அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தாமரைபூத்த குளம்

“கலைமணம் கமழ வேண்டுமானால் கம்பன், கட்டாயம் நமக்குத் தேவை! என்று திட்டமாகத் தோழரொருவர் கூறுகிறார். அவர் பல பாடல்களைப் படித்து ரசித்தவர். ஆகவே அவருக்கு, ஏன் நாம் கம்பர் பாடிய நூலைக் கண்டிக்கிறோம் என்பதைக் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவர் ஏன் நண்பர். ஆகவே அவரை நான் காடு மேடு அழைத்துச் சென்று கஷ்டப்படுத்த விரும்பவில்லை. மேலும் அவர் கலாரசிகரானா படியால், அங்கு செல்வது சிரமம். அவரை நான் நாலு தடாகங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். குளத்தோரமாக நடந்து கொண்டே, ஏன் கம்பர் மீது குறை கூறுகிறோம் என்பதைப் பேசினால், அவருடைய மனமும்; குளிரும், நமது நிலையும் தெளிவுபடும் நீங்களும் வாருங்கள் பொழுதுபோக்காகவும் இருக்கும், பாடமும் கிடைக்கும்.
***

நாலு தடாகங்களிலே, இரண்டு நிடத தேசத்திலுள்ளவை, ஒன்று ஆயோத்திக்கும் மிதுலைக்கும் இடையே உள்ளது, மற்றொன்று கிராமீயத் தடாகம்.
***

