அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வர்ணாஸ்ரமம் ஒழிக!

பாகனே! தேரை விரைவாகச் செலுத்து.

நற்றியம் வாய்ந்த பாகனே! தேர் விரைந்து செல்வதாக! விரைந்து செல்லவேண்டும், அங்குதான்! அறியாயோ நீ? கேள்!

பைங்கிளியே! மழலை பல பேசவல்லாய் எனினும், நான் க்ட்டுக் களித்திட ஒரே ஒரு சொல்கூறு, வேறு வேண்டிலேன். அவர் இன்று வருவார் என்றுரை. நம்மைப் பரிந்து சென்றவர், இன்று வருவார் எனும் இன்சொல்லை, கினியே, நீ கூறு என்று, தன் முன்கையில் அமர்ந்துள்ள தத்தையினைக் கேட்கும், என் கிளிமொழியாளின் இல்லத்திற்குச் சென்றாகவேண்டும், விரைவாக! நொந்த மனதுடன் வெண்மதிநுதல் சுருங்க, கிள்ளையுடன் பேசும் சொல்லினை வீட்டார் கேட்டிடுவரோ, என்று பயந்து, நாணி உரையாடுவாள், அந்நங்கை, தன் அங்கையில் கிளிஏந்தி! அவள் துயர்துடைக்க, நாணம் நீக்க நான் செல்ல வேண்டும், நற்றியம் படைத்த பாகனே! செலுத்துக தேரினை விரைந்து!! சிவந்த மாலையையணிந்தது போன்ற கழுத்தினை யிடைய, அந்தப் பச்சைக்கிளி, பலப்பல பேசவல்லதுதான். எனினும் ஒரே ஒரு சொல் நீ உரைப்பாய்; இன்றுவரல் உரைமோ என்று மட்டுமே கேட்கிறாள், என் மனதைக் கோயில் கொண்டாள்! என் செய்வாள் ஏந்திழை இல்லத்துள்ளோர் அறிந்திடுவரோ, என்ற அச்சம்; அஞ்சுகத்திடம் அதிகம் பேச நேரமில்லை. நினைப்போ என்மாட்டுள்ளது. அந்த நேரிழையாளின் மனைசெல்ல, விரைவாகத் தேரை நீ செலுதது! உனக்கத்தான் திறமை உண்டே! பாகா! செலுதது! அந்த மனையின்கண்ணே, அகமகிழ்வுடன் அன்னங்கள் விளையாடுகின்றன; பெடையும் ஆணும், பெருமிதத்தோடு ஆடுகின்றன. தூய்மையான சிறகு, அந்த அன்னங்கட்கு. வெண்மை, அழகான வெண்மைநிறச் சிறகுகள். பெரிய தோள்களையும் மெல்லிய விரல்களையும் உடைய, ஆடை ஒலிப்பவள், நீரித்துறையிலே, ஆடையிலே தோய்த்துள்ள கஞ்சிப்பசையினை அலசிவிடுவது கண்டுள்ளாயன்றோ! அதுபோன்ற நிறம் அண்ணங்களின் சிறகுக்கு!! அவை ஆணொடு பெண் அளவளாவி, அகமகிழ்கின்றன! காதல் இன்பத்தை அவை நுகரக்கண்டு, என் அன்னம் பச்சைக்கிளியுடன் பேசுகிறாள், பாகனே! செலுத்துக தேரை விரையில்! என் நெஞ்சமோ நோகிறது! காதலின் மேம்பாட்டை, காதலின் பெருங்கணத்தை நான் கண்டேன் ஈண்டு. என் இச்சைக்கிளியாளைப் பச்சைக் கிளியுடன் பேசி ஏங்கிடவிட்டுப் பாவியேன், பரதவித்தேன். தெளிந்தநீர் தபவிச் செல்லும் மணற்கரையிலே, பெண்மான் படுத்துறங்கக், கனிவுடன் காவல்புரியும் ஆண்மானைக் கண்டேன், அதன் பெருந்தன்மையினைக் கண்டு எனது நெஞ்சம் தளர்ந்துளது. அருகு அருந்தச் செய்து, அருவியோரத்தில் அழகுறத் தூங்கச் செய்து, ஆண்மான், துயிலும் தன் பெண்மானுக்குத் துணைநிற்பது கண்டேன், துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது. என் துடியிடையானை நான் தனியே தவிக்க விட்டேன். அவன் தத்தையைக் கேட்கிறான், இன்று அவர் வருவாரோ, கூறு என்று. அந்த மனைக்க விரைந்து சென்று, அவள் துயர் தீர்த்துத் தளர்ந்த என் நெஞ்சும் இன்பம் பெறச் செய்ய வேண்டும், வேகமாகத் தேர் தெலுத்தும் திறமையுடைய பாகனே! தேரை, விரைந்து செலுத்து!!

வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குகரைத்தது, நான் மேலே தீட்டியிருப்பது. மதுரை மருதன் இளநாகனால் எனும் புலவர் பெருமானின் மணிமொழியினை, கொழித்தெடுத்துக் கோத்தேன், சிறு சொல்லாரம்.

தலைவியைப் பிரிந்து, தலைவன் சென்றான். தத்தளித்தாள் தளிர்மேனியாள். தத்தையிடம் பேசித்தவித்துக்கிடந்தாள். சென்விடம் சிற்ப்புபெற்று, தேரிலே மீள்கிறான் தலைவன். மானினத்தினிடம் காதல் பாடம் காண்கிறான், மங்கை நல்லாளை எண்ணி ஏங்குகிறான், அவள் மனையிலேயும், அன்னங்கள் காதற் களியாட்டத்திலே ஈடுபட்டு உலவுமே என்பதை எண்ணினான், நாணமுடைய நங்கை, நெஞ்சிலேயுள்ளதை வீட்டார் அறியக் கூடாதே என்றெண்ணி அஞ்சிப், பிரிந்துபோன தலைவன், வருவார்! இன்று வருவார்!! என்ற இன்சொல்லை எவரோனும் பேசிடக் கேட்டால் புண்ணாறும் என்று கருதிப் பேசிட ஓர் பைங்கிளியை எடுத்துத் தன் அங்கையில் ஏந்தி, பலபேசிச் சலசலப்புண்டாக்கி மனையுளோருக்குத் தன்னைக் கிளிகாட்டிக் கொடுத்துவிடுமோ என்று அஞ்சி, கிளியே! அவர் இன்று வருவார் என்ற சொல்மட்டுமே உரைத்திடு, என்று கேட்பாள், எனத் தலைவன் எண்ணி, வேகமாகத் தேரைச் செலுத்து! என்று தேர்ப்பாகனுக்குக் கூறுகிறான். அவனை ஊக்குவிக்கக் கருதிப் போலும், நற்றிறம் படைத்த பாகனே! என்றம் அவனைப் புகழ்கிறான். காதல் பாயைக் கவி இளநாகனால் கன்னித்தமிழிலே, கவிதையாக்கிக் கூறியுள்ளார், அகநானூறு எனும் அருந்தமிழ் நூலிலே!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, பட்டமளிப்பு விழாவிலே, அண்ணல் சர்.சண்முகம் ஆற்றிய, அழகிய, அரிய, சொற்பொழிவினைப் படித்ததும் எனக்க இந்தச் செந்தமிழ்ச் செய்யுள் நினைவிலே நர்த்தனமாடிற்று.

பரதா! சர்.சண்முகத்தின் விரவுரை படித்த உனக்கு விரதாபச் செய்யுள் நினைவிற்கு வருவானேன்! தமிழ்க்கலையின் உயர்வுபற்றி, சேரநாட்டாட்சியினைச் சில ஆண்டுகள் நடாத்திய சண்முகம் செப்பினாரே, இதுபற்றி, ஏடு விரித்து எடுத்தாயோ இன்சுவையை, என்ற க்ட்பீர்கள். இல்லை தோழரகளே! கன்னித் தமிழின் கருவூலத்தைத் தேடியல்ல, நான் அக்கவிதையைக் கண்டது. என் நெஞ்சத்திரை முன்னே, இரு காட்சிகள் ஒரே சமயத்திலே நின்றன. ஒன்று சர்.சண்முகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே, அறிவாளிகள் சுவைக்க, மாணவர் மகிழக் கெம்பீரமாக நின்று, சொற்பெருக்காற்றிய காட்சி; மற்றொன்று, தேரிலே தலைவன் அவன் உரை கேட்கும் பாகன், வரவு நோக்கி வாடிடும் தலைவி, எனும் காட்சி இரண்டும் நின்றன!

தேறியோருக்குத் தேளிவுரையாற்றம், சர்.சண்முகத்தையும், தேரிலே அமர்ந்து பாகனை விரைந்து செலுத்தச் சொன்ன தலைவனையும், ஒருங்கே கண்டது ஏன், கன்வீர். கண்டேன், இதோ உம்மிடம் விண்டிடுவேன், காரணம் சரியா, என்பதனை முடிவு செய்யும் கடமை, எனதன்ற, உமதே!

