அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வேதகாலக் கடவுள்!

விவேக காலத்தில் விலக்கப்பட்டார்
ஆக்னிபகவானின் ஆபாச லீலைகள்!

கடவுள் இல்லை! என்றவுடனே, நமது இத்திக அன்பர்கள, “இவன் யாரோ சுயமரியாதைக்காரன்போல் இருக்கிறது, அதனாலேதான் கடவுள் இல்லை என்று கூறுகிறான்” என்று கூறுவர். ஆனால், நாம் இங்கு குறிப்பிடுவது அந்தப் பொரளில் அல்ல. கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறதா? இல்லையா? தேவையா? இருக்கிறதென்றால் எப்படியிருக்க வேண்டும்? எதற்காக இருக்கவேண்டும்? என்ன இயல்பினதாக இருக்கவேண்டும்? என்பனவற்றைப் பற்றி ஆராய்ந்து, மக்களின் வாழ்க்கை நலத்துக்கு ஏற்றவிதமாக அமையும் ஒரு கடவுளை எந்தச் சுயமரியாதைக்காரனும் இதுவரைக் கண்டித்த தில்லை. கண்டிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்குக் கிடையாது. மக்களின் வாழ்வைச் சுரண்டினாலன்றித் தன் வாழ்வை நடத்த முடியாதென்ற நிலையிலுள்ள கடவுளைத்தான் தன்மானக்காரன் கண்டிக்கிறான். இதன் உட்பொருளை உணராதாரும், உணரும் ஆற்றலில்லாதாரும்தான் கடவுளை நிந்திக்கும் கயவர் என்று தன்மான இயக்கத்தினரைத் தாறுமாறாகப் பேசுகின்றனர். தாம் பேசுவது தவறுதான் என்பதை உள்ளபடியே உணருவோரும் இந்தத் திருப்பணியைச் செய்வதால், தாங்கள் ஏதோ நல்ல காரியத்தை நாட்டுக்கு செய்வதாக மக்கள் எண்ணுவர் என்ற பூரிப்புடன், அறிவு ஆராய்ச்சி ஆகிய சீரிய பண்புகளுக்கு வெகு தொலைவில் நின்று கொண்டு இந்தக் காரியத்தை விடாப்பிரியாகச் செய்கின்றனர். மக்களிற் பெரும்பாலோர் அறிவராய்ச்சிக்கு அப்பால் நிற்கும் இரங்கத்தக்க நிலையை இவர்கள் தங்களுக்குப் பக்கபலமாக வைத்துக் கொண்டு, எதை எப்படிச் சொன்னாலும் கேட்பவர் யார் என்ற ஏக்களிப்புடன், அல்ல, ஏமாந்த இயல்புடன் இவ்விதம் பேசுகிறார்கள் - செய்கிறார்கள்.

மக்களின் கருத்து மாறுபடுவதையும், ஆக்கருத்து மாற்றம், மாற்றமற்ற நலைபேறுடையதாகச் சொல்லப்படும் மகேசுவரனையும் ஆவனது மகத்துவங்களையுமே மாற்றியமைக்கும் தன்மையைப் பெற்றுவிடுகிற தென்பதையும் இவர்கள் உணர்வதில்லை. உலகத்திலே உண்டாகும் வாழ்வும் தாழ்வும் மக்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, மக்களைப் படைத்ததாகச் சொல்லப்படும் மகேசுவரனுக்குங்கூட ஏற்படுவதுண்டு என்று நாம் சொன்னால், நம்மை நாத்திகப்பட்டியலில் சேர்த்துவிடுகிறார்கள் நம்பனடியார்கள். நாமல்லாத வேறு ஏவரேனும் இந்த உண்மையைக் கூறினால், இவர்கள், யாதுகாரணம் பற்றியோ கண்மூடி மௌனயாகி விடுகிறார்கள். உண்மையை யார் கூறினாலும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டுமென்ற உயர்ந்த பண்பை இவர்கள் மேற்கொள்ளாததும் - மேற்கொள்ளும் மேலான அறிவைப் பெறாததுமே தான் இதற்குக் காரணமாகும். 28-2-49ல் வெளிவந்த தினசரி தனது மடலில் ஒரு உண்மையை வெளியிட்டிருக்கிறது. அதாவது சிலர் நினைப்பதுபோல், கடவுள் என்று அழைக்கப்படும் பொருள், என்றும் அழியாத நிலைபேறுடையது என்று கூறப்படுவதை மறுத்துரைக்கும் முறையில் நம்முடைய பஒôய கடவுளரில் முக்கியமான ஒருவரின்க தையை மேற்கோளாக எடுத்துக் காட்டியிருக்கிறது.

