அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வீரவைணவர் வேங்கடசாமி அவர்கட்கு!

எம்பிரான் திருவடி சரணம் என்ற இயம்புக் கிடக்கும் காந்தி பக்த, திரு.கே.வேங்கடசாமி நாயுடுகாரே, தங்கட்கு இக்கடிதம். தங்கள் போன்றோர்க்கும், ஆரியநாசர்கட்கும் உரித்தானதே.

கந்தா! சும்மா ஆடாதே! கூச்சல் போடாதே! குளறிக் குளறிக் கூவாதே! கோணல் சேட்டைகள் செய்யாதே! எதிரிலே வருவோர் மீது மோதாதே! வம்பு செய்யாதே, வா போகலாம்.

டே, சோம்! யார்டா சொல்றது நான் ஆடறதா! நானாடா சேட்டை செய்யறேன், நீயாருடா கேக்க, உங்கப் பாட்டன் வீட்டு ரோட்டா இது! போடா! நான் ஆடுவேன். பாடுவேன், ஓடுவேன், எவனாச்சம் எதாச்சம் பேசினா போடுவேன், யாருக்கடா ரைட் இருக்குது என்னைக் கேழ்க்க. சோமுவுக்கு அவ்வளவு போதை இல்லை. அளவுடன் குடித்ததால், கந்தனோ, பல கலயங்களைக் காலி செய்துவிட்டான், பேறி அதிகம், முறையின்றி வீதியிலே புரளவும் பேசவும் தொடங்கினன். போதைமீறி, போக்கு மாறி விட்டதால், பேச்சு கெட்டுவிட்டது, போலீசிலே பிடிபட்டுபிட்டால் படாதபாடு படுத்துவார்களே என்ற பயம் கொண்ட சோமு, குடி அதிகமாகி விட்ட கந்தனுக்குக் கொஞ்சம் பக்குவம் கற்றுக்கொடுக்க எண்ணினான். ஆனால், வெறி ஏறிய வீணன், சோமுவின் பேச்சை மதிக்க மறுத்தான்.

சாலை ஓரங்களிலே, பொழுது சாய்ந்த நேரத்திலே பார்க்கலாம், போதை குறைந்தவன் போதை மீறியவனுக்குப் பார்க்கலாம், போதை குறைந்தவன் போதை மீறியவனுக்குப் போதகாசிரியனாக இருக்கும் காட்சியை. மிதக்குடியன் மிஞ்சிய குடியனுக்கு மதி உரைப்பதுதும், வீதியறிந்த பிசாரி, ஊரறிந்த விபசாதரிக்கு உத்தமியாக இருக்கவேண்டும், ஏதோ தவறிவிட்டாலும கொஞ்சம் மறைதிறை இருக்கவேண்டும் என்று புத்தி புகட்டுவதும், சுவரேறிக் குதிக்கும் சுப்பன் வழிப்பறி நடத்தும் வரதனுக்குச் சமயசந்தர்ப்பம் பார்த்து நடக்கச் சொல்வதும், திடீர் புளுகன் அண்டப்புளுகனுக்குப் பொய்யின் கேட்டினைப் புகல்வதும், நாட்டிலே, நடைபெறுவதுண்டு. ஆனால், அதன் விளைவு, சச்சரவாக முடியுமேயொழிய, சமரசம் ஏற்பட்டதாகவோ, சன்மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டதாகவோ, ஏற்படாது. சோமுவிடம் கந்தனுக்குக் கோபந்தான் வரும், சோமு காட்டும் வழியிலே கந்தன் செல்லமாட்டான்.

