அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விருந்திலே, மருந்து!

தூய்மையே வருக! சுடரே வருக!
வாய்மையே வருக! வருகயெந்தாய்!

தூய்மையும் வாயமையும் சுடர்விளங்கம் தந்தை போன்றாரைத் தண்டமிழ் பருகித்தவழுத் மைந்தர்கள், வருக! வருக! என்று. அன்புடன் அழைத்தனர், மாலை பலசூட்டி மகிழ்வினைக் காட்டி, தந்தையைத் தனயர் பரிவுட,ன் அழைத்தல் முறைதானே, என்பர். இத்தந்தையினை இத்தனையர், காரணங் கூறுவது, தூய்மையே! சுடரே வருக் என்று அழைக்கவில்லை கண்ணே இழந்தவனைக் கண்ணாயுரமென்று கூறும் பான்மையுலே, அமைக்கவில்லை பா. வரவேற்வு இதழாரம்பத்திலே,

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிற்றின் பான்மைத் தாகி
மலர்தரு முகத்தெழி லிளநகை பூப்பஇத்
தலம்பெறு தவப்பய னாகித் தமிழ்த்தாய்
துயர்கெட வெழுந்த தோன்றால்!

என்று கூறினர். கூறுமுன்னர் தந்தையாரின் முகத்திலே, எழில் இளநகை பூத்திருந்ததோ, இல்லையோ, நாமறியோம். ஆனால் ஞாயிறே! தவப்பயனே! தோன்றால்! எனும் வாழ்த்துரைகளைக் கேட்டபிறகு, அறுபதாண்டானாலும, முகம் மலர்போலாவது முறையே. அழகிய புன்சிரிப்புத் தவழ்வதும் இயல்பே!