“வேதகாலத்து மக்கள் ஆக்னிபகவானைப் பிரதான தேவதையாகக் கருதி வழிபட்டு வந்தார்கள்”.
என்று எழுதியிருப்பதோடு, ஆக்னி பகவானுக்கு அந்தக் காலத்தில் அளிக்கப்பட்ட முதலிடம் இந்தக் காலத்தில் அளிக்கப் படுவதில்லையென்றும், எங்கோ ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டதென்றும் கூறுகிறது. வேதக் காலத்தில் மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வமாக விளங்கிய ஆக்னி பகவான், விவேக காலமாகிய இந்தக் காலத்தில் ஏன் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்டார் என்பதற்குரிய காரணத்தையும் தினசரி மடலிலே கூறுகிறது.
“உலகத்திலே வாழ்வும் தாழ்வும் மனிதர்களுக்கு மட்டுமே ஏற்படுவதில்லை. தெய்வங்களுக்கும் கிட்டி விடுகிறது. ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக மக்கள் எல்லோரும் வழிபட்டு வந்த தெய்வம் மற்றொரு காலத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது. அதேபோல், முன்னாளில் பெயர் கேட்டிராத மற்றொரு தெய்வம் திடீரென்று தோன்றி, எல்லோராலும் பூசிக்கப்பட்டு வருகிறது. உலகம் தோன்றிய நாள்முதல் மக்கள் வழிபட்டு வந்த தெய்வப் பெயர்களையும், அவர்களை வழிபட்ட முறையையும் கவனித்தால் இது நன்கு விளங்கும். ஒரு காலத்தில் முக்கியமான தேவதையாக இருந்து இப்போது ஏதோ ஒரு சிறு தேவதையாக மாறிவிட்டதற்கு ஆக்னி ஊதாரணமாகக் காட்டலாம்”.

என்று எழுதியிருக்கிறது. ஒரு காலத்தில் முக்கியமான தெய்வமாக, இருந்த ஆக்னிபகவான் ஏன் இப்போது ஏதோ ஒரு சிறு தேவதையாக மாறிவிட்டது? மக்கள் அனைவருடைய வழிபாடடுக்குரிய முதல் தெய்வமாக இருந்த ஆக்னி பகவான் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியுமா? கேட்டால், ஆட்டதிக்குப்பாலகராயத் தென் கிழக்கு மூலையில் இருக்கிறார் ஏ;னறு இத்திக அன்பர்கள் கூறுவர். ஏடடுத் திசைகளுக்கும் ஏகபோக தெய்வம் தென்கிழக்கு மூலைக்கு ஓடினார் என்று கேட்டால் காரணம் கூறமாட்டார்கள். எல்லாம்வல்ல கடவுளாய் இருந்த ஒருவர், உலக வாயில்களில் ஒன்றான தென்கிழக்கு வாயிலைக் காத்து நிற்கும் காவலாளியாக ஏன் மாற்றப்பட்டார் என்று கேட்டால் மறுமொழி கிடைக்காது. தினசரி மடல் குறிப்பிடுவதுபோல், பேரே கேள்விப்படாத புதுத் தெய்வம் என்றுகூட ஆக்னி பகவானைக் கூற முடியாதே! வேதகாலத்தில் இருந்த முக்கிய தெய்வமாயிற்றே! அப்படி இருந்தும் இன்று அவர் கடவுட் பதவியின்றும் காவலாள் பதவிக்கு இறக்கப்பட்ட காரணம் என்ன? கலெக்டராக இருந்த ஒருவரைப் பில்லைச் சேவகனாக மாற்றுவதைவிட இது மிகவும் கீழ்த்தரமானதாகவன்றோ இருக்கிறது! அன்று கடவுள்! இன்று காவற்காரன்! எவ்வளவு பரிதாபகரமான மாறுதல் பாருங்கள்! ஒரு காலத்தில் கடவுளாக இருந்த ஒருவர் இப்பொழுது இல்லை, அந்த இடத்திற்கு வேறொருவர் கடவுளாக வந்துவிட்டார் என்று கூறினாலாவது பரவாயில்லைப் போலிருக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் (வேதகாலத்தில்) கடவுளாக இருந்து எல்லோருடைய வழிபாடுகளையும் பெற்ற ஒருவரே இன்று காவற்காரனாக இருக்கிறார் என்றால், நம்முடைய கடவுளரின் மாண்பு எத்தகையது என்பதை ஏடைபோட்டுப் பார்க்கும் நிகழ்ச்சியாகவன்றோ இது அமைந்திருக்கிறது!
வேதகாலக் கடவுளான ஆக்னி பகவான் விவேக காலத்தில் (இப்போது) ஏன் கதவியினின்றும் இறக்கப்பட்டார் என்பதற்குரிய காரணங்கள், பலவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கு வெளியிடுகிறோம்.

