அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


யானை மீதேறிப் பூனைபிடிக்கும் முறை!

அர்த்தநாரீஸ்வரர் - பாதி ஆண், பாதிப் பாகம் பெண் - இப்படி ஓர் உருவம்! கேலிக்குரியதல்ல - வணக்கத்துக்குரியது. இப்படி ஒரு கற்பனையும், அதைக்காட்ட ஓர் உருவமும், அதற்கு வணக்கமும் தேவையா, என்பது ஒருபுறமிருக்கட்டும் இப்படிக் கோயிலிலே இருப்பதற்குப் பதில், அர்த்தநாரீஸ்வர உருவிலும் தன்மையிலும், நிஜமனிதர்களே, இருந்தால் எப்படி இருக்கும்!!

நினைத்தாலே சிரிப்பும், அடுத்த விநாடி பயமும் பிறந்து, அதற்கு அடுத்த விநாடி, அவ்விதமாக வெல்லாம் நேரிடமுடியாது என்ற தைரியம் பிறந்து அச்சத்தை அழித்துவிடப் பிறகு, வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் சொல்லுமல்லவா!

அறிவுத் துறையிலே, அர்த்தநாரீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.

உடல் அமைப்பிலே, இணும் பெண்ணும் பாதி பாதி ஓட்டிக் கொண்டு, ஒருருவமாக இருப்பதல்ல, மனபான்மையிலே, பழைமையும், புதுமையும், பாதி பாதியாக ஓட்டப்பட்டுள்ளவர்கள், பலர் உள்ளனர்.

அறிவுத் துறையிலே உள்ள இந்த அர்த்தநாரீஸ்வரர்களால் ஏற்படும் ஆவதி, சொல்லுந்தரத்தல்ல.
சகல வகையான புதுமைச் சாதனங்களையும், வசதிகளையும், பயன்படுத்தி மகிழத்தான் செய்கிறார்கள். அதேபோது, பழமையையும் பெருமையாகப் பேசிக்கொள்ளவும், பழைய ஏற்பாடுகள், சிதைந்துபோன சித்தாந்தங்கள், தகர்ந்து போன தத்துவங்கள், வெட்டி வேதாந்தம், இவைகளையும், விட்டுவிட மனமின்றி அவைகளைக் கட்டி அழுவதோடும் நிற்காமல் போற்றிப் புகழவும் செய்கிறார்கள்.

அடிக்கடி ரேடியோவில் கேட்கிறோமல்லவா, திருப்பாவைக்கு அர்த்தம், திருவாசகத்துக்கு ஊரை, திருப்பல்லாண்டு இவைபோல.

பேசும் அவர்களோ, பேசச் சொல்லும் ரேடியோ நிலையத்தாரோ, கேட்கும் நாமோ, நம் யாவருக்கும் ஆட்சியாளராகவோ, ஒரு தடவையாவது சிந்திக்கிறோம் ரேடியோ, என்ன வகையான சாதனம் - எந்தக் காலத்து? எவ்விதமான அறிவைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது - இதனை - நாம் எந்தக் காரியத்துக்கு, எத்தகைய அறிவைப் பரப்புப் பயன்படுத்துகிறோம். என்று எண்ணிப்பார்க்கிறார்களா! கிடையாது! ஏன்? அர்த்தநாரீஸ்வர மனம்!

குதிரை மீது ஏறிக்கொண்டு கொசு வேட்டைக்குக் கிளம்புவது! யானை மீதேறிக் கொண்டு, பூனையைத் துரத்திப் பிடிக்கக் கிளம்புவது!

அந்த அர்த்தநாரீஸ்வரர்கள் சமயம் கிடைத்தால் இதையும் செய்ய முயல்வார்கள் போலல்லவா இருக்கிறது. இறிப்போன அப்பத்தைச் சூடான குழம்பிலே தொட்டுக் கொண்டு சாப்பிடும், பசித்தவன் போலப் பயனற்றுப் போன பழைமையை, புத்தறிவு தயாரிக்கும் சாதனத்தில் சேர்த்து, அனுபவிக்கிறார்கள். அது மட்டுமா! அந்த இறிப்போனபழைமையை, சாயம்போன சேலையைப் புகழவும் செய்கிறார்கள். இந்த முரண்பாடு, நாட்டு மக்களை மிக மிகக் கெடுக்கிறது.

ஆளவந்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும், இந்த முரண்பாட்டை முழுமூச்சாக வளர்க்கிறார்கள். சீர்திருத்தம் பேசுபவர்களின் கிளர்ச்சி எங்கு வலுவடைகிறதோ என்று, கவலைப்பட்டு, உலகிலே அறிஞர்கள் எங்குக் கேவலமாகக் கருதிவிடுகிறார்களோ என்று பயந்து சிலபல, தீவிரமான சட்டங்களைச் செய்கிறார்கள். ஆனால், அதேபோது அவர்களைப் பழைமைக்கும் வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள்.

