அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


காங்கிரஸ் ஊழல்
(மதிட்சியத்திலே என்ற மெட்டு)


(பல்லவி)

காங்கிரசின் சாயம் வெளுக்கிறது - அருமைத் தோழர்களே
பெருங்கவலைக் கிடமாயிருக்கிறது - வெட்கமாயிருக்கிறது

(காங்)

(அநுபல்லவி)

(தினம்) புதிது புதிதாய் வெளிக் கிளம்புகிறது - அனுதினமும் பேப்பரில்
லஞ்சப் புரளி அதிகரிக்கிறது

- (காங்)

(வசனம்)

நாம் - போகுது போகுதுன்னு பார்த்துக் கொண்டிருந்தால்
பொறுக்க முடியவில்லை நாற்றம்
தினம்- பொழுது விடிந்தால் இந்த எழவுதான்.
எங்குப் பார்த்தாலும் ஏமாற்றம்.
நாம் - ஒற்றுமை ஒற்றுமை என்று கதறியும்
ஒரு சிறிதும் பயனில்லை.
இன்று - "ஓய்ந்தது பாளை உட்கார்ந்தா(ள்) சாணாத்தி"
என்றே இளிக்கின்றார் பல்லை.
இந்து மஸ்லீம்கள் என்றைக்கும் ஒற்றுமை என்ற
தெல்லாம் பொய்யாய்ப் போச்சு.
இப்போ இழுத்துக்கோ, பறிச்சுக்கோ என்னும்
நிலைமைக்கு வந்தேமாதரத் தாலாச்சு.
தேசியப் போர்வையைப் போர்த்திக் கொண்டே
சிலர் திருடும் தொழிலாக இருந்தால்,
அதைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றே
'தினமணி'யும் கூக்குரலிட்டால்,
இது சரியா? சமதர்மன் உரைப்பதைத் தெரியா - அறியா

(காங்)

(விடுதலை - 09.12.1937 (சமதர்மன்))