அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வில்லவன் கோதை விருந்து!

நண்பர்களே! என் அழைப்பிற்கிணங்கி நீங்கள் இந்த விருந்துக்கு வந்து என்னைக் கௌரவப்படுத்தியதற்காக என் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் விருந்து மண்டபம் செல்வோம் என்று அந்த அம்மையார், விருந்தினரை அன்புடன் அழைததார். சுவையுள்ள விருந்துக்கு முன்பு மதுர மொழியும் பெற்றோம் என்று மகிழ்ந்தனர் விருந்தினர். மண்டபம் புகுந்தனர். பெரிய மேஜை! எதிரிலே வரிசையாக நாற்காலிகள்! விருந்துக் காலத்திற்கேற்ற தட்டுகள், கோப்பைகள், யாவும் ஒழுங்காக இருந்தன. அமர்ந்தனர். அகமகிழ்வுடன், உண்ணத் தொடங்கினர், மிரண்டனர்! ஏன்? தட்டுகள் யாபும் காலியாக கிடந்தன!! பண்டம் இல்லை! பானம் இல்லை! தட்டும கோப்பையும் இருந்தன, கல்லாதவன் மனம்போல!!

விருந்துக்கழைத்த அம்மையார், நண்பரீர்! இவ்விருந்தின் நோக்கம், யாதெனில் போரிலே சிக்கி அவதிப்படும ஐரோப்பாவிலே, இதுபோது, பெரம்பாலான இல்லங்களிலே, இப்படித்தான் சாப்பாட்டு நேரத்தில் வெறும் தட்டுகளைக் கண்டு கலங்கம் நிலை இருக்கிறது. அந்தப் பட்டினியை உணர்த்தவே இந்த விருந்து நடத்தினேன்! நாம் விருந்துக்கு வந்தோம் உண்ணவில்லை. ஒன்றுமில்லாததால். இதுபோல் இல்ட்சக்கணக்கான மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்தக் கஷ்டத்தைப் போக்க நம்மாலான உதவி செய்யவேண்டும என்று உங்களைத் தூண்டவே இந்த விருநது ஏற்பாடு செய்தேன்! என்றாராம் அம்மையார்!!

விசித்திரமான விருந்தாக இருக்கிறதே என்று கேட்பீர்கள், விந்தையானது என்ற போதிலும், அதன்மூலம் விளக்கப்பட்ட உண்மை முக்கியமானது. விருந்தாக உணவுப்பொருள் தரவில்லையே தவிர அந்த அம்மையார், சோறின்றிச் சோரும் மக்களுக்கு உணவுத்தரும் உத்தமக் காரியத்தை அந்த விருந்தின் மூலம் நடத்தினார்கள். சூடான காப்பியோ, குளிர்ந்த பானமோ அரவில்லை என்றாலும், ஏழைகள் பால் இரக்கம், அகதிகளிடம் அன்பு எனும் உணர்ச்சியை அழகாக ஊட்டினார்கள். அன்ற விருந்து நடந்திருப்பின், நாவுக்கு உருசி, உடலுக்கு உரம், மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சி மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால் நடைபெறாத விருந்து அந்த விருந்தினர் கண்களுக்கும் கருத்துக்கும் வேலை கொடுத்துவிட்டது. கசிந்தனர், பின்னர், கஷ்டம் துடைக்க முனைந்தனர். அம்மையார், இளஞ்சூட்டோடு எடுத்து இனிமையான தேன் பெய்து மானின் கரியைத் தந்திருப்பினும், பதமாகக் காய்ச்சப்பட்ட பாலிலே, பாதுமை சத்துக கலந்து பருகச் செய்திருப்பினும், பழவகைகள் கொடுத்திருப்பினும், அந்த விருந்து, வரலாற்றுச் சுசடியிலே சேர்ந்திராது. ஏனெனில் மாளிகையிலே, இதைவிட மனோரம்மியமான விருந்துகள், அரண்மனைகளிலே அதனையும்விட ஆர்பாட்டமான விருந்துகள், தங்கக் கோப்பைகளிலே வார்க்கப்பட்ட திராஷை ரசத்தை வைரமாலை அணிந்த வனிதாமணிகள் எடுத்துத்தர, வயோதிகத்தை மறைத்துக்கொண்டு, வாசனையாலும் பேச்சாலும், வளைவு நிமிர்த்தப்பட்டும குழைவு சேர்க்கப்பட்டும வாலிபராகக் காட்சி தரும் சீமான்கள் பருகி, கோப்பையின் ரசத்தைப் பருகியதால் கிடைத்த களிப்பைவிட அக்கோமளவல்விகளின் புன்சிரிப்பு ஊட்டிய மகிழ்வே மேலானது என்ற எண்ணிடக்கூடிய எவ்வளவோ விருந்துகள் நடைபெற்றுள்ளன. எனவே, இந்த அம்மையார், விருந்தை விருநது முறையிலேயே நடத்தியிருந்தால், நாம், இதனைப்பற்றிக் கேள்விபட்டுமிருக்க மாட்டோம். ஆயிரத்திலே அது ஒன்று ஆகியிருக்கும். ஆனால், அம்மையார் அளித்தது, யாரும் உண்ணாத விருந்து! உணர்வுக்கு விருந்து! கஷ்டமனுபவிக்கும் உலகுக்கு ஆறுதல், விருந்து நடத்த இடம் இலண்டன், நடத்தியவர், ஒரு ஆங்கில மாது.

