அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“விதைக்காது விளையும் கழனி”
விதைக்காது விளையும் கழனி எப்படி இருக்கமுடியும்? ஏன் முடியாது, உழைக்காது வாழும் மனிதர்கள் வாழும்போது, விதைக்காது விளையும் கழனி ஏன் இருக்காது? உழைக்காது வாழும் மனிதர்கள் இருப்பது மட்டுமல்ல, ஊரையே ஆட்டி வைக்கும், அரசனையே ஆட்டிப் படைக்கும் மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் - இருக்கிறார்கள். அரசன் உழைப்பதில்லையே தவிர, ஊர்ககோபத்துக்கும், வேறு வேந்தரின் படை ஏடுப்புக்கும் அஞ்சி வாழ வேண்டும், மன்னன் இளப்பிறந்தவன் என்ற எண்ணம் மக்கள் மனதிலே இழப்பதிந்திருக்கும் வரையிலேதான், மன்னன் மணிமுடி தரித்துவாழ முடியும், கோபமோ குமுறலோ கொப்பளித்தால், கோல் உடையும். ஒரு அரசு போனால் மற்றோர் அரசு கிடைக்கும், என்ற நம்பிக்கையோடும் அவன் இருக்க முடியாது. முடி கவிழ்ந்தால், பிறகு மீண்டும் சிரம் ஏறும் என்றும் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் அரசர்களுக்கு இருக்கும் இந்த ஆபத்துங்கூடத் தங்களை ஆண்டமுடியாதபடியான அரண் அமைத்துக் கொண்டு, ஆண்டிக் கோலத்திலே இருப்பினும் அரசபோகத்தையும் ஆனாயாசமாகப் பெறக்கூடிய நிலைபெற்று, நெடுங்காலமாகவே அந்தநிலை குலையாமல் பார்த்துக் கொண்டு வாழும் கூட்டம் ஒன்று இருக்கிறது.
***

ஆச்சரியமான பல உண்மைகள் உலகில் உண்டு. பெரிய தோர் யானை, பித்துப் பிடித்ததுபோல் ஓடும், எதிர்பட்டோரையும் தாக்கும், அதன் கலக்கத்துக்கும் கோபத்துக்கும் காரணம் தெரியாமல், மக்கள் திகைப்பர். கடைசியில் பார்க்கப்போனால், அதன் காதிலே புகுந்து கொண்ட சிறுவண்டு செய்த சேட்டையால், குன்றென உடல் படைத்த கரி, அங்ஙனம் இடி ஆலைந்து, ஆபத்தையும் உண்டாக்கிற்று என்பது தெரியவரும். எவ்வளவு சின்னஞ் சிறுவண்டு, எத்தனை பெரிய உடலை ஆட்டிவிட்டது என்று பிறகே தெரியவரும். மிருகங்களிலே மட்டுமென்ன, மனிதர்களிலேயும் இந்த விசித்திரம் உண்டு. வீராதி வீரனாயிற்றே இவன், எப்படி ஒரு வீணனிடம் அடங்கிக் கிடக்கிறான், என்று ஆச்சரியப்படுவோம் சில சம்பவங்களைக் காணும்போது, ஆனால் கொஞ்சம் ஆராய ஆரம்பித்தால் தெரிந்து கொள்வோம், ஒருதுடியிடைக்கு அந்த வீணன் தூது போகிறவன் என்று சூக்ஷமத்தை. நமக்கு, அவள் ஒரு மாது அவன் ஒரு வீணன், ஆனால் அந்த வீராதி வீரனுக்கோ, அவள், இன்பம், அந்த வீணன் இன்பபுரிக்கு அவனை அழைத்துச் செல்பவன். எனவே இன்பபுரியில் குடிஏறிய வீரன், யாரால் அந்த இன்பபுரி வாசம் தனக்குக் கிடைத்ததோ, அவனை வீணன் என்று எப்படிக் கருதுவான்! அவன், மற்றவர்களுக்கெல்லாம் வீணன்தான்! அவனுக்கு அப்படி அல்லவே! விலை மதிக்கொணாத இன்பத்தை யன்றோ அவன் அந்த வீரன் பெறும்படிச் செய்தான். இந்த மர்மம் சுலபத்திலே வெளிவரக் கூடியதல்ல. சொன்னாலும் பலர் நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட, ஏதாவது ஒருமர்மம் இருந்தாலொழிய வீராதிவீரர் பலர், மிகச் சாமான்யர்களிடம், அடங்கி நடப்பதன், இரகசியம் தெரிந்துகொள்ள முடியாது போய்விடும்.
***

