அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கணக்குப் பார்க்கிறோம்!
வீரர்காள்! விடுதலைப் போர்ப்படையில் நின்று தாயகத்தின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளைத் தூள் தூளாக்கிடும் ஆற்றலுடன் போரிட்டு, தியாகத் தழும்பேற்று நிற்கும் தீரர்காள்! மாற்றாரின் எதிர்ப்புரை, விளக்கமிலாதாரின் வீணுரை, பொச்சரிப்புக்காரரின் பொல்லாங்கு மொழீ என்பவைகளைத் துச்சமெனக் கருதி, உள்ள உரத்துடன் நின்று, கொண்ட கொள்கைக்காக, எடுத்துக் கொண்ட காரியத்துக்காக, நெஞ்சில் நிறைந்திருக்கும் இலட்சியத்துக்காக, அரும்பாடு பட்டு, அடக்குமுறைக் கொடுமைக்கு மார்காட்டி நின்ற மறவர்காள்! வாலிபத் துடிப்பு, வகையறியாததால் வந்த படபடப்பு. இழமறியாது காலை விடும்போக்கு, அசட்டுத்தனமான இவேச உணர்ச்சி என்றெல்லாம், எல்லாமறிந்தவர் என்று தமக்குத் தாமே விருது அளித்துக் கொண்ட விசித்திரச் சித்தர்கள் கூறிய காலை, உரிமைப் போரின் மாண்பறியா தாரின் வெற்றுரை உதெனக்கண்டு, அவர்தம் பேச்சு பொருளற்றது என்று தெளிந்து, தியாகப் பாதையிலே தீரமாக ஏறுடை போட்டுச் சென்ற ஏன் அரும் தோழர்காள்! வீழ்ச்சியுறும் தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்று ஏக்காளமிட்ட புரட்சிக் கவிஞர் எதிர்பார்த்த எழில் நிறை காட்சியாகி, தாழ்ந்த தமிழகத்தைத் தலைநிமிரச் செய்திடும் ஆண்மையைக் காட்டி, அச்சத்தை ஓட்டி, சந்தேகத்துக்குச் சாவோலை நீட்டி, வஞ்சனை வாட்டியபோதும், தயங்காமல் தளராமல் நின்று, திக்கெட்டும் தீயர்கள் நின்று பகை கக்கினாலும், தித்திக்கும் குடும்ப வாழ்வையே இழக்க நேரிட்டாலும் களம் நோக்கிக் கிளம்பிய நாங்கள், சூளுரை எத்தக் கொண்ட நாங்கள் சோர்வடைய மாட்டோம், பரணி பாடிவிட்டோம், இனி ஒன்று எமது தோளிலே வாகை, இல்லையேல் உயிரற்ற எமது உடலின் மீது தோழர்களின் கண்ணீர், இதுவே எமது உறுதி, எனக்கூறி, பெருமிதத்துடன் சென்று, பேயர் ஏவிய கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, பெற்றோம் மற்றோர் வெற்றி! என்று பண்பாடிய தின்தோள் தோழர்காள்! திராவிடச் செம்மல்காள்! சேரன் வழி வந்தோரே! சோழ நன்னாடடுக் குமரர்காள்! பாண்டிய பரம்பரையினர்காள்! விழிப்படைந்த திராவிடத்தின் வீறுகொண்ட ஆடலேறுகாள்! வணக்கம், வணக்கம், வாழ்த்துகிறேன், வீரம் வளர்க வெற்றிகள், பெருகுக, இலட்சியம் உடேறுக, என்று கூறி.

ஜ÷லை 15, நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் செங்கரும்பென இனிக்கும் நன்னாள் - நாப்பறை அறைவர் நடிப்பு வீரர்கள், போர்ப்பறை கேட்டிடின் புறம் காட்டி ஓடுவர், ஏற்புடைச் செயல் செய்தறியார், என்று குறைமதியினர் கூறினர் - களம் காண்பீரோ! கண்டிடின் கலக்கம் கொண்டிடாது கடும் போரில் உடுபடவல்லீரோ! என்று கேட்டுக் கேலிப் பேசினர் - விலாவிலே வேல் போன்றிருந்தது அவர்தம் பேச்சு - சிங்காரத் தமிழோசை கிளப்பிடுவீர், ஆஅதேயன்றி சிலம்பெடுக்கும் சிங்கத் தமிழர் இவீரோ, போர்பற்றிப் புதுப் புதுக்காதைகள் தீட்டுவீர், போர் வந்துற்றால் முன்னேறித் தாக்கும் முறை அறிவீரோ? எதிரி வளைத்துக் கொண்டால் அதனைப் பிளந்தெறியும் போர்முறை கற்றீரோ? பேசக் கற்றுக் கொண்டீர் பிரமாதமாக, கூரற்றாவள் நீவிர்! பாய்மரமற்ற தோணி நீவிர்! புலித்தோல், ஆனால் பசுங் கன்றுகள்! பச்சை தேடிச் செல்லுங்கள். போரின் பயங்கரத்துக்கு உடுகொடுக்கும் பக்குவம் உமக்குக் கிடையாது என்று குத்திக் குத்திப் பேசினர், களம் நோக்கிச்செல்லும் வீரக்கோமான்களல்ல, கலாம் விளவிக்கும் நோக்குடன் காகிதக் கணைகளை ஏவிடுவோர் - எனினும், இத்தகு புன்மொழிகளுக்குப் பொருள் என்ன, கூறுவதன் நோக்கம் யாது, என்பது பற்றி அறிந்து கொள்ள எண்ணுவது கூடக் காலக் கேடு, என்று கருதி, கடமையைச் கலங்காது செய்வோம், பலன் கிடைத்தால மகிழ்வோம், கடமையைச் செய்யும்போது இறந்துபட நேரிடினும் புன்னகை உதட்டிலே பதிந்திருக்கும் நிலையில்தான் சாய்வோம், என்ற உறுதிப்பாட்டுடன் அறப்போரில் உடுபட்டீர்கள், சென்ற ஆண்டு ஜ÷லைத் திங்கள்.

