அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தியாகத்தீயில்-திராவிட வீரர்கள்

பட்டியல் காணீர்-பரிதாபம் கேளீர்!
அடித்து நொறுக்கிய தொகையினைப் பாரீர்!
ஐயகோ, இதுதான், ‘அகிம்சா’ ஆட்சியா!!

அடிபட்டோர்
காங்கிரஸ் ஆட்சியின் தடியடி தர்பாருக்கு ஆளாகி, படுகாயங்கள் பெற்ற நமது கழகத் தோழர்களின் பட்டியல் இவர்களில் சிலர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் பலர், கழகத் தொண்டர்களின் உதவியால் தங்கசாலைத் தெருவிலிருக்கும் நமது தலைமை நிலையத்துக்கொண்டு வரப்பட்டனர் காயங்களுக்குக் கட்டுப்போட்டும், மருந்து வகைகள் வாங்கித் தந்தும், படுக்கை வசதிகள் செய்து கொடுத்தும் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் மருத்துவ வசதிகள் யாவும் கவனிக்கப்பட்டன. உயர்தர டாக்டரும் அழைத்து வரப்பட்டு, முக்கியமானவர்களுக்கு வேண்டிய வைத்திய உதவியும் தரப்பட்டது.

இந்தப் பட்டியலிலுள்ள பெயர்கள் நமது நிருபருக்குக் கிடைத்தவை. கிடைக்காத, காயமடைந்தோரின் பட்டியல் பெரிது! மிகப்பெரிது!!

டாக்டர் கணேசன்
பன்மொழிப் புலவர்
கா.அப்பாதுரையார் M.A.L.T.
அலமேலு அப்பாதுரை
செல்லக்கண்ணு அம்மாள்
முல்லை-வடிவேலு

மேலும் பலர்.

கைதாகி மீண்டோர்:
ஆச்சாரியார் வரவால், அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகத் தீரர்களின் விபரம், இது. நமது நிருபர் தேடிச் சேகரித்தவை இந்த விபரத்தில் கைக்கு வராத தோழர்கள் பெயரும் இருக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சி கைது செய்தோர் பட்டியல் இது. 24.10.50 காலை சென்னைக் கோட்டைக்கருகிலும், மாலை ராயப்பட்டையிலும் கைது செய்யப்பட்டவர்களின் விபரம் இது. இதில் கழக முன்னணி வீரர்கள் 25.10.50 நண்பகல் ஒருமணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

கே.கே.நீலமேகம்
கே.கோவிந்தசாமி
என்.வி.நடராசன்
நடிப்புப் புலவர் கே.ஆர்.ராமசாமி
ஈ.வே.கி.சம்பத்து
ஈழத்து அடிகள் பி.ஏ.
தில்லை-வில்லாளன் பி.ஏ (ஆனால்)
காஞ்சி கவுன்சிலர் சி.வி.ராசகோபால்
டாக்டர் கணேசன்
ஜலகண்டபுரம் ப.கண்ணன்
முல்லைக்கொம்மை வடிவேல்
போளூர் சுப்பிரமணியம்
கார்ப்பரேஷன் கவுன்சிலர் முனுசாமி
சென்னை கண்ணபிரான்
அகரம் டி.வி.சாமி
குறிஞ்சிப்பாடி சாம்பசிவம்
காஞ்சி சுந்தரேசன்

இவர்கள் யாவரும் 151 I.P.C. செக்ஷன் (Preventive detention) படி, காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களோடு மேலும், கருப்புக்கொடி காட்டப்பட்ட வட்டாரங்களில் சென்றவர்களை யெல்லாம் மடக்கி போலீஸ்ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று கொஞ்சநேரம் வைத்திருந்து விடுவித்தனர். அவர்கள் தொகை நூற்றுக்கணக்காகும்.

கைது செய்யப்பட்டோரில் 34 தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. 25.10.50 அன்று சென்னை மூன்றாவது மாகாண மாஜிஸ்டிரேட் முன் விசாரணைக்கு வந்தது. அனைவரும் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சிறையிலே சிங்கங்கள்!
கருப்புக்கொடி காட்டச் சென்றபோது ஆளவந்தாரால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத் தீரர்களின் பட்டியல்:

மயிலை கு.வடமலை
சதுரங்கப்பட்டினம் ச.ப.அழகரசு
வடசென்னை கே.வி.கே.சாமி
மயிலை. ப.சானகிராமன்
ஜார்ஜ்டவுன் பா.தங்கலிங்கம்
கோடம்பாக்கம் ப.ஆ.சாந்தமூர்த்தி
கிருஷ்ணாம்பேட்டை நா.இராதாகிருட்டினன்
சூளை விசுவநாதன்
மேலும் பலர்

(திராவிடநாடு 29.10.50)