தாங்கள், மோட்டாரிலே செல்கிறீர், மாளிகையிலே வாழ்கிறீர், எனவே, மண்மேடுகளிலேயும், மணற்பாதைகளிலேயும் சாலை ஓரத்திலும், சந்து பொந்துகளிலேயும், நடைபெறும் இந்த ஞானோபதேசக் காட்சிகளைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்திருக்க முடியாது. நாடு சுற்றி நமது மக்களின் நிலையை நேரடியாகக் கண்டு, சிந்ததையிலே சோகம் கொண்டு, சக்திக்கேற்ற அளவு சமுதாயத்திலே உள்ள இக்குறைகளைப் போக்குவோம் என்று பணிபுரிவதால் மனப்பிணியாளரின் போக்கினைக் காணும் சமயங்கள் எனக்குண்டு. ஆகவேதான், அவைபற்றிக கூற முடிந்தது மிதக்குடியன் மிஞ்சிய குடியனுக்குப் போதனை புரியும்போது கண்டு கேட்போர் கைகொட்டிச் சிரிப்பர், குருவும் சீடனும் கூடிநடத்தும் கோலாகல நாடகத்தைக் காணீர் என்ற கூறுவர். வெறி தலைக்கேறியவனிடம், கொஞ்சம் அளவோடுள்ள குடியன் என்ன சொன்னாலும் இடித்துரைத்தாலும், எச்சரிக்கை விடுத்தாலும் பலிப்பதில்லை. உள்ளே இருந்துதான் ஒரு சக்தி அவனைப் பலிப்பதில்லை. உள்ளே இருந்துதான் ஒரு சக்தி அவனைப் பாழாக்குகிறதே, கொங்கம் போதையின் பிடியிலே சிக்கியவனிடம், அமைதி, விவேகம், அடக்கம், நற்குணம் ஆகியவைகளை எங்கிருந்து காணமுடியும்! உதைக்காத கழுதை, குலைக்காத நாய், சேற்றில் புரளாத எருமை கண்ணைச் சிமிட்டாத கலவிக்கடைக்காரி, குளறிப் புரளாத வெறிக் குடியன் இருக்க முடியுமா? அதை உணரும் அளவு புத்திவேண்டுமானால், போதை இருக்கக் கூடாது. குடிகாரச் சோமு, குடித்து உருளும் கந்தனைப் புத்தி புகட்டி அடக்க முடியும் என்று எண்ணினதற்குக் காரணம், சோமுவின் போதைதான்!

இருவர் நிலை ஒன்றாக இருப்பதும் உண்டு, உன்றையொன்று கோட்டியிட்டுக் கொண்டிருப்பதுமுண்டு. அவன் கெட்டான் குடியன், போடு இங்கே இரண்டு என்பவனும், அந்தப் பயலுக்கு என்ன தெரியும், தாங்கவே முடியாது, கொஞ்சம் உள்ளே போனதும் உருண்டுவிடுவானே கீழே என்ற பேசுவோனும் உண்டு. குடியிலே மட்டுமல்ல, வேறு பலவற்றிலும், இத்தகைய ரகங்கள் உண்டு! கூசாது புளுகுவதிலே போட்டி வந்ததாம் இருவருக்குள் உரு சமயத்தில், ஒருவன் சொன்னானாம், உலகத்திலேயே எங்கள் தோட்டந்தான் மிகவும் பெரியது! எங்கள் தோட்டத்தின் ஒரு பக்கத்திலிருந்து ஒருவர் குழர்கொண்டு ஊதினால், மற்றப் பக்கத்திலே இருப்போருக்குச் சத்தம் கேட்காது என்று. அவனுக்கு வீடே கிடையாது! அவனுடன் புளுகம் போட்டியிலே ஈடுபட்ட மற்றவன், சிரித்துக கனைத்துச சிரம் அசைத்துக கரம் நீட்டிச் சொன்னானாம் இது ஒரு பிரமாதமா! எங்கள் வீட்டுத் தோட்டத்தின் ஒரு கோடியிலிருந்து ஒரு கன்று நடந்து மறுகோடி செல்ல ஆரம்பித்தால், மறுகோடி செல்வதற்குள் பசுவாகிவிடும்! என்று அன்று தாங்கள், சென்னை, இலட்சுமிபுரம் இளைஞர் சங்கக் கூட்டத்திலே பெசினதாக ஒரு செய்தி பத்திரிகையிலே கண்டேன். அதைப்டித்த பிறகு, நான் முன்னால் கூறின அச்சம்பவமும் ஆச்சரியமானதாகத் தோன்றவில்லை எனக்கு! ஏன்? ஆரியமத போதனையிலே ஆழ்ந்த கிடக்கம் பேர்வழிகளிடம் நீர், சீர்திருத்த போதனை புரிந்திருக்கிறீர், மிஞ்சிக் குடித்த கந்தன் நிலையிலே அவர்கள் இருந்தனர், சோமுபோன்று நீர் காணப்பட்டீர். உம்மைக் குடிகாரர் என்ற தூற்றுவதாகத் தவறாகக் கருதாதீர். ஆரியம் என்ற போதையைப் பருகியிருப்பதைத்தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன், வேறல்ல.