ஓராண்டு உருண்டோடிவிட்டது! இவ்வளவு விரைவில்!! ஆம்! மிக விரைவாகத்தான்! காலம், மெல்ல மெல்ல நகரவில்லை, கடுவேகத்தில் செல்கிறது! ஓராண்டு ஆகிவிட்டது! மற்றோர் ஜ÷லை 15 இதோ காண்கிறோம்.

சென்ற ஜ÷லை 15ல், நம்மில் பலர், சிறையில் தள்ளப்பட்ருந்தோம்! பலர், அடக்குமுறை பதித்த தழும்புகளைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திராவிடமே, அகன்ற விழியுடன் நின்றது! இதென்ன புயல்! எப்படிக் கிளம்பிற்கு போர் வாடை யார் நடத்திச் சென்றார்கள் இந்த அணிவகுப்பை! என்றெல்லாம் ஆட்சியாளர்கள் எண்ணினர்.

அலட்சியம்! ஆத்திரம்! அச்சம்! ஆயர்வு! இங்ஙனம் இருந்தது. சர்க்காரின் போக்கும் நடவடிக்கையும்.

எண்ணினோம்! துணிந்தோம் - நாம்.

எடுத்தனர் தடியை, கொடுத்தனர் மண்டையில், கொட்டினோம் குருதி, வெட்டுண்ட பனையாயிற்று ஆள்வோரின் போக்கு.

ஜ÷லை 15ல் ஒரு பெரும் போர்க்களம் அமைக்கப்படும் அனைவரும் இப்போதிருந்தே அதற்கான பயிற்சியில் உடபடுங்கள், பேச்செல்லாம் களம் பற்றியதாகவே இருக்கட்டும், நினைப்பெல்லாம் போர் குறித்தே செல்லட்டும், நடை முறுக்காகட்டும், தசைக் கட்டுகளை வளமாக்குங்கள், மீசையை முறுக்கி விடுங்கள், வேல் வடித்துத்தரச் சொல்லுங்கள், வாளைக் கூராக்கிக் கொள்ளுங்கள், சல்லடம் கட்டுங்கள், முரசு கொட்டுங்கள், கண்களிலே ஓர் கடும் பார்வை பிறக்கட்டும், காண்போர் ஓர் பெரும் போர் மூளப்போகிறது என்பதை உணரட்டும் - என்று பேசிப் பேசி, இந்தப் போரிலே நாம் உடுபடவில்லை.

மாறுக, நான், அதுசமயம் ஒவ்வொரிடத்திலும், திரித்துக் கூறுவோரும் சிதைத்துப் பொருள் கொள்வோரும், பலர் உள்ர் என்று தெரிந்திருந்தும், தி.மு.க. போர் தேடி அலையாது - ஏதாவது போர் கிடைத்தாக வேண்டுமே என்ற மனஅரிப்பு நமக்குக் கிடையாது, போரிட்டுத்தான், வளர்ச்சிப் பெற்றாக வேண்டும் என்ற பலமற்ற, பரிதாபகரமான நிலையிலே, தி.மு.க. இல்லை, என்று வெளிப்படையாகவே கூறிவந்தேன் அதற்காக நான் கேலி செய்யப்பட்டது மட்டுமல்ல, உங்கள் வீரமும் இழித்துரைக்கப்பட்டது. ஆனால்! அந்த ஜ÷லை 15! வருக! கூடுக! காண்க! புகழ்க! காணக் கிடைக்காத காட்சி! என்று விளம்பர ஆர்ப்பரிப்பு செய்தல்ல, காலம் கூட்டிவந்து காட்டிற்று களம் கண்டோம்.

படை வரிசையும் அதிலே பயிற்சியும், போர்த்திறனும் அதற்கான முயற்சியும், இல்லாததால், நாம் போர் வேண்டாம் என்று பேசுகிறோம் - அரை டஜன் பேர் வழிகள், அவர்கள் கட்டும் இகாயக் கோட்டைகள் - இவைதாம் தி.மு.க. என்று எண்ணிக்கொண்ட நண்பர்கள் ஏசினர்.