விருந்து என்று அழைத்ததும், விதவிதமான பண்டங்கள் கிடைக்குமென்று எண்ணிச் சென்றவர்கள், விருந்து நடந்த விதங்கண்டு வியந்திருப்பர் அந்த இலண்டன் விருந்திலே! வியப்பு இருந்திருக்குமேயொழிய அவர்களுக்கு மருட்சியோ, திகைப்போ ஏற்பட்டிராது. ஆனால், பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழரிடையே வீரம் வற்றிப் போகாதிருந்த நாளில் சேரன் செங்குட்டுவன் ஆட்சியிலே, ஒரு விருந்து நடந்தது இந்த இலண்டன் விருந்தைவிட விந்தையானது. அந்த விருந்தை உண்டவர், உண்மையிலேயே விரண்டுதான் போயிருப்பர்! ஏனெனில், அவர்கள் விருந்து பெறக்கூடிய யோக்யதையுடையவர்களுமல்ல. எதிர்பார்க்கவுமில்லை. கற்கோட்டையியே, காவலுடன், கைகாலிலே தளைகளுடன் இருக்க நேரிடும்! கஞ்சியே கிடைக்கும்! கடினமான வேலை இருக்கும்! எதிர்க்கவோ, ஏனென்று கேட்கவோ முடியாது!! இருண்டது நம் வாழ்வு! அணைந்தது ஆணவம்! இனி அவர்களின் ஏவலரானோம்! அந்தோ! அவர்களையோ நாம் அவதூறு செய்தோம்! அவர்தம் வீரத்தைப் பழித்தோம்! புன்மொழி புகன்றோம்! போர் மூண்டது, தோலிவி பெற்றோம்! சிறைப்பட்ட நம் சிரத்தின்மீது கருங்கற்களைச் சுமக்கச் செய்தனர்! தமிழகம், நமது நிலைகண்டு எள்ளி நகையாடிற்று! இந்நிலையிலே, நாம் நொந்த வாழ்க்கைதானே காணமுடியும். அடிமை வாழ்வுதானே கிடைக்கும்! என்ற கவலைகொண்டு, கண்ணீர் சொரிந்து, கூப்பிய கரமும குழைந்த சொல்லும் கொண்டவராய், இரு அரசரிகள்!! அவர்கள் எதிர்பார்ப்பது, எடுபிடி வேலை! காத்துக் கொண்டிருந்தது கஞ்சிக் கலயத்துக்கு! அவர்களுக்கு வந்தது விருந்துக்கு அழைப்பு! விருந்தென்றால் சாமான்யமான இடத்திலிருந்தல்ல, வேந்தன் விருந்துக்கு அழைத்தான்! வேந்தன் என்றால் வேறு யாருமில்லை, எந்த வேந்தன் வெற்றி பெற்றுத் தலைமீது கல்லேற்றித் தங்களைக் கால்நடையாகக் கங்கைக் கரையிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டு வந்தானோ, அதே சேரன் செங்குட்டுவன, தோற்ற இருவரை, மண்டியிட்ட மன்னரை, கல் சுமந்த காவலரை, சிறைப்பட்டவர்களை, அடிமைகளை, புத்தக் கைதிகளை விருந்துக் கழைத்தான்! அந்த அழைப்புக் கேட்டபோது அவ்விரு மன்னரும, எவ்வளவு மருண்டிருப்ர்! அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும்!! இலண்டன் விருந்துக்குச் சென்ற வெறும் தட்டுகளைக் கண்டவர்கள், விசித்திரம் என்ற மட்டுமே கூறியிருப்பர், சேரன் செங்குட்டுவன் விருந்துக்கு அழைக்கிறான் என்ற செய்தி கேட்டதும், அந்த இரு மன்னர்களும், மிரள மிரள விழித்திருக்கமாட்டார்களா? கைதிக்கு விருந்தா! வெறிறிவீரன் நம்மை விருந்து மண்டபத்துக்க அழைக்கிறாராமே, நம்ப முடியுமா? கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப் போகிறார்கள் என்ற செய்தி வந்திருப்பின், நம்ப முடியும், நமக்கு நேரிடக்கூடியது அதுதானே என்ற எண்ணுவோம். ஆனால், அவர் நமக்க விருந்தல்லவோ ஏற்பாடு செய்கிறாராம்!! ஐயோ! இதென்னமோ தெரியவில்லையே! என்ன நடக்க இருக்கிறதோ! என்று அவர்கள் கூறியிருப்பர், குளறி இருப்பர், கலங்கிப் போயிருப்பர்!