1. ஆக்னி பகவானுக்கு இரண்டு முகம், ஏழு நீண்ட நாக்குகள், நாலு கொம்புகள், மூன்று கால்கள், ஏழு கைகள். இவ்விதமாக அவருஒடய உடல் அமைந்திருக்கிறது. நம்முடைய கடவுளர் பலருக்குப் பலமுகங்களும் பல கைகளும் அமைந்திருக்கிறதென்று சொல்லப்பட்ட போதிலும், ஆக்னிக்கு அமைந்திருப்பது போன்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட முறையில் உடலுறுப்புகள் பெரும்பாலும் அமையவில்லையென்று கூறலாம். ஒரு கடவுளுக்கு இரண்டு முகங்கள் இருந்தால், அதற்கேற்ப நாலு கைகள் இருக்கும். ஆனால் ஆக்னிக்கு முகம் இரண்டு! கைகள் ஏழு! இரண்டு முகங்களுக்கு ஏழு நாக்குகள்! இந்த ஏழு நாக்குகளில் மூன்று ஒரு முகத்திலும், நானகு இன்னொரு முகத்திலுமாக அமைந்திருக்கிறதோ அல்லது முகமல்லாத வேறு எந்த உறுப்பிலாவது இந்த ஏழு நாக்குகளும் அமைந்திருக்கின்றனவோ என்பது விளக்கப்படவில்லை, இனி, அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படும் மூன்று கால்களும் அவருடைய உடலில் எந்தப் பகுதிகளில் அமைந்து இருக்கின்றன என்பதற்கும் விளக்கம் தரப்படவில்லை, ஆக்னிக்கு நாலு கொம்புகள் இருப்பதாகச் சொல்லப்படுவதால், ஒருவேளை அவர் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாக இருக்கும் கடவுளாதலால், அவருக்கு விலங்குகளுக்கு இருப்பதுபோன்ற கொம்புகள் இருக்கின்றன என்று சொல்லலாமாயினும், ஒரு கடவுள், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மட்டும்தான் கடவுளா மற்ற உயிர்களுக்கும் கடவுளா என்ற ஐயப்பாடு ஏழுகின்றது. எல்லா உயிர்களுக்கும் பொதுவான கடவுள் என்றால், மற்ற உயிர்களுக்கு இருக்கும் உடலமைப்புகளும் இருக்கவேண்டுமே! ஆனால், ஆக்னி பகவானுக்கு மனிதனுக்கு இருக்கவேண்டிய இரண்டு கால்களும் இல்லை. விலங்குகளுக்கு இருக்கும் நான்கு கால்களும் இல்லை. மூன்று கால்களே உள்ளன. ஆகவே, மனிதன் - விலங்கு - பறவை ஆகிய எந்த உறுப்புகளுக்கும் பொருந்தாத ஒரு உடலமைப்பைக் கொண்டிருப்பதன் காரணமாக இவரைத் கடவுள் பதவியினின்றும் நீக்கியிருக்கலாமல்லவா!

2. தக்கன் செய்த யாகத்தில் ஆக்னி பகவான் சிவனுக்கு எதிராகத் தக்கன் பக்கம் இருந்த உதவி செய்ததால், சிவன் சினம்கொண்டு, வீரபத்திரர் என்ற ஒரு கடவுளை உண்டாக்கி, ஆக்னியின் ஏழு நாக்குகளையும் கைகளையும் ஆறுக்கும்படிச் செய்தார். நாக்கும் கையும் ஆற்ற ஒருவரைக் குவளாக வைத்து வணங்குவது கூடாதென்ற காரணத்தால் ஆக்னி பகவானிடம் இருந்த கடவுட் பதவியைப் பறித்திருக்கலாம்.