நாம், திராவிடத் தனிநாடு காண வேண்டுமெனும் பெரும் இலட்சியத்துக்காகப் பணியாற்றுகிறோம் - அந்த இலட்சியத்தை நாம் எளிதிலே பெற முடியாது என்பதை அறிந்திருக்கிறோம், அதற்காக நடத்தப்படவேண்டிய போருக்குத் தக்கவர்களாக நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளும் பணி சாமான்யமானதல்ல என்பதையும் உணர்ந்திருக்கிறோம், ஆறுதிப் பெரும்போரில் உடுபடு முன்னர், நாம் எத்தணை எத்தணை எதிர்ப்புகளைச் சமாளித்தாக வேண்டும் என்பதையும் தெரிந்திருக்கிறோம். அந்த ஆறுதிப்போர் எவ்வளவு குருதி கேட்கும், எத்தனை குடும்பங்களைப் பலி கேட்கும், எத்தனை வீர இளைஞரின் உயிரைக் குடிக்கும் என்பது பற்றியும் அறிந்திருக்கிறோம். வரலாறு காட்டும் பாடத்தை மறந்தோமில்லை! தாய்நாட்டை மீட்டிட ஆங்காங்கு நடைபெற்ற அரும்பெரும் போராட்டக் கதைகளைப் படித்து மறந்துவிட்டோமில்லை! இரத்த ஆறுகள் ஓடின! பிணமலைகள் குவிந்தன! பெற்றதாய் மனம் பதறப் பதறப் பிணமாக்கப்பட்ட குமாரர்கள்! உடன்பிறந்தான் ஓலமிட்டு ஆழத்துண்டாடப்பட்ட அண்ணன்! சூட்டிய மலரையும், பதித்த முத்தங்களையும், பேசிய காதல் மொழிகளையும், பொறித்த வடுக்களையும், எண்ணி எண்ணி விம்மிடும் வீராங்கனையை விட்டுப்பிரிந்து வெஞ்சமரில வீழ்ந்துபட்ட வீரன்! விடுதலைப் போர், ஆம்மவோ! விளையாட்டுக் கதையல்ல! அதிலும், பிறநாடுகளிலே நடைபெற்ற விடுதலைப் போர்களுக்கும், இங்கு, நாம உபடுபட்டாகவேண்டிய விடுதலைப் போருக்கும், பலப்பல துறைகளிலும், முறைகளிலும் மாறுபாடு நிரம்ப உண்டு.

நாம்! - இதற்குப் பொருள் காணவே, பெருமுயற்சி தேவைப்படுகிறது.

நாடு! - இது என எடுத்து இயம்புவதற்கே, புலமை தேவைப்படுகிறது! உண்மை, புதைபொருளாகிக் கிடக்கிறது. நம் வரலாறு, தேய்ந்து போய், உருவமற்றுக் கிடக்கிறது. நமது இனத்தவரோ, சினம் கொண்டிடக் காண்கிறோம், உண்மையைச் செவி மடுக்கும் போதே!

விடுதலைப் போர், பயங்கரம் நிறைந்தது - திராவிடத்துக்கான விடுதலைப்போர், பயங்கரம் நிரம்பியது மட்டுமல்ல, விசித்திரம் பல உள்ளடக்கியதாகவும் உள்ளது. நிலைமை அப்படி! வீரம் இருக்கிறது எங்கும், ஏராளமாக - ஆனால் விழுலுக்கிரைத்த நீராக்கப்படுகிறது. அறிவு இருக்கிறது, அவனி கண்டு மதிக்கத்தக்கதாக, ஆனால் அது இகாத வழியிலே செலுத்தப்படுகிறது. இந்நிலையில், விடுதலைப்போர் நடத்துவது என்றால், வீரம் மட்டும் போதாது, வீரம் இருக்குமிடமெல்லாம் கண்டறியப்பட வேண்டும், உள்ள படை போதாது, படையில் ஆற்றல் காட்ட வல்லவரை எல்லாம் கண்டறிந்து கொண்டு வந்து சேர்த்தாக வேண்டும், காடுகள் கூடாரங்களாயின, இல்லங்கள் பயிற்சிக் கூடங்களாயின, என்று கூறத்தக்க விதமான நிலை ஏற்படுவதுண்டு. விடுதலைப் போர்க்காலத்தில், இதுவும் இதனினும் மேலான விளக்கமும், காணவேண்டியவர்கள் நாம்!

எனவேதான், போர், போர் என்று அலைவது கூடாது - எதற்காகவேனும், எப்படியேனும், எம்முறையிலேனும் போர் நடத்தினால்தான், கழகம் வளர்ச்சி அடையும் என்று கருதுவது, தவறு, என்று கூறி வந்தேன் - நோக்கம் புரியாதோர் சுடுசொல் வீசினர், கவலை கொண்டேனில்லை, கோபம் கொண்ட உம்மையும் கூட வேண்டிக் கேட்டுக் கொண்டேன், அவர்களை மன்னிப்பீராக! நமது மாண்பறியாதாரின் பேச்சுக்காகக் கோபம் கொள்ளற்க! என்று.

ஜுலை 15! நம்மையே திடுக்கிடச் செய்து விட்டது!