ஐயா! ஆரிய மன்னரே! உங்களுக்கு விருந்து!

பாவலாளிகளே! ஏதோ நாக்ள் எங்கள் கர்ம பலனை அனுபவிக்கிறோம். கைதிகளான எங்களைக் கேலி வேற செய்ய வேண்டுமா?

கேலியல்ல! உண்மைதானய்யா! உங்களுக்குதான் விருந்தளிக்கப்போகிறார், எமது வேந்தர், செருமுனைச் சிங்கம் சேரன் செங்குட்டுவன்

அப்பா! வீணாக எம்மை வதைக்காதீர். நீங்கள் காலால் இடும் வேலையைத் தலையால் செய்யக் காத்திருக்கிறோம். எங்கள் வழ்புதான் ஒழிந்துபோயிற்றே! சேர பூபதியின் அடிமைகளான எம்மை நீங்கள் விரும்பினால், கழுகுக்கும் நரிக்கும் விருந்தாக்கிவிடலாம்! எமக்கு விருந்து என்ற கூறுகிறீரே!! வேண்டாமய்ய. வெந்த புண்ணிலே வேலால் குத்தாதீர்

வெந்த புண்ணிலே வேலால்தான் குத்துகிறார் வேந்தர். ஆனால் அது உங்களையல்ல. எங்களை! உங்களுக்குக் கிடைக்கத்தான் போகிறது வயிறு வெடிக்குமளவு விருந்து

சேரன் செங்குட்டுவனிடம் தோற்றுச் சிறைப்பட்டு, சேரநாடு இழுத்துவரப்பட்ட ஆரியமன்னர்களான கனகன், விசயன் எனும் இருவருக்கும், சேரன் விருந்தளிக்க உத்தரவிட்டான். அதைக் காவலாளிகள், கனகவிசயரிடன் கூறியனபோது, உரையாடல் மேலே தீட்டியபடிதானே இருந்திருக்க முடியும்!! அம்மட்டோ!!

