அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்திய எதேச்சாதிகாரம்!

இலண்டனில் எதிரொலி!

“தங்களது தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் சுயநிர்ணய உரிமை கிடைக்குமென்று, மகிழ்வுடன் எதிர்பார்த்த தென்னாட்டாரின் ஆசை மோசமான முறையில் நிராகரிக்கப்பட்டு விட்டது. யூனியன் சர்க்கார் புதுப்புதுச் சட்டங்கள் மூலம் தனக்குள்ள அதிகாரத்தை அதிகப்படுத்திக் கொண்டு, மாகாண சர்க்கார்களின் நடவடிக்கைகளில் தலையிடுமளவுக்குச் சென்றுவிட்டது. சுதந்திரத்துடன் வாழலாமென்று எதிர்பார்த்த தென்னாட்டார் ஆசை சூறையாடப் பட்டுவிட்டது. டெல்லி இன்னும் சென்னையிலிருந்து மிக மிக வெகு தூரத்தில்தான் இருக்கிறது!” என்று டிச்.1 ந் தேதி இலண்டன் கிழக்கு இந்திய சங்கத்தில் பேசிய சென்னை “மெயில்” பத்திரிகை ஆசிரியர் ஏ.ஏ.ஹெயில்ஸ் வெளியிட்டார்.

(திராவிடநாடு 10.12.50)