடன் எனது பேனாவை ஓட்டினேன். இவ்வளவு துடிப்பு எனக்கு ஏற்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? காற்றும் மழையும் கலந்தடித்தும் பெரும் பிரளயம் உண்டாகி, முச்சந்திப் பிள்ளையாரை வேரோடு பிடுங்கி அடித்துக்கொண்டுபோய் விட்டால் என்ன செய்வது என்கிற பயம் எனக்கு

கேசரி அண்ணாவே! அந்தப்பயம், அனைவருக்கும் ஏற்பட்டது பெரியாருக்கு அந்த பயம் அதிகமாக ஏற்பட்டது. ஆகவேதான், பார்ப்பனரல்லாதாரின் வாழ்வு வளமுள்ளதாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நிறுவப்பட்ட அருமையான கட்சி, சுயநலச் சுகவிரும்பிகளின் சோம்பற்கூடமாகிவிடக் கூடாது என்று கருதிச் சுயமரியாதைக்காரர்களிலே சிலர் வீசிய சுடுசொல்லையும், தேசீயவாதிகளென்போர் கக்கிய பழிச்சொல்லையும் ஏற்றுக்கொண்டு, நாடுசுற்றிக் கட்சிக்குப் பளிபுரிந்தார். நீர் அன்ற இந்தக் கோயிலின் இப்போதுள்ள தர்மகர்த்தாக்கள் யோக்கியப் பொறுப்புடன் நடக்காவிட்டால், அவர்களை அடியோடு ஒழித்துவிட்டு வேறு டிரஸ்டிகள் ஏற்படுத்திப் பூஜா கைக்கரியங்கள் ஓழுங்காக நடப்பதற்கு வழி செய்து இச்சை. இத்தகைய இச்சையின் தூண்டுதலால்தான் ஜஸ்டிஸ் கட்சி உருப்படுமா? என்று எனது பேனா நர்த்தனம் ஆடிற்று என்று எழுதினீர். உமது பேனா ஆடிற்று, தீவிரவாதிகளின் உள்ளம் தேடிற்று புதிய டிரஸ்களைஜஸ்டிஸ் சுயமரியாதைக்காரர்கள் ஏற்றுக்கொண்டனர். செப்பனிடும் திருப்பணியை! பெரியார் தலைவரானார், பழைய பெருச்சாளிகளினால், செப்பனிடப்பட்ட கட்சியிலே செய்து முடிக்கக் கூடிய காரியம் ஏதும் இல்லை. எனவே பழைய பெருச்சாளிகள், தரையிலே வளை தோண்டிக்கொண்டு, அந்த வழியாக மீண்டும் கட்சிக்குள் புகுந்து. உண்டு கொழுக்க விரும்புகின்றன. நீரோ, அந்தப் பெருச்சாளிகளின் கோக்கின் நோக்கத்தை அறியாது இளித்த வாயராகி, ஆஹா! இவர்களுக்கத்தான் என்ன ஆழ்ந்த கட்சிப்பற்று! கட்சிக்குள் கலந்து வேலை செய்ய இவர்களக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது! எவ்வளவு கஷ்டப்பட்டுக் குழி தோண்டுகிறார்கள் இந்தக் குணவான்கள்! என்று கூறிப் பீரிக்கிறீர்.

கேசரியாரே! அந்தக் காலத்திலே ஆண்மையுடன், ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களென்போர்களை நீர் கண்டித்து எழுதியபோது, அதே தலைவர்கள் என்போரின் ஆதரவிலே நடைபெற்ற விடுதலையிலே நான் உமது நர்த்தனத்தின் கருத்துக்களை ஆதரித்து இருக்கிறேன், ஒன்றிரு சத்தற்ற தகவர்களைத் தவிர.