போர் ஏன்? எதற்கு எடுத்தாலும் போர்தானா? என்று பேசிக் கொண்டே இருந்தோம், ஆனால், மும்முனைப்போர் மூண்டுவிட்டது! முப்புரியினரில் மூதறிஞர் என்று, எப்புரியினரும் ஐத்தி ஐத்தித் தொழுது வந்தனர் ஆச்சாரியாரை - அவருடைய தவறு, மமதையால் ஏற்பட்ட மதியீனம், ஆணவத்தில் நெளிந்த ஆநீதி, நம்மை மும்முனைப் போரில் கொண்டு போய் நிறுத்திற்று! சென்றோம்! களம் கண்டோம்! அதன் கடுமை கண்டு திகைத்தோமில்லை - நின்றோம் - வென்றோம் எப்படி? நாம் தான் போர் வேட்கை ஆற்றவர்களாயிற்றே! உள்ளுரை உண்மை தெரியாதா! நாம், போர் குறித்துப் பேசிக் கொண்டில்லை - உண்மை - ஆனால் போர்த்திறன் பெற்றிருக்கிறோம்! ஜ÷லை 15 இதைத்தான் நாடு அறிந்திடச் செய்தது.

அவள் மனதைப் பாகாய் உருக வைப்பேன், என் இசைத் திறனால்.

பேசும் புறாவே! என்பேன், எழுதொணாத ஓவியமே, என்னை வாழ்விக்க வந்த மாமருந்தே! வையகத்தின் அழகுப் பெட்டகமே! நடமிடும் மின்னலே! தேன் தரும் தென்றலே! மாசிலா மணியே! மணி விளக்கே! பேசும் பொற்சித்திரமே! இடைதுவள, மணி விளக்கே! பேசும் பொற்சித்திரமே! இடைதுவள, கண்கள் களிநடமிட, இடி அசைந்து வந்து என் உள்ளமதைக் கொள்ளை கொண்ட நவமணிப் பதுமையே! நயன சிங்காரி! நடை அலங்காரி! உருகி உடல் கருகி உள்ளீரல் பற்றி ஆவியாது ஏரியும் காதல் தணலில் என்னைத் தள்ளிய, தத்தை மொழியாளே! இச்சைக்கு இனியவளே! இன்பவல்லி! என்றெல்லாம் கொஞ்சு மொழி வீசுவேன், காதற் பார்வை காட்டுவேன், இடையிடயே ஏன் தாபத்தை எடுத்துக் காட்ட பெருமூச்செறிவேன், அவள் ஏன் விண்ணப்பத்தை ஏற்கும் வரையில், கீதம் பாடுவேன், அவள் சதங்கை ஒலியையும் நுதலின் ஒளியையும், உடலின் வனப்பையும், ஒய்யாரத்தையும் எடுத்துக் கூறிக்கூறி, ஆவளை என்னவாளக்கிக் கொள்வேன், என்று திட்டமிட்டு, பட்டுடை அணிந்து பல ஏடு புரட்டி முறைகளைக் குடித்து, கோமான்போல் நடந்து, கோமளவல்லியிடம் சென்று, குளறி, கூத்தாடி, உள்றிக் கொட்டி, அவள் கெக்கலி செய்யக் கண்டு விரண்டோடும், வீணனும் உண்டு - கண்ணைக் கண் கௌவ, நெஞ்சுடன் நெஞ்சு உறவாட நின்று, எண்ணத்தைக் குறுநகையால் வெளியிட்டு, வெற்றி பெற்று, கானம்பாடும் கிளியும் குயிலும், இடிடும் மயிலும், அழகு மணிப்புறாக்களும், கோலம் செய் சோலையிலே, ஆவளை இரத் தழுவிப் பேரின்பம் துய்க்கும் வெற்றி வீரனும் உண்டு.

காதலில் மட்டுமல்ல, களத்திலேயும் இவ்விர வகையினர் உண்டு. நாம், திட்டம் தீட்டிவிட்டு, திறம்படச் செயலாற்றத் தெரியாததால் கோட்டைவிட்டு, கொட்டாவி விடும் ஏமாளிகளாக இருக்க மறுக்கிறோம் போரில்!

மும்முனைப் போராட்டம் திட்டமிட்டுக் கொண்டு கிளம்பி, காதல் தேடி அலைந்த திம்மப்பன் கதை போன்றதல்ல, கண்ணோடு கண் பேசிய கலை! ஆம்! ஜ÷லை 15, எதிர்பாராத முத்தம்! இன்பத்தக்கு ஓர் அழைப்பு.

அன்று ஓர் அரும்போர் துவக்கம் என்று நாமும் நாடும் கண்டுகொள்ளத்தக்க குறிகள் பளிச்செனக் காணப்படவில்லை.

ஆச்சாரியார், அறிவுக்குப் பொருந்தாதும், திராவிட இனத்துக்கு இகாததுமான ஓர் கண்மூடித் திட்டத்தைக் கல்வித் துறையில் புகுத்தினார். நாம் கண்டித்தோம், நாடு கண்டித்தது, நல்லவர்கள் அறிவுரை கூறினர். ஆச்சாரியார் கேளாக் காதினரல்லவா, கேட்க மறுத்தார். தோழர் சம்பத்தலைமை தாங்கி ஓர் அறப்போர் நடத்துவது என்று முடிவு செய்தோம். ஆச்சாரியார் இல்லத்தின் முன்பு, அறப்போர் ஏன்றோம் அதற்கான முடிவு எடுக்கச் செயற்குழு கூடிற்று சென்னைக் களம் சம்பத்திடம், திருச்சியில் டால்மியாபுரம் எனும் அவமானச் சின்னத்தைத் துடைத்திடும் போருக்கான களம், கருணாநிதியிடம் அன்புக்குரிய இவ்விரு தம்பிமார்களுக்கு உற்றதுணைவர்களாக இருக்கும் அன்பழைப்பு உங்கட்கெல்லாம்.