வரலாற்றிலே, வேந்தர்பலர், சேடிகளிடமோ சேனாதிபதிகளிடமோ, சிரத்த முகத்திடமோ கூரியவாளிடமோ ஆசையாலோ பயத்தாலோ, அடங்கி விட்டதற்கு இதாரம் இருக்கிறது. இவை கூட, ஆச்சரியமில்லை. கூரிய வாளோ, குளிர்மதிப் பார்வையோ கூட இல்லாமல், நிமிர்ந்த பார்வையுடன் உள்ள ஒருசிறு கூட்டத்திட்டம் மன்னாதி மன்னர்கள் மண்டியிட்டு இருக்கிறார்கள். மக்களின் சீற்றத்தைப்பற்றிக் கூட அவர்கள் அவ்வளவு அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். அந்தச் சிறுகூட்டத்தின் சீற்றத்திடம் அவர்கள் மிகமிக அஞ்சுவார்கள், ஏனெனில், இந்த மக்களின் சீற்றத்தைக் கிளப்பவும் நிறுத்தவும், வேறு மன்னர்களின் விரோதத்தை ஐவவும், சினேகத்தை வாங்கித்தரவும்., அந்தக் கூட்டத்தினால் முடியும். ஒரு புலிக்கு இருக்கும் வலுவை அளவிட்டுக் கொண்டு அதற்குத தகுந்தபடி, ஆயுதபலத்தைத் தேடிக் கொள்ளலாம். ஆனால், பல புலிகளை, ஏககாலத்திலே, ஏவிவிடக்கூடிய காட்டரசனின் வலுவு எந்த அளவு என்று எப்படிக் கணக்கிட முடியும். அதிலும் சுகபோகத்தையும், சொந்த நலனையும் பாதுகாத்துக்க் கொள்வதிலே அக்கரை கொண்டுவிட்டால், அந்தச் சுகபோகத்தின் சுவையிலே இலயித்து விட்டால், அதனை இழக்கத்துளியும் மனம் நிலையிலே, அந்தச் சுகபோகத்தை அழித்துவிடுவதற்கான சக்தியைப் பெற்றவரிடம், அடிமையாகித்தானே தீரவேண்டும். இரும்புப் பெட்டியிலே உள்ள எண்பது இலட்சத்திலே ஆசை இருக்கும் வரையில், இடுப்பிலே தொங்கும் பெட்டிச் சாவியை, பெற்ற மகனைவிட அதிகப் பிரியமாகவும் ஜாக்ரதையாகவும் கவனித்துக் கொள்வது சகஜந்தானே!
“அரசே! ஆவந்திநாட்டு மன்னன், அழகில் மன்மதன் - அறிவில் பிரகஸ்பதி - செல்வத்தில் குபேரன்” என்று எடுத்துச் சொல்லவும், “ஆவந்திநாட்டுக்கு மன்னனாக உள்ளவன் அழிவின் சின்னம், ஆசுரபலம் அவனுக்கு, அக்ரமமே அவனுக்கு ஆமிர்தம், ஆபலைகள் அழிப்பதே அவனுக்கு ஆனந்தம்!” என்று கூறவும் முடியும், எவ்விதம் கூறினாலும் கேட்கவும், நம்பவும், நம்பிக்கையின் பலனாக ஆவந்தி நாட்டுக் காவலனை அழிப்பது அறச் செயலாகும் என்று துணியவும், வங்க, கலிங்க, காம்போஜம் முதலிய நாட்டு மன்னர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றால், இவ்வளவு மன்னர்களை ஐவும் நாவலிமை படைத்தவனை ஆவந்தி நாட்டவன், எப்படி அலட்சியமாகக் கருதமுடியும். அதிலும், இந்தச் செல்வாக்குப் படைத்தவன், தன்னைப்போல ஒரு மன்னன் என்றால், பொறாமையால் தூண்டப்பட்டு இங்ஙனம் தூற்றுகிறான், பேராசையால் பிதற்றுகிறான் என்று கருதலாம், சொல்பவனோ சொர்ண சிம்மாசனத்தின் மீது இல்லை, கமண்டலமெடுத்துக் கொண்டு காடுகற்றும் நிஷ்காமகர்மிக் கோலத்திலே காணப்படுகிறான்! சாந்தம் குடிகொண்ட மனம்! தேஜஸ் தவழும் முகம்! தவத்தால் இளைத்த தேகம்! நீண்ட ஜடை! பற்று அற்ற நிலையைக் காட்டும் பார்வை! இவ்விதமான கோலத்திலே உள்ளவன், கூறும் போது, எப்படி அவனைப் பொறாமைக்காரன் ஏன்றோ, பேராசைப் பித்தன் ஏன்றோ கூறமுடியும்? இந்த விதமான சிக்கலான நிலைமையிலேதான், பண்டைய நாட்களிலே, நமது மன்னாதி மன்னர்கள், மாவீரர்களைக் கொண்ட படைகளின் தலைவர்கள், சிறுகூட்டத்திட்டம் அடிமைப்பட்டனர், அந்தப் பரம்பரை அடிமைத்தனம் இன்றும் போகவில்லை! முடியும் நவம்பர் சிரத்தினின்றும் போய்விட்டது, சிறு கூட்டத்தின் ஜடையும் போய் விட்டது. ஆனால், நம்மவர், அந்தச் சிறு கூட்டத்திடம் இன்றும் சிக்கிச் சீரழிந்தே வருகின்றனர் - தப்பும் மார்க்கம் தெரியாமலும் திகைக்கின்றனர்.
***

