அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


உருவான பலன்?

“கட்டுப்பாடு நீங்கவேண்டும். கட்டுப்பாட்டினால் கள்ள மார்க்கெட் பிறந்து கொழுக்கிறது. பலச் சோம்பேரிகள் இதனையே பிழைப்பாகக் கொண்டிருக்கிறார்கள். இதன் பலனாக உற்பத்திப் பெருக்கத்திற்கும் தடை ஏற்படுகிறது. அதிகாரத்திலுள்ள மந்திரிகள் மட்டுந்தான் அறிவிற் சிறந்தவர்கள் என்று கொள்ளக் கூடாது. அதிகாரத்திலில்லாத பல அறிஞர்களும் நாட்டிலுள்ளனர். அவர்கள் அறிவுரையைப் புறக்கணித்தல் கூடாது. நமது வியாபாரிகளையும், தொழில் அரசர்
களையும் நம்புவது கூடாதா?”

“விலையை உயர்த்தாதீர்கள். மக்கள் தேவையைப் பணமாக்காதீர்கள். உற்பத்திச் செலவு அதிகமானாலன்றி விலையைக் கூட்டாதீர்கள். மக்களின் தர்மகர்த்தர்களாக நட்து கொள்ளுங்கள்.”

“சிலர் இறந்தால் கூட பாதகமில்லை. போர்க்காலத்தில் சில சுதந்திரம் தடுக்கப்படலாம். பிடித்துக்கொண்டிருப்பது நம கலாசாரத்துக்கு புறம்பானது. எனவே, சகல கட்டுப்பாடுகளையும் நீக்கிவிட்டு, மக்களுக்குப் பட்டினி கிடக்கவும், தியாகம் செய்யவும் உரிமையளிக்க வேண்டும்.”

மேற்குறித்தப் போக்கிலே காந்தியார், சில நாட்களாக விடாமல் பேசி வருகிறார். நமது தினத்தாள்கள், இது விஷயமாக சொந்தத்தில் எக்கருத்துக் கொண்டிருந்த பதிலும், இவைகளை ஒரு எழுத்து விடாமல் பிரசுரித்து வருகின்றன.

தேவையான அளவிற்குப் பொருள்கிடைக்காத காரணத்தால், கிடைக்கும் பொருளும் திருப்திகரமானதாக இல்லாததால், ஏழை எளிய மக்களும் கட்டுப்பாடு ஒழிவதில் ஆர்வம் காட்டு கிறார்கள். அவர்களுக்குக் கட்டுப்பாடு ஒழிவதில் ஆர்வம் காட்டு கிறார்கள். அவர்களுக்குக் கட்டுப்பாடு நீங்கினால், சகல பொருள்களும் மலிவாகவும், நினைத்த மாதிரியும் ஏராளமாக
வும் கிடைக்கும் எனும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்.

உற்பத்திப் பெருகினால் பொருள் .................. பேசப்படுகிற........... தற்கு, தங்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு நெருக்கடி இருந்தபோதிலும் சகித்துக் கொண்டு, முதலாளிகளோடு ஒத்துழைக்க வேண்டுமென, தொழிலாளர்களுக்கு உபதேசம் செய்யப்படுகிறது. பொருள் உற்பத்திக்கு முதலாளிகள் தயாராக இருப்பதாகவும், தொழிலாளர்கள் தான் கூலி உயரவேண்டுமெனும் சாத்தியமற்ற கோரிக்கையைக் கிளப்பி, வேலை நிறுத்தம் போன்ற தவறான போக்கில் சென்று, உற்பத்தையைத் தடுத்துவிடுவதாகத் தொழிலாளர் பால் பொதுமக்கள் சீற்றுங்கொள்ளும் முறையில், ஒழுங்காகப் பிரசாரம் செய்யப்படுகிறது.

“தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டதால், பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியதாக இருக்கிறது. அதனால் பொதுமக்கள் கூடுதலான விலைகொடுத்து வாங்கி பணம் நஷ்டம் அடைய ஏதுவாகிறது; வாழ்க்கைச் செலவும் அதிகமாகிறது. அதிகமாக வாழ்க்கைச் செலவிற்கேற்ப மேலும் மேலும் தொழிலாளர் கூலிஉயர்வு கேட்பர். இது ஆபத்தைத் தரக் கூடியது. எனவே, துவக்கத்திலேயே தொழிலாளர் கோரிக்கைக்கு இணங்கக்கூடாது.”

இவ்வாறு பேசியும், பொதுமக்களுக்குத் தொழிலாளர் பால் ஆத்திரப் மூட்டப்படுகிறது. பெருந்பாலான பத்திரிகைகள் முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருப்பதால், லாப் பெறுவதே முழுநோக்கமாகக் கொண்ட முதலாளிகளைப் பற்றியும், அவர்களுக்குள்ள லாப ஆசையால் எவ்வளவுதூரம் உற்பத்தி பாதிக்கப்படுகிறதென்பது பற்றியும் எழுதப்படுவதில்லை.

