அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

தேவதை போற்றி

ஓங்காரி! ரீங்காரி! பயங்கரி! சங்கரி!
உமையு மானவள் நீயே!
பாங்காக என்பூஜை
தனைஏற்று வந்திடுவாய்!
பரிபூரணா னந்த வல்லி!
தேன் பாகுடன் நல்ல
தெள்ளமுது படைத்தேன்;
தேவியே சரண மம்மா!
வீண் தாமதம் வேண்டாம்.
வேண்டினேன் வந்தருள்வாய்

(திராவிடநாடு - 18.07.1954)