அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தேன் இருந்த சிப்பியில் தேள்!
“ஆதரிப்பாரற்று, இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி, பச்சிளங் குழந்தைகளைப் பாதுகாக்க வகை தெரியாமல் அயர்ந்து, ஆண்டவனை நொந்து, அரசியலை நினைத்து வெதும்பி, நிர்க்கதியாய், யமனை வரவேற்று நிற்கும் காட்சி, பரிதாபமாகப் பாதுகாக்க வகை தெரியாமல், ஆவற்றைப் பிரிந்தும், உயிர் துறந்தும் இருக்கிறார்கள்.”

இங்கே! இப்போது! புண்ய பூமியில், புகழ்பெற்ற காங்கிரசாட்சியில், தேனும் பாலும் ஓடும் என்று நல்வாக்குக் கொடுத்து, ஆட்சியிலே அமர்ந்தனர் - இன்று தாயும் சேயும் ஒன்றாக வாழ்வதும் முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. நோயற்ற வாழ்வு - குறைவற்ற செல்வம் - என்று பேசினர் - இன்றோ, நொந்த உள்ளத்தினர், ஆற்றவாரற்றுத் தேற்றுவாரற்று, பஞ்சைகளாகி, பட்டினியால் தாக்குண்டு, இத்தகைகய நிலையைக் கண்டும், கைகொடுத்துதவ முன்வராத காங்கிரசாட்சியைக் கண்டித்து, இந்த நிலையை உண்டாக்கிய (?) ஆண்டவனையும் நொந்துகொண்டு, ஊரைவிட்டுச் செல்கிறார்கள்.

இது, திராவிட நியூஸ் ஏஜென்சி செய்தி அல்ல.

காங்கிரஸ் ஏட்டிலே உள்ள செய்தி.

கோயில்பட்டித் தாலுக்காவிலே, சில பகுதிகளிலே, இவ்விதமான மோசமான நிலைமை இருப்பதாக, “தினமணி” யில் செய்தி காணப்படுகிறது. சிந்தையைச் சிதைக்கக்கூடிய இந்தச் செய்தியைச் சித்திர நடையிலே தீட்டியிருக்கிறது அந்த ஏடு.

மங்களம் தரும் பெட்டியிலே ஓட்டுகளைப் போட்டு, மகானுபாவர்களை நாடாளச்செய்து, அவர்கள் நீடுழிக் காலம், நிம்மதியாக, ஆட்சி செய்யவேண்டும் என்று, இலவாயப்பனையும் ஆம்மை மீனாட்சியையும் வேண்டிக்கொண்ட மக்களுக்கு, வயிறார உணவில்லை.

சட்டசபைகளிலேயும் இந்தப் பேச்சு கிளம்பிவிட்டது.

காயல்பட்டினம் போன்ற பகுதிகளிலே, ஏழை மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்காததால் பட்டினிநோய் தாக்கிட, அவரக்ள், உடல் வலிவிழந்ததுடன் சித்தமும் தடுமாறி, பித்தம் பிடித்தவர் போலாகிவிட்னடர் என்று ஓர் சட்டசபை அங்கத்தினர் கூறுகிறார் சட்டசபை மண்டபத்திலே.

எந்த மணிமண்டபத்திலே எமது ஆட்சியின் மாட்சியைப் பாரீர்! இப்போது உள்ள சுபீட்சத்தைக் காணீர்! மக்கள் மனமாற ஏமை வாழ்த்துவதைக் கேளீர்! தொழில் பெருகுகிறது, வளம் வளருகிறது, வறுமை மடிகிறது, விஞ்ஞானம் வீறு கொண்டேழுந்து மக்களின் உழைப்பைக் குறைத்து, வசதிகளைப் பெருக்கச் செய்யும் அறபுதத்தைக் காணீர்! பாரதியாரின் கனவு நனவு ஆகிவிட்ட தென்றறிந்து பள்ளுப் பாடுவீர்! இடுவீர்! பரங்கரோ அவர்தம் பாதந் தாங்கிகளோ, இதுபோலச் செய்வரோ கூறீர்!” என்று வீரமுழக்கம், வெற்றி ஏக்களிப்பு, கிளமபும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அந்த மணி மண்டபத்திலே, எந்த மணிமண்டபத்திலே, ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர்களும், ஏழைப் பங்காளர்களும் வீற்றிருக்கிறார்களோ அந்த மணி மண்டபத்திலே, இன்று பேசப்படுவது, காடு மேடுகள் எல்லாம்கூட நா நகரமாகிவிட்டன என்ற களிப்பூட்டும் பேச்சல்ல நாடு நகரங்களிலே, காட்டு நிலை வந்துவிட்டதோ என்று எண்ணும்படியான கவலை தரும் செய்திகள் பேசப்படுகின்றன.

