அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாழ்த்துகிறோம்!
1

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னை சர்க்கார், சர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் அவர்களை, அட்வகேட் ஜெனரலாகக் கொலுவீற்றிருக்கச் செற்தனர். இந்தப் பதவி நிரந்தரமாகவே அல்லாடியாருக்கு ஏற்பட்டுவிட்டதோ என்ற மக்கள் எண்ணவுந் தொடங்கினார்கள். இப்போது அவர், சாஜிநாமா செய்துவிட்டார். அவர் போனாலென்ன, அக்ரகாரம் வேறோர் ஸ்ரீஜத்தை அட்வகேட் ஜெனரலாக அனுப்பி வைக்கும், அதுதானே நடைபெறும் வழககம், ஆரிய ஆங்கிலேயே ஆலங்கனந்தானே நாம் பல காலமாகக் கண்டுவரும் காட்சி என்ற திராவிட மக்கள் எண்ணியிருந்தனர். ஆனால் சென்னை, சர்க்கார் திராவிடரின் மனங்குளிரும் செயலைத் தைரியத்தோடு செய்துள்ளனர். தோழர் பி.வி.இராஜமன்னார் அவர்களை ஒரு திராவிடரை - அட்வகேட் ஜெனராக நியமித்துள்ளனர். தோழர் இராஜமன்னார், பிரபல வக்கீல், முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் அமர்ந்திருந்து, இதுபோது தைசூர் உயர்நீதி மன்னத்திலே நீதிபதியாக அமர்ந்துள்ள தோழர வெங்கடரமணராவ் நாயுடு அவர்களின் திருமகனார் தகுதிவாய்ந்த தோழர், இங்ஙனம், தக்க பதவி பெற்றது காணக்களித்து அவரையும் வாழ்த்தி, அவரை மேற்படி பதவியில் நியமித்த சர்க்காரையும் பாராட்டுகிறோம்.

(திராவிடநாடு - 02.04.44)