ஏசுநாதருக்கு ஆமோகமான செல்வாக்கு ஏற்பட்டது. அவருடைய வார்த்தை வேதமாகிவிட்டது. ஒரோப்பாவெங்கும் ஏசுவின் விசுவாசிகள் அதிகரித்தனர். அவருடைய புகழ் எங்கும் அதிகமாயிற்று. ரோமாபுரி சாம்ராஜ்யாதிபதியிடம், தங்கக் கோபுரங்கசள் அமைக்கப்பட மாளிகைகள், தோல்வியறியாத துருப்புகள், தொகை தொகையாகத் துதிப்பாடகர்கள்! பவனி வந்தான், பரமாக்குக்காரர் உடன்வர! மக்கள் கண்டனர், களித்தனர் ஆனால் மறந்தனர், ஏசுவைப் புகழ மறக்கவில்லை, கோலாகலமாக் கொலு வீற்றிருந்தான், பிரதானியர்கள் விருதுபாடினர், ஆனால் நாட்டின் நாளா பக்கங்களிலுமிருந்து வந்த ஓற்றர்கள், எங்கும் ஏசுவின் செல்வாக்கு ஓங்குவதைக் கூறினர். கொலு மண்டபத்திலே கிலி குடிபுகுந்தது. ஏசுவின் சீடர்களிலே ஜ÷டாஸ் ஒருவன். மற்றவர்களுக்கு, ஏசுவின் மொழி பரவுவது கண்டு மகிழ்ச்சி, புதிய மார்க்கம் நிலைக்கிறது, சன்மார்க்கம் மேலோங்குகிறதே என்பதால்! தாங்கள் போற்றும் இலட்சியம் நாடெங்கும் பரவுவது கண்டு, பேரானந்தம். ஜ÷டாசும் ஆனந்தப்பட்டான், ஆனால் வேறு காணரத்துக்காக. மற்றவர்களுக்கு, இஷ்டபூர்த்தி ஆயிற்றே என்ற திருப்தி! ஜ÷டாசுக்கு மகிழ்ச்சிதான், ஆனால் அடங்காத பசி - இனிமேல்தான் தன்னுடைய ஆசை ஈடேற வேண்டும் என்ற ஆவல். அவனும், மற்றச் சீடர்கள் போலவே, இரவு பகலாக ஏசுவுக்குத் தொண்டு செய்தான் - மற்றவர்கள், சன்மார்க்கம் தழைக்கவேண்டும் என்பதற்காக உழைத்தனர் - ஜ÷டாஸ், தன் குருதேவனின் புகழ் ஓங்கி, செல்வாக்கு வளரவேண்டும், பிறகு, அதனை இதாரமாகக் கொண்டு, ஒரோப்பாவிலே, பெரியதோர் அரசு அமைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு வேலை செய்தான். ஏசுவின் சொல் கேட்டு இலட்சக்கணக்கான மக்கள் எதையும் செய்வர் என்ற நிலை பிறந்ததும், ஜ÷டாஸ், ரோம் சாம்ராஜ்யத்தைவிட ரம்மியமானதோர் ராஜ்யத்தை அமைத்துவிட வேண்டும், ஏசுவுக்கு முடிசூட்ட வேண்டும். என்றான். அலெக்சாண்டர் படைபலத்தால் அரசு அமைத்தான், அரசர்கள் பலப்பலர் செய்துள்ளனர் அதுபோல, குருதேவர் ஏசு, களம் புக வேண்டியதுமில்லை, ஒரு வார்த்தை கூறினால் போதும், ஒரோப்பா வின் ஏகச்சக்ரபாதிபதியாகிவிடலாம். அவ்வளவு ஆபாரமான செல்வாக்கு அவருக்கு உண்டு என்பதை ஜுடாஸ் அறிவான். அவன் எண்ணத்தையும் அவர் அறிவார். அறிந்தபோது சொன்னார், “என் ராஜ்யம் இந்த லோகத்திலே அல்ல” என்று. பிறகு ஜ÷டாஸ், ஏசுவைக் காட்டிக் கொடுத்தான். ஏசு, அரசு அமைக்க விரும்பவில்லை, காரணம் அவருடைய நோக்கம், அரசு அமைப்பதைவிட, சிலாக்கியமானது, தூய்மையானது. அவர் நிரந்தர அமைத்து விட்டார், பல அரசுகள் அவருடைய நிரந்தர அரசின் இணைக்குத் தாமாக அடங்கி நடக்க முன்வந்தன பிற்காலத்தில். ஜ÷டாஸ் நினைப்பிலே, இங்கு பல ஜடாதாரிகள் உலவினர். அவர்கள் தத்தமது குருமாருக்குள்ள ஆமோகமான செல்வாக்கைக் கண்டு, ஏன் நமது குருதேவர் கொற்றவனாகக் கூடாது, ஏன் கோலாகல வாழ்வில் இருக்கலாகாது, அரசுகள் கண்டு அஞ்சும் ஆற்றலைப் படைத்தும், ஏன் தானோர் அரசு அமைக்காது இருக்கிறார் என்று எண்ணி ஆத்திரப்பட்டதுண்டு. அந்தக் குருமார்கள், ஏசு சொன்னதுபோல, ஏன் ராஜ்யம் இந்தப் பூலோகத்தில் இல்லை என்ற ஞானோபதேசம் செய்யவில்லை. எவ்வளவு பித்தம் இந்தச் சீடனுக்கு அரசு அமைக்காமலும், அமைந்த அரசு அழியாது பாதுகாக்க ஆல்லும் பகலும் பாடுபட வேண்டிய தொல்லை துளியுமின்றி, தூக்கமின்றிக் கிடந்து தொல்லைதரும் ராஜ்யத்தைக்கட்டிக் காவல்புரியும், பல காவலர் களை, ஏவலராகப் பெற்றுள்ள இந்நிலையைச் சாமான்யமென்று எண்ணுகிறானே இந்த ஏமாளி, என்று எண்ணிச் சிரித்தனர். அந்தக் குருதேவர்கள் அரசுகள் அமைக்கவில்லை, ஆனால் ஏசு சொன்னதுபோல, இந்த அரசு அல்ல ஏன் இலட்சியம் என்று ஞானமார்க்கம் பேசவுமில்லை, அரசுகளை ஆட்டிவைத்தனர். காய்ச்சி வைத்த பாலைப் பருகினர், அதிலே கற்கண்டுப்பொடி குறைவு என்று குறைகூறிக்கொண்டு! அரைத்து வைத்த சந்தனத்தை உடலெங்கும் அப்பிக் கொண்டனர், அரைத்த முறை அவ்வளவு சரியில்லை என்றும் குறை கூறிக்கொண்டு, கோலம் துறவுதான், ஆனால் குறைவற்ற இன்பத்தைக் கேட்டுப் பெற்றனர். ஏசு, இராஜ்யம் வேண்டேன், ஏனெனில் ஏன் இலட்சியம் மனித சாம்ராஜ்யத்திலே தர்மராஜ்யம் ஏற்படுத்த வேண்டாம் என்றனர், இராஜ்யம் கூடாது எனப்தற்காக அல்ல, ராஜ்யாதிகாரிகள் நமக்குச் சேவை செய்யும்போது நாமே இராஜ்யம் அமைத்துச் சிரமப்படுவானேன், என்பதற்காக, பொதுநலம் ஏன் இலட்சியம், ஆகவே சுயநல நோக்கமாகிய இராஜபோகம் வேண்டேன் என்றார் ஏசு! இங்கே குருமார்கள் இராஜ்யம் வேண்டாம் என்று சொன்னது, சுயநலம் கூடாது என்ற பெருநோக்கத்துடன் அல்ல, இராஜ்யத்தை ஆள்வதால் கிடைக்கக்கூடிய சுகத்தை, அந்த இராஜ்யத்தை ஆள்வதற்காக எடுத்துக் கொள்ளவேண்டிய சிரமமுமின்றி அடைய வேண்டும் என்பதற்காக, விதைக்காது விளையும் கழனி இருக்க, விதைத்தால் மட்டுமே விளையக்கூடிய கழனியை யார் விரும்புவர்? இத்தகைய குருமார் கூட்டமே, பண்டைய நாட்களிலே, கொற்றவர்களை எல்லாம் இங்கே ஆட்டிப் படைத்திருக்கிறது. அந்தச் சிறு கூட்டமே, ஆரிய அகராதிப்படி, ரிஷிகள், தவசிகள், முனிவர்கள் என்று அழைக்கப்பட்டது.
***