கோயில்பட்டிப் பகுதிகளிலே பட்டினிப் பட்டாளத்தின் பவனி.

காயல்பட்டினத்துப் பகுதிகளிலே, காய்ந்தத வயிற்றினர், கருத்துக் குழம்பி, பித்தரான கொடுமை.
இந்தச் செய்திகளைக் காங்கிரசல்லாத நாம் கூறினால் கவனிக்கவும், மறுக்கக்கூடிய கண்ணியவான்களிடம் ஆட்சி சிக்கிக்கொண்டது. எனவே, இனி நாம் பேசாமல், காங்கிரஸ்காரர்களையே, பேசச் சொல்கிறோம் - பிறகேனும் யோசிக்கட்டும்.

“கோவில்பட்டி தாலுக்காவில் பட்டினிச் சாவுகள் ஏற்படுவதாகத் தாலுகா, ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளிடமிருந்து எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது” என்று கரையாளர், ங.க.ஆ. சட்ட சபையிலே, டிசம்பர் 11ந் தேதி கூறினார்.

மற்றோர் ங.க.ஆ. கோசல்ராம் என்பவர்.

“நாங்குனேரி தாலுக்கா மூலக்கரைப் பட்டியில் உணவில்லாமல் 12 பேர் மடிந்திருப்பதாகத் தெரிகிறது” என்று கூறினார். அதே நாளில், அதே மணி மண்டபத்தில்.

“கோவில்பட்டிக்கு சுமார் 6 மைல் தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் அகத்திக கீரையையும் கடலைப் பிண்ணாக்கையும், தின்று நோயுற்று, பின் அதையும் தின்ன முடியாமல், 4 பேர் மடிந்திருப்பதாக எனக்குக் கடிதம் வந்திருக்கிறது! என்று கூறுகிறார், தோழர் துரைராஜபாண்டியன் ங.க.ஆ.,
“அருப்புக்கோட்டைத் தாலுக்காவில் சில பட்டினிச் சாவுகள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது” என்று வேறோர் ங.க.ஆ., சாமிநாதன் என்பவர் கூறுகிறார்.

இவர்கள் யாவரும் காங்கிரஸ்காரர்கள் - கறுப்புச் சட்டையல்ல. இளவந்த கூட்டத்தினர், ஆரிய - திராவிடக் கிளர்ச்சிக்காரர்களல்லர். மகாத்மாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்கள், நம்மைப்போல் மாபாவிகள் (?) அல்ல! இவர்கள் பேசுகிறார்கள், சட்டசபையில், இதுபோல், கொஞ்சமேனும் வெட்க உணர்ச்சியும், முன்னாளில் காட்டிய முடுக்கின் வாடையும், சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்பதிலே அக்கறையும், இருக்குமானால், சொந்தக் கட்சியினர், அதிகார பூர்வமாகத் தந்துள்ள இந்தச் சோகமூட்டும் செய்தியைக் கேட்டதும், மந்திரிமார்கள், வெட்கத்தால் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், அந்த மகானுபாவர்களோ, கலெக்டர் துரையின் ரிப்போர்டுகளை எடுத்துக் கண்களில் ஓற்றிக் கொண்டு, கனைத்துத் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு, கர்ஜிக்கிறார்கள், “சாவு காலராவால் ஏற்பட்டதேயொழிய பட்டினியால் அல்ல” என்று.