சீர்திருததப் பிரசாரத்திலே, ஓய்வு நேரத்தை ஒயிலாகக் கழிக்க விருமபும் சிலர், என்றோ ஓர்நான், ஏதாவதோர் கட்டிடத்திற்குள் கூடுவர், ஒருவருக்கொருவர் புகழ் பொழிந்து கொள்வர், தாம் கற்றதைக் கக்க ஒரு சந்தர்ப்பம் தேடுவர். இது கொக்கட்டான், சீட்டாட்டம்போல அவர்களுக்குப் பொழுதுபோக்குக்கு ஒரு வழியாக அமையுமேயன்றி சமூகத்தைத் தொடாது. அத்தகைய பெரிய மனிதர்கள் நாட்டிலே அவ்வப்போது எழும் பிரச்சினைகளைப்பற்றி மாலை நேரத்திலே, விவாதிப்பர். வீணருக்கும் இவர்கட்கும் அதிக வித்தியாசம் இல்லை. வீணர், எது நடப்பின் நமக்கென்ன என்ற இருப்பர். இவ்விவேகிகளோ, இன்னின்ன விஷயங்கள் இப்படி இப்படி இருந்தால் நல்லது என்று நாங்கள் கருதுகிறோம் என்ற கூறுவர், காரியமோ செய்யார். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும் என்பதுபற்றி அழகிய சொற்பொழிவு நிகழ்த்துவர், ஏழ்மைபோக வழிவகை தேடவோ முன்வரார். அவ்விதமானவர்களின் அவைநாடித் தாங்கள் சென்றது காண நான் வருந்துகிறேன், சிலகாலம் நீர் தியாகர் திருத்திய பாதையிலே நடந்தவராயிற்றே என்பதை எண்ணியதால்!

ஜு 20-ந் தேதி மாலை, திவான்பகதூர் வி. பாஷ்யம் அய்யங்கார் தலைமையிலே நடைபெற்றதாம் ஒரு விவாதக் கூட்டம். திருப்பதி தேவஸ்தானப் பணத்தைக் கொண்டு திருப்பதியிலே ஒரு கல்லூரி ஏற்படுத்தச் செலவிடலாமா கூடாதா என்பதுபற்றியாம் அந்த விவாதம்! அதிலே கலந்து கொண்டனராம் கண்ணியர் சிலர். தாங்கள், திருபபதி நிதியைக் கல்லூரிக்குப் பயன்படுத்தலாம் என்ற பேசினீராம். ஆனால், தலைவரும மற்றும் சிலரும மறத்தனராம் இறுதியிலே, திருபபதி போயில் நிதியைக் கல்லூரிக்காகச் செலவிடுதல் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாம்! சங்கம் இருக்கும் இடம் கீழ்ப்பாக்கமா? என்ற கேட்டார் ஒரு தோழர். தெரியாது என்றேன் நான். ஆனால் திகைத்தேன். எவ்வளவு துணிவு, இவ்விதமான துர்மானத்தை நிளைவேற்ற! பிறகு சிந்தித்தேன், சோமு கந்தன் சம்வாதம் போன்றதுதானே இது என்ற புலப்பட்டது!