ஆயோத்தியிலே அரசாண்ட தசரதன், தன் ராஜ்யத்தின் பாதுகாப்புக்காகப் பயங்கரமாகப் போரி புரிந்தான், மற்ற மன்னர்களும் அப்படியே, ஆனால் வசிஷ்டன், தன்னுடைய குரு ஸ்தானத்துக்காகத் தொல்லைப்பட்டதில்லை. எந்தக் காரியத்துக்கும், வசிஷ்டரின் இலோசனை தேவைப்பட்டது. அவ்வளவு நிலை, வசிஷ்டர் பெற்றது வாள் பலத்தாலா? இல்லை! அவருடைய நா அசந்தால் எத்தனையோ நாட்டுப் படைகள், தசரதன் மீது போருக்குக் கிளம்பிவிடும்! எந்த ராஜ்யத்திலும், அவர் குரு ஸ்தானம் பெற முடியும், எந்த அரசனையும், தன் மொழிவழி கொண்டு செல்லமுடியும். ஆகையினால்தான், அந்தச் சிறுகூட்டத்தைச் சார்ந்தவர்கள், அவசியமற்ற தொல்லை வேண்டாமென்று கருதி, அரசுகளை ஆளும் பொறுப்புள்ள காரியத்தைத் தாமே மேற்போட்டுக் கொள்ளாமல், மற்றவர்களை அந்தப் பொறுப்பு என்ற பாரத்தைச் சுமந்து கொள்ளச் செய்து, அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு, “அரசே! இப்படிச் செய்வதே முறை! இது தகாது!” என்று உபதேசித்துக் கொண்டும் எச்சரிக்கை செய்து கொண்டும் வாழ்ந்தனர். அரசர்கள் அரசுகளை ஆண்டனர், ஆரிய குருமார்கள், அரசர்களை ஆண்டுவந்தனர்! இந்த முறை ஆயோத்தி அரசில் மட்டுமா? எங்கும்! அந்நாள் மட்டுமா? இந்நாளும்! இப்போதும், திருவிதாங்கூரின் திவான்ஜீக்குத் திருப்புகழ் பாடும் அளவுக்கு மன்னருக்குப் பாடுகிறார்களோ! திவானுடைய திருக்கலியாண குணங்களைப் பாராட்டுகிற அளவுக்கு, மன்னருக்கு உண்டோ? மன்னருக்கு இருக்கிற பெருமைகளில் ஒன்றாகவன்றோ, மதியூகியும், மாவீரருமான சச்சிவோத்தமர் சர்.சி.பி. இராமசாமி ஐயரைத் திவானாகக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கூறப்படுகிறது. இந்த “சூக்ஷமம்” அந்த நாள் தொட்டுத் தெரியும் அந்தச்சிறு கூட்டத்துக்கு, ஆகவேதான், அன்று முதலே, அரசர்களாகி விடுவதைவிட, அரசர்களை ஆட்டி வைப்பது மேல் என்ற தந்திரத்தைக் கையாண்டனர், அரண்மனை வாசத்தை விட, ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு அரண்மனைவாசியைத் தாசனாக்கிக் கொள்வது, யுக்தம் என்று கருதினர். முக்கனி தேடி ஆலைவதைவிட, தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டித் தருவதற்குத் தக்கதோர் சீடனைப் பெற்றுவிடுவது, அல்லல் இல்லாத ஆனந்தமல்லவா? அது அவர்களுக்குத் தெரியும். அந்த நாட்களிலே, ஆஸ்ரமங்களிலே ஜ÷டாஸ்போல, இருந்த சந்தேகிகளின், எண்ணத்தைக் குருமார்கள் எப்படிப் போக்கினர் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
***