முன்போர் சமயம், தோழர் பிரகாசம், இந்திரப் பகுதி யொன்றிலே, பட்டினிச் சாவு ஏற்பட்டதாகப் பேசினார். மந்திரிகள் மறுத்தனர். மாஜி முதல்வர், மறுப்புக்கு மறுப்பு தந்தார். இப்போதையை மந்திரிகள் அதற்கு மறுப்பு அளித்தனர் - மாஜி அதற்கு மறுப்பளித்தார் - இப்படியே பேச்சு ஊசலாடிக்கொண்டிருந்தனர். இப்போதும், அது போலவே நடைபெறக்கூடும். ஆனால், இதிலே, முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், பட்டினியால் செத்தார்களா, பாழும் நோயால் மடிந்தார்களா என்பதல்ல, பஞ்ச நிலைமை இருக்கிறதா? இல்லையா? ஏழையின் வாட்டம் அதிகரித்திருக்கிறதா இல்லையா, என்பதுதான். பிணங்களைக் கணக்கெடுக்கவோ, பிணப் பரிசோதனை நடத்தி, சாவின் காரணத்தைக் கண்டறிந்து கூறவோ அல்ல. கனம்கள் இருப்பது - மக்களுக்கு வாழ்வு அளிக்க இவர்கள் பீடத்தில் அமர்த்தப்படடிருக்கிறார்கள். எனவே, பல ங.க.ஆ.க்கள், பகிரங்கமாகச் சட்ட சபையிலே நிலையை விளக்கியது கேட்டும், பரங்கி முறைப்படி, கலெக்டர் துரை அனுப்பும் காகிதக் கேடயத்தைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்புப் போர் புரிவது அழகல்ல. பதைத்திருக்க வேண்டும். வெட்கத்தால், டாக்டர் சுப்பராயன் போன்ற இஜானுபாஹ÷வும், ஆவினாசியார் போன்ற úôஞ்சல் உருவில் நிற்க வேண்டும். அந்தப் பகுதிகளுக்குச் சென்று நிலைமையைப் பரிசீலனை செய்யவேண்டும். வாழ்வளிக்க வந்தவர்கள், மக்களுக்குப் புதுவாழ்வு, பூரிப்பான வாழ்வு, கிடைக்கச் செய்ய முடியாவிட்டாலும், இருக்கும் வாழ்வாவது, சின்னா பின்னமாகாதபடி, பாதுகாக்கவேண்டும்.

இப்படிப்பட்ட நிலையிலே, உணவுப் பொருள் கண்ட்ரோலை ஒழிப்பது சரியா, என்று நெஞ்சில் கைவைத்து யோசிக்கவேண்டும். வங்கத்தின் வாடை வீசுகிறது என்று காங்கிரஸ் ங.க.ஆ., க்களே கூறும் போதும், நாங்கள் பிரச்சார பலத்தைப் பெற்றுள்ள சிங்கங்கள், என்று பேசிக் கொண்டிருக்கக்கூடாது. இளவந்தாரக்ள், மாள்கிறோம், என்று அழுதுகொண்டே அருப்புக்கோட்டை, நாங்குனேரி, மருங்காபுரி, கோயில்பட்டி, போன்ற பகுதிகளிலே, மக்கள் ஓலமிடுகிறார்கள். இங்கே, சட்டசபையிலே, இதற்காவன செய்வதற்குச் செலவழிக்க வேண்டிய நேரத்தையும் திறமைûயுயம், ஸ்பெஷல போலீஸ் அமைப்பு பற்றிப் பேசவும் வேறு பலவற்றுக்கும் விரயமாக்குவது, முதல்தரமான பைத்தியக்காரத்தனம். ஏன், இந்த நிலைமை ஏற்பட்டது? இந்த நிலைமையிலே, நூறிவோர் பாகம், காங்கிரசல்லாத வேறு யாரேனும் ஆட்சி செய்யும்போது ஏற்பட்டிருக்குமானால், எவ்வளவு, எவ்வளவு ஆர்ப்பரிப்பு கிளம்பி இருக்கும். எவ்வளவு கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கும், பத்திரிகைகள் எவ்வளவு பதறித் துடித்துப் பாய்ந்து பிடுங்கி இருக்கும் இப்போது, சட்டசபையிலே, பகிரங்கமாக இதுபற்றிய பேச்சு கிளம்பியும் அமைச்சர்கள், இவன செய்வோம் - அது கவனிக்கப்படுகிறது - அதற்கு மேல் கூறுவதற்கில்லை - என்ற பழைய பாடப் புத்தகத்தில் பயின்றதைக் கூறிக்கொண்டு, காலந் தள்ளுகிறார்கள்.