உண்மையாகத்தான் உத்தரவிடுகிறீர்களா மன்னவா

உண்மைதான்! ஏன்! இதிலென்னப்பா விளையாட்டு, விருந்து உடக்கத்தான் வேண்டும்

விருந்தா! வீண் கர்வம் கொண்டு, தமிழரின் வீரத்தைப் பழிந்துரைத்த வீங்கிய உடலினருக்கு விருந்தா! களத்திலே நிற்கொணாது கால் பிடரியில்பட ஓடிய கோழைகளுக்கா விருந்து! வேந்தே! நகைச்சுவைக்குரிய பலமோழிகளை நான் கேட்டுள்ளேன். ஆனால், எம்மொழியும் இம்மொழியின் முன் நிற்காது. தோற்றோடின தொந்தியினருக்கு விருந்தாம்!

அமைச்சரே! நாம் உத்தரவிடுகிறோம், நம்மால் தேற்கடிக்கப்பட்டு, இங்கு கல் சுமந்து வந்த கனகன் விசயன் எனும் இரு காவலருக்கும் விருந்து நடத்த வேண்டும்

கல்லைச் சுமந்துவந்த பெருவீரத்துக்கு மகிழ்ந்தா இவ்விருந்து

காரணமின்றிக் காரியமாற்றேன். கட்டளையை நிறைவேற்றம், காரணம் பிறகு விளக்குவோம். விருந்து நடக்கட்டும்

சேரன் செங்குட்டுவன், கைதியான கனகவிசயருக்கு விருந்திட உத்திரவு பிறப்பித்தபோது மன்னருக்கும் அவர்தம் அமைச்சருக்கும், உரையாடல் வேறுவிதமாகவா அமைந்திருக்க முடியும்!!


விசயா! கங்கைக் கரையிலே, தமிழ் வீரர்கள் தருக்களை வேரறப் பிடுங்கியெறியும் சூறாவளி போலச் சுழன்றனரே அன்ற ஏற்பட்டதைவிட இன்ற எனக்குக் கலக்கம் அதிகமாக இருக்கிறது. நமக்க விருந்தாமே!

ஆம், கனகரே! இந்த ஆச்சரியம், நமக்கூட்டும் அச்சம், இவ்வளவென்று அளவிட முடியவில்லை
விசயா, விருந்தென்று அழைக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது தெரியுமா?

கண்டதுண்டமாக்கி, நம்மைக் கழுகுக்கு விருந்திடுவார்கள்

அதில்லை, இதோ ஈட்டி! இதை உங்கள் மார்பிலே ஆழப் பதியச் செய்கிறோம்! இதுவாள், உமது வலது கரத்தைத் துண்டிக்கியோம், இது, கோடரி, உடலைப் பிளக்க உதவும், இந்தக் கூரிய அம்புகளால் உங்கள் கண்களைத் தோண்டி எடுத்துவிடப் போகிறோம், என்றெல்லாம் கூவப் போகிறார்கள், அந்த ஆயுதங்களையே நமக்கு விருந்தாக்கப் போகிறார்கள்.

கனகனும் விசயனும் கலங்கிப் போய் இது போலக்குளறி இருப்பர். வேறோர்புரத்திலேயோ, மலைபோன்ற இத்தோளைச் சுமக்கின்றேன் வீணன்! என் மண்டலத்தை அவமதித்த ஆரியருக்கு, என் படைமுன் ஓடிய பேதையருக்கு, என் கோல் முன் கூத்தாடிய குறும்பருக்கு, என் கண்முன், என் கட்டளைப்படி, கல்லைத் தலையிலே சுமந்துவந்த கசடருக்கு, நான், என் கரத்தால், வெற்றி வாளேந்திய கரத்தால், அவர்களை என் மன்னன் அடிப்பணியச் செய்த கரத்தால், அதோ பாரீர், அவ்விரு உருவங்கள், கங்கைக் கரையிலே மன்னர்களாக இருந்தன, நமது மன்னனைப் பழித்தன. இன்று நடைப்பிணங்களாயின என்று மக்களுக்கு அந்த மதியலிகளைக் காட்டிய கரத்தால், விருந்திட வேண்டுமாமே! ஈதென்ன கொடுமை! என்று கூறிச் சோகித்திருப்பான், வீரப்படைத் தலைவன் வில்லவன் கோதை.