3. ஒருசமயம், சப்தரிஷிகள் என்றழைக்கப்படும் ஏழு முனிவர்களும் யாகஞ் செய்தனர். அந்த யாகத்துக்குச் சென்றிருந்த ஆக்னி பகவான் ஏழு முனிவர்களின் மனைவிமார்களைக் கண்டுமையல் கொண்டான். ஆக்னியின் மனைவியாகிய சுவாகாதேவி என்பாள் அருந்ததி நீங்கிய ஆறு பெண்களின் வடிவங்களை எடுத்துத் தன்னுடைய கணவனின் இச்சையை நிறைவேற்றி வைத்தாள். பிறர் மனைவியர்மீது மையல்கொண்ட ஒருவன் கடவுளாக இருப்பதற்கு அருகதையற்றவன் என்ற காரணத்தால் ஆக்னியைக் கடவுட் பதவியினின்றும் நீக்கியிருக்கலாம்.
4. ஆக்னி பகவான், ஆவுவரவ மாமுனிவரின் மனைவிமீது காதல் கொண்டு, அவளுடைய தொடையில் பலகாலம் மறைந்திருந்தான். வேதகாலத்து விற்பன்னர்கள் தங்களுடைய வழிபடு கடவுளாகிய ஆக்னி பகவான் பலகாந்த தேடியும் அகப்படாமல் போகவே, அவருடைய இடத்துக்கு வேறொருவரைக் கடவுளாக நியமித்திருக்கலாம்.

5. இராம-இராவணப் போர் நிகழ்ந்தபோது இந்த ஆக்னி பகவான் - குரங்கு வடிவமெடுத்து நீலன் என்ற பெயரோடு இராமருக்கு உதவி செயதான். ஆக்னி பகவான், தன்னுடைய கடவுள் வேலையை விட்டுவிட்டு, இராமர் படையில் போய்ச்சேர்ந்த காரணத்தால் அவர் கடவுட் பதவியினின்றும் நீக்கப் பட்டிருக்கலாம்.

6. ஒரு சமயம், இந்த ஆக்னி பகவான் சுதரிசனை என்ற பெண் மீது காதல் கொண்டான். ஆனால், அவளுடைய தந்தையான சுயோதனராசன் தன்னுடைய பெண்ணை ஆக்னிக்கு கொடுக்க விரும்பவில்லை. இதனை அறிந்த ஆக்னி பகவான் பூலோகத்தில் யாகாதி காரியங்கள் நடைபெறாமல் தடைசெய்து விட்டார். பின்னர் சுயோதனராசன் தன்னுடைய புதல்வி சுதரிசனை என்பவளை ஆக்னிக்கு மணம் முடித்து வைத்தான். ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும்போது, இன்னொரு பெண்ணையும் மணந்து கொண்டதால், கண்ட கண்ட பெண்கள் மீதெல்லாம் காதல் கொள்ளும் ஒருவரைக் கடவுளாக வைத்திருந்தால் பெருந்தெல்லையாக வந்து முடியுமே என்றஞ்சி அவரைக் கடவுட் பட்டியலிலிருந்து விலக்கி இருக்கலாம்.

7. சிவனுடைய புதல்வர்களில் ஒருவரான முருகக்கடவுளின் தேருக்கு ஒரு கோழிக் கொடி தேவைப்பட்டது.அந்தச் சமயம் இந்த ஆக்னி பகவான் அத்தேரின் கோழிக் கொடியாக மாறிச் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பணிபுரிந்தான். எல்லாம் வல்ல கடவுள் கேவலம் ஒரு தேரில் பறக்கும் கொடியாக மாறிவிட்டாரே என்ற வெட்கமும் துக்கமும் வேத காலத்தவருக்கு ஏற்பட்டு, அவரைக் கடவுட் பதவியினின்றும் இறக்கியிருக்கலாம்.