எடுத்துக்காட்டுபவர் வேறு கட்சி என்பதை மட்டும் மறந்து, தயவு செய்து சிந்தித்துப் பார்க்கும்படி காங்கிரஸ் இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம். சின்னாட்களுக்கு முன்பு முதலமைச்சர், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே ஆற்றிய ஊரையினைப் பார்ப்பவர், யாரேனும் 1947 இம் ஆண்டில், இவ்விதமான சத்கதா காலட்சேபம் தேவை என்றோ, அதனால் தெளிவும் பயனும் ஏற்படுமென்றோ, அந்த ஊரைகேட்டு, உலகம் இந்நாட்டைப் பற்றி ஊய்வாகக் கருதுமென்றோ, எண்ணுகிறார்களா? உண்மையிலேயே, ஒரு முதலமைச்சரிடமிருந்து, இதைத்தானா, பல்கலை பயிலும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்?

இந்த உரையைக் கேட்கும், பழமை விரும்பி என்ன கருத முடியும்? யுக யுகமாக இருந்து வந்த, தடைகளைக் கோயிலிலே இருந்து நீக்கிச் சட்டம் செய்தவரும் இவர், மயன் மனு, மனுநீதிகண்ட சோழன், மாந்தாதா, பதஞ்சேலி எனும் பழங்காலத்தவரைப் போற்றித் திருஅகவல் பாடுபவரும் இவரே, என்பதை அறியும்போது எவ்வளவு குழப்பம் ஏற்படும்! எவர் நெஞ்சுக்கும்.

“ஓமந்தூர் உத்தமா! உன் வார்த்தையைக் கேட்டு மெச்சினோம். அறிவு உலகம், என்னை மறந்தேவிட்டது. நான், புகுத்திய முறையினாலேயே கேடுபல நேரிட்டுவிட்டன என்று கண்டிக்கின்றனர். இந்தக் காலத்திலே, என்னை மறந்து, மார்க்சையும் பிறரையும் படித்துக் கொண்டு மாணவர்களிடையே சென்று, தைரியமாக என்னைப் புகழ்ந்து பேசினாய். உன்னை நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று மனு கூற,“அடியேன், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தாலும், அந்தநாள் அருமை பெருமைகளை மறந்திடும் மாபாவியாவேனோ! மற்றவர் மறப்பினும், மனுவே! நான் உன்னை மறந்திடேன்” என்று முதலமைச்சர், கசிந்து கண்ணீர் மல்கிக் கூற, “பாலகா! உன் பக்திப் பிரபாவத்தைக் கண்டு புளகாங்கிதமடைகிறேன். பாவிகள் சிலர், பார் உள்ளளவும் பஞ்ச பூதம் உள்ளளவும் ஏற்றதென்று, நாம் ஏற்படுத்திய ஏற்பாடுகளைக் குலைத்துச், சண்டாளர்களைக் கோயிலுக்குள்ளே நுழையச் சட்டமும் செய்தனராமே, நீ அறியாயோ! அறிந்தும், எங்ஙனம், அப்பெரும் பாபத்தினைப் புரிபவரைச் சும்மாவிட்டாய். மற்றையோர் நமக்கென்ன என்று இருப்பர் - இருந்து போகட்டும் - நீயும் அங்ஙனம் இருக்கலாமா?” என்று சற்று ஆத்திரத்துடன் மனு கேட்க ஆரம்பித்தால், முதலமைச்சர், என்ன பதில் கூறுவார்!” கோயில் நுழைவுக்குச் சட்டம் கொண்டுவந்ததும் என் ஆட்சியிலேதான் - என் சம்மதமும் அதற்கு உண்டு” என்று அவர் சொன்னால், மனுவே மருளுவானே! மருண்டு கேட்பானே, “யாசைய்யா நீர் பித்தனோ! எம்மையும் புகழ்கிறாய் -வானளாவப் பேசுகிறார் - எமது முறையையும் ஆழக்கிறாய் - ஏன் உமக்கு இப்படி இரட்டைப் போக்கு” என்று கேட்பாரா, மாட்டாரா? மனு, கேட்க முடியாது - மக்கள்? மறந்து போனோமே, அவர் முதலமைச்சரல்லவா? எப்படிக் கேட்க முடியும் மக்களால்?
இரண்டும் கெட்ட நிலையிலே, இவ்வளவு பெரிய தலைவர்களே இருக்கும்போது, மக்கள் எப்படி இருக்க முடியும்! அவர்கள் கோயிலுக்கு கொட்டு முழக்குடன், பழங்குடி மக்களை ஒருமுறை அழைத்துக்கொண்டும் போகின்றனர், சில இடங்களில், பெல்லாரியும் நடத்துகின்றனர்!