தந்தை, அந்தப் போதிலே சிந்தித்திருப்பார், இஃது என்னை! தமிழ்த்தாய் துயர்கெட எழுந்த தோன்றால் என்று தம்மை அழைக்கின்றனரே! நாம் செய்ததில்லையே அப்பணியினை, அன்றொருநாள் தமிழ் நாடெங்கும் ஆபத்து! ஆபத்து! இந்தியால் வந்தது தமிழருக்கு ஆபத்து! என்று ஆர்ப்பரித்தவரும், அருஞ்சிரை புகுந்தவரூ, அந்தச் சுயமரியாதைக்காரர்களன்றோ! நாம், அகத்திருந்தோம், புறத்தே நடந்தவை பற்றிப் போர்வீரர் கூறக்கேட்டோம். களம் சென்றோமில்லையே! செந்தமிழ் நாடே இதனை அறியுமே! உண்மை இங்ஙனமிருக்க, இவர்கள் தமிழ்த் தாயின் துயர்கெட நான் பணியாற்றினேன் என்று கூறுகின்றனரே இதென்ன விந்தை! என்று, அவர், பாலிய மொழிபயின்ற கலியான சுந்தரனார் எண்ணாதிருக்க முடியாது. அவரைத்தான், நாம் மேலே தீட்டியுள்ளபடி, திருவாய் மொழிகூறி, லல்குடி திருவள்ளுவர் கழகத்தார் 03.01.1944-ல் முறுவலுடன் முகமன் கூறிவரவேற்றனர். ஆண்டு அறுபதாயிற்று. அதனால் கண்ட பயன் யாது, என்ற கவலை, அன்பர் கலியாணசுந்தரனாருக்கு இல்லை! அக்கவலை, அவருடைய வயோதிகத்தை வாட்டக் கூடாது என்ற நல்லெண்ணத்தால் குளிரால் நடுங்கிய மயிலுக்குப் பட்டுப்போர்வை யீந்த பேகனும், முல்லைக்கொடி படர இடமின்றித் தவிக்கக்கண்டு தேரை ஈந்து பாரியும், கத்தும் தவளையின் சத்தம் அரகரவென்ற முறையிலே செவியில் பட்டதால் பொன்னும் பொருளும் ஈந்த வேந்தனும் இருந்தார்களாமே தமிழகதித்லே, அந்த முறையிலே, வயோதிகருக்கு வாத்துரை எனும் விருந்தை ஊட்டினர் தமிழர், கவலை தீர்ந்து களிக்கட்டும, முதுமையின் முடக்குவாதத்திற்கு மேற்பூச்சாக இந்த வரவேற்ஙபுகள் அறுபதாண்டு நிலைவு விழாக்கள் இருக்கட்டும, என்று ஒரு வயோதிகருக்கு, நோய் தீர மருந்திட்டொம் என்ற களித்தனர். மயிலுக்கு ஆடையும் முல்லைக்குத் தேரும் மண்டூகத்துக்கு மணியும் தந்த செயல், அறிவுலகத்திலே நகைப்புக்கிடமாவதாகும்! பக்தியால் எதனையும் புரிவர் என்று கூறும் விசித்திர உலகிலேயுங்குட, பெற்றவர்களின் பெருமையை விளக்க அல்ல, ஈந்தவர் பெருமையை விளக்குவதே, மேற்கண்ட சம்பவங்களின் நோக்கமாகும் என்ற கருத்து இருப்பது ஏடுபல பயின்ற பாட்டுமொழிப் பண்டிதருக்குத் தெரியும்! அன்பர் கலியாணசுந்தரனாரின் அறுபதாண்டு நிறைவுழாவம், பெற்றோரின் பெருமையை விளக்குவதைவிட, தந்தோரின் தன்மையை விளக்கவே மெத்தவும் பயன்படுவதாகும். ஆனால் அவரோ, பெருஞ்செயல் புரிந்தோர் மெத்தவும் பயன்படுவதாகும். ஆனால் அவரோ, பெருஞ்செயல் புரிந்தோர் புகழ்ச்சிக்குரியோர், என்னைப் பலரும் புகழ்கின்றனர், எனவே நான் பெருஞ்செயலைப் புரிந்தவன்! என்று தடுமாற்றத் தர்க்கவாத முடிவைக்கொண்டு மூலையிலே இனி இரேன், என்று கூறிப் பவனிவரத் தொடங்கினார். அத்தகைய பவனியிலே, லல்குடியிலே, வள்ளுவர் கழகத்திலே சென்ற வரவேற்ப்புப் பெற ஒரு வாய்ப்புப் பெற்றார். பேகனும் பாரியும் பெருங்கொடை ஈநதது போல் லால்குடிப் பேரன்பர். அன்பர் கலியாண சுந்தரனாரின் அகம் மகிழ, அணியழகுடன் வரவேற்புக் கூறினர். ஆனால் வெறும் புகழ்ச்சியைத் தருவது எற்றுக்கு பயன்படும் என்று எண்ணினர். அவர்களின் மனத்திலே, தோன்றிய கருத்தினைக் கோத்து. வருக! வருக! என்ற வாழ்த்துடன் இணைத்தனர். முல்லையருகே ரோஜா இதழும், அதை அடுத்து தவனமும், இணைத்தது போல! வருகயெந்தாய்! என்று அழைத்து வந்த தந்தைக்கு வள்ளுவர் கழகத்தினர், தமிழகம் கலியாண சுந்தரனாருக்கு எதைக்கூறுமோ அதே கருததினையே அழுகுறக் கூறினர். அதுகேட்ட அவர்தம் மலர் முகம் உயர்ந்ததாம், இளநகை மறைந்ததாம், எழில் சாய்ந்ததாம், ஏனோ பாவம்!

தந்தையாய் நின்னைப் பெற்றும் தளர்ந்தனம்
மைந்தராம் எம்மை
மறந்தனை அந்தோ
அயலார் எம்மை அழித்திட விளைத்த
புயலிடைத் தப்பியும்,
பூதலில் பிழைத்தும்
நிலை கலங்கினம், எம்
மருங்கினும் எதிர்ப்பே
அலை என எழுந்த
அனைத்தையும் கடந்தோம்.