ஆதிவீரராமபாண்டின், பொதுவாகப் பலவித ரசங்களும் செறிந்திருப்பினும், சிருங்கார ரசமெனப்படும் காமச்சுவை அதிகமாகச் செறிந்ததாகவே, நைடதம் என்ற நூலை இயற்றினான். ஆசிரியன் ஓர் மன்னன். மங்கையரின் மதுர மொழியின் இனிமையையும், சரசத்தின் சாற்றையும், பருகிப் பழக்கப்பட்டவன். எத்தனையோ மின்னல் கொடிகளை, மேனி மினுக்கிகளை, கீதமொழிக் கிளிகளை, மான் விழிகளை, மலர் முகவதிகளைக் கண்டு, களிக்கும் வாய்ப்பு, மற்றக்கவிகளைவிட ஆதிவீரராம பாண்டியனுக்கு அதிகமாக இருந்திருக்கத்தானே வேண்டும்! வெறும் கற்பனையை மட்டுமே நம்பிக் கவிபாட úவ்ணடிய அவசியம் அவனுக்கு இல்லை. எழிலிடை மாதர் அவன் இணை விழிகாட்டும் குறிப்பறிந்து நடக்கக் காத்துக்கிடந்திருப்பர். எனவே அவன் “அந்தச்சுவை”யை அழகுறு கவிபாட அனுபவத்தைக் துணைகொள்ள முடியும். மன்னவன் என்ற நிலைமட்டுமல்ல, அவனுடைய குணமே, காமக் கவிபாடுதற்கேற்றது என்பதாகக் கதையும் கூறுவர். பொன்மேனியும், தாமரை முகமும், முத்துப் பற்களும் பவழ இதழும், இன்னபிறவும் அமையப் பெற்று புன்சிரிப்பால் போரிட்டுப் போகக்களத்திலே சலிக்காதிருக்கக்கூடிய சரசியாகத் தேடித் தேடிப்பார்த்துத் தன் உறவின் முறையிலே அத்தகைய இலக்கணங்களுடைய உல்லாசி கிடைக்கப் பெறாததால், வேறு குலத்திலே பெண் கொண்டான் ஏன்றோர் கதையும் உண்டு. இது கட்டிவிட்டதாக இருக்கக்கூடும். ஆனால், அவனுடைய குணத்தை, அதாவது மன்னனின் மனம் மங்கயைர் இராச்சியிலே அதிகமாகப் படிந்திருந்ததும் என்பதை விளக்கவே இப்புனைந்துரை ஏற்பட்டிருக்க வேண்டும். இத்தகைய மன்னன், தன்னையொத்த வேறோர் மன்னன் கதையை, அதாவது நளச்சக்கர வர்த்தியின் கதையைப் பாடினான். காரிகையரின் காதலீலைகளைக் காண்டம் காண்டமாகக் கவியாக்கக் கூடிய அனுபவ அறிவும் இருந்தது அவனுக்கு. அவ்விதம் பாடிட “நைடதம்” இடங்ககொடுக்கக்கூடிய நூலே, ஏனெனில், முற்றுந்துறந்த முனிபுங்கவர்களும், கற்றுத் தெளிந்து காடேகியவர்களும் ஊய்ய, உலகமாந்தர் படித்தும், படிக்கப் பக்கநின்று கேட்டும் புண்யம்பெற வேண்டுமென்று எழுதப்பட்ட தேவகதை அல்ல, ஒரு தேசத்து மன்னன் கதை. ஆண்டவ அவதாரத்தின் அருமை பெருமைகளை அவனியோருக்கு உரைத்து, நீதிகள் புகட்டி, நேர்மையின் தன்மையைத் தீட்டிக்காட்டித் திருவருளைக் கூட்டுவிக்கும் புண்ய சரிதமல்ல! சாதாரண அரசனின் ஆவதியை விளக்கும் கதை. அதிலே, அவருக்கு மங்கையரின் மலரடி வருடி கருத்தறிந்தபின் அரசிலை தடவிடும் இடவரைப் பற்றியோ, அந்தப்புர லீலைகளைப் பற்றியோ எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம், பொருந்தும். மதுக்கடையிலே மகேஸ்வர வணக்கமும், மகேஸ்வரன் கோவிலிலே மதுப்பிரசாதமும், பொத்தமுடையதாக இருக்க முடியுமா! அதுபோலவேதான், தேவ கதையிலே, தெளி வற்ற மக்கட்கும் தெய்வீகத்தின் தன்மையைத் தெளிவாகத் தீட்டிக் காட்ட எழுந்த சரிதைகளில், காமச்சுவையைக் கலக்கி விடுவது கூடாது, கலக்கினாலும் ஒரு அளவு இருக்க வேண்டும். வரையறை இருத்தல் வேண்டும், நேரடியாகப் பள்ளி அறைக்கே வாசகர்களை இழுத்துச் சென்று, ஆழ்ந்து பார்! கூர்ந்து பார்! என்று ஆடுக்கடுக்காகக் கூறுவது ஆடா. இவ்வளவு கூறிவிட்டு, இடையிடையே எம்பெருமான் திருவடிகளே சரணம் என்று இறைஞ்சினால், அது வெறும் இரைச்சலாக இருக்கமுடியுமே தவிர, இன்னருளைக் கூட்டுவிக்காது என்பதே ஏன்போன்றோரின் கருத்து. நைடத நூலாசிரியர், இந்த வரம்பு கடவாமல் பாடியிருக்கிறார். கம்பர்போலக் காடுமேடு சுற்றி வரவில்லை. இதன் பயனாக அவருடைய கவிதாதிறம் பாழ்பட்டுப் போய் விடவுமில்லை. காதல், தாபம், எடல், கூடல், சந்திரனைப் பழித்தல், தென்றலை ஆகழ்தல், மன்மதனைக் கடிந்துரைத்தல், மாலைகண்டு மருளல் எனும் இன்ன பிற காமச்சுவைக்குரிய இலக்கண் அமைப்புகளை அவர், விட்டு விடவில்லை, ஒழுங்காக ஒன்றுவிடாமல் பாடித்தான் இருக்கிறார், என்றாலும்கூட, அந்த வரம்பு கடவாது இருக்கிறார். கம்பரின் கலையிலே, அந்த எல்லைக்கல்தான் இல்லை, கொஞ்சமும் இல்லை. அவர் அன்று பாடிவிட்டுப் போக, அந்தப் பாடல்களிலே உள்ள அந்தப்புர விளக்கரசங்களை நமது இயக்கத்தவர் எடுத்துக்காட்டிப் புண்ய கதையிலே இது இருக்கலாமா, இது தேவரசமாகுமா, இந்த ரசங்களிலே இலயித்து விட்டபிறகு மக்கள் ராமரசம் தேடுவரா என்று கேட்கவே இன்று, கம்பனின் கல்லறைக்குக் காவலராக உள்ள கலா ரசிகர்கள் கம்பனின் பாடல்களிலே இன்னின்ன இடத்திலே வளைந்துவிட்டது. வேறோர் கரம்பட்டதால், இன்ன இடத்திலே ஓடிந்தே விட்டது. இந்தக் கவிதைகள், கம்பர் பாடியதே அல்ல, என்று கூறவும், திருத்தவும், ஓட்டிக்காட்டவும், வெட்டித் தள்ளவும், சலித்தெடுக்கவும், பொறுக்குமணிகளைச் சேர்க்கவுமான நிலைமை உண்டாக்கிவிட்டது. இந்த உரிமை இக்கலாசரிகர்கட்கு உண்டோ இல்லையோ, நமது கவலை அதுவல்ல. உண்டென்று எண்ணுவோர் கலனான கவிதைகளைத் திருத்தட்டும், இல்லை என்று எண்ணுவோர், நில்லடா! உனக்கு இந்த உரிமை ஏதடா? பதில் சொல்லடா! என்று பரணி பாடட்டும், நாட்டிலே நாம் காணும் நானாவிதமான வேடிக்கைகளிலே இது ஒன்று, நமக்கென்ன பார்ப்போம். ஆனால் இவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது எது? கம்பன் கவிதையானால் என்ன? இராமகாதையாக இருந்தால் என்ன? கேடு இருந்தால் களைந்தெறி! குப்பை இருந்தால் கூட்டித் தள்ளு! இழுக்கு இருந்தால் எடுத்து ஏறி! தீது தருமானால் தீயிலிடு! என்று நாம் கூறி வருவதுதான். மற்றும் சில புலவர் பெருமக்கள், கம்பனைக் காப்பாற்றும் பணி தமது என்று கருதிக்கொண்டு, கவிதையைப் பதம் பிரிப்பதிலும், பதங்களிலே இங்கே ஓர் தோய்வு ஏற்பட்டுவிட்டது. இங்கே கடை குறைந்திருக்கிறது என்று சிலபல கூறிப்பொருள் இதுவல்ல, வேறுண்டு, வேறும் உண்டு, என்று கூறுகின்றனர். இப்படிக் கூறும்போது, இத்தகையவர்களின் புலமையைக் கண்டு நமக்கு மதிப்பு உண்டாகின்றது என்றபோதிலும், இவ்வளவு அறிவும், இத்தகைய திரைவிடு வேலைக்குப் பயன்படுகிறதே என்பதை எண்ணும்போது, பரிதாபம் ஏற்படத்தான் செய்கிறது. கடைவீதியிலே கனிவிற்பவன், அழுகிய பாகத்தை அறுத்துப் போட்டுவிட்டு, மிச்சமுள்ள பாகத்தின் மதுரத்தைப் புகழ்ந்துரைத்து, கிடைத்த வரையிலே கிடைக்கட்டும் என்று பார்க்கிறானே, அதுபோல ஒரு சாராரும், சாம்பிள்பழம் இனிப்புத் தண்டாகக் கொடுத்துப் புளிக்கும் பழங்களைக் கூடையிலே நிரப்பிக் கொடுத்துவிடுகிறானே, அது போலச் சிலரும் கலைவியாபாரம் செய்கின்றனர். கனியின் தன்மையல்ல, வியாபாரத்தின் காரணம், விற்பவரின் சமர்த்து!