உங்களிலே பலர் பார்த்திருக்கக்கூடும். டாக்டர் ஜெய்க்கிலும் மிஸ்டர் ஹைட்டும் என்ற சினிமாப் படத்தை.

கருணா மூர்த்தியாகக் காட்சி அளித்து, ஏழை எளியோருக்கு இரக்கம் காட்டி, இதம் செய்து, எவராலும் போற்றப்படுபவர் டாக்டர்.

இரத்தவெறி பிடித்தலைந்து, எதிர்ப்பட்டோரைக் காரணமுமின்றித் தாக்கி, காம விகாரமும் கொண்டு அலைகிறான் ஹைட்.

ஆனால், இந்த இருவரும், ஒருவரே தான்!!

டாக்டர் ஜெயிக்கில், ஏழை பங்காளன் அவனே, ஏதோ ஒருவகை மருந்து உட்கொண்டுவிட்டால், மனமெனும் ஏரிமûலிலிருந்து, கெட்ட குணம், கொலையாகக் களவாகக் காமமாக வெளிப்படுகிறது. ஒரே ஆசாமி, அவருக்கு, முற்றிலும் முரணான, இருவேறு குணங்கள், அந்த மருந்தின் பயனாக.

அது போலாகிவிடுகிறது. முதலமைச்சர் முதற்கொண்டு, கிராமத்திலுள்ள முத்தன் வரையிலே, ஒருசமயம் பார்த்தால், அதாவது, கோயிலுக்குள்ளே பழங்குடி மக்களை அனுமதிக்கும்போது, பார்த்தால், சமரச ஞானிகளாய், மனித தர்மத்தை மதிக்கும் மதிவாணர்களாய், காட்சி அளிக்கின்றனர். ஆனால், அவர்களே, பழமைப் பானத்தைப் பருகியதும், காட்டுமிராண்டிப் போக்கும், காலத்தை அறியாத கபோதிக் குணமும் கொண்டு, சகுனம், ராகுகாலத்திலிருந்து, பஞ்சகவ்யம் பருகும் வரையிலே ஒன்று விடாமல், பழைய முறையைச் செய்துகொண்டு, நம்மைத் திகைக்கவைக்கிறார்கள்.

இந்த இரட்டைப்போக்கு, நாட்டைக் கெடுப்பது போல வேறு எதுவும் இல்லை என்னலாம்.

யாரிடம், தெளிவையும், திட்டமான போக்கையும் எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறதோ, யார் உண்மையிலேயே, வழிகாட்டியாக அமைவார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமோ, அவர்களே, குழப்பமும், குருட்டறிவும் கொண்டு, இருட்டறையில் மக்களை இழுத்துச் செல்கின்றனர் என்றால் நாம், என்ன செய்ய முடியும்! சுயநலத்திற்காக இங்ஙனம் செய்பவர்களைக் கண்டால் அவர்களின் சூது மதிகண்டு, கோபம் கொழுத்தெழுகிறது. ஓமந்தூரார் போலச் சுயநலமின்றி, இந்தப் போôக்குக் கொள்பவர்கள் சிலர் உள்ளனர் - அவர்களைக் காணும்போது கோபம் வரமுடியவில்லை. கண்ணீரல்லவா வருகிறது! நாடும் உடேறாது அவர்கள் மனமும் கேடு சூழ்ந்ததல்ல. இந்த நிலையிலே அல்லவா, அவர்கள் கொள்ளும் போக்கு இருந்து தொலைகிறது.

மேனாட்டு முறைகளிலே மூழ்கினது போதும் - இனி நமது மதத் தலைவர்கள் சொல்கேட்டு நடவுங்கள் - என்று ஓமந்தூரார் ஓரிடத்திலே பேசுகிறாரே! டாக்டர் ஜெய்க்கில், மாஸ்டர் ஹைட்டாக மாறுகிறாரே என் செய்வது?