8. சந்தனு என்ற அரசன் காலத்தில் விசுவாமித்திரர் ஒரு வேள்வி செய்தார். அந்த வேள்விக்கு ஆக்னி பகவானும் போயிருந்தார். விசுவாமித்திர் அவருக்கு யாது காணரத்தாலோ, நாய் இறைச்சியை உண்ணும்படி கொடுத்தார். அந்தக் கோபத்தால் ஆக்னி ஒரு மூங்கிலில் ஒளிந்து கொண்டார். அவர் மூங்கிளில் ஒளிந்து கொண்டிருப்பதை ஒரு யானை தேவர்களிடம் சொல்லிற்று. தான் இருக்கு; இடத்தைச் சொன்ன காரணத்துக்காக யானைக்குக் கொம்புகள் இல்லாமல் போகக் கடவது என்று சாபமிட்டு, ஆக்னிபகவான் ஒரு அரசமரத்தில் போய் ஒளிந்து கொண்டார். அதனை அந்த அரச மரத்தில் இருந்த ஒரு கிளி தேவர்களிடம் சொல்லிற்று. தன்னுடைய இரப்பிடததைக்களி அறிவித்துவிட்டதே என்று சினங் கொண்ட அகன்பகவான், அதற்கு பேசும் ஆற்றல் இல்லாமல் போகக்கடவது என்று சாபமிட்டார். இவ்வாறு சாபமிடு வதையே தொழிலாகக் கொண்ட ஒருவரைக் கடவுளாக வைத்துக் கொண்டிருந்தால், ஆபத்து மேலும் மேலும் வளரும் என்று அஞ்சி அவரைக் கடவுட் பதவியினின்றும் நீக்கியிருக்கலாம்.
9. ஒரு சமயம், பரமசிவனும் பார்வதியம்மனும் தனியிடத்தில் சிற்றின்ப நுகர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த ஆக்னிபகவான் ஒரு புறாவின் வடிவெடுத்து அங்கு சென்றார். அதையறிந்த பார்வதி ஆம்மையார், ஆக்னி பகவானை நோக்கி, “நீ எங்களடைய சிற்றின்ப நுகர்ச்சிக்கு இடையூறு செய்தபடியால், இந்தப் புறா வடிவத்துடனேயே இருந்து கல்லைத் தின்று, சகோரம் என்ற மலையைப் புணரக் கடவாய்” என்று சாபமிட்டாள். கடவுளாக இருந்த ஆக்னிபகவான் செல்லத்தகாத இடத்துக்குச் சென்றதுமன்றி, புறாவின் வடிவில் இருந்து கல்லைத் தின்று, மலையைப் புணரும் சாபத்தைப் பெற்ற காரணத்தால் கடவுள் வேலை பறிபோயிருக்கலாம்.

