அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தீபரவுமுன்!

கடம்பா! கச்சி ஏகம்பா! காமாட்சி மணாளா! அந்தப் பயல்களுக்கு நல்ல புத்தி கொடுத்தாயே அப்பனே! அடியேன் பத்திரிகைகளிலே விடுத்த அறிக்கை கண்டு சர்க்கார் ஏதும் செய்யாது போயினும், சகலருக்கும் தந்தையாம் நீர், அவர்கள் மனதை மாற்றினீரே. உம்மைப் புகழ இவ்வடியேனுடைய ஒரு நாக்குப் போதுமோ என்று பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அம்மையப்பனைத் துதித்தார்.

சீப்பை ஒளித்து வைத்து விடுவதால் கலியாணமா நின்றுவிடும் என்று ஒரு பழமொழிவிடுத்தேன், பாருங்கள், பயல்கள், திருதிருவென விழித்துக் கரகரவெனச் சுழன்று, இல்லை! இல்லை! கொளுத்துவதில்லை என்று குளறின. நமது பேனாமுனை இலேசானதா? என்று மித்ரன் ஆசிரியர் முகமலர்ச்சியோடு கூறிவிட்டுக கன்னத்தைத் தடவினார். மீசை இல்லை முறுக்கு!

இந்தச் சு.ம.க்களின் செயல் முதுவேனிற் காலப்பித்தம் என்ற கண்டித்தேன், பாருங்கள் இறைவனின் திருக்கூத்தை. மட்கடம் செய்யும் சக்கரம் சுழலும் வேகத்திலே, குடம் தயாராவதுபோல, வேலூரிலே நான் விடுத்த எச்சரிக்கை, கழன்று சென்று சு.ம.க்களின் எண்ணத்தை என் வழிக்கத் திருப்பிவிட்டது என்று சைவத் திருவாளர் சச்சிதானந்தம்பிள்ளை திருவாய் மலர்ந்தருளிவிட்டுக் கந்தரனு பூதியைப் படிக்கச் சென்றார்.

மூன்றாவது மாடியிலே முடுக்காக உலவிக்கொண்டே இந்த ஆசிரியர், ஸ்டாப் இட் - நிறுத்து அதனை என்றுதான் இங்கே நான் ஆர்டர் போட்டேன். அதற்குப் பிறகுமா, அவர்கள் கொளுத்தத் துணிவார்கள் என்று தனக்கத் தானே பேசிக்கொண்டார்.

வேறு பல இடங்களிலே சில்லறைகள், சிரித்துக் கூத்தாடிக் கொளுத்தவில்லை! பணிந்துவிட்டனர்! ஒடுங்கிவிட்டனர். பதுங்கிக் கொண்டனர், என்று பேசின, ஏசின, சந்தோஷத்தைப் பூசிக்கொண்டு சந்தடி கிளப்பின.

சு,ம.க்கள், எதைத்தான் கொளுத்த மாட்டார்கள். இராமாயணமென்றால் என்ன, மனுதருமமானாலென்ன பெரியபுராண மானாலென்ன, அந்தப் போக்கிரிகள் எதையும் பொசுக்கும். யார் பேச்சையாவது கேட்கவா போகிறார்கள் என்று கண்கசியக் கூறிவிட்டுப் பிறகோர் அசட்டுச் சிரிப்பை வருவித்துக் கொண்டு, ஒரு புத்தகத்தை இதுகள் கொளுத்திவிட்டதாலேயே குடியா முழுகிவிடும் கலையா போகும்? கம்பனின் புகழா புகையாகும்? என்ற பேசிய திருக்கூட்டம்.