இங்ஙனம் ஓட்டை ஓடிசலைத் தட்டி நிமிர்த்திக் கொடுப்பவரும், முலாமிடுவோருங்கூட, எதும் செய்யமுடியாது, தலையைக் கீழே தொங்கவிட்டுக் கொள்ளக்கூடிய கவிதைகளையும் கம்பர், தைரியமாகப் பாடித்தான் இருக்கிறார். ஆதிவீரராம பாண்டியன், மாதர்களை வர்ணிக்கிறபோது, அந்தந்த நிலைக்கு ஏற்றபடி மாதர்களை வர்ணிக்கப் பார்க்கிறோம். தடாகத்திலே தையலர் நீராடுவர், அதுபோது தாமரைக்கும் அவர்கள் முகத்திற்கும் மாறுபாடு காணாமல், வண்டுகள் மயங்கும், குவளைக்கும், கோமளவல்லிகளின் கண்களுக்கும் மாறுபாடு காணாது வண்டுகள் மருளும். என்று ஆதிவீரராமபாண்டியன் பாடுகிறார், அந்த ஆளவோடு, அதாவது வண்டுகள் பெண்களைக் குளங்களிலே கண்ட ஆளவோடு நிறுத்திக் கொள்கிறார், ஒரு வரம்பு இருக்கட்டும் என்பதற்காக. அதேவிதமான நிலைமையில் கம்பர் தீட்டும் கவிதைகளைப் பாருங்கள். நுண்பொருள் விளக்கம். எவ்வளவு! விளக்கம் உரைத்தலோடு விடுகிறார? இடவர், ஆக்காட்சியைக் காண்பதையும், அந்த நேரத்தில் அவ்வாடவர் கொண்ட கருத்துகளையும், ஆக்கருத்துகளால் அவர்களின் கரமும் சிரமும் படும்பாட்டையும் “குளோசப்” எடுத்துக் காட்டாவிட்டால் கம்பருக்குத் திருப்தி ஏற்படு வதில்லை, ஏன்? இந்த வர்ணனைகளை அவர் இராமபூஜைக்குரிய சஹஸ்ரநாம அர்ச்சனை என்று எண்ணுகிறாரா? பரிதாபத்துக்குரிய மக்கள், இவ்வளவு ரசங்களையும் கடந்தல்லவா, இராமரின் பெருமையைத் தெரிந்து கொள்ள முடியும். இதற்குள் அவர்கள் அலுத்தே போய் விடுவார்களே! தேவகதை கூறி, மக்களைச் சன்மார்க்கத்திலே உடுபடச் செய்யக் கம்பன் காட்டும் வழி சரியானது தானா என்று தான் கம்பதாசர்களைக் கேட்கிறோம். சன்மார்க்கமென்ன அவ்வளவு நாற்றமும் கசப்புமுள்ளதா, அதன் மீது இவ்வளவு சுவையைப் பூசித்தர! அப்படி நல்ல எண்ணத்தோடு பூசித்தரப்பட்டாலும்கூட, சுவைப்பவர்கள், மதுரம் கிடைக்கும் வரை சுவைத்து விட்டுக் கசப்புத் தெரியத் தொடங்கியதும், ஊமிழ்ந்துவிடுவார்களோ, நோக்கம் ஈடேறவும் வழி சரியில்லையே! வேறு என்ன காரணம் இப்படி வரை முறையின்றிக் கம்பர், வாரி வாரி இந்த ரசத்தை இறைப்பதற்கு? இதற்கோர் சமாதானம் கூற வேண்டாமா கலாவாணர்கள். எங்கே கூறினார்கள்? எப்போது கூறப்போகிறார் கள்? எப்படிக் கூற முடியும்?

கம்பர் கையாண்ட அதேவிதமான நிலைமைகளையுங்கூட, நைடத நூல் ஆசிரியர், ஒரு வரம்பு கட்டியே புகல்கிறார், தாம் எடுத்துக் கொண்டது சாதாரண அரசன் கதை என்ற போதிலுங்கூட. ஓடத்திலேறிச் சென்ற மாதர்மீது நீர்விழுவதால், மறைவிடம் தெரியலுற்ற சம்பவமொன்றைக் கம்பர் காட்டினாரல்லவா? அந்த மறைவிடம் தெரியலுற்றதும், ஓடத்திலிருந்த இடவர், களைப்பு நீங்கிக் களிப்பு கொண்டனர் என்று பாடுகிறார் கம்பர். எந்த இடவனும், அத்தகைய நிலையிலே, கூர்ந்து நோக்கிக் குளிர்மனமானான் என்று, பண்பு விளக்கத்தைப் பெரிதென்று கருதும் எந்தக் கவியும் பாடமாட்டார். கம்பருக்குப் பண்பு விளக்கத்திலே இருந்த மோசு அதிகம். ஆகவேதான், காணக் கூடாத இடத்தைக் கண்ட இடவர், களிகொண்டனர் என்று, பச்சையாகப் பாடுகிறார். ஏககாலத்திலே, பகவான் திருஅவதாரம் செய்த ஆயோத்தியிலே மக்களின் மாண்பு, மறைவிடத்தைக் கண்டு மகிழும் அளவு பட்டுப்போய்விட்டது என்பதும், மூடியிட்டு விடவேண்டிய சம்பவத்தைத் துளியும் தங்குதடையின்றி விளக்கும் அளவு, கம்பரின் காமச்சுவை உணர்வு இருந்ததென்பதையும் நாம் உணருகிறோம். கடவுட் காதையிலே இக்காட்சியா என்று கேட்கிறோம்.
***

