அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தோழர் ஆசைத்தம்பி வழக்கு அப்பீல்

உதவி நிதி வேண்டுகோள்

விருதை தோழர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி மீது அரசியலார் தொடுத்த வழக்கில் முசிரி நீதி மன்றத்தில் ஆறுமாத கடுங்காவலும் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டதை நேயர்கள் அறிவார்கள்.

தலைமை நிலையத்தின் ஆளோசனைப்படி விருதுநகர் கிளைக் கழகத்தின் சார்பாக உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்து கொள்வதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்பீலுக்கான நிதி திரட்டுவதற்கும் ஓர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அப்பீலின் நோக்கம் தோழர் ஆசைத்தம்பியை சிறைத் தண்டனையிலிருந்து மீட்பதற்காகவல்ல அரசியலாரின் நியாயமன்ற அடக்குமுறையை உயர் நீதிமன்றங்களில் எடுத்துக்கூறி நமக்குரிய பேச்சுரிமை, எழுத்துரிமையை நிலை நிறுத்துவதற்கே ஆகும்.

ஆகையால் திராவிடப் பெருங்குடி மக்கள்:-
ஓ.கு.கு அய்யாசாமி
எவரெஸ்ட் சுருட்டுத் தொழிற்சாலை,
விருதுநகர்.

என்ற முகவரிக்குப் பணம் அனுப்பி உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நமது பொதுச் செயலாளர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் ரூ.50 அன்பளிப்பாய் அளித்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.இளஞ்செழியன்
செயலாளர், தி.மு.கழகம்,
விருதுநகர்

(திராவிடநாடு-30.7.50)