நான் இந்த அன்பழைப்பு விடுத்தேன் - அன்றிரவே ஆச்சாரியார் சர்க்காரின் அன்பழைப்புப் பெற்றேன், களம் செல்ல வேண்டிய சம்பத்தும், நாவலர் நெடுஞ்செழியனும், நடராசனும், மதியழகனும், உடன்வரச் சிறை சென்றேன். களம், உம்மிடம்! போர் முறை வகுக்கும் பொறுப்பு உங்களிடம் கழகத்தின் கடடுப்பாடும் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டிய கடமை, உங்களிடம்! நாங்கள் சிறையில்! சென்ற ஆண்டு ஜ÷லை 15ல் இந்த ஆண்டு, இதே ஜ÷லை 15ல் வெளியே இருப்போம், வெற்றிக் களையுடன் உலவுவோம், களத்தின் கதைகளைப் படிப்போம், கடும் போரில் உடுபட்ட வீரர்களை வாழ்த்துவோம், என்று எண்ணினோமா! அங்ஙனம் கூற முடியாது! உண்மையைக் கூற வேண்டுமானால் இந்த நன்னாளில் உண்மையைக் கூறாமலிருக்க இயலுமா - நான் சிறிதளவு அச்சமடைந்தேன் - மும்முனைப்போர் முழுப் பொலிவுடன் விளங்குமா, சர்க்காரின் கடுமையான நடவடிக்கைகளால் முறிந்து படாது நிற்குமா என்றெல்லாம் உங்கள் வீரத்தையும் செயலாற்றும் திறனையும் அறியாதவனல்ல நான், ஆனால் ஆச்சாரியார் கோபம் தலைக்கேறினால் எப்படி எப்படி மாறிவிடுவார் என்பதை அதிகமாக அறிந்திருந்ததால்.

கலக்கத்துடன், சிறை சென்றோம் - ஓரிரவு கழிந்தது காலை மலர்ந்தது, எமது நெஞ்சமெல்லாம் வீரமூட்டும் செய்திகள் வந்தன, குவிந்தன, கண்கள் ஒளிவிட்டன, ஏறு நடைதான், சோறு கிடைக்காத சிறையில்!

களத்திலே நின்று நீவிர் ஆற்றிய அரும்பணி கேட்டோம், இத்தகு வீரர்கள் குழாத்தில் இப்பெரும் வாய்ப்பு கிடைத்ததே என்றெண்ணிப் பெருமை அடைந்தோம்.

ஆச்சாரியார் வீட்டின் முன்பு அறப்போர், நடைபெற்றது, ஆர்வம் குன்றவில்லை - இளவந்தார் ஆர்ப்பரிப்பு வலுத்தது, நமது தோழர்களின் அமைதி குலையவில்லை - தடியடி கண்ணீர்ப் புகை - எதுவும் அறப்போரின் தரத்தையும் திறத்தையும் குறைத்திடவில்லை.

வருகிறார்கள் வீரர்கள்! உள்ளே வருகிறார்கள், திராவிடத்துக்கு வாழ்வளிக்கும் தீரர்கள்! நுழைகிறார்கள், அணி அணியாக! காண்கிறோம் சிறையில், பெறுகிறோம் புத்தார்வம், பேசவில்லை, பார்க்கிறோம், ஆனால், அந்த ஒரு விநாடிப் பார்வையில், என்னென்ன பேசி விட்டோம், எப்படி எப்படிப் பேசிக் கொண்டோம்! எண்ணும் போதே வீடு கசக்கிறது!

சென்னையில் இது - திருச்சி - தயங்குமா! கல்லக் குடிப்போர் - கடுமையான அளவில் - கருணாநிதி சிறையில் - கண்ணதாசனுக்கு பலமான அடி - தர்மலிங்கம் தலை தப்பியது தம்பிரான் புண்யம், பலர், பலப்பலர், சிறையில், மருத்துவமனையில் - ஆனால் அவமானச் சின்னம் மறைந்தது, அழகு தமிழ் தவழ்ந்தது, கல்லக்குடி காட்சி அளித்தது.

துப்பாக்கி, இளவந்தார்க்குத் துணை நின்றது. உயிர் குடித்தது, திராவிடமே துடித்தது. இருயிரை இழந்தனர், இழக்கொணா இன்பத் திராவிடம் காணத் தம்மைத்தாமே ஆர்ப்பணித்துக் கொண்ட அருமைத் தோழர்கள்.

சென்னை - திருச்சி - இம்மட்டோ - இல்லை, இல்லை, நாடெங்கும் போர், வீடெல்லாம் வீரர்கள், பேச்செல்லாம் இப்போர் குறித்தே, இதழ்கள் யாவும் இச்செய்தி தாங்கியபடியே, எமது எண்ணமெல்லாம் உமது செயல் குறித்தே! மும்முனைப் போராட்டம் முழு உருவெடுத்து, சர்க்காரைத் திணறடித்து, வேறு பல கட்சிக்காரர்களையும் நம்முடன் உறவாட வைத்து, வெடித்ததுதான் ஏரிமலை! பொங்கி வழிகிறதுகாண் வீரக்கனல்! என்று எவரும் வியந்துரைக்கத்தக்க வகையிலே, நடைபெற்றது. துப்பாக்கி தூத்துக்குடியில் பேசிற்று. உயிர் குடித்தது, உணர்ச்சி மேலோங்கிற்று, சிறைப்பட்டனர் தோழர்கள், சிந்தை நைந்தா - திருவிடத்தவருக்கா! தீரருக்கா! கொள்கை உணர்ந்த வீரருக்கா!