அந்தப் பயங்கொள்ளிப் பயல்களா நம்மை மீறி ஒரு காரியம் செய்யும். அறிக்கையும் கண்டனக் கூட்டமும் கண்டதும் வாலைச் சுருட்டிக்கொண்டன. அதுகளுக்கு ஏது அவ்வளவு தைரியம் என்று பேசிக்கொள்கின்றன. எங்கோ ஓர் தமிழ் சங்கத்தில் மட்டும, கொளுத்துவரைக் கைவுட்டதற்காகச் சுயமரியாதைக்கார்களைப் பாராட்டுகிறோம் என்றார் தீர்மானத்தை நிறைவேற்றினர். மற்றவர்கள் - மடிசஞ்சிகள் - மதவாதிகள், இந்துத் தலைவர்கள் பண்டிதர்கள் - கலாவிநோதர்கள். ஆகியோர் யாவரும் 18-ம்தேதியைத் திருவிழழவாகக் கொண்டாடித் தமது தீரப்பிரதாபம் பாடு, ஆனந்தத் தாண்டவமாடினர். சேலம் ரீப்பிரதாபம் பாடு ஆனந்தத் தாண்டவமாடினர். சேலம் சுயமரியாதை மாநாட்டிலே, புராணதிகளைக் கொளுத்துவ்தாகச் சொன்னபடி சுயமரியாதைக்காரர்கள் செய்யவில்லை. ஒவ்வோர் சாராரும் தத்தமது வீரமே இதற்குக் காரணம் என்று கருதிக் கொண்டு பேசுவர். இது இயற்கைதான். எங்கெங்கு இராமாயணம் படிக்கப்படுமோ அங்கெல்லாம் அனுமார் பிரசன்னமாக வீற்றிருந்து இராமகாதையைக் கேட்டு சசிப்பார் என்ற சாவடிச் சுப்பன்கள் சாற்றுவர். அத்தகைய அனுமான், சேலத்திலே இராமாயணத்தைக் கொளத்தப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், தனது விஸ்வ ரூபத்தைக் காட்டி வாலைக் கரகரவெனச் சுழற்றிப் பற்களை நறநறவெனக் கடித்துச் சேர்வராயன் மலையைச் செண்டுபோல் தூக்கி அடித்து, அட்டகாசம் செய்யவே, சுயமரியாதைக்காரர்கள், அடியற்ற பனையென அனுமனின் காலில் விழுந்து, வாயுபுத்ரா, வல்லமை மிககோனே, எம்மை ஒன்றும் செய்யாதீர். நாங்கள் உமக்குப் பிரியமான இராமாயணத்தைக் கொளுத்தவில்லை என்ற கூறினர் என்று சாவடிச்சுப்பன் கூட்டம சரடுவிடும். அனுமாரின் ஆர்பரிப்பு, அவரடியார்களின் பதைப்ப், சர்க்காரின் தலையீடு, பத்திரிகைகளின் பாணம் எனும் இவைகட்குச் சுயமரியாதைக் காரர்கள் பயந்து பதுங்க மாட்டார்கள் - பழக்கமும் கிடையாது - அவசியமும இல்லை. பித்தரென்று நூற்றினால், அதைத் கேட்டுச் சித்தத்தைச் சிதறவிடமாட்டார்கள். போக்கிரி என்று திட்டினால் அது கேட்டுப் பொல்லாங்கான நினைப்புக் கொள்ளார். சுயமரியாதைக்காரரின் போர்முறை, இத்தகைய காரணம், சொல்லால் வெளியாவதைவிட, விரையிலே செயல் மூலம் நிச்சயம் வெளியாகப் போகிறது. அன்று, கோழைகள் என்று சு.மு.க்களைக் கூறினோர், போக்கிரிகள் என்ற தூற்றுவர். அந்நாள் வருகிறது விரைவில்.

சேலத் மாநாட்டிலே, புராணாதிகளைக் கொளுத்தவில்லையே தவிர, எந்தக் காரணத்துக்காக, இதைச் செய்யவேண்டுமென்று சு.ம.க்கள் கருதினரோ, அது நிச்சயம் நிறைவேறிவிட்டது. தமிழரிலே ஒரு சாரார், பகுத்தறிவாளர், உளுத்த நரம்பும் வௌத்த ஓடும இழுஙத்துக் கட்டிய கூடடா என்று சித்தர்கள் கூறிடும் இக்கட்டையைச் சொகுசாக வளர்க்க, ஆரியரின் அடிபணியும் பிறவிகள் போலன்றி, உயிரைவிட மேல் என்று கருதும் இயல்பினரான சீர்திருத்தவாதிகள், இராமாயணம், பெரிய புராணம், மனுதர்மம் போன்றவைகள்.

1. ஆரிய மத ஏடுகள்

2. திராவிடரை அடக்க, இழிவு செய்ய, எழுதப்பட்டன, உதவுகின்றன.

3. ஆபாசக் கருத்துகள் கொண்டன. அநாகரிக நிகழ்ச்சிகளைக் கூறுவன, பேதம், கொடுமை முதலியவைகளைப் பக்தியின் பேரால் புகுத்துவன.

4. ஏடுகள் வெளியிடும் கருத்தை ஒட்டிய நடவடிக்கைகளைச் செய்வதால் மக்களின் மூட நம்பிக்கை வளருகிறது, சமுதாயம் கெடுகிறது.