இடவர்தான் ஐதோ காமத்தால் கயவராயினர், மாதர்கள் எப்படிப் பொறுத்துக் கொண்டனர்? எப்படிப்பட்ட சரசியும் இப்படிப்பட்ட இடவரின் பார்வையைச் சகித்துக் கொள்ள மாட்டாளே, உத்தம இராமனின் பிறப்பிடமான ஆயோத்தி வாழ்மாதர்கள் எப்படிச் சகித்துக் கொண்டனர்? இடவர் பார்த்தனர், இரணங்குகள் அருவருப்படைந்தனர் என்றாவது கம்பர்பாடி யிருக்கக் கூடாதா, காரிகையர் மீதேனும் களங்கம் படியாதிருக்கட்டும் என்ற தூய எண்ணம் கொண்டு. இல்லையே! இதைவிட அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது ஆதிவீரராமபாண்டியருக்கு. தடாகத்திலே பெண்கள் நீர் விளையாடுகிறார்கள், ஆக்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நளன் அவ்வழியே செல்கிறான்! இந்த “வாய்ப்பு” கிடைத்துவிட்டால் இராமனே தடுத்தாலும், அனுமானே குறுக்கிட்டாலும்கூடக் கம்பனைத் தடுக்க முடியாது! நைடதநூல் ஆசிரியர், கட்டுக்கு அடங்குகிறார், பண்புக்குப் பழுது ஏற்படக்கூடாது என்பதற்காக. குமரிகள் குளத்திலே நீராடும் நேரத்திலே, அந்த இடத்திலே நளன் செல்லுதல் எங்ஙனம் பொருந்தும்? இடவனொருவன் தாம் நீராடுவதைக் கண்டால், நங்கையின் மனம் புண்ணாகாதா, அவர்களின் பண்பும் கெடாதா? நளன் ஆக்காட்சியைக் கண்டது நங்கையருக்குத் தெரிந்ததாகக் கூறலாமா? இருசாராரின் மனப்பாங்குமன்றோ இழுக்குடையதாக ஏற்பட்டுவிடும்? இவ்வளவும் இதற்கு மேலும் யோசிக்கிறார் கவி கம்பனானால், யோசனை இந்தப் பிரச்சனைகளிலே சென்றிராது. எதை எதை எதெதற்கு ஒப்பிடலாம் என்ற யோசனையிலே ஆழ்ந்துவிடுவார், அதிலிருந்து ஆழகான கருத்துக்கள் கிளம்பிவிடும், காமரசம் ஊற்றெனக் கவிதா உருவிலே பெருகும். ஆதிவீரராம பாண்டியன், அந்தக் காட்சியைப் பண்புடன் பாடுகிறார், மங்கையரின் மேலிட மறைவிடம் தடாகத்திலே நீராடும் நேரத்திலே தெரிவது இயல்பு, அதனையும் அவர் இயல்புக்கு மாறாகக் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில், நளனின் நற்பண்புகளுக்கு இழுக்கு நேரிடாதபடியும் பாதுகாத்து விடுகிறார். எந்தக்கவியானாலும், தானெடுத்துக் கொண்ட “சற்பாத்திரங்களை” இழுக்குச் சூழா வண்ணம் பாதுகாத்திட வேண்டாமா? அதற்காகவே ஆதிவீரராமபாண்டியன், நளன், நீராடும் மங்கையரைக்கண்ட போது, என்ன நிலையிலே, அவன் இருந்தான் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். நளன் நங்கையரைக் கண்டானே தவிர, நங்கையர் எவரும் நளனைக் காணவில்லை! அவர்கள் நீராடுவதிலேயும், ஒருவரோடொருவர் விளையாடிக் கொண்டிருப்ப திலேயுமே கவனம் செலுத்தினர் போலும் என்று கூறுகிறாரா? அதுவுமில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாலும், நங்கையர் கண்களுக்கு நளன் தெரியமாட்டான்!! யார் கண்களுக்கும் தெரிய முடியாதபடி, உருவை மறைத்துக் கொண்டு செல்கிறான் நளன். தமயந்தியின் திருநகரிலே, அரசிளங்குமரிக்குச் சுயவரம். மன்னர்கள் பலர் வருகின்றனர். தமயந்தியிடம் காதல்கொண்ட நளனும் வருகிறான். தேவர்களும் வருகின்றனர். இந்திரன் தமயந்தியிடம் சென்று தன்னை மணம் புரிந்துகொள்ளும்படி சொல்லுமாறு நளனையே தூதனுப்புகிறான். “அடியேன் எங்ஙனம் அந்தப்புரம் செல்வது? அனுமதியார்களே!!” என்று நளன் விளம்ப, “கவலைவேண்டாம். யார் கண்களிலும் நீ தெரியமுடியாதபடி உன் உருவை மறைத்துக் கொண்டு செல்லும் மந்திரத்தைக் கற்பிக்கிறேன்” என்று இந்திரன் கூறுகிறான். அந்த மந்திரப் பலனால், நளன் யார் கண்களிலும் படாமல் போகிறான். அந்த நேரமாகப் பார்த்துதான், நைடத நூலாசிரியர் நீர் விளையாடும் நங்கையரை நளன் கண்டதாகக் கூறுகிறார்.

“யாவர்க்குங் கட்புலனால் உருக்காண்கிலாத ஓர் நுட்பநூல் விஞ்சையை நுவன்றிட்டான்”

“அதாவது, எவர்களும் கண்ணால் உருவத்தை அறிய முடியாததாகிய, நுண்ணிய நூலிலே சொல்லப்பட்ட மந்திரத்தைச் சொன்னான்” என்ற பகுதியை முதலிலே கூறிவிட்டுப் பிறகுதான், தார்வேந்தனைக் கார்நிறக் கூந்தலார் குளிக்குமிடத்திலே நின்றதாக ஆசிரியர் காட்டுகிறார். எவ்வளவு வரம்பு பாருங்கள்?