ஆரிய போதையை நீரும் பருகி இருக்கிறீர், ஆனால் கொஞ்சம் அளவு இருக்கிறது. ஆகவே, நிலைமை மோசமாகவில்லை. உமது போதனையை மறத்தவர்கள், மிதமிஞ்சிப் பருகியிருக்கிறார்கள் ஆரியமெனும் போதையை! எனவேதான் உமது போதனை அப்போதை மீறிய பேதையர்க்கு ஏறவில்லை. ஒரு முறைச் சுயமரியாதைச் சவுக்குக் கொடுத்தால், அப்போதை கொஞ்சம் தெளியும் அதுதான் இது.
யாத்ரீகர்களிடமிருந்து வசூலிப்பதால் கிடைத்த திருப்பதி தேவஸ்தானப் பணத்தை யாத்திரிகர்கள் ஆதரிக்கும் காரியங்களுக்கே செலவழிக்க வேண்டும். ஏற்கவே உள்ள பள்ளிக்கூடங்களை நன்றாகப் பராமரித்தல், திருப்பதி மறை மீதுள்ள கிராமத்தைச் சீர்திருத்துவது, திருப்பதியின் பொது சுகாதாரம், தண்ணீர் சப்ளை, ஆகியற்றை அபிவிருத்தி செய்வது, யாத்ரீகர்கள் தங்கப் பல சௌகரிங்கள் செய்து கொடுத்தல் முதலியவற்றிற்கே தேவஸ்தான நிதியை முக்கியமாகச் செலவிடவேண்டும். இதற்குப் பிறகு பாக்கியிருந்தால் பாழடைந்த கோயில்களை மராமத்துச செய்யலாம்.

சாந்தமாகச் சாவதானமாகக் காரண காரிய விளக்கத்தோடு, காரமின்றிக் கோபமின்றி, எடுத்துக் கூறினீர், அறிவை. அந்த அறிவு என்ன பயனை அளித்தது? பக்குவமாகப் பேசினால் பலன் உண்டாகும் என்று சிலர் கூறுவதுண்டு தன்மான இயக்கத்தாரிடம். நீர் பக்குவமாக மட்டுமல்ல, பணிவோடும் பரிவோடும், பயபக்தியோடும் பேசியிருக்கிறீர். மாஜி நீதிபதியின் முன்னிலையிலே பேசுகிறோமே, நீதி கிடைக்கும் என்று நம்பினீர். அறிஞர் உலகிலே நடமாடும் முதியோர் இந்தப் பிரச்சனையிலே நியாயம் வழங்குவார் என்ற நினைத்தீர். பார்ப்பனராகப் பிறந்தும், சேரியிலுள்ள மக்களிடம் அன்பும் காட்டும் செம்மலாயிற்றே, அவர் தலைமை வகித்து நடத்தும கூட்டத்திலே, கோயில் பணம் கல்லூரிக்குச் செலவாவது சரியே என்ற தீர்ப்புக் கிடைக்கும் என்று எண்ணிய, அவ்வளவு அன்புகலந்த அறிவுரை பேசினீர். அவ்வளவும் ஆரீயச் சிரேஷ்டரை அசைக்கவில்லை! ஆரிய போதையைக் குறைக்கவுமில்லை. தீர்ப்பு, திமிர்பிடித்த விதமானது. போயில் பணத்தை வேறு காரியத்துக்கப் பயன்படுத்துவது கூடாது என்பது துர்ப்பு! இதிலிருந்து அவர்கட்கு ஆரியப்போதை இருப்பது தெரிவது மட்டுமல்ல, தாங்களும் ஆரீய போதையிலே இருப்பதனாலேதான், போதனையால் அவர்தம் போக்கை மாற்றிவிடமுடியும் என்ற கருதினீர். நெற்றியிலே திருநாமமும் நினைப்பிலே திருப்பல்லாண்டும் கொண்ட பாகவத கோஷ்டிக்குப் பாத பூஜை செய்து, காணிக்கை தந்த கைகட்டி நின்று, ஆழ்வார் என்றோ பக்தன் என்றோ, ஆச்சாரத்திலே இலயித்துள்ள பரம பாகவதனென்றோ, பார்ப்பனர் வாயினால் பட்டம் பெற்றுவிட்டால் உச்சி குளிர்ந்துவிடும் பண்புடன் உள்ளவர் தாங்கள் என்பதை, நானறிந்தவன். என்போன்ற சுயமரியாதைக்காரர்கள் சுடுசொல் புகல்வதாலேயே, காரியம் கெட்டுவிடுகிறதென்றம் இதமாக எடுத்துரைத்தால் எதையும் சாதிக்கலாமென்றம் எமக்குரைக்கும் அன்பர்களைக் கேட்கிறேன், இதோ பரமபாகவதர் வெங்கடசாமி நாயுடுகார், வீரவைணவர், பேதியகுல நண்பர், திருமண் அணியும் திருவினர், தீப்பறக்கப் பேசாதவர், திருப்பணிகட்குப் பணம் உதவும் பண்பினர் அவர், அடக்க ஒடுக்கமாகப் பேசியதற்குக் கிடைத்த பதில் என்ன! ஆணவம்!!