ஜனநாயக உணர்ச்சி அரும்பளவாவது இருக்குமானால், இந்நேரம், நாடு கொதித்திருக்கும், மந்திரிசபை மருண்டிருக்கும் கட்சிக் கூட்டத்திலே கலகம் ஏற்பட்டிருக்கும், நெஞ்சுத் துடிப்பு அதிகமுள்ளவர்கள் ராஜிநாமா செய்திருப்பர். அழுத்தக்காரர்கள், சட்டசபைக்கு வராமலிருந்திருப்பர். ஆனாலும் இங்கோ - எது நடந்தாலும் - இமமென்று கேட்கவும் பயம் ஏற்பட்டுவிட்ட காரணத்தால், மௌனம் குடிகொண்டிருக்கிறது. வாழ்வளிக்க வந்தவர்கள், செத்தவர்களைக் கணக்கெடுத்துக்கொண்டும், செத்தக் காரணத்தை ஆராய்ந்து கொண்டும் உள்ளனர். காங்கிரசன்றி பிறிதோர் கட்சி வேண்டேன் பராபரமே! என்று அரசியல் சிந்துபாடும் அன்பர்களை இந்த நிலமையை வளரவிடுவது சரியா என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

எத்தனை ஆயிரம் மேடைகளிலே, அன்பர்கள் பாடி இருப்பர், எமதாட்சியலே, பட்டினி இராது, பஞ்சம் தலைகாட்டாது, ஏழை வதையமாட்டான், எத்தன் வாழமாட்டான், பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் - என்றெல்லாம், எத்தனை எத்தனை மேடைகளிலேறி, ஜஸ்டிஸ் கட்சியைச் சுட்டிக்காட்டி, “காலா காலத்திலே மழை உண்டா! சம்பா விதைத்தால் கார் ஆகிறது! கார் போட்டால், சாவி ஆகிறது. மாபாவிகள் ஆளும்போது இவ்விதந்தானே நேரிடும்” என்று பேசியிருப்பர். இப்போது, புண்யபுருஷர்கள், தியாகமூர்த்திகள், கண்கண்ட தெய்வத்தின் கழலடி தொழுதிடும் அன்பர்கள் ஆள்கிறார்களே, இப்போது, பஞ்சம், பட்டினி, நோய்நொடி, ஏற்படக்காரணம் என்ன? மாபாவிகள் காலத்திலேயும் நேரிட்டிராதபடியான, மனம் நோகும் நிலைமைவரக்காரணம் என்ன? பிண்ணாக்கு தின்பவர்களும், பித்தம் கொண்டவை வோரும், பிள்ளையை இழப்போரும் போக்கிடமில்லையே என்று அழுவோருமாக, மக்கள் மாறிடக் காரணம் என்ன? இளவந்தவர்கள், ஆகமம் அறிந்தவர்களாயிற்றே. ஆனவரதமும் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா என்று பாடிடுவோராயிற்றே. அவர்கள் காலத்திலே, இப்படியா, இருக்கவேண்டும். இப்படி நிலைமை இருந்தும்,அவர்கள் கவலையற்று இருக்கக் காரணம் என்ன? சட்டசபையோ, கட்சிப் பட்டியிலே பயிற்றுவிக்கப்பட்டவர்களின் அமருமிடம் அமைச்சர்களின் போக்கை, அமைச்சரல்லாதார், கண்டிக்க லைசென்சு கிடையாது. மிகவும் வேண்டியவர்களுக்கு மட்டும் சிறு, கோட்டா உண்டு! மற்றவர்கள் பேசினால், கட்சிக் கட்டுப்பாடு கெட்டுவிடும், என்ற பயம் காட்டப்படும். மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக் கிளம்பும். எனவே, ஆட்சியாளர்களின் போக்கை மாற்றும் சக்தி, கட்சி அங்கத்தினர்களுக்குக் கிடையாது. எதிர்க்கட்சியோ, பெரிதும் முஸ்லீம்கள். எனவே, அவர்கள் அமைச்சர் பேக்கிலே குற்றங்குறை கூறத் தொடங்கினால், இருக்கவே இருக்கிறது. புதிய பாஷை! “இந்த ஆஸ்மாயில்கள் இப்படி எல்லாம் செய்து கொண்டு இங்கே இருப்பதைவிட, பாகிஸ்தான் போகட்டும் - போகும்போது ஆல்லா பிச்சையையும் கூடவே அழைத்துக்கொண்டு போய் விடட்டும்” என்று பேசி அவர்களின் வாயை மூடிவிட முடிகிறது.