சர்.சண்முகம், தென்னாட்டுத் தாகூர், இந்தியாவின் கிளாஸ்டன், என்று புகழ இழிமனமற்ற எவரும் தயங்கார்! அவருடைய அரசியல் அறிவும், தரணியறிந்த தன்மையும், தளராத்திறனும், நிர்வாக நேர்மையும், எவருமறிவர்! திராவிடமணி - மாசு இல்லை! தமிழகத்தின் நிலவு - வளர் பிறை! உன்னதமான ஊற்று, அவருடைய ஆற்றல்! ஆம்! சர். சண்முகம், ஏடெடுப்போரின் மொழி மாலையைச் சூடிட வேண்டிய பருவத்தைக் கடந்துவிட்ட காவலர், கொங்குபுகழ் கோமான் மட்டுமல்ல, மங்காப்புகழைத் தமிழ் மாநிலமும், அதை அடுத்த தரணிபலவும் பரப்பி அரசவையிலும், அறிஞர் சபையிலும், களத்திலும் கொலுமண்டபத்திலும், எங்கும் புகழ் பெற்று விளங்கும் ஆற்றலரசர். ஆயினும், அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று கூறேன்! ஏன் கூறல் வேண்டும்? இவர், எந்நாட்டுவிரர், தமிழகத்தின் தளபதி. தாகூருக்க வங்கத்திலே, பங்கம் விளைவிக்கக் கொடுங்கையில் வஞ்சனை வாளேந்தினோர் எவருமில்லை! தாகூரின் நாதநடையினைக் கண்டதும், சங்கை கொண்டோர், வங்கத்திலே இல்லை! அவர்மொழி, வங்க மக்கள் எவரின் விழியிலும் களிப்புத் தளி எழச் செய்ததேயன்றி, காய்ச்சலும் குளறலும், எழுச் செய்யவில்லை. வங்கம், தாகூரை, உச்சிமோந்து முத்தமிட்டு, வாரி அணைத்து வாஞ்சனையுடன் கொஞ்சிற்று. இங்கோ! எவ்வளவு எதிர்ப்பு, எத்துணை வஞ்சனை, எவ்விதமான சதிகள்! பழி எத்தனை, பதைப்பு எவ்வளவு! சிங்கமே முழக்கமிட்ட சண்முகத்தைச் சீறிக் கடிக்கச் சென்ற செந்நாய்க் கூட்டமும், பாய்ந்து பிடுங்கச் சென்ற ஓநாய்களம், நகைமுகங்காட்டி பகைச் செயல்புரிந்த நரிக்கூட்டமும், கொஞ்சமா? வங்கம், தாடுகூரை உயர்த்திடக் கண்டோம். தமிழகத்திலோ, சர்.சண்முகத்தைச் சாணக்கியர்களும் குடிலர்களும் சாய்த்திட ஜல்லடம் கட்டியதையும், சரங்கள் பல தொடுத்ததையும் கண்டோம். வங்கத்தின் அணைப்பிலே, கவிதாகூர் வளர்த்தார்! தமிழகத்திலே தருக்கரின் எதிர்ப்பிலே, தழைத்தது கொங்கு நாட்டு வேங்கை! தாகூர், மாகமருவற்ற வானத்திலே உலவிய முழுமதி, சர் சண்முகம். முகிலைக் கிழித்தெறிந்த முழுமதி! இத்தமிழரைக் கவியுடன் ஒப்பிட நான் ஒப்பேன்!

கண்டனங்கள் எழுதி அலுத்த கரங்களும், கேலிப்படங்கள் வரைந்து அலுத்த பேனா முனைகளம், சபித்துச் சலித்துப்போன திருவாய்களும், கனல் கக்கிக் கருகிப்போன விழிகளும், சுருக்குக் கயிறு வீசிச் சோர்ந்துபோன வலைவீசிகளும், படுகறி வெட்டி ஆயாசமடைந்த அரசியல் வெட்டியான்களும் இன்று, சர்.சண்முகம் அறிஞர் உலகிலே அரசோச்சக்கண்டு, அயர்கின்றனர். ஒருகாலத்திலே! ஏ! அப்பா! எவ்வளவு கேலி கிண்டல், என்னென்ன வசைவுகள்! இவ்வளவுக்குமிடையே பூத்த மலர், அதனை, வளமிகுந்த வங்கத்திலே வாஞ்சனை எனும்நீர் பெய்து வளர்த்த, தாகூரெனும் மலருடன், ஏன் ஒப்பிட வேண்டும். சர். சண்முகம், தமிழர், பண்டைத் தமிழரை, தமிழ் வீரரை, நினைவூட்டும் தமிழர். வேறு, உவமைகள் ஏன்?
அவர் அன்று ஆற்றிய அறஉரை, அகநானூறு அருங்கவியை, எனக்கு நினைப்பூட்டுவானேன், என்று மீண்டும் கேட்பீர். நான் கூறுமுன்னர், நீவிர் சற்ற, எண்ணி பாருமின்.

இந்தத் திங்கள், பல்வேறு இடங்களிலே பட்டமளிப்பு விழாக் சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன. டாக்டர் ஜெயகர், பேராசிரியர் ஜா, பண்டிட் குன்குரு முதலிய அறிஞர் பலர், வடநாட்டிலே, பட்டமளிப்பு விழாக் சொற்பெருக்காற்றினார்கள். படிப்பிலும் பாராளுந் திறனாலும், மேலானவர்களான இம்மேதாவிகள், தேசீய சர்க்காரின் அவசியத்தைப் பற்றியே பெரிதும் வலியுறுத்திப் பேசினர். தேசியம், ஏன் இங்கு சரியான முறையிலே கமழவில்லை என்ற ஆராய்ச்சியிலேயோ அவர்கள் புவில்லை. ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பது எளிது, கண்டிக்க வேண்டிய அளவு கசப்பு வளர்ந்து விட்டதை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் கண்டனத்தோடு நிற்றுவிடாமல், நோய்போக எம் மருந்து உட்கொள்வதென்றரைக்கும் நேர்மையும் நெஞ்சழுத்தமும், அந்தப் படிப்பாளிக்ட்கு இல்லையோ என்ற அஞ்ச வேண்டியிருக்கிறது. சர்.சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைச் சாடினார். சர்ச்சிலுக்குச் சூடெழ, அமெரிக்கு அழுகை கிளம்பக்கூடிய விதத்திலே! தன்மானம் உண்டு எனக்க! எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் புகழ்பாட முடியாது. எந்த ஆப்பிரிக்க மண்ணிலே என் இனத்தவரின் இரத்தம், போரிலே சிந்தப்படுகிறதோ, அதே ஆப்பிரிக்காவிலேயே அவர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டும, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு வாலிபாட மனம் வருமோ! மனம் முறிந்துவிட்டது அன்பர்களே! என்று சர்.சண்முகம் கூறியிருப்பது கேட்டு, அறிவும் தன்மானமும் உள்ள எவர்தான், சபாஷ்! என்று கூறார். ஆனால்இந்தப் பகுதி எனக்குப் புளகாங்கிதமூட்வில்லை. ஏனெனில், கண்ணியத்துடனம் காரணத்துடனும், கெம்பீரமாகச் சர்.சண்முகம், பிரிட்டிஜ் ஏகாதிபத்தியத்தின் போக்கைக் கண்டித்தார். ஆனால், இதனினும் கடுமையாகவும், நரகல்நடையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போக்கைக் கண்டிக்கத் தேசீயத் திருக்கூடத்திலே பலருண்டு. பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைச் சின்னாவின்னமாக்குவேன் என்று சினந்து ஆள் உரைத்தோரையும், அதன் பிடரியைப் பிடித்துக் குலுக்குவேன் என்று முழக்கமிட்டோரையும் நாடு கண்டிருக்கிறது. என்குத் தெரிய, ஒரு தேசியப் பிரசங்கியார் (இன்று அவர் இந்து மகாசபை வீரராக வேடமெடுத்துள்ளார்) ஒரு முறை பிரிட்டனைக் கட்ணடித்துப பேசுகையிலே கூறினார். மகா ஜனங்களே! பிரிட்டனிலே என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்? வெறும் கண்ணாம்பும், நிலக்கரியும்! நிலக்கரிக்காக்ச் சுரங்கங்கள் தோண்டித் தோண்டி, பிரிட்டன் பாழாகிவிட்டது. முப்பதுகோடி இந்தியரும் (அன்றைய ஜனத்தொகை 30 கோடி) சேர்ந்து மூச்சுவிட்டால், பிரிட்டன், ஆடிக்காற்றிலே சிக்கிய இலவம்பஞ்செனப் பறந்துபோகும் இந்த உரை கேட்ட வீரர் குழாம் கைதட்டி ஆரவாரித்ததும், எனக்குத் தெரியும். ஆகவே, நான், சர்.சண்முகம் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைக் கண்டித்தப் பேசியதை மாபெரும் வீரம் என்று கூறவில்லை. 1920லே அம்மொழி வீரமாக இருந்திருக்கலாம், இன்றோ, அம்மொழி பழங்கஞ்சி! வீட்டுக்குவீடு, கலயத்திலே அது உனது! இந்நாட்டுச் சொற்பொழிவாளரின் அரிச்சுவடியே அதுவாக இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியல்ல எனக்கு ஆனந்தமூட்டியது.

நாட்டு விடுதலை பற்றிப் பேசிடாத தலைவர் இல்லை. ஆனால், அந்த விடுதலை கிட்டாததன் காரணம் என்ன என்று உசாவிடுவோர் வெகுசிலரே. உண்மை தெரிந்த பின், அதனைத் தைரியமாகக் கூறிடுவோர் அதனினம் மிகச்சிலரே, உரைத்ததோடு அமையாமல், உறதியுடன் நின்று பணிபுரிவோர் அதனினம் மிகமிகச் சிலலே. அன்னிய நாட்னரைமிரட்டவோ, மயக்கவோ, இங்கு ஆட்கள் அநாகர். ஆனால், இங்கு விடுதலைக்கு விரோதிகளாக உள்ளவர்ர்களை சற்றே விலகு என்று கூறும் ஆண்மையாளர் மிகக் குறைவு.