10. பிரம்மாவின் மானச புதல்வர்களில் ஒருவரான பிறகு முனிவரின் மனைவி புலோமசை என்பாள் கர்பமாயிருந்தாள். பிறகு முனிவர், தம்முடைய மனைவியின் கர்பத்தை முன்னிட்டு ஒரு வேள்வி செய்ய எண்ணி ஆக்னியை உண்டாக்கிவிட்டு நராடச் சென்று விட்டார். புலோமசை தனித்திருப்பதை அறிந்த புலோமன் என்னும் ஒரு ஆரக்கன் அங்கு சென்று புலோமசையைத் தூக்கிக் கொண்டு போகலாயினான். புலோமசையின் ஆபயக்குரலைக் கேடடுக் கொண்டு அவளுடைய கர்ப்பத்தில் இருந்த சியவனன் என்ற அவளுடைய கர்ப்பத்தில் இருந்த சியவனன் என்ற அவளுடைய புதல்வன் வெளியே வந்து அந்த ஆரக்கனைச் சாம்பலாக எரித்து விட்டான். இதனை யோகவல்லமையால் அறிந்த பிருகுமா முனிவர் உடனே அங்கு தோன்றி, ஆக்னி பகவானை நோக்கி, “நீ எனது மனைவியை இந்த ஆரக்கன் தூக்கிக்கொண்டு போவதைக் கண்டும் தடை செய்யாமல் இருந்ததால், மலத்தைத் தின்னக் கடவது” என்று சாபமிட்டார். மலத்தைத் தின்னும் ஒருவரை மகேசுவரான வைத்திருப்பது மானக்கேடு என்று கருதி ஒதுக்கி இருக்கலாம்.
11. ஆக்னிபகவானுக்கு மனைவியாக இருந்த சுவாகாதேவி என்பாள் உண்மையாகவே ஆக்னியுடைய மனைவியல்ல. தக்கனுடைய புதல்வியாகிய இவளை இயமன் முதலில் காதல் மணம் செய்திருந்தான். இயமன் இவளை எலுமிச்சம் பழமாக்கி விழுங்கிக் கொள்வதும், வேண்டும்போது வெளிப்படுத்தி அவளுடன் விளையாடு வதுமாக இருந்தான். இப்படியிருக்கையில் ஒருமுறை ஒரு நந்தவனத்தில் இவளுடன் விளையாடி, களைப்பு மிகுதியால் அயர்ந்து நித்திர போய்விட்டான். அந்தச் சமயத்தில் ஆக்னபகவான் அவ்வழிவர, அவரைக் கண்டு, சுவாகாதேவி காதல் கொண்டு அவருடன் கூடி இன்பம் நுகர்ந்து, அவரை ஒரு பழமாக்கி விழுங்கிக் கொண்டாள். நித்திரையிலிருந்து விழித்துக் கொண்ட இயமன் சுவாகாதேவியை எலுமிச்சம் பழமாக்கி விழுங்கிக் கொண்டான். இந்தச் சமயத்தில் அகில உலகிலும் ஆக்னி பகவான் இல்லாமற்போகவே, தேவர்கள் திருமாலிடம் முறையிட்டார்கள். திருமால் தம்முடைய திருவருள் மகத்துவத்தால் ஆக்னிபகவான் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டார். அதாவது இமயனுடைய மனைவியான சுவாகாதேவி என்பாள் ஆக்னி பகவானை ஒரு பழமாக்கித் தன்னுடைய வயிற்றுக்குள் வைத்திருப் பதையும், சுவாகாதேவியை இயமன் ஒரு எலுமிச்சம் பழமாக்கித் தன்னுயைட வயிற்றுக்குள் வைத்திருப்பதையும் திருமால் தெரிந்து கொண்டார். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால், இயமன் தன்னுடைய காதலியான சுவாகாதேவியை ஒரு எலுமிச்சம் பழமாக்குகிறான். எலுமிச்சம் பழமாய் மாறியிருக்கும் சுவாகாதேவி தன்னுடைய ஆசைநாயகனான ஆக்னி பகவானை ஒரு பழமாக்கித் தன்னுடைய வயிற்றுக்குள் வைத்துக் கொள்கிறாள். பின்னர் இயமன், ஆக்னி பகவானைப் பழமாக்கித் தன்னுடைய வயிற்றுக்குள் மறைத்து வைத்திருக்கும் சுவாகாதேவியை எலுமிச்சம் பழமாக்கி விழுங்கிக் கொள்கிறான். அதாவது இயமனால் எலுமிச்சம் பழமாக்கி விழுங்கப்பட்ட சுவாகாதேவியின் வயிற்றுக்குள் ஆக்னி பகவான் ஒரு பழமாக வீற்றிருக்கிறார். இன்னும் விளக்கம் வேண்டுமா? சுவாகாதேவி என்ற எலுமிச்சம் பழத்திற்குள் ஆக்னிபகவான் என்ற இன்னொரு பழமும் இருக்கிறது. இயமன், சுவாகாதேவியை எலுமிச்சம் பழமாக்கும்போது, சுவாகாவால் பழமாக்கப்பட்ட ஆக்னி பகவானும் அந்த எலுமிச்சம் பழத்துக்கள் அடங்கி இயமனுடைய வயிற்றுக்குள் போய் விடுகிறார். இப்போது இயமனுடைய வயிற்றுகள் சுவாகாதேவியும் (எலுமிச்சம் பழமும்) அவளுடைய வயிற்றுக்குள் (எலுமிச்சம் பழத்துக்குள்) ஆக்னி பகவானும் (இன்னொரு பழமும்) இருக்கின்றனர். இயமனுடைய வயிற்றுக்குள் இருக்கும் சுவாகாதேவியும் ஆக்னி பகவானும் தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்குச் சரயிôன இடம் (இயமனுடைய வயிறு) கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு காதல் விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சமயத்தில்தான் உலகளந்த பெருமாளாகிய திருமால் ஆக்னி பகவான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார். உடனே இயமனிடம் சென்று, அவனுடைய வயிற்றுகள் இருக்கும் எலுமிச்சம் பழத்தை வெளிப்படுத்தி, அதனைச் சுவாகா தேவியாகும்படி அருள்பாலித்து, அவளுடைய வயிற்றுகள் இருக்கும் பழத்தை வெளிப்படுத்தி, அதனை ஆக்னிபக வானாகும்படி கிருபாகடாட்சம் புரிந்து, பின்னர் சிரஞ்சீவி ஆக்னிபகவானுக்கும் - சௌபாக்கியவதி சுவாகாதேவிக்கும் நல்ல சுபயோக சுபதினத்தில் பாணிக்கிரஹணம் நடைபெறுகிறது.