கங்கைக்கரை! இங்கோர் ஆஸ்ரமம்! பிரவாகத்தின் சத்தம், அதனுடன் போட்டியிடுவது போன்ற வேதஒலி மற்றோர் புறம். இயற்கை எழில்! புள்ளிமான் துள்ளி விளையாடுகிறது! குயிலின் கீதம், மயிலின் நடனம்! மரக்கிளைகளெல்லாம் மதுரத்தைப் பொழிந்து கொண்டு விதவிதமான பட்சிகள்! ஒருசிறு பரிவாரம், வேதத்தைப் பாராயணம் செய்து கொண்டு, அவர்களுக்கு ஒரு குரு, ஆகத்தில் இலயிக்காமல் பரத்தைப் பற்றிய எண்ணத்தில் உடுபட்டனர். அவர் உடலில் பொன்னா பரணமோ சிரத்தில் மணி முடியோ கிடையாது. ஆஸ்ரமத்தருகே இரத கஜ துரக பதாதிகள் கிடையாது! சீடர்களிடம் வாள் வேலை கிடையாது. உடலிலே தழும்பு கிடையாது. உள்ளத்திலேயோ, உலகின் முதல்வனை உணர வேண்டுமே, அதற்கு என்ன வழி என்பதன்றி வேறு கவலை கிடையாது.
அதே நேரத்தில் டில்லியில் மகோன்ன- தமான மாளிகை. அதற்கருகே பாசறை! அங்கே போர்ப்பயிற்சியிலே உடுபட்ட பல்லாயிரவர்! அவர்களின் உடலிலே தழும்புகள். மாளிகைக் குள்ளே மன்னன்! அவன்முன் பல்வேறு நாட்டு ஓற்றர்கள். அவர்களிடம் தத்தமது பார்வையிலே விடப்பட்ட பிரதேசங்களிலே உள்ள பூபதிகளின் படைபலம், நோக்கம், நிலைமை ஆகிய தகவல்களைத் தரும் ஓலைகள்!

இந்த இரு இடங்களிலே எங்கு இருந்தவருக்குச் சுகம்? ஆஸ்ரமத்தின்மீது ஆஸ்ரமம், படை எடுக்காது! சதிர்க்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரு அரண் மனையைத் தரைமட்டமாக்க அதே சமயத்திலே, வேறோர் அரண்மனை சரியாலோசனை மண்டபமாக மாறி இருக்கும்! ஆஸ்ரம வாழ்வு, அரண்மனை வாழ்வு இரண்டிலே, எது விதைக்காது விளையும் கழனி?
கங்கைக் கரையிலே (கங்குபட்டர்) காகபட்டர் என்ற குரு கொலுவீற்றிருக்கிறார் ஆஸ்ரமத்தில்! அவருக்குக் கவலை எது? தில்லியிலே அதேபோது ஆவுரங்கசீப் இருக்கிறார். அரண்மனையிலே, அவருக்கு எவ்வளவு அல்லல், தொல்லை.