சர்.சண்முகத்தின் பேருரையிலே, ஆண்மை ததும்புகிறது. அதனைக் கண்டே நான் களிப்படைகிறேன். நம்மை ஆளும் அயல்நாட்டாரின் வாக்குறுதிகளினாலோ. நல்ல எண்ணத்தினாலோ. நாட்டு விடுதலை கிடைத்துவிடுமா? கிடைத்துவிடாது!!! என்று கூறுகிறார் சர்.சண்முகம். சுதந்திரம் சீமையிலே தயாரிக்கப்படும் சரக்கல்ல, சன்மானமாகப் பெற! அது, நாட்டுமக்களின் நாடி முறுக்கினால் விளையக்கூடிய நிலை. அதனை, இங்கேயேதான் பயிரிட முடியும். ஆனால், அந்த வயலிலே, கள்ளி படர்ந்திருக்கிறது. அதனைக் களையாமுன்னம், பயிர் இல்லை, பண்பு இல்லை, நாட்டு நலிவுபோக்கும் பச்சிலை இல்லை. இதனைச் சர். சண்முகம், அஞ்சாநெஞ்சுடன் அறைவது கேண்மின்.

இந்நாட்டிலே அதிர்ப்தியும் துவேஷமும் அதிகரித்துள்ளது. இது வருந்தத்தக்கது. ஆனால், இதற்குக் காரணம் என்ன? இங்கு ஒரு கூட்டம், தனது நோக்கமும் கலையுமே பிரதானமென்று கூறி, மற்ற மக்கள்முது அவைகளைத் திணித்தது. அதன் பலனாகவே கேடுபல தோன்றின. தேசியத்தின் பெயரால் அக்கூட்டம், மற்றவர்களை அடக்கித் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்த முயற்சிக்கிறது.

இந்தப் பொன்மொழியை ஆராய்ந்து பாருங்கள், இந்த உபகண்டத்தின் வரலாறுகளிலே புதைந்துகிடக்கும் உண்மைகளை உணருங்கள். அந்த ஒரு சிறுகூட்டத்தின் செருக்கு எவ்வளவு! அது அத்த அரசுகள் எத்தனை! அதன் வயப்பட்டு அழிந்த வீரர்கள் எவ்வளவு! இறுமாப்புடன், அக்கூட்டம், தனது தாசராக மற்றவரை மாற்றிய கொடுமையை எண்ணிப்பாருங்கள். அப்போதுதான் அறிஞர் சண்முகத்தின் அறஉரையின் அழுகு புலனாகும். இதோ வெளிப்படையாகவே வீரர் சண்முகம் விளம்புகிறார் கேளுங்கள். இந்தியாவிலே வர்ணாஸ்ரமம் ஏற்பட்டதனால், ஆளும் ஜாதி தனது அதிகாரத்தை நிலைநிறத்திக்கொண்டு ஏகபோக உரிமையாக அந்த அதிகாரத்தை அனுபவித்து வருகிறது. இந்த வகுப்பு, தனது ஏகபோக உரிமையையும் பேராசையையும் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாகக் கைவிடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு துரிதமாக இந்தியாவுக்குச் சுதந்தரமும் ஜனநாயகமும் ஏற்படும்.

விடுதலை வீரர்களே! ஆஸ்ரம அரசியலிலே அர்ச்சகராக உள்ள அருமைத் தோழரகளே! ஆகாத திட்டத்தைச் சுமந்து கொண்டு ஆமை வேகத்திலே செல்லும் அந்தணரின் அடி வருடிகளே! நாட்டை மீட்டிட நானவிதமான முயற்சிகள் செய்தீர், அலுத்தீர், முடக்குவாத நோயால் வாடுகிறீர். இதுகாறும் செய்தபல, வெற்றிதரக் காணோம், வீணருக்கு அரசியலிலே உறைவிடமும், சுயநலமிகளுக்குச் சமுதாயத்திலே புகலிடமும தரவே, உமது தொண்டு பயன்பட்டது. இதோ எமது தலைவர், இயம்பிடும் திட்டத்தைப் பற்றி யோசியுங்கள். விடுதலைப் பாதையை அடைத்துக் கொண்டுள்ள மமதையாளர்களை, மட்டந் தட்ட முன்வாருங்கள், பாருங்கள் பிறகு, பரிதிபோல் விடுதலை தோன்றிடக் காண்பீர். சர்.சண்முகம் ஏகபோக மிராசுபாத்யதை அனுபவிக்கம் வட்டத்திற்கு நன்னெறி புகல்கிறார். பேராசையை ஒழிமின்! எல்லாம் எமக்கே எனும் ஒறுமாப்பை நீக்குமின்! என்று இதோபதேசம் புரிகிறார். காலடியிலே பன்னீர் தெறித்துப பயனென்ன என்பீர். ஆம்! இதோபதேசத்தோடு நின்றுவிடவில்லை. இளங்கோ மன்றத்திலே இருந்திருக்கும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். ஜனநாயக வேகம் இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை ஒழித்துவிடும் என்ற உண்மையை உத்திருக்கிறார். ஆம்! இது சரிதங்கண்ட உண்மை. கிரேக்க நாட்டு ஹெலாட்(Helot)களைப் பலகாலம் அடக்கி வைத்திருந்த ஆண்டைக் கூட்டம் (Masters) அழிந்துபோனது சரிதம்! ரோம்நாட்டு பிளபியன்(Plebian) பெட்ரிஷியன் (Patrician) தகறாரின் முடிவு என்ன! ஆதிக்கம் செலுத்தியக் கூட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. பிரிட்டனிலே காமன்ஸ்(Commons) பிரபுக்கள் (Lords) தகறாரின் முடிவு என்ன, பிரவுக்கள் பெட்டிப் பாம்பு ஆனதுதானே! ஆண்டவனால் ஆளப் பிறப்பிக்கப்பட்டவன் என்று ஆணவமாகப் பேசி (Divine Right of Kings) கடவுட் புதல்வர்கள் என்ற தத்துவத்தைப் பேசிய, முதலாவது சார்லஸ் மன்னனின் முடியும் முடிதரித்த சிரமும், என்ன ஆயிற்று! ரஷிய நாட்டிலே, (பூர்ஷுவா) முதலாளி (புரோலோடேரியன்) தொழிலாளி போர் மூண்டதன் பலன் என்ன? இங்கு மட்டுமூ என்ன? ஆரியத் திராவிடப் போர் மூண்டுவிட்டது. சரிதமுணர்ந்தோரின் உள்ளத்திலே, இதன் முடிவு என்னவாக இருக்கும், என்ற தெரியும்! குடிலர்கள் கெடுவர்!! சழககர் சாய்வர்! இத்தகைய வீர உரையாற்றிய சர்.சண்முகத்தைப் பாராட்டுவதோடு நின்றுவிடக் கூடாது, எந்த ஏகபோகமிராசு ஒழிக்கப்பட வேண்டும் என்று சர்.சண்முகம் கூறினாரோ, எந்த வர்ணாஸ்ரமம் ஒழிய வேண்டும் என்று அவர் கூறினாரோ, அதனை ஒழிக்க மாணவர்கள் முயல வேண்டும், முனையவேண்டும். இல்லையேல அவர் மொழி கேட்டு யாது பயன்!

எல்லாம் சரி, பரதா! நாங்களும் சர். சண்முகத்தின் பேருரை க்டடுப் பூரித்தோம். ஆதிக்கம் செலுத்தும் இனம் பிரமித்தது. ஆனால் அவருடைய சொற்பொழிவுக்கும், உனக்கும் அகநானூற்றுச் செய்யுள் நினைவிற்கு வந்ததற்கம் என்ன சம்பந்தம் என்பது தெரியக் கானோமே என்றே அன்பர்கள் கேட்பர்.

தோழர்களே! சர்.சண்முகம் தமது சொற்பொழிவின் இறுதியிலே, வர்ணாஸ்ரமம் ஒழிய வேண்டும்! ஒரு இன ஆதிக்கம் அழியவேண்டும்! ஏகபோக உரிமை மடியவேண்டும்! பேராசைப் பித்தம் போகவேண்டும்! என்று முழக்கமிட்டாரே, அந்தப் பகுதி, என் செவிக்கு, தேரை விரைவாகச் செலுத்துவாய் பாகனே! என்று தலைவன் கூறும் செய்யுள் போன்றிருந்தது. சர்.சண்முகம், வர்ணாஸ்ரம ஒழிப்புக்காகவே வாழும் கட்சியை விட்டுப்பிரிந்து, வேறுவினையில் ஈடபட்டு, நெடுசாட்கள் பிரிந்திருந்ததார். அவர் பிரிய நேரிட்டதால் திராவிடக் கட்சி தவித்துக் கிடக்கிறது. காலல் மிகுந்த மனையிலே கன்னி நிற்பதுபோல். வினைமுற்றிய தலைவன், விரைந்து சென்று தலைவியின் துயர்தீர்த்தல்போல சர்.சண்முகம், தன் நெஞ்சமெனும் பாகனுக்குத் தேரை விரைந்து செலுத்து எனக் கூறுமாறு வேண்டுகிறோம். துயிலும் பெண்மானருகே ஆண்மான் நின்று காவல்பிரிவதுபோல. ஆரியரிலே, தலைவர்கள், ஆரிய இனத்தைத் தமிழ்ப் பண்ணையிலே மேயவிட்டுத் தமிழ்வளம் நீர் பெருகச் செய்து, உல்லாச வாழ்வு எனும் வெண்மணலிலே படுததுறங்கச் செய்து, காவல்புரிவதை சர்.சண்முகம் காணவில்லையா! சங்கராச்சாரி கோலத்திலும் சரி, சர்க்கார் நிர்வாகி எனும் கோலத்திலும சரியே, ஆரிய இனத்தலைவர்கள், ஆரிய இனத்தின் சுகமொன்றே குறிக்கோளாகக்கொண்டு உழைப்பது, சர்.சண்முகத்துக்குத் தெரியாதா? மானினம் காதல் மேம்பாட்டைத் தலைவனக்குரைப்பதுபோல, இக்காட்சிகள், சர்.சண்முகத்துக்கத் திராவிட இனத்தினிடம் அவர் காட்டவேண்டிய அன்பின் பெருக்கை உணர்த்தவில்லையா! ஆமேனில், தேரை விரைவாகச் செலுத்துக, என்றுரைக்கத் தானே வேண்டும்.