மும்முனைப் போராட்டம் உண்மையிலேயே, நமது கழகம், எத்தணை வலிவுடன் வளர்ந்து வருகிறத என்பதை எடுத்துக் காட்டும் எழிலோவியம்.

பூத்துவரும் புரடசி எத்தகயைது என்பதைப் பழுதுபட்ட பார்வையினரும் தெரிந்து கொள்ளச் செய்த மகத்தான சம்பவம். பூங்காவில் உலவுவான் பொன்னார் மேனியனுடன் குலவுவான், ஆனால் போர் எனிலோ, பொங்கி ஏழுவான், சிங்கமாவான், வெற்றி காண்பான் - என்ற பழந்தமிழ் நெறியின் ஓர் மறுபதிப்பாயிற்று ஜ÷லை 15ல் தோற்றமளித்த போர்க்காட்சி, சிற்றூர் பேரூர்கள் என்ற பாகுபாடின்றி, அறப்போர் வீரர்கள் கிளம்பினர், அடக்குமுறைக்கு ஆளாயினர், கையும் காலும், கண்ணும் உயிரையுமே கூட, பலி கேட்டது அடக்குமுறை - அளித்தனர் - தாயக நிடுதலைக்காகக் காணிக்கை செலுத்துகிறோம் என்ற பெருமகிழ்ச்சியுடன்.

புதிய கல்வி திட்ட எதிர்ப்பு அறப்போர், அத்திட்டத்தை எதிர்த்து கழகத்தவரல்லாத வர்களையும், வீரப்பணியாற்ற வைத்தது.

கல்லக்குடி காண நடத்தப்பட்ட அறப்போரும், அதிலே உடுபட்டுக் கடும் தண்டனைகளுக்கும் கெடிய அடக்குமுறைகளுக்கும் ஆளான நமது தோழர்கள் காட்டிய தியாகமும், நமது போர்ப் பிரச்சனையை மதியாது இருந்து வந்தவர்களையும், மதிவாணர்களாக்க உதவிற்று.

நேரு பண்டிதரின் நாவடக்கமற்ற போக்கைக் கண்டிக்கும் ரயில் நிறுத்தப்போரோ, இந்தியத் துணைக்கண்டத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது - வெளி நாடுகளிலேயும் விஷயம் சென்றது.

மும்முனைப் போரில், எம்முனைப் போர் சிறப்பளிப்பது என்ற பிரச்சனைக்கே இடமின்றி, எழுச்சி ஒன்று கலந்து ஓர் உன்னதமான பேருருக் கொண்டது! விழிப்புற்ற திராவிடம் அது! விரண்ட ஆச்சாரியார் விதவிதமான பாணங்களைப் பூட்டினார் - அலுத்தார் - ஆர்ப்பரித்தார் - சபித்தார் - சாடினார் - எனினும் அவருடைய ஆணவப் போக்குதான் சடசடெனச் சாய்ந்து வரலாயிற்று.

நாடெங்கும் குமுறல் - சட்டசபையில் எதிர்ப்புச் சூறாவளி - எங்கும் கண்டனமாரி - நாடெங்கும் கழகத்தினைப் பற்றியே பேச்சு - பத்தாண்டுக் காலம் பன்னிப் பன்னிச் சொன்னாலும் ஏற்படுத்த முடியாத அளவு பிரச்சார பலம் கிடைத்தது. நமது தோழர்கள் கொட்டிய குருதி காரணமாக.

மும்முனைப் போராட்டத்தில், எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும் ஐயாயிரவர் உடுபட்டனர் - சிறை சென்றனர், என்றே கூற வேண்டும். இன்று அந்தச் செம்மல்களை எங்கு சென்றாலும் காணலாம்! வெற்றிப் புன்னகையுடன் வீர ஊலா வருகிறார்கள்! நாட்டுப் பற்றெனும நல் விளக்கை அவர்கள் ஏற்றி வைத்திருக்கிறார்கள். தியாகத் தீயிலே புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கக் கம்பிகளை இன்று எந்தச் சிற்றூரிலும் காணலாம்.

உ என்று ஐசினார், ஏறும்பு என்று கேவலமாகப் பேசினார், பதவி நிலையானது, பதட்டப் பேச்சு பாராள உதவும், போலீஸ் அரண் எந்த எதிர்ப்பையும் அழித்தொழிக்கும் என்றெல்லாம் மனப்பால் குடித்த மறையவர் திலகம்!

கணக்கைத் தீர்த்துக் கட்டி விடுகிறேன்! என்று ஆத்திரத்தைக் கக்கினார்! இதுகளைப் பூண்டோடு ஒழித்துக் கட்டா முன்பு எண் கொள்ளேன் உறங்கேன் என்று ஆர்ப்பரித்தனர் அடிவருடிகள்.

அடக்குமுறை குருதியைக் கொட்ட வைத்தது. ஆச்சாரியாரின் பேச்சு, குறுநகையைத்தான், கொள்ளச் செய்தது.