வடநாட்டுக் கலகச் செய்திகளைப் படித்து, மனக் குழப்பமடைந்திருக்கிற மக்களுக்கு, இப்போது யார், முஸ்லீம்கள் மீது எதைக் கூறினாலும், நம்பும் போக்கு இருக்கிறது. இளவந்தார்கள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்ச் சாதகமாக்கிக் கொண்டு, சட்டசபையிலே ஒருவிதமான எதிர்ப்புச் சக்தியும் உருவாக முடியாதபடி தடுத்து விடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியினரோ, கட்டுப்பாட்டினால், கண்மூடி கௌனிகளாகிவிட நேரிட்டது - எதிர்க் கட்சியினரோ, இந்த ஆஸ்மாயில்கள் - எனவே, அவர்களைச் சுலபத்திலே வாய்பொத்தியிருக்கச் செய்ய வசதி இருக்கிறது. இந்நிலையில், ஆட்சியாளர்களின் போக்கை, ஆராய, ஆலச, திருத்தம் கூற, கண்டிக்க வழி எது? காங்கிரஸ் கட்சியாலே மட்டும் கதிமோட்சம் உண்டு என்று கருதும், நண்பர்கள், இதனை நன்கு சிந்திக்க வேண்டுகிறோம்.

ஜனநாயக முறைப்படி, ஒரு கட்சி ஆளும்போது, எதிர்க்காட்சியின் பேச்சை, அச்சத்துடன், கவனிக்கும் ஏனெனில், ஆளும் கட்சியின் போக்கு மேடு பயப்பது என்பதை விளக்கும் பொறுப்புடன், முடியுமானால், தானே இளவும் எதிரக்கட்சிக்கு உரிமையும் இருக்கிறது.

நமது செயலைக கவனிக்கவும், நம்மை நீக்கவும், நமது இடத்தைப் பிடித்துக் கொள்ளவும். ஒரு உரிமை கொண்ட கூட்டம் இருக்கிறது, என்ற அச்சம், ஆளும் கூட்டத்திற்கு இருந்தால் மட்டுமே, ஜனநாயகம் நல்லாட்சி என்ற கனிதரும்.

இங்கு இன்று இந்த நிலை இல்லை.

தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்பார்கள். எதிர்கட்சி ஒன்று இல்லாவிட்டால், இடுப்பொடிந்ததுகள் கூடத்தான் ஹிட்லராகிவிட முடிகிறது. இன்றுள்ள நிலை இது. எனவே தான், ங.க.ஆ.க்களின் பேச்சு, காங்கிரஸ் ஊழியர்களின் கண்டனம், காங்கிரஸ் கமிட்டிகளின் அறிக்கை எதற்கும், மதிப்பளிக்கும் மனப்பண்பு மங்கி மடிகிறது. ஒருவரிருவர், கோசலராம்களோ, கரையாளர்களோ, கேட்டால் இவர்கள் தங்களுக்கு மந்திரி வேலை கிடைக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலால் இதைச் செய்கிறார்கள் என்று கூறிவிடுவார்கள் காங்கிரஸ் ஊழியர்கள் பேசினால் அதே பதில்தான்! ஆனால், அவர்களுக்கு, மேலும் கொஞ்ச காரசாரமான டோஸ் தருவார்கள். ஐயா! நான் காங்கிரசுக்காக, நாட்டுக்காக எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா? சிறை சென்றேன். தடியடி பட்டேன். குடும்பம் நசித்தது. ஆகஸ்ட்டுப் போரிலே, அந்தப் பாலத்தை உடைத்தேன். இந்தக் கட்டடத்தை இடித்úத். ஆலிபுரத்தில் ஆவதிப்பட்டேன்! என்று பேசினாலோ.