திராவிட மணியை, பண்டைப் பெருமை வாய்ந்த டில்லியில் ஜொலித்திடவும், சேர நான்னாட்டிலே ஒளிவிடவும், இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் வேறு எவரெவருக்கோ, இரவல் தந்த வண்ணமிருப்பது, திராவிடச் செல்வத்தை ஓமானுக்குப் பலியிட்டோம், அதன் பாழும் பசியடங்க! திராவிடத் திருவிளக்கு சர்.இராமசாமியை, வைசிராய் மாளிகைக்க ஒளிதர இரவல் அளித்துள்ளோம். திராவிடமணி சர்.சண்முகம் தேரை விரைவாக செலுத்தித் தமது காதலகத்தை நோக்கி வரத் தாமதித்தால், திராவிடத்தைக் கப்பிக் கொண்டுள்ள காரிருள் நீங்கிட வழிகாளோமே என்றே நான் திகைக்கிறேன், எனவே, சர்.சண்முகம், எந்த வர்ணாஸ்ரமம் ஒழிந்தால் மட்டுமே, நாடு மீளும் என்று கூறினாரோ, அந்த வர்ணாஸ்ரம ஒழிப்பையே, வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட திராவிடக் கட்சியிலே, இன்றே பங்கு எடுத்துக்கொண்டு பணிபுரிய வேண்டுகிறோம். இன்று அதன் பாரததைச் சுமந்து, பெரியார், உடல் தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு, படுத்தவண்ணம், பல எண்ணிச் சிலமட்டுமே வெளியே கூறிச்சோகித்த வண்ணமிருக்கிறார். வைத்தியர்கள் மருந்தூட்டுகின்றனர், கட்சியோ அவருக்கு நோயூட்டுகிறது. ஓய்வு இல்லை; மனநிம்மதி இல்லை, ஒன்றா இரண்டா அவருக்குள்ள தொல்லை. உண்மையிலேயே, வாலிபமும் வீரமும் அறிவும் ஆற்றலுமிக்க, சர்.சண்முகம் போன்றவர்கள், கட்சியிலே பணிபுரியாதிருப்பது கண்டு அவர்மனம் நோகாதா என்று கேட்கிறோம், கிளைகளை ஒடித்தெடுத்துவிட்டால், மரத்திற்குத் தான் என்ன அழகு. ரோஜாவைப் பறித்துக்கொண்டு செடியிலே முள்ளைமட்டும் வைத்திருப்பதுபோல, பதவியும், சுகவாழ்வும், பலரைப் பறித்துக்கொண்டுபோக, சுயநலமிகளும் சொல்லம்பரும் ஒரு கட்சியிலே இருந்து பயன்யாது?

சர்.சண்முகம், அமெரிக்கா சென்ற திரும்பி எவ்வளவு காலமாயிற்று, ஈரோடு மாநாட்டிலே முன்னம், கொச்சித் திவானாக இருந்தகாலை, சர்.சண்முகம் வந்திருந்தார். இன்று நம்மிடை ஓர் விருந்தாளி வந்திருக்கிறார் என்று பெரியார் உரைத்தார். அதற்கச் சர்.சண்முகம் விடுத்த பதிலின்போது, அவர் மனம், முகத்திலே தாண்டவமாடக் கண்டேன்: வந்திருப்பது விருந்தாளியல்ல, குடுப்த்து மகன், வேற்றூர் சென்று வாழுபவன், விழா நாளன்று வீடு வந்திருக்கிறான், குடும்பத்தினருடன் கூடிக்குலவ, களித்து இருக்க, கனிவுடன் பேச - என்று சர்.சண்முகம் கூறினால். அஃதன்றோ தமிழ்ப்பண்பு, அதனையன்றோ நாம் விரும்புவோம்! ஆனால், அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு, இதுவரை (இடையே ஓர்நாள் கன்னிமாரா ஓட்டலிலே பேசினது தவிர) சர்.சஒமுகம், குடும்பத்தாரைக் கண்டு குசலம் விசாரித்திருக்கக் கூடாதா, கூடிப்பேசிக் குலவிடலாகாதா, தள்ளாடும்போது கைகொடுத்திருக்கலாகாதா, தன் ஆற்றலெனும் செல்வத்தைத் தந்திருக்கக்கூடாதா? ஏன் அதைச் செய்யத் தவறினார்? பாகப்பிரிவினை ஏற்பட்டுபிட்டதா! குடும்பத்தின் உயர்வு தாழ்விவற்றிக் கருதிடாத உதவா மகனா அவர்! இதுவே, என்னை வாட்டிவரைப்பது? இசைச்செல்வத்தை வளர்த்திடவும், கலைசெல்வத்தைக் கண்டு கண்டுகளிக்கவும், சர்.சண்முகம், ஓயவில்லை, ஆனால் குடும்பத்தையே, மறந்தார். எனவே, அவருடைய நெஞ்சமெனும் பாகனுக்கு, இனியேனும், தேரை விரைந்து செலுத்து என்று அவர் கூறாரா, என்றோர் ஆவல் என் மனதைப் பிய்த்தது.
(12.12.1943 திராவிட நாடு இதழில் வெளிவந்தது)

இலட்சியத்துக்காகவும், அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவி போன்ற கட்சிக்காகவும், சொந்த நலனையும், உயர்பதவியையும் வெறுத்தொதுக்கும் வீரமும், கஷ்ட நஷ்ட மேற்கும் சகிப்புத் தன்மையும், ஒருவருக்க ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக் கொண்ட கட்சியிம் அதைனச்சார்ந்துள்ள மக்களும், முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம். அரண்மனை மாடியிலே அம்சதூளிகா மஞ்சத்திலே அமர்ந்துள்ள அரிவையை அடைய வேண்டி, ஆங்குசென்ற ஆணழகன், அகழியின் ஆழத்துக்கோ அதிலே அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சினால், யாங்ஙனம், மங்கையைப் பெறமுடியும்! இலட்சியமெனும் எழிலுடையானைப் பெற்று இன்புற எண்ணுவோரிற் பலர், அகழிக்கு அஞ்சி, புறத்தே நின்று புகைபடுமனமுடன் போரிட்டுக்கொண்டோ, புலம்பியோ கிடப்பர். ஒரு சிலருக்கே, உழவுக்கேற்ற விளைவு எனுமொழி வழி நடக்கும் அறிவாற்றலுண்டு. அவர் தமைச்சலிப்பு அண்டாது. சாகசத்துக்கு அவர் பலியாகார், போலியைக் கண்டு ஏமாறார். புல்லரின் பின்மொழி கேட்டுப் புழுங்கார். தாக்கிய வேலினைத் தூக்கியெறிந்துவிட்டு, போர்க்குப் பிகின் யார்க்கும் இது நேரல் முறையே என்பது தெரிந்து புலியுடன் போரிடுகையிலே, கிலி எனம் வலி கொளல் கூடாது என்பதறிந்து, உயிர்கெடுவரை, நெடுவரை போல் நின்று போரிடுவர் வீர், கட்சிப் பணியும், களத்துப்பணி போன்றே, வீரருக்கு ஏற்றதேயன்றி, விலாவிலே விரக்திப்புழு நடமாடுவோருக்கோ, மனதிலே சுயநலமேனம் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதனறு, சிறு செயல்புரிய மட்சூம தெரிந்தோருக்குப் பெருநெறி பிடித்தலரிது. கட்சிப்பணிக்க இத்தகைய கடமையுணர்ந்த காவலர் தேவை, அதிலும், தூங்கிடும் இனத்தைத் தட்டிச எழுப்டும பணி, சாமான்யமானதன்று. நான், சர்.சண்முகம் அவர்களை, இப்பணிபுரிய முன்வரவேண்டுமென்றுதான், அழைக்கிறேன். அரசோச்ச அல்ல! அதற்கு ஆயிரம் ஆட்கள், நான் நீ என்ற பேட்டியிட்டுக்கொண்டு முன் வருவார் என்பது எனக்குத் தெரியும். பாணரையும் பாடினிகளையும் முன் அனுப்பிப் பரிசும் தந்து, பட்டம் பெற முயலும் பேர்வழிகள் பலருண்டு. மரம் பழுத்தால் வௌவாலை வாவெனக் கூவி அழைப்பானேன்! போஇ வெனத்துரத்தவே, ஆட்கள் வேண்டும். நான், சர்.சண்முகத்துக்கு அனுப்பும் அழைப்பு, அரசோச்ச அல்ல - அரசு அமைக்க!! இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசம் பெரிது, நாவாயில் செல்ல அப்பதற்கும், நாவாள் கட்டிச் செலுததுமாறு கூறற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. சர்.சண்முகத்தின் ஆற்றல், அரசாள்வதின் மூலமாக விளங்குவது, அளிது, ஆனால், அரசு அமைப்பதன் மூலம் அவர் ஆற்றலின் சிகரம் காண்போம்! கரியைக் கொண்டு கரும்பு பறிக்கச் செய்வதா, மலைமரங்களையன்றோ முறித்திடச் செய்யவேண்டும்! வேங்கையை அழைத்து விளாங்கனியை ஒடித்திடச் செய்வதா! சர்.சண்முகத்தின் அறிவாற்றலுக்கேற்ற காரியம், அரசாள்வதல்ல, அரசு அமைப்பது! அவர் ஆண்ட கொச்சியிலே, சின்னாட்கள் மிஸ்டர் டிக்சன், எனும் முன்னாள் சேலம் கலெக்டரன்றோ அரசாண்டார்! கொச்சியோ, வேறு எந்தச் சீமையோ, ஆள்வது, கொங்கு வேங்கையின் வீரதீரத்துக்குச் சரியான வேலை கொடுப்பதாகாது.