என்ற எண்ணத்தை நாட்டினர் உணர வேண்டுமென்று விரும்பினர், அது நிறைவேறிவிட்டது. நாட்டிலே, எவரும் கடந்த ஒரு வாரகாலமாகக் கனவிலும் நினைவிலும், சுயமரியாதைக்காரர்களைப் பற்றியே கருதினர். சிலர் கண்கசிந்தனர். கை பிசைந்தனர். புராணங்களிலே ஆபாசங்கள் உள்ளனவென்று வறி, அவைகளைத் தீயிலிடக் கிளம்புகின்றதாமே, சுயமரியாதைக் கூட்டம் என்ற கூட்டம் தாங்கள் உயிருடன் இருப்பதைக் காட்டிக்கொள்ள இக்காரியத்தைச் செய்கின்றன என்று அறிவு முதிர்ச்சியினால் எழுதின. உண்மையில் சுயமரியாதைக்காரர்களின் நோக்கம் அதுவாக இருப்பினும், அதையும் இந்த ஆரியத் திருப்பிரம்மங்கள் தமது அலறல் மூலம் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டன. இந்து பத்திரிகை, அமெரியையும் ஆஸ்திரேலிய மந்திரி சபையையும், அமெரிக்காவுக்குப் போதனை புரிவதையும் ஆசிரியர் பன்சாலியையும் மறந்து சுயமரியாதைக் காரர்களைப் பற்றித் தலையங்கம் எழுதவேண்டிய அவசியம் தீ பரவா முன்பே ஏற்பட்டுவிட்டது. இந்துவின் அத்தலையங்கத்தைப் பார்த்தவர்கள், தமிழகத்திலே உள்ள உணர்ச்சியை ஓரளவுக்காவது தெரிந்து கொண்டிருப்பார் களன்றோ. ஆங்கில தினசரிகளின்றித் தவிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கு ஆரிய ஏடு பய்னபடுவது, ஆச்சரியமான சம்பவமென்பேன்.

கொளுத்தாதுவிட்டவர்கள், கும்பிட்டுக் கோவிந்தா போடவில்லை. ரகுபதி ராகவ ராஜாராம பஜிக்கவிட்லலை. அக்கந்தல்களைப் பட்டுப் பீதாம்பரம் என்ற போற்றவுமில்லை. அவைகளைக் கொளுத்துவதை, அடியோடு கைவிட்டோம் என்ற கூறிடவுமில்லை. வெளுத்துவாங்கினார்கள். அந்த ஏடுகளிலே உள்ள ஆபாசத்தைச் சுட்டுப் பொசுக்கவது கூடாதா? என்ற கேட்டனர். இவைகளை ஆதரிப்பவர்கள் தக்க காரணம் காட்டட்டும் கேட்போம், பதில் உரைப்போம், அதுவரை கொளுத்துவதை நிறுத்திவைப்போம் என்று கூறினர். இதனைப் பணிந்தனர், பயந்தனர் என்ற ஏமாளிகள் எண்ணினால், எண்ணிக் கொள்ளட்டும். திக்கெட்டும தீ பரவட்டும்! ஆரிய ஏடுகள் கரியாகட்டும்! அந்த ஜ்வாலையைக் கண்டு அக்கிரகாரம், நமது ஆதிக்கம் அழிந்தது என்ற அழுட்டுமூ! அநீதியும் அக்ரமமும் அழியட்டும! என்று தமிழர் முழக்கமிடும் காலம் அதிக தூரத்தில் இல்லை. அதுவரையில், ஆரிய தாசர்கள் அகமகிழ்நிது, ஆனந்தமாக இருக்கட்டும்.

