அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

சின்னான் சிந்து

வெள்ளைக்கார கூட்டமெல்லாம் வெளியேறிப் போகனும்!
சள்ளைப் பிடிச்ச வாழ்வுபோயி ஒருசவுகரியம் பிறக்கனும்!
கொள்ளையிடும் கும்பலது கூண்டோடே தொலையணும்!
பள்ளுபறைஎன்ற பேச்சைப் பழசாக்கிப் போடணும்!
ஏழை எளியவங்க பிழைக்கவழி தேடணும்!
என்ஜாதி உசந்த தென்னும் எண்ணக் காரன் ஒழியணும்!
எல்லாரும் ஒண்ணு என்னும் எண்ணம் உதிக்கணும்!
எதைஎதையோ, சொல்லி எங்களை ஏய்க்கிற முறை சாகணும்!
நாலுபேரு போலே நாங்க நன்றாக வாழணும்!
நாட்டுக்குடை யவங்க நாங்க என்பது தோணணும்.

(திராவிடநாடு - 10.02.1946)