“உண்மை ஊழியர்கள் என்றால் அவர்கள் உண்மையிலேயே ஊழியம் செய்யவேண்டும். இதைவிட்டு விட்டு மந்திரிப் பதவிக்கும் ங.க.ஆ. பதவிக்கும் வேட்டையாடித் திரிவது ஊழியர்களுக்கு அழகல்ல. மந்திரிப் பதவி தரவில்லை; எம்.எல்.ஐவாகத் தன்னை இக்கவில்லை என்று கத்துவதிலோ, எழுதுவதிலோ அர்த்தமில்லை. ஆகஸ்டில் நான் வெடி வைக்கவில்லையா, என்னை ஏன் எம்.எல்.ஏ.வாக இக்கக் கூடாது என்று கேட்பது கூலிக்கு மாரடித்த எனக்கு மடிப்பணம் எங்கே என்று கேட்பது போலாகும். ஆகஸ்டில் வெடிவைத்தது எம்.எல்.ஏ. பதவிக்கு ஆச்சாரம் போட்டதா? யார் வெடி வைக்கச் சொன்னார்கள்? அப்படித் தான் வைத்த வெடி வெடித்தாவது தொலைந்ததா? என்ற ஏக்கச்சக்கமான கேள்விகளெல்லாம் பின்னர் வருமென்பதை இந்தச் சிகாமணிகள் உணருவதில்லை. வெடி வைப்பதாகச் சொல்லி வாங்கின பணம் எங்கே, போலீஸ்காரன் வந்து நின்றதும் உண்மைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூறி மற்ற சகாக்களை ஏன் காட்டிக் கொடுத்தாய்? பிடிபடாமல் இருந்தால் கொடுத்த பணத்துக்குக் கணக்குக் கேட்பார்களென்றுதானே இந்தத் தந்திரம் என்றெல்லாம் கேட்பார்களே என்பதை எழுதுகிறவர்கள் மறந்துவிடுகிறார்கள்.”
என்று கேட்கிறது. ஆதிதீவிரக் காங்கிரஸ் ஏடு.

ஆக, யார் கேட்க முடிகிறது? ஏவரிடம், இளவந்தார்களுக்கு, அச்சம் இருக்க முடியும்? இது இல்லாவிடத்து ஆட்சிக்கு ஜனநாயகக் கோட்பாட்டின் மதிப்பு எப்படி ஏற்படும்? ஜனநாயகம் அரும்பா முன்பு, மக்களின் இன்ப மணம் எழ முடியாது! எங்கோ, பிணவாடை அடிப்பதாக, ங.க.ஆ., கூறினாரா அது இதாரபூர்வமானதோ அல்லவா நாமறியோம். ஆனால், ஜனநாயகம் கருவிலே சிதைந்துவிட்டிருப்பதால், துர்நாற்றம், நன்றாக அடிக்கிறது. இது ஆராய்ச்சிபூர்வமான உண்மை! சட்டசபையிலே அங்கத்தினர்கள் தூங்குவதுபற்றி, சின்னாட்களுக்கு முன்பு, பேசப்பட்டதல்லவா, அது தூக்கமல்ல - மயக்கம் - துர்நாற்றத்தால் ஏற்பட்டது என்றே எண்ணவேண்டி இருக்கிறது.