கோயில்களைக் கட்டவும், அவைகளுக்கு மானியங்கள் விடவும், தமிழர்கள்! ஆனால் சொத்து, கல்விக்கும் செலவிடப்படக் கூடாது. ஆரியத்தைக் கொழுக்க வைக்கவே பயன்படவேண்டுமென, மேனாட்டுப் படிப்புப் படித்தும, ஆரியத்தைக் கைவிடாத அகந்தையினர் கூறி விடுகின்றனர். இந்நிலையிலே அவர்களிடம் எத்தனை காலத்துக்குச் சமரசம் பேசிக்கிடப்பது. எதற்காகத் தங்களைப் போன்ற தனவான்கள் இன்னமும் அத்தகைய தருக்கரின் திருவடி பணிந்து, பணம் தந்து வளர்க்கவேண்டும்! ஏன், ரோஷம் பிறக்கவில்லை? நீதிக்குக் கட்டுப்பட மறுப்போருடன் ஏன் குலவிக் கிடப்பது, அறிவே தெய்வம்! அன்பே தெய்வம்! என்ற கூறுபவர்கள், அதே அறிவுக்கும் அன்புக்கும் அரைக்காசும் செலவிடக் கூடாது, அன்ன வகைகளுக்கும் அதிர்வெடிகளுக்கும், வேதமோதும் வீணருக்கும் தரகு செய்யும் தருக்கருக்கும் ஆடம்பரத்திற்கம் அக்ரகார வளர்ச்சிக்குமே செலவிடப் படவேண்டுமென்று கூறிகிறார்கள், கூசாது. அவர்தம் கூற்றைக் கேட்டுக்கொண்டே, உதைக்கும் காலுக்கு முத்தமிட்டு வாழ்வது, முறையா? திவான்பகதூர் பாஷியம் அய்யங்காரிகளின் எண்ணமே இதுபோல இருக்குமானால், சாராரண மடிசஞ்சிகளைப் பற்றிக்கூறவும் வேண்டுமோ! அவர்களைக் கொண்டு அறிவுக்கு ஆட்சி போதையின் பயனற்றி வேறென்ன! பாடுபட்டுத் தேடிய பணத்தைக் கேடுகெட்ட பான்மையினருக்குக் கோட்டைகட்டிக்கொள்ளக் கொடுத்துவிடுவானேன், கொடுத்துவிட்ட பிறது கும்பிட்டுக் கூத்தாடி பிச்சை கேட்பானேன்? ஒரு இலட்சமா, ஒரு கோடியா, எத்தனை கோடி பணம், இந்தத் திருப்பதி போன்ற இடங்களிலே முடங்கிக் கிடக்கிறது! எவ்வளவு மக்களின் வாழ்வு பாழாகி விடுகிறது பணவசதியின்றி! இதனை எவரும் அறிவரே, எல்லாம் அறிந்தவராமே பார்ப்பன மணிகள் அவர்கட்குத் தெரியதா! என் பின்னர் அவர்கள் ஆலயம் பணத்தை அறிவுக்குப் பயன்படுத்துவதாகாது என்று கூறுகின்றன்ர. மமதை! சுயநலம்!! கிலி!!