தெளித்த நீரே துகிலை நனைத்து மறைவிட ஒளியைப்புறத்து அளித்து விட்டதாமே, கம்பனின் ஓடமேறிய மாதர் காட்சியின்படி. நீரிலலேயே மூழ்கி விளையாடிக் கொண்டிருந்த நங்கையரின் நிலை எவ்வண்ணம் இருக்கும். இங்கும் அதுதான்! ஆனால் என்ன சொல்கிறார் கவி. நளன், “நாமோயார் கண்களிலும் தென்பட மாட்டோம், நமது கண்களுக்ககோ எல்லாக் காட்சிகளும் உள்ளது உள்ளபடி தெரியும். இங்கோ ஆழகிய மாதர்கள்! நீராடுகிறார்கள்! அங்கதரிசனம் தங்குதடையின்றி கிடைக்கிறது! அரிதரிது இதுபோலச் சந்தர்ப்பம் கிடைப்பது! ஆகவே இங்கேயே நிற்போம், இன்னும் பலகாண்போம், களைப்பு நீங்க, களிப்புப் பொங்க” என்று எண்ணினான் நளன் என்பதாகக் கவி கூறினாரா? அல்லது அத்தகைய எண்ணம் அவனுக்கு உண்டானது போலும் என்ற நூலைப் படிப்பவர்கள் சந்தேகிக்கக் கூடிய விதத்திலே, ஏதேனும் உரைத்தாரா? போகட்டும், கண்டான், களிகொண்டான் என்று கூறினாரா? ஆயோத்தி இடவர், மாதரின் மறைவிட ஒளிபுறத் தளித்ததும் ஆயர்வு நீங்கினர் என்று கம்பர் சொன்னாரே, அதுபோல ஆதிவீரராமபாண்டியன் கூறுகிறாரா? இல்லை! இல்லை! தற்செயலாக இக்காட்சியைக் கண்டான் காவலன், கண்டதும், காணக் கூடாததைக் கண்டுவிட்டோமே என்று கருதிக் கண்கைள மூடிக்கொண்டான் என்று கூறுகிறார். கண்களை மூடிக் கொண்டான் என்றால், வெறும் பாவனைக்கு மூடிக்கொண்டானா? இல்லை? உண்மையிலேயே! சில வைதீகர்கள், கண்களை மூடிக் கிடப்பது போலக் குளத்தருகே அமர்ந்து கொண்டு, அங்கு வந்து போகும் அரிவையர் மீது, கடைக்கண்ணைச் செலுத்துகின்றனரே அதுபோல நளன் நயனங்களை மூடினது போலப் பரசாங்கு செய்துவிட்டு, கொஞ்சம் “ஓரப்பார்வை” செலுத்தினானா? இல்லை, ஆறுக மூடிக் கொண்டான். மங்கையரின் நிர்வாணக் கோலத்தைத் தான் பார்த்தால், அந்நிலையிலே தன்னை வேறு யாரேனுமோ, மங்கைமாரோ கண்டுவிட்டால், கேவலமாகக் கருதுவார்களே என்று அஞ்சி, சுற்றுச்சார்புக்குப் பயந்து கண்ணை மூடினானா? இல்லை! மற்றவர்கள் என்ன எண்ணுவார்களோ என்று பயந்தல்ல அவன் கண்களை மூடிக்கொண்டது. அவனுடைய மனமே அதற்கு இடந்தரவில்லை. இதுவல்லவா பண்பு! நளன், கலைவல்லோன், நற்பண்புகட்கு உறைவிடம், நாடாளும் மன்னன், எனவே அவன் நிர்வாண நங்கையரைக் கண்டான் களித்தான், மேலும் சில நேரம் கண்டான் என்று கூறலாகாது என்ற வரம்புக்குக் கவி ஆதிவீரராமர் கட்டுப்பட்டார்.

“மலர்பயில் வாவிதோய் மாதர் வண்டு கில்லை

புனனனைதலு மல்குறோன்றலாற் கலைவலான் கண்முகிழ்த்தேகக்

காண்குறாள் லைமுகடழுந்துற வொருத்தி முட்டினாள்”

இது செய்யுள். பொருள் விளக்கத்துக்காக இதோ அதனை பிரித்துக் காட்டுகிறேன்.

மலர்பயில் வாவிதோய் மாதர் நுண்துகில் ஆலைபுனல் நனைதலும் ஆல்குல் தோன்றலால் கலைவலான் கண்முகிழ்த்து ஏக காண் குறாள்முலை முகடு அழுந்துற ஒருத்தி முட்டினாள். கருத்தைக் கவனியுங்கள். நீர்நிலையிலே நிர்வாணக் கோலத்திலே நங்கையர் இருக்கக்கண்ட நிடத தேசாதிபதி, கண்களை மூடிக்கொண்டு நடக்கலானான், அந்த நேரத்திலே நீராடி வெளிவந்த நீலவீழியாள், நளன் தெரியாததால், அவன் மீது மோதிக் கொள்கிறாள், மேலிடம் நளனுடைய மார்பிலே அழுந்தும்படி! இது பொருள். செய்யுளை இங்ஙனம் ஆதிவீரர் இயற்றினதன் உட்பொருளைக் காணுங்கள். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பதுகூடத் தெரியவில்லை நளனுக்கு, அவ்வளவு ஆறுகமூடிக் கொண்டான் கண்களை. அதுமட்டுமல்ல. தடாகத்தருகே கண்களை மூடியவன், இரண்டடி எடுத்து வைத்த உடனே திறந்து விடவுமில்லை. இங்கே இதுபோன்ற காட்சிகள் பல இருக்கக்கூடும், என்று ஒயுற்றுக் கண்களை மூடிக்கொண்டே நடக்கலானான். அவ்வளவு பண்பு விளக்கம் செய்கிறார் கவி. அது மட்டுமல்ல, நளன் மீது மோதிக் கொண்ட மாதைப்பற்றிக் கவி, அமைத்திருக்கிற பதத்தைக் கவனியுங்கள், முட்டினாள், முட்டுவது எது? மிருகத்தனமான செயல் இது, என்பதைக் கவி, நாம் உணர வேண்டுமென்பதற்காக முட்டினாள் என்று கடுமையான பதத்தைப் புகுத்திக் கவிதையை முடிக்கிறார். இதே நிலையிலே கம்பரை ஏவிப்பாருங்கள், பத்தப்பாடலாவது பாடாவிட்டால், அவருடைய மனம் அமைதி ஆடையாது என்று நிச்சயமாகக் கூறலாம்!

