அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வடநாட்டு கவர்னர் வருகை!

12ந் தேதி கண்டன நாள்.

நாடெங்கும் நடத்துங்கள்.

வடநாட்டு ஆதிக்கத்தின் அறிகுறியாகவும், காங்கிரஸ் பாசீச முறையின் கூறாகவும், சென்னை கவர்னராக ஒரு வடநாட்டுக் காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். திராவிடநாடு திராவிடருக்கே என்ற கொள்கைக்காகப் போராடும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்த வடநாட்டு ஆதிக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறது.

இன்றுள்ள நிலையில், திராவிட நாடு வடநாட்டுக்கு அடிமை என்ற நிலையை உறுதிப்படுத்தவும், அடிமைத் தனத்தை வளர்க்கவுமே, இந்திய அரசியல் சட்டம் பயன்படுகிறது. இந்த ஆதிக்கத்தை தி.மு.க. நாடெங்கும் விளக்கிக் கண்டிக்க வேண்டும். வடநாட்டு ஆதிக்கத்தைக் கண்டிக்க 12-3-52 அன்று நாடெங்கும் கண்டன நாள் கூட்டங்களை நடத்தி, இன்றுள்ள வடநாட்டு ஆதிக்கத்தை மக்களுக்கு எடுத்து விளக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

1. வடநாட்டு ஆதிக்கம் கூடாது.
2. கவர்னர் நியமனம் கூடாது – கவர்னர்களும் பொது மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
3. காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவரைக் கவர்னராக நியமித்ததைக் கண்டிக்கிறோம்.

என்ற இந்த மூன்று கருத்துக்களைக் கொண்டே, கண்டன நாள் நடைபெற வேண்டுமென விரும்புகிறேன். எல்லாக் கிளைக் கழகங்களும் கண்டன நாள் நடத்தி திராவிடத்தின் தீர்ப்பை வடநாடு அறியச் செய்ய வேண்டுகிறேன்.

அன்பன்
அண்ணாதுரை
(திராவிட நாடு – 9-3-52)