தமிழருக்குத் தாங்களே குருமார், எனவே, தங்கள் சொல்லுக்குத் தமிழர் அடங்கித் தீரவேண்டும் என்ற மமதை இது தங்கள் போன்ற திருவடி தாங்கினால் வளர்ந்தது. கோடி கோடியாக இன்றுள்ள பணம் மட்டுமல்ல, பக்தியின் பெயரால் எதிர்காலத்திலும் பலகோடி ரூபாய்கள் பாமரரால் செலவழிக்கப்படுமானால், அதன் பலனை ஆரிய இனந்தானே அனுபவிக்கம், அதனைக் கொடுத்துககொள்ளலாமோ என்ற சுயநலம்! ஆலயப் பணத்தைக் கொண்டே அறிவை வளர்த்துவிட்டால், பிறகுக் கோயிற் பெருச்சாளிகளாகிய ஆரியருக்கு ஆதிக்கம் இராதே என்ற கிலி! ஆக, மமதை சுயநலம், கிலி என்பவைகளால் உந்தப்பட்டு ஆரிய புத்தர்கள் என்று லட்சிமிபுரம் சங்கத்திலே, தங்கள் வாதத்தைக் கவனிக்க மறுத்துவிட்டனர். இதுபோல, ஆரிய போதையிலே மட்டும் தாங்கள் வீழாமல் திராவிட வீரராக நின்ற பேசியிருந்திருப்ழுரானால், விளைவு வேறாகவே இருந்திருக்கும். இப்போதும் என்ன? வீறுகொண்ட திராவிட மாணவர்கள் இருவர் மூவர் அங்குவந்தோ எங்காயினும் சரியே நின்று வாதிடத் தயார். ஆலயங்களிலே உள்ள பொருளை மக்களுக்காக்க வேண்டுமென்ற அறிவுடன் அவர்கள் எதிர்நின்று பேசவும் வாதிடவும், வாதத்திலே வெல்லவும் தயாராக உள்ள வேதியர் எவராவது உண்டா, கேட்டுச் சொல்லும். ஜெகத்குருசங்கராச்சாரியார் முதற்கொண்டு செகரடேரியட் ஐயர்கள் வரையிலும் வந்து வாதிடட்டும். இருதரப்பினரும் வாதங்களையும் பொது மக்கள் கேட்டுத் தீர்ப்பளிக்கட்டும். இந்த விவாதத்திற்கான அமைப்பை ஏற்படுத்துவீரா! பாதி போதை கொண்டவன் முழுபோதை கொண்டவனுக்குப் போதனை பிரிவதுபோல, ஆரிய தாசராகிய நீர் ஆரியச் சிரேஷ்டர்கள் என்று நீர் கருதும் சிலர் முன் பேசிப் பயனில்லை. அவர்களுக்குத் தமது அறிவிலே, ஆண்மையிலே, வாதத் திறத்திலே நம்பிக்கை இருக்குமானால், வேச்சொலுங்கள் வெளியே, வாதிட! மூலையிலே கூடுவதும் முக்காட்டைப் போடுவதும கூடாது. மக்களிடையே இம்மாகானுபாவர்கள் வந்து பேசிப் பார்க்கட்டும. படிக்கப் பணமில்லை உணவுக்கு வழியில்லை. கிழிய இனி இடமில்லை உடைக்கு, தங்க இடமில்லை, வாழ வழியில்லை, சாவோ இன்னமும் வரவில்லை என்ற வதைகிறார்களே அவர்களிடம் வந்து நின்று, கூறச்சொல்லுங்கள், இன்னின்ன கோயிலிலே இவ்வளவு கோடி இருககிறது. ஆனால் அரைக்காசும் அதிலிருந்து உங்கட்காகச் செலவிடமாட்டோம் என்று, மக்களின் விழி அது போது கக்கம் கனலிலே, ஆரியக்குலத் தலைவர்களின் ஆணவம் கருகிவிடுவது திண்ணம் வரச்சொல்லுங்கள் வெளியே!

இப்படிக்கு,
பரதன்

(திராவிடநாடு - 25.06.1944
)