ஜஸ்டிஸ் கட்சி உருப்படுமா? என்ற பேனா நர்த்தனத்தின் உண்மைக் கருத்துகளை அன்பர் பரதன் ணர்ந்து கொண்டது பற்றித் சந்தோஷப் படுகிறேன். இது ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்லவிலை உயர்ந்த டானிக்தான். பல உண்மைகளை - யோசனைகளைத் தமது கட்டுரையில் கண்டேன் என்று நண்பர் பரதன் ஒப்புக்கொண்டிருப்பது எனக்கப் பரமதிருப்தி என்று நீர் பாராட்டியுமிருக்கிறீர். நான், உண்மையிலேயே, கட்சியின் அமைப்பு தலைவர்களென்போரின் இயல்பு என்பவைகளைத் தெரிந்து திகைத்தது, அந்தச் சமயத்திலேதான். ஆனால் அந்தத் திகைப்பு எனக்கு கட்சியிடம் வெறுப்பைக் கிளப்பவில்லை, மாறாக எனக்குக் கட்சியிடம் பற்ற வளர்ந்தது வளர்ந்ததன் பயனாக, உமது உரை வழிசென்று, கட்சி உருப்படி வழி, அதை உருக்குலைத்துவரும் உல்லாசச் சீமான்களின் பிடியிலிருந்து, அதனை விடுவித்து, உழைக்கக்கூடிய ஊரார் முன் நின்று உறுதியுடன் கட்சியின் கொள்கைகளை எடுத்துக்கூறி உணர்ச்சியூட்டக்கூடிய எளிய வாழ்க்கையிலே இருந்துகொண்டு என்றம், எங்கும் கட்சிப்பணி தவிர வேறு ஏதும் செய்யவேண்டிய சுபாவத்தையே மறந்துபோன, ஒருவரைத் தலைவராக்குவதும், அவருடைய தத்துவங்களுக்கேற்றபடி கட்சியைத் திருத்தி அமைப்பதும் ஆகிய காரியமேயாகும் என்று உணர்ந்து, சேலத்திலே செய்யப்பட்ட தீர்மானத்தை நான், கட்சியின் மறுமலர்ச்சி என்று மகிழ்ச்சியுடன் கருதுகிறேன். நீரே மருளம் சீமான்களுக்கு லாலிபாடுகிறீர்! அந்த நாளிலே நீர்கட்சி உருப்படவேண்டும் என்பதற்காகக் கூறியவற்றை, நான் ஏற்றுக்கொண்டதற்காக அப்போது அகமகிழ்ந்துர். அகமகிழ்ந்தது மட்டுமல்ல, பரதன் மற்றொரு சேவை செய்வதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஜஸ்டிஸ் கட்சியின் பத்திரிகைவிஷயமாக நான் கூறிய எல்லாயோசனைகளையும் வந்தனத்தோடு ஏற்றுக்கொண்டு அதை நமது இயக்கப் பெரியார்களுக்குச் சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவிக்க முடியுமா? என்னைப் போலவே நீரும் பத்திரிகை மூலமாகச் சமர்ப்பிக்கப் போகிறீரா, என்னைப் போலவே நீரும் பத்திரிகை மூலமாகச் சமர்ப்பிக்கப் போகிறீரா அல்லது நேரிலேயே தெரிவிக்கப்போகிறீரா? பத்திரிகை வழியாக இருப்பின் நீர் சொல்வது அவர்களுக்கு ஏறுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. நேரில் கூறுவதாயிருந்தால் இப்போதிருந்தே அவர்களின் பேட்டிக்குத் தயார் செய்துகொள்வது நல்லது என்று கேலியுடன் கலந்த புத்திமதி கூறினீர். நான் தங்களால் தீட்டப்பட்ட கட்டுரைகள் மூலம், நமது தலைவர்களிலே ஒருவரைக் காண வேண்டுமென்றால் குதிரைக் கொம்பு போலிருக்கும், வேறொருவரோ நித்ராதேவியுடன் பகல் பன்னிரண்டுவரை கொஞ்சுபர், இன்னுமொருவரோ ஓய்வுநேரத்திலே செடிகொடி பயிரிடுபவர், மற்றவர்களோ, பதவி வேட்டையிலே ஈடுபட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டதால் தலைவர்களின் பேட்டிக்கு வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு புறப்படவில்லை. வெறும் எழுத்து வேட்டுகளினாலேயே தீர்த்துவிட முடியும் என்ற எண்ணி ஏமாளியாகவில்லை. இப்படிப்பட்ட கட்சி வேண்டாம், வேறோர் கட்சி அமைப்போம் என்ற கோமாளி வேலையிலே குதிக்கவில்லை. நிதானமாக, ஆனால் நிச்சயமான நம்பிக்கையுடன் ஜஸ்டிஸ் கட்சி அரண்மனை ஏவலனான இருக்கும் நிலையை மாற்றி, மக்களின் தோழனாவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சியில் பெரியாரின் பெருந்தொண்டிலே பங்கு கொண்டேன், அதனால் சேலத்திலே சீமான்கள் சீத்தம் சோரவும் மூன்கள் புலம்பவும் பட்டம் விரும்புவோரின் முகத்தில் கோபம் குதிக்கவும், பதவி வேட்டைக்காரர் பதைக்கவும் கண்டபோது, பயமில்லை, ஜெயமுண்டு மனமே என்று(மனத்திற்கள்) பாடினேன், என் மகிழ்ச்சியை மங்க வைத்துவிட்டீர். சிங்கமாகிய நீர் தங்கக்கோட்டையின் தகத்கப்பினால் தாக்குண்டு, பங்கம் அடைந்ததன் மூலம்.

(திராவிடநாடு - 07.01.1945)