செல்வம் சேர்ப்பது, போக போக்கியத்தில் மூழ்குவது, இச்சாபூர்த்திக்காக ஆலைவ, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தத் தவறுவது, இவைகளெல்லாம் இந்நாள் உள்ள கேடுகள் இவை யாவும், மேனாட்டு நாகரிகத்தால் வந்தவை, என்று ஓமந்தூரரார் எண்ணுகிறார். இது, இவ்வளவு பெரிய அறிவுப் பஞ்சம் என்பதை, எடுத்துக்காட்ட, அவர் இருக்கும் நிலையின் தன்மை, குறுக்கிடுகிறது. எந்த இதாரத்தின்மீது, மேனாட்டு முறை, வெறும் போகபோக்கியத்தில் புரள்வது, கீழ்நாட்டு முறை, இந்திரியங்களெனும் துஷ்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளம் இடும் அறமுறை என்று கூறுத் துணிகிறார். மேனாட்டிலே, வேதாந்திகள் சித்தாந்திகள், துறவு முறை போதிப்பவர்கள், தோன்றவே இல்லை என்று எண்ணுகிறாரா? மேனாட்டிலே, கிரேக்கர் காலம் முதற்கொண்டு இன்று வரை, இங்குப் பேசப்படுவது போலவே, வேதாந்தம் பேசிக் கொண்டு ஒருசாரார் இருந்தேவருகிறார்கள். அதற்கு அங்கு ஒன்றும் பஞ்சம் ஏற்பட்டதில்லையே! ஏன் இவர்கள், ஏதோ, இங்குதான், அந்த மகத்துவம் உண்டென்று எண்ணி ஏமாறுகிறார்கள்.

அங்கு வேதாந்தம் பேசிடுவோர் இருக்கலாம். ஆனால், போக போக்கியத்திலே புரள்பவராகவே மக்களில் பெரும்பகுதியினர் உள்ளனர், எனவேதான் மேனாட்டு முறையைக் கண்டிக்கிறோம் என்று கூறக்கூடும் அதுவும் தவறாயிற்றே, இங்கே ஒன்றும் வேதாந்தம் பேசினதால், போக போக்கியத்தை யாரும் வெறுத்து விட்டதாகக் கதையும் காணோமே! நமது மிதவாதிகளைக் கேட்டு, அவர்கள் கூறுவது போல நடந்து கொள்ள வேண்டுமென்கிறாரே, அவர்களையே அவர் கேட்டுப் பார்க்கட்டும் நமது பண்டைய நாட்களிலே, போக போக்கியத்தை வெறுத்தா வாழ்ந்தனர் என்று ஆண்டவனைக்கூட பொன்னார் மேனியனாகக் கண்டனர்! மேனாட்டாரின் பேராசை செல்ல முடியாத அளவுக்கு நமது முன்னோர் சென்று, காமதேனு, கற்பக விருட்சம், ரம்பை, மேனகை, இப்படி எல்லாம் கற்பனை செய்து பார்த்து, அதிலே ஒருவகை ஆனந்தமடைந்தனரே! இவைகள், எதைக் காட்டுகின்றன? ஏன், ஓமந்தூரார் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களாவது, இவை பற்றி, இர ஆமர யோசிக்கக்கூடாது. யோசிக்க முடிவதில்லை! பானம் பருகினதும், டாக்டர், ஹைட்டாகி விடுகிறாரே, ஹைட்டாகிவிட்ட உடனே அவருக்கு, நோக்கமே மாறிவிடுகிறதல்லவா! அதுபோலப் பழைமை, அவர்களைப் பிடித்தாட்டும் போது, அவர்கள், நாம் கூறுவது இதாரமுள்ளதுதானா, காரணம் சரியா, கருத்துச் சரியா, தெளிவு இருக்கிறதா, பயன் உண்டா, என்று இவை பற்றிய யோசனை செய்யும் சக்தியே ஆற்றுப் போய்விட்டநிலை பெறுகிறார்கள். அவர்கள் நிலையே இதுவென்றால், சாமான்யர்கள், அதிலும் நித்த நித்தம் காட்டு ராஜாவாக இருப்பதிலே களிப்புக் கொள்பவர்களின் நிலை எப்படி இருக்கும், பெல்லாரி சம்பவத்துக்கு மூல காரணம், இந்த இரட்டைப் போக்குத்தான். இந்த அர்த்தநாரீஸ்வரப் போக்கு மாறவேண்டும். பூனையைப் பிடிக்க யானைமீதேறிச் செல்லவேண்டியதில்லை! கொசு வேட்டைக்கு, குதிரைச் சவாரி தேவையில்லை. பழமையின் பெருமையை அறிந்து, அதன்படி நடப்பதே முறை என்பது, இவர்கள் எண்ணமானால், இலமரத்தடி போதும், இகாய விமானம் தேவையில்லை. ஊர்க் கோடிச் சாவடி போதும். உன்னதமான வேலைப்பாடடைந்த சட்ட சபைக் கட்டடங்கள் தேவை இல்லை, பஞ்சாங்கம் ஒன்றே போதும் பலவகை நூல்களும், நுணுக்க அறிவும் கமிட்டிகளும் வேண்டாம்.

(திராவிட நாடு - 9-11-47)