யார், யாருடைய கணக்கைத் தீர்த்துக் கட்டுவது! கேட்டன ஆயிரமாயிரம் கண்கள்! அந்த வீரர் தம் மனக்கண் முன் திராவிடர், தீயோர் தீண்டாதபோது, ஏவரெவருடைய கணக்குகளைத் தீர்த்துக் கட்டி இருக்கிறார்கள் என்ற பெருங்கதைகளெல்லாம், நிழலுருவில் தெரியலாயின!

இதோ இன்று ஆச்சாரியார் கொல்லைப்புறம் நுழைந்து கோலை எடுத்துக் கொண்டு பல்லிளித்துப் பலம் சேர்த்துக் கொண்டு, சொல்லை வீசி நம்மை வெல்லப்பார்க்கிறார், ஆனால், அன்றோர் நாள், திருஇடம் அடிமைப் படா முன்னர், திராவிட அரசு புகழொளி வீசி இருந்து வந்த காலை. நமது மரக்கலங்கள் ஏழு கடலிலும் வெற்றிக் கொடியுடன் ùச்ற நாடகளிலே, நமது மத்து, பவளம், சந்தனம், ஆகில், பட்டு பட்டாடை, மயில் தோகை எனும் இன்னோரன்ன பொருள்களைக் கண்டு சாவகமும் கடாரமும், யவனமும் சீனமும், வியந்து நன்ற போது அரசர் எனும் விருது பெற்ற ஆணவக்காரர் இருவர், கனகன் விஜயன் எனும் பெயரினர் தமிழரரை இழித்துரைத்தனர் என்பதற்காக, தானை கொண்டு வடக்குச் சென்று கங்கைக்கரையில் ஆக்கசடரைத் தாக்கித் தோற்கடித்து, அவர்தம் தலைமீது கல் ஏற்றி செருக்கள் சிங்கம் சேரன் செங்குட்டுவன் கொண்டுவந்த காட்சி தோன்றாமலிருக்குமா? ஆக்காட்சி தோன்றியதும், குன்றெடுக்கும் நெடுந்தோளர், கொடுமை களையக் கொடுவாளெடுக்கும் இரணகளச்சூரர் வழி வழி வந்தவர் நாம் என்ற மன எழுச்சி ஏற்படாமல் இருக்குமா! ஓமகுண்டத்துப் புகையும், யாகப் பசுவின் ருசியும், ராஜ மாளிகை விருந்தும் மடடுமே காதைகள் என்று எண்ணிப் பூரிப்படையும பூசுரத் தலைவருக்கு, திராவிடரின் வீரக்கதை எப்படித் தெரியும், புரியும்! அவர் அறிந்துள்ள சக்ரவர்த்தி திருமகனார்களுக்கும் திராவிடம் கண்ட அரசிளங்குமரர்களுக்கும் ஒப்பிட்டு உரைத்திடவே இயலாதே! அருள் பெற்று அமளியில் வெற்றி காண்போம், அவர் அறிந்த காதைகளில் காணப்படும் வீரர்கள் - வீரம் காட்டி வெற்றி தேடுவோர், நமது மூதாதையர்.

ஆச்சாரியார் இதனை அறியாது கூறினார், கணக்கைத் தீர்த்துக் கட்டிவிடுவேன் என்று! சிறுநரி, புதரருகே கூறிற்றாம் சிங்கத்தின் மண்டையைப் பிளந்து உமக்கெல்லாம் இரத்ததானம் தருவேன் என்று, குட்டிகளிடம்!

கணக்குத் தீர்க்கும் காலம் பிறந்தது! கணக்குத் தீர்க்கப்பட்டும் விட்டது! ஆச்சாரியாரின் கணக்கைத்தன் அருந்திராவிடத் தோழர்கள் தீர்த்துக்கட்டி இருக்கிறார்கள்! எங்கே அவர்! ஆரசோச்சும் நிலையிலா! இல்லை, இல்லை, அரிகதா காலட்சேபம் செய்யும் பாகவதர் நிலையில்! ஆர்ப்பரிக்கிறாரா? இல்லை, இல்லை! அமைதி, அமைதி! சாந்தோபதேசம், செய்கிறார்! அவர் புகுத்திய திட்டம்? தீர்த்துக்கட்டி விட்டார்கள் தீரர்கள்! செத்தது, புதைத்தார் சுப்ரமணியம், இரண்டு சொட்டுக் கண்ணீரும் விட்டார் - சிரமப்பட்டு.

அறப்போர் வெல்லும் என்பதற்குச் சாலச்சிறந்த சான்று கண்டோம்.

ஆணவ அரசு அழிந்துபடும் என்பதற்குத் திட்டவட்டமான எடுத்துக் காட்டும் கிடைத்துவிட்டது.

சிலர் உயிரிழந்தனர் - உடல் உறுப்புகள் இழந்தனர் சிலர் - ஐயாயிரவர் சிறைக் கொடுமைகளுக்கு ஆளாயினர் இவைதமை எண்ணும்போது வருந்தத்தான் தோன்றும், ஆனால், இந்த துக்கத்தாய் உன்றெடுத்த சேய், வெற்றி, அதை எண்ணும் போது, பட்ட கஷ்டமத்தனையும் பகலவனைக் கண்ட பனி பறந்தோடிச் செல்வது போலாகிறது. களம் சென்றோம் - வெற்றியும் பெற்றோம்! அறப்போரில் உடுபட்டடோம், சிறப்பளிக்கும் வெற்றி கண்டோமட், பாம்பும் இல்லை, புற்றும் இல்லை!

