அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்வருந்துகிறோம்!

தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வீரர் மணலி. சி.கந்தசாமி எம்.எல்.ஏ., அவர்களது தந்தையார் அண்மையில் காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம். உயிர் பிரிகின்ற நேரத்தில்வட, தனயனைக் காணாது தந்தையார் உள்ளம் எத்தகைய பாடுபட்டதோ! காங்கிரஸ் ஆட்சியின் அல்லலுக்கு ஆட்பட்ட, அவர்தம் குடும்பத்தாருக்கு, பெரியவரின் பிரிவு மிகமிக வருத்தத்தைத் தந்திருக்கும். அவர்களது வருத்தத்தில் நாமும் பங்கு கொள்வதோடு, தோழர் கந்தசாமியின் சகோதரர்களுக்கும், குடும்பத்தாருக்கும் நமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட நாடு – 10-2-52