சேரன் செங்குட்டுவன், மாடலன் எனும் பர்ப்பனரின் மொழியிலே மயங்கினான்! மயக்க வைத்தான், வீரவேந்தே! வெற்றி பல கண்டாய் இங்க, அங்கு வெற்றி காண வேண்டாமா? என்று கேட்டான். அங்கு என்றால் அந்த உலகம் என்றான்! அந்த உலகம், மேலுலகம் என்ற கூறினான். வீரவேந்தனிடம் வீணுரை புகுத்தினான். உரையிட்ட வாள் போலாயிற்று மன்னனின் மன உறதி! மாடலன், மன்னனை வென்றான்! களத்திலே கடும்புலி போலிருந்த மன்னனை, வேள்ளி செய்யச் சொன்னான். காசறை அத்ததுபோதும், வேதியருக்காக வாழ்! என்றான். கங்கைக்கரைவரை புகழ் பரப்பிய காவலன், அஞ்சா நெஞ்சுடைய அரசன் தமிழகத்தின் தன்மானத்தைக் காக்கவே தனக்கு வாளும் இருதோளம் உள்ளன என்று உறுதி கொண்டிருந்த வேந்தன், மாடலன் பேச்சால் மயங்கினான்.

அம்மயக்கத்தின் விளைவே மண்டியிட்டுக் கிடந்த ஆரிய மன்னருக்கு, விருந்திடச் சொன்னது! அதிலும் கனகவிசயரைத் தோற்கடித்த தீரப்படைக்க யார் தலைவனாக இருந்தானோ, அதே வில்லவன் கோதையையே அதே கனக விசயருக்கு விருந்திடச் சொன்னான். விரண்டுதான் போயிருப்பர் விப்பிர வேந்தர் இருவரும்! ஊர் மக்கள், திகைப்புண்டு போயிருப்பர்! ஆனால் மாடலமறையோன், மறைவிடத்திலிருந்து கொண்டு, புன்னகை புரிந்திருப்பான்!! வில்லவன் கோதை அன்னு அளித்த விருந்து இன்றுவரை தொடர்ந்து நடக்கிறது. இனியும் அது நடக்க வேண்டுமென்பதற்காகவே, சுயமரியாதை சலவாத சுத்த அரசியலை நடத்தத் துடிக்கிறார்கள், நமது தலைகளென்போர் - விப்பிரர் வில்லவன் கோதை அளித்த விருந்திலே விலாப்புடைக்க தின்றார்கள் எனபதல்ல, விசனத்துக்குரியது. மற்று எது எனில், தோற்றம் தோத்திரத்துககு ஏற்றவர்களானார்கனே ஆரியர், அந்த அளவுக்கு அரசன் செங்குட்டுவனை மட்டந் தட்டினானே மாடலன் என்ற இறையோன் என்பதை சிந்தனைக்குரியது சோகமூட்டக் கூடியது.

இலண்டன் விருந்து ஐரோப்பியவிலே இல்லதாரின் நிலையை உணர்த்திற்று, வில்லவன் கோதை நடாத்திய விருந்து வீணராம் வேதியருக்கு, நமது வெற்றிவீரர்கள் மயங்கி, இடமளித்ததைக் காட்டுகிறது.

முதலியார்வாள்தான் இப்போ பிறாமணாளைக் கண்டாலே போபிக்கிற, துவேஷிக்கிற கட்சியிலே சேர்ந்திண்டாராமே. ராமசாமி நாக்கர் கோஷ்டியிலே சேர்ந்த பிறகு, அவருக்கு, நம்மளவாளிடம் கிஞ்சித்தும் அன்பு இருக்காதேன்னோ என்று கூறிக் கவலைப்படும கணபதி ஐயரை, சோமசுந்தர முதலியார், செச்சே! அப்படித் தப்பாக எண்ணிவிடாதீங்க சாமி! எதுவோ தெரியாதா, இந்த எலக்ஷனுக்குகாகத்தான் ஜஸ்டிஸ் கட்சின்னு சொல்லிக் கொள்வது அதுதவிர, வேறே ஒன்று இல்லை என்று சொல்லிச் சமாதானப்படுத்துகிறார்.