என்று கூறினர், வள்ளுவர் கழகத்தினர். நெடுநாள்களுக்குப் பிறகு காண நேரியடமு நண்பரிடம், காணாக் காலத்தே பட்ட கஷ்டத்தைக் கூறிடுவது இயல்பு! அதிலும், தந்தையே! என்று அன்புடன் கலியாண சுந்தரனாரை, வள்ளுவர் கழகத்தினர் அழைத்தனர், எனவே, அவரிடம், அதுகாறும் தாமடைந்த துயர்தனைக் கூறல் முறை என்பது மட்டுமல்ல, முக்கியமுங்கூட! அயலராகிய ஆரியர் மூட்டிவிட்ட இந்தித் தீயார், இடர்ப்பட்டதையும், ஆரியப் புயல் வீசித் தமிழ்ப் பூங்காவை அழிக்க முற்பட்டதையும், அவ்வித இடையூறுகளினின்றும், தமிழர் தப்பியதையும், தந்தைக்குக் கூறினர். இவ்வளவு இன்னலை இவர்கள் அனுபவித்தபோது, தந்தை என்ன செய்துகொண்டிருந்தார் என்பதறிவிக்க வேண்டுமல்லவா, அதன் பொருட்டு, வள்ளுவர் கழகத்தினர் மேலும் கூறுவராகி, இச்சீரடிகளைச் சேர்த்தனர் வரவேற்புரையிலே!

இத்தனை யிடர்ப் டெய்தியு முன்னை
சித்தந் தன்னில் சினந்தோ மில்லை
மாற்றார்க்கு குழைத்தனை மனது களைத்தனை!
போற்றா விட்டனை பொழுதுகள் கழிந்த!
அறுப தாட்டை யடைந்து ழப்பின் உறுப்பும் உளமும் தளர்ந்தனை யேனும்
இன்றுநீ எங்கட்கு இரக்கங் காட்டின்
என்றும் நின்பணி கேட்டு ஏற்பன புரிய
பல்லாயிரருள் பக்கங் குழுமி
சொல்எதிர் பார்போம் துணைஅடி போற்றி!
காட்டிக் கொடாதீர்! கலையும் கஞ்சியும்
ஊட்டுவ ரில்ல ஊரவர் தூற்றும்!
தாயும் தளர்ந்தால் தனர் என்புரிவோம்
வாயம் கையும் மனமும் ஓய்ந்தனம்!

ஐயனே! நாங்கள் மிகவும் இடர்ப்பட்டோம், என்றாலும் உன்மீது போங்கொள்ளவில்லை. நியோ, எதிர்களுக்கே உழைத்தீர்! அதனால் மனங்களித்தீர்! உமது வாழ்நாளை வீணாக்கினீர்! வயதோ உமக்கு அறுபது ஆகிவிட்டது. உடலும் ய்ந்துவிட்டது உள்ளமும அவ்வாறே! இதுகாறும் மாறிவிட்டு எதிரிக்கு உழைத்தீர் என்றாலும் சென்றதை மறப்போம் இனிமேலும் எம்மிடம் என்புகொண்டு, அதுக்காக பணியுரிய வந்தால் உமது சொல்கோட்டு நடக்கப் பல ஆயிரவர் நாங்கள் இருக்கிறோம் ஐயா! இனியும் எங்களைக் காட்டிக் கொடாதுர்!! என்று கலியாணசுந்தரனாரை வள்ளுவர் கழகத்தினர் கேட்டுக்கொண்டனர்.

புகழரை கேட்ட பின்னர், உபதேச உரை அருளிவிட்டு வரலாம் என்றே, புதுமையைக் காணப் பழமையில் புரளும் பாவாணர், லால்குடி சென்றார். அங்கோ, புகழ்ந்துரைத்துவிட்டு, இதுவரை எதிரிக்கு உழைத்தீர். எம்மைக் கெடுத்தீர், இனியேனும் காட்டிக் கொடுக்காதீர் என்று கூறிடும் கழகத்தினரைக் கண்டார்! உண்மையே, அவர்கள் உரைத்தனர். எனினும் கலியாணசுந்தரனாருக்குக் கடுங்கோபம் பிறந்ததாம். கனல் கக்கினாராம் புனலைச் சொரிந்தாராம். பிடிசாபம் என்றாராம், இஃதோ வரவேற்பு எனக்கேட்டாராம்! அவர்நிலை, எவ்வாறு இருநதிருக்குமென்பதை விளக்கத் தேவையில்லை.