மாசிடோனியா (Macedonia) மன்னன் பிலிப், தன் மகனுக்கு, அரணும் அமைந்த அரசைத்தந்து சென்றான். மக்ன், அந்த மண்டல முடிதரித்து மட்டுமே ஆண்டிருப்பின், அவன் புகழ் மக்கியிருக்கும். இங்கும் எங்கும் இன்றும் என்றும், அவன் புகழ் எவரும் படித்து இன்புறுமாறு, அவன் தன் நிலையைச் செய்து கொண்டான்! யாங்ஙனம்! யாங்ஙனம்? தந்தை தந்த தரணியுடன் அமைந்தானில்லை, அவன் மகன் இவன் எனும் சொல்போய். இவன் தநதை அவன் எனும் மொழி தோன்றுமாறு, அவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். அ1து என்னையெனில், பிலிப் தந்த மாசிடோனியா, நாட்டு எல்லையிலே நின்றுவிடாது, அலெக்சாண்டர், காற்றெனச் சுழன்று களம்பலகண்டு, நாடு பலவென்று, நானிலம் புகழ, இன்றம் வரலாற்றின் மூலம், வாகையுடன் வாழுகின்றான்.

பொன் மூட்டையினைக் கழுதையின் முதுகிலே ஏற்றி, அக்கழுதையை அனுப்பினால், அது பித்துவிடும் ஒரு பட்டினத்தை! என்றுரைத்தானாம் பிலிப். அதாவது, இலஞ்ச இலாவணம் கொடுத்து எந்த இலங்கையையும் பிடித்து விடலாம் என்றான் - எங்கும் விபீஷணர் கிடைப்பர் என்ற எண்ணத்தால்! அலெக்சாண்டரோ, பொன்கொண்டு போனானில்லை, போருக்குப் போனான், புகழொடு திரும்பினான், தன் உயிரைப் பணயமாக வைத்து வீர விளையாட்டாடினான், வேந்தர்க்கழகு வேலியாளுதல், வீரர்க்கழகு வேலி கோலுதல் என்ற உரைக்கேற்ப. மாசிடோனியாவை மட்டுமே அலெக்சாண்டர் ஆண்டிருப்பின், கிரேக்க நாட்டிலேயோ, அதை ஒட்டிய நாட்டிலேயோ மட்டுமே அவன் பெயரை, மாசிடோனிய மன்னருள் ஒருவன் என்ற பட்டியிலே, படிப்பர், உலகு அவனை அறிந்திராது. இன்றோ! உலகு அறியும், உலகில் பலப்பல அழியும், அவன் புகழோ நிலைத்து நிற்கும்! அரசு ஆள்வதற்கும், அரசு அமைப்பதற்கும், வித்தியாசம் என்ன எனில், பிலீப்பின் மகனாக வாழ்வதற்கும் அலேக்சாண்டராகத் திகழ்வதற்கும் உள்ள வித்தியாசமென்பேன்! சர்.சண்முகத்தை, நான், அவர் ஆறறலறிந்தே அரசாள அழைக்காமல், அரசு அமைக்க அழைக்கிறேன், மரத்தில் பழங்குலுங்கும் வேளையிலே, மந்தி தாவுமானாலும், கனியுதிரும்! அதுபோலக் கட்சி கனியிந்தறுவாயிலே, கடுவனோ மந்தியோ களித்துக் கூத்தாடும், கனி கிடைக்குமெனும் கருத்தினால். ஆனால், தோட்டம் அமைத்துத் துரவு எடுத்து, நீர்பாய்ச்சித்தரு வளர்த்திடும், செயலே, முக்கியமானது. சர்.சண்முகத்தை நானழைப்பது, தீஞ்சுவை தரும் பதவிப்பலாவைப் பறித்திட அல்ல அதற்கக் கீச்சிடும் கடுவன்களும், மையலூட்டுமூ மந்திகளம் என்றுமுண்டு, எங்குமுண்டு. நான் சர்.சண்முகத்தை அழைப்பது திராவிடத் தனி அரசு அமைக்க, வெறும் பதவியில் அமரவல்ல.

சர்.சண்முகம் அவர்களைத் தலைவராக்கம் பணியினைத்தான் வேறு சிலர் மேற்கொண்டுள்ளனரே, பயமேன் உனக்கு, என்று கூறுவீர்கள். உண்மையிலே, வேறு சிலர் வேண்டி அழைக்க வேண்டிய அளவு, சர்.சண்முகம், தூர விலகி நிற்கலாமா, நிற்கிறாரே, நிற்பது ஏன் என்ற கவலை எனக்கு. பினை முற்றிய தலைவன், வீடு திரும்பாது, சோலையிலோ சாலை ஓரத்திலோ, தங்குவானேன்? அவர், தமது அன்புக்கு இருப்பிடமான மனைபுக, அழைப்பு வேண்டுமா, அதுவா, தமிழப்பண்பு, என்று, என் மனம் என்னைக் கேட்கிறது. அது மட்டுமல்லவே, மகனே, வா! மாசிலா மணியே வா, வா! தலை மகனே வா, வா! என்று வருக அந்தாதியைப் பலர் பாடப்பாட எனக்குப் பயந்தான் மேலிடுகிறது.

ஊரைக் கலக்கி வைக்கும் ஊத்துக் காட்டு அம்மையே, நாட்டைக் கலக்கி வைக்கும் நல்ல பத்ரகாளியே, வேண்டி அழைக்கிறோமே வேலாத்து அம்மையே, என்று, சிலம்பைச் சுற்றி, உடுக்கை முழக்கி, உள்ளே சென்ற குடிவகை, ஆவிமயமாக வெளியே வருமளவு உரத்த குரலிலே அம்மனை வேண்டிக்கூவும், பூஜாரிகளை நான் கண்டிருக்கிறேன். அதன் பலனாக ஆவேசம் வரும். வந்ததும் ஊத்துக் காட்டாளோ, சோத்துக்குடையாளோ, பூஜாரியையும், பக்தர்களையும் பார்த்து, ஆடுவெட்டிக் கோழி வெட்டி பூஜை ஏண்டா போடலே? ஆடிமாத நோன்புக்கு ஆறு இலை போடலே, வேண்டிக்கொண்டபடி விருந்து படைக்கவேயில்லை! என்ற கோபத்தைக் கக்கக் கேட்டிருககிறேன். அது போன்றே பூஜ போடும் முறை, அரசியலிலே மகா ஆபத்தாயிற்றே என்றே னான் அஞ்சுகிறேன்.

மேலும் கட்சிப் பணிபுரியத் தலைமைப் பதவி தேவையா, என்பது ஆழ்ந்து பதில் கூறுவோண்டிய கேள்வி என்பதை அறிஞர் சண்முகம் அறிவார். பெரியார் கட்சித் தலைவராக இருக்கையிலேயே. அவர் பக்கம் நின்று சர்.சண்முகம் பணியாற்றவும், தமிழகம் அதைக் காணவும், ஒரு காலம் பிறக்கக் கூடாதா! இதோ எனது குடுமப முதியோர்! என்று பெரியாரைச் சர்.சண்முகம் சுட்டிக்காட்டவும், நான் வயதேறியவன், இதோ என் இளமையின் உருவம் என்று பெரியார், சர்.சண்முகத்தைக் சுட்டிக்காட்டவும், ஆலுக்கு விழுதுவிட்டது என்று ஆரியர் இது கண்டு அஞ்சவுமான நிலைமை, ஏற்படக்கூடாதா! பெரியாரின் தவறுகள், பெரியாரின் குறைபாடுகள், அவர் செய்யும் பிடிவாதம், அவருடைய ஆற்றல் குறைவு, என்ற இன்னோரன்ன பிறகூறி, பெரியாரைக் கண்டித்துவிட்டு, அவராலேயே கட்சி நசிந்துவிட்டது என்று பொய்யுரைத்துவிட்டு, ஆகவே சரி.சண்முகம் வரவேண்டும் என்று அழைக்கும் தோழர்கள், உண்மையிலே, சர்.சண்முகம். தலைவராக வேண்டுமென்று விரும்பி இதைச் செய்கிறார்களா என்பதே என் சந்தேகம். நாதியற்று, நடுத்தெருவிலே கிடத்தப்பட்ட அகதியைப் பெரியார், இன்று கூரைவீட்டிலே குடியிருக்கச் செய்திருக்கிறார், இனி மாடி வீடு கட்ட, சர்.சண்முகம், வரட்டுமூ வரவேண்டும், வருவது முறையுங்கூட. அதைக் கூறாது, ஏழடுக்க மாளிகையைப் பெரியார் குட்டிச்சுவராக்கிவிட்டதாகவம், மண்மேட்டிலே மாளிகை அமைக்கச் சர்.சண்முகம் வரவேண்டுமென்றும் கூறுவது அழவா, நீதியா, மனச்சாட்சிக்குச் சரியா என்று கேட்கிறேன். உண்மையிலே சர்.சண்முகம், வேறுவேறு இடங்கட்கு இரவல் அளிக்கப்பட்டிருந்து போது, அவருக்கும் எனக்கும், தமிழர் யாவருக்கும் சொந்தமான மனை, அரசியல் மார்க்கட்டிலே, காங்கிரஸ் மார்வாடியிடம் சிக்கி, ஏலம் கூறப்பட்டபோது, மனையை மீட்டவர் யார், இதனை மற்றவர் கூறுவதைவிட, சர்.சண்முகம் கூறுவேண்டும. சண்முகமாலை பாட பெரியாரை வசைபாட வேண்டுமா! சண்முக வரவு பெரியாரின் துறவாக முடியவேண்டுமா! இருவரும் இருக்குமளவு, கட்சியிலே, இடமில்லையா! தேரை விரைவாகச் சலுத்தி, சர்.சண்முகம், தமது மனைபுகவேண்டுகிறேன். ஆயிரக்கணக்கிலே தொண்டர்கள் அவரை ஆரவாரத்தோடு வரவேற்பர்! சிலம்பொலியும் பீஜையும் வேண்டாது, நேரே, நொந்துகினடக்கும் முதியவர் அருகே நின்று, பெரியாரே! அஞ்சற்க! வினைமுற்றிநான் வீடு திரும்பிவிட்டேன. இனி உமது பணிகுறைய, நான் உதவி புரிவேன். என் ஆற்றல் இனி நமது மனைக்குப் பயன்படும என்று கூறவேண்டும. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாருக்கு அவர் அளித்த அறவுரையின், அடுத்த அதிகாரம், இதுவாக இருக்க வேண்டுமென்பது என் அவா! அது ஈடேறுமா?