சென்றபோரின் விளைவாக முதலாளிகள் பெற்ற இலாபம் எவ்வளவு - அதே நேரத்தில் தொழிலாளர்கள் பெற்ற மொத்தக் கூலி எவ்வளவு - வாழ்க்கைச் செலவு எந்த அளவிற்கு உயர்ந்தி ருந்தது, இருக்கிறது - என்பதை எல்லாம் கணக்கிட்டுப்பார்த்தால் உண்மை விளங்கும். வாழ்க்கைச் செலவு அதிகரித்துப்போன காரணத்தால், அதற்குச்சரியாகத் தொழிலாளர்களில் கூலி உயராததால், இன்று தோழிலாளர் கையில் ஒரு கல்விக்..... மிச்சம் இருக்க நியாயமில்லை. ஆனால் அதே நேரத்தில் முதலாளிகள், போர்க்காலத்தில் வாழ்க்கைச் செலவு எவ்வளவு உயர்ந்திருந்தபோதிலும் தாரளமாகச் செலவு செய்து சுகமாகக் காலங்கழித்ததோடு மட்டும்மல்லாமல், எல்லாத் தொழிலிலும் போட்ட முதலுக்கு மேல் பத்து இருபது மடங்குக்குக் கொள்ளை அடித்தனர். இன்று அவர்ளிடம் பணம் பாசி பிடித்துப்போய் இருக்கிறது. அப்பணத்திற்க மட்டும் வாயிருந்தால், அது அவர்களிடம் வந்தடைந்த வரலாற்றை எடுத்துக்கூறும். வஞ்சம் - பொய் - கள்ளம் - சூது - கொலை முதலிய அனைத்தையும் உள்ளடக்கியுள்ள பல திடுக்கிடும் கதைகள் நிரம்பி இருக்கக் காணலாம்.

யுத்த காலத்தில் குவிந்த அளவிற்கே இன்றும் லாபம் குவிய வேண்டும் எனும் நோக்கத்தின் காரணமாகத்தான், தொழிலாளர்கள் அடிப்படைச் சம்பளம் கேட்பதிலேயே உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்றும், தொழிலாளர்கள் விருப்பத்திற்கு இணங்குவதால் பொருட்களுக்கு அதிகமாக கொடுக்க மக்கள் சம்மதிக்க வேண்டுமென்றும் பேசி, தங்களுக்குள் பேராசையை தொழிலாளர்கள் மீது சுமத்திவிடு கின்றனர்.

முதலாளித்துவ முறையால் பத்திப் பெருக்கமும் ஏற்பட்டுவிடாது. பொருள் குறைவால் இருந்தால் தான் கிராக்கிய விலைக்கு அப்பொருட்ககளை விற்க முடியும். நல்ல லாபமும் கிடைக்கும் வழி பிறக்கும். இன்று அமெரிக்காவில், முதலாளிகள் கூற்றுப்படி, பல துறைகளிலும் உற்பத்தி பெருக்கத்தான் இருக்கிறது. இருந்தாலும் அங்கு பொருள்களின் விலை மனிதன் இருக்கவில்லை. வாழ்க்கைச் செலவுக் கூடுதலாகத்தான் இருக்கிறது. தம் முடிந்ததும் கண்ட்ரோலும் கப்பட்டது. உற்பத்திப் பெரியது இருந்தும், கண்ட்ரோல் நீக்கப்படும், அமெரிக்காவில் பொருட்கள் விலை குறைவடையாததற்குக் காரணமென்ன? முதலாளிகளின் பேரையும் , முதலாளித்துவ முறையும் உள்ள முரண்பாடுமே, அங்குள்ள மக்கள் படும் திண்டாட்டத்திற்குக் காரணம். உற்பத்தி முறையை வேண்டுதான் நெருக்க.................. விற்கு பொருட்களையும் ஆக்கலாம் மக்களுக்குள் வேற்றுமை காட்டாமல் சுகவாழ்வு அளிக்கலாம்.

இங்கு சர்க்கரைக்கு இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு விட்டது. ஆலைகளில் உள்ள சர்க்கரை மூட்டைகளை இந்திய சர்க்கார் எடுத்துக் கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது. கட்டுப் பாடு நீக்கப்பட்ட 8-ந் தேதி காலையிலேயே சர்க்கரை மொத்த வியாபாரிகள், கட்டுப்பாடு விலைக்கு இரட்டிப்பு விலை கேட்பதாகவும், சர்க்கரை கைவசம் இல்லை எனச் சொல்லப் படுவதாகவும் ‘ஹிந்து’வில் செய்தி வந்திருக்கிறது. பம்பாயில் வீசை 2-4-0 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. கட்டுப்பாடு விலைக்குக் கூடுதலாக விலையைக் கூட்டவில்லை யானால், ஆலைகளில் கையிருப்பில் இருக்கும் மூட்டைகளில் சரிபகுதி மாயமாக மறைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. முன்னிலும் விலைகூடப் போவது நிச்சயம்.