ராஜகிரியில் ஒரு அரண்மனை, அதைச்சுற்றிலும் ஆசகாய சூரர்கள் அவர்களின் தலைவர் சிவாஜி. அவர் அரண்மனைக்குள்ளே இருக்கிறார். அவருடைய நினைப்பு முழுதும ஆவுரங்கசீப் பின் படைபலத்தின் மீது! ஆவுரங்கசீப்பின் எண்ணம் யாவும், மலர்ந்த மராட்டியத்தின் மணம் தில்லிவரை பரவுகிறதே என்பது பற்றி! இரு இடங்களிலும் இருந்த படை வீரர்களின் பேச்சு, இன்னின்ன போரிலே இன்னின்ன ஆபத்துக்கள், இப்படி இப்படித் தப்பினோம் என்பதுபற்றி, கண்ணிழந்த தம்பி, கை இழந்த அண்ணன், காலிழந்த மாமன், உயிரையே இழந்த உத்தமர்கள், இவர்களைப் பற்றிய பேச்சு. நடந்த சண்டைகள் இடிந்த கோட்டைகள், ஓடிந்த உள்ளங்கள், அழிந்த குடும்பங்கள், ஓடிய இரத்த வெள்ளம், இவைபற்றிய உரையாடல் மட்டுமா, இனிவர இருக்கும் இன்னல், மூள இருக்கும் போர், அதிலே ஏற்பட இருக்கும் ஆபத்து இவைபற்றியும் பேச்சு, ஓயாத தொல்லை! தீராத கவலை! தழும்பு நிரம்பிய உடலம்! இவை, அரண்மனைகளிலே, ஆஸ்ரமங்களிலே? ஏரியாத ஆகில், தேயாத சந்தனம் இருக்கக்கூடும். புரியாத மந்திரங்களை உச்சரிக்கும மதிநிறையாத சீடர்கள் உலவக்கூடும். வாழ்க்கையின் வேதனையோ, மாற்றானின் விரோதமோ இராது. அது மகிழ்ச்சி மாளிகை! அரண்மனையோ மனதை மருட்டும் இடம்! எனவேதான், கங்குபட்டர், தில்லியிலே இருந்த ஆவுரங்கசீபைப் போலவோ ராஜகிரியில் இந்த சிவாஜியைப் போலவோ, மணிமுடிதரித்துக் கொள்ளும் மன்னனாக இருக்கும் தொல்லையான பதவியைத் தேடவில்லை. மாறாக, மணிமுடி தரித்தவனைத் தன்முனு மண்டியிடச் செய்தார்!
***

“குருதேவா குதிரை வீரர்கள் யாரோ வருவது தெரிகிறதே?”

“வரட்டுமே! இங்கே, எந்தக் கோட்டை இருக்கிறது. அவர்கள் தாக்க, பிடிக்க, போரிடுவதற்கு இதுவா இடம்? இது பூஜா மடம்! இங்கே வருபவன், பூஜைக்கு வருவான், வேறு காரியத்துக்கு இதுவா இடம்.”

“எந்த நாட்டவரோ.”

“யாராக இருந்தால் என்ன? நாம் என்ன ஒரு நாட்டுக்கு அரசரோ, மற்ற நாடுகளைப்பற்றிச் சந்தேகிக்கவோ, பயப்படவோ?”

சஞ்சலப்படும் சீடனைத் தேற்றிவிட்டுக் குரு சாவதானமாகத் தன் காரியத்தைப் பார்க்கிறார். குதிரை வீரர்கள் ஆஸ்ரமத்துக்குக் கொஞ்சம் தொலைவிலேயே, குதிரையை விட்டுக் கீழே இறங்கி, பயபக்தியுடன் நடந்து வருகிறார்கள். குதிரைகளை மரத்திலே கட்டிவிட்டு, ஆஸ்ரமத்துக்குள் நுழைந்து, கங்குபட்டர் முன் விழுந்து வணங்கிப் பணிவுடன் கூறுகிறார்கள்.