ஏன் சொல்லிலே உங்கட்கு அவ்வளவு நம்பிக்கை ஏற்படாமல் போகக்கூடும். எனக்குத் தடையில்லை, தோழர்களே, அதே விதமான நிலைமையில் கம்பர், எப்படிப் பாடியிருக்கிறார் என்பதைக் காட்ட, அடிக்கடி, நீராடும் துறைக்குச் சென்று நிர்வாண நளினிகளைக் காண்பது கூடாதே என்று பண்பு கூறுகிறது, பாவாணர்கள் நம்மீது பூட்டும் பாணங்களோ, இவர்தம் குட்டுகளை வெளியாக்க வேண்டுமே என்ற துடிப்பைத் தருகிறது. ஆகவே உங்களுக்கு மீண்டுபோர் முறை அழைப்பு, தடாகத்துக்கு, தத்தை மொழிச்சியர் நீராடும் இடத்துக்கு. இது ஆயோத்தி மாதர்கள் நீராடிய இடம். மிதிலையிலே, வில்முறிந்தது, ஜனகனின் சொல் வென்றது, இராமருக்குச் சீதையைத் திருமணம் செய்து தரத்தீர்மானித்த மிதிலை மன்னன் ஆயோத்தி அரசனுக்கு இந்த நற்செய்தியைக் கூறி அனுப்பத் தசரதன் களிப்புடன் மிதிலைக்குப் புறப்பட்டான். பட்டத்தரசிகள் புடைசூழ, அவர்தம் பாங்கியர் உடன்வர, மற்றும் மந்திரிப் பிரதானியரும் ஏவலர் காவல் புரிவோரும் படைவீரரும் உடன் நிற்க. மிதிலை செல்லும் வழியிலே, ஒருசோலை. அங்கு தங்கினர் இளைப்பாற. அங்கோர் பொய்கை, அதிலே புனல் விளையாடப் புகுந்தனர் பூம்பாவைகள். சிந்தனையைச் செலுத்திப் பார்க்கவேண்டும் கம்பதாசர்களே! நளன் கண்ட நீராடு மாதர், புனலாடுகையில், காமவேட்கை உடையவர்களாகவோ, சேட்டை செய்ததாகவோ கவி கூறவில்லை. தற்செயலாக அதைப்பார்க்க நேரிட்ட நளனும், நின்ற இடமே தங்கிப் பார்த்துப் பூரித்தான். காமுற்றான் ஏன்றோ சொன்னாரில்லை. ஆயோத்தி இடவரும் மகளிரும், கம்ப சித்திரத்திலே காணப்படும் விதத்தைப் பாருங்கள், மகளிர் நீராடினர் என்று ஆதிவீரராமபாண்டியன் கூறினார். கம்பருக்கோ இந்த அளவு திருப்திதருவதாக இல்லை. ஆகவே அவர் இடவர் கண்டனர் களித்தனர், சிலர் கூடநின்று புனலாடினர் என்று பாடியிருக்கிறார். விளக்கு இருக்குமிடத்திலே ஒளி இருக்க வேண்டும், இடவர் இருக்கும் இடத்திலே ஆணங்குகள் இருக்க வேண்டியது, அதுபோலவே அவசியம் என்பது போலும் கம்பர் கருத்து.

“குடைந்து நீராடு மாதர் குழாம்புடைசூழ வாழித்தடம்புயம் பொலியாண்டோர் தார் கெழுவேந்தனின்றான் என்று மகிழ்ந்து கூறுகிறார் கம்பர், பாலகாண்டம், புனல் விளையாட்டுப் படலம் 12வது செய்யுளிலே.

குடைந்து நீராடும் மாதர்
குழாம் = நீரிலே மூழ்கி விளையாடும் மாதர் கூட்டம்
புடைசூழ = தன்னைச் சுற்றிலும் நிற்க.
இழி தடம்புயம் பொலிய = வட்ட வடிவமான தோள்வளை அணிந்த பெரிய புஜங்கள் அழகு பெறுமாறு.
தார்கெழு = மாலையணிந்த
ஓர் வேந்தன் - ஒரு மன்னன்
நின்றான் - நின்றிருந்தான்.

தரசதனுடன் வந்த ஒரு மன்னன், கலியாண வீட்டுக்குப் போகுமுன், சோலையிலே மாலையிலே மையல் கொண்டதாலே, மாதர் பலர் நீரில் நிற்கத் தானும் நின்றானாம். நால்வகைப் படைசுற்றி நிற்க மன்னர்கள் நிற்பதாகக் கவி கூறினால், ஆக்கவிதையைப் படிப்போர் எழுச்சி பெறக்கூடும். எதிரிகள் சுற்றி நின்றனர், இவன் நடுவே நின்றான் என்று கவிபாடினல், படித்திடும் கோழையும் வீரனாவான். மந்திரி பிரதானியர் புடைசூழ மன்னவன் இருந்தான் என்று கவி பாடினால் கேடொன்றுமில்லை, ஆட்சி ஒழுங்காக இருந்தது என்றேனும் அறியலாம். கம்பன் காட்டும் மன்னன், நீராடும் மங்கையர் புடைசூழ நிற்கிறான்! என்ன நேர்த்தி! இதுவா கீர்த்திக்கு இதாரம்?

கற்புடை மாதரின் மனப்பாங்கு எவ்வளவு தூரம் உச்ச நிலையில் இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்ட, வேதநாயகம் ஓரிடத்தில் ஒரு கற்பனைத் தம்பதிகளின் காதையைக் கவிதை உருவிலே காட்டுகிறார்.

ஓவியக்காரனொருவன் ஆழகிய சித்திரம் தீட்டினான், அதை வந்து பார்க்கும்படி தன் இல்லக் கிழத்தியை அழைக்கிறான் கணவன். உரையாடல் நடக்கிறது.

“அது என்ன சித்திரம்?”

“அற்பதமானது, வந்து பாரேன்.”

“இணா, பெண்ணா?”

“ஏன்? இடவனின் ஓவியந்தான், வா, பார்க்கலாம்”

“ஆண் சித்திரமேல் நான் பாரேன்.

“பைத்யமே! ஆண் சித்திரமல்லடி, ஆண் சித்திரமல்ல ஆழகான பெண் ஓவியம். வா, போய்ப் பார்ப்போம்.”

“எஹீம். வரமுடியாது, நீரும் போகக்கூடாது. பாவையர் தம் உருவமெனில் நீர் பார்க்க மனம் பொறேன்.”