சர்.சண்முகம், கட்சித் தலைவராக வேண்டும் என்ற பிரச்னையைக் கிளம்பும் வேலையிடன் லையாகப் பெரியாரைக் கண்டுத்தும் சிலர் இருப்பது, உண்மையில் எனக்கு பிடிக்கவில்லை. சர்.சண்முகத்துக்கும் அது பிடிக்காது என்றே நன் கருதுகிறேன். பெரியாரின் பெருந்தோண்டு வரப்பும் வாய்க்காலும் அமைந்த கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்குப் பெரிதும் பயன்பட்டதென்பதை மறுத்துப் பேசுவோர், நாளை சர்.சண்முகத்தைச் சாடாமலே இருப்பர்! தமிழரின் தன்மானத்துகே வித்தூன்றிய தலைவரின் வயோதிகப் பருவம், வாகைசூட்டி வாழ்த்தும் பக்தர்கள் நிரம்பியதாக இருப்பது முறை! அஃது இல்லையே, என்ற குறையோடுமட்டுமின்றி, அவருக்கு வசைவு மாலை தொடுத்துச் சூட்டிடல் முயைகுமா, என்று கேட்கிறேன்.

உலகிலே, பாபல தீவிரவாதிகள் தோன்யிதுபற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசிய நாவலரையும் நானறிவேள். நெருப்பாறு தாண்டும வீரரும் எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கும், பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்யாசத்தை உணரவேண்டுகிறேன். அவர்கள் படித்த பக்குவமனம் படைத்தக் கூட்டத்திலே பேசினர், அவர்களக்க எழுதினர். பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையயே, என்பதை அறிய வேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலாவல்லவர்களும், வெறும் சாமியாடிகளைக் கண்டித்துப் பேசவும் சக்தியற்றக் கிடந்தகாலை, பெரியாரின் பெருங்கற்று தமிழகத்திலே, வீசி, நச்சு மரங்களை வேரோடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதை உணரவேண்டும். உணர்ந்திடின், கட்சித் தலைமையை ஏற்கச் சர்.சண்முகம் வரவேண்டும் என்று எழுதுவதுடன், பெரியாரையும் சேர்த்துக் கண்டிக்கம் செயலை எவரும் புரியார். சர்.சண்முகம், கட்சியின் நடுநாயகமாகத் திகழ்வதற்குப் பிறரின் தூண்டுதல் தேவையா! அதிலும் தூற்றல் முதலடியாகவும் தூண்டுதல் கடையடியாகவும் கொண்ட கவிரை, காதுக்கம் கருத்துக்கும் கேடுண்டாக்கும், கட்சியிலே கலகலப்பையும், அதன் மீட்சிப் பாதைக்கு வழி அடைப்பையும், உண்டாக்கும் என்பது என் அபிப்பிராயம், அதனை நான் வெளியிட்டதற்குக் காரணம், பெரியாருக்கு வக்காலத்துபபெறவேண்டுமென்பது அல்ல. அவர் எவ்வளவோ எக்ஸ்பர்டின் தீர்ப்புகளைக் கண்டு கடகடவெனச் சிர்த்துவிட்டு, மடமடவெனக் கடப்பவர். சர்.சண்முகம் போன்றோரின் பணி, கட்சிக்கும் கட்சியின் மூலம் தமிழருக்கும் பயன்படவேண்டுமே, என்ற கவலையினாலேயே இதனை எழுதினேன்.

இன்றுமுதல் வேண்டுமானால் சர்.சண்முகம், கட்சிப் பணிபுரியத் தொடங் கட்டும், ஆரியரக்கணக்கிலே வாலிபர்கள் அவருடைய அணிவகுப்பிலே நிற்பர், அதைக் காணலாம். கட்சியின் பொருட்டு, கொள்கைக்காக, திராவிடத்தனி அரசு அமைக்கத் தியாகமும் வீரமும் உடனிற்கச் சர்.சண்முகம், போர்க்கோலம் பூண்டால், எத்தனையோ வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையினைத் திரணமாகக் கருதி, துயிலே குதிக்கவுந்தயாராவர். ஓராண்டு கட்சித் தொடர்பு ஈராண்டு கட்சி நிழல், மூன்றாண்டு கட்சி முறுவல் பெற்றோரும், இன்னமும எனக்கொரு பதவியில்லைய, பட்டம் கிட்டவில்லையா, என்று கேட்டிடுவது என்போன்றவர் உள்ளத்தை என்ன பாடுபடுத்துகிறது, என்பதை விவரிக்கத் வையில்லை. இத்தகையோர் மத்தியிலே இருந்துழலும ஒரு சில உண்மைத் தொட்டர்கள், உள்ளமொடிந்துபோவதும், விழலுக்கு நீர் வார்த்துககெடுவானேன் என்று எண்ணுவதும் சகஜந்தானே! இந்நிலையை நீடிக்கவிடுவது, திராவிடத்தைக் கெடுப்பதாகும் என்று எச்சரிக்கிறேன், விசனத்தோடு, கட்சித் தலைவர் மாறவேண்டுமென்பதற்காகப் பெரியாரைக் கண்டித்து எழுதுவது முறையாகாது என்பதையும், கட்சிக்குப் பணிபுரிய, தலைமைப்பதவி இன்றியமையாத தல்லவென்பதையிம், தியாக உணர்ச்சியுடன் தொட்டாற்றம் திறன் உள்ளத் தலைவர் வேண்டுமென்பதையும், இன்று நமக்க வேண்டிய தலைவர் அரசாள அல்ல, அரசு அமைக்க, என்பதையும் எடுத்தெழுதினேன். இவ்வளவும், வர்ணாஸ்ரமம் ஒழிக! என்ற பரணியைப் பல்கலைக்கழகத்திலே, அன்று சர்.சண்முகம் பாடிதன் விளைவே, எனக்கு எவ்வணணம், இபபரணி எழுச்சியை ஊட்டிற்றோ, அதேபோல, இந்து, மித்திரன், முதல்ய ஏடுகட்கு எரிச்சலையூட்டிற்று. பாசிபடர்ந்த மனத்திடம் நான் பரிசுத்தத்தை எதிர்பார்க்கவில்லை, எனவே அப்பத்திரிகை களின் போக்கு எனக்க வியப்பூட்டவில்லை. அவை கக்யி கண்டனம், காசநோயாளியின் இருமல்போல, அவைகளின் நோய்க்குள்ள குறிகளேயன்றி வேறல்ல, எனவே பரிதாபமன்றிச் சீற்றமெழவில்லை, அவற்றிடம். ஆனால் அவைகளிலே ஒன்றான மித்ரன், கண்டனத்தினூடே கோத்திருந்த ஒரு கருத்து, என்னைச் சற்றுச் சிந்திக்கச் செய்தது, தோழரகளே! சற்றுச் சோகத்தையும் தந்தது.