“குருதேவா! தாங்கள் தயை கூர்ந்து, ராஜகிரி எழுந்தருள வேண்டும். மராட்டிய மாவீரர் சிவாஜி, தங்கள் தரிசனத்துக்காகவும், தங்கள் யோசனையை ஒரு முக்கியமான விஷயமாகக் கேட்கவும் இவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில், அரண்மனையில் அரசனாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், ஊப்புச் சப்பற்றது என்று யாருக்குத் தான் தோன்றாது! மாவீரன் சிவாஜி, மராட்டியத்தின் மாணிக்கம். மொகலாய சாம்ராஜ்யமே அவன் பெயரைக் கேட்டுக் கொஞ்சம் நடுங்குகிறது. அவன் தன் வாய் பலத்தால் ஒரு அரசு அமைத்திருக்கிறான். அவனுடைய கட்டளையை எதிர்பார்த்து இலட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். அவன் பொருட்டுக் களத்திலே உயிரை விட்டவர் பல்லாயிரவர். மராட்டியம் மனைதோறும் ஓர் மாவீரனைத் தந்தது. அப்படிப்பட்ட சிவாஜி அழைக்கிறார், கங்குப்பட்டரை, “தரிசனம் தருக! யோசனை அருளுக!” என்று, அவருடைய வேண்டுகோளைத் தாங்கிக்கொண்டு வீரர் இருவர் வந்துள்ளனர், வீழ்ந்து வணங்குகின்றனர், வெற்றிக்களை முகத்தில் வீச. அது சமயம் கங்குபட்டர், தமது சீடர்களைப் பார்த்திருக்க மாட்டாரா? அந்தப் பார்வையின் பொருள் என்ன? “எதற்கடா, மண்டுகளே! நமக்கு அரசு? அரசாள்பவனே நமது அடிபணியச் சித்தமான இருக்கும்போது, நாம் ஏன் அரசு அமைக்கவேண்டும்” என்பதுதானே?

“என்னடா இது, தவளை மாதிரி கத்திண்டிருக்கே?”

“யஜ÷ர்!”

“எந்தச் சனியனாவது இருக்கட்டும்! மனதிற்குள்ளே சொல்லிக் கொள்ளேன், மகா பெரிய ஞானஸ்தனாகப் போகிறாயோ? அப்படித்தான் பிரகஸ்பதி ஆகிவிடுவதாகவே வைத்துக் கொள், என்ன பலனைக் காண்போகிறாய்? ஆஹா, எ ஊஹீன்னு கூவினதுதான் மிச்சம். வா! கொஞ்ச நேரம் கங்கைக் கரையிலே போய் விச்ராந்தியா ஊலாவிண்டிருப்போம்.”

“சரி! வா, போவோம், நேக்கும் கொஞ்சும் தலையை வலிக்கிறது”

இதுபோல், சீடர்கள் பேசி இருப்பர், கங்கைக் கரையிலே உலவும்போது உலக விவகாரங்கள், ஊர்வலம், பல்வேறு நாட்டு நடவடிக்கைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அரண்மனைகள் அங்கு வாழ்வுருசி இருப்பது முதலியன பற்றிய நினைப்பு வரத்தானே செய்யும்.

“சாமான்யாளெள்ளாம் எவ்வளவு சம்பத்துகளுடன் வாழ்கிறா! ஆவாளுக்குச் சாமமும் தெரியாது. ஆவாளெல்லாம் அரண்மனைகளிலே வாசம் செய்யறா. நந்தவனங்களிலே, ஊலாவிண்டு, அப்சரசு போன்ற ஸ்திரிரத்னங்களோடு சரசமாடிண்டு, சௌக்யமா, உல்லாசமா, காலங்கழிக்கிறா என்று கூறிப் பெருமூச்சு விடுவார் ஒரு சீடர், “ஆம்! அதனாலென்னடா? அதற்குத்தான் ராஜபோகம்னு பேர்!” என்று மற்றவன் பதில் கூறுவான். சஞ்சலப்படும் ரங்குவை, கங்குபட்டரிடம் இழுத்து விட்டுவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம், உரையாடல் எப்படி இருக்கும்! கங்குபட்டர், தன் சீடன், ஆசடனாக இருப்பதைக் கண்டு, பரிதாபப்பட்டு அவனுக்கு விளக்கம் பிறக்க உபதேசிப்பார்.
கங்கு : டே, ரங்கு! என்னடா இது, அரண்மனையிலே வாழ்கிறாளே, அப்சரசுகளோடு ஊலாவுகிறாளே, என்று ஏதேதோ பேசிண்டு இருந்தாயாமே.

ரங்கு : இல்லை, ஸ்வாமி! ராஜாதி ராஜாக்கள் அனுபவிக்கும் போகமிருக்கே, அதைப்பற்றி அடியேன்....

கங்கு : ஆமாம்! ராஜபோகம்னே அதற்குப் பெயர் இருக்கே!
விளக்கம் எவ்வளவு கூறினாலும், அரசபோகத்திலே ஆசை கொண்ட சீடனுக்கு திருப்தி ஏற்படாது, ஆகவே அரசபோகத்தை விட ஆரியருக்குள்ள யோகம் சிலாக்கியம் என்பதை நடவடிக்கையிலேயே காட்டவேண்டும் என்று எண்ணிய கங்குப்பட்டர், அசடே! உன் சந்தேகத்தைப் போக்குகிறேன், ராஜகிரி நகரிலே!” என்று கூறிவிட்டு, அழைத்துச் சென்றிருப்பார்.