“இடவனாயின் நான் காணேன், பெண்ணெணில் நீ போய்ப் பாராதே, நீ எனக்கு, நான் உனக்கு”, இப்படி இருக்கிறது வேதநாயகத்தின், குடும்பப் பண்பு தீட்டும் முறை.

“ஓவியர் நீள சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியை யாம் அழைத்திட ஆண்
சித்திரமேல் நான் பாரேன்
பாவையர் தம் உருவமெனில் நீர்
பார்க்க மனம் பொறேனென்றாள்
காவிவிழி மங்கையிவள் கற்புவெற்
பின் வற்புளதால்”

“அறிஞர் வேதநாயம் தமது கவிதைமூலம் நாட்டவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் “தேவி”யுடன், இடவருடன் சேர்ந்து திடாகத்திலே நின்று கொண்டிருந்தனராமே ஆயோத்தி நகரத் “தேவிகள்” அவர்களை ஒப்பிட்டுப் பாருங்கள்! கம்பனின் பண்பும் அதன்மூலம் உங்கட்கு விளங்கும்.

மாதரும் இடவரும் ஒரேதடாகத்தில் நின்று குளித்திடும் “ரசலீலை” “இராமப் பிரபாவத்தை” விளக்கிடத் தேவையா என்பதே நம் கேள்வி. ஆயோத்திவாழ் இடவரும் மாதரும் இப்படிக் காமசித்தர்களாக இருந்தனர் என்று கூறுவது. “தெய்வமாக்காதை”யைக் கூறவந்த கம்பரின் நோக்கத்துக்கு ஊறு தேடுவதாகாதா என்று கேட்கிறோம். கோபித்து என்னபயன்!

காதலரின் குறும்பான விளையாட்டைக்கூட, ஒரு கட்டுப் பாட்டுக்குள் நிறுத்துகிறார் நைடத நூலாசிரியர். நளனும் தமயந்தியும திருமணம் முடிந்தபிறகு, வாழ்விலே ஒவ்வொர் நாளும் திருநாள் என்று கூறக்கூடிய விதத்திலே ஆனந்தமாக வாழ்ந்து வரும்போது, புனலிடை மூழ்கி, பொழிலிடை உலவி, கனிமொழி பேசி, இல்லறம் நடாத்தி வந்த காதையைக் கூறுகிறார் ஆதிவீரராமபாண்டியன். எப்படி? புனலிலே விளையாடச் செய்கிறார் நளனையும் தமயந்தியையும்! ஆனால், அங்கே கூட, மாதரின் பண்புக்கு மாசு நேரிடாதபடி பாதுகாக்கிறார், தமது பாடல் வேகத்துக்குக் கண்ணியம் எனும் கடிவாளம் பூட்டி.

கம்பர் காட்டும் தடாகம் வேறு, நிடதநாட்டுத் தடாகம் வேறு, முன்னதிலே, பலமாதர் ஒரு இடவர், இடவர் களிக்கிறார் இரணங்குகள் கவலையுற்றுள்ளனர், நிடதநாட்டுப் புனல் விளையாட்டு அத்தகைய காமவேள் சாலையல்ல, இங்கு நளனும் தமயந்தியும் புனலாடுகிறார்கள் தனியாக. அதுபோது, இடைநீர்ப்பட்டு நனைந்துவிடுகிறது, நளன் காண்கிறான். தமயந்தின் நிலை என்ன? வெட்கினாள். வெட்கம் மட்டும் போதுமா? “வேண்டாம் கண்ணாளா! இதுஎன்ன விளையாட்டு என்று கொஞ்சுமொழி பேசி, அவன் பார்வையை வேறுபுறம் திருப்பும்படி கெஞ்சினாளா? இல்லை! வேறு என்ன செய்தாள்? தகாதசெயல் புரியும் தன் மணாளனை மாதருககே இயல்பான சாகசத்தால் தடுத்துவிட்டாள். நீராடச்சென்ற இடத்தில் சுகந்தத்தூள் இருந்த தல்லவா, மெய் மணக்கத் தேய்ததிட. அந்தப் பொடி கலந்த நீரை வாரினாள், நளனுடைய முகத்திலே இறைத்தாள்! கண்ணிலே பொடி வீழ்ந்த போது காவலனின் நோக்கம், காரிகையின் மீது பாயமுடியாதல்லவா! ஒரே விநாடியில், வெட்கம், திகைப்பு, யோசனை, யுக்தி, வேலைத்திட்டம், வெற்றி இவ்வளவும் தமயந்திக்கு ஏற்படுகிறது. ஒருகை நீர்தான் இவ்வளவுக்கும். ஆனால் அந்த நீரைவாரி இறைக்கச் செய்ததன்மூலம், ஆதிவீரராம பாண்டியன் மாதர்குல முழுதுக்குமன்றோ பெருமை தேடித் தந்துவிட்டார்!


“அந்துகினனைதலினாலல் குறோன்றுதல்
கந்தடுகளிற்றினான் காணவேள்குறாச்
சுந்தரச் சுண்ணநீர் முகத்திற்றூவி”
ஆம்துகில் - ஆழகிய இடை
நனைதலின் = நனைந்துவிட்டதால்
ஆல்குல் = மறைவிடம்
தோன்றுதல் = தோன்றுதலை
கந்துஆடு = கட்டுத்தறியை முறிக்கின்ற
களிற்றினான்= யானையை உடைய நளன்
காண = பார்க்கவே
வெள்குறா - வெட்கமுற்று
சுந்தரம் = ஆழகான
சுண்ணநீர் = கந்தப்பொடி கலந்த தண்ணீரை
முகத்தில் தூவி = (தமயந்தி நளனுடைய) முகத்தில் இறைத்தாள்.

