அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விசித்திரம்!

திருவாங்கூர் கொச்சி சட்டசபை சபாநாயகர் தேர்தல் இந்த வாரம் நடைபெற்றது. கே.பி.நீலகண்ட பிள்ளை என்னும் சோஷியலிஸ்டு அபேட்சகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சட்டசபையில் கட்சிகளின் நிலை காங்கிரஸ் 46, ஐக்கிய முன்னணி 31, சோஷியலிஸ்டு 11, திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 8, சுயேச்சைகள் 11, கொச்சி கட்சி 1.

சோஷியலிஸ்டுகள் 11 பேர்தானே! எப்படி அவர்களுள் ஒருவர் சபாநாயகராக முடிந்ததெனக் கேட்கலாம் முற்போக்குக் கொள்கைகள் பேசும் சோஷியலிஸ்டு கட்சிக்கு, பிற்போக்கு ஸ்தாபனம் காங்கிரஸ் ஆதரவு கிடைத்ததாம். பழைய பாசம் – புது உறவு!

அவருக்கு மொத்தம் 58 ஓட்டுகளும் அவரை எதிர்த்த சி.அச்சுதமேனன் எனும் கம்யூனிஸ்டுக்கு 46 ஓட்டுகளும் கிடைத்திருக்கின்றன.

சோஷியலிஸ்டுத் தோழருக்கு ஆதரவாக வந்த ஓட்டுகள் விபரம், காங்கிரஸ் 46, சோஷியலிஸ்டு 11, சுயேச்சை 1.

கம்யூனிஸ்டுத் தோழருக்கு ஆதரவாகக் கிடைத்த ஓட்டுகள் 6 திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 8, சுயேச்சைகள் 10, ஐக்கிய முன்னணி 29, கொச்சி கட்சி 1.

யார் யாருக்கு, யாரார் ஓட்டளித்திருக்கிறார்கள் பாருங்கள். காங்கிரசைக் குறைகூறும் சோஷியலிஸ்டுக் கட்சி இப்போது கூடிக்குலாவுகிறது! ‘முற்போக்கு‘, ‘பிற்போக்கை‘ கட்டியணைக்கிறது! எங்கே காணமுடியும் இநத் விசித்திரத்தை?

திராவிட நாடு 30-3-52