கங்கைக் கரையிலே இருந்தவர்கள் அரசர்களை அடிபணியச் செய்யும் நிலையில் இருக்கும்போது, அவர்கள் ராசகிரியில் அரண்மனையில் ஊலாவும் அரசனாகப் பிறக்கவில்லையே, அல்லது அரசன் ஆகவில்லையே என்று கவலைப்படக் காரணம் உண்டா? நமது வார்த்தையே - இசீர்வாதத்தை - கட்டளையை - எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறான் சிவாஜி! நாம் இஷ்டப்பட்டால் மட்டுமே அவன் அரியாசனம் ஏற முடியும், அவனிடம் அரசு இருக்கிறது, ஆரசைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றலும் இருக்கிறது! இருந்தும்!! நான் சம்மதித்தால்தான் அவன் அரசனாக முடியும்! நான் யார்? ஒரு ஆரியன்! அவன் ஆசகாய சூரன்! வாள் உண்டு அவனிடம், வல்லமை உண்டு அவனிடம், ஆனால் ஏன் வார்த்தை அவனுக்குக் கிடைத்தால்தான், அவன் மன்னனாக முடியும்!” என்று அந்த ஆரியன் எண்ணாதிருப்பானா! எண்ணும்போது, அவன் உள்ளத்திலே எவ்வளவு ஆனந்தம் - ஏன் - ஆணவம் பிறந்திருக்கும்! ஆற்றங் கரையிலே ஆரியன் ஊலாவும் அதே நேரத்தில், அரண்மனையிலே ஊலாவும் சிவாஜியின் மனதிலே எவ்வளவு சோகம், சஞ்சலம், சந்தேகம் பிறந்திருக்கும்.

“அவர் என்ன சொல்கிறாரோ? இசீர்வதிப்பாúô, முடியாது என்று கூறிவிடுவாரோ?” என்று எண்ணிக் கவலையில் மூழ்கி இருப்பான். இவன் சிரத்திலே முடி இருக்கும், ஆரியன் அனுமதித்தால். இந்த நிலை கிடைக்கும்போது, ஆரியர், ஏன் அரச பதவியை அலட்சியமாகக் கருதமாட்டார்கள்?
***

“பாரடா, மண்டு, பார்! பார், நமக்கு நடக்கும் இந்த ராஜோபசாரத்தை! ராஜகிரியிலே, யார் இப்போது உண்மையான ராஜா! ஏன் முன்பு வீழ்ந்து வணங்குபவன் ஒவ்வொருவனும் ஆசகாய சூரன், யுத்தத்திலே ஜெயவீரன், எதிரிக்கு மார்காட்டத் தயங்காத வீரன்! ஆனால், இவர்களின் தலைவன் இனி நமக்குச் சீடன்!” என்று ராஜகிரியிலே வரவேற்கப்பட்ட வைபவத்தின்போது ஆரியக்குரு எண்ணாமலிருப்பானா! வீராதி வீரனானாலும் விப்பிரருக்கு அடங்கிய தீரவேண்டும் என்ற வேதி நீதியை, வேதியர் புகுத்திய நியதியை, வர்ணாஸ்ரம முறையை, சனாதனச் சட்டத்தை, அந்தச் சமயம் அவர் போற்றாது இருந்திருப்பாரா! அந்தச் சட்டமல்லவா, ஆஸ்ரமவாசியை அரண்மனைக்கே அதிகாரியை நியமிக்கும் உயர்தர அதிகாரியாக்கி வைத்தது. படை வீரனாம் சிவாஜியைப் படைபலம் ஆற்றவனிடம் பணிய வைத்தது! வாள் ஏந்திய வீரனைத் தன்தான் பணியச் செய்தது. மனுவின் மகிமையால் அல்லவா, மண்டலாதிபதி மண்டியிடுகிறான் மகிழ்ந்திருப்பான். “அசடே! அரசு வேண்டும், அரசனாக வேண்டும். என்று அற்பத்தைத் தேடாதே. அரசுகளை ஆட்டி வைக்கும் அதிகாரம் நம்மவரிடம் இருக்கும் வழியை நாடு! அதற்கான புராண இதிகாசாதிகளைப் பரப்பு! மக்களை ஆவகைளிலே நம்பிக்கை கொள்ளும்படி செய்! அரசர்கள் பிறகு உன் அடிமைகள்! அரசபோகத்தை அடையலாம், அதற்கான பொறுப்பும் உன்னை ஆண்டாது. ஆரியனே! என்று கங்குபட்டர் தமது சீடர்களுக்குக் கூறாது இருப்பாரா? அவ்வளவு நாட்களுக்கு முன்பு இருந்தவரின் எண்ணம் கிடக்கட்டும், நமது கண்முன் உள்ள ஆச்சாரியார், இப்பாது கூறுகிறாரே, “பிராமணர்கள் தங்கள் குடும்பத்திலே கட்டாயம் ஒரு பிள்ளையே வேதம் படிக்க அனுப்பி விடவேண்டும்” என்று! ஏன் கூறுகிறார் அதுபோல? அவருக்குத் தெரியும், ஆரியம் விதைக்காது விளையும் கழனி என்று!!

(திராவிடநாடு - 24.2.46)