சர்.சண்முகம், வகுப்புத்துவேஷம் வளர்க்கிறார் என்றுரைத்தது மித்ரன். இது, பழய பஞ்சாங்கத்திலே ஒரு பகுதி! அது கண்டு நான் ஆச்சரியப்படவுமில்லை ஆயாசப்படவு மில்லை. நாசமாய்ப்போனவன், மணி பன்னிரண்டாகியும் தூங்கக் காணோமே என்று கைநொடிப்புடன் கூறுவாள் கள்ளி. காம வேதனையாலும், அதனைத் தீர்த்திடும் கள்ளப்புருடனாலும் பீடக்கப்பட்ட கள்ளிக்குக் கணவன் விழித்திருப்பதுகூடக் குற்றமெனத் தோன்றும். விபசாரியின் இந்த விசாரத்தைக் கண்டு, அபசாரம் அபசாரம் என்று கூறும்பேர்வழி, ஆண்மையற்றவனாகத்தானே இருக்க முடியும்! வில்லுக்கு ஒரு அம்பு, பல்லுக்கு ஒரு எலும்பு, அதுபோல் பாதி ராத்திரி வேளையிலே பக்கத்துக்கோர் ஆள் தேடும் பாதகியின் மொழியைத் துச்சமெத் தள்ளிடுதல்போல, நான் ஆரிய ஏடுகனின், கண்டன மொழிகளைத் துச்சமாகவே கருதுகிறேன். ஆனால் மிரன் ஒன்று எழுதிற்று, என் உள்ளம் கொஞ்சம் வேதனையடைந்தது. சர்.சண்முகம் சர்ணாஸ்ரமக் கோட்டையைத் தகர்க்கவேண்டுமென்று கூறுகிறார். அவர் நமது பழைய நூற்களின் அருமை பெருமைகளை இப்போதுதான் கொஞ்சங்கொஞ்சமாக தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார். இனி, அவைகள் முழுதும் உய்த்து உணர்ந்துவிட்டால், சர்ணாஸ்ரமக் கோட்டையைத் தகர்க்கும் அண்ணத்தையே, அவர் கைவிட்டுவிடுவார்! என்று மித்ரன் எழுதிற்று.

சர்.சண்முகம் கலையின் உயர்வுபற்றி, தமிழ்க் காப்பியங்களின் அருமை பெருமை பற்றிப் பேசினாலல்லவா! அதை மித்ரன், தனக்குச் சாதகமாக உபயோகிக்கிறது. வர்ணாஸ்ரமத்தை ஒழிக்கவேண்டுமென்ற எண்ணம் ஒருநோய், தமிழ்க்கலையுணர்வு. அதனை நீக்கிடும் ஒரு மருந்து; மருந்துபோன்ற அந்தக் கலையுணர்வினைச் சர்.சண்முகம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டுவருகிறார், இன்னும் மருந்தினைச்சற்று அகிமாகப் பருகினால், நோயே போய்விடும், என்ற தொனியிலே மித்திரன், தனது தம்பூரை மீட்டுகிறது. இது வெறும் நாரத கானமாக இருக்கக்கூடும. வர்ணாஸ்ரமம் நோயா, வர்ணாஸ்ரமத்தை ஒழித்தாக வேண்டும் என்ற விருப்பம் நோயா. எது நோய் என்பது, வேறு விஷயம். இதுவரை, அறிஞர் யாவரும், நாட்டை நலியச் செய்த நோய், வர்ணாஸ்ரமம் என்றே கூறினர். வர்ணாஸ்ரமத்தை மித்திரன், நாட்டை வளமாக்கும் வனிதாஸ்ரமமாகக் கருதலாம், மித்ரபலம் பெருக அது ஏதுவாகக் கூடும. அதுவம் வேறு விஷயமே. வர்ணாஸ்ரமத்தை ஒழிக்கும் எண்ணம், பழங்காப்பியப் படிப்பினால் பாழ்பட்டுவிடமூ என்ற கருத்தை மித்திரன் வௌயிடிடிருக்கிறது. உவமைத் தகறாருகளை உதுக்கிவிட்டால் இது விளங்குகிறது. இதிலே உள்ள சூட்சமம், என்னைச் சோகிக்கச் செய்கிறது. உண்மையிலேயே, கலை உணர்வு பெருகப் பெருக, தமிழர என்ற இன உணர்வு அருகுமோ, அண்ணல் சண்முகத்துக்கம் இது நேருமோ, என்றே நான் அஞ்சுகிறேன். சர்.சண்முகம், இதுபோது, தமிழ்க்காப்பியமெனும் பூங்காவிலே உலவுகிறார் என்பதும், அங்குபறித்தெடுத்துத தொடுத்த அழகிய மாலையினை வசந்த வட்டியிலே வைத்துத் தமிழருக்குத் தருகிறார் என்பதும், கலாரசிகர்களிடன் கூடிக்குலவி, பாவியக் கனிரசமருந்திக் களிக்கிறார் என்பதும் பிறர்செல்லக் கேட்டிருக்கிறேன். மித்திரனும் அதனை அறிந்து, சரி! சரி!!அந்த அரசம் இன்ன கொஞ்சம் உட்கொண்டால், வர்ணாஸ்ரம ஒழிப்பு என்ற பேச்சு ஒழியும் என்ற எழுதுகிறது. இது என்னைச் சிந்தனையிலாழ்த்திற்று. அடுத்த இதழிலே, சிந்தனைப்பற்றிக் கூறுகிறேன், இதுபோது நீவிர்சற்றே உமது சிந்தனையைச் செலவிடவேண்டுகிறேன், மித்திரன் கூறின வாசகத்தின் மர்மம் என்ன?
(19.12.1943 திராவிடநாடு இதழில் வெளிவந்தது)

அழகான அந்திவானம்! ஆற்றோரத்திலே நாரை; பவலையுடன். கண்கள் முழுதும் திறந்துமில்லை, முழுதும் மூடியுமில்லை, கபடம் நிறைந்தவிழி, நாரைக்கு. நின்ற கோலத்திலே, தவங்கிடக்கிறது நாரை; சாராரண ரிஷிகள்போல, தனது முத்தி கோரியல்ல! ஆற்றிலே துள்ளிக் குதித்து அல்லற்படும் முன்களுக்கு, முக்திதர!! எந்த ஆற்றோரத்திலும், பிற நீர்நிலையங்களிலும், நாரை நின்றிடும் இக்காட்சியை எவரும் காணலாம். கல்லெடுதது வீசிடின், நாரை சென்றுவிடும், ஆனால் கவிதையை வீசி, அந்தக் காட்சி, என்றும் கருததுள்ளோரின் மனதைவிட்டு அகலாதவண்ணம் ஒருவர் நாரைக்கு அமரத்துவ அளித்துள்ளார். நாரை மீனைக்கொத்தித் தின்பதற்காக அடக்கமே உருவானதுபோல, அங்கு காத்திருக்கிறது. அதன் துய எண்ணம் துளியும் வெளியே தெரியாதபடி . . நாரை, நடிக்கிற நேர்த்தியைக் கவிஞர் காணுகிறார். மீன் தேடிடும் நாரை, ஆற்று நீரிலே இறங்கி அலையக்ளோம், வட்டமிடவுமில்லை, பதைக்கவில்லை, வேறு ஏதோ காரியத்துக்காக, அல்லது வெறும் பொழுதுபோக்குக்காக அந்த ஆற்றோரத்தை அடைந்தது போலப் பாவனை பிரிகிறது. அந்த நாரையின் நினைப்பு முழுதும், மீனின் மீது! நடிப்போ, சர்வபரித்தியாகத்துக்கும் தயாராக இருப்பதுபோல்! இதைக்கண்ட கவிஞர், பறவை இனங்களிலே, இவ்வளவு கபடம் கற்றதாக நாரை இருப்பதுபோல, மக்களிலே, யார் உளர், என்று எண்ணாமலிருப்பரா? கற்றோர்க்கும் மற்றையோர்க்கும் இதுதானே வித்யாசம்! கற்றோர், காட்சியுடன் கருத்தினைப் பிணைப்பர், மற்றையோர், காண்பர், களிப்பர், மறப்பர்! கவிக்கு, ஆற்றோரத்திலே நாரை நிற்கும் காட்சி, வஞ்சத்தை மறைக்கும் நடிப்பு, மக்களிலே ஒரு சாராரின் மனப்பாங்கையும் நடவடிக்கையையும் நினைவூட்டுகிறது. உவமை கண்டு உளம் களிக்கிறார். இயல்பினால் மட்டுமே உவமையன்று! இடமுங்கூட, ஒன்றாகவே இருக்கும் எவமை அவருக்குத் தோன்றுகிறது. அதே ஆற்றங்கரைகளிலே, செவ்வானம் தோன்றும் வேளையிலே, நாரை போலவே, நினைப்பை நடிப்பால் மறைக்கும் ஒரு கூட்டதாரின் குணம் அவருக்கு நினைவிற்கு வருகிறது, ஒரு நேர்த்தியான கவிதையும் பிறக்கிறது, கவிஞனின் உள்ளத்திலிருந்து,

