அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


உண்ணாவிரத மகிமை
உண்மையில் ஏற்கப்படும் உண்ணாவிரதம் ஆதமாவையும் ஆண்டவனையும், கலக்கச் செய்கிறது என்பதாக தோழர் காந்தியார், இன்னொரு உபவாசத்திற்குத் தயாராகிவிட்டேன் என்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இக்கூற்று, உண்ணாவிரதத்தைப் பொறுத்த வரையில் காந்தியார் பொய் கொல்லவில்லை என்பதையே காட்டுகிறது. எப்படியென்றால் இதற்குமுன் பல தடவைகிளில் காந்தியாரால் ஏற்பட்ட உண்ணாவிரதங்கள் எல்லாம் உண்மையாகவே ஏற்பட்டவை அல்லவென்பது இதனால் நன்கு தெளிவாகின்றது. அவை உண்மையான உண்ணாவிரதங்களாய் இருந்திருந்தால், காந்தியாரின் கூற்றுப்படி, அவருடைய ஆத்மா ஆண்டவனுடன் கலந்து விட்டிருக்கும். ஆனால் கலக்கவில்லை. காந்தியாரின் ஆத்மாவும் ஆண்டவனும் ஒருவருக்கொருவர் இன்னும் வெகுதூரத்தில் இருப்பதாகவே தெரிகிறது. எனவே, இதுவரை காந்தியாரால் கையாளப்பட்டு வந்த உண்ணாவிரதங்களெல்லாம் வெறம் போலி உண்ணாவிரதங்கள் என்று நாம் கூறவில்லை. அவரேதான் கூறுகிறார். நாம் கூறினால் சும்மா இருப்பார்களா?காந்தி பக்தர்கள்! உலகம் போற்றும் உத்தமரை ஒருவன் இவ்வளவு துணிச்சலாகக் கண்டிப்பதா? அவருடைய ஒப்புயர்வற்ற உண்ணாவிரதத்துக்கு ஊனந் தேடுவதா? என்று எம்மீது சீறிச்சினந்து சரந்தொடுத்திருகக மாட்டார்களா? ஆனால் என்னுடைய உண்ணாவிரதங்கள் ஒன்றும் உண்மையானவை அல்ல என்று காந்தியாரே கூறும்போது, அவர்களால் என்ன செய்ய முடியும்? பாவம், உப்பக்கண்டம் பற்கொடுத்த பார்ப்பனத்தி மாதிரி இருக்கிறார்கள்.

பொதுவாழ்வில் ஈடுபட்ட ஒருவன் தவறு செய்வானானால், அதைக் கண்டிக்க யாருக்கும் உரிமையுண்டு தலைவனாயிலும் சரி, அல்லது சாதாரண தொண்டனாயினும் சரி தவறு செய்தால், அதை மக்கள் கண்டிப்பா ஆனால், காந்தியாரைப் பொறுத்தவரையில், அவர் இமயமலையளவு தவறு செய்தபோதிலும், இம்மியளவுகூட அவருடைய பக்தர்கள் அவரைக் கண்டிப்பதில்லை காரணம்: காந்தியாரை, ஒரு அவதாரமாக்கிய குற்றம் அவர்களிடமிருப்பதே அவரை ஒரு அவதாரமாக்கிய குற்றத்தை மறைப்பதற்காக, அவர் எவ்வளவு தவறுதெய்த போதிலும் அவரைக் கண்டிப்பது முறையாகாதென்ற முடிவுடன் இருக்கும் ஒரு கூட்டம், அவருடைய தவறுகளை எப்படிக் கண்டிக்க முடியும்? இராமர் செய்த தவறுகளை இராம பக்தர்கள் கண்டிக்கிறார்களா? சிவன் செய்த தவறுகளைச் சில பக்தர்கள் கண்டிக்கிறார்களா? இதுபோலத்தான் காந்தியாரின் தவறுகளையும் அவர் பக்தர்கள் கண்டிப்பதில்லை. ஆனால் குற்றம் புரிந்தவனே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது, மற்றவர்கள் அதனை ஒப்புக்கொள்ள மறுப்பதுதான் விந்தையிலும் விந்தையாய் இருக்கிறது.

நான் திருடினேன்

இல்லை, நானேதான் திருடியவன், இதோ நான் திருடிய பொருள் என் கையிலேயே இருக்கிறது, பாருங்கள்

இல்லை, நீ என்னசொன்ன போதிலும் நாங்கள் நம்பவே மாட்டோம் நீ திருடவே இல்லை

என்ன இது பெரிய சங்கடமாயிருக்கிறது, நான்தான் திருடியவன், இதோ நான் திருடிய பொருள், இதோ, இப்பொருளைத் திருட்டுக் கொடுத்தவர் என்னைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார், என்னை நம்புங்கள். நானேதான் திருடியவன்.

இல்லை, இல்லை! நாங்கள் நம்பவே மாட்டோம், நீ திருடியவளே அல்ல.

என்பது போன்றல்லவா இருக்கிறது, காந்தி பக்தர்களின் போக்கு

உண்மையான உண்ணாவிரதத்தை நான் மேற்கொண்டிருந்தால், என்னுடைய ஆத்மா ஆண்டவனுடன் கலந்திருக்கும், நானும் ஆண்டவனம் வேறு வேறு தனியாகவே இன்னும் இருக்கிறோம், என்று கூறுவதன் வாயிலாக உண்மையைக் கக்கியிருக்கிறார் காந்தியார்.என்ற தோரணையிலேயே உண்மையில் ஏற்கப்படும் உண்ணாவிரதம் ஆத்மாவையும் ஆண்டவனையும் காலக்கச் செய்கிறதுஆகையால் என்னுடைய உண்ணாவிரதங்க்ள் எல்லாம் பொய்யானவை, இதை நீங்கங்ள நம்பவேண்டாம் என்ற தோரணையிலேயே உண்மையில் ஏற்கப்படும் உண்ணாவிரதம் ஆதமாவையும் ஆண்டவனையும் கலக்கச் செய்கிறது என்று கூறுவதன் வாயிலாக உண்மையைக் கக்கியிருக்கிறார் காந்தியார்.

இதை ஏன் நாம் எழுதுகிறோமென்றால், காந்தியார் தம்முடைய உண்மையை வெளியிட்ட பிறகும், தம்முடைய உண்ணாவிரதங்கள் உண்மையானவையல்ல என்று கூறிய பின்னரும, மற்றொரு உபவாசத்திற்கு மகாத்மா தயாராகிறார் என்று அவருடைய உண்ணாவிரத மகிமையை உலகுக்குக் காட்ட முன்வருகின்றனரே காந்தி பக்தர்கள் என்ற அவர்களின் அறியாமையைக் கண்டு இரங்கியே, இனிமேலாவது அவர்களுக்குப் புத்திவரக் கூடாதா என்ற எண்ணியே இவ்வுண்ணா விரத மகத்துவத்தைப் பற்றி எழுதினோம். உண்மையை ஒப்புக்கொள்ள விரும்பாதார்க்கு எவ்வளவு சொன்னாலும் எவ்வளவு எழுதினாலும் பயன் தராதென்பதை நாம் அறிவோம். ஆயினம் வளர்ச்சியடைந்து வரும பகுத்தறிவு வுலகத்தில், இதுபோன்ற புத்தலாட்டங்கள் கலவாமல் இருக்கவேண்டுமென்பதற்காகவே இதுபற்றி எழுத நேர்ந்தது.

(திராவிடநாடு - 29.10.44)