வேதகால முதற்கடவுளாகிய ஆக்னிபகவானுடைய திருவிளையாடல்களா இவை என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இவை ஏலலாம் வேதகாலமாகிய மிகமிகப் பழைய காலத்தில் பகாவன் ஆரளைப்பெற்ற தவசிரேஷ்டர்களான புனிங்கவர்களால் திருவாய் மலர்ந்தருளி எழுதப்பட்ட புண்ணிய நூல்களான தேவிபாகவதம், பிரம்ம கைவரத்தம், சிவமகாபுராணம் வேதப்பொருள் விளக்கம், பராசஸ்மிருதி, பாரதம், இராமாயணம், சிவரகசியம், பாடலவன்புராணம், கந்தபுராணம், காஞ்சிபுôணம், காசிகாண்டம் முதலிய வேதாகம இதிகாச புராணங்களில் காணப்படும் உண்மைகாளகும். நாம் மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றுகூட நாமாக இட்டுக்கட்டிக் கூறுபவை அல்ல. எல்லாம் வேதவேதாந்தங்களின் உட்பொரளை உணர்ந்த உத்தமர்களால் உரைக்கப்பட்ட அருள்வாக்கு களாகும்.

எனவே, இப்போதில்லாததும், வேதகாலத்தில் இருந்தமான ஒரு கடவுளைப்பற்றி இப்போது ஆராயவேண்டிய இன்றியாமையாமை ஏன் என்று சிலர் கேட்கலாம். வேதகாலத்துக் கடவுள்களான ஆக்னி பகவானுக்கு இப்போது தனியாகக் கோயிலும் திருவிழாக்களும் இல்லையென்றபோதிலும், இந்த ஆக்னி பகவானை வழிபடும் வழக்கம் இன்றும் நாம் நாட்டில் இருக்கிறது. ஆக்னிபகவானை முன்னிலையில் வைத்துத்தானே நமது வைதிக அன்பர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை நடத்துகிறார்கள். வைதிக முறைப்படி செய்யப்படும் நல்ல-கெட்ட காரியங்களிலெல்லாம் இந்த ஆக்னிபகவான்தான் முதலிடம் பெறுகிறார்.

ஆக்னி முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் ஒரு இணும் பெண்ணும், பலபேரைப் புணர்ந்தவனும், அங்ஙனம் புணர்வதற்குத் தன் மனைவியை உதவிசெய்யும்படி கேட்டவனும், பிறர் மனைவிமீது இச்சைகொண்டு அவள் தொடையில் ஒளிந்திருந்தவனும், குரங்கு வடிவாக மாறினவனும், நாய் இறைச்சியைத் தின்றவனும், மலத்தைப் புசித்தவனும், சிற்றின்ப நுகர்ச்சியில் ஈடுபட்டிருந்த சிவனுடைய அந்தப்புரத்துக்குப் புறா வடிவெடுத்து சென்று பார்த்தவனும், இன்னும் இவைபோன்ற பல ஆபாகச்களஞ்சியங்களுக்கு இருப்பிடமானவனுமான இவன் நம்முடைய திருமணத்தில் வந்து ஏன் முன்னிற்க வேண்டும் என்பதை இனியாவது யோசித்துப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இதனை இப்போது எழுதுகிறோம்.

இனி, நம் நாட்டில் நடைபெறும் வைதிகத் திருமணங்களில் அருந்ததியைப் பார்ப்பது என்ற ஒரு வழக்கமும் இருக்கிறதல்லவா! இந்த ஏற்பாடு யாரால் முதலில் செய்யப்பட்டதென்பது பலருக்குத் தெரியா. ஏதோ ஆக்னி முன்னிலையில் அருந்ததி சாட்சியாகத் திருமணம் நடைபெற்றது என்ற ஆளவோடுதான் முடிந்து விடுகிறது. திருமண காலத்தில் அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்? இந்த ஏற்பாடு எப்படி உண்டாயிற்று? என்ப போன்ற விளக்கங்களை அறியவும், அப்படிப் பார்ப்பதனால் உண்டாகும் நன்மை என்ன என்பதையும் உணரவும் இவர்கள் விரும்புவதில்லை.
சப்தரிஷிகளன் மனைவிமார்களைச் சேர்ந்து இன்புற வேண்டுமென்று கரைகடந்த காம இச்சைகொண்ட அன்னிபகவான் தன்னுடைய மனைவியான சுவாகாதேவியின் உதவியால், அருந்ததியொழிந்த மற்ற ஆறுபெண்களின் வடிவங்களையும் பெற்று இன்பம் நுகர்ந்தான். அருந்ததியின் வடிவத்தைச் சுவாகாதேவியால் எடுக்க முடியாதது போகவே, சுவாகாதேவி அருந்ததியிடம் சென்று என்னுடைய கணவரின் இச்சையை நிறைவேற்றி வைக்க முயன்ற என்னால் உன்னுடைய வடிவத்தைக் கொள்ளமுடியவில்லை. நீ மிகப் பெரியவள் - கற்புக்கரசி. எனவே உலகத்திலே நடைபெறும் திருமணகாலங்களில், எந்தப் பெண், ஆக்னி பிரமாண பந்து மித்ர சந்நிதியில் உன்னை நினைத்துப் தரிசிப்பாளோ, அவள் சுகம், தனம், புத்திரப் பேறுடையவளாகி உன்னைப் போலக் கீர்த்தியடைந்து புண்ணியலோகத்தை அடையக்கடவது” என்று வரமளித்தாள். என்பதாகச் சிவமகா புராணம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. இதனை இதாரமாக வைத்துத்தான் இப்போது நடைபெறும் வைதிகத் திருமணங்களில் அருந்ததியைப் பார்க்கிறார்கள்.