ஜ÷லை 15-ல் தோழர்கள் அனைவரக்கும், இந்த நினைவுகள் வரத்தான் செய்யும்! இந்த வீரக்கதைகளைப் பேசி மகிழவும், நாட்டவருக்கு எடுத்துரைக்கவும், ஜ÷லை 15, மும்முனைப் போராட்ட முழக்க நாளாகக் கொண்டாடும்படிக் கேட்டக் கொண்டிருக்கிறேன். நாவலர் நெடுஞ்செழியனை அறிக்கை அனுப்பிடச் சொன்னேன் - கண்டிருப்பீர்கள் - களிப்புடன், அந்த நாளைக் கொண்டாடி, பெற்ற வெற்றியை எடுத்துரைத்து இனிப்பெற வேண்டிய வெற்றிகளை நினைவுபடுத்தி, ஆற்றலும் அடக்கமும், செழித்தோங்கும் வகை குறித்துப் பேசிச் செயலாற்றும் செம்மல்களாக, அனைவரையும் மாற்றி அமைக்கும் சீரிய பணியினில் உடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஜ÷லை 15! கொடுமைக்கு ஆளாகியுள்ள திராவிடர் நினைத்தால் எப்படிக் கொதித்து எழ முடியும் என்பதை எடுத்துக் காட்டும் நாளாகிவிட்டது. திராவிட இன எழுச்சி வரலாற்றிலே, ஒரு செவ்வேடு! கண்டு கண்டு, கருத்துப் பெற உதவும் காப்பியம்!

போரின் எதிரொலிகளென, இன்னமும், கல்லக்குடி தூத்துக்குடி வழக்குகள் உள்ளன - நாடு அறியச் செய்யுங்கள்.

போரின் எதிரொலிகளென, இன்னமும், கல்லக்குடி தூத்துக்குடி வழக்குகள் உள்ளன - நாடு அறியச் செய்யுங்கள்.

உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஒரு சிறு அனுதாபமும் காட்டாமலிருக்கிறது சர்க்கார் நியாயமா என்று கேளுங்கள்.

குடும்பத்தாருக்கு நஷ்ட உடு வழங்கும் நேர்மை சர்க்காருக்குப் பிறக்கும்படி செய்யுங்கள்.

பேசி மகிழுங்கள் - ஆனால் இந்தப் போர் வெறும் பூ பறிப்பது போன்றது என்று எண்ணத்தக்க வகையான பெரும் போர் நடத்தியே பிறப்புரிமையைப் பெற்றாக வேண்டும் என்ற உண்மையை மறவாதீர் - அந்தத் தியாகத்துக்கு நம்மை எல்லாம் தயாராக்கும் பயிற்சிதான், மும்முனைப் போர் என்பதை உணர வேண்டுகிறேன்.

ஜ÷லை 15 மும்முனைப் போருக்கான முதல் முழக்கம் - இந்த அறப்போரில் நாம் காட்டிய ஆற்றல், எங்ஙனம் கிடைத்து, என்பதை எண்ணிப் பாருங்கள் - வலிவூட்டும் அந்த குடும்பப் பாசம் குன்றாமல் குறையாமலிருக்க வேண்டும்.

அறப்போர் வீரர்காள்! வாழ்த்துகிறேன்! நீவிர் அரும்பணியாற்றிப் பெற்றுத்தந்த வெற்றிக்காக, ஏன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அழைப்பு எந்த நேரத்தில் கிடைத்தாலும் அணிவகுத்துக் களம் செல்லும் முறையிலே கழகம் மிளிர வேண்டும் நான் பேசுவது போதாது இதோ கவிஞன் ஷெல்லி பேசுகிறான், கேளுங்கள்.

ஆடர்ந்த நிசப்த இரணியத்தைப் போல்
அமைதியாய், உறுதியாய் நில்லுங்கள்
கைகளைக் கட்டிக் கொள்ளுங்கள்
கண்கள் தோல்வியறியாக் கணைக ளாயிருக்கட்டும்
கொடுங்கோலர் துணிந்தால்
குதிரைகளை ஓட்டி வரட்டும்!
குத்தாட்டம், வெட்டட்டும், அறையட்டும், அரியட்டும்
இஷ்டம்போல் செய்ய இடங் கொடுத்துவிடுங்கள்.
கோபம் தணியுமட்டும் கொல்லட்டும்!
மடக்கிய கைகளோடும், மருளாத கண்களோடும்
அச்சமும் ஆச்சரியமும் அகற்றி
அவைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
வெட்கத்தோடு திரும்பிவிடுவர்
சிந்திய இரத்தமே முகத்தில் நாணம் காட்டும்
குறைக்க முடியாத தொகையினராய்
விழித்தெழும் சிங்கம்போல் வீறு கொண்டு ஏழுங்கள்!
தூக்கத்தில் படிந்த பனியைச் சிதறுவது போல்
பிணித்துள விலங்கினைப் பெயர்த் தெறியுங்கள்!
நீங்கள் பலர், அவர்களோ சிலர்!

(திராவிட நாடு - 25.5.47)