100-க்கு 90 பேர், கையெழுத்திடவும் தெரியாத பாமரர்களாக இருக்கும் நிலையிலே சாதாரணக் கல்வி வேண்டுமா? கலை வேண்டுமா? என்ற சு.ம.க்கள் கேட்கின்றனர். இதற்கு என்ன பதில் உரைப்பீர், என்று அவர்களைக் கேட்கிறேன். சம்ப இராமாயணம், பெரியபுராணம், மனுநீதி எனம் ஏடுகளில் உள்ள மதக் கோட்பாடுகளைக் கண்டு மதிப்புத் தருகிறீர்களா அன்றி அவைகளில் உள்ள இலக்கியச் சுவைக்காக மதிப்புத் தருகிறீர்களா? மதக் கோட்பாடுகளுக்காகத்தான் என்று கூறுவீரேல், அக்கோட்பாடுகள் பகுத்தறிவுள்ள வனால் ஏற்றுக்கொள்ளக் கூடியனவா? இலக்கிச் சுவைக்காகத்தான் எனில் இவைகள் வெறும் கற்பனைகள் என்று திட்டமாக மக்களுக்குக் கூறிடவும் அத்திட்டத்தின்படி புராணிகரின் கருத்துகளைக் கொண்ட விழாக்கள், நடவடிக்கைகள் நடைபெறக் கூடாதென்று ரைக்கவும் தயாரா? கலைப்பகுதி மதப்பகுதி என்று பிரித்திடவும், மக்களிடம் உரைத்திடவம் முன்வருவீரா? என்ற கேள்விக்கு என்ன பதில் கூறுவர் அந்தப் பாதந்தாங்கிகள். முத்தமிழ் கற்நோம், மூலமுணர்ந்தோம், ஞாலமெலாம் பேரெடுத்தோம் என்று பறைசாற்றினால் போதுமா? கலை, கலை என்று கதறினால் போதுமா? இனத்தை அழிக்கும் கலைக்கம் தூக்குக் கயிறக்கம் என்ன வித்தியாசம். உலகிலே, எவ்வளவோ கலைகள் காலத்தால் கரைந்துபோன விறகும், பிதியதாகக் பலைகள் மலரவில்லையா? ஜார் காலக்கலை ரஸ்புடீன் ரசமாக இருந்தது, புரட்சிக்குப் பிறகோ புதுமையான கலை அங்க தோன்றவில்லையா? கலைபோகும் என்று தலையில் உள்ள நிலை கெட்டுக் கூவுபவர்கள், தங்கள் அறிவைக் கொண்டு, புத்துலக நோக்கங்கொண்டு புதுக்கலைகள் இயற்றலாகாதா? தமிழர்களை மூடர்களாக்கும் அந்த மூன்று புளுகுமூட்டைகளை முதுகிலே சுமந்து திரிகிறீரே, அவைகளைத் தீயிலே தள்ளிவிட்டுத், தமிழகத்தின் சிறப்பு. தமிழர கொள்கை என்பன பற்றி ஏன் நீவிர் இலக்கியங்கள் தீட்டக்கூடாது என்ற கேட்டால், இந்தக் கற்றறிந்த கபோதிகள் காகூவெனக் கூவுவதே சிலாக்கியமென்று கருதுகின்றன. இதுதானா அழகு? தோழர் சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் கூறுவது போல் சு.ம.க்களின் செயல், முதுவேனிற் காலப் பித்தமல்ல - பருவமே அல்ல. இது குளிர்காலம் - நாட்டிலே இதன் இயல்புப்படி, புராணப் புரட்டர்கள் உடல் நடுக்கத்துடன் உள்ளமும் நடுக்கமெடுத்து, ஏதேதோ உரைக்கின்றனர். இவர்களை, நான், தங்கள் ட்சியை விளக்கித் தாராளமாக, வாதங்களை நீட்ட வாரீர் என்று அழைக்கிறேன். அதைச் செய்ய ஒரு சந்தர்ப்பந்தரவே தீயிலிடுவதைக் கொஞ்ச நாட்களுக்கு அவகாசம். அதற்குள் அவர்கள் சுவடிகளைப் புரட்டிச் சொல்லம்பு திரட்டிக், கள்த்திலே நிற்கட்டும நிற்பாரா? சேலத்திலே, கொளுத்தவில்லைச் செந்தமிழ் நாட்டிலே இனி நமக்கப் பயமேயில்லை என்று மனப்பால் குடிக்கும் தோழர்களே, கேண்மின், சேலத்தில் சென்னையில், நெல்லையில், நாகையில், தஞ்சை திருச்சியில், திருவாரூர் பட்டுக்கோட்டை திருத்துறைப் பூண்டி முதலான இடங்களில், தமிழகத்திலே பல்வேறு இடங்களில் பார்ப்பனீயத்தை வளர்க்கும் அந்தப் பழைய கூளங்கள், பக்தியின் பெயரால் மக்களைப் பட்டி மாடுகளாக்கும் அப்பாதக ஏடுகள், ஆரியக் கோட்டைக்கு அமைந்துள்ள ஆபாசக் களஞ்சியங்கள் மக்களின் இழிவுக்கும் மடைமைக்கும் பேதத்துக்கும் பிளவுக்கும் காரணமாக உள்ள அந்தக் காகிதக் கத்தைகள் தீயிலிடப்பட்டு, அதைச் சுற்றித் தமிழர் கூட்டம் நின்று, தீ பரவட்டும்! திக்கெட்டும பரவட்டுமூ! ஜாதிச் சனியன் சாகட்டுமூ! வைதிகப் பிச்சுவெந்து நீறாகட்டும்! என்றும், தாண்டவமாடு தீயே, திருநடனம் செய்! ஆசிரியர் கண்டு மிரண்டு தமது ஆதிக்கம் அழிந்தது என்ற அழுமளவு ஓங்கி நில் என்றும், புகை கப்பிக் கொள்ளட்டுமூ! புல்லர்களின் வாழ்வு பொசுக்கப்பட்டது என்று தெரியட்டும் என்றும் கூறிடும் காலம் வரத்தான் போகிறது.

ஆரியமத ஏடுகள் ஒழிப்பு நாள் நடைபெறப் போகிறது. அதற்குள் உமது அறிவுத் திறனைக் காட்டி அவைகளைக் காப்பாற்ற வாரீர் என்ற அழைக்கிறேன்.

(திராவிடநாடு - 24.01.1943)