ரொம்மத் திருப்தி! எங்கே உங்களுடைய ஞானமும் சீலமும், பக்தியும் ஆச்சாரமும் கெட்டுவிடுகிறதோ என்று பயந்தேன, வேறொன்றுமில்லை

அந்தப் பயமே வேண்டாம்! சீராமநவமி வழக்கப்படி நடக்கும், கோவில் காரியங்களிலும் குறைவு ஏற்படாது

பரம சந்தோஷம்! பாருங்கோ, நான் உண்மையிலேயே பயந்தே போனேன்

நல்லா பந்தீங்க போங்க, நான் என்னமோ அந்த ராஜீய காரியத்துக்காக ஜஸ்டிஸ்னு பேசுகிறேனே தவிர, நம்முடைய பழைய ஆச்சார அனுஷ்டானங்களக் கெடுத்துக் கொள்வேனோ என்ன!

ரொம்ப சிலாக்கியமாப் போச்சு. அடுத்த வாரத்திலே, ஜெகத்குரு சங்கராச்சாரிய ஸ்வாமிகள் இங்கு எழுந்தருளி, ஒரு வாரகாலம் தங்கியிருக்க ஏற்பாடாகியிருக்கு

வரட்டுமே! அவர் வருவதற்கு நாமெல்லாம் கொடுத்து பைக்க வேண்டாமோ, நம்ம பூந்தோட்ட பங்களாவிலேயே தங்கிருக்கட்டும்

ஆஹா! ஸ்வாமிகள் ஆனந்தமாக இருப்பார்

நம்ம ஆள் அம்பு இருக்கவே இருக்கு. அவருக்கு வேலை செய்யாமல் வேறே என்ன இருக்கு அதுகளுக்கு

ஆஹா! தடை என? ஏதோ ஜெகத்குரு சேவையாலே அந்த சென்மங்களம் புண்ணியம் பெறட்டும்.
செலவு வகைக்கு ஏதோ என்னாலானது தருகிறேன். அவருடைய சொத்து!

முதலியார்வாள்! இந்த ஒரு வார்த்தை ஒரு கோடிக்குச் சமம்! நான், வேண்டும்போது, அவஸ்யம் கேட்கிறேன்.

ஆரம்பச் செலவுக்கு அங்கேயும் இங்கேயும் அலைய வேண்டாம் சாமி! இப்பவே ஒரு இரு நூறு தந்துவிடுகிறேன்

இவ்விதமாகச் சோமசுந்தர முதலியாருக்கும் கணபதி ஐயருக்கும் பேச்சு நடக்கும்! இன்றுவரை, நமது வெற்றி வீரர்கள், வேந்தகர்