பொன்மலைசுடர் சேரப்
புலம்பிய விடனோக்கித்
தன்மலைந் துலகேத்தத்
தகைமதி யேர்தரச்
செக்கர்கொள் பொழுதினா
னொலிநீவி யிளநாரை
முக்கோல்கொள் அந்தணர்
முதுமொழி நினைவார்போ
லெக்கர்மேலிறை கொள்ளும் . . .
நாரையைக் கண்டதும், பார்ப்பனரின் நினைவு, கவிக்கு! ஆற்றோரத்திலே, அந்திவானத்திலே, நிற்கம் நாரை, மந்திர உச்சாடனம் செய்வதுபோன்ற பாவனையுடன், நீர்நிலையங்களருகே நித்த நித்தம் அமர்ந்துள்ள, பார்ப்பனரின் உருவம் போன்றிருந்ததாம் கவிக்கு! எந்த காலத்துக கவி? கலித்தொகைக் காலம்!! அந்தக் காலத்திலேயே, ஆரிய இனம், காரியம் பலிக்கக் கபடவேடமிட்டுக் கிடந்தது என்பதற்ச சான்றுகள் அனேகமுண்டு. இன்றும் அந்த இயல்பு கொஞ்சமும மாறாது தானிருக்கிறது. நாரைபோல நின்றிருக்கும் நடிப்ப்த் திறனை அந்த இனத்தவர் செம்மையாகச் செய்வார். கலை எனும் அருவியோரத்திலே, ஆரி நாரைகள் அமர்ந்துள்ளன; கலையருவிக் காட்சியிலே, தம்மை மறந்திருப்பதாகப் பாவனை! முதுமொழி நினைவார்போல, கலையின்பத்தையே நினைத்த வண்ணம், ஆரியநாரைகள் அமர்ந்துள்ளன. இரையும் வேண்டாம் இந்த இன்பமேபோதும், என்று கூறுவர்! இதிலுள்ள உண்மையின் உயர்வும், நேர்த்தியும், வேறு எதிலே காணமுடியும் என்றுரைப்பர். வேறொன்று வேண்டாப் பராபரங்களாக, கலை வழிபாடனறிப் பிறிதோர் பெறத்தக்க பேறில்லை என்ற பெருங்குண வான்களாக, மனஇருள், கலைஒளிபட்ட மாத்திரத்திலே, டியோடு தொலைந்ததென்று கூறும் ஞானவான்களாக யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றுபதேசிக்கும் உத்தமர்களாக, அறிவு பெரிது, அதனினும் பெரிது, அந்த ஆனந்தத்தை அனைவரும பெற்றிடச் செய்தல் என்று கூறிடும் ஆசிரியார்களாகக் காட்சியளிப்பர். அவர்தம் நெஞ்சமோ, ஒர் எரிமரை! விழியோ, எவர் உழைப்பை எங்ஙனம் ஏய்த்துப்பெறுவது என்ற தந்தித்தைக் கக்கும் குழிகள்! அருவியோரத்து நாரையின் நினைப்புத் துள்ளிக்குதித்திடும மீனினத்தின்மீது! ஆரிய நாரைகட்கோ, கலையருவியில் குளித்து இன்புற வேண்டிவரும், தமிழரைக் கொத்தித்தின்பதற்றி வேறில்லை. கலையருவியே, இக்காரணத்திற்குத் தணையாக நிற்கிறது. கடிவாளத்திற்கு வாய்திறந்த பிறகு, குதிரையின் கொட்டம் அடக்கப்படுவது ஆச்சரியமாகுமா? மூக்கணாங்கயறுக்குச் சம்மதித்தபிறகு, மூலை வாரினால், சாட்டைதானே பேசும்! அதுபோலத் தான், கலையருவியிலே நீந்திமகிழத் தோடங்கிவிட்டால், ஆரியநாரைகளின் கூறியமூக்கின் வேலையும் தொடங்கும். கலையருவி, அங்ஙனமுளது, இங்கு. எனவேதான், சரி, சரி, செட்டியாரே! கலைஉணர்வு பற்று வருகிறீர்களல்லவா! அந்த உணர்வு இன்னும் கொஞ்சம் அதிகரிக்கட்டும, பிறகு ஆரியத்திராவிடப் போராட்டத்திலே உமக்கிருக்கும் ஆரபம், பஞ்சாகப் பறக்கிறது பாரீர் என்று மித்திரன் கூறுகிறது.

ஒரே ஒரு செங்கல் பெயர்த்துவிட்டால் போதும்! என்று கருக்கலிலே நின்று கன்னமிடும் கள்ளன் கூறுவான்.

கண் சிவந்துவிட்டது. கைகால் துடிக்கிறது. பேச்சி படபடக்கிறது. இன்னும் ஒரே ஒரு கிளாஸ் குடித்துவிட்டால் போதும், ஆசாமி, கீழே சாய்வான், பிறகு, அகப்பட்டதைச் சுருட்டலாம் மதுவை ஊற்றி மடியைத் தடவும் தடியர் கூறுவர்.

இப்போதுதான் என்னிடம் அவருக்குப் பிரேமை அதிகரிக்கிறது. இது இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் போதும், பிறகு நான் சொன்னபடி ஆடுவார், சொத்து முழுவதையும் எழுதிக்கொடுத்தாகவேண்டும் என்று கட்டளையிட்டாலும் தட்டாமல் செய்வார், என்று கண்வெட்டால் கருத்தை வெட்டிய காமக்கள்ளி, தன்னிடம் சிக்கிய சீமானைக் குறித்துக் கூறுவான்.

முகத்திலே இன்னும் ஒரே ஒரு குத்து விழுந்தால் போதும், ஆசாமி கீழே விழுவான், தங்கத் தேடாவும் வெற்றி மாலையும் நமக்குத்தான் என்ற கூறுவான், குத்துச சண்டைப் பந்தயத்திலே ஈடுபட்டவன்.

இன்னும் சில நாட்களில் ஆசாமி சிவலோகப் பிராப்தியடைவான். பிறகு நானே சீமான், நமதே வாழ்வு என்று லோபியின் வார்சு, கூறுகிறான்.

இந்த ரகங்களிலே எதை நீங்கள், மித்ரன் வாசகத்திற்கு உவமையாகக் கொள்வீர்களோ எனக்கத் தெரியாது தோழர்களே! எனக்கென்னமோ, இவ்வளவும் இன்னும் பலவும் தோன்றின. மித்திரன், சர்.சண்முகம், பண்டைக்காப்பியங்களை மேலும் நன்றாகப் படிப்பாரானால் வர்ணாஸ்ரமக் கோட்டையைத் தகர்க்கவேண்டுமென்ற நினைப்பையே விட்டுவிடுவார், என்று எழுதியிருப்பதைப் படித்தும், சூட்சமமின்றிச் சுதேசமிதிரன் எழுதாதே! வீணுக்கு வார்த்தையை வீசிடாதே, இந்த வாசகத்திற்கு விசேஷார்த்தமின்றி, மித்திரனில் இடம் பெறாதே என்று எண்ணியே ஏங்கினேன். சென்ற கிழமையே உம்மிடம் இயம்பினேன், இக்கிழமை அதுகுறித்துச் சிந்தித்தேன், செக்கர் கொள்வானமும், சிந்துபாடும் சிற்றாறும் நின்றிடும் நாரையும் நினைவில் நின்றன.

(திராவிடநாடு - 26.12.1943)

"வர்ணாசிரமம்" என்ற தலைப்பிலே, கலை படிப்பு ஆரியக்குழியிலே, தமிழரைத் தள்ளக்கூடியதான இருக்கிறது என்று எழுதுகிறாயே, சர் சண்முகம் தமிழ்க் கலையிலே ஆர்வங்கொண்டிருப்பதால், நல்லது விளையுமேயன்றி நாசமா நேரிடும், விளக்கு, என்ற அன்பரொருவர் கேட்கிறார். பழைய காப்பியங்களைப் படிக்கப் படிக்க ஆரிய-திராவிடப் போராட்ட உணர்ச்சி ஒழியும் என்பது ஆரியருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆகவேதான், தற்காலப் புத்தறிவுப் பிரச்னைகளைப் பற்றிப் பேசும்போதும் எழுதும் போதுங்கூடப் பழைய ஏடுகளுடன் அவைகளை இணைத்துக் காட்டுகின்றனர். இரு கருத்துக்கள் அவர்கட்கு, இரண்டும் இடையூறு உண்டாக்குவனவே! ஒன்று, பழமையிலேயே யாவும் உளஇ என்று பேசுவதன் மூலம், புத்துலக உணர்வு வராமல் தடுப்பது. மற்றொன்று, அத்தகைய பழமை உணர்வுன்படி நின்றபின், வர்ணாசிரம் நிலைக்கும் என்பது, இவ்வுரண்டும், நாட்டு மக்களை நலிய வைத்து, 'முகத்துதித்தோரை" முடிசூடா மன்னராக்கும் முறைக்கும் பயன்படுகின்றன. எனவேதான் நான் கலையருவியிலே கவலையுடன் ஆரிய நாரை அமைர்ந்திருக்கிறது. அதைக் கவனத்தில் வையுங்கள் என்று கூறினேன்.

எந்தச் சந்தர்ப்பத்தையும் நழுவவிடாதே! எதையும் உனக்குச் சாதகமானதாக்கிக் கொள்ளத் தவறாதே! என்பவை, ஆரியரின் இலட்சியம். இரண்டாயிரம் ஆண்டுகளாகவே, இதன்படியேதான், கலையையும் அவர்கட்ள தங்கள் ஆதிக்கத்தைப் புகுத்தும் கருவியாக்கினார்கள். உணவு கண்முன் ஊசலாடுகிறது என்ற உவகையுடன் துள்ளிக் குதிக்கும் மீனுக்குத் தூண்டிலே தூக்குமரமாகிறது! அதுபோலக் கலையழகு காண்போம் என்று எண்ணிப் பழமைமுன் கூத்தாடும் தமிழர், ஆரிய ஆதிக்கத்திலே சிக்கிவிடுகின்றனர். ஒரு சிறு சம்பவம். புத்துலகப் பற்றுக் கொண்ட ஒரு திருவாளரின் திருமனையிலே நடைபெற்றது. கற்பனையல்ல; ஆனால் கண்ணியமான முறைக்காக வேண்டு பேருக்கு முக மூடியிட்டுருக்கிறேன், உமது மன்னிப்பை எதிர்பார்த்து.

"வாருங்கோ! நேற்று மாலை நெடுநேரம் வரை காணோம், எங்கே போயிருந்தீர்கள்?" என்று கேட்டார், புத்துலகப் பற்றுடையார். பழமையாளர் சொன்னார், "பரதநாட்டியம் காணச் சென்றேன். பரமானந்தம் கொண்டேன். பாத்திரம் முதல்தரமானது. அபிநயம் அபாரம். கீதம், லலிதமாக இருந்தது" என்று. புத்துலகப் பிரியருக்கு நடனங் காண ஆவல் பிறந்தது. கலைக்காகத்தான்! கண்டார். "கண்டவுடன் எந்தன் உள்ளம்