ஆனால், இந்த அருந்ததியைப் பார்க்கும் ஏற்பாட்டை உண்டாக்கிய சுவாகாதேவி யார்? எப்படிப்பட்டவள்? என்பது பலருக்குத் தெரியாது. எனவேதான் இந்தச் சுவாகாதேவி முதலல் இயமனுக்கு மனைவியாய் இருந்தவள் என்றும், இயமன் இவளை ஒரு எலுமிச்சம்பழமாக்கித் தன்னுடைய வயிற்றுகள் வைத்திருந்தான் என்றும், பின்னர் இவள் ஆக்னியைக் கண்டு காதல் கொண்டு அவனை ஒரு பழமாக்கித் தன்னுடைய வயிறுக்குள் வைத்திருந்த புண்ணயவதி என்றும விளக்கி உண்மையை உலக மக்களுக்கு உணர்த்தவுமே இதனை இப்போது எழுதுகின்றோம்.

ஆதோடு, தினசரி மடல் குறிப்பிடுவபோல், வேத காலத்துக் கடவுளான ஆக்னிபகவான் இப்போது ஏதோ ஒரு சிறு தேவதையாக மாறி எங்கோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டிருப்பது போலவே, இக்காலத்தில் முக்கியமான கடவுளராக நம்மால் வழிபடப்படும் கடவுளரும் இனி வருங்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடக்கூடும் என்றும், அதற்காகப் பெரும் பெருங் கோயில்களும், மடங்களும் அங்கெல்லாம் குவித்து வைக்கப்பட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான பொருள்களும் வேறு நல்ல வகையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறுகின்றோம்.

இப்போது சென்னை சர்க்கரால் கொண்டு வரப்பட்டிக்கும் இந்துமத பரிபாலனத் திருத்த மசோதா இந்த வகையில் திருத்தியமைக்கப்பட வேண்டுமென்றும் விரும்புகிறோம்.

இயமன் சுவாகா தேவியை எலுமிச்சம் பழமாக மாற்றி மறைத்து வைத்திருப்பதைப்போல இன்றைய மடாதிபதிகள் நடந்து கொள்வதற்குக் கோயில்களிலும் மடங்களிலும் முடங்கிக் கிடக்கும் பணம் பாழாகக் கூடாதென்று கூறுகின்றோம்.

எனவே, தினசரி மடல் குறிப்பிடுவதுபோல், வேதகாலத்துக் கடவுளான ஆக்னிபகவான் இப்போது இங்கிலாந்திலுள்ள கண்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருப்பது போலவே, இன்றுள்ள நமது பற்பல கடவுளாரும் இன வருங்காலத்தில், பல்வேறு நாடுகளிலுள்ள கண்காட்சிச் சாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய அருவருவ்பான ஆனால் ஆச்சரியப்படக்கூடிய வடிவங்களாக அமைந்திருப்பதால், அவைகளுக் காகப் பொதுப் பணத்தைப் பாழக்கக் கூடாதென்றும், அறிவை முன்னிலைப்பபடுத்தி வழிபடக் கூடிய ஒரு பொதுக்கடவுளை - வடிவம் எதுவும் கற்பியாமல் - அதற்காகப் பணச்செலவு எதுவும் ஏற்படாமல் உள்ள ஒரு கடவுளை எவரும் எப்போதும் வழிபடலாம் என்றும் கூறுகிறோம்.

(திராவிட நாடு - 6.3.49)