சரி! சிரமம் இல்லை எனக்கு

இவ்விதமாகச் சோமசுந்தர முதலியாருக்கும் கணபதி ஐயருக்கும் பேச்சி நடக்கும்! இன்றுவரை, நமது வெற்றி வீரர்கள், வேந்தர்கள், செல்வவான்கள், யாவரும, வில்லவன் கோதைகளாகவே உள்ளனர். தமிழகத்திலே மொழியை, கலையை, அரசை, தன்மானத்தை வளத்தை அழிக்க விருமபி ஆரியர் நடாத்திய தாக்குதல்களிலே, கங்களிலே, நமக்குச் சேரன் செங்குட்டுவர்கள் அவ்வப்போது கிடைத்து வந்திருக்கிறார்கள். அவர்களின் வீரத்தின் முன்பு, கனகவிசயக் கூட்டம், தோற்று வந்துதானிருக்கிறது. போரிலே புலிகளாகவே நாம் இருந்துள்ளோம், இன்றுங்கூடத்தான்! அரசிய்ல ஆற்றலிலே, நமது சர். சண்முகத்திடம், ஆரிய அரசியல் தலைவர்கள் என்ன செய்ய முடியும்! நமதுர் சர்.இலட்சுமண சுவாமியர்முன், ஆரிய, வைத்தியர்கள் என்ன செய்யமுடியும்! நமது சர்.இராமசாமியார் முன், எந்த ஆரியர்தான் சொற்பொழிவுத் திறனிலே ஈடாக முடியும்! நமது ராஜா சர் முன், எந்த ஆரியன் வியாபாரத் துறையிலே போட்டியிட்டுச் சமாளிக்க முடியும்! நமது மறைமலை அடிகளார், நாவலர் பாரதியார் ஆகியோர் முன் எந்த இராகவ ஐயர்களேனும் என்ன செய்ய முடியும்! ஆம்! இறுமாப்போடு கூடச் சொல்லலாம், தனித்தனித் துறையிலே தலையாய நிலையினைத் தமிழர் பெற்றுள்ளனர், திறமையால் தகுதியார், ஆரியரின் போட்டியை எதிர்த்து ஒழித்து! வீரவாளேந்திய வெற்றி வேந்தர்கள் காலமுதற்கொண்டு, விற்பன்னர்களான நமது மாபெருந் தலைவர்களின் காலம் வரையிலே, ஆற்றலிலே ஆரியனைத் தமிழர் தோற்கடித் துள்ளனர்! ஆனால், அன்று முதல் இன்றுவரை, நமது ஆற்றல்மிக்க தலைவர்கள், வில்லவன் கோதைகளாகவே உள்ளனர்! ஆனால், அன்று முதல் இன்றுவரை, நமது ஆற்றல்மிக்க தலைவர்கள், வில்லவன் கோதைகளாகவே உள்ளனர்! களத்திலே கோற்று, கல் சுமந்தனர் கனகவிசயர்! மாடலனின் சொல்லைச் சுமந்தான், கனகவிசயர் தலையிலே கல்லை ஏற்றிய சேரன்! மாடலன், கனக விசயர் தோற்றது மறந்துவிடும்படியான தந்திரக் காரியம் செய்தான். வில்லவன் கோதை விருந்தளித்தான், ஆரியருக்கு விருது தந்தான். இன்றும் சேரன் செங்குட்டுவன் போலக் களத்திலே சீர்த்தியுடன் உலவும் மாவீரர்கள்போல் உள்ள தலைவர்கள் பலர் உளர் தமிழகத்திலே! ஆனால் அவர்களின் மனையிலே கூடஅல்ல, மனதிலே மாடலன் உறைகிறான்!! வெற்றிவீரரை, அந்த மாடலன் மடக்குகிறான் மயக்கமூட்டுகிறான்!! அவன் மொழி கேட்டு, வில்லவன் கோதை விருந்து ளை, நமது மாவீரர்கள் இன்றம் நடத்துகிறார்கள், வீரத்தை இழக்கிறார்கள், வீணர்கள் கொழுக்கிறார்கள்! வில்லவன் கோதைவிருந்து வீரன் வீணரின் வெற்றுரையிலே மயங்கி வீழ்ந்ததற்க ஓர் எடுததுக்காட்டு. நன்பரீர், இதனை நீவிர் எடுததுக்காட்டுக நாட்டினருக்கு. இத்தகை வில்லவன் கோதை விருந்துகள் இனியும் நடைபெற இடந்தராதீர், இன அழிவுக்கு வழி கோலாதீர். இலண்டன் விருந்து நடத்திய அம்மை அறிவு பரப்பினர், வில்லவன் கோதை அளித்த விருந்து அழிவு விதைக்க உதவிற்று. அந்த விருந்தையும் இந்த விருந்ததையும் ஒப்பிட்டுப் பாருங்கள்

(திராவிடநாடு - 29.04.45)