ராஜலீலைக்கே இவ்வளவு கட்டுத்திட்டம், வரையறை வைத்து நைடத நூலாசிரியர் பாடி இருக்கும்போது, தேவலீலையை விளக்கவந்த சாமகாதையிலே, கம்பர், கொண்ட முறை சரியா, என்று கேட்டால், கோபிக்கின்றனர். கோபம் வருவது சரி, ஐயனே, ஏன் அந்தக் கோபத்தை, கலையை இக்கதிக்கு ஆளாக்கிய கம்பன் மீது காட்டாது, உள்ளதை எடுத்துக்கூறும் ஏன்மீது காட்ட வேண்டும்? நானா ஆக்கவிதைகளைப் புனைந்தேன், இல்லாததை எடுத்துரைத்தேனா? சந்தேகமிருப்பின், கம்ப ராமாயணம், நைடதம் இரண்டையும் எடுத்துப் புரட்டி, நான் குறித்துள்ள பாடல்கள் உள்ளனவா என்று பாருங்கள்.

“போ,போ, பரதா! நீங்களும் கவிபாட ஆரம்பித்தால் இப்படித்தான் பாடுவீர்கள்” என்று கூறுவர் கடைசி சமாதானமாக. ஆனால் அதுவும் பொருந்தாது.

ஆழகான குளம்! தாமரை அற்புதமாக மலர்ந்திருக்கிறது! வனப்புள்ள ஒருபெண்! மூழ்கி மூழ்கி விளையாடுகிறாள் அங்கு. ஒரு இளைஞன், கண்டு விட்டான் காட்சியை, பறிகொடுத்தான் மனதை.

கம்பசித்திரத்துக்கு ஏற்றகாட்சிதானே இது! “குளோசப்” எடுக்க ஏற்ற இடம். ஆனால் எங்கள் கவி பாரதிதாசன், அந்தத் தடாகத்துக்கு உங்களை அழைக்கிறார், வந்து பாருங்கள், துளியேனும் அருவருக்கவோ, கூச்சப்படவோ, இடமிருக்கிறதா என்று

“தாமரை பூத்த குளத்தினிலே
முகத்தாமரை தோன்ற முழுகிடுவாள்”

முகத்தாமரையைத்தான் காணலாம்! ஆனால் அவள் ஆôகி அல்லவோ, முகம்மட்டுந்தான் தெரியும்படி நீரிலேயே ஆழ்ந்து இருக்கிறாளோ? இல்லை! ஆழகான மேனியாள், ஆனந்தமாக நீர்விளையாடுகிறாள், ஆனால், “பண்பு” அவரை, “முகத்தாமரை தோன்ற முழுகிடுவாள்” என்ற ஆளவோடு நிறுத்துகிறது, முகம்மட்டும் தாமரை அல்ல, மேனியே அழகுதான் அந்த மங்கைக்கு, ஆகவேதான் கவி.

“அந்தக் கோமளவல்லியைக் கண்டு விட்டான்”

என்று, ஒரேவார்த்தையில், சினிமாக்காரர் பாஷையில் கூற வேண்டுமானால், லாங் ஷாட் கொடுத்துவிட்டார் அவள் கோமளவல்லி என்று கூறி.

அந்தக் கோமளவல்லி மட்டும், கம்பரிடம் சிக்கி இருந்திருந்தால் என்ன நேரிட்டிருக்கும்! குறைந்தது பத்துப்பாடல்கள் அவருடைய உள்ளத்திலிருந்து குபு குபு வென்று கிளம்பி இருக்கும். அவைகளிலே ஒன்றிரண்டாவது, “குளோசப் காட்சி” யாக இருந்திருக்கும்.

அவள் கோமளவல்லியாக இருக்கலாம், ஆனால் அந்தக்குமரன் ஒருதடிப்பயல், முகத்தாமரையைக் கண்டு விட்டும் தன் வழியே தான் சென்றான், என்று “வேதாந்தம்” பாடுகிறாரா என்றால், அதுவுமில்லை. “கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை” என்று காதல் கதைதான் கூறுகிறார். குப்பன் என்ன கண்டான்! முகத்தாமரையைக் கண்டான் முதலில், பிறகு ஒரேநொடியில் அவள் உருவ முழுவதும் கண்டான், ஆவளோர் கோமளவல்லி என்பதைத் தெரிந்து கொண்டான், பிறகு,
“அவள் தூய்மை படைத்த உடம்பினையும் பகந்தோகை நிகர்த்த நடையினையும்” காண்கிறாள்.
இவ்வளவும் கண்டான், பிறகு கதை தொடர்கிறது. இதிலே, நிகர்த்த நடையினையும்” காண்கிறாள்.

கலாரசிகர்களே! தாமரை பூத்த தடாகங்களைப் பார்த்தோம், உங்களைத்தான் கேட்கிறேன், இவைகளிலே, எந்தத் தடாகம், பண்பும் பாவின் இனிமையும் சமஏடையாக்கப்பட்டுத் தீட்டப்பட்டிருக்கிறது. நீங்களே கூறுங்கள். புரட்சிக்கவிஞர், “குப்பன்” கதை கூறுகிறார், ஆதிவீரராமபாண்டியன் இராஜா கதை கூறுகிறார், கம்பரோ, “தேவமாகதை” கூறுகிறார். வெறும் பொழுதுபோக்குப் பாடலல்ல கம்பருடையது. பிறவிப்பெருங்கடலை நீந்திச்சென்று, சாலோகசாமீப சாயுச்யப் பதவியை ஆடைவதற்கான மார்க்க நூல் அது, என்பதை மறந்துவிட வேண்டாம். மார்க்க நூலிலே, இந்தக் காமமது இப்படிக் கரைபுரண்டு ஓடலாமா? என்பதுதான் நமது கேள்வி.
மறுபடியும் யோசியுங்கள், பிறகு கோபம் ஏன்மீது வராது, அந்த ஏட்டின்மேல் பாயும்.

தாமரை பூத்த குளத்துக்கு அழைத்துச் சென்று அங்கு தையலரை நிர்வாண நிலையில் கண்டு மகிழும் இடவர் உள்ர் என்று காட்டி, இது கலை, கலை மட்டுமல்ல, கடவுள் நெறிக்கான காவியம் என்று கம்பர் கூறுகிறாரே, அது முறையா என்று கேட்கிறோம். தவறா?

(திராவிடநாடு - 14-4-46)