இந்தியாவில் தேவையான அளவுக்குச் சர்க்கரை செயயப் படுகிறது. பாகிஸ்தான் பிரிந்தபிறகு, தேவைக்கு அதிகமாகவே இங்கு சர்க்கரை இருப்பதாக யூகிக்கலாம். அனைவரும் சர்க்கரை உபயோகிப்பவர்கள் எனச் சொல்வதற்கில்லை. எனவே, இங்க 10 லட்சம் டன்னுக்குத்தான் தேவை இருக்கிறது. 1947-48-ல் 9.1/4 லடர டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சர்க்கரை உற்பத்தியை விரிவாக்கத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

சுமார் 82 இராத்தல் கொண்ட மணங்க மூட்டை ஒன்றுக்கு கட்டுப்பாடு விலை 20-14-0 அக இருந்தது. இரட்டிப்பு விலை கேட்பதாக பம்பாய் வியாபார சங்கத் தலைவர் கூறுகிறார். கையிருப்பிலுள்ள 9 லட்சம் மூட்டைகளை, மூட்டை ஒன்றுக்கு ரூ. 34க்கு விற்கத் தயார் என சர்க்கரை சிண்டிகேட் அறிவிக்கிறது. கட்டிப்பாடு விலையைக் காட்டிலும் ரூ. 13-12-0 கூடுதலாகிறது. இதனால் முதலாளிகளுக்கு மூன்றுகோடி பத்தெனன்பது லட்சம் எதிர்ப்பாரா வகையில் லாபம் கிடைக்கிறது.

இது ஆலைக்காரர்களுக்கு மட்டும் கிடைக்கும் லாபம் கட்டுப்பாடு காலத்தில் மறைந்திருந்த கமிஷன் ஏஜண்டுகள் மீண்டும் வெளிக்கிளம்பிவிடுவர். அவர்களுக்கான கமிஷன் வேறு இருக்கிறது. மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் போன்ற பல நிலைகளிலும் மைகாறி முடிவாக சர்க்கரை சாதாரண மக்களை அடையும் பொழுது மேலும் அதிகமாக விலை ஏற இடமுண்டு.

இறக்குமதி கட்டுப்பாட்டின் காரணமாக வெளி நாட்டிலிருந்து அதிகமாக சர்க்கரை இறக்குமதியாகப் போவதில்லை. ஆதலால் இன்று விலை ஏறும் சர்க்கரை, மறுபடியும் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவுமல்லாமல் ஒரு முறை கூடுதலாக விற்று பெரும் லாபம் சம்பாதித்துப் பழக்கம் ஏற்படடு விட்டால், அதனை விரைவில் மாற்றுவ தென்பது அனுபவசாத்தியமல்ல.

கண்ட்ரோல் விலை நஷ்டத்தைத் தந்திருக்குமானால், இதுவரையில் முதலாளிகள் அந்த விலக்கு விற்க, வேண்டா வெறுப்பாகக் கூடச் சம்மதித்து இருக்கமாட்டார்கள். கையிருப்புச் சர்க்கரைக்குக் கொள்முதல் செலவோ, தொழிலாளர் கூலிச் செலவோ புதிதாகக் கூடுதலாகிவிட வில்லை. எனவே, கையிருப்பு மூட்டைகளுக்கு சரிபகுதிக்குமேல் விலை அதிகமாகப் கேட்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முதலாளி களின் லாப ஆசையைத் தான் இது விளக்குகிறது.

கட்டுப்பாடு நீக்கத்தால் முதலாளிகளுக்கு உடனடியாக மூன்று கோடி ரூபாய்க்குமேல் லாபம் காத்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சாதாரண மக்களுக்கு மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது. இதுதான் உருவான பலன்.

உற்பத்திச் செலவு எவ்வளவு - முதலாளிமார்கள் லாபம் எவ்வளவு - என்பவற்றிற்குச் சரியான புள்ளி விவரம் சேகரித்து, அதற்கான முறையில் விலையை நிர்ணயிக்க வேண்டும். இதற்கு மறுத்தால், சர்க்கரை ஆலைகளைத் தேசிய மயமாக்க முன் வரவேண்டும். இம்முறை ஒன்றால் தான் பொதுமக்களுக்கு உருவான பலன் உண்டாக வழிபடும்.

இறக்குமதியாகும் சர்க்கரைக்குத் தடைவரி விதிந்தும், மக்கள் வரிப் பணத்தைப் கொண்டு உதவி தொகை கொடுத்தும், சர்க்கரை தொழில் இந்த நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொழில் வளர்க்க முதலாளிகள் தொந்தி பெருக்கத்திற்கு மட்டும் ஏற்பட்டதன் போனது போகட்டும். இனியாவது மக்களுக்கு நல்ல முறையில் பயன்படுமாறு இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

(திராவிடநாடு - 14-12-1947)