அந்த மயக்கம் போகவும், மக்களின் நல்லாட்சி உதிக்கவும், வேண்டுமானால் இளவந்தார்களின் கவன்ததை இழுக்கக் கூடியதும், அவர்களின் போக்கைக் கட்டுப்படுத்தக்கூடியதுமான, எதிர்க்கட்சி ஏற்பட்டாகவேண்டும். அது, காங்கிரஸ் கமிட்டிகளிலே கட்டடத்துக்குள்ளே, காதோடு காதுவைத்தது போலப் பேசும் முறையினாலோ, இரண்டோர் கண்டனம், சில சுற்றறிக்கை, இவைகளாலோ ஏற்பட்டுவிடாது. மயக்கமற்ற நிலை ஏற்படவேண்டும் - காங்கிரஸ் ஓர் மகத்தான ஸ்தாபனம் அதிலிருந்து கொண்டே தான் எதையும் செய்ய முடியும். எதிர்த்துப் பணியாற்றக்கூடாது, என்ற மயக்கம் போக்க வேண்டும். காங்கிரசின், குரலுக்கு ஏகாதிபத்தியம் இருந்தபோது, இருந்த, பொருளும் பலமும் - இப்போதும் இருக்குமெனறு எண்ணுவதோ, இருக்கச் செய்யவேண்டுமென்று பணிபுரிவதோ, நிச்சயமாக நாட்டைப் பாசீசப் பிடியிலே கொண்டு போய் விடுமேயொழிய, வேறில்லை என்பதை உணர்ந்து, நாட்டுக்கு வாழ்வளிக்கும் திட்டங்களைத் தீட்டி, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். இல்லையானால், கோயில்பட்டிப் பகுதியின் நிலைமை, வேறுபல பட்டி தொட்டிகளில் ஏற்பட்டாலுங்கூட, ஏனென்று கேட்க யாரும் இருக்க முடியாது. தேனிருந்த சிப்பியிலே, úள் இருந்து கொட்டிய விடுதலைப் போருக்குரிய சக்தி இருந்த கட்சியிலே, நாட்டை நாஜிசத்திடம் ஒப்படைக்கும் பலம் இன்று இருக்கிறது. அந்தப் பலம், இன்று, பெருமையையும் பூரிப்பையும் தருவாகக் கூடத் தோன்றக்கூடும். ஆனால், அந்தப் பலம் உண்மையில், பேராபத்து! என்பதை உணரவேண்டும். இதற்கு, எவ்வளவுக் கெவ்வளவு காலம் அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, நாட்டுக்குக் கேடு அதிகரித்தது என்றே பொரு;ள. ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக, நாட்டிலே, உள்ள சக்தியை ஒருமுகப்படுத்தியது காங்கிரசல்லவா, உட்டிமுனையாக நின்றது காங்கிரசல்லவா, என்று எண்ணிக் காங்கிரசிடம் பற்றும் பாசமும் கொள்வது, புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால், பல சக்திகள் ஒன்று கூடின என்ற அடிப்படை உண்மையை, மேலும் கொஞ்சம் அலசிப் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக், கூடிய பலவித சக்திகள் அந்தக் குறிப்பிட்ட காரியம் முடிந்த பிறகு, ஒன்றாக இருக்கமுடியாது, இருக்கக்கூடாது, இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டால், அந்தப் பலவிதமான சக்திகளில், ஏதேனும் ஓர், சக்திக்கு மற்றவை அடிமைப்படும், பலமாகும், என்பது விளங்கும் அந்த நிலையிலே, ஒன்றுகூடி வேலை செய்தவர்களல்லவா? என்று பழைய பாசத்தை மட்டுமே எண்ணினால், நிச்சயமாகப் பாசீசம் வளரத்தான் செய்யும். ஓட்டிய வயிற்றுக்காரக் கந்தனுக்கும் ஒய்யார புருஷன் பிர்லாவுக்கும், சம்பூரண சாஸ்திரிகளுக்கும் சடையனுக்கும், இவர்கள் யாவருக்கும் பொது எதிரியாக ஓர் ஏகாதிபத்தியம் இருந்தது. எனவே, அதற்கு ஓர் கூட்டு முனை தேவைப்பட்டது. அந்தப் பொது எதிரி போன பிறகு கூட்டுமுனை இருந்தாக வேண்டும் என்று வாதாடுவது, எப்படிப் பொருந்தும்? கூட்டுமுனை இருப்பது, ஹிட்லரித்தைக் கூட்டி வருமே யொழிய, நாட்டை வாழவைக்காது.

கூட்டுமுனை என்ற மயக்கமொழி கூறி மக்களை ஏமாற்றும் திறமும் வசதியும் தங்களுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையினாலேதான். பிணம் கீழே வீழ்ந்தாலும், நெரித்த புருவம், நிமிர்ந்த மார்பும், முடுக்குப் பேச்சும், கொண்டவர்களாக இளவந்தார்கள் காட்சி அளிக்கின்றனர். பசியால் மெலிந்து, பரமனையும் நொந்துகொள்ளும், பரிதாபத்துக்குரிய ஏழை மக்கள், பாடுபட்டும் பலன் காணாப் பாட்டாளிகள், ஆகியோரின் பேரால், தூங்கும் இயற்கைச் சக்தி, அதை விழிக்கச் செய்யக்கூடிய விஞ்ஞான சக்தி, இவைகளைப் பயன்படுத்தும் நோக்கமும் அறியாமல் நோன்பும் பூஜையும் போதும், என்று எண்ணித் தேம்பும் மக்கள் பேரால் முற்போக்கு நோக்குடையோரை அழைக்கிறோம். பாசீசத்தை வீழ்த்த, ஜனநாயகத்தை வாழ்த்த, பணிபுரிய வருக என்று!

(திராவிடநாடு - 14.12.47)