பொதுவாழ்விலே, அப்புனிதர் நுழைந்தநாள் தொட்டு ஆரியருக்கே உழைத்தவர், அந்த உண்மையை, அவருக்கு எடுத்துரைத்த, நெஞ்சுறுதியும் நேர்மைத் திறனும், லால்குடித் தோழர்கட்கு இருந்தது காண நாம் மிக மகிழ்கிறோம். இச்சகம் பேசும் நச்சுக் குணமின்றி, மனதிற்பட்டதை மெய்யை, ஆண்மையுடன், அவர் முன் கூறின மாண்பினை நாம் பாராட்டுகிறோம் புகழ் எனும் போதையை அப்புலவருக்கு ஊட்டி அவரை ஆட்டிவைக்கும் சுயநலமிகள் பலருண்டு, அவர்களின் புகழுரைகள், பொய்யுரைகளாக அமைவது என்பது மட்டுமல்ல, அவர் முன்னால் அதுபோல் கூறிவிட்டு, அவர் காணாதபோது, ஏதறிவார் அந்த முதியோர்! எந்த நேரமும் ஆரியருக்கே வந்தனை புரிவார்! நொடித்தவரை நிந்திக்கலாகாதென்றே, பலகூறிப் புகழ்ந்தோம் என்று பழிபேசுவோரையும் நாமறிவோம். வள்ளுவர் கழகத்தினர், வாய்மையைக் கைவிடாது, அறுபதாண்டுக்குப் பணிபுரிய வேண்டுமென்று, விருமபு, அதனை அவர் முன்னிலையில் எடுத்துரைத்தனர். இது அவரை இழித்துப்பேசிய தென்றோ, வரவழைத்து வம்புக்கு இழுப்பதென்றோ, தோன்றிடக்கூடும் அந்த மயக்கமும் கோபமும் மங்கிய பின்னர், கலியாணசுந்தரர், யோசிப்பின், நிக்கயமாக உணர்வார், தமிழர் இடர்பல பட்டகாலை, இவர் ஆரியருக்குப் பணி புரிந்து வந்தது பாதகம், என்பதனைக் காட்டிக்கொடாதீர் என்ற, உரை, அவர் செவிகளிலே ஒலித்தபடி இருக்கும். லால்குடித் தோழரகள் கூறிய, இம்மணிமொழி தமிழகம், அவருக்குக் கூறுமொழி என அவர் கொள்ளல் வேண்டும், விருந்துக்கு அழைத்தீர், இந்த விபரீதம் விளைத்தீர் என்று கேட்டாராம் கலியாணசுந்தரனார், விருந்துக்கு அறுசுவை உண்டிஉண்டு! இனிப்பொன்றே போதும் என்று, உண்பவரும் விருந்திடுவோரும் கருதார்! அறுசுவை உண்டியிலே இனிப்புப் போன்றது. அவருக்களித்த வரவேற்பிலே காணப்படும புகழுரைகள்! கைப்புப் போன்றது, அவருடைய பூர்வ கருமத்தை எடுததுரைத்தது, காரம், காட்டிக்கொடாதீர், என்று கேட்டுக்கொண்ட பகுதி!! இந்த அறுசுவை உண்டியை அறுபதாண்டு அருங்கலையாளருக்கு அன்பு காரணமாக அளித்த லல்குடி, வள்ளுவர் கழகத்தாரை நாம் பாராட்டுகிறோம், ஏனெனில் செந்தமிழின் சுவையிலே, தம்மை மறந்திருக்கும் கலியாணசுந்தரனாருக்கத் தமிழகத்தின் கருதது இதுவென எடுத்துக் காட்டினர் அக்கழகத்தினர் புகழுரைகளைக் கேட்டுக்கேட்டுப் பூரித்ததால், பூசுரருக்கத் தோழராக இருந்துவரும் கலியாணசுந்தரனால் கலையையும் காவியத்தையும் புராணத்தையும் பாதுகாப்பேன் சுயமரியாதையைச் சமருக்கு இழுப்பேன் என்று எக்காளமிடத் துணுவுகொண்டர். புகழுரைகேட்ட போதையால், பித்தம் மேலிட பித்தத்தின் விளைவாக இப்பேச்சளர் பிதற்றுகிறார் என்ற நாம் எண்ணி இந்நோயை முற்றவிடக் கூடாதே என்று சஞ்சலப்பட்டோம், லால்குடி அன்பர்கள் கலியாணசுந்தரனாரைக் கப்பிக்கொண்டிருந்த அந்தப் பித்தத்தைப், போக்கினர், விருந்திலே மருந்து தந்து!!